மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, December 26, 2023

சித்தர்கள் ஆட்சி - 268 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - “யார் உண்மையான தாய், தந்தை? ஒரு தாய், தந்தை எப்படி இருக்க வேண்டும்?”


 “இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

ஆதி ஈசனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!. 

அப்பனே!!!, ஆசிகளப்பா!!!.

கோபம்  அப்பனே  தன் பிள்ளை மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்களே அவர்கள் தாய் தந்தையர் இல்லை என்பேன் அப்பனே. (இவர்கள்) மிகவும் கீழானவர்கள்.

அனைவருமே தம் குழந்தைகள்தான் என்று யார் ஒருவன் இருக்கின்றானோ அவன்தான் அப்பனே இறைவன் அருகிலேயே இருக்கின்றான். இறைவனும் அவனை நேசிப்பான். இறைவனும் அனைத்தும் செய்வான். 

என் குழந்தை என் குழந்தை என்று சொல்லிக்கொண்டு இருந்தால் உன் குழந்தையாகவே இருக்கட்டும் என்று இறைவனும் சென்று கொள்வான் அப்பனே. ஒன்றும் கண்டு கொள்ள மாட்டான் அப்பனே. 

தன்னைப்போலவே பிறரை எண்ணுங்கள்!!!!

( அனைத்து சக மனிதர்கள், பிற உயிரினங்கள், பறவைகள், குருவிகள், விலங்குனங்கள், இயற்கை, மரங்கள்,  கொடி, செடி, தாவரங்கள் முதலிய அனைத்தையும் தன்னைப்போல எண்ணுங்கள். இதனையே வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று உளம் உருகிப் பாடினார்கள். )

அப்பனே அப்பொழுதுதான் நீங்கள் முதல் படிக்கு எதை என்று அறிய அறிய இறைவன் அருகில் வருகின்றீர்கள் அப்பனே.

 ( அப்படி யாரும் இங்கு ) பின் !!! இல்லையேப்பா!!!!


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!





No comments:

Post a Comment