மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Saturday, December 16, 2023

சித்தர்கள் ஆட்சி - 257 : மாமுனிவர் காகபுசண்டர் அருள்வாக்கு - “இனிமேலும் நிரம்பி வழியுமடா திருத்தலங்கள்!!!!!”






 


“இறைவா!!! அனைத்தும் நீ”


12/12/2023 அன்று அமாவாசை திதி அன்று மாமுனிவர் காகபுசண்டர் மகரிஷி உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். காக்கும் சிவன் காசியில் கங்கை ஆற்றில். 


காகபுசண்டர் வாக்கு:- 


அப்பனே ஈசன் நாமத்தை பின் சொல்லிச் சொல்லி பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. 


அதனால்தான் ஈசன் விடுவதில்லை இனிமேலும்.


பக்தி என்னவென்று நிச்சயம் புரிந்து, அடித்து, நொறுக்கித்தான் உண்மை நிலை தெரிந்துதான் இதனால்தான் பல பல வழிகளிலும் கூட ஈசன் கஷ்டத்தைக் கொடுத்து கொடுத்து!!!!!!!!.............


இனிமேலும் நிரம்பி வழியுமடா திருத்தலங்கள்!!!!! 


ஏனென்றால் கஷ்டங்கள், கஷ்டங்கள் என்று ஓடோடி வருவார்கள்


வரட்டும் பார்த்துக் கொள்கின்றோம் யாங்கள் சித்தர்கள். 


உண்மை உள்ளவர்களை எடுத்துப் பல மனிதர்களை அதன் மூலம் உருவாக்கி பொய்கள்  எதை என்று அறிய அறிய எவை என்றும் அறிய அறிய அடித்து இனிமேலும் கஷ்டங்கள்தான்!!!


இதனால் சொல்லிவிட்டேன். எதை என்று அறிய அறிய உண்மையாக நீங்கள் இருந்தால் என்னிடத்தில் வாருங்கள். 


எதை என்றும் அறிய அறிய அதாவது இவ் கங்கா பின் எதை என்று அறிய நதியில் இருந்தே இச் சுவடியை வாசிக்கின்றான். எதை என்றும் அறிய அறிய யானும் செப்புகின்றேன். 


(சுவடியை ஓதும் அகத்திய மைந்தன் தன் திரு ஜானகிராமன் ஐயா கங்கை நதியின் மேல் சுவடி பெட்டகத்தை வைத்து சுவடி பூஜை புஷ்பங்கள் ஆராதனைகள் எல்லாம் செய்து விட்டு கங்கை நதியின் மேல் இருந்து வாக்குகள் வாசிக்கத் தொடங்கினார் )

 

எதை என்று புரிய புரிய  எவை என்று அறிய அறிய நீதி, நேர்மை நிச்சயம் இருந்தால் வாருங்கள். உண்மை நிலையைச் சொல்லுகின்றேன் !! என்னென்ன செய்தாய் என்று. 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment