மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, December 26, 2023

சித்தர்கள் ஆட்சி - 266 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - “எப்போது பக்தியின் மூலம் வெற்றி கிட்டும்?”


 

“இறைவா!!! அனைத்தும் நீ”

உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

ஆதி ஈசனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!. 


அப்பனே!!!, ஆசிகளப்பா!!!.

அப்பனே கலியுகத்தில் உண்மையான பக்திகள் இல்லையப்பா.!!!!

இதைத்தான் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!

ஏனைய சித்தர்களும் கூட இதைதான் செப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.அப்பனே 

ஏதோ இறைவனிடம் பக்தி காண்பித்தால் அனைத்துமே நடந்துவிடும் என்பதைக்கூட. 

அப்பனே!! ஆனாலும் இல்லையப்பா!!!!!. 

அப்பனே இறைவனிடத்தில் தேற்ச்சி பெற வேண்டும். அப்ப்னே முதலில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் இறைவன் பல வழிகளிலும் கூட இன்னல்களும் கூட,  சோதனைகள் கூட, துன்பம் இன்னும், இன்னும்  என்னென்னவோ செய்வான் என்பேன் அப்பனே. 

அத்தனையும் கூட வெற்றி பெற்றால்தான் அப்பனே, வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி கிடைக்குமே தவிர மற்றவை எல்லாம் ஆகாதப்பா!!!.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!



No comments:

Post a Comment