“இறைவா!!! அனைத்தும் நீ”
2021ஆம் ஆண்டு போகர் சித்தர் வாக்கு:-
உலகை ஆளும் நமசிவாயத்தை பணிந்து, என் பாச பிள்ளை கந்தனை வணங்கி,
ஈரேழு உலகத்தையும் தன் பாச கருணையினால் கட்டி அணைத்து என்குரு நாதனையும் வணங்கி உரைக்கின்றேன் போகன் அவன். நிச்சயமாய் எளிதில் மாற்றம் நிகழ்வது கடினம் என்பேன்
குரு போன்று நன்மை தீமைகளையும் ஆராய்ந்து இப்பூவுலகில் பின் பல யுகங்கள் வாழ்ந்து வரும் என் குரு அகத்தியர் நல் முறையாக சுற்றித்திரிந்து எவ்வாறு மனிதர்களுக்கு நல் முகமாய் ஆசிகள் வழங்கினால் தப்பித்துக் கொள்வார்கள் என்று நினைத்து உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் ஆனால் மனிதனோ மாயையில் சிக்கி வழி மாறிச் சென்று கொண்டிருக்கின்றான். பூலோகத்தில் அகத்தியரும் வலம் வந்து கொண்டு ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இனிமேலும் மனிதன் தவறு செய்து கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டு பொறுப்பதில்லை.
மனிதனைப் பார்த்து பாவம் மனிதன் என்றுதான் அகத்தியரும் கருணையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சித்தர்கள் நல்லது செய்ய நினைத்தாலும் கூட மனிதன் மாய வலையில் சிக்கி தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறான்.
இனிமேலும் மனிதன் தவறான வழியில் செல்வது ஒரு உயிரை கொன்று உண்ணுவது, இவ்வாறான பாவ காரியங்கள் செய்துகொண்டிருந்தால் இனிமேலும் கஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
மனிதர்களின் கஷ்டத்திற்கு மனிதர்களே காரணம். யோசித்துப்பார் மனிதனே.
அகத்தியர் நல்முறையாக வாக்குகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இன்னும் வரும் காலங்களில் பலவிதமான நோய்கள் வரும் என்ன விதமான நோய் என்று தெரியாமலே போகும்.
அதற்கு போகன் ஆகிய மருந்துகள் உரைக்கின்றேன்.அதன் பயன்படுத்தி நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
- கீழாநெல்லி
- அக்கரகாரம்
- மாசிக்காய்
- ஜாதிபத்திரி
இவற்றை நெய்யில் இட்டு ஐந்து கடுகளவு தினமும் உண்ண வேண்டும்.
- மலை நெருஞ்சி இலை
- முருங்கை இலை
- துளசி இலை
- புதினா இலை
- கறிவேப்பிலை
- காட்டுக் கொடித்தோடை
- குப்பைமேனி இலை
- கண்டங்கத்திரி இலை
- வில்வ இலை
இவற்றை இடித்து பொடித்து பனை வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வேண்டும்.வாரம் ஒருமுறை மிளகு வெள்ளைப்பூண்டு உண்ண வேண்டும்.
இன்னும் ஏராளமான மூலிகைகளை என்னால் உரைக்க முடியும்.அவற்றைப் பயன்படுத்த குருமந்திரம் தேவை.
ஆனால் அந்த குரு மந்திரம் சொல்லி விட்டால் மனிதன் அதை பயன்படுத்தி காசு ஈட்டுவான்.பொருள் சம்பாதிப்பதற்கு இதனை தவறான வழியில் பயன்படுத்துவான்.
இதனை தயார் செய்து வைத்திருந்தால் அவருக்கு குரு மந்திரம் தந்து உபதேசம் செய்வேன்.
இப்பொழுது குரு மந்திரம் கூறி விட்டால் அதனை பயன்படுத்தி மனிதன் காசாக்குவான்.
இவற்றை நல்ல முறையில் அகத்தியர் பக்தர்கள் தயாரித்தால் அவர்களுக்கு குரு மந்திரம் உபதேசம் செய்வேன். இந்த மருந்துகளை சேகரித்து பயன்படுத்துவதற்கும் குருவின் திருவருள் தேவை குருவின் அருள் இல்லாமல் இதனை செய்ய முடியாது நல் முறையாக செய்பவர்களுக்கு என்னுடைய குரு மந்திர உபதேசம் கொடுப்பேன்.
மனிதர்களை நீங்கள் நேர்வழியில் நடப்பதுதான் உங்களுக்கு பலன் தரும் .
மாயையில் சிக்கி தவறு மேல் தவறு செய்யும் மனிதர்களுக்கு இனிவரும் காலம் கஷ்ட காலம் தான்.
மீண்டும் வந்து சில மூலிகைகளை உரைக்கின்றேன்.
திரு போகர் சித்தர் உரைத்த பொது வாக்கு முற்றே!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment