உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அப்பனே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வேலையப்பா. (இறைவன் ஒரு வேலை கொடுத்து அனுப்புகின்றார்)
இதனைப் பின் தீர்கவே உலகத்துக்கு வந்து கொண்டு அதாவது (மனிதன் பிறந்து) வந்து விட்டான்.
ஆனாலும் அதைத் தெரியாமலேயே வாழ்ந்து வருகிறான். அப்பொழுதுதான் கஷ்டங்கள் அப்பா.
அதைத் தெரிந்து கொண்டால் கஷ்டங்கள் என்பதே இல்லையப்பா.
அப்பனே எது என்று உணர்ந்து உணர்ந்து இதனால் அப்படியே அதைத் தெரிந்து கொள்வதற்கும் அப்படியே புண்ணியங்கள் தேவை அப்பா.
ஆனால் புண்ணியங்கள் எப்படி நாங்கள் செய்வது என்றெல்லாம். அப்பனே நீ சரியாக மனிதனாக நற்பண்புகளோடு வாழ்ந்து வந்தாலே உங்களைத் தேடி யாங்கள் வந்து, (நாடி) வாக்குகள் செப்பி அப்பனே பக்குவப்படுத்தி உயர்நிலைப் பெற வைப்போம் அப்பனே.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment