அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை அன்புத் தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!!
![]() |
| உக்கி மடம்/உஷா மடம் ஓம்காரேஸ்வரர் மந்திர் |
23/10/2026 அன்று பிரதோஷ கால நேரத்தில் அழுக்காணி சித்தர் உரைத்த வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: உக்கி மடம்/உஷா மடம் ஓம்காரேஸ்வரர் மந்திர்
சண்டிகா தேவி பீடம். ருத்ர பிரயாக். உத்தரகாண்ட்.
ஆலயம் மேப் - உக்ஹ்ய்மத் ஓம்காரேஸ்வர் டெம்பிள்
https://maps.app.goo.gl/xSvPAiFsrRHMoqiq7
![]() |
| உக்ஹ்ய்மத் ஓம்காரேஸ்வர் மந்திர் |
===========================
# அன்புடன் அழுக்காணி சித்தர் வாக்கு
===========================
உலகையாளும் ஈஸ்வரனையும், ஈஸ்வரியையும் பணிந்து உரைக்கின்றேனே, அழுக்காணி.
அன்றென்றும் எப்பொழுதும் எங்கும் உள்ளவளே,
எங்கும் நிறைந்தவளே, பராசக்தியே.!!!!
பின் உன்னைத் தொழுதாரே மனிதர்களே!!!
எங்கும் நிறைந்த தேவியே!! வந்து காப்பாற்றுவாயே. எங்கும் நிறைந்த, வந்து வந்து, தேவியே, மனிதனை காப்பாற்றுவாயே.
எங்கும் பின் அருள் பொழிவவளே!!!
எங்கும் நிறைந்திருப்பவளே, என்றென்றும் ஜீவிப்பவளே!!!
அங்கும் இங்கும் எதற்காக? என்று தெரியவில்லை.
அங்கும் எங்கும் எதற்காக? என்று தெரியவில்லை.
எப்பொழுதும் மனிதன் எண்ணங்கள் மாறி போனதே, மாறி போனதே, தேவியே!!!
எங்கெங்கும் அற்புதம் நடத்தினாயே!!! நீயென்றும்!!!
யானும் அறிவேனே. அற்புதம் நடத்தி, மனிதன் பின் குணத்தை மாற்றுவாயே. மாற்றுவாயே, தேவியே!!!
அன்பாக வருவாயே, அருளிடுவாயே!!!
எங்கெங்கும் நிற்பதும் உன் செயலே!!!
பின் அனைத்தும் நடப்பதும் உன் செயலே!!!
அற்புதமாய் வந்தவளே, அன்பினாலே காத்தவளே!!!
அன்பினை கொடுத்து, அருள் கொடுத்து, எப்படி? எப்படி? காத்துக் கொண்டிருக்கின்றாய்!!!
எங்கும் நிறைந்தவளே, பராசக்தியே!!!
ஓங்காரத்துடம் இருப்பவளே!!!
என்றும் என்றென்றும் அன்போடு நிற்பவளே!!!
இமயம் தன்னில் வாழ்பவளே, இமயம் தன்னில் வாழ்பவளே!!!
ஈசனோடு இருப்பவளே!!!
பின் என்றென்றும் மக்களுக்கு அருள்வாயே!!!
அருள் கூர்ந்து என்னையே, எது என்றும் கூட..
அருள் கூர்ந்து எனையே, எது என்று கூற. மக்களுக்கு பல உபதேசங்கள் பின் செய்வாளே, பின் செய்வாளே!!!
அருள் கூர்ந்து எனையும் புகுவிப்பாளே!!!
அருள் கூர்ந்து எனையும் புகுவிப்பாளே!!!
என்றென்றும் இருக்கின்ற மனிதனின் பின் எத்தனை ? எத்தனை? ஜென்மங்களடி? அறிந்தும் உண்மைதனை பொழிந்தன.
அணுவும் எது என்று பொழிந்தன, அணுவினில் தன்னில் இருக்கின்றதடி. பின் எங்கும் நிறைந்த பரம்பொருளே!!!
பரம்பொருளே, அறிந்தும் உண்மை மனிதனுக்கு எங்கும் தெரியாது.
நீ எப்பொழுதும் பின் அறிந்து கொள்ள…..
அறிந்து கொள்ள வருவாயே. அறிந்து கொள்ள வருவாயே. வந்தென்று ஈசனே, அருள் கூர்ந்து மனிதனை காப்பாற்றுவாயே, தேவியே!!!
அனைத்தும் நீயே, தேவியே!!!
அனைத்தும் நீயே, தேவியே!!!
நவ கைலாயத்தில் இருப்பவளே!!!
எங்கும் அன்பானவற்றை தேர்ந்தெடுப்பவளே!!!
அன்பானவற்றை தேர்ந்தெடுத்து, அன்பானவர்களை தேர்ந்தெடுத்து, நல்வழிப்படுத்து.
===========================
# புண்ணியத்தை புகுத்தி, பாவத்தை நீக்க வேண்டல்…
===========================
மிக்க மிக்க என்றென்றும் எதை என்றும் பாவத்தைப் போக்குவாயே.
பாவம், பாவம், மனிதனடி. பாவம், பாவம், மனிதனடி.!!
அப் பாவத்தை பின் உன் அன்பினாலே போக்குவாயடியே.! போக்குவாயடியே.!!
தேவியே, உம்மை தொழுதோமே.!!
தேவியே, உனதை உனையே தொழுவோமே, உன்னையே தொழுவோமே.
எங்கெங்கும் நிற்பவளே, ஆனந்தத்தில் ஆடுபவளே!!!
மனிதனின் பாவத்தை எடுப்பாயே. எடுத்து, எடுத்து,!!!
(தேவியே உன்) புண்ணியத்தை எடுத்து, எடுத்து…. (அதன் மூலம் மனிதர்ளின் ) பாவத்தை எடுத்து, எடுத்து, பாவத்தை பின் தூரே வீசிட்டு, தூரே வீசிட்டு போவாளே.
புண்ணியத்தை புகுத்து, புகுத்து. புண்ணியத்தை புகுத்து, புகுத்து.
வருங்காலங்களில் மனிதன் பின் புண்ணியம் இல்லாமல் வாழ்கின்றானே.
நீதானே என்றென்றும் புண்ணியத்தை. நீதானே என்றென்றும் புண்ணியத்தை அருள் கூர்ந்து பின் இட்டிடுவாயே.
மனிதனும் தானே பிழைத்துக் கொள்வானே.
உன்னையே நம்பி ஓடோடி, உன்னையே நம்பி ஓடோடி வருகின்றார்களே. மக்கள் கூட்டங்கள்,கூட்டங்களாய்
நீதானே, தேவியே, செய்து தருவாய்.
அனைத்திலும் நிற்பவளே.
எங்கும் நிறைந்தவளே, எப்பொழுதும் அன்பினாலே பின் ஓடி வருவாய்.
பின் பாவத்தை பின் நீக்கிடுவாய்.
அன்பானவற்றை செய்திடுவாய். மனிதனுக்கு நல்புத்திகள் ஈந்திடுவாய்.
எப்படி?, எப்படி?, ஏதுவென்று மனிதனுக்கு பின் பிறவிகள் பின் தெரியாது.
பின் ஓடுகின்றான், தேவியே, வந்து அருளிடுவாய்.
தேவியே, வந்து அருளிடுவாய்.
எத்தனை? எத்தனை? குற்றங்கள் பின் மனிதன் பின் செய்தினாலும், அதை காத்துக்கொண்டு, காத்துக்கொண்டு, காத்துக்கொண்டு, அதனைப் பின் தீயிலிட்டு,
பின் புண்ணியத்தை பின் அருளிடுவாய்.
எங்கெங்கும் நிற்பவளே, அன்னை பராசக்தியே. எங்கெங்கும் உமையே போற்றுகின்றார்கள்.
போற்றி துதித்து அறிந்திருந்தும் பின் ஏதோ எனக்கு நிச்சயம் பின் ஏதோ எனக்கு நிச்சயம் செய்வாள்.
என்றென்றும் மனிதன் நினைக்கின்றானே. என்றென்றும் மனிதன் நினைக்கின்றானே.
அதற்காகவோ பின் நிச்சயம் தன்னில் எத்தனை? எத்தனை? பின் கோலங்களில், எத்தனை எத்தனை கோலங்களில், அத்தனை கோலங்களில் வந்து வந்து மனிதனுக்கும் ஆசிகளும் அருளும் கொடுத்திடுவாய்.
அம்மையே, தேவியே, உமை அம்மையே. உனையன்றி மனிதனுக்கு யாருமில்லை.
இவ்வுலகத்தில் பின் அனாதையாக வந்து நிற்கின்றான்.
எப்படி?, எப்படி?, பின் அருள் கூர்ந்து பின் உலகத்துக்கு பின் அன்னையாக இருந்து, பின் அனைவருக்கும் அருளிடுவாய். அனைவருக்கும் அருளிடுவாய்.
எப்படி?, எப்படி,? வந்ததடி. எப்படி?, எப்படி,? வந்ததடி. புவிதன்னில் எத்தனை மனிதர்கள் பின் கோடி கோடியாய் வருகின்றார்களே.
எத்தனை கோடி?, எத்தனை கோடி?, பல கோடி பாவங்களை சுமந்து தானே மனிதனை தானே வருகின்றானே.!!
எத்தனை ? எத்தனை? புண்ணியங்கள்,
எத்தனை? எத்தனை? புண்ணியங்கள்,
அவையாவும் உன்னிடத்தில் இருக்கின்றதே.
அம்மையே, அதையே பின் அருள் கூர்ந்து மனிதனுக்கு இட்டிட்டு, இட்டிட்டு, பின் செல்வாயே.
புண்ணியத்தின் பாதையில் செல்வானே.
புண்ணியத்தின் பாதையில் செல்வானே.
மனிதனின் நீயும் பாவத்தை அழித்து,
பின் புண்ணியத்தை கொடுத்தால், புண்ணியத்தை பின் வழி பிடித்துக் கொள்வான்.
எத்தனை? எத்தனை? தீய அழுக்குகள்?, எத்தனை? எத்தனை? தீய அழுக்குகள்???
நவ கன்னிகளாக வந்து!! வந்து!!!, பின் உன் எத்தனை? எத்தனை? அவதாரங்கள்,
எத்தனை? எத்தனை? அவதாரங்கள்?
சக்தி பீடங்களாக நிற்கின்றாயே!!!.
சக்தி பீடங்களாக நிற்கின்றாயே.
அனைத்தும் நீயே!! அறிந்துணர்ந்து மக்களை பின் காப்பாற்றுவாயே. ஓடோடி வந்து!!!
எத்தனை ?எத்தனை? குற்றங்கள்?,
எத்தனை எத்தனை? குற்றங்கள்?,
அவை போக்க ஓடோடி வா. ஓடோடி வா, தேவியே.
எத்தனை? எத்தனை? மனிதர்கள் பலவிதமான எண்ணங்கள் இருந்தாலும், ஒரே முறையில் அழிப்பாயே.
பலமுறை எண்ணங்கள் பலவற்றை மனிதன் பின் கர்மத்தை சுமந்து பின் இருக்கின்றானே.
அத்தனை அத்தனை அதற்காகவும் எண்ணங்கள் மாறி மாறி மாறி பின் இருக்கின்றதே. தேவியே, !!!
உன் புண்ணியத்தை பின் அளித்திடு தேவியே,
உன் புண்ணியத்தை அளித்திடு தேவியே,
ஒரே எண்ணத்தை நல்லெண்ணத்தை கொடுத்தருள்வாயே. தேவியே,!! உமை அம்மையே!!
அறிந்தும் உன்னை, உமை அம்மையே, அறிந்தும் உன்னை எப்பொழுதும் எங்கும் நிற்பவளே தேவி பராசக்தியே,!! பராசக்தியே,!!
எப்பொழுதும் என் மனதில் நிற்பவளே.
எப்பொழுதும் என் மனதில் நிற்பவளே,
என் மனதில் பின் அம்மையாக பின் நிற்பவளே. உன்னை தாழ்ந்து பணிகின்றேன், அம்மையே.
எங்கெங்கும் எதிலிலும் நிற்பவளே.
===========================
# தீய அழுக்குகளை எடுக்க வேண்டல்
===========================
மனிதன் உள்ளத்தில் புகுந்து பின் தீய அழுக்குகளை எடுப்பாயே.
மனிதன் உள்ளத்தில் புகுந்து புகுந்து பின் தீய எண்ணங்களை அழிப்பாயே.
===========================
# ஆரோக்கியங்கள் அருள வேண்டல்
===========================
மனிதனுக்கு பின் ஆரோக்கியங்கள்,!! மனிதனுக்கு பின் ஆரோக்கியங்கள்!! கொடுத்து கொடுத்து அருளீந்து!!
பின் எப்படி எப்படி? எதை என்று ஆரோக்கியங்கள் வருங்காலத்தில் குறைந்து குறைந்து, மனிதன் பின் பின் எத்தனை? எத்தனை? பின் நோய்களடி.??
அத்தனை அத்தனை நோய்களையும், அத்தனை அத்தனை நோய்களையும் காப்பாற்ற வா. ஓடோடி வா, அம்மையே, பராசக்தியே.
எப்படி? எப்படி? உன் உள்ளத்தில், எப்படி எப்படி உன் உள்ளத்தில் புண்ணியங்கள் நிறைந்துள்ளவை எல்லாம் சிறிது சிறிது அளித்து அளித்து, மனிதனுக்கு அத்தனையும் நீ செய்வாயே!!!.
உன்னால் முடியும், தேவியே. என் அன்பு உள்ளத்தில் இருக்கும், அம்மையே.
உம்மை அம்மையாக பணிகின்றேனே. மனிதனை காப்பாற்ற ஓடோடி வா, தாயே.
அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்.
===========================
# ஆலயம் பற்றிய விபரங்கள்
===========================
ஆலயம் மேப்
உக்ஹ்ய்மத் ஓம்காரேஸ்வர் டெம்பிள்
https://maps.app.goo.gl/xSvPAiFsrRHMoqiq7
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உஷா மடம் (Usha Mutt) என்பது தற்போது உக்கிமத் (Ukhimath) என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமாகும். இது ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த இடத்தைப் பற்றிய முக்கிய ஆன்மீக மற்றும் வரலாற்றுத் தகவல்கள் இதோ:
1. கேதார்நாத்தின் குளிர்கால இருப்பிடம் (Winter Seat)
• குளிர்காலத்தில் (நவம்பர் முதல் ஏப்ரல் வரை) கடுமையான பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் மற்றும் மத்மஹேஸ்வர் கோயில்கள் மூடப்படும்.
• அந்த சமயத்தில், கேதார்நாத் பகவானின் உற்சவ சிலைகள் இந்த உக்கிமத்தில் உள்ள ஓங்காரேஸ்வர் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, குளிர்காலம் முழுவதும் இங்கேயே பூஜைகள் நடத்தப்படுகின்றன.
2. 'உஷா மடம்' என்ற பெயர் காரணம்
• இந்து புராணங்களின்படி, பாணாசூரனின் மகளான உஷா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் பேரனான அனிருத்தன் ஆகியோரின் திருமணம் இந்த இடத்தில் தான் நடைபெற்றது.
• உஷாவின் நினைவாக இந்த இடம் முதலில் 'உஷாமடம்' (Ushamath) என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி 'உக்கிமத்' என்று மாறியது. இன்றும் அங்குள்ள உஷா-அனிருத்தா மண்டபம் ஒரு முக்கிய ஈர்ப்பாக உள்ளது.
3. மாந்தாதா மன்னரின் தவம்
• ராமபிரானின் முன்னோரான மாந்தாதா என்ற மன்னர், தனது உலக வாழ்க்கையைத் துறந்து, இந்த இடத்தில் ஒற்றைக் காலில் நின்று 12 ஆண்டுகள் கடுமையான தவம் புரிந்தார்.
• அவரது தவத்திற்கு மெச்சி சிவபெருமான் இங்கு 'ஓங்கார' வடிவில் காட்சியளித்ததால், இங்குள்ள முதன்மைக் கோயில் ஓங்காரேஸ்வர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
• உயரம்: கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,311 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
• அமைவிடம்: ருத்ரபிரயாக்கில் இருந்து சுமார் 41 கிலோமீட்டர் தொலைவில் உகிமத் நகரம் அமைந்துள்ளது.
• அருகிலுள்ள ரயில் நிலையம்: ரிஷிகேஷ் (சுமார் 175 கி.மீ).
• அருகிலுள்ள விமான நிலையம்: டேராடூனில் உள்ள ஜோலி கிராண்ட் விமான நிலையம் (சுமார் 192 - 215 கி.மீ).
• திறக்கும் நேரம்: காலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
இது பிரதிஷ்டை செய்யப்பட்ட ஓம்காரேஷ்வர் சிவலிங்கம். கேதார்நாத் தெய்வம் மற்றும் தாந்திரீக தெய்வங்களுக்கு என இரண்டு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
நீங்கள் அருகில் சென்று அமர்ந்து தியானம் செய்யலாம். இங்கு நீங்கள் சிரமமின்றி தியான நிலைகளை அடையலாம்.
அங்கு செல்வது எப்படி:
இது ருத்ரபிரயாகத்திலிருந்து 41 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவிலைப் பற்றி
உகிமத் என்பது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ஒரு புனித யாத்திரைத் தலமாகும். இது ருத்ரபிரயாகிலிருந்து 41 கி.மீ. தொலைவில், 1311 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஓம்காரேஷ்வர் பீடம் என்று பிரபலமாக அறியப்படும் இந்தக் கோயில், நாட்டின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இங்கு குளிர்கால மாதங்களில் (நவம்பர் முதல் ஏப்ரல் வரை) கேதார்நாத் மற்றும் மத்மகேஷ்வர் தெய்வங்கள் வீற்றிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் கேதார்நாத் மற்றும் மத்மகேஷ்வர் கோயில்கள் மூடப்பட்டிருக்கும். தீபாவளிக்குப் பிறகு கேதார்நாத்திலிருந்தும், டிசம்பர் மாதத்தில் மத்மகேஷ்வரிலிருந்தும் தெய்வங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு, ஆறு மாதங்களுக்கு வழிபடப்படுகின்றன. மே மாதத்தின் நடுப்பகுதியில், இந்தத் தெய்வங்கள் ஊர்வலமாக அவற்றின் மூலக் கோயில்களுக்குத் திரும்ப எடுத்துச் செல்லப்படுகின்றன. அருகிலுள்ள மத்மகேஷ்வர் (இரண்டாவது கேதார்), துங்நாத் ஜி (மூன்றாவது கேதார்) மற்றும் தியோரியா தால் இயற்கை ஏரி அமைந்துள்ளது.
அருகிலுள்ள இடங்கள்
உகிமத், இயற்கையால் சூழப்பட்ட ஒரு அமைதியான இடமாகும். இது குறுகிய மலையேற்றங்களுக்கும், கோயில் தரிசனங்களுக்கும் ஒரு தளமாகவும் விளங்குகிறது. அருகில் சுற்றிப் பார்க்கத் தகுந்த இடங்கள் இதோ:
சோப்தா –
துங்நாத் கோயில் – உலகின் மிக உயரமான சிவன் கோயில்
குப்தகாசி – கோயில்கள்
உகிமத்தை எப்படி அடைவது?
விமானம் மூலம் : ஜாலி கிராண்ட் விமான நிலையம், டேராடூன் (195 கி.மீ. தொலைவில்)
ரயில் மூலம் : அருகிலுள்ள ரயில் நிலையம் ரிஷிகேஷ் (180 கி.மீ. தொலைவில்)
சாலை மார்க்கமாக : ருத்ரபிரயாக் மற்றும் குப்தகாஷியிலிருந்து நேரடிப் பேருந்துகளும் டாக்சிகளும் இயக்கப்படுகின்றன.
எங்கே தங்குவது?
உகிமத்தில் குறைந்த செலவிலான பல விருந்தினர் இல்லங்களும் தர்மசாலைகளும் உள்ளன. நீங்கள் சிறந்த வசதிகளை நாடினால், அருகாமையில் உள்ளதும் வசதியானதுமான குப்தகாஷி அல்லது சோப்தாவில் தங்கலாம்.
நடைமுறை பயண குறிப்புகள்
கேதார்நாத் சிலையைக் காண நவம்பர் முதல் ஏப்ரல் வரை வருகை தரவும்.
குளிரான வெப்பநிலைக்கு ஏற்ற சூடான ஆடைகளை எடுத்துச் செல்லுங்கள் .
கோயில் சடங்குகளை மதித்து, கண்ணியமான ஆடை அணியுங்கள்.
ஆலயம் மேப்
உக்ஹ்ய்மத் ஓம்காரேஸ்வர் டெம்பிள்
https://maps.app.goo.gl/xSvPAiFsrRHMoqiq7
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.






No comments:
Post a Comment