“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, May 23, 2025

சித்தர்கள் ஆட்சி - 450 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 1

 

 இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 1

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அப்பனே சில சில தீய (வினைகள்) எவை என்று உணராமல் இருந்தாலும் நிச்சயம் அவைதன் யான் நிச்சயம் உணர்ந்து அகற்றுவேன் அப்பனே. இதைத்தன் உணர அப்பனே வேந்தனவன் கூட,  அப்பனே சனியவன் இதில் தன் ஜெனித்தவர்கள் ( பிறந்தவர்கள் - இங்கு முன்னே வரச் சொல்.) 


சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா , கும்பம் மகரம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் முன்னே வாருங்கள். ) 


( இவ் ராசி தொடர்புடையவர்கள் முன்னே வந்தனர்)


குருநாதர் :- இதன் பின் அறிந்தும் சுங்கனவனே (சுக்கிர தேவன்)


சுவடி ஓதும் மைந்தன் :- ரிஷபம், துலாம் ( அடியவர்கள் முன்னே வருக.) 


அடியவர் 1 :- எனது லக்கினம் __


குருநாதர் :- அப்பனே யோசித்துக்கொள். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( இவ் 6 லக்கினம், ராசி உடையவர்களை முன்னே வர அழைத்தார்கள்.) (250) 


குருநாதர் :- (முதலில் சனிபகவான் ராசி, லக்கின அடியவர்களை அழைத்து வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள். இவ்வாக்கு வந்த வருடத்தில் தனது சுய ராசியில் இருந்தார்கள் என்பதை அடியவர்கள் அறியத்தருகின்றோம்.)  

——

( தனி வாக்குகள் ஒரு தம்பதியருக்கு அளித்தார்கள். அப்போது அங்கிருந்த அடியவரின் துணைவியை விட்டு அடியவரை அலைபேசியில் ( cell phone) அங்கிருந்தே அழைத்து வாக்கு இருவருக்கும் உரைத்தார்கள். குருநாதர் முன்பு உரைத்தவாறு 


“அன்பு ஒன்றே எந்தனுக்கு உயிர்.” 


“எதையும் நம்பி விடாதீர்கள் அப்பனே!!!!மீது பாசம் கொள்ளுங்கள் அப்பனே போதுமானது!!!! யானே வந்து உங்களுக்கு செய்து விடுவேன் அப்பனே இது சத்தியம்!!!!”


நம் குருநாதர் இவ் அடியவரைக்கு அழகாக வாக்கு உரைத்தார்கள். அதில் உள்ள பொது வாக்கு இப்போது இங்கு காண்போம். 

)

——-

குருநாதர் :- அகத்தியன் சொல் எப்பொழுதும் ஒரு சொல்லாக இருக்கும். அகத்தியன் ஒரு சொல் விட்டுவிட்டால் நிச்சயம் அது பலித்தே ஆகும். பாசம் ஒன்றே போதும். எந்தனுக்கு ஒன்றும் தேவையில்லை. அன்பு மட்டுமே போதும் என்பவையெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன். 

(தன் வாக்குகள் ……)

குருநாதர் :- அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உடம்பில் போகப் போக நிச்சயம் சில சில உறுப்புக்கள் பழுதடையும் வயது ஆக ஆக. ஆனாலும் ஏன் பழுதடைகின்றது ? அவனவன் செய்த பாவங்களுக்கு ஏற்பவே. இன்னும் சொல்கின்றேன். அவ் பாவங்கள் என்னென்ன? எவ்வுறுப்புக்கள் பழுதாகும்? என்பவையெல்லாம் சொல்கின்றேன். இதைத்தன் அனைவரும் உணர்ந்து பின் கொண்டே,  ஆனால் நிச்சயம் அதற்கும் கூட தீர்வு சொல்கின்றேன். பின் இப்பாவம் எதனைச் சாருகின்றது உடம்பில். அதனையும் நீக்கும் அதற்கும் தகுந்தாற் போல் ஔஷதங்களைக் குறிப்பிடுகின்றேன். 

நன்முறைகளாக அப்பனே பின் கவலைகள் இல்லை. செய்யும் ஔஷதங்களையெல்லாம் நிச்சயம் யானே கண்காணித்து,  வரும் காலங்களில் பின் தேவைப்பட்டால் பின் எதற்கு என்றெல்லாம் பின் குறிப்பிடுகின்றேன். அனைத்தும் பின் நலமாகும். 

(தனி வாக்குகள் …….) 

குருநாதர் :- ஒன்றுமே தேவையில்லை என்னருகில் வருவதற்கு. அதனால்தான் அனைத்தும் மாயை என்று இறைவன் உணர்த்தி வைத்துக் கொண்டே இருக்கின்றான். ஆனாலும் உண்மைதனை வெளி வந்து வெளி வந்து , நிச்சயம் அருள்கள் கிட்டிக் கிட்டி இன்னும் மாற்றங்கள் அடையும். 

இதனால் நிச்சயம் அனைத்தும் இறைவனுடைய செயல் என்று யார் ஒருவன் எண்ணுகின்றானோ, அவந்தனையே முதன்மையான இடத்தில் இறைவன் வைப்பான். மற்றதையெல்லாம் என்னால் முடியும் என்பவையெல்லாம் அறிந்து அறிந்து பின் முன்னே சென்றால் இறைவனே முட்டுக்கட்டையாக எதையோ வைப்பான். நிச்சயம் தாண்ட முடியாது. சொல்லிவிட்டேன். இதை எப்போதும் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

அடியவர்கள் :- (அமைதி)

குருநாதர் :- இதனால் புரியாமல் இருந்தாலும், வாழ்க்கையின் தத்துவத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ள நிச்சயம் கஷ்டங்களே. அதனால்தான் சில மாற்றங்களை எவை என்று புரியாமலும் ( நீங்கள் அல்லது) பின் அறிந்தும் இருந்தாலும் , பின் எப்படி கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கின்றது என்பதைக்கூட நீங்கள் உணரவில்லை. யான்தான் சில சமயங்களில் உணர்த்தி நிச்சயம் இவ் தந்தையின் மீது இன்னும்  (உங்கள்) பாசத்தைக் கூட்டிக்கொண்டேன். 

——-

(வணக்கம் அடியவர்களே. இந்த வாக்கு மிகவும் முக்கியமான வாக்கு. நம் அனைவருக்கும் பல கஷ்டங்கள். குருநாதர் அருளால்தான் வருகின்றன. அதாவது நமது கர்ம வினைகள் குருநாதர் எடுத்து அழகாகக் கஷ்டங்களைக் கொடுத்து அதன் மூலம் நாம்,  நம் தந்தையின் மீது வைக்கும் பாசத்தை,  கருணைக்கடலே அவர்களாகவே கூட்டிக் கொள்கின்றார். கஷ்டங்கள் வரும் பொழுதுதான் பாசங்கள் அதிகரிக்கும். 10 மாதம் சுமந்து கடும் கஷ்டங்கள் சுமப்பதால் , தாய்க்கு தன் குழந்தை மீது அன்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் - கடை நாள் வரையிலும். இதனை நன்கு உள்வாங்க, நமது கஷ்டங்களே இன்பமாகிவிடும். ஞானிகளுக்கு இன்பம் கஷ்டங்களே என்று குருநாதர் பலமுறை உரைத்த வாக்கை நினைவு கூர்வோம்.  வாருங்கள் பாசம் மிக்க,  அன்பு குருநாதர் அடியவர்களே, மீண்டும் வாக்கின் உள் செல்வோம்.) 

———-


குருநாதர் :- இங்கு கஷ்டங்களே இல்லையென்றால் அவரவர் வேலையை அவரவர் பார்திட்டுச் செல்வார்கள். பின் கஷ்டங்கள் ஒன்று இருந்தால்தான், ஆனாலும் நினைப்பது ஒன்று நடக்க முடியவில்லையே என்று இருந்தாலும் இவைதன் கூட கஷ்டங்கள்தான். இதனால் அறிந்து, ஆராய்ந்து எவன் ஒருவன் , இறைவன் இட்ட அதாவது மூளையையே பிச்சை இடுகின்றான். அவ் மூளையைக் கசக்கி , 

அளவு என்று அறியாமல் கூட இருந்தாலும், அறிய வைத்து , நிச்சயம் அவ் மூளைக்குச் சரியான வேலையை யார் ஒருவன் கொடுக்கின்றானோ, பின் நிச்சயம் (அவனை) அதி புத்திசாலி என்று இறைவன் கட்டி அணைத்துக்கொண்டு அனைத்தும் தருவான். 

(இறைவன் கொடுத்த) அதைத் தவறான வழியில் பயன்படுத்துபவர்களுக்கும் இறைவன் நிச்சயம் போகட்டும் என்று விட்டுவிடுவான். ஆனால் கடைசியில் ஒன்றுக்கும் லாபம் இல்லை என்று நிச்சயம் அதன் தன்மையை , அதன் சக்தியைப் பிடுங்கி விடுவான். இதனால் பின் வாழ்க்கை வீணாகப்போகும். சொல்லிவிட்டேன் அறிந்தது அனைவரும். 


சுவடி ஓதும் மைந்தன் :- மூளையைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதை சரியான வழியில் பயன்படுத்தவில்லை என்றால் இறைவன் fuseஐ (சக்தியை) எடுத்துவிடுவார். அதற்கு அப்புறம் நமக்கு என்ன அறிவு இருந்தாலும் சாதிக்க முடியாது என்று சொல்கின்றார். இது எல்லோருக்கும் (பொது). 

குருநாதர் :- ( தனி வாக்குகள்……..) 

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..) 

(இங்கு வெளியிடப்படும் பல சத்சங்க வாக்குகளை அடியவர்கள் அனைவருக்கும் இலவசமாக , கட்டணம் ஏதும் இல்லாமல் , அகத்திய மாமுனிவர் குருகுலச் சேவையை ஒரு வகுப்பு எடுத்து,  உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள். நம் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் முதலில் சிவபுராணம் படித்து, இவ் சத்சங்க வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி பின் அன்னமிட அவ் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். புண்ணியங்கள் மலரட்டும். தர்மம் செழித்து ஓங்குக. ) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment