இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!
அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை அன்புத் தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!!
![]() |
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9 ( நிறைவு பகுதி )
நாள், நேரம் :27/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : உலக நன்மைக்காக 13 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
(குருநாதர் அருளால் இவ் 13ஆம் கூட்டுப்பிரார்தனை வாக்குகளின் அனைத்து 9 பகுதிகளும் கீழே அடியவர்கள் வசதியாக படிக்கும் வண்ணம் பகிரப்பட்டுள்ளது. அடியவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
பகுதி 1 ( செப்பு நாணயம் வழிபாடு , கோமதி சக்கரம் வழிபாடு ) https://siththarkalatchi.blogspot.com/2026/09/747.html பகுதி 2 https://siththarkalatchi.blogspot.com/2026/11/775.html பகுதி 3 https://siththarkalatchi.blogspot.com/2026/11/776.html பகுதி 4 https://siththarkalatchi.blogspot.com/2026/11/777.html பகுதி 5 https://siththarkalatchi.blogspot.com/2026/11/778.html பகுதி 6 https://siththarkalatchi.blogspot.com/2026/11/779.html பகுதி 7 https://siththarkalatchi.blogspot.com/2026/11/780.html பகுதி 8 https://siththarkalatchi.blogspot.com/2026/11/781.html பகுதி 9 ( நிறைவு பகுதி ) https://siththarkalatchi.blogspot.com/2026/11/782.html
)
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://www.youtube.com/live/PKohTFGg6R8
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
( பகுதி 8 அதன் தொடர்ச்சியாக….)
https://youtu.be/PKohTFGg6R8?t=33429
குருநாதர்:- ஏனென்றால் அழிவுகள் பலமாக வந்து கொண்டிருக்கின்றது. அப்படி, அதை யான் செப்பவில்லை. அதைத் தடுப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியும்.
அப்பனே, எதை என்று அறிய சொல்லிக் கொண்டிருந்தாலும் உங்களுக்குப் பயம்தான் ஏற்படும், அப்பனே.
ஏன் பயம் வைக்க வேண்டும்? எங்களால் காப்பாற்ற முடியும்.
நீங்கள் திருந்தினால் மட்டுமே உண்டு.
அப்பனே, அம்மையை இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மனிதன் திருந்தினால் மட்டுமே இயற்கை, பின் நிச்சயம், பின் எவை என்று கூற, பின் நல்முறையாக வேலை செய்யும்.
அப்படி இல்லை என்றால் இயற்கை அழித்து, அப்பனே, பின் மனிதனையும் அழித்துச் சென்றுவிடும்.
அனைவருக்கும் தெரியும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.
மனிதன் சொல்லலாம், அழிவுகள் வருகின்றது, அழிவுகள் வருகின்றது என்று.
ஆனால் தடுக்கத் தெரியாது. சித்தர்கள், நாங்கள் சொல்ல மாட்டோம். ஆனால் தடுப்போம்.
ஏன், எதற்காக, பின் மீண்டும், பின் எவை என்று ஈசன் முடிவெடுத்திருக்கின்றான் சில அழிவுகளை.
நிச்சயம் யாங்கள் தடுத்து நிறுத்துவோம். ஆனால் நீங்கள் நல்லோர்களாக வாழ வேண்டும், அவ்வளவுதான்.
அதனால்தான், பின் இறை, எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.
இதனால் நிச்சயம் மாற்றுவோம். எவை என்று புரிய நிச்சயம் பின் உங்களை மாற்றி, அதாவது உங்கள் மனதை மாற்றி, எதை என்று புரிய நல்வழிப்படுத்தி…. மக்களை நல்வழிப்படுத்தினாலே நிச்சயம் அனைத்து ஜீவராசிகளும், அதாவது உங்களால்தான் அனைத்து ஜீவராசிகளும்…. ஒரு மனிதனால்தான் அழிந்து போய்க்கொண்டிருக்கின்றது. இதனால்தான் எதை என்று புரிய நிச்சயம் புரிந்துகொள்ளுங்கள் எவை என்று அறிய நிச்சயம்.
https://youtu.be/PKohTFGg6R8?t=33551
===========================
# தெரிந்து அசைவம் சாப்பிடுவது பாவம்.
===========================
குருநாதர்:- நிச்சயம் எவ்வாறு அது அழிகின்றதோ, அதேபோல் எதை என்று புரிய நிச்சயம் தெரியாமல் நடப்பது சகஜம்.
சுவடி ஓதும் மைந்தன்:- தெரியாமல் நடப்பது சகஜம். ஆனால் தெரிஞ்சே உயிரைக் கொண்டு சாப்பிடுறது. மிக மிகத் தவறு. பெரிய பாவம்.
===========================
# அசைவம் - போதைப்பொருள்.
===========================
குருநாதர்:- எதை, ஏது என்று கூற, இவை போதைப் போன்று என்று.
சுவடி ஓதும் மைந்தன்:- போதைப்பொருள்.
அடியவர்:- முன்னாடியே சொல்லிட்டாங்க. அது ஒரு போதை வஸ்துன்ட்டாங்க, அந்த மாமிசம் சாப்பிடுறது.
சுவடி ஓதும் மைந்தன்:- மாமிசம் என்பது.
அடியவர்:- ஒரு தடவை சாப்பிட்டீங்கன்னா அடிமைன்றார் அதுக்கு.
சுவடி ஓதும் மைந்தன்:- போதைப்பொருள் என்றார்.
===========================
# அசைவம் சாப்பிடுபவர்கள் இல்லத்தில் நிச்சயம் சண்டைகள் உண்டு.
===========================
குருநாதர்:- இப்போதைக்கு அடிமையானவன், பின் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட கடைசியில் நிச்சயம் எப்பொழுது இப்போதைக்கு அடிமை ஆகின்றானோ, நிச்சயம் பிரிவினைகள் இல்லத்திலே நிச்சயம் உண்டு.
இதனால் மனம் உடைந்து, மனக்குழப்பம் வரும். நோய்கள் வந்துவிடும் என்று சொல்லிவிட்டேன்.
இதனால் எதை என்று புரிய, பின் முருகன் கவசம் போல், பின் நிச்சயம் எதை தேசத்தை காத்துக் கொண்டிருக்கின்றான். இதனையும் யான் இப்பொழுது செப்பிடுவேன். பின்பு அவரவர், பின் நிச்சயம் தன்னில் கூட.
ஏனென்றால், பின் அதாவது இல்லத்திற்கு செல்வதற்கும் நேரங்கள். இதனால் நிச்சயம், பின் கடைசியில், பின் இவை சொல்லிவிட்டு மீண்டும் தெரிவிப்பேன்.
https://youtu.be/PKohTFGg6R8?t=33654
(எழுது பலகைக்கு அனைவரும் சென்றனர்)
https://youtu.be/PKohTFGg6R8?t=33699
===========================
# முருகப்பெருமானின் சரவண பவ - விளையாட்டு யந்திரம்
===========================
குருநாதர்:- அப்பனே, உருண்டை, அதாவது புவி தன்னை
(பூமி உருண்டை வரைந்தார்கள்)
குருநாதர்:- அப்பனே, இவ்வாறாக சக்கரத்தை, அதாவது முருகன் சக்கரத்தை இடு அப்பனே, பின் நிச்சயம் அறுபடை வீடுகளோடு.
சுவடி ஓதும் மைந்தன்:- (வரைந்தார்கள்)
https://youtu.be/PKohTFGg6R8?t=33723
குருநாதர்:- அப்பனே, பின் அதாவது, பின் எவை, ஏது என்று புரிய, சரவண பவ .
சுவடி ஓதும் மைந்தன்:- சரவண பவ எழுதுங்க ஐயா.
https://youtu.be/PKohTFGg6R8?t=33802
(சரவண பவ எழுதினார்கள் - நேரலையில் காண்க)

குருநாதர்:- அப்பனே, அழிவுகள் பலம். இதனால் முருகன் அப்பனே, அங்கங்கு படைகளை அமைத்துள்ளான் சொல்லிவிட்டேன் அப்பனே.
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய அப்பனே, இதிலேயும் அப்பனே, பின் நமசிவாய என்று எழுது.
https://youtu.be/PKohTFGg6R8?t=33858
(நமசிவாய எழுதினார்கள் - நேரலையில் காண்க)

https://youtu.be/PKohTFGg6R8?t=33876
குருநாதர்:- நாராயணா என்று எழுது.
(நாராயணா எழுதினார்கள் - நேரலையில் காண்க)
https://youtu.be/PKohTFGg6R8?t=33885

குருநாதர்:- அப்பனே, கணபதி என்று எழுது.
(கணபதி எழுதினார்கள் - நேரலையில் காண்க)
https://youtu.be/PKohTFGg6R8?t=33895

குருநாதர்:- அப்பனே, சக்தி என்று எழுது.
https://youtu.be/PKohTFGg6R8?t=33909
(சக்தி எழுதினார்கள் - நேரலையில் காண்க)

குருநாதர்:- ஓம் என்று இடு.
https://youtu.be/PKohTFGg6R8?t=33920
(ஓம் எழுதினார்கள் - நேரலையில் காண்க)

குருநாதர்:- அப்பனே, பல ரகசியங்கள் இதில் அடங்கியுள்ளது அப்பா. என்னவென்று சிந்தியுங்கள் பார்ப்போம்.
https://youtu.be/PKohTFGg6R8?t=33926
அடியவர்கள்:- ( பல உரையாடல்கள்….சில நேரத்திற்குப் பின்னர் )
https://youtu.be/PKohTFGg6R8?t=33967
குருநாதர்:- அப்பனே, அறிந்தும் இன்னும் நீண்ட வாக்குகள் போகும் அப்பா எதை என்று புரிய.
அடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, இவை தன், அப்பனே, கொடுக்க, அப்பனே, அதாவது நல்விதமாக, அப்பனே, பின் பட்டையில் கொடுக்க நன்று.
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, தகடுகளை செஞ்சு எல்லாருக்கும் கொடுக்கச் சொல்றார். ( பின் வருமாறு வரைந்து காட்டினார்கள் )

குருநாதர்:- அப்பனே, இவ்வாறாக, அப்பனே, தடுப்பதற்கு, அப்பனே, பின் முருகனும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சுற்றி, அதாவது புவியைச் சுற்றி.
சுவடி ஓதும் மைந்தன்:- இவ்வாறு உலக அழிவைத் தடுக்கிறதுக்காக ஏற்கனவே, இப்ப கிடையாது. ஏற்கனவே வந்து.
அடியவர்:- பல பல யுகங்களா.
சுவடி ஓதும் மைந்தன்:- (புவியைச் சுற்றி) வச்சிட்டாரு.
https://youtu.be/PKohTFGg6R8?t=34047
குருநாதர்:- ஆனால் அப்பனே, மனிதன் எல்லை மீறுவதால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சில சில, பின் எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால் மனிதன் எல்லை மீறிகள் போகும்போது என்ன ஆகுது?
அடியவர்:- சில சில அழிவுகள் வருது.
https://youtu.be/PKohTFGg6R8?t=34060
===========================
# முருகப்பெருமானின் “சரவண பவ” விளையாட்டு
===========================
குருநாதர்:- அப்பனே, ஏன், எதற்கு, எவை என்று கூற, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே, புவி, அப்பனே, பின் சரியாக, அப்பனே, பின் சுற்றவே, அப்பனே, முருகனின் விளையாட்டு இது.
சுவடி ஓதும் மைந்தன்:- எதுக்கு இது வந்து? சும்மா இல்ல இது வந்து. ஐயா, புரியுதுங்களா?
அடியவர்:- கரெக்டா பேலன்ஸ் பண்ணி சுத்துறதுக்காகத்தான் இது. இந்த சரவண பவ அறுங்கோணம் என்பது, ஆறு போர்ஸ் கிரியேட் பண்ணி, அது கரெக்டா தன்னுடைய அச்சுல வந்து, கரெக்டா சுழல்வதற்காக, முருகப்பெருமான் வந்து, அவருடைய விளையாட்டு இது, அப்படின்றாங்க.
https://youtu.be/PKohTFGg6R8?t=34096
===========================
# அறுபடை வீடுகளுக்கு செல்ல, என்னிடம் பணம் இல்லையே என்று சொல்லக்கூடாது.
===========================
குருநாதர்:- அப்பனே, இது போல, அப்பனே, வலம் வந்து கொண்டே இருந்தால், அப்பனே, பிரச்சினை நீங்கும் என்பேன் அப்பனே. ஆனால் காகிதத்திற்கு, பின் காகிதம் இல்லையே என்றே சொல்லக்கூடாது.
அடியவர்:- பாருங்க. இதுபோல (அறுபடை வீடுகளுக்கு) வலம் வந்துகிட்டே இருக்கணும்ன்றாங்க. கையில காகிதம் இல்லைன்னு சொல்லக்கூடாது. காசு இல்லைன்னு சொல்லக்கூடாது. போறதுக்கு, பஸ்ல ஏறுறதுக்கு, வர்றதுக்கு அப்படின்னு.
https://youtu.be/PKohTFGg6R8?t=34113
குருநாதர்:- அப்பனே, இன்னும் ரகசியங்கள் எல்லாம் சொல்வேன், அப்பனே எதை என்று புரிய, அப்பனே. ஏனென்றால் அனைவரும், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, அவருக்கவருக்கு ஒரு நேரம் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாருக்கும் இன்னும் ரகசியங்கள் சொல்லலாம். ஆனால் இப்பொழுது நேரம் பத்தாதுன்றாரு.
குருநாதர்:- எதை, ஏது என்று கூற, புவியைப் பற்றி அறிந்து வாருங்கள். இன்னும் சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஹோம்வொர்க் என்னது?
அடியவர்:- பூமியைப் பற்றி.
சுவடி ஓதும் மைந்தன்:- பூமியைப் பற்றி. நல்லா தெரிஞ்சுக்குவாங்கன்றாரு வந்து.
அடியவர்:- ஏன் சுத்துது, எப்படி சுத்துது, அச்சுல எப்படி சுத்துது.
சுவடி ஓதும் மைந்தன்:- யாருக்காவது தெரியுமா இது? முருகன் ஏன்? இந்த உலகத்துக்கே தெரியாது.
https://youtu.be/PKohTFGg6R8?t=34186
குருநாதர்:- இது போல் நிச்சயம் தன்னில் கூட, பின் உங்களை, அதாவது நிச்சயம் வலை போல், பின் பின்னி, பின் எதை என்று கூற, இருத்தல், நிச்சயம், பின் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இதுபோல உங்களை ஒரு வட்டம் அடிச்சுக்கிட்டு, உங்களை வட்டத்துல வச்சுட்டோம்னா, இந்த வட்டத்துக்கு நீங்க போயிட்டீங்கன்னா.
அடியவர் :- பின்னிக்கிட்டீங்கன்னா.
சுவடி ஓதும் மைந்தன்:- பின்னிக்கிட்டீங்கன்னா, உங்களுக்கும் நல்லதுதான் நடக்கும்.
===========================
# ஏன் உங்களுக்கு வருத்தங்கள் தோன்றுகின்றது?
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=34206
குருநாதர்:- எதை என்று அறிய, இதனால் புரிந்து இறைவனை வணங்குங்கள். புரியாமல் வணங்கினால், இறைவன் பெயரை நீங்கள்தான், இறைவன் பெயரை கெடுப்பீர்கள். படைத்தவன் பின் உங்களை, அதாவது படைத்தவன் பெயரைப் பின் கெடுக்கின்ற பொழுது, தானாகவே உங்களுக்கு வருத்தங்கள் தோன்றும்.
சுவடி ஓதும் மைந்தன்:- உண்மை தெரிஞ்சு, இறைவனை வணங்கணும். எனக்கு இறைவன் அது பண்ணல, இறைவன் இப்படி பண்ணலன்னு சொன்னீங்கன்னா, இறைவன் பெயர்ல பழி போட்டீங்கன்னா….அதுவே உங்களுக்கு வருத்தமா போயிரும்ன்றாரு.
===========================
# இறைவன் அனைவருக்கும் தந்தை
===========================
குருநாதர்:- இதனால் நிச்சயம் அனைவருக்கும் தந்தை இறைவன். நிச்சயம் தன்னில் கூட, இறைவன் நிச்சயம் தன் பிள்ளைகளை எப்பொழுதும் நன்றாக, பின் இருக்கத்தான் பார்ப்பான் அதிகளவு.
===========================
# சில புண்ணியங்களைத் தருகின்றேன்
===========================
குருநாதர்:- இதனால் நல்விதமாகவே இன்னும் ஆசிகளோடு, இதனால் சில புண்ணியங்களைத் தருகின்றேன். இதனால் அதை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள்.
===========================
# சித்தர்கள் செப்புகின்ற வகை ஏற்று நடந்தால் வெற்றி.
===========================
குருநாதர்:- இதை ஏன், எதற்காக, இவ்வாறாக, பின் அறிந்தும் பல வழிகளில் கூட, நல்விதமாகவே அறிந்து, பலவற்றை நிச்சயம் தன்னில் கூட, சித்தர்கள் பின் செப்புகின்ற பொழுது, ஏற்று நடந்தால் வெற்றி.
இல்லையென்றால் எப்பொழுதுமே, பின் அதாவது நிச்சயம் மாயையில் சிக்கி, பின் அதாவது நீந்திக்கொண்டே இருந்து, வருத்தங்களையும் நிச்சயம் தன்னில் கூட, பின் வாழ முடியாமலும்.
===========================
# இறைவன் தன், அதாவது பிள்ளைகளை அனைத்தும் தெரிந்து கொள்ளத்தான் விருப்பப்படுகின்றான்
===========================
எதை, ஏது என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் இவையென்று எதுவும் பின் தெரிந்து கொள்ளவில்லை என்றால், கஷ்டங்கள் வந்து மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து ஆகும் சூழ்நிலை நிச்சயம் இருந்து கொண்டே இருக்கும்.
இதனால் இறைவன் தன், அதாவது பிள்ளைகளை அனைத்தும் தெரிந்து கொள்ளத்தான் விருப்பப்படுகின்றான்.
ஆனால் நீங்களோ அவை பின் ஏற்பதில்லை.
இவ்வாறாக நிச்சயம் தெரிந்துகொண்டால், நிச்சயம் தன்னில் கூட, பின் இறைவனையும் காணலாம்.
===========================
# ரகசிய சுவடிகளை காசுக்கு விற்ற பக்தர்கள்
===========================
# ஏன் காசுக்காக இறைவனை வணங்குகின்றார்கள் பக்தர்கள்?
===========================
இறைவனை எதை என்று புரிய, புது புதிய பின் சேர்க்கை எல்லாம் மனிதன் கண்டுபிடிக்கின்றான்.
ஆனால் இவையெல்லாம் நாங்கள் நிச்சயம் தன்னில் கூட நிறுத்தி வைத்ததே, இப்பொழுது மனிதன் பயன்படுத்துகின்றான்.
அதனால் இங்கு பக்தியில் உள்ளவனே கெடுத்துவிட்டான் அனைத்தும்.
ஏன்?
பக்தியில் உள்ளவன் இவையெல்லாம் காசுக்காக ஆசைப்பட்டு, நிச்சயம் தன்னில் கூட விற்றுவிட்டான். அவ்வளவுதான்.
(சுவடியை விற்ற) அச் சாபம்தான், பக்தியில் உள்ளவர்கள் எல்லாம் பின் வருவார்கள். இன்னும் எது என்று புரிய, காசுகள் தாத்தா என்று, வீண் பக்தி. வீண்.
அடியவர் :- இந்த பக்தியில் இருக்கிறவங்க எல்லாம் காசுகள் தாத்தான்னு வருவாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- காசுக்காகத்தான் இறைவனை வேண்டுவாங்களாம். எப்பா எனக்கு காசு வேணும்பா, எனக்கு அது வேணும்னு தான் வேணுவானாம். அப்படியாப்பட்ட அது பக்தி என்பது.
அடியவர் :- வீண். வீணா போயிரும்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- வீணா, வேஸ்ட்ன்றாரு வந்து.
குருநாதர்:- அப்பனே, அன்போடு நிச்சயம் இவ்வளவு பாதுகாப்பு வைத்திருக்கின்றான் முருகன். அப்படி மீறியும் நடக்கிறது என்றால், மனிதனின் குற்றமே.
சுவடி ஓதும் மைந்தன்:- உலகத்துக்கு இவ்வளவு பாதுகாப்பு யாரு கொடுத்திருக்காரு?
அடியவர் :- முருகப்பெருமான் வச்சிருக்காரு.
சுவடி ஓதும் மைந்தன்:- முருகப்பெருமான் கொடுத்திருக்காரு. அது மீறி நடக்கிறதுன்னா, யாரோட தவறு?
அடியவர் :- மனிதனுடைய தவறு.
சுவடி ஓதும் மைந்தன்:- மனிதனுடைய தவறுதான். ஐயா, மனிதனுடைய தவறுதான். ஓகேங்களா? புரியுதா?
===========================
# அழியுகம் தொடங்குவதற்கு முன்பே….
===========================
குருநாதர்:- ஏன், எது என்று அறிய, நிச்சயம் எவை என்று இதனால் அழியுகம் தொடங்குவதற்கு முன்பே…
அனைத்தும் தெரிந்து கொண்டு…
உங்களையும் நீங்கள் வென்று……
மற்றவர்களும் பின் நிச்சயம் தன்னில் வென்று வையுங்கள்.
நிச்சயம் புண்ணியம் சேரும்.
அழகாக வாழ்ந்திடுவீர்கள்.
அடியவர் :- கலியுகம் முடிஞ்சு போச்சு. அழியுகம் ஆரம்பிக்கப் போகுது. அதனால இதெல்லாம் புரிஞ்சு, பிழைச்சுக்கிறதுக்கு வழி பாருப்பான்றாங்க.
===========================
# நிச்சயம் செம்மையாக மனம் வைத்திருத்தல் வேண்டும்.
===========================
குருநாதர்:- நன்றாகவே எவை, ஏது என்று புரிய, நல் மனதாக இருக்க வேண்டும் வருங்காலத்தில். ஏனென்றால் அழிவுகள் பலமாக, பின் இதைப் பின், பின் தடுப்பதற்கு ஒரே காரணம் நல்மனதாக, அதாவது செம்மையாக மனம் வைத்திருத்தல் வேண்டும். பின் நிச்சயம்.
அடியவர் :- செம்மையான மனம். அழிவுகள் நிறைய காத்துட்டு இருக்கு. தடுக்குறதுக்கு ஒரே வழி, உங்க எண்ணங்களை, மனங்களை தூய்மையா வச்சுக்கோங்கன்றாங்க.
===========================
# இறைவன் மீது குறை சொன்னால்…
===========================
குருநாதர்:- பின் இறைவனை கூறக்கூடாது. இறைவனை பின் குறை கூற கூடாது. பின் இறைவன் மனசாட்சி அற்றவன்.
இப்படியா இறைவன் பின் இருக்கின்றான்??? என்று அனைத்தும் நீங்கள் செய்ய…
பின் அதாவது நீங்கள் செய்யும், பின் தவறுகளே தண்டனையாக இறைவன் கொடுக்கின்றான்.
அவ்வளவுதான். பின் நிச்சயம் திருந்தி கொள்ளுங்கள். தெரிந்து கொள்ளுங்கள். வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
===========================
# அறிவைப் பெருக்கிக் கொண்டால் அனைத்தும் கிட்டும்.
===========================
குருநாதர்:- இறைவன் உங்களுக்கு நிச்சயம் எவை என்று கொடுக்க அனைத்தும் தயார்.
ஆனால் நீங்கள் வாங்க நிச்சயம் தன்னில் கூட தயாராக இல்லை. அதுதான் யான் செப்புவேன்.
அது தகுதி எவ்வாறு எல்லாம் நிச்சயம் அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும். அவ்வறிவைப் பெருக்கிக் கொண்டால், பின் நீங்கள், அதாவது நீங்கள் யார் என்று அறிவீர்கள்.
எதை, தாயே, தந்தையே, அறிவைப் பெருக்கிக் கொண்டால், உங்களை நீங்களே வெல்வீர்கள். யாரும் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே பார்ப்போம். அறிவுள்ளவள், அறிவுள்ளவன் என்ன பேசுகிறான் என்று ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்போம் மீண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- பேசுங்கள். எப்படி இருக்க வேண்டும் என்று யாராவது. யாராவது பேசுங்கள். எப்படி இருக்க வேண்டும் என்றார்.
அடியவர்:- அம்மா, காலையிலிருந்து குருநாதர் கிளாஸ் எடுத்திருக்காருங்களா? யாராவது பேசுங்க. ஒரு வாய்ப்பு.
https://youtu.be/PKohTFGg6R8?t=34552
குருநாதர்:- நிச்சயம் பேச மாட்டீர்கள். ஏனென்றால் இதை நடத்துபவர்களே அறிவில்லை. அப்படி இருக்க, நிச்சயம் தன்னில் கூட எப்படி நீங்கள் சொல்வீர்கள்?
சுவடி ஓதும் மைந்தன்:- முதல்ல இது நடத்தவர்களுக்கே அறிவே இல்லை. இவங்களுக்கே அறிவில்லாத பொழுது. நீங்க எப்படி சொல்லுவீங்க?
குருநாதர்:- இப்பொழுது நடத்துகின்றீர்களே, இவர்களை ஒரு கேள்வியாவது கேட்டுப் பாருங்கள். யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் ஏதோ ஒன்று நடத்துகின்றோம், ஏதோ பெருமைக்காக என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அடியவர்:- ஐயா, குருநாதர் சொல்றாரு, செய்றேங்க ஐயா.
குருநாதர்:- நிச்சயம் இவை தன் அறிய, இவர்கள் பின் நிச்சயம் ஓதுதல் வேண்டும். பார்ப்போம், எவ்வாறு என்பதெல்லாம். நிச்சயம் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூட யான் சொல்வேன்.
குருநாதர்:- ஏனென்றால் நிச்சயம் இவை தன் ஒவ்வொருவரும் இவ்வாறு பின் பேசுகின்றார்கள் அல்லவா? கூட்டம் கூட்டி, எதை என்று பின் எவை என்று கூற, இவை தன் சொல்லுகின்ற பொழுது, அனைவரும் பேசச் சொல் பார்ப்போம். யாரும் பேச மாட்டார்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த 18 பேர், இந்த இது (கூட்டுப் பிரார்தனை) கூட்டம் கூட்டுறாங்க இல்ல, இவங்க வந்து என்னென்னெவோ பேசுறாங்க. இதை அகத்தியர் என்ன சொன்னாருன்னு ஒருத்தர் ஒருத்தரை கூட்டி என்ன சொல்ல சொல்லு பார்ப்போம். யாரும் பேச மாட்டாங்க. எதுக்கு?
குருநாதர்:- ஏனென்றால் உங்களைப் போல்தான் அவர்களும் கூட. ஏதோ அகத்தியன் சொல்கின்றான், செய்கின்றார்கள், அவ்வளவுதான்.
குருநாதர்:- எதை, ஏது என்று புரிய, ஏதோ பின் பொம்மையாக பயன்படுத்துகின்றேன், அவ்வளவுதான். மீதி எல்லாம் அறிவில்லை அவர்களுக்கு.
குருநாதர்:- எதை, ஏது என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னை அறிதலே சிறப்பு. யார் ஒருவர் தன்னை அறிதலையே பின் சிறப்பாக. அதனால் நீ சொல், உன்னை நீ என்ன அறிந்தாய்?
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்களே சொல்லுங்க. உன்னை நீ என்ன அறிந்தாய்ன்னு கேட்கிறார். சொல்லுங்க ஐயா.
அடியவர்:- ஐயா, தன்னை அறிதல் குருநாதர் காலையில் இருந்து நிறைய விஷயங்கள் சொல்லிட்டு இருக்காங்க. என்னை நான் அறியணும். என்னை நான் அறியணும் அப்படின்னா, முதல் வந்து இந்த அறிவு இருக்கு பாருங்க. இந்த அறிவைப் பெருக்கணும். அறிவைப் பெருக்குறதுக்கு என்ன பண்ணனும்? குருநாதர் திருப்பி திருப்பி சொல்றாங்க, ஜீவகாருண்யம். தர்மம். முதல் எடுத்த உடனே தர்மம்னா என்ன? ஜீவகாருண்யம். பிற உயிர்களை கொல்லக்கூடாது, மாமிசம் உண்ணக்கூடாது. அதுக்கப்புறம் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கணும். மனசுல பயம், பொறாமை, கோபம், தீய எண்ணங்கள், இதையெல்லாம் வந்து நாம பெருக்கிக் கொள்ளக்கூடாது, வளர்த்துக்கொள்ளக்கூடாது. சரிங்களா? இதை செஞ்சு வந்தாலே அவங்க தானா வந்து மிச்சத்தை கொடுத்துருவாங்க, அவ்வளவுதான். மிச்சம் எதுக்கு நீங்க தேடி போக வேண்டாம்.
குருநாதர்:- அப்பனே, எது என்று அறிய, பார்த்தீர்களா? யான் என்ன சொல்லிக் கொடுத்தேனோ, அதைத்தான் திரும்பவும் சொல்கின்றார்கள்.
https://youtu.be/PKohTFGg6R8?t=34735
குருநாதர்:- நிச்சயம் தன்னில் கூட இதே போல் கடைபிடிங்கள் நீங்களும்.
அடியவர்:- புதுசா எல்லாம் ஒன்னும் சொல்ல வேணாம். அவங்க சொல்றதை செஞ்சாலே போதுங்க, அவ்வளவுதாங்க.
குருநாதர்:- மாற்றம் நிச்சயம் உண்டு. ஆனாலும் எதை என்று புரிய, நிச்சயம் பின் யாங்கள் ஆராய்வோம் உங்கள் மனதை. நிச்சயம் தன்னில் கூட எங்களுக்கு தெரியும்.
https://youtu.be/PKohTFGg6R8?t=34905
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய, இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நல்விதமாகவே முதலில் அப்பனே, நல் எதை என்று புரிய அப்பனே, நல்விதமாக அனைத்தும் செய்யுங்கள் அப்பனே. அனைத்தும் நடக்கும்.
அப்பனே, இவ்வாறாக பல வகையில் கூட ஞானத்தைப் பெற எவ்வாறு என்பது எல்லாம் அப்பனே, நல்விதமாகவே அப்பனே, ஞானத்தைப் பெற்று நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய.
இதனால் அப்பனே, தீய அப்பனே, அழுக்குகள் எல்லாம் அகற்றி, அப்பனே, நல்விதமாகவே எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட நல்மனதாகவே வைத்துக்கொண்டால், யாங்கள் அப்பனே பின் நல்மனது அப்பனே, நிச்சயம் அங்கேயே வருவோம்.
அப்பனே, இதனால் என்னவென்று ஏதுவென்று அப்பனே, நல்விதமாகவே எதை ஏது என்று புரிய, அப்பனே, பின் பல வழிகளில் கூட ஞானத்தைப் பெற, அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய அப்பனே, எதை என்று அறிய, அதனால் ஞானத்தை அப்பனே, முதலில் அப்பனே, பின் கற்றுக்கொண்டு, அப்பனே, அனைத்தும் வெல்க.
அப்பனே, நல்விதமாக பல மாற்றங்கள் உண்டு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு.
ஆனாலும் அப்பனே, பின் நல்விதமாக எதை என்று புரிய, அப்பனே, பின் புரிந்து கொண்டு, அப்பனே, நல்விதமாகவே இருந்தாலே, அப்பனே, மாற்றங்கள் தானாக, அப்பனே, நிச்சயம் நடக்கும் அப்பா.
அப்பனே, நல்விதமாக எதை ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் அப்பனே, நிச்சயம் எது என்று புரிய.
அப்பனே, இதனால் நிச்சயம் பின் மனிதன், மனிதன் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் இவ்வுலகத்திற்கு, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பின் நல்லதை அப்பனே, பின் செய்யப் போவதில்லை.
இதனால் சித்தர்களை அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட பேச்சைக் கேட்டு சரியாக நடந்து கொண்டு வந்தாலே போதுமானதப்பா, உயர்வுகள் உண்டு.
https://youtu.be/PKohTFGg6R8?t=35045
அப்பனே, எவை ஏது என்று புரிய, அப்பனே..
***** நலங்களாகவே பல வழியில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, உண்மைகள் வெளிப்படும் என்பேன் அப்பனே. *****
அப்பனே, உண்மை நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வெற்றி, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட பெருக.
ஏனென்றால், அப்பனே, அழியுகத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் போலிகள் தான் அதிகம் என்பேன் அப்பனே.
https://youtu.be/PKohTFGg6R8?t=35081
அப்பனே, நல்விதமாக ஆற்றல்கள் எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே, இவ்வாற்றல்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நல்விதமாக பல ஆற்றல்கள் அப்பனே, நாங்கள் கொடுக்கத் தயார் என்பேன் அப்பனே.
அவ்வாற்றல்களைப் பெற்றுக்கொண்டு, நல்விதமாக அப்பனே, நீங்களும் அப்பனே, உங்களை வென்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மற்றவர்களும் வெல்வீர்களாக.
அப்பனே, நலங்களாக, அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே, மீண்டும், அப்பனே, நிச்சயம் அனைவரும், அப்பனே, பின் சந்தோஷமாக்க, அப்பனே, நிச்சயம் ஒரு பாடலைப் பாடுக.
அப்பனே, பின்பு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அடியவர் :- (சில பொது அறிவிப்புகள் - கோமதி சக்கரம் குறித்து )
https://youtu.be/PKohTFGg6R8?t=35314
குழந்தை பாடகி:- ( முருகப்பெருமான் பாடல்)
https://youtu.be/PKohTFGg6R8?t=35408
( பாடல் முடிந்த பின்னர்….)
https://youtu.be/PKohTFGg6R8?t=35651
===========================
# கலியுகத்தில் பாவக் கணக்குத்தான் மனிதனுக்கு அதிகம்
===========================
குருநாதர்:- அப்பனே, நன்றாகவே எதை என்று புரிய, அப்பனே. இதனால், அப்பனே, நன்மைகளாகவே இறைவனை, அப்பனே, புரிந்துகொண்டு, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, பின் நடந்தால் அனைத்தும் வெற்றியாகும்.
அப்பனே, அதாவது, பாவக் கணக்குத்தான், அப்பனே, நிச்சயம் பின் கலியுகத்தில் மனிதனுக்கு அதிகம்.
அப்பனே, இப் பாவக் கணக்கை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எங்கு, ஏது என்று புரிய, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, பின் புண்ணியக் கணக்காக மாற்ற, அப்பனே, மனிதனால் முடியுமா என்றால், நிச்சயம் முடியாது.
===========================
# சித்தர்களால் மட்டுமே புண்ணியங்களை பெற்றுத்தர முடியும்.
===========================
அப்பனே, இதனால், நல் மனதோடு, அப்பனே, பின் இறைவனை, அப்பனே, மனதில் நினைத்து இருந்தாலே, யாங்களே, அப்பனே, நிச்சயம் இறைவனிடத்தில் முறையிட்டு, அப்புண்ணியங்கள் உங்களுக்குப் பெற்றுத் தந்தால்தான் உண்டு.
இல்லையென்றால், இல்லையப்பா, சொல்லிவிட்டேன், சொல்லிவிட்டேன்.
அடியவர்:- மனிதனிடத்தில் பாவங்கள்தான் நிறைய இருக்கு; புண்ணியம் இல்லப்பா. அப்போ உங்களுக்காக நாங்க இறைவன்ட்ட பேசி வாங்கித் தர்றோம். இல்லன்னா எதுவும் மாறாது, அப்படின்றாங்க.
https://youtu.be/PKohTFGg6R8?t=35743
குருநாதர்:- அப்பனே, எது என்று கூற, அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்றெல்லாம், அப்பனே, புண்ணியங்கள் வரவில்லையே என்று நிச்சயம் ஏங்கக் கூடாது என்பேன் , அப்பனே, சொல்லிவிட்டேன்.
யாங்கள் தர வேண்டும், அப்பனே, நிச்சயம் பின் எவை என்று புரிய.
எதை, ஏது என்று புரிய மனிதன் பாவக் கணக்குடனே பின் பிறக்கின்றான், நிச்சயம் தன்னில் கூட.
ஏனென்றால், எதை என்று புரிய, புண்ணியக் கணக்கு, எவை என்று கூறப்பின், ஆனால் இங்கு எது என்று அறியாமலே.
இதனாலே பல பல வழிகளில் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் மாற்றி அமைத்து, பல வகையில் கூட புண்ணியங்களை நிச்சயம் பின் யாங்கள் பின், அதாவது செல்லும் பாதையில் வந்தாலே, நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதையெல்லாம். புண்ணியக் கணக்கு, நிச்சயம் பின் அதிகமாகி, நிச்சயம் உங்கள் வாழ்க்கையும் செம்மை பெறும்.
இல்லையென்றால், நிச்சயம் தன்னில் கூட, அப்படியே இறைவனைத் தேடித் தேடி அலைய வேண்டியதுதான்.
எதை, ஏது என்று புரிய. இதனால், நிச்சயம் தன்னில் கூட, நாங்கள் சொல்லியதெல்லாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஏனென்றால் கலியுகத்திற்கு இது நிச்சயம் தேவை.
===========================
# பக்தனுக்கு, பக்தனே, பின் அடித்துக் கொள்வான்.
===========================
எதை, ஏது என்று புரிய இதனால் பின், அதாவது நிச்சயம் எப்பொழுதுமே, அதாவது நிச்சயம் கலியுகத்தில், அப்பனே, பின் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பக்தனுக்கு, பக்தனே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எது என்று புரிய, அப்பனே, பின் அடித்துக்கொள்வான்.
https://youtu.be/PKohTFGg6R8?t=35842
அப்பனே, இன்னும் இன்னும், அப்பனே, எது என்று கூற, பின் பொய் சொல்லி, அப்பனே, பின் யான் பெரியவன், நீ பெரியவன், இவ்வாறு, அவ்வாறு என்றெல்லாம் சொல்லியும், அப்பனே, பக்தன், பக்தனுக்குள்ளே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல பல பின் போராட்டங்கள் என்பேன் அப்பனே.
அப்பனே, கலியுகத்தில், அப்பனே, ஞானிகள் வந்தனர் என்பேன் அப்பனே.
ஆனால் வாழ விடாமல், அப்பனே, நிச்சயம் தடுத்தனர் என்பேன் அப்பனே.
ஏன், எதற்கு, மனிதர்களே என்பேன் அப்பனே.
அப்படி ஞானிகளுக்கே அவ்வாழ்க்கை என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- பல ஞானிகள் கலியுகத்தில் வந்தாங்க.மனிதர்கள் வாழ்க்கையை மாத்துறதுக்கு. ஆனா மனிதனை என்ன பண்ணான்? ஞானிகளிலேயே விடல. அடிச்சு துரத்திட்டாங்க.
நிச்சயம் தனனில் கூட கோபம் கொண்டு மீண்டும் கலியுகத்தில் பின் வர, பின் யாங்கள் நிச்சயம் செய்வோம் எதை என்று புரிய.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, அவர்கள் பின் ஏது என்று புரிய, பின் ஆனாலும் அதற்குள்ளே, பின் உண்மை ஞானத்தை நீங்கள் பெற வேண்டும். இல்லையென்றால், நிச்சயம் அவ்வளவுதான்.
===========================
# கூட்டு பிரார்த்தனையை கெடுக்க பல சதிகள்…
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=35926
எதை, ஏது என்று புரிய இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இன்னும் எடுத்துச் செல்வேன் அப்பனே.
அதனால், அப்பனே, கெடுப்பதற்கு பலர் இருந்தனர் என்பின், அப்பனே, இக் கூட்டு பிரார்த்தனையும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அனைவரையும் நொறுக்கித்தான், அப்பனே, எடுத்து வந்திருக்கின்றேன், அப்பனே.
அடியவர்கள்:- ( பலத்த கை தட்டல்கள் )
அப்பனே, இதுவும் பக்தனின் வேலையே என்பேன் அப்பனே.
அப்பனே, இதனால் நன்மைகள், அப்பனே, இன்னும் கொண்டு போவோம் என்போம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே.
ஆனாலும் அவனவன் தடுப்பவனுக்கெல்லாம், அப்பனே, நிச்சயம் தண்டனை கொடுத்திருக்கின்றோம், அப்பனே. அவன் உணர வேண்டும் சொல்லிவிட்டேன், அப்பனே.
அடியவர்:- பாருங்க, யாரெல்லாம் கூட்டு பிரார்த்தனை நடக்கக்கூடாதுன்னு தடுத்திருக்காங்களோ, அவங்களுக்கெல்லாம் தண்டனை கொடுத்திருக்காங்க. ஆனா இன்னும் உணரல. உணரணும்ன்றாங்க அவங்க.
===========================
# கூட்டு பிரார்த்தனையை உளவு அறிய வந்தவர்கள்…..
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=35983
குருநாதர்:- அப்பனே, அவை மட்டுமில்லாமல், அப்பனே, சென்று பார்த்து வா. என்ன நடக்கின்றது? ஏது நடக்கின்றது என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, வந்தார்கள் அப்பா, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய,
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சில தீய சக்திகளும் எடுத்து, அப்பனே, நிச்சயம் எங்களிடத்தில் அதில் செல்லுமா அப்பா?
அடியவர்:- பாருங்க, நிறைய மாந்திரீகம், தீய சக்தி எல்லாம் வந்து இங்கெல்லாம் தடுத்து நிறுத்திட வந்திருக்காங்க. சித்தர்கள் எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டாங்க எல்லாத்தையும்.
குருநாதர்:- அப்பனே, ஒருவன் நிச்சயம் தன்னில் கூட இங்கேயே இக் கூட்டு பிரார்த்தனை நடக்க விடமாட்டேன். நிச்சயம் தன்னில் கூட பார்ப்போம் என்று, அப்பனே, பின் சபதம் ஏற்றுச் சென்றானப்பா. ஆனால் அவன் நிலை என்ன ஆகிருக்கும் என்றெல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே. ஆனால் சித்தன், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பின் புரிந்து கொள்ளவில்லை இறைவனை, அப்பனே.
இதனால்தான், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, அனைவரையும் எதை என்று புரிய.
https://youtu.be/PKohTFGg6R8?t=36043
குருநாதர்:- அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, இதை நடத்துபவனே அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று புரிய, பின் அதாவது, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் சாதித்து எவை என்று நிறுத்துவோம் என்று, அப்பனே, பின் வாதிட்டுச் சென்றிருக்கின்றானப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- யார் கையில இல்ல?
அடியவர்:- நடத்துறவங்ககிட்ட.
சுவடி ஓதும் மைந்தன் :- நடத்துறவங்ககிட்ட, இது நடத்தினா முடிஞ்சா பார்த்துக்கோங்க வந்து. அடுத்து நான் தழுகுறேன்னு சொல்லிட்டு வந்து என்ன பண்றாரு?
அடியவர்:- சொல்லிட்டு ஓப்பனா ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டு போயிருக்காங்களாம்.
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதனால், அப்பனே, நல்லது செய்து கொண்டே வந்தால், அப்பனே, தீவை, அப்பனே, பின் தானாக விலகி ஓடும் என்பேன் அப்பனே.
===========================
# யார் தடுத்தாலும் நல் நீர் சென்று கொண்டே இருக்கும்
===========================
குருநாதர்:- இதனால், அப்பனே, கடைசியில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எங்கு தங்குவான் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் தீங்கு, அப்பனே, எங்கு, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, கரை, அப்பனே, பின் ஏது என்று புரிய, ஒதுக்கிவிட்டு, நிச்சயம் பின், அப்பனே, நல் நீர் சென்று கொண்டே இருக்கும்.
===========================
# நல் மனதாக இருந்தால் அனைத்தும் நடக்கும்.
===========================
குருநாதர்:- அப்பனே, இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு ஒன்றும் நடக்கவில்லை.
ஏன் நடக்கவில்லை? அப்பனே, நல்மனதாக இல்லை.
அதனை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பயன்படுத்திக்கொண்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் தீய சக்தியில் இறங்கிவிட்டான் என்பேன் அப்பனே.
அது உடனடியாக நடந்துவிடும் என்று, நிச்சயம் அதில் சென்று சென்று, அப்பனே, மனிதனுக்கு ஒண்ணுமே, ஒன்றுமே நடக்கவில்லை என்பேன் அப்பனே.
அவ்வளவுதான் என்பேன் அப்பனே. இவையெல்லாம், அப்பனே, நிச்சயம் தெரிந்த விஷயமே என்பேன் அப்பனே.
அப்பனே, நிச்சயம் எவ்வாறு அழிவுகள் இருக்கின்றது என்பதெல்லாம், அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே.
===========================
# சந்தோஷமாக வாழ ஒரே வழி - “தன்னை அறிதலே”.
===========================
குருநாதர்:- இதனால், அப்பனே, நிச்சயம், அப்பனே, உங்களை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் யார் என்று, அப்பனே, நிச்சயம் நீங்கள் பின் யார் என்று அறிந்துகொள்வதற்கும், அப்பனே, நிச்சயம் நல்மனதாக இருந்தால், சில புண்ணியங்களையும் கொடுத்து, அப்பனே, யாங்களே சொல்லுவோம், அப்பனே.
நீ இதற்காகத்தான் வந்தாய்?
உன் புண்ணியம் எவை என்பதை, நிச்சயம் இவ் பாவத்திற்காகத்தான் வந்தாய் என்றெல்லாம், அப்பனே, யாங்கள் சொல்லிவிடுவோம் என்போம், அப்பனே.
நீங்கள் நிச்சயம் தன்னில் சந்தோஷமாக வாழலாம் என்பேன் அப்பனே.
இவ்வுலகத்தில் பாவத்தை, அப்பனே, பின் எடுத்துரைப்பவன் எவனும் இல்லை.
அப்படி பாவத்தை எடுத்துரைத்தாலும், அப்பனே, அவனுக்கு பாவம் சேரும் என்பது நிச்சயம். அவன் வாழ்க்கை போய்விடும் என்பது, அப்பனே, நிச்சயம்.
ஆனாலும், அப்பனே, நிச்சயம் நீங்கள் சரியாக, அப்பனே, பின் சரியாக, அப்பனே, வழியில் பின்பற்றி, நல்மனதாக இருந்தால், யாங்கள் சொல்லுவோம், அப்பனே, பாவத்தை.
எங்களை, அப்பனே, பாவம் ஒன்றும் செய்ய முடியாதப்பா.
===========================
# மந்திரம் , தந்திரம் , யந்திரம் - ஏன் யாருக்குமே வேலை செய்யவில்லை?
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=36201
குருநாதர்:- அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இவ் ஆன்மாவெல்லாம், அப்பனே, அழுதுகொண்டே செல்லும் அப்பா, இறைவனிடத்தில், பின் யாங்கள் செய்துவிட்டோமே, தவறு, தவறு என்று, அப்பனே.
யாங்கள், அப்பனே, மீண்டும் இதை சொல்லியிருக்கின்றேன். அப்பனே, இதைத்தான், பின் எதை என்று கூற, பின் அடுத்த பிறப்பில், நிச்சயம் யாங்கள் வந்து, பாவம் செய்யாமல் காத்துக் கொண்டிருப்போம்.
உங்களுக்கு புண்ணியத்தை அளிக்கின்றோம் என்று ஆறுதல் படுத்தித்தான், அப்பனே, இறைவனிடமே யாங்கள் அனுப்புகின்றோம். இவ் ஆன்மாக்களை, அப்பனே, சொல்லிவிட்டேன்.
அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்து கூட, பல வகையில் கூட, அப்பனே, நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே.
இதனால், தீய ஆற்றல்களைத்தான், அப்பனே, நிச்சயம் சந்தித்து இங்கு வந்துள்ளீர்கள் என்பேன் அப்பனே.
பல பேரை, அப்பனே, பார்த்துவிட்டேன், அப்பனே.
அவர்களுக்கும், அப்பனே, நல்லாற்றலை, அப்பனே, பின் அதாவது, தெரியாமல் தான் செய்துவிட்டார்கள் என்று, நல்லாற்றலையும் கொடுத்தும் அனுப்பி இருக்கின்றேன், அப்பனே.
அப்பனே, மந்திரம் சொல்லலாம்.
அப்பனே. தந்திரம் செய்யலாம் என்பேன் அப்பனே.
எப்படி அதற்கு உயிர் கொடுப்பது என்பது யாருக்காவது தெரியுமா என்றால், தெரியாதப்பா.
எதை என்று புரிய யாங்கள்தான் உயிர் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அது செயல்படுமே.
அப்பனே, நிச்சயம் இல்லையென்றால், பொம்மை போல், அப்பனே, நீங்கள் தகடுகள் பின் அவ்வாறு அணிவது.
(....... நீங்கள் ஏதாவது தாயத்து, யந்திரங்கள் வைத்திருந்தால் இவ் வாக்கோடு தொடர்புபடுத்தி நன்கு சிந்தித்து பாருங்கள் ……. )
https://youtu.be/PKohTFGg6R8?t=36291
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்:- நிச்சயமா, மந்திரம், எந்திரம், தந்திரம் அதெல்லாம் இருக்குது. ஆனா, எங்களுக்குத்தான் தெரியும். எப்படி உயிர் கொடுக்கிறது? எல்லாம் தெரியும் அதெல்லாம் எப்படி செயல்படுது? எப்படி உருவேத்துறது? (வெளியில செய்றது எல்லாம்) எல்லாம் பிராடு. உயிர் கொடுக்கிறது எப்படி? சித்தர்களுக்குத்தான் தெரியும்.
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, யாங்கள் அப்படி கொடுத்தாலும், ஒருவனுக்கு கொடுக்க மாட்டோம். சொல்லிவிட்டோம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
யார் ஒருவன், அனைவரும் நல்லவனாக, அதாவது, அனைவரும் நல்லவராக, பின் உழைப்பு, எதை என்று கூற, பின் அதாவது, மாற வேண்டும் என்று நினைக்கின்றானோ, அவருக்குத்தான், அப்பனே, அதையும் கொடுப்போம் என்போம் அப்பனே.
ஆனாலும், கலியுகத்தில் அப்படிப்பட்டவன் இருக்கின்றானா என்றால், இல்லை என்பேன் அப்பனே. அனைத்தும் பணத்திற்காகவே.
===========================
# ஏன் இறைவன் , பணம் இருக்கும் இடத்தில் இருப்பதே இல்லை.
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=36340
குருநாதர்:- அப்பனே, எங்கு பணம் இருக்கின்றதோ, எங்கு எவை என்று பணத்திற்கு ஆசைப்படுகின்றார்களோ, அங்கு இறைவன் இருப்பதே இல்லை என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே.
அடியவர்கள்:- ( பலத்த கை தட்டல்கள் )
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இறைவன் இன்னும், அப்பனே, பாவத்தை சேரு, சேரு என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் சேர்த்து வைத்து, சேற்றில், அப்பனே, நுழைய வைத்து விடுவான். அவ்வளவுதான், அப்பனே. இதுதான் விதி.
அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. இதனால் முதலில், அப்பனே, பின் தெளிவு பெறுங்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, அறிவை வளர்த்துக்கொண்டு, அதன் மூலம், அப்பனே, பின் பலம் பெருக, அப்பனே. நிச்சயம் ஆற்றல், யாங்கள், அப்பனே, பின் கொடுக்க தயார்.
===========================
# சித்தர்கள் பின்னே வருவர்களுக்கு முதலில் எதை கொடுப்பார்கள்?
===========================
குருநாதர்:- இதனால், அப்பனே, பின் அகத்தியன் பின், அதாவது, சித்தர்கள் பின்னே வருவர்களுக்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, முதலில் யாங்கள் எதை கொடுப்போம் சொல்லுங்கள் பார்ப்போம் இப்பொழுது?
சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்கள் பின்னே வருவர்களுக்கு முதலில் எதை கொடுப்போம்?
அடியவர்கள் சிலர் :- துன்பம்.
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே. துன்பம் தான் என்பேன் அப்பனே. அதை நிச்சயம் தன்னில் கூட, பின் துன்பம் கொடுத்தாலும், அப்பனே, பாதியிலே அகத்தியன் வணங்கினேன். துன்பம் கொடுத்துவிட்டான் என்று மீண்டும், அப்பனே, பின்னோக்கிச் சென்று, அப்பனே, பின் அங்கு, பின் அப்படி சொல்கின்றார்கள். இங்கு இப்படி சொல்கின்றார்கள். இங்கு சரியாகும் என்று, அப்பனே, பாவத்தில் விழுந்து விடுகின்றானே. ஐயோ, பாவம் மனிதன்.
அப்பனே, மீண்டும் விளக்கமாக கூறுகின்றேன், அப்பனே.
பின் விளக்கங்கள், அப்பனே, பல கூறிவிட்டேன், அப்பனே.
மீண்டும் யான் கூறியதே அதையே தெரிவிக்கின்றேன், அப்பனே.
யாங்கள், அப்பனே, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது, எங்களை நம்பி வருபவர்களை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, கிணற்றில், அப்பனே, தள்ளி, அப்பனே, நீந்தச் செய்வோம். அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
நிச்சயம் தெரியாதவருக்கு, அப்பனே, யாங்கள் நிச்சயம் பின், அதாவது, எப்படியோ எவை என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் அடித்து, பின் கரைக்கு வா என்றுதான், அப்பனே, நிச்சயம் சொல்லிவிட்டோம், அப்பனே.
===========================
# இறைவனுக்கும் , சித்தர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்.
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=36485
அப்பனே, சித்தன் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, முட்டாள் இல்லை என்பேன் அப்பனே.
நிச்சயம் அனைத்தும், அப்பனே, பின் கொடுத்து, அப்பனே, மீண்டும் எவை என்று, அப்பனே, பின் அதாவது, கொடுத்தவனுக்கே, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் நம்பிக்கை துரோகமும் எவை என்று, அப்பனே, மனிதனுக்கு மட்டுமே தெரியுமப்பா, அப்பனே.
அதனாலதான், அப்பனே, இறைவன் உடனே கொடுத்து விடுகின்றான், அப்பனே. உடனே எடுத்து விடுகின்றான்.
சித்தன் அப்படிப்பட்டவன் அல்ல, அப்பனே. நிச்சயம் தன்னில் கொடுத்தால், கொடுத்ததுதான் என்பேன் அப்பனே. அதற்கு நீங்கள் அடிகளை, பல உதைகளை வாங்க வேண்டும் சொல்லிவிட்டேன், சொல்லிவிட்டேன்.
அடியவர்கள்:- ( பலத்த கை தட்டல்கள் )
===========================
# ஏன் சித்தனை நம்புபவன் மேடையில் அமர்ந்து விடுவான்.
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=36535
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, யாங்களே வந்து சோதனை செய்வோம் என்போம் அப்பனே.
இவன் எதை என்று அறிய, அப்பனே, மீண்டும், அப்பனே, ஏனென்றால் சில இடங்களில், அப்பனே, சிலவற்றில், அப்பனே, மாயையில், அப்பனே, சிக்கிக் கொள்கின்றான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
***** ஆனால், அப்பனே, சித்தனை, அப்பனே, பின் நம்புபவன் , அப்பனே, பின் எப்பேர்ப்பட்ட பாவத்தில் சென்றாலும், அதை நாங்கள் நிச்சயம் விடமாட்டோம் என்போம் அப்பனே. *****
***** தூக்கி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மேடையில் அமைத்து விடுவோம், அப்பனே. *****
***** பாவமடா அது. உங்களுக்கு தெரியாமலே என்று. *****
அடியவர்:- சிவாய நம. சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- சித்தனை நம்பினோர்கள்?
அடியவர்:- கைவிடப்படார்.
சுவடி ஓதும் மைந்தன் :- கைவிடப்படார்.
அடியவர்:- நீங்க தவறான வழியில எவ்வளவு பெரிய மாயையில சிக்கி பாவத்துல போனாலும், உன் பின்னாடி பிடிச்ச காலரை தூக்கிட்டு வந்து வெளியில விட்டுருவோம்ப்பான்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- வெளிய விட்டுட்டு, நீ பாவத்தையே நோக்கி சென்றாலும்.
அடியவர்:- கதற கதற தூக்கி கொண்டு வந்து வெளில விட்டுருவோம். இல்ல, நான் போகணும். வா.
அடியவர்:- நல்வழிக்கு வா.
சுவடி ஓதும் மைந்தன் :- நல்வழிக்கு வா.
அடியவர்:- தூக்கிட்டு வந்துருவாங்க.
===========================
# சித்தர்கள் எப்படி பாவத்தை எடுப்பார்கள்?
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=36582
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எது என்று புரிய, அப்பனே. அப்படி சென்றாலும், அப்பனே, நிச்சயம் அவனிடத்தில், அப்பனே, பின் அவனிடத்தில் பாவங்கள் இருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதையும், பின் எவை என்று புரிய, அப்பனே இவனிடத்திற்கு கொண்டு சென்று, அப்பனே, அதை நாங்கள் எடுத்து விடுவோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- மத்தவங்களை எப்படி காப்பாத்துவாங்க? இது புரியுதுங்களா, ஐயா?
சுவடி ஓதும் மைந்தன் :- இவர் கிட்ட பாவம் இருந்தா கூட, சரி, ஓகே, இவன் கஷ்டப்படுறான். இவனை அனுப்பி கூட, இந்த பாவத்தையும் எடுத்து வந்து, ஐயா, புரியுதுங்களா எல்லாருக்கும்?
===========================
# அடுத்த கூட்டுப்பிரார்தனையில் முருகப்பெருமானின் சக்கர யந்திரம் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=36608
குருநாதர்:- அப்பனே, இவ்வாறாகவே பல விஷயங்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அடுத்தடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நிச்சயம் தன்னில் கூட, முருகன் சக்கரத்தை கொடுக்க வேண்டும் என்பேன் அப்பனே. ஏன், எதற்கு என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பிழைத்துக் கொள்ளட்டும் என்பேன் அப்பனே. நம்பி வருகின்றார் அல்லவா?
===========================
# ஈரேழு உலகங்களை காக்கும் ஆதி இறைவன் சிவபெருமான்.
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=36630
குருநாதர்:- அப்பனே, இன்னும் ஈசன் எப்படி, எப்படிப்பட்டவன்? எதை, எது என்று கூற, அப்பனே, சக்தி எப்படி, எது என்று புரிய, அனைத்தும் சொல்கின்றேன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
===========================
# சித்தர்கள் அருமையாக ஒன்று முதல் 12ஆம் வகுப்பு பாடங்கள் சொன்னாலும் , சிலர் தெளிவடையாமல் ஒன்றாம் வகுப்பிலே நாங்கள் இருக்கின்றோம் என்று நின்று விடுகிறார்கள்
===========================
குருநாதர்:- ஏனென்றால், அப்பனே, முதல் வகுப்பிலிருந்தே செல்ல வேண்டும், அப்பனே.
அதனால், அப்பனே, எதை என்று இதையும் சொல்வேன், அப்பனே. முதல், முதல் வகுப்பில் எடுக்கும் பாடம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஒரு 12 ஆம் இடத்திற்கு சென்றால், எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அதாவது, 12 ஆம் பின் பாடத்தை, அப்பனே, முதல் வகுப்பில் எடுத்தால், எப்படி புரியும் அப்பா? நீங்களே சொல்லுங்கள்? என்பேன் அப்பனே.
அதனால்தான் எங்கள் வாக்குகளும் கேட்டு, அப்பனே, சிலர், அப்பனே, தெளிவடையாமல், அப்பனே, நிச்சயம் தன்னில், அப்படியே ஒன்றாம் வகுப்பிலே நாங்கள் இருக்கின்றோம் என்று நின்று விடுகிறார்கள் என்பேன் அப்பனே.
===========================
# இன்னும் ஆற்றல்கள் தருவேன்
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=36679
குருநாதர்:- அப்பனே, நல்விதமாக இன்னும் ஆற்றல்கள் தருவேன், அப்பனே.
கவலை வேண்டாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே. அனைவருக்குமே லோபா முத்திரையோடு எம்முடைய ஆசிகள், அப்பனே.
===========================
# அண்ணாமலை அப்பன் , உண்ணாமலை அம்மை திருவடிகள் போற்றி!!!!!
===========================
குருநாதர்:- நிச்சயம் பின், அதாவது ஈசனும் பார்வதேவியும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய, அப்பனே, பின் பார்த்து, எவை என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல குறைகளை கண்டார்கள். நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே, பின் ஆசீர்வாதம் எவை என்று புரிய, அப்பனே. இதனால் கவலை கொள்ள வேண்டாம், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,
===========================
# மூக்குப்பொடி சித்தர் திருவடிகள் போற்றி!!!!!
===========================
குருநாதர்:- அப்பனே, மூக்கு மூக்குப் பொடியான வந்து உட்கொண்டு, பைத்தியங்கள் இவ்வாறாக நிச்சயம் தெளிவில்லாமல் இருக்கின்றது என்று வருத்தப்பட்டானப்பா. எதை, எது என்று புரிய ஆனாலும் சித்தன் எவை என்று கூற எதையும் செய்வான் என்று பின் பினற்றிக் கொண்டே சென்றானப்பா.
===========================
# ஒரு நல்லவனைப் பற்றி தெரிந்து கொண்டால், நீங்களும் நல்லவர்கள் ஆகுவீர்கள்.
===========================
குருநாதர்:- அப்பனே, இன்னும் ஞானிகளைப் பற்றி எல்லாம் சொல்வேன், அப்பனே.
அவ் ஞானிகளைப் பற்றி தெரிந்து கொள்ளும்போது, அப்பனே, அவனுடைய ஆற்றல் உங்களுக்கு கிடைக்கின்ற பொழுது, நீங்கள் உயர்வீர்கள் என்பேன் அப்பனே.
உங்களுக்கும் அவன் ஞானம் கிடைக்கும் என்பேன் அப்பனே.
அதனால்தான் ஞானிகளை எடுத்து வருகின்றேன், அப்பனே. சொல்லிவிட்டேன், அப்பனே.
எதை என்று கூற நல்லவனைப் பற்றி தெரிந்து கொண்டால், நீங்களும் நல்லவர்கள் ஆவார்கள்.
பின் ஒரு தீயவனை, அப்பனே, பின் பற்றி பின் தெரிந்து கொண்டால், நீங்களும் தீயவர்களே அப்பனே.
இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நல்லவர்களைப் பற்றி, ஞானிகளைப் பற்றி எடுத்து வருகின்றேன் வருங்காலத்தில் என்பேன் அப்பனே. எழுப்பியும் வருவேன் அப்பனே.
===========================
# அனைவருக்குமே ஆசிகள்
===========================
குருநாதர்:- அப்பனே, அனைவருக்குமே ஆசிகள். முருகன் கருணையோடு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறாக,
===========================
# கலைஞர்களை வாழ்த்தி, ரூ 5001 வெகுமதி வழங்க உத்தரவு
===========================
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இவ் கலைஞர்களை வாழ்த்தி, அப்பனே, அனைவருக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே ரூ 5001…
சுவடி ஓதும் மைந்தன்:- (அனைத்து கலைஞர்களையும் அழைத்தார்கள் ரூ.5001 வெகுமதி வழங்க..)
===========================
# அடுத்த கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=36820
அடியவர்:- இந்த சக்கரத்துக்கு அளவு ஏதாவது இருக்கா? அடுத்த கூட்டு பிரார்த்தனையில்?.
குருநாதர்:- அப்பனே, பார்த்துக்கொள்வோம், அப்பனே.
அடியவர்:- சரி. இது அடுத்த கூட்டு பிரார்த்தனைங்க. இங்கதானே?
குருநாதர்:- அப்பனே, எதை, எது என்று புரிய, அப்பனே, பின் எங்கு நடத்தினாலும் ஒன்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் ஏது எது என்று. ஆனாலும் நடுவு தன்னில் கூட, அப்பனே, பின் மீனாட்சி எனும் நடத்துங்கள்.
அடியவர்கள்:- ( பலத்த கை தட்டல்கள் )
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய, புரிந்து கொள்ளுங்கள், அப்பனே, உங்களுக்கு.
சுவடி ஓதும் மைந்தன்:- அடுத்து மீனாட்சியம்மை இடத்தில் நடத்தணும்னு சொல்லிட்டார்.
அடியவர்:- மதுரை. மதுரை, மதுரை, மதுரை, மதுரை மாநகரம். குருவே சரணம். குருவே துணை.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் நிறைவு அடைந்தது)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.