“இறைவா!!! அனைத்தும் நீ”
அழகன் குமரன் கந்த வடிவேலன் வாக்கு:-
சில சில உண்மைகள் எடுத்துரைத்து பின் சில பின்நோக்கி , முன்நோக்கி போக வேண்டும்.
அறிந்தும் கூட அதனால் பின் நோக்கி வந்து விட்டோமே என்று எண்ணினால் முன்நோக்கிச் செல்ல இயலாது மகனே.
அறிந்தும் கூட சிறிதளவு பின்நோக்கி இறைவன் தள்ளிவிட்டால், ஆனால் பின் முன்நோக்கி பன் மடங்கு செய்து விடுவான்.
அதனால்தான் இதனை துன்பமாகவும் எண்ணிக் கொள்ளலாம். அறிந்தும் அறியாமலும் கூட மனிதனுக்குச் சிறிது இறைவன் பின் நோக்கித் தள்ளுகின்ற போது, மனிதன் கஷ்டங்கள் கொடுத்து விட்டானே என்று ஏங்குகின்றான்!!!!
அதனால் பின் நோக்கி வந்து விட்டோமே என்று ஆனால் என்று எப்போது மனிதன் சிந்திக்கின்றானோ , ஏதாவது பதில்கள் வருமா இறைவனுடத்தில் இருந்து என்று (எதிர்பார்க்கின்றான்) , ஆனால் நல்லதற்காகவே என்று மனிதன் எண்ணவில்லேயே.
அதனால்தான் இன்னும் கூட தரம் தாழ்த்திச் சென்று கொண்டே இருக்கின்றான் மனிதன்.
ஆனால் உண்மை நிலை புரியவில்லையே !!!!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment