“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, January 31, 2024

சித்தர்கள் ஆட்சி - 321 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு ( 2021ஆம் ஆண்டு உரைத்த பொது வாக்கு )





 “இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


(2021ஆம் ஆண்டு உரைத்த வாக்கு) 


ஆதி இறைவனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன். 


பேரன்புக் குழந்தைகளே, இனி வரும் காலங்களில் ஒருவருக்கும் ஒருவர் கூட ஒத்தாசை இல்லை என்பேன். என்பேன், எதனால் இப்படி நடந்து கொண்டிருக்கிறது என பல விடயங்களில் யான் சொல்லிக் கொண்டேதான் வருகிறேன்.  ஆனாலும், இந்த நிலைமையை மனிதன் பார்த்தால், எதனால் என்று கூறத்தெரியாமல் இருக்கின்றான்.  

ஆனால், சிறிது கவனித்துப் பார்த்தால், தன் இந்த நிலைமைக்கு தானே காரணம் என புரிந்து கொள்வான். பின், எவை என்றும், எதன் மூலம் வருகிறது என்று யோசித்தால் தெரியும். 

இனிமேலும், திருந்துவதாக மனிதன் ஒரு பொழுதும் ஒத்துக் கொள்ள மாட்டான். ஆனாலும் பிறரை சரி செய்வான். 

அப்பனே! அதர்மம் ஒரு பொழுதும் நிலைக்காது என்பேன். அதனால்தான் தர்மமும் சிறிது ஓங்கட்டும். 

ஆனாலும் இப்புவியில் யான் இருந்து என்மக்களை காத்துக்கொண்டுதான் இருக்கின்றேன். ஆனாலும், அவர்களுக்கே கூட சில சமயங்களில், தீமைகள் நடந்து விடுகின்றது. இது எதனால் என்பதை கூட யான் முன்னே பார்த்துவிட்டேன். இத்தனையும் ஒற்று சமமாக பார்க்கின்றேன்.

சனி பலம் பெற்றவன், பல வழிகளிலும். ஆனாலும், ஈசனிடம் பல வரங்களை பெற்று, சனி நியாயாதிபதியாக இருக்கின்றான். அதனால்தான், அவன்தனுக்கு அனைவரும் பயப்படுகின்றனர். 

ஆனாலும், நியாயமாக, நீதியாக நடந்து கொண்டால் பயம் இல்லை என்பேன். 

ஆனாலும், எதனை என்று கூற? ஈசனும் மனம் மகிழ்ந்து அமைதியாக இருந்து விட்டான். இத்தனையும் சனி நிர்ணயித்து, பின்னர் அனைவருக்கும் கட்டங்களை வழங்கினான். 

ஆனாலும், யான் அவன்தனை சென்று பார்த்தேன். ஈசனே என்று கூட அவனை அழைத்தேன்!

சொல்லுங்கள் அகத்தியன் என்று கூட அவன் பதில் உரைத்தான், எதனால் என்று, ஏன் இந்த நிலைமை! பின் சனியும் சொன்னான்,

அகத்தியா! எதனால் என்பதை கூட யான் அறிந்தேன்! ஆனாலும், யான் 30 வருடங்கள் பார்த்துக் கொண்டேதான் இருந்தேன் மனிதனை. ஆனாலும். மனிதர்கள் செய்யும் செயல்கள் சரி இல்லை. சரி இல்லை என்பதுபோல், ஒழுக்கம் இல்லாமல் வாழ்கின்றனர் மனிதர்கள். உள்ளத்தில் ஒன்றும், பின் புறம் கூறுவதாக ஒன்றையும் செய்து கொண்டு, ஏமாற்று வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். அதனிலும் பின் நிர்ணயித்து, பொய் கூறுதலும், பொறாமையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. நியாயங்கள் இல்லை, தர்மங்கள் இல்லை, ஆனாலும், யான் வந்து, பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். ஆனாலும் எதனை என்று கூற? என்வீட்டில் (மகரம்) யான் அமர்ந்துவிட்டேன். யான் நியாயாதிபதியாகவும் இருந்து, அனைவருக்கும் அவரவர்கள் தர்மத்தை செய்வதை பார்த்துத்தான் வரங்கள் வழங்குவேன், என்பேன், என்பதைப்போல் அவன்தனும் சொல்லிவிட்டான். நிச்சயமாய், அவன்தானும் தீமையை குறைப்பதில்லை  என்று கூறிவிட்டான்.

ஆனாலும் ஈசன் கூட பின் அவனிடத்தில் சென்று எதனை என்று நிர்ணயித்து, பின் சனி கூறினான்,

“(ஈசனே) நீங்கள்தான் எந்தனுக்கு வரம் தந்தீர்கள். நியாயாதிபதி எப்பொழுதும், இறங்கிவிடக் கூடாது என்று கூட. யான் என் வீட்டில் அமர்ந்து கொண்டேன். பார்க்கின்றேன் ஒரு கையும் கூட. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனாலும் யான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனாலும், எதை எப்பொழுது செய்வது என்று, பின் ராகு, கேதுவிடம் கூட உரையாடினேன். உரையாடிவிட்டு, பின் அவர்களும் ஒத்துக் கொள்ளவில்லை.  எதனால் என்று பின் பார்த்தால், அவர்களும், அவரவர் வீட்டில் அமேந்து பல கட்டங்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.”

இது ஈசன் கட்டளை.

இன்னொரு சூட்சுமமும் யான் உரைக்கின்றேன், பரிபூரணமாக. கேட்டுக்கொள்ளுங்கள். 

ஈசன் மீண்டும் கட்டளையிட்டான், கிரகங்களுக்கு. யான் உந்தனுக்கு கட்டளையிடுகின்றேன். பின் எப்பொழுது, எதை செய்தாலும் உடனடியாக தண்டனை கொடுத்துவிடு. இதைப்போல் பின் நிறுத்தி, நிறுத்தி வைத்தல் கூடாது. மனிதர்கள் இச்சென்மத்தில் எந்த எந்த தவறுகளை செய்கிறார்களோ, அதற்கும் தண்டனைகளை வாரி, வாரி வழங்கு, என கிரகங்களுக்கு ஈசன் கட்டளையிட்டுவிட்டான்.

அதனால், மனிதர்களே, ஒழுங்காக வாழ கற்றுக் கொள்ளுங்கள், என்பதைப்போல் இருக்கின்றது. 

இனிமேலும் ஒழுக்கம் இல்லாமல் வாழக்கூடாது என்பேன். 

பின் உலகிலே ஏன் இந்நோய்கள் வருகின்றது என்று பார்த்தால், எதனையும்/எதிலுமே பொருட் படுத்தாமல், மனிதன், நான்தான், நான்தான் என்று சென்று கொண்டிருந்தான். அத்தனையும் ஈசன் தடுத்துவிட்டான்.  பின் இப்பொழுது கூட சொல்கின்றேன். 

பின் நீதி கிடைக்கும் வரை, சனியும் எதையும் வாரி வாரி வழங்குவான். 

இந்த நோயும் (Covid) போகும் போகும் என கூறினாலும், அவரவர் உடலில் தங்கிவிட்டது. இதனை முன்பே யாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இந்நோய் புதிதாக இல்லை என்பேன்.  எவ்வாறு என்று நிர்ணயித்துப் பார்த்தால். மனிதன் வேறு வேறு பெயர்களாக வைத்துக் கொண்டுதான் இருக்கின்றான். பின் எதனை என்று நம்புவது. ஆனாலும் இது அறுநூற்று ஆண்டுகளுக்கு வந்து கொண்டேதான் இருக்கும். இருப்பினும், கிரகங்கள் தம் சொந்த இல்லத்தில் அமர்ந்து கொண்டு இன்னும் வாரி வாரி வழங்குவார்கள் என்பேன்.

மனிதர்களே ஒழுங்காக வாழக் கற்றுக் கொள்ளுங்கள், என்பேன். அவனவன் வேலையை ஒழுங்காக செய்தால் ஒன்றும் ஆகாது என்பேன். 

இனிமேலும் எதனையும் நம்பிவிடாதீர்கள். ஏமாற்று வேலைகளை செயாதீர்கள் என்பேன். பின் தெரிந்தே செய்தால், கிரகங்கள், உடனேயே நோய்களை ஏற்படுத்தும். 

இப்பொழுதே எச்சரித்து விடுகின்றேன். யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்பேன். அவன் பெரும் சித்தனாகக்கூட இருக்கட்டும் என்பேன். அப்பனே! இனி எதையும் தவறு செய்துவிடாதீர்கள் இனியும். 

அன்பே தெய்வம் என அன்றே கூறி சென்றுவிட்டான். இறைவனிடம் அன்பை செலுத்துங்கள். அது போதும்.

இனி வரும் காலங்களில் இன்னும் நோய்கள் வரும். அதனையும் நேர்கொள்ள மூலிகை மருந்துகளை கூறிவிட்டேன். அவைகளை உண்டு உங்களை காத்துக் கொள்ளுங்கள், என்பேன். இனிமேலும் பல சித்தர்களும் வருவார்கள் என்பேன். தர்மத்தை நிலைநாட்ட, ஜீவ காருண்யத்தையும் பிடித்துக் கொண்டால் ஒரு குறையும் வராது.

ஒன்றை மட்டும் உரைக்கின்றேன். தர்மத்தை, தர்மத்தின் பாதையில் நின்று செய்யுங்கள். உந்தனுக்கு ஒரு குறை வந்தால் கூட எந்தனிடத்தில் கேள். அதற்க்கு யாம் பதிலளிக்கிறேன். 

மனிதர்களை பார்த்தால், தர்மம் செய்து வாழ்வது போல்தான் இருக்கின்றது. ஆனாலும், என் பெயர் சொல்லி, சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையானவர்கள் யாரும் இங்கில்லை. நான் சித்தன் என்று கூறிக்கொண்டிருந்தால், சித்தர்களே அவனை அழிப்பார்கள். 

அதனால். யாங்கள் போட்ட பிச்சையில்தான், நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.  அதனால் அப்பனே! எதையும், யான் செய்கின்றேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லிவிடாதீர்கள். 

அப்பனே, என்னை வைத்து பிறரை ஏமாற்றிவிடாதீர்கள். பாவம் அது என்று கற்றுக்கொள்ளுங்கள். வாழக் கற்றுக்கொள்ளுங்கள். எதனையும் கூறிவிடாமல் வாழ்வது நலம் என்பேன். 

அப்பனே, உண்மையை கூறிவிட்டேன். நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள், வாழுங்கள். 

சனியின் பார்வை குறைவதும் இல்லை என்பேன். அதனால், எவை என்று கூற, சனியும் நியாயாதிபதியாக இருந்து, நீதிபதியாக, அவன் ஆட்டத்தை தொடங்குவான். நான் என்ன துரோகம் செய்துவிட்டேன், எனக்கு ஏன் வந்தது என்று கூட நீங்கள் ஆராயலாம். இஜ்ஜென்மத்தில் செய்த தவறுகளை ஆராயுங்கள். அதனால்தான் சனி தண்டனையை வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறான். 

ஆனாலும், எம்மக்களை யான் காப்பாற்றுவேன், நிச்சயமாக. மறுபடியும் வாக்கை கூறுகின்றேன் - பத்து நாட்கள் பொருத்தே.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

Tuesday, January 30, 2024

சித்தர்கள் ஆட்சி - 320 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு “இனி, புண்ணியம் செய்வதே மனிதனின் வேலையாக இருக்கட்டும்!!!!”


 “இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


மனிதன் நினைத்தால் புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள முடியும், பாவத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். இந்த சுதந்திரம் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்படுகிறது. கொடுத்த சுதந்திரத்தை, மனிதன் என்றுமே சரியாகப் பயன்படுத்தியதாகச் சரித்திரமில்லை. சரியாகப் பயன்படுத்தினால் இறைவனருள் அதிக தொலைவில் இல்லை. இதுவே இன்றைய நிலைக்குக் காரணம். இனி, புண்ணியம் செய்வதே மனிதனின் வேலையாக இருக்கட்டும்!!!!!


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தர்கள் ஆட்சி - 319 : - 2021ஆம் ஆண்டு கோடகநல்லூரில் கொங்கணவர் பொதுவாக்கு!

 



“இறைவா!!! அனைத்தும் நீ”


2021ஆம் ஆண்டு கோடகநல்லூரில் சித்தர் கொங்கணவர் உரைத்த பொதுவாக்கு!


காக்கும் கடவுளை மனதில் எண்ணி, பலமாக உரைக்கின்றேன், கொங்கணவன். 


உண்மையில் ஞானி அவர்கள் எவர் என்பதும் கூட இனி வரும் நாளில் தெரிய வரும் என்பேன். ஆனால், உண்மையான ஞானி என்பவர் யார் என்று இனி வரும் நாளில் தெரியவரும். 


அகத்தியரின் அருளும் பெற்று இருந்து, பின் பின் எவ்வாறு உயர்வது என்று கூட அகத்தியன் சரியான முறையில் கணித்துக் கொண்டுதான் போயிருக்கிறான் என்பேன். 


இதனால், பின் இவைதான் என்று கூறாமல், அகத்தியனும் பக்கத்திலே பன்மடங்கு இருப்பான் என்பேன்.  

ஏன் என்றால், இப்பவுர்ணமி அன்று (சித்திரா பௌர்ணமி) கூட சித்தர்கள் தவத்தை மேற்கொள்வார்கள் என உறுதியாக கூறுகிறேன். இப்புவியில் என்ன என்ன நடக்கப் போகிறது என்று அறிவார்கள் சித்தர்கள். இதனால் இப்பவுர்ணமியை "சித்தர்கள் பௌர்ணமி" என்று கூட அழைக்கலாம். பின் அனைவருக்கும் நல்மனதாய் சித்தர்கள் ஒவ்வொரு இடத்திலும் தவம் செய்வார்கள் என்பேன்.


சரியான முறையாய் சித்தர்களை வணங்குபவர்களுக்கு பின் நல் முறையாய், எவை வேண்டும் என்பவர்களுக்கு, அவை தன் பக்தர்களுக்கு எப்பொழுது வரும் என்றும், அதனுடன் கட்டங்களையும், நிச்சயமாய் வந்து நீக்கி விடுவார்கள். 


அகத்தியனும் தவத்தில் தான் உள்ளான் என்பேன். இவ்வருடத்தில் எந்த எந்த கட்டங்கள் வருகிறது என்று அவனுக்கும் தெரிந்து விடும். 


இப்பவுர்ணமியில் சில சித்தர்கள் அண்ணாமலையில் வலம் வருவார்கள். மலை பகுதிகளிலும் இதுபோல்தான், ஓர் சித்தன் தவம் செய்வான். இப்படி பல இடங்களிலும் சித்தர்கள் தவம் செய்வார்கள். எந்தெந்த விளைவுகள், இவ்வுலகில் மாற்றம் அடையச் செய்கிறது என்று கூட ஒரு வாக்கு இருக்கிறது. 


இதனால்தான், எத்தனையோ பரிகாரங்கள் உரைக்கினும், இப்பவுர்ணமியில் அதை செய்தாலும், பலனளிக்காது. 


பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூர்த்திகளிடம் பிரார்த்தனை செய்தாலும், அவர்கள் தலை எழுத்தை சித்தர் வழியில் செல்ல மாற்றுவார்கள். ஏன் என்றால், இது "சித்தர்களுக்கான பௌர்ணமி" என்று கூறப்படுகிறது.


பரிகாரங்களை இங்கு(கோடகநல்லூர்) வந்து செய்கிற பொழுது, ராகு காலத்தில் வந்து செய்கிற பரிகாரங்கள் பலனளிக்கும் என்பேன். 


நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நல்முறையாய் ராகு கேதுக்களை கட்டுப்படுத்த இன்னொரு முறையையும் யான் சொல்கின்றேன். பிறை என்று சொல்கிறார்களே "மூன்றாம் பிறை" அதை தொடர்ந்து நவமாதங்கள் பார்த்துவிட்டால் ராகு, கேதுக்கள் நன்மை செய்துவிடும். இதை யார் உணர்வார்கள்?. 


ஏன் என்றால், எதனையும் நீக்குவதற்கும், அடிக்கடி பெருமாள் இங்கு வந்து அமர்ந்து விடுவார், யான் பார்த்தேன். 


யானும் வேங்கடவன் மலையில் (திருப்பதி ஏழுமலையில் ) தங்கி இருக்கும் பொழுது, இவன்தனை ( பெருமாளை இங்கு ) இழுத்து, இழுத்து வரவேண்டியுள்ளது. அதனால்தான் இப்பொழுது இங்கு வந்தேன் என்பேன். 


நல்விதமாய் ஆசீர்வாதங்கள். நல் முறையாய் சித்தர்களின் அருளால் நன்மையே ஏற்படும். 


அகத்தியனும், நல் முறையாய், நல்ல வழிகாட்டியாய் இருப்பான் உங்களுக்கு.  இனிமேலும் வரும் காலங்கள் உயர்வான காலங்கள் என்பேன்.  


நல்முறையாய் வரும் காலங்கள் மக்களுக்கு சரியானதாய் இல்லை என்றாலும், அகத்தியனை நம்பி, பின் அவர்பின் தொடர்பவர்களுக்கு, பின் குறை இல்லாத வாழ்வே அகத்தியன் அளிப்பான், என்று நல்வாக்கு, பலிக்கும்.


அப்பனே உங்களுக்கும், நல்முறையாய், நல்ல ஆசீர்வாதங்களை, அகத்தியன் பெற்று தந்து கொண்டிருப்பான். 


இவ்வுலகில் நலமாக வாழ மூலாதாரமாக இருப்பது இறை சக்தி ஒன்றுதான். இறை சக்தி இருந்தால், பின் நல் முறையாய் அனைத்தும் தேடி வந்துவிடும். உங்கள் அனைவருக்கும் நல்முறையாய் இறை அருளை பெற்று தருவதற்கு, மூலகாரணமே அகத்தியன் என்பேன். 


இப்பொழுதும் நல் முறையாய், உங்களை பற்றிய சிந்தனைகளும் ஓடுகிறது என்பேன். இப்பொழுது தவம் செய்கின்றார்கள். ஈசனும் கூட வந்து நின்று எங்கெங்கோ பார்த்தான். அவன் திருவிளையாடல் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஈசன் வந்து பார்த்ததை நாடியில் யான் கூறியதை கண்டு மகிழ்ந்து, அகத்தியன் த்யானத்தில் இன்னும் இருப்பான். அனைத்து சித்தர்களும், இந்நாடியில் வந்து வாக்குரைப்பார்கள்.


எம்முடைய ஆசிகள், நலன்கள்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

Monday, January 29, 2024

சித்தர்கள் ஆட்சி - 318 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “பொது வாக்கு - எச்சரிக்கை”



“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


(2021 ஆம் ஆண்டு உரைத்த பொது வாக்கு) 


ஆதி ஈசனை நினைத்து உரைக்கின்றேன் அகத்தியன். 


இவ்வாண்டில் சில மாற்றங்கள் ஏற்படும் என்பேன். நம்பிக்கை இல்லோரை பின் மீண்டெடுக்க முடியாது என்பேன். பின் பலத்த மழையால் அழிவு ஏற்படும் என்பேன். ஏன் என்றால், ஈசன் சிறு சிறு விளையாட்டை, பெரு விளையாட்டாக மாற்றி விடுவான் என்பேன். 


என்பேன் பொய்யான பக்தியின் வழியில் மனிதர்கள் செல்வார்கள் என்பேன். இறைவனை நம்பினால் ஒன்றும் கிட்டாது என்று, நல் வழியை பயன்படுத்தி, தீய வழியில் செல்வார்கள். பின் அவர்களே அழிந்து போவார்கள். 


இவ்வாண்டு கூட, பொய்யான பக்தியை நிலைநாட்டி,  எல்லாமே அடைந்துவிடலாம் என்று, பக்தி மார்கத்தில் சில பொய்யான உருவங்கள் பக்தி மார்கத்தை நாடும் என்பேன். பின் சித்தர்களை வைத்து (கூறி) பொருள் பணம் சம்பாதித்து விடுவார்கள். ஆம்! ஆனால், அழிவு நிச்சயம் என்பேன். என்பேன், பின் மறைமுகமாக சில எண்ணங்கள் தோன்றி பெண்களை ஏமாற்றுவார்கள் என்பேன். பக்தி பாதை என கூறி அழைத்து சென்றவர்களே, எதிரியாகி விடுவார்கள். 


இதனால்தான் யான் கூறுகிறேன், அகத்தியனை நம்பினால், பின் அகத்தியனை மட்டும் வணங்கு என்று. பின், அகத்தியன் என்னும் பெயரை சொல்லி ஏமாற்றுவார்கள். பின்னர் பலப்பல வித்தைகளையும் மனிதர்கள் காண்பிப்பார்கள். பின், இனியும் வருவார்கள் மனிதர்கள். யாரையும் நம்பிவிடக்கூடாது.


அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் யான், திருத்தலங்களை கட்டுகிறேன் என்று பொருளும், பணமும் சேகரித்து, அவன் சௌகரியமாக அமர்ந்து கொள்வான். பின்னர் அத்திருத்தலங்களில் உள்ள தெய்வ மூர்த்தங்களே அவனை அழித்து விடும. இதனால் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். 

மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமா, நீயே போய் செய்துவிடு, என்பேன். 

பின் ஒன்றை கேட்கின்றேன். சன்யாசிகளுக்கு இவையெல்லாம் எதற்கு? போகட்டும், மூன்று வேளை உணவிருந்தால் போதாதா? என்று கூட யாம் முன்னே பல முறை கூறியுள்ளேன். சந்நியாசியாக வந்துவிட்டால், சுகபோகமாக வாழ்வு கிடைக்கும் என மனிதர்கள் வருவார்கள். ஆனாலும், அன்னை, தந்தை, மனைவி, மகள், அண்ணன், தங்கை இவர்களை விட்டு விட்டு வருவார்கள்.


அனைவரும் என் மக்களே. அனைவரும் மிக கவனமாக இருங்கள். அனைவருக்கும் பலமாக, நல் ஆசிகளை இறைவன் உரைத்துவிட்டான். இனியும் யாரையும் நம்பி ஏமாறாதீர்கள் என்பேன். 


வருவார்கள், கலியுகத்தில், ஆனாலும் ஒன்றை உரைக்கின்றேன். இவர்களால்தான் இந்து மதம் கெட்டுக்கொண்டே இருக்கின்றது. எந்த மதத்ததையும் பற்றி பேசவில்லை. அனைத்து மதங்களும் எங்களுக்கு ஒன்றுதான். ஆனாலும் இதை பற்றி பேசத்தான் இங்கே கூறுகின்றேன்.  


பின் இவர்கள் செய்கின்ற தவறுகளால், இந்து மதத்தையே இழிவுபடுத்தி விடுவார்கள். 


அதனால் தான் கூறுகிறேன், ஒழுங்காக வாழக் கற்றுக்கொள்ளுங்கள், இல்லையேல், யாங்களே, சித்தர்களே அழித்து விடுவோம். ஏனென்றால், நீ ஒழுங்காக இறைவனை வழிபட்டால், ஒழுங்காக வழிபட்டு சென்றுவிடு. மற்றவையெல்லாம் ஏன்? 


நீ என்ன இறைவனா? உன்னால் என்ன செய்ய முடிகின்றது? மனிதா! என் கோபத்திற்கு ஆளாகாதே! நிச்சயமாய் அழித்துவிடுவேன். இப்பொழுது கட்டளை இடுகின்றேன், அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று பொய் பித்தலாட்டம் ஆடுகின்றீர்களே, ஆனால் நிச்சயம் யானே அழித்து விடுவேன். 


ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள், இனிமேலும் எந்தனுக்கு கோபம் வந்தால், அனைத்தையும் அழித்துவிட்டு போவேன். ஈசனைவிட எந்தனுக்கும் திறமைகள் அதிகமாக இருக்கின்றது. மானிடா, சொல்லுவதை மட்டும் கேளுங்கள். மானிடா, உங்களால் என்ன செய்ய முடியும். யங்கள் தான் உங்களையே காப்பாற்றுகின்றோம்.

நீங்கள் உங்கள் திறமைகளை பயன்படுத்தி, பித்தலாட்டம் செய்து எங்களுக்கு செய்வீர்களா? பார்க்கின்றேன், ஒவ்வொருவரையும் அடித்து நொறுக்குகின்றேன். 

அதனால் தான் கூறுகின்றேன். மானிடா, ஒழுங்காக வாழ கற்றுக்கொள்ளுங்கள். உங்கள வேலை என்னவோ காய் மட்டும் செய்யுங்கள். 

மறைமுகமாக பெண்களை ஏமாற்றி விடாதீர்கள். சித்தர்கள் என்று சொல்லி சொல்லி வாழ்ந்த நிலையை இனிமேலும் யான் பொறுத்துக் கொள்ளமாட்டேன். 

ஈசன் எவ்வாறு நாடகத்தை நடத்த உள்ளான்,என்பதை விட அதிகமாக எந்தனுக்கு தெரியும். 

அனைத்து திறமைகளும் என்னிடத்தில் இருக்கின்றது. மானிடா, ஒழுங்காக வாழ கற்றுக்கொள். இல்லையெனில், பக்தன், பக்தன் என்று கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்களா?


இனிமேலும் சொல்கின்றேன், ஒழுங்காக இருங்கள். அகத்தியனின் கருணை கொண்டு கரையும் உள்ளம் கொண்டுதான் பார்க்கின்றேன். ஆனாலும் என்னை வைத்து இவ்வுலகில் பொருள் சம்பாதிப்பவர்கள், நோய் நொடி பற்றி வருவார்கள். பின் அவர்கள் இல்லத்தில் ஒரு அசம்பாவிதமும் நடக்கும். 


ஏனடா! எங்களை மறைபொருளாக வைத்து சம்பாதிக்க நாங்கள்தான் கிடைத்தோமா? யான் உங்களை காப்பாற்றுகின்றேன், நீங்கள் யார் எந்தனுக்கு செய்வதற்கு?


உந்தனுக்கு எதுவும் தேவை இல்லை என்று வந்துவிட்டாய். பின்னர் அத்தனை சுகம் கேட்கிறதா? அந்த சுகத்தை எவ்வாறு நிறுத்துவது என்பதும் எங்களுக்கு தெரியும். காகபுஜண்டனும் நல் முறையாய் கோபத்தில்தான் உள்ளான் என்பேன். அழித்துவிடுவான். பின் ஜாக்கிரதையாய் இருங்கள்.


வந்து உரைக்கின்றேன், இரு மாதங்களுக்குப் பின்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சித்தர்கள் ஆட்சி - 317 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “பொது வாக்கு - பௌர்ணமி/அம்மாவாசை ஆதி ஈசனாரின் பயணம் - (1) சிதம்பரம் (2) திருவண்ணாமலை (3) காஞ்சிபுரம் ஏகாம்பரம் (4) ஶ்ரீ காளஹஸ்தி (5) அதிகாலையில் திருவானைக்காவல் நீராடல் “








 “இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


ஒரு முறை சிதம்பரம் கோவிலில் அர்த்தஜாம பூஜைக்காக காத்திருந்த பொழுது, ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் நாடி வாசிக்க வேண்டி வந்தது. தனிப்பட்ட நாடி வாக்கில் அகத்தியப் பெருமான் வந்து பொதுவான ஒரு சூட்சுமத்தை உரைத்தார். அதை மட்டும் அடியவர்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே தருகிறோம்.


"அப்பனே, இன்னொரு விளக்கத்தையும் ஒரு சூட்சுமமாக விளக்குகின்றேன்.  யாரும் விளக்கவில்லை. 

அப்பனே! பௌர்ணமி, அமாவாசை திதிகளில் இங்கு அமர்ந்து/உறங்கினால் அப்பனே, உடுக்கை சத்தம் கேட்கும், அப்பனே! நடை பயணம் கேட்கும், சலங்கை ஒலி கேட்கும். அப்பனே இங்கு திரிவார் என்பது திண்ணம். சிவபெருமான் இங்கு நடப்பதை கேட்கலாம். இது ஞானிகளுக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது.


அப்பனே! எவையென்று கூற! அப்பனே! இன்னொரு விளக்கத்தையும், மிக சூட்சுமமாக விளக்குக்கின்றேன். இதையும் யாரும் விளக்கவில்லை. 

(1) அப்பனே! இரவு இங்கு உலா வந்து ஒரு காலம் அமர்ந்து, 

(2) பின்னர் அண்ணாமலைக்கு வருவான். பின்னர் அங்கு சுற்றி திரிவான் இறைவன். 

(3) பின்பு ஏகாம்பரம் என்றழைக்க கூடிய காஞ்சிபுரம் செல்வான். 

(4) இங்கிருந்து காளத்திரி (காளஹஸ்தி) போவான். 

(5) அதன் பின்னர் அதிகாலையில் திருவானைக்காவில் நீராடுவான் இவன்" என்றார்.


இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த நாடி வாசித்தது ஒரு அமாவாசை திதி அன்று, சிதம்பரத்தில். நாடி வாக்கை பதிவு செய்த பொழுது, பின்னணியில் சதங்கை ஒலியும் பதிவாகியுள்ளது. அதை உணரும் பாக்கியம் ஒரு சிலருக்குத்தான் கிடைத்துள்ளது.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

Thursday, January 25, 2024

சித்தர்கள் ஆட்சி - 316 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “பொது வாக்கு - தை அம்மாவாசை முன்னோர்கள் வழிபாடு”

 




“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


24/1/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு


ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!


அப்பனே நலன்கள் நலன்களாக!!! இன்னும் எம்முடைய ஆசிகள்!!!!

அப்பனே எவை என்று கூற யான் ஏற்கனவே உரைத்திட்டேன்!!!! அப்பனே மனிதன் இக்கலியுகத்தில் வாழத் தெரியாமல் வாழ்ந்து கஷ்டங்கள் பட்டு பட்டு எதற்காக பிறந்தோம் எதற்காக இக்கஷ்டங்கள் என்பதை உணராமலே அப்பனே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்!!!!அப்பனே


அப்பனே இவையன்றி கூட சித்தர்கள் யாங்கள் ஒவ்வொரு வாக்கியத்திலும் அப்பனே எப்படி எல்லாம் வாழ்ந்தால் இத் துன்பங்கள் நீங்கி கலியுகத்தில் வாழ முடியும் என்பதை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே வருகின்றோம் அப்பனே!!! அறிந்தும் அறிந்தும்!!!


ஆனால் அப்பனே மனிதன் இவை தன் உணராமல் தன் நலத்திற்காகவே வாழ்ந்து துன்பத்தில் சிக்கி தவிக்கின்றான்!!!!அப்பனே


அப்பனே யான் ஏற்கனவே உரைத்திட்டேன்!!!!! இவ் ஆன்மா என்பதே அணுக்கள் அப்பா!!!!


புரட்டாசி திங்களில் மேலிருந்து விழும் ஆத்மாக்கள் (முன்னோர்கள்) அதாவது  அணுக்கள் விழும்.

அதனை காந்தகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இறைவனிடத்தில் ஒட்ட வைக்க வேண்டும்.

அப்பனே மேலிருந்து விழும் அணுக்களானது ஐப்பசி திங்களில் புனித நதிகளில் நீராடி  அப்பனே இவ்வாறு நீராடும் பொழுது இவ் அணுக்கள் எல்லாம் மீண்டும் மேலே செல்லுமப்பா!!!!!

கார்த்திகை திங்களில் அப்பனே கந்தனவன் மீண்டும் ஆன்மாக்களை அதாவது அப்பனே முக்தி பெறாமல் எவை என்று கூற பல்வேறு ஆசைகளோடு அலையும் ஆன்மாக்களை அப்பனே செவ்வாய் கிரகத்திலிருந்து கந்தன் மேலே அனுப்பி வைப்பான்.

அப்பனே ஆனாலும் மார்கழி திங்களில் இவ்ஆன்மாக்களுக்கு ஒரு தீர்ப்பு வருமப்பா!!! 

இங்கே ஆன்மாக்களை அணுக்கள் என்றே யான் குறிப்பிடுவேன் அப்பனே!!!

இவ் ஆன்மாக்களுக்கு அப்பனே அதாவது அணுக்களுக்கு முக்தி கிடைக்குமா?? மோட்ச கதி உண்டா ??என்பதை எல்லாம் அப்பனே.

அவ் ஆன்மாக்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்பவே தீர்ப்புகள் கிடைக்கும் என்பேன் அப்பனே!!!

அப்பனே ஆனாலும் எவ் ஆத்மாக்கள் புண்ணியம் செய்து இருக்கின்றதோ அவையெல்லாம் அப்பனே மீண்டும் மேலே காந்தகத்தில் ஒட்டிக் கொள்ளும்  அப்பா!!!!

அப்பனே எதையென்று கூற அப்பனே புண்ணியம் இல்லாத ஆத்மாக்கள் மீண்டும் கீழே வந்து அலைந்து திரியுமப்பா!!!!!

அவ் ஆன்மாக்கள் எல்லாம் அப்பனே ஐயோ !! ஐயோ !! என்றெல்லாம் அப்பனே தம்தன் உறவுகள் சொந்த பந்தங்கள் எங்கே என்றெல்லாம் அலைந்து திரியுமப்பா நிம்மதி இல்லாமல் இருக்குமப்பா!!!!

அப்பனே அதாவது ஆன்மாக்களை அப்பனே அணுக்களை ஒரு பிண்டமாகவே பிடித்து இறைவனிடத்தில் சேர்க்க வேண்டும் என்பேன் அப்பனே!!! அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே!!!

(இதை பற்றி நம் குருநாதர் அகத்திய பெருமான் மானசா தேவி ஆலய வாக்கில் தெளிவாக கூறியிருக்கின்றார்..சித்தன் அருள் 1533)


இவ் தை திங்களில்   இவ் அணுக்களை எல்லாம் அதாவது இவ் ஆன்மாக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பொழுது, அவைகளை ஒன்றிணைத்து ஒரு பிண்டம் போலவே செய்து அப்பனே நல்விதமாகவே செய்திடல் வேண்டும் என்பேன்.

இவ் ஆன்மாக்கள் ராமேஸ்வரம் காசி கயா அப்பனே இன்னும் இன்னும் அப்பனே நதிக்கரைகளில் எல்லாம் அப்பனே அமைதியின்றி அலைந்து திரிந்து கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கும் அப்பனே!!!!


இவ் மாதத்தில் வரும் அப்பனே தை அமாவாசை என்கின்றார்களே அப்பனே இவ் நாட்கள் வரை அப்பனே அனைவரும் இவ் இடங்களுக்கெல்லாம். சென்று அப்பனே இவையன்றி கூட அப்பனே தம் தன் முன்னோர்களை நினைத்து எள் கலந்த சோற்றினை அப்பனே பிண்டமாக வைத்து அப்பனே அவர்களை வணங்கி முன்னோர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே!!!


அப்படி செய்தால் தான் அப்பனே ஆன்மாக்களும் மேலே சென்று முக்தியை பெறுமப்பா!!!!

இதை அனைவரும் நிச்சயம் செய்ய  வேண்டும் என்பேன் அப்பனே!!!!

அப்பனே அங்கு செல்ல இயலாதவர்கள் தாம் தன் வசிக்கும் அருகில் அப்பனே இருக்கும் நதிக்கரை ஓரங்களில் திருத்தலங்களில் எல்லாம் அப்பனே சென்று முன்னோர்களை நினைத்து ஆன்மாக்களை அப்பனே இறைவனிடத்தில் வேண்டிக்கொண்டு நல்விதமாக ஒரு  லட்டு  போல் அப்பனே( எள் கலந்த சோறு உருண்டை) இவ்வாறு செய்கின்ற பொழுது அப்பனே ஆன்மாக்களும் முக்தியை நோக்கி செல்லும் அப்பா!!!

இவ்வாறு செய்துகொண்டு அப்பனே முடிந்தவரை இயலாதவர்களுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் அன்னத்தை ஈய வேண்டும் என்பேன் அப்பனே!!! இதனை செய்து விட்டு அப்பனே அமைதியாக உட்கார்ந்து இறைவனை நினைத்துக் கொண்டு!!!! இறைவா !! எம் முன்னோர்களுக்கு நல்விதமாக முக்தியையும் மோட்சத்தையும் கொடு என்றெல்லாம் வேண்டிக்கொண்டு அப்பனே !!!! 


இவ்வாறு செய்யாவிடில் அப்பனே அவ் ஆன்மாக்கள் எல்லாம்!!!!.....??

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!

மனிதனுக்கு ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்றெல்லாம் அப்பனே யோசிப்பதே இல்லை அப்பனே

இவ்வாறு ஆன்மாக்கள் அலைந்து திரிந்து கஷ்டங்கள் பட்டுப்பட்டு வருத்தத்துடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தால் அப்பனே அவர்களுடைய சந்ததிகளுக்கும் பெரும் கஷ்டங்கள் வரும் அப்பா!!!! இவையெல்லாம் மனிதர்களுக்கு தெரிவதே இல்லை என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே இவ் கஷ்டங்களை எல்லாம் அப்பனே மனிதனுக்கு வராமல் இருக்க வேண்டுமென்றால் அப்பனே யான் கூறியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே.


அவ் ஆன்மாக்கள் எல்லாம் வருத்தங்களோடு அலைந்து திரிந்து கொண்டிருந்தால் மனிதர்களுக்கு குடும்பத்தில் கஷ்டம் இல்லத்தில் சண்டை சச்சரவுகள் இல்ல தாளுடன் மன வேறுபாடு பிள்ளைகளுடன் அப்பனே மனக்குழப்பங்கள் இவையெல்லாம் வந்து கொண்டே இருக்கும் அப்பா!!!!

இவ் ஆன்மாக்களுக்கு நல்முறையாக இவ் தைத்திங்களிலே இவ்வாறு வணங்கி வழிபட்டாலே அவை தன் மகிழ்ந்து வாழ்த்தி விட்டு செல்லுமப்பா இதனால் அப்பனே கஷ்டங்கள் குறையுமப்பா!!!!!

அப்பனே ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே அவ்ஆன்மாக்கள் வருத்தப்பட்டால் அப்பனே அப்பொழுது உங்கள்  வாழ்க்கையிலும் வருத்தங்கள் வரும் அப்பா!!!!

ஆன்மாக்களை சமநிலைப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே அவ் ஆன்மாக்கள் எல்லாம் மீண்டும் இறைவனிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

இல்லை என்றால் அப்பனே பெருமளவு கஷ்டங்கள் வரும் அப்பனே!!!!!

இதை என் பக்தர்கள் அனைவரும் வரும் நாட்களில் நிச்சயம் செய்து கொண்டு வர வேண்டும் அப்பனே!!!

யாங்கள் கூறியதை நீங்கள் கேட்டு உணர்ந்து அப்பனே செய்து கொண்டு வந்தால் தான் அப்பனே யாங்களும் உங்களுக்கு வாக்குகள் தர முடியும் அப்பனே!! உங்களை கஷ்டங்களிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே மீண்டும் கூறுகின்றேன் அப்பனே இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே அப்படி செய்தால் தான் என்னுடைய வாக்குகளும் கிட்டும் அப்பனே என்னால் மாற்றத்தையும் தர முடியும் என்பேன் அப்பனே!!!! அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே!!!!!


இதை அனைவரும் நிச்சயம் செய்ய வேண்டும் அப்பனே!!!!

அமாவாசை வரை நிச்சயம் இதை அனைவரும் செய்திட வேண்டும் அப்பனே அமாவாசைக்கு பிறகு தான் அப்பனே எந்தன் வாக்குகள் அனைவருக்கும் கிட்டும் என்பேன் அப்பனே

சித்தர்கள் யாங்கள் மனிதர்களை திருத்தி நல்வழிப்படுத்தி இக்கலியுகத்தில் கஷ்டங்களில் இருந்து மீண்டு வருவதற்கு அப்பனே பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே!!!

யாங்கள் திருத்துவோம் அப்பனே அப்படி மனிதன் கேட்காவிடில் அடித்து திருத்துவோம் அப்பனே!!!

அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகள் அப்பனே!!!!!

(வணக்கம் அகத்தியர் அடியவர்களே குருநாதர் அகத்திய பெருமான் இன்றிலிருந்து அடியவர்கள் அனைவரும் அவரவர் முன்னோர்களை நினைத்து இந்த தை மாதத்தில் அமாவாசை வரையிலான நாட்கள் வரை... ஆற்றங்கரையில் இருக்கும் இந்த திருத்தலங்களில் அதாவது தாமிரபரணி காவேரி வைகை கங்கை நர்மதா தபதி என புனித நதிகள் ஓடும் திருத்தலங்களில்.... அதாவது காசி ராமேஸ்வரம் கூடுதுறை பவானி திருச்சி திருநெல்வேலி என அவரவர் இருக்கும் இடங்களுக்கு அருகே இருக்கும் கோயில்கள் படித்துறைகளில் சென்று முன்னோர்களுக்கு அவர்கள் ஆத்மா முக்தியை பெற பித்ரு தர்ப்பணங்கள் செய்து இறைவனை நினைத்து வேண்டிக்கொண்டு இயலாதவர்களுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் தொடர்ந்து அன்னதானம் இவை எல்லாம் செய்து வர வேண்டும் என்று கூறி இருக்கின்றார் அதன் பிறகு குருநாதர் அயோத்தியில் வாக்குகள் உரைப்பேன் என்று கூறி இருக்கின்றார் அதுவரை அடியவர்கள் அனைவரும் இதை கடைபிடித்து வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

Tuesday, January 23, 2024

சித்தர்கள் ஆட்சி - 315 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “19/1/2024 அன்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த அயோத்தி கும்பாபிஷேகம் பொதுவாக்கு”

 





“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

19/1/2024  அன்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த பொதுவாக்கு 


ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!! 


அப்பனே நலன்கள் அப்பனே உலகத்தோர்க்கு !!!!!!!!!!


அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இறைவன் நிச்சயம் அப்பனே பார்த்து பார்த்து ஆனாலும் ராமனுடைய பிறவி அப்பனே சரித்திரமானது!!!!!!!

ஏன்? எதற்கு அப்பனே எவை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் சொல்கின்றேன் அப்பனே!!!!

இதையென்று அறிய அறிய அப்பனே அதாவது பல வழிகளிலும் கூட அப்பனே எடுத்துரைத்து விட்டேன் அப்பனே.

அதாவது இறைவனே மனித ரூபத்தில் பிறந்தால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பல கஷ்டங்கள் அப்பனே அனுபவிக்க வேண்டும் அப்பனே இதுதான் உண்மை!!!!!!!

அப்பனே இதனால் தான் அப்பனே இவை எடுத்து கூறவே அப்பனே நிச்சயம் இறைவன் அதாவது மனித ரூபத்தில் பிறந்து அப்பனே வளர்ந்து பல இன்னல்கள்!!!! 

ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட இவ்வாறு நீதி நேர்மை தர்மம் கடைப்பிடிப்பதன் மூலம் அப்பனே இறைவன் அப்பனே அருகிலே இருந்தான்!! அப்பனே!!!

இறைவன் அனைத்தும் செய்தான் அப்பனே!!!

ஆனாலும் கஷ்டங்கள் வந்தவை ஆனாலும் அதை எதிர்த்து நிற்கும் துணிவையும் அதாவது பின் மன தைரியத்தையும் அப்படி அறிந்தும் கூட இறைவன் அருகிலே இருந்தான் அப்பனே!!! இதுதான் அப்பனே!!!

இவையெல்லாம் சூட்சுமமாகவே வரும் காலத்தில் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் அப்பனே ஒரு பெண்மணி இப்படி வாழ்ந்தால் தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே அதாவது!!!!

( அன்னை ஶ்ரீ சீதா தேவி ) மழை வா!!!!!!!! என்று சொன்னால் வந்துவிடும்!!!

மழை அறிந்தும் போ என்று சொன்னால் போய்விடும் அறிந்தும் இவையெல்லாம் அப்பனே இதனால் நிச்சயம் ஒரு பெண்மணியும் கூட!!! 

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட ஆனாலும் சீதா தேவியோ !!! இறைவனுடைய குழந்தை!!!

ஆனாலும் அப்பனே இறைவனின் குழந்தைக்கே இவ்வாறு நிலைமை என்றால் அப்பனே நிச்சயம் பார்த்துக்கொள்ளுங்கள் அப்பனே!!!!

அப்பனே இதுதான் விதி!!!!

அதனால் அப்பனே இதை யாங்கள் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே நன் முறைகளாகவே அப்பனே!!!!!


அதாவது மனிதன் அதாவது எதை என்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!! 

பின் புரிந்து வாழ கற்றுக் கொண்டால் அப்பனே எளிதில் அனைத்தும் நிறைவேறும் என்பேன் அப்பனே!!!!


இறைவனுடைய குழந்தையாக இருந்தாலும் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அப்பனே கவலைகள் அதாவது இப் புவிதன்னில் பிறந்து விட்டால்!!!!!!


ஆனாலும் அப்பனே நலன்கள் அப்பனே பின் நிச்சயம்......பின். அயோத்தியில் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஞானிகளும் ரிஷிகளும் அப்பனே மறைமுகமாக வந்து அப்பனே பல  பல பல வழிகளிலும் கூட அப்பனே இதை அதை என்றெல்லாம் அப்பனே யான் இங்கு பின் எதையும் குறிப்பிடவில்லை அப்பனே!!! 

இப்படி வாழ்ந்தால் அப்பனே நிச்சயம் பின் உலகத்தில் ஜெயிக்கலாம் வரலாறு பேசுமப்பா !!

அவ்வளவுதான் அப்பனே!!! 

மற்றவை எல்லாம் அவை இவை எதை என்றெல்லாம் யான் இங்கு தெரிவிக்கவில்லை!!! அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!!!


நீதி நேர்மை தர்மம் அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே உழைப்பு எதை என்றும் புரிய புரிய அப்பனே இவைதன் புரிந்து கொள்ளவே இறைவன் அப்பனே மனிதனாக பிறந்து பல வழிகளிலும் கூட அப்பனே இன்னல்கள் பட்டுப்பட்டு அப்பனே வரலாற்றை அறிந்தும் அறிந்தும் கூட!!!


இதனால் அப்பனே பல ரிஷிமார்களும் குருமார்களும் கூட அப்பனே நிச்சயம் அயோத்தி க்கு வருவார்களப்பா!!!!


அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இன்னும் இன்னும் அப்பனே


வளிமண்டலத்தில் பின் அப்பனே பின் நெருப்பு பிழம்பாகவே அப்பனே கிரகம்!!! அனைவருக்கும் தெரிந்ததே!!!! 


ஆனாலும் அப்பனே யாங்கள் ஏன் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது சூரியனும் கூட எப்படி என்று நீங்கள் அறிவீர்கள் அப்பனே.


அதாவது அப்பனே பின் எரிந்து கொண்டே இருக்கும் அப்பனே!!! அவைதன் ஒளி அப்பனே அனைத்தும் அப்பனே அதாவது நாம் வசிக்கின்றோமே இப்பொழுது அப்பனே இங்கு படுமப்பா!!!!! 

அப்பனே எதை என்றும் கூட அதை தன் ஈர்க்கும் சக்தி அப்படியே வைத்து கொண்டால் நலன்கள் அப்பனே மிக்க மிக்க.... அவைதானப்பா தீபங்கள்!!!!!    என்பதெல்லாம் அப்பனே!!! 

(சூரியனிடம் இருந்து வரும் ஒளியின் சக்தியை வீட்டில் ஏற்றும் தீபங்கள் ஈர்த்து சக்தியை கூட்டும்)


தீபங்கள் ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே நெருப்பிற்கு அவ்வளவு சக்திகளப்பா!!!!


இதனால் தான் தீபம் அப்பனே அறிந்தும் கூட ஏற்றுங்கள் ஏற்றுங்கள் என்றெல்லாம்!!!!


ஆனாலும் அப்பனே இதன் இன்னும் தத்துவங்களை கூட யான் வரும் காலங்களில் விளக்குவேன் அப்பனே!!!!! 


ஏனென்றால் சிறிது சிறிதாக பின் விளக்கம் அளித்தால் தான் அப்பனே அனைத்தும் புரியும் என்பேன் அப்பனே!!!


அனைத்தும் ஒரே பின் அப்பனே எதை என்று கூட வரிசையில் சொல்லி விட்டால் புத்திகள் மங்கிபோகும் என்பேன் அப்பனே!!!!


இதனால் அப்பனே தீபம் ஏற்றினால் அவ் ஒளியானது அப்பனே அதாவது நெருப்பும் நெருப்பும் அப்பனே சேர்ந்தால் அப்பனே ஒரு ஒளி எதிரொலிக்குமப்பா!!!!!! 


அப்பா!!!!!! அது தான் அப்பா பின் எதை என்று அறிய அறிய ஆன்மா என்று வைத்துக் கொள்ளலாம் அப்பனே!!!


அது பின் நிச்சயம் அப்பனே அதாவது.  உள்ளம் பெரும் கோயில்.. என்கின்றார்களே அப்பனே அது உள்ளத்தில் புகுமப்பா அப்பொழுது நல் எண்ணங்கள் வரும் அப்பனே!!!! அறிந்தும் கூட


அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஒளி ரூபமாகவே இறைவனை தரிசிக்கலாம் என்றெல்லாம் அப்பனே இன்னும் சொல்வேன் அப்பனே.

( பின் வரும் வாக்கு மிக முக்கிய வாக்கு. )

ஏனென்றால் அவ் அவ் திருத்தலங்களுக்கு சென்றால் தான் அப்பனே அங்கு செப்பினால் தான் அப்பனே பின் எதை என்று அறிய அறிய எவரையும்!!!...........(கர்மா அண்டாது) 

பின் இன்னும் புண்ணியங்கள் அப்பனே நலன்களாகவே!!!!! 

அதை படிப்பவருக்கும் அப்பனே எவை என்று கூட ஓதுபவருக்கும் அப்பனே நிச்சயம்  அவ் அவ் திருத்தலங்களில் கூட படித்தால் அப்பனே அதனால் தான் அப்பனே அவ் அவ் திருத்தலங்களுக்கு செல்ல சொல்லி அப்பனே நீங்கள் செல்லா விடிலும் எதை என்று அறிய அறிய எவை என்று கூட பின் நல்விதமாகவே  இவந்தனை அனுப்பி 

(அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை திருத்தலங்களுக்கு அனுப்பி

( இந்த நாடி வாக்குகளைப் படிக்கும் உங்களுக்கும் ) அப்பனே அதன் மூலம் புண்ணியங்களை உங்களுக்கும் கூட சேர்த்து வைத்து கொண்டிருக்கின்றேன் அப்பனே

இதனால் அப்பனே பின் அனைத்திற்கும் மேலானது அப்பனே எவை என்று கூற அன்பு என்பதை கூட!!! 

அதனால் தான் அப்பனே அனைவருக்குமே நல்லதாகட்டும் என்பதே சித்தர்களின் தீர்ப்பு!!!! 

அதனால் தான் அப்பனே 

கை விடுவதும் இல்லை அப்பனே உங்களையும் கூட. 


இதனால் தான் அப்பனே இதனால் அன்றைய தினத்தில் தீபம் ஏற்றுங்கள் அப்பனே!!!! 


(22/1/2024 அயோத்தி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பிராண பிரதிஷ்டை தினம்) 


நிச்சயம் அப்பனே அதாவது சுந்தரகாண்டத்தையும் பாராயணம் செய்யுங்கள் அப்பனே நலங்களாகவே!!!


பின் ராம ஜெபத்தையும்  கூட அப்பனே ஸ்ரீ ராம ஜெயம் என்றெல்லாம் கூட அப்பனே கூறுங்கள் அப்பனே இப்படி கூறிக் கொண்டு வந்தால் அப்பனே அனுமானுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே ராமன் பிறந்து விட்டான் அப்பனே !!


ஆனாலும் சனியவன் கூட பின் அறிந்து கூட ஒரு ஜென்மத்தில் என்னவென்பது என்பதை கூட ஆனாலும் பின் பிறந்து விட்டானே அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய பின்னாலே சனியவனும் வந்துவிட்டான் அப்பனே!! அறிந்தும் கூட!!! 


நிச்சயம் அதாவது நீதி நேர்மை தர்மம் என்றெல்லாம்  அவ்வாறு தான் நிச்சயம் சனியவன் கூட எதை என்று நிரூபிக்க கஷ்டங்கள் கொடுக்கவே!!!! 


ஆனாலும் இறைவன் கூட அப்படியே ஆகட்டும்!!! 


நிச்சயம் உன்னால் முடிந்ததை நீ பார்!!! 


என்னால் முடிந்ததை யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று இறைவனும் கூட சரியாகவே!!! 


ஏனென்றால் பின் சனியவனும் தயங்கி!!!!!....... 


இறைவா!!!!! நீயே இது போல் சொன்னால் எப்படி???????? 


ஏனென்றால் எந்தனுக்கு இட்ட கட்டளை!!!! 


அது போல் நீதி  தர்மத்தை எதை என்று அறிய அறிய எவை என்று கூட சரியாகவே நீதிபதியாக இருந்து யான் அறிந்தும் கூட அனைத்தும்!!!!!......எந்தனுக்கு இவ்வாறு தான் விதிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம்!!!! 


(ஒவ்வொரு கிரகங்களுக்கும் இறைவன் இவ்வாறு தான் செயல் பட வேண்டும் என்ற கட்டளையின் படி சனி பகவானுக்கும் நீதிபதியாக இருந்து செயல் பட வேண்டும் என்ற விதி) 


சரி பார்ப்போம் என்று பின் அவதாரமாகவே அறிந்தும் கூட!!! 


இவைதன் கூட விளக்கமாக எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!! 

மூலன் சொன்னான் அப்பனே (திருமூலர்) 

அவந்தன் முட்டாள் இல்லை அப்பனே!!! 

அறிந்தும் கூட அப்பனே இறைவன் ஒன்றே என்று!!! 

அவையெல்லாம் கூட வரும் காலத்தில் நிரூபிப்பேன் அப்பனே!!! 

ஆனால் இப்பொழுது சொன்னாலும் அவை பொய் இவை பொய் என்றெல்லாம் என்று சொல்வதற்கு என் பக்தர்களே தயாராக இருக்கின்றார்களப்பா!!!! 

அதனால் தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!! 

அதனால் அப்பனே நல்விதமாகவே அப்பனே இறைவன் அருகில் இருந்தும் அப்பனே ஆனாலும் பின் ராமனும் எதை என்றும் அறிய அறிய பின் கிரகம் தான் கிரகங்கள் தான் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்று!!!! 

ஏனென்றால் மனிதனுக்கு இதை தெரிவிக்க வேண்டும் அறிந்தும் அறிந்தும் கூட!!!  எதை என்று அறிய அறிய இதனால் கிரகத்தை வெற்றி கொள்ள நிச்சயம் அறிந்தும் கூட நீதி நேர்மை தர்மம்... இவைதனை கடைபிடித்தால் தான் கிரகங்களை கூட வெற்றி கொள்ள முடியும்!!! 


அப்படி நிச்சயம் பின் செயல்படாவிடில் பின் தோல்விகளில் தான் முடியும் என்பவையெல்லாம்!! 


நிச்சயம் ஏற்றங்கள் மாற்றங்கள் என்பவையெல்லாம்!!!!  இதனால்தான் போராட்டமே நடந்தது என்பேன் அப்பனே  சனிகிரகம் எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாத அளவிற்கும் கூட!!! 


அதனால் அப்பனே சனியின் தாக்கம் எதை என்று அறிய அறிய எவை என்று பின் தானும் அருகிலேயே இருந்து

பல இன்னல்களையும் கூட எதை என்று அறிய அறிய 


ஆனால் இறைவன் விட வில்லை அப்பனே எதை என்று கூட!!! 


கடைசியில் அப்பனே நீங்கள் அனைத்தும் உணர்ந்ததே அப்பனே!!! 


புதுமையான விஷயங்கள் சொல்வேன் அப்பனே!!! 


பழைய விஷயங்கள் தேவையில்லை 

இதனால் அப்பனே தீபத்தின் மகிமை அப்பனே எதை என்றும் அறிய அறிய ஏன்?  அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல ஹோமங்கள் செய்கின்றார்கள் அப்பனே!!!! 

ஆனாலும் தீபம் ஏற்றுகின்றார்களே அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே சிறிது யோசித்தாலே அப்பனே பலங்கள்!!!!  அறிந்தும் கூட !!!


இதனால் தான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட அதே போல் அப்பனே பின் ராம நாமமே எனும் துவங்கும் பாடலை கூட நிச்சயம் பாடிக்கொண்டே இருங்கள்!! அப்பனே!!!


(ராம நாமமே நீ துதி மனமே 

சீதாராமனை நீ துதி மனமே 

ஷேமமுறவே நீ தினமே 

வாதனைகள் பல சோதனைகள் பல யாவுமே நாதனை நினைந்திடில் நாடுமோ ரகுநாத்தை நினைந்திடில் நாடுமோ??? 

பிரபு நாதனை நினைந்திடில் நாடுமோ ?? 

பூமியை பொன்னை பூவையரையும் நீ பூஜித்து பின் புண்ணாகாமலே 

ராம நாமமே நீ துதி மனமே சீதாராமனை நீ துதி மனமே!!!)


அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் பின் பஞ்சதீபம் அறிந்தும் கூட ஏன் எதற்கு இவையெல்லாம் ஏற்றுகின்றீர்கள் என்பதை எல்லாம் அப்பனே இப்பொழுது அனைவருமே சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே பின் இவ்வாறு ஏற்றுங்கள் அவ்வாறு ஏற்றுங்கள் என்று அப்பனே


ஆனால் உண்மையை அப்பனே விஞ்ஞானபூர்வமாகவே நிரூபிக்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே இன்னும் இன்னும் பல வாக்குகளிலும் கூட.


அதனால் இன்னும் அப்பனே இவை அறிந்தும் அறிந்தும் அதன் ( கும்பாபிஷேகத்திற்கு முன்) முன்னர் இருந்தே அப்பனே தீபங்கள் பின் அறிந்தும் கூட அதனால் பின்னர் ஒரு ஐந்து நாட்கள் வரை அப்பனே நிச்சயம் அன்னத்தை அளியுங்கள் பின் அதாவது பின் இப்படி வாழ்ந்தால் தான் வெற்றி கிடைக்கும் நிச்சயம் தர்மம் நீதி அறிந்தும் பொய் சொல்லாமை இவையெல்லாம் இருந்தால்தான் அதாவது நிச்சயம் பின் வெற்றி காண முடியும் என்றெல்லாம் யோசித்து பின் நிச்சயம் சுந்தரகாண்டத்தை பின் பாராயணம் செய்து வாருங்கள்!!! 


நிச்சயம் என்றெல்லாம் எடுத்துக் கூறி அன்னத்தையும் ஈய்ந்து நிச்சயம் பல வழிகளிலும் மக்களுக்கு உண்மை நிலையை தெரிவியுங்கள் போதுமானது அப்பனே!!!!


இதில் எதையும் சம்பந்த படுத்த தேவையில்லை அப்பனே


இதனால் அப்பனே அறிந்தும் கூட இப்படி இருந்தால் தான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே கிருஷ்ணன் இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட உண்மைகள் பல வகையிலும் கூட இத்தனை தெய்வங்கள் எதற்கு என்பவை எல்லாம் யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே


ஏனென்றால் இறைவன் ஒவ்வொரு எதை என்று அறிய அறிய ஒவ்வொரு ரூபமாக வந்து வந்து இப்படி இருந்தால் தான் வெற்றி!!! 


இவ்வுலகத்தில் ஜெயிக்க முடியும்  என்பதையெல்லாம் நிரூபித்தான் அப்பனே!!! 


நிச்சயம் அப்பனே இவ்வுலகத்தில் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் சொல்வோம் அப்பனே நலன்களாக நலன்களாக வெற்றிகள் அப்பனே உண்டு 


அப்பனே நலன்கள் ஆசிகள்!!!!!


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

Sunday, January 21, 2024

சித்தர்கள் ஆட்சி - 314 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “பொதிகை வாக்கு - பகுதி 2”



 


“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


(2021ஆம் ஆண்டு பொதிகை வாக்கு பகுதி - 2)


இன்னும் ஒரு சூட்சுமமான விஷயத்தை உரைக்கின்றேன். கெட்ட வினைகளால் இன்னும் கெடுதல் நிகழ்ச்சிகள் வரும். 

ஒன்றை உரைக்கின்றேன். நல் முறையாக அனுதினமும், மாலை வேளையில் இல்லத்தில் ஒரு தீபமேற்றி, அதில் நல் மூலிகைகள் இட்டு, ஒரு சிறு கற்கண்டம், ஏலக்காயும் இட்டு, நல் முறையாய் வேண்டிக்கொண்டு, "அகத்தியன்" என்று சொல்லிவிடுங்கள். அப்பனே, யான் இருக்கின்றேன். யான் இருக்கும்பொழுது, எதையும் நம்பாதீர்கள். அப்பனே, இதையும் யான் சொல்லுகின்றேன். 

யான்தான் அகத்தியன் என்றெல்லாம் வருவார்கள். அப்பனே நம்பிவிட்டால், நீங்கள்தான் அதற்கு பொறுப்பு என்று சொல்வேன். 

[தீபம் ஏற்றுவதை பற்றி தெளிவாக உரைக்கும்படி கேட்டிருந்தீர்கள். நாடியில் கேட்ட பொழுது "கிராம்பு, ஏலக்காய், கற்கண்டும், ஏதேனும் ஒரு வாசனாதி பொருள் (பச்சை கற்பூரம் ஆகலாம்) - இவை அனைத்தையும் பொடித்து சேர்த்து, தினமும் விளக்கேற்றி, நம் குருநாதருக்கு என வேண்டிக்கொண்டு, அதன் எண்ணெயில் கலந்துவிடவேண்டும்" என சொல்கிறார்].


அகத்தியன் என்று ஒருவன் இருக்கின்றான், இப்பொழுது தேடி வந்தீர்களே, எவ்வாறு தேடி வந்தீர்கள், நீங்களா வந்தீர்கள், இல்லை யானே அழைத்தேன். யானே அழைத்த பொழுது, நல்லது செய்யாமல் விட்டுவிடுவேனா நான். 

அதனால் பக்தன் என்று நிறைய பேர் வருவார்கள். இனியும் இதைத்தான் திரும்ப திரும்ப சொல்லுவேன். உன்னிடத்தில் அருள் இருக்கின்றது. அதை எடுத்து வாருங்கள். உன்னிடத்தில் அருள் இருக்கின்றது. அதை விட்டுவிட்டு, நாடி சென்றால், நீயும் மனிதன், அவனும் மனிதன். இதை சிந்தித்துக்கொள்.

என் மக்களே! இப்பொழுது கூட சொல்லிவிடுங்கள் "அகத்தியன் இருக்கின்றான்" என. பின்பு, உங்கள் வேலையை பார்க்கத் தொடங்குங்கள்.

சாமியார் வேடம் போட்டு உட்கார்ந்து கொண்டால் எல்லாம் வரும் என்றுணர்ந்து, தானே சாமியார், என கூறுவான். அவன்தன் பலவித சுகங்களை அனுபவிப்பான். இவனைவிட கீழான மனிதர்கள் இவ்வுலகில் இல்லை. ஆனால் யாரையும் நம்பாதீர்கள், நம்பாதீர்கள் என்றுதான் யான் சொல்வேன். 

உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமைகள் இருக்கின்றது. இனிய அறிவை யான் கொடுத்துவிடுவேன். ஆயினும், ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான வினைகளில் மாட்டிக் கொண்டிருக்கின்றீகள், என்பது எந்தனுக்குத் தெரியும். அவை, சிறிது சிறிதாக விலகும் என்பேன்.

அப்பனே, நல் முறையாக எதனை செய்தால், என்றெல்லாம் தோன்றும். எதுவும் வேண்டாம். அகத்தியனை நினைத்துக் கொள்ளுங்கள். அப்பனே, பின் மகன்களுக்கு எதை செய்யவேண்டும் என்று எமக்குத்தெரியும். அதை யான் செய்கின்றேன். அதை விட்டுவிட்டு, அது வேண்டும், இது வேண்டும் என கேட்டுக் கொள்ளாதீர்கள்.  

அன்பு மட்டும்தான் இந்த மாய உலகில் சிறந்தது. ஆகவே அன்பை செலுத்துங்கள், போதுமானது.

வரும் வழியிலேயே ஆசீர்வாதங்களை கொடுத்துவிட்டேன். 

அன்பு மகன்கள், இப்பொழுதும் யான் இங்கே இருக்கின்றேன். அனைவருக்கும், எனது ஆசிகள். மீண்டும் வந்து வாக்குகள் உரைக்கின்றேன். 

அப்பனே எம்மை தேடி இங்கு வந்தீர்களே! ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு சுபிட்சம் நடக்கப்போகின்றது. 

இதுவரை ஈசன் நடத்தும் நாடகத்தில் கட்டங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றது. அதையும் யான் பார்த்துக் கொள்கின்றேன். அன்பு மகன்களே, எதை பற்றியும் கவலை கொள்ளாமல் செல்லுங்கள்.

மீண்டும் ஒருமுறை உரைக்கின்றேன். அனைத்து திறமைகளும் உங்களிடத்தில் இருக்கின்றது. நீங்களே பக்திமான்களாகலாம். 

அதை விட்டுவிட்டு, எதை எதையோ சென்று அடைந்தால், மீண்டும் தோல்விகள்தான் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், 

என் மக்களே. அனைவருக்கும் ஆசீர்வாதங்களை கொடுத்து அனுப்புகின்றேன், இப்பொழுது.


பொதிகை வாக்கு நிறைவு பெற்றது.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

Saturday, January 20, 2024

சித்தர்கள் ஆட்சி - 313 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “பொதிகை வாக்கு”




“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


2021இல் ஒரு அகத்தியர் குழுவானது, பொதிகை சென்று அகத்தியப் பெருமானுக்கு அபிஷேக பூசைகள் செய்தனர். அந்த குழுவில்  இருந்த, திரு ஜானகிராமன் அவர்கள், பூசைக்குப் பின் அகத்தியரிடம் பொது அருள் வாக்கு கேட்டார். அவர் நாடியில் வாசித்ததை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காக கீழே தட்டச்சு செய்து சமர்ப்பிக்கின்றோம்.


"அப்பனே நலன்கள் ஏகும்! காண வந்தீர்கள், எவை என்று கூறாமல்! அப்பனே அத்தனை அனுக்ரகங்கள். ஒவ்வொருவரையும் யான் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். அப்பனே கவலை இல்லை. ஆனாலும் வரும் காலம் அழியும் காலம் என்பேன்.  அப்பனே! 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நோய்கள், கட்டங்கள் வந்து கொண்டே இருக்கும். இருந்தாலும் அப்பனே! 

என்னை நம்பியவர்களை ஒரு பொழுதும் கைவிட்டதாக சரித்திரம் இல்லை. அப்பனே வரும் காலங்களில் இதைத்தான் சொல்லுகின்றேன்.


ஈசனும் வரும் காலங்களில் பலவித கட்டங்களை கொடுப்பான். 

என் பக்தர்களை, கூடவே இருந்து கட்டங்களிலிருந்து காப்பேன் என்று இப்பொழுது உத்தரவு அளிக்கின்றேன்.  

எவ்வாறு என்றும் கூட, முடியாமல் பின் எவ்வாறு தாழ்ந்து வந்தீர்கள் என்று கூட என்னால் பார்க்க முடிந்தது. அப்பனே இருந்த போதிலும், என் ஆசிகள் பரிபூரணம் என்பேன்.


அப்பனே, இங்குள்ளவருக்கும், ஒவ்வொருவருக்கும் நான் பார்த்து ஆசிர்வதித்துவிட்டேன் என்பேன், 

அவரவர் வழியில் செல்ல. அப்பனே, ஆனாலும் துன்பங்கள் நீங்காது, ஏன் என்றால் இது கலியுகம். 

அகத்தியன் என்று சொன்னாலே மோட்சம்தான். 

ஆனாலும் சில சில வினைகளால், கட்டங்கள் வரும், அதையும் நான் தீர்த்து வைத்துவிட்டால், பின் மனித பிறப்பிற்கு சரித்திரமே இல்லாமல் போய்விடும். இதனால் நன்கு உணர்ந்து எதனை செய்வது என்றும், எதனை செய்யக்கூடாது என்பதும் எந்தனுக்கு தெரியும். பின்பு சிறிது கட்டங்கள் வந்தாலும், அதுவும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள். 

ஆனாலும் இன்பமே வந்துவிட்டாலும், மோக்ஷ கதியை அடைய முடியாது. 

அப்பனே, அகத்தியனை வணங்குபவர்கள்,நிச்சயமாய் மோக்ஷகதியை அடைவார்கள். 

இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக கட்டங்கள் வந்து கொண்டிருக்கும். அதையும், தனிப்பாதையாய் மாற்றுகிறேன். அப்பனே, இப்பொழுது சொல்கின்றேன், அனைவருக்கும், இது மோக்ஷ பிறப்பு. அது எப்படி என்று உணராமலேயே என்னை வந்து கண்டுவிட்டீர்கள். ஆனால் நானும் வழியில் உங்களோடு வந்தேன் என்பேன்.  அதனால், தொல்லைகள் இல்லை, தொல்லைகள் வராது என்பேன். 

அப்பனே, எவை என்று சிந்தித்துப் பார்த்தால், பொய்யான உருவங்கள், பொய்யான பக்தர்கள், பொய்யானவர்கள், நிறைய வருவார்கள். 

அப்பனே நம்பிக்கையாக இருங்கள், அகத்தியன் இருக்கிறான் என்று. 

ஆனாலும், யாரையும், இனிமேல் நம்புதல் கூடாது என்பேன். அப்பனே, நான் அதை செய்வேன், இதை செய்வேன் என்றெல்லாம் வருவார்கள். எம்மை நம்பிவிட்டால், (அவர்களால்) ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.  

அகத்தியன் இருக்கின்றான் என்ற ஒரு வார்த்தையை சொல்லிவிடுங்கள். அனைவருக்கும், ஆசிகளாக, எந்தனுக்கு அகத்தியன் இருக்கின்றான் என்று சொல்லிவிடுங்கள். 

ஆனாலும், நிறைய பேர்கள் வருவார்கள். அதனை செய்கின்றேன், இதனை செய்கிறேன் என்பார்கள். அதனால் ஒன்றும் பிரயோசனமில்லை, கட்டங்கள்தான் வரும். 

இங்கு இறைவனின் சக்தியை விட உயர்ந்தது எதுவும் இல்லை. அதனால்தான் சொல்லுகின்றேன்.

அதை செய்தால், இது நடக்கும், இதை செய்தால் அது நடக்கும் என்று கூட பணத்துக்காக வருவார்கள். அப்பனே! இன்றே உரைக்கின்றேன், சூட்சுமமாக. யாரையும் நம்பிவிடாதீர்கள். 

அப்பனே என்னை நம்பிவிட்டீர்களா, என்னையே நம்பி விடுங்கள். அப்பனே, வழியை நல்ல வழியாக யாம் காண்பிக்கிறேன். அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும். 

இதை விட்டுவிட்டு மற்றவைகளை நம்பி போனால், எவை என்று தெரியாத அளவுக்கு, கட்டங்களை அள்ளித்தந்து போவார். அப்பனே! ஈசன் நடத்தும் நாடகத்தில், அழியும் காலம் வந்துவிட்டது. அப்பனே, ஒவ்வொரு வினைகளாலும் மனிதன், மனிதனை அழித்துக் கொள்வான்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

Friday, January 19, 2024

சித்தர்கள் ஆட்சி - 312 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு “அயோத்தியில் ராமர் சீதை கோவில் - அகத்திய பிரம்ம ரிஷி உத்தரவு!!”

 














“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அயோத்தியில், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு அமைகிற கோவில், 22.01.2024, திங்கட்கிழமை மதியம் பிராணாப் பிரதிஷ்டை நம் பாரத பிரதமர், ராம பக்தர்கள் முன்னிலையில் நடை பெற உள்ளது. 

அகத்திய பெருமானிடம் அவர் அடியவர்கள் அன்று என்ன செய்ய வேண்டும் என நாடியில் கேட்ட பொழுது, அவர் தந்த உத்தரவை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்!


  1. ராமர் மிகுந்த விருப்பத்தின் பேரில், அங்கு சென்று அமர்கிறார்.
  2. சித்தர்களின் விருப்பமும் அது தான்.
  3. நவகிரகங்களின் ஆட்டத்தை அடக்க அவர் தீர்மானித்துள்ளார். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள், மற்றவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது அவர் எண்ணம்.
  4. ராமரின்  இந்த எண்ணத்தால் ஆஞ்சநேயருக்கு மிகுந்த சந்தோஷமாம்.
  5. முகூர்த்த வேளைக்கு முன் ஒவ்வொரு அடியவர் வீட்டினுள்ளும் பஞ்ச தீபம்/பஞ்ச முக தீபம் ஏற்றவும். நாம் ஏற்றுகிற அக்னியானது, அயோத்தியில் எழுப்பப்படும், அக்னிஹோத்திரத்தில்/ஹோமத்தில் கலந்து பாரத தேசாத்திற்கு மிகுந்த சக்தியை உருவாக்கி பாதுகாக்கும்.
  6. அந்த முகூர்த்த நேரத்தில், குறைந்தது 108 முறையேனும் ராம நாமத்தை ஜெபிக்கவும்.
  7. அன்று மாலை அஸ்தமனத்துக்கு முன் வீட்டின் வெளியே, அதே போல் ஐந்து முக/ஐந்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். (கார்த்திகைக்கு விளக்கேற்றுவது போல்).
  8. அன்றைய தினம் முடிந்த வரை இயலாதவர்களுக்கு அன்னம் அளித்து, குழந்தைகளுக்கு, இனிப்பு கொடுக்க வேண்டும்.
  9. தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு அன்னம் அளிக்க வேண்டும்.
  10. அடியவர்கள் செய்கிற அனைத்து நல்ல விஷயங்களையும் (விளக்கேற்றுவது, அன்னம் பாலிப்பது போன்றவை) ராமர் அயோத்தியில் அமர்ந்து கொண்டு கவனித்து, அனைவரையும் ஆசீர்வதிப்பார்.
  11. தாங்கள் யார் என்று உணர்ந்தும், ராமரும் சீதையும்,  தங்கள் வாழ்வில் நடந்த விஷயங்களை அதன் படியே ஏற்றுக் கொண்டு வாழ்ந்து சென்றது, மனித குலத்துக்கே பல உயர்ந்த விஷயங்களை உணர்த்தினார்கள்.
  12. பாரத கண்டத்தில் 500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட காயத்தை, வருத்தத்தை யாங்கள் இறையிடம் வேண்டி மாற்றச் சொல்லி, அதன் படியே அவரும் அருள, அந்த புதிய வரலாற்றில், எம் சேய்களுக்கு, இருக்கும் இடத்திலிருந்து பங்கு பெறும் வாய்ப்பை யாங்களே உருவாக்கியுள்ளோம். வாய்ப்பை கை பற்றி கொள்க.
  13. சுந்தர காண்டத்தை தினமும் ஓதி வருக!

ஆசிகள்!, ஆசிகள்!, ஆசிகள்!

அனைவரும், அகத்தியப்பெருமானின் உத்தரவை உணர்ந்து, அன்றைய தினம் செயல் பட்டு, ராமபிரான், தாய் சீதையின் கனிவான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்!



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!