“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
(மதுரை 6.9.2023 அன்று சில அடியவர்களுக்கு உரைத்த வாக்கு)
அப்பனே எது என்றும் அறிய அனைவருமே ஒரு பக்குவத்தை அதாவது ஒரு எல்லை தாண்டி வந்து விட்டீர்கள் அப்பனே. அதனால் தான் இப்பொழுது உரைத்துக் கொண்டிருக்கிறேன். யார் ஒருவன் எல்லை தாண்டி வருகின்றானோ அவன் தனக்கு எப்பொழுது வேண்டுமானாலும் எம்முடைய வாக்குகள் கிட்டும் அப்பனே.
அப்பனே ஆனாலும் எதை என்றும் புரியும் அளவிற்குக் கூட அதனால் அப்பனே சித்தனுக்கு அப்பன் இரவு பகல் கிடையாது அப்பா. சொல்லி விட்டேன் அப்பனே.
அதனால் உங்களுக்கு யான் என்ன தெரிவிப்பது. அப்பனே எது என்று அறிய அதனால் அப்படியே ஒரு எல்லைக்குத்தான் அப்பனே அனைத்தும் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். ஆனால் அதைத் தாண்டி வந்து விட்டால் அப்பனே , மற்றவை எல்லாம் யாங்களே பார்த்துக் கொண்டு வழியும் நடத்துவோம் அப்பனே. அப்படித்தான் நீங்கள் இருக்கின்றீர்கள் அப்பனே.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment