மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, December 26, 2023

சித்தர்கள் ஆட்சி - 267 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - “கலியுகத்தில் பத்தி எப்படி இருக்கும்?”


 

“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


ஆதி ஈசனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!. 


அப்பனே!!!, ஆசிகளப்பா!!!.


அப்பனே அனைத்தும் செய்வான். 


ஆனால் பின் கோவிந்தா!! நாராயணா!!! என்று எல்லாம் வந்து வந்து நிற்பானப்பா. 


எப்படியப்பா???? கோவிந்தன் எதை என்று அறிய அறிய அனுகிரகங்கள் கிட்டி கிட்டி அப்பனே எப்படியப்பா அதனால் நீங்களே சொல்லுங்கள்?.


அதனால் உண்மை உள்ளவனாக இருங்கள். அப்படி இல்லையென்றால் ஓடி விடுங்கள். 


எதை என்று அறிய அறிய பக்தியை வைத்துக்கொண்டு  இன்றைய அளவில் அதாவது கலியுகத்தில் ஏமாற்றுபவர்கள்தான் அதிகம் என்பேன்.அப்பனே 


புகழுக்காக, இன்னும் இன்னும் பணத்திற்காக இன்னும் இன்னும் அப்பனே எதற்காக? எவை என்றும் அறிய அறிய


அப்பனே இதனால் அப்பனே ஆண்டவனுக்குத் தெரியும் அப்பனே. பின் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறியம்  படைத்தவனுக்கு பின் அனைத்தும் படைத்து விடுகின்றான் அப்பனே. 


(படைத்தவனுக்கு ) பின் காக்கத் தெரியாதா என்ன? அப்பனே இதைக்கூட மனிதனுக்கு தெரிய வில்லையே. 


ஆனாலும் எதற்கு ஏன் என்றெல்லாம் அப்பனே விடைகள். வருங்காலத்தில் எடுத்துரைக்கின்றேன்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!




No comments:

Post a Comment