மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Friday, December 15, 2023

சித்தர்கள் ஆட்சி - 256 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - “ அசைவ உணவு - சாபம் - எச்சரிக்கை “ —- முதல் வகை பிரம்மஹத்தி தோஷம் —-(1) ஆதி ஈசனின் கோபம் … (2) கந்த வடிவேலன் எச்சரிக்கை வாக்கு. (3) இடைக்காடர் சித்தர் சாபம் "மாமிசங்களை தின்றால் நிச்சயம் நீ அழிவது உறுதி!!!! அனைத்து கிரகங்களும் எதை என்று கூற நீச்சம் என்று நினைத்துக் கொள்!!!"


 

“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 



==================================

சித்தன் அருள் - 1225 - அன்புடன் அகத்தியர் - பஞ்சவடி வாக்கு - 2


https://siththanarul.blogspot.com/2022/11/1225-2.html?m=1


( அகத்திய பிரம்ம ரிஷி அளித்த வாக்கின் சாரம்:- அசைவ உணவு சாப்பிட்டால் உடம்பில் உள்ள யுரேனியம் என்ற தாது வளர ஆரம்பித்து , அதன் மூலமே உடல் சிதைவு, நோய் உண்டாகும் என்ற அதிர்ச்சி வாக்கு.


அப்பனே இன்னொன்றையும் யான் சொல்கின்றேன்... அப்பனே """யுரேனியம் !!! எனும் தாது உடம்பில் ஒளிந்து கொண்டிருக்கின்றது அப்பனே.....


ஆனால் அது வளர வளர கஷ்டங்களே வந்து கொண்டிருக்கும் என்பேன் அப்பனே!! அதை கட்டுப்படுத்த சரியான வழிகள் அப்பனே வரும் காலங்களில் சொல்வேன்!!!


ஒவ்வொன்றாக சொன்னால் தான் மனிதனுக்கு புரியும் என்பேன்!!!!


அப்பனே இவ் யுரேனியம் தாதுவானது எப்படி விரிவடையும் என்பதை கூட அப்பனே அப்பனே நம் உடம்பில் சாதாரணமாகவே அப்பனே ஆனாலும் மற்றவர்களை ஏன் அதாவது உயிர்களை கொன்று சாப்பிடக்கூடாது என்பதை கூட பெரியோர்கள் சொன்னார்கள் என்பேன் அப்பனே மற்ற உயிர்களை அதாவது கறியின் அதாவது மற்ற கறிகளை அதாவது அப்பனே தம் மனிதனிடத்தில் அப்பனே பின் வேறுபடுத்தி அதாவது ஒன்றிணைத்தால் அப்பனே தாங்காது என்பேன்( மனித மாமிச திசுக்களோடு மற்ற உயிரின் திசுக்கள் ஒன்று சேர்ந்தால் உடலால் தாங்க முடியாது) பின் சரீரம்!!!! அதனால்தான் அப்பனே அவ் யுரேனியம் மீண்டும் மீண்டும் வளர்கின்றது அதனால் தான் அப்பனே பின் எதை என்று கூட ஒரு உயிரை கூட அழிக்கக்கூடாது அழிக்கக்கூடாது என்றெல்லாம் முன்னோர்கள் வாக்கு!!!


அப்பனே நலமாகவே!! நலமாகவே!!! அதனால் அப்பனே அழிவுக்கு யார்? காரணம் என்று தெரிந்து கொண்டீர்களா!???? அப்பனே அழிவிற்கு காரணம் மனிதனே என்பேன்!!!!!


==================================


23/11/2023 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு பாகம் 1. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம்.பூமலை  பர்கூர். 

அப்பனே இறைவன் அருள் அப்பனே அவைதன் கூட விஷ்ணுவின் அருள் நிச்சயம், அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே!!!!!

பிற உயிர் கொல்லாமை அப்பனே  யார் ஒருவன் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் படைத்ததை அப்பனே எதை என்றும் அறியாமல் கூட தின்னுகின்றானோ அவந்தனுக்கு அருள்கள் கிட்டாதப்பா!!!.

 சொல்லி விட்டேன். அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

ஆனாலும் சில மனிதர்கள் அதை உட்கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே!!

அதற்குத் தீர்வு நோய்கள்தானப்பா!!!. 

அப்பனே அவர்களையே கேட்டுப்பார்!!!

அப்பனே. (யார் அசைவம்) உட்கொள்கின்றார்களோ அவர்களை எதை என்றும் அறிந்தும் அறியாமலும் கூட எவ்வளவு நோய்கள்?????? இல்லத்தில் எவ்வளவு பிரச்சினைகள்???????  என்றெல்லாம் கேட்டுப் பாரத்தால் புரிந்துவிடும் அப்பனே!!!. 

இதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே

முதலில் அப்பனே இறைவனை வணங்க தகுதி ஆனவர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே """"""" புலால் உண்ணாமையே !!!!! என்பேன் அப்பனே. 

இதை உண்ணாமலே இருந்தாலே  அப்பனே மற்றவை எல்லாம் தானாகவே வந்து விடும்.அப்பனே  எதை என்று கூற உயர் புத்திகள், உயர் எண்ணங்கள் இன்னும், இன்னும் அப்பனே

இவை உண்டுகொண்டே வந்தால் அப்பனே மனிதனின் கிளர்ச்சிக்கள் சில சில  அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே உடம்பில் உள்ளதப்பா. 

இவைதன்  எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அறிந்தும் கூட பின் மற்ற உயிர்களும் செல்லுமானால்  அவ் கிளர்ச்சி மீண்டும் அதிகமாகிவிடும் என்பேன் அப்பனே

இதனால் இன்னும் இன்னும் அப்பனே எதை என்றும் அறிய முடிகிறது காமம் எதை என்று கூட மூளைக்கு ஏறி  அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே கர்மத்தை சம்பாதித்து, இன்னும் போட்டி,. எதை என்று அறிய அறிய பொறாமை , கோபங்கள் இவை எல்லாம் அப்பனே  சேர்ந்து மனிதன் அழிவு நிலைக்கே சென்று சென்று!!!

இதனால் அப்பனே அவன் மட்டும் அழியவில்லை. அவன் பிள்ளைகளும், இன்னும்  எதை என்று அறிய அறிய, இன்னும் அப்பனே அவனைச் சார்ந்து உள்ளவர்களையும் கூட அழித்து இவந்தனையும் அழித்துக் கொண்டு மீண்டும்  அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அவ் ஆன்மா எவை என்று அறிய அறிய பிறவி எடுத்து விடுகின்றது என்பேன். 

இதனால் என்ன லாபம்? 

லாபங்கள் இல்லையப்பா.

இதனால் அப்பனே (பிறவிப்) பெருங்கடலைக் கடந்திட வேண்டும். பெருங் கடல் என்பது இங்கு யான் சொல்வேன் அப்பனே. எதை என்று அறிய அறிய

மனிதன் எவை என்று புரிய புரிய அதனால் புரிந்து கொண்டு வாழுங்கள்!!!.

புரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே!!!. 

புரியாமல் வாழ்ந்தால் அப்பனே இறைவன் ஆசிகளும் கிட்டாது என்பேன் அப்பனே.

=======================================

( சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு வாக்குரைத்த ஸ்தலம். திரயம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம். நாசிக். )

அப்பனே உயிரைக் கொன்று உட்கொண்டு தான் இருக்கின்றார்கள்!!! அப்பனே மனிதர்கள் கூட அப்பனே.

அப்பனே மனிதனை  அப்பனே ஒரு உயிரைக் கொன்று நீ உட்கொள்வது அப்பனே மனிதனை விட  அப்பனே ஒரு மனிதனை கொல்வதை விட அதைவிட பன்மடங்கு அதாவது வாயில்லா ஜீவராசிகளை கொல்வது அப்பனே பாவமப்பா!!!! பாவம்!!!!

அப்பனே பின் தெரிந்தும் தவறுகள் செய்தால் அப்பனே இறைவனிடத்தில் நிச்சயம் மன்னிப்புகள் இல்லை!!!!

(குருநாதர் முன் வாக்குகளில் ஏற்கனவே கூறியிருந்தது!!!! ஒவ்வொரு உயிரையும் இறைவன் படைக்கின்றார் அதன் மரணத்தையும் இறைவன் தான் எழுதுகின்றார் எப்பொழுது பிறக்க வேண்டும் எப்பொழுது இறக்க வேண்டும் என்று அதனால் மனிதனுக்கு ஒரு உயிரை கொள்வதற்கு அனுமதி இல்லை உரிமையும் இல்லை அனைத்து உயிரினங்களும் இறைவனுடைய பிள்ளைகள் இறைவனுக்கு தெரியும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் எப்பொழுது எந்த உயிர் பிரிய வேண்டும் என்று ஆனால் மனிதன் தன் சுயநலத்திற்காக ஒவ்வொரு ஜீவராசிகளை கொன்று தின்றால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்தே தீர வேண்டும்)

சொல்லிவிட்டேன் கஷ்டங்கள் அப்பனே அனுபவித்தே ஆக வேண்டும்!!!

யார் அனுமதி ???

(பிற ஜீவராசிகளை கொன்று குவிப்பதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் மனிதர்களுக்கு)

அப்பனே இறைவன் படைப்புக்களில் அப்பனே..... இறைவனே அனைவரையும் படைக்கின்றான்  அதனால்  இறைவன் படைப்பதை மற்றொருவன் கொன்றால்????

சொல்லிவிட்டேன் அப்பனே எச்சரிக்கையாக இருங்கள் அப்பனே

எவ்வாறு நன்மைகள் செய்ய வேண்டும்??? என்பதை எல்லாம் யோசித்து செய்து கொண்டே இருங்கள் அப்பனே உங்களால் முடிந்தவரை !!!!அப்பனே இவ்உலகத்திற்கு !!!எதை என்று அறிய அறிய!!!

ஒரு உயிரை கொல்லாதீர்கள்!!! கொல்லாதீர்கள்!!! அப்பனே

தெரிந்தும் தவறுகள் செய்யாதீர்கள்!!! அப்பனே

தெரியாமல் எதை என்று அறிய அறிய

இன்னும் ஒருவன் இதை பார்த்து கேள்விகள் கேட்பான் அப்பனே

இன்னும் எதை என்று அறிய அறிய திடீர் திடீரென்று மாண்டு விடுகின்றானே!!!! என்று

(மனிதர்களுக்கு ஏற்படும் திடீர் மரணங்கள்)

அப்பனே இவ்வாறு இயற்கையாக அவை மட்டும் இல்லை அப்பனே திடீரென்று ஆனாலும் அப்பனே மரணம் ஏற்படுவது அதுதான் யான் ஏற்கனவே  உரைத்து விட்டேன் அப்பனே.

(பிற ஜீவராசிகளை கொன்று தின்றால் மனிதர்களுக்கும் திடீர் திடீரென மரணம் ஏற்படும் ஏற்கனவே குருநாதர் கூறியிருந்த வாக்குகள் தான் இதை தற்பொழுது குருநாதர் மீண்டும் நினைவுபடுத்துகின்றார்)

ஆனாலும் அப்பனே தெரிந்து கூட பின் கொலை செய்ய கூடாதப்பா!!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதாவது பிற உயிர்களை கூட அப்பனே அதாவது பேசுகின்ற உந்தனுக்கு தெரியுதப்பா!!! ஆனால் பேசாத ஜீவராசிகள் யாரிடத்தில் சொல்லுமப்பா!!!

அப்பனே  இதை நிச்சயமாய் பயன்படுத்திக் கொள்பவர்கள் அப்பனே நன்று!!!!

அப்படி இல்லையென்றால் அப்பனே நிச்சயம் சொல்லி விடுகின்றேன் இங்கிருந்தே!!!!

(குருநாதர் திடீரென்று வாக்குகளில் சினத்துடன் ஆரம்பித்தார் சுவடி ஓதும் மைந்தன் குரலும் உச்சத்தில் உயர்ந்தது!! முக பாவனைகளும் மாறியது !!!கிட்டத்தட்ட உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு சாபம்)


ஈசன் இடத்திலிருந்தே சொல்கின்றேன் அப்பனே !!!

நிச்சயம் அப்பனே எவை என்றும் அறிய அறிய கை கால்களில் நோய் வரும் அப்பனே!!!!

தொண்டையிலும் நோய் வரும் அப்பனே!!

பின் மூளையிலும் நோய் வரும் அப்பனே என்பேன் அப்பனே

கண்களில் கூட நோய் வரும் என்பேன் அப்பனே

ஆனாலும் அப்பனே இன்னும் சில மனிதர்கள் அனைத்தும் செய்து விட்டு கடைசியில் பின் அனைத்தும் யான் விட்டுவிட்டேன்!!!! இறைவனிடத்தில் சரணாகதி அடைந்து விட்டோம் என்று வருபவர்களும் உண்டு என்பேன் அப்பனே!!!

அவர்களுக்குத்தான் தண்டனை!!!!

அப்பனே அனைத்தும் செய்துவிட்டு அப்பனே இறைவனிடத்தில் வந்தால்!!!

இறைவன் என்ன ஆசிகள் கொடுத்து விடுவானா ???? என்ன ??????

அப்பனே நிச்சயம் இல்லை!!!!

மனிதனின் குணங்கள் சரியில்லையப்பா!!!! அவ்வாறு சரியில்லாத குணங்களை பின் சூரியனே வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பல வழிகளிலும் கூட அப்பனே நோய்களை ஏற்படுத்தி விடுவான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!

ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

அதனால் அப்பனே நீங்கள் விதைத்ததை நீங்கள் தான் அப்பனே அறுவடை செய்ய வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே.

===================================


19-12-2023 அன்று கந்தப்பெருமான் அழகன் முருகப்பெருமான் உரைத்த வாக்கு


அன்பின் எல்லையாக விளங்கும் என் தாயையும், என் தந்தையையும் பணிந்து வாக்குகள் ஈகின்றேன் குமரனவனே. 

உலகத்தின் அழிவுகள் மிஞ்சி காணப்படும் வருங்காலங்களில். 

அதனைக்கூட அதாவது என் தந்தையே அழிவுகள் ஏற்பட… ஏன் அழிவுகள்???? 

ஏன் அழிவுகள்??????????

என் தந்தையே அனைத்து உயிர்களையும் படைத்திருக்கும் போது, அவ் உயிரினத்தை எல்லாம் கொன்று குவித்து….

ஆனாலும் (ஆதி ஈசன் ) என் தந்தைக்குக் கோபங்கள். ஆனாலும் அதை நிறுத்த அகத்தியனும் கூட பொறுப்பாய், பொறுப்பாய் அப்பா என்றெல்லாம் என் தந்தையிடம் கூட …

அதனால்தான் யான் வந்து உந்தனுக்கு இப்போது செப்பிக் கொள்ள..

அதனால்தான் சித்தர்கள் இன்னும் வந்து வந்து அதனால் சித்தனுக்கே பிடிக்கவில்லை மனிதன் வாழ்வது எப்படி என்பதைக் கூட. 

( அசைவ உணவு தொடர்பாக பின் வரும் இந்த வாக்கு மிக மிக முக்கிய வாக்கு - உலகின் மீது ஆதி ஈசனின் கோபம் ஏன் என்ற வாக்கு


ஆனால் இப்பொழுது கூட அழிவுகள், அழிவுகள் என்றெல்லாம் கலியுகத்தில் ஏன் எதற்காக என்று மனிதன் சிறிதாவது சிந்தித்ததுண்டா???????

இல்லை. மனிதன் தான் காரணம் என்று அப்பொழுது எங்கு போய் விட்டது புத்திகள்????????

ஆனால் தன் படைத்த அதாவது என் தந்தை படைத்ததை…….

(பரிதாபமான வாய் பேச முடியாத , ஏதும் அறியாத அப்பாவி ஜீவராசிகள் - எத்தனை ஆடுகள் , கோடிக்கணக்கான கோழிகள், நல்லதை மட்டுமே செய்யும் பசுக்கள், நாட்டு மாடுகள், கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள், நண்டுகள், இன்னும் எத்தனை எத்தனையோ அப்பாவி ஜீவராசிகள். ஆதி ஈசனின் அன்பு செல்லக் குழந்தைகள் ஆன ஜீவராசிகளைக் கொன்று குவித்து, உண்டு….) 


மனிதன் எவை என்றும் அறியாது இது ஈசனுடைய சொத்து என்றெல்லாம் தெரியாமல் கொன்று குவித்திருக்கின்றானே…..

ஆனால் அதுவும் இவையும் இப்படி உணர்ந்து உணர்ந்து நிச்சயம் மனிதனுக்கு கொடுத்தாய் என்றால் நிச்சயம் இப்படித் திரிந்து விடுவான் என்று எண்ணலாமே. ஆனால் எண்ணுவதில்லையே…..

ஒரு உயிரைக் கொல்லக்கூடாது என்பதெல்லாம் சித்தர்கள் எடுத்துரைத்து, எடுத்துரைத்து ஆனாலும் அவ் உயிர்கூட என் தந்தைக்குத்தான் சொந்தம் என்று தெரியவில்லையே. 

பரவாயில்லை என்று போய் விடுகின்றான். 

ஆனால்…பரவாயில்லை என்று பின் சொல்லிவிடுகின்றானே , ( 19, December 2023ல படித்த வாக்கு) இப்பொழுது ( பரவாயில்லை என்று ) சொல்லச் சொல் பார்ப்போம் அழிவதற்குப்பின் பரவாயில்லை என்று. 

அப்பனே புரிந்து கொள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வினைகள் உண்டு என்பதைக் கூட. அதையும் சமநிலைப் படுத்த வேண்டும். 

இப்பொழுது கூட என் தந்தை ( ஈசன் ) மிகுந்த கோபத்தில் தான் உள்ளான் அழித்து விடவேண்டும் என்று கூறி. 

அதனால்தான் இன்னும் கூட தரம் தாழ்த்திச் சென்று கொண்டே இருக்கின்றான் மனிதன்.

மனிதனுக்குக் கொடுத்தாலும் அதை அழிவுக்குத்தான் பயன்படுத்துகின்றான் என்பதைக்கூட. ஏன் தெரியவில்லை. 

ஆனால் ஓர் அழிவு வந்தால்தான் நிச்சயம் பின் தேடித்தேடி.. அழிவுகள்..கஷ்டங்கள்…வந்து கொண்டே இருக்கும் !!!!!!!.


இன்னும் திருத்தலங்கள் நிரம்பி வழியுமப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

அப்பொழுது புரியும் யார் எங்கிருந்து செயல் படுகின்றார்கள் என்பதைக் கூட. 

ஆனாலும் புத்திகள்..புத்திகள் இன்னும் இன்னும் மனிதனுக்குத் தெரியவில்லையே.

எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் எப்படியப்பா யாங்கள் திருத்துவது?

ஆனாலும் இன்னும் மிதிக்கத்தான் போகின்றார்கள் பின் சித்தர்கள் கூட. 

அதனால்தான் பின் சித்தர்கள் யார் என்பதைக்கூடத் தெரியவில்லை. 

அதனால் புரிந்து புரிந்து உண்மைகள் பல வகையும் கூட அறிந்தும் கூட இதனால் நிச்சயமாய் நீ இருக்கும் இடத்தையும் கூட ( அசைவ உணவு அதிகம் உள்ள இடம்) என் தந்தை அழிவுக்கு இவ்தேசத்தை தாவி ஆனாலும் அழிக்க வேண்டும் என்று. 

ஆனாலும் அகத்தியனும்,  (ஈசா, தந்தையே) பொறும், பொறும் என்னால் முடியும் , முடியும் என்றெல்லாம். 

எம்முடைய ஆசிகள். (கந்தன் வாக்கு முற்றே!!!) 


=================================


#_அகத்தியர்_வாக்கு 

முட்டை சைவமா.! அசைவமா.?


மகான்களிடம் இஃகுதப்ப வினாவை வினவும்பொழுது யாம் மகான்கள் நிலையிலிருந்துதானப்பா கூற முடியும்.! பலமுறை இதுகுறித்து விளக்கி விட்டோம். இது தீண்டத்தகாத பொருள், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள். அஃகுதொடு மட்டுமல்லாமல் பாவத்தையும் சேர்க்கும். இதை விட்டுவிடுவது சிறப்பு. அதற்காக இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழும்போது அதை அனுசரித்துக் கொள்ள வேண்டியது அவனவன் கடமையாகும்.

சித்தர்கள் வழியில் வரவேண்டுமென்றால் கட்டாயம்

"ஜீவ காருண்யம்தான்" அடிப்படையாகும். இதற்காக விதண்டாவாதங்களில் இறங்கக் கூடாது. ஏனென்றால் ஒருவன் ஜீவ காருண்யமாக இருந்துவிட்டு வார்த்தைகளால் பிறரை காயப்படுத்திக் கொண்டிருந்தால் அதுவும் பலனில்லாமல் போய்விடும். எனவே யாராக இருந்தாலும் ஜீவகாருண்யம் அடிப்படையில் தேவை.


அசைவம் சாப்பிடுபவர்களில் பலர் ஜீவ காருண்யத்தோடு நடக்கிறார்கள். அவர்களுக்கு புண்ணிய பலன்கள் சேருமா.?


அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் தனித்தனியாக கணக்கீடு செய்துதான் இறைவன் பலனைத் தருவார். எனவே செய்கின்ற புண்ணியத்திற்கு தகுந்த பலன் உண்டு. செய்கின்ற பாவத்திற்கும் தகுந்த பலன் உண்டு. சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

ஒருவன் பெற்ற குழந்தைகளில் ஒன்று ஊமையாக இருந்தால், அதை பிறர் இடர் செய்தால் தாயும், தந்தையும் பொறுத்துக் கொள்வார்களா.? அஃகுதப்பத்தானே இறைவனின் படைப்பிலே மனிதனைப்போல் ஆற்றலோ, சிந்தனைகளோ இல்லாமல் படைக்கப்பட்ட எளிய உயிர்களை வாய் ருசிக்காகவும், பழக்கத்திற்காகவும், ஒரு மனிதன் சித்ரவதை செய்து கொன்று தின்றால் இறைவன் அருள் எப்படிக் கிட்டும்.? 

எனவே கூடுமானவரை எல்லா நல்ல குணங்களும் இருந்தாலும்கூட இஃகுதப்ப ஜீவகாருண்யத்தையும் சேர்த்து ஒரு மனிதன் கடைபிடித்தால் பரிபூரணமான இறைவன் அருள் கிடைக்கும். தாவரங்களை உண்பதே பாவம்தான், தெரியுமா..? இருந்தாலும் மனிதன் உயிர் வாழ்வதற்காக தவிர்க்க முடியாமல் உண்பதால், அந்த பாவத்தை இறைவன் அனுமதித்திருக்கிறார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். தாவரங்களின் மலர்களை, காய்களை, கனிகளை பறிக்கும்போதெல்லாம் மானசீகமாக அதனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, இறைவனிடமும் நன்றி சொல்லிவிட்டு,

"இந்த தாவரத்தின் வாழ்க்கையில் நாங்கள் எங்கள் சுயநலத்திற்காக குறுக்கிட்டு இவற்றை பயன்படுத்திக் கொள்கிறோம். இறைவா.!

எங்களை மன்னித்துவிடு, விருக்ஷமே.! என்னை மன்னித்துவிடு.!" என்று கூறிவிட்டு அதை பயன்படுத்துவதுதான் முறையாகும்.


 நன்றி சித்தர் அருட் குடில் .....


 ஓம் அகத்தீசாய நம🙏


===========================================


அகத்தியர் வாக்கு:

சைவம் என்ற ஒன்று கிடையாது என்று தாங்களே கூறியிருக்கிறீர்கள்.! இதற்கு என்ன பொருள்.? 


இறை வணங்கி கூறுகிறோம் அப்பா சில விருந்துகளில் அசைவம் என்றால்தான் 

 (மனிதர்கள்) அசைவோம் என்கிறார்கள். இல்லையென்றால் அசையமாட்டேன் என்கிறார்கள்.

இஃகுதப்ப கூறுவது என்னவென்றால் ஜீவகாருண்யம் தான். உயிர்க்கொலை மாபாதக செயல். ஒரு சிசு தாயின் பாலை அருந்துகிறது.

அது அசைவமில்லையா.? என்பதற்காகத்தான் அவ்வாறு கூறினோம். என்றாலும்கூட தெரிந்தே ஒரு உயிரை சுயலாபத்திற்காக சித்ரவதை செய்து கொன்று உண்பது மகாபாவம்.

இன்னொன்று தெரியுமா.? உயிர்க்கொலை செய்வதைவிட மகாபாவம், சிலர் சைவம் என்று கூறிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் இல்லங்களில் பசு மாடுகளை வளர்ப்பார்கள். கன்றுக்கு பாலையே ஊட்ட விடமாட்டார்கள். எத்தனை பெரிய பாவம் தெரியுமா அது.? கன்றை விருப்பம்போல் பால் குடிக்க விடுவதுதான் மிகப்பெரிய புண்ணியம். அதை செய்யாமல், தொடர்ந்து நாங்கள் சைவம், சைவம் என்று கூறிக்கொண்டிருந்தால், அவர்களை சைவமாக இறை ஏற்றுக்கொள்வதில்லை.?


இறையை வணங்குவதோ, சிவபஞ்சாக்ஷரம் கூறுவதோ, நெற்றி நிறைய திருநீறு அணிவதோ, பிரதோஷம் தோறும் ஆலயம் சென்று வழிபாடு செய்வதோ, சிவபுராணம், தேவார, திருவாசகம் ஓதுவதோ மட்டுமல்ல சைவம்.!

சைவம் என்றால் எண்ணத்தில் சைவம் வேண்டும், வாக்கில் சைவம்  வேண்டும், நடத்தையில் சைவம் வேண்டும், பேச்சிலே சைவம் வேண்டும், ஒவ்வொரு செயலிலும் சைவம் வேண்டும். சகலமும் சிவம் என்ற அர்த்தம்தான் சைவம். சகலமும் சிவம் என்றால் அனைத்தும் இறை. 

அனைத்தும் இறை என்றால் அந்த இறைக்கு யாரேனும் ஊறு செய்வார்களா.? செய்ய துணிவு வருமா.? 

அப்படித்தான் சகல ஜீவராசிகளையும் இறையாகப் பார்த்து அனைவரையும் மதித்து வணங்கவேண்டும். அவன்தான் சைவ(ம்)ன் .


==========================================


1/8/2022 அன்று ஆடிபூரம் தினத்தன்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபேதேசித்த இடத்திலிருந்து இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு.வாக்குரைத்த ஸ்தலம் ஜோதீஷர். குருஷேத்ரா ஹரியானா மாநிலம்.


ஒவ்வொரு கிரகத்திற்கும் இன்னும் என்னென்ன செப்ப வேண்டும் என்பதை கூட யான் எடுத்துரைக்கின்றேன்!!!

அதனால் நிச்சயம் அதன் வழியே செல்லுங்கள்!!!

யாரிடம் போட்டி பொறாமைகள் ,பிற உயிர்களைக் கொல்லுதல், இவையன்றி பிறரை குற்றம் சாட்டுதல்!!! இவையெல்லாம் நிச்சயம் பின் இருந்தால் சனியவன் பிடித்துக் கொண்டு உங்களை ஆட்டுவிப்பான்.

அதனால் எச்சரிக்கையாக இருங்கள் மௌனத்தை கடைபிடியுங்கள் எதையன்றி கூற!!!

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் எதை என்று அறிய!!!!

சந்திரன் எதை என்று கூற பலமாக எவையென்று கூற நிச்சயம் எவை என்று வருவதாகவே இருந்தாலும் நிச்சயம் கடக எதை என்று கூற எதை என்று பின் நண்டின் பின் ராசிகள்(கடகம், நண்டு) எவை என்று பெற்றவர்கள்(ராசிகளை உடையவர்கள்) எதை என்று அறிய நிச்சயம் மாமிசத்தை உண்ணக்கூடாது!!!!! சொல்லிவிட்டேன்!!

ஆனால் திரும்பவும் ஒன்றைச் சொல்கின்றேன்!!!

யார் ஒருவன் மாமிசத்தை பின் உண்டு வாழ்ந்து வருகின்றானோ அவந்தனுக்கு கிரகங்கள் நிச்சயமாய் தண்டனைகள் கொடுக்கும்!!!

அதனால் நல்ல நிலைகளில் இருந்தாலும் ஒன்றும் செய்யாது செப்பி விட்டேன்!!!!

இதை முதலில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!

அப்பொழுதுதான் மாற்றங்கள் ஏற்படும்!!!

அதனால் நன்றாக தின்றுவிட்டு தின்றுவிட்டு மாமிசத்தை பின் எதை என்று அறிந்து பின் கஷ்டங்கள் வருகின்றதே!!! வருகின்றதே!! 

கிரகங்களுக்கு பரிகாரங்கள் செய்தாலும் இரு மடங்கு தரித்தரங்கள் உங்களுக்கே சேரும் சொல்லிவிட்டேன்!!!

யான் அறிந்து சொல்கின்றேன் கிரகங்களிடமே யான் உரையாடினேன்!!!

எப்படி எதை என்று கூட அதனால் கிரகங்களே எந்தனுக்கு சொல்லியது!!! 

அதனை சிறிதளவு தான் உங்களுக்கு யான் சொல்கின்றேன்!!!

இன்னும் சொல்லச் சொல்ல சித்தர்கள் ஆசியோடு!!!
எவை என்று அருளோடு!!
பிரம்மாவின் அருளோடு!! ஈசனின் அருளோடு!!
பின் விஷ்ணுவின் அருளோடு!!!!
நிச்சயம் சொல்கின்றேன் இன்னும் பல வாக்குகளில்!!!!

அதனால் சிறிது சிறிதாக மாறுங்கள்!!! மாறினால் தான் நிச்சயம் விடிவெள்ளி உண்டு!!!

இதனால் எதை என்று கூட கிரகங்களுக்கு எவையன்றி கூற பின் பொய்யான மனிதர்கள் கிரகங்கள் அங்கு அமர்ந்தால் பலமில்லை இங்கு அமைந்தால் பலம் என்றெல்லாம் பொய் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

ஆனால் உண்மை நிலை மாமிசத்தை உண்டால் பின் எதை என்று அறியாமல் உண்ணக்கூடாது அப்படி நீ உண்ணாவிட்டால் நிச்சயம் அனைத்து கிரகங்களும் சக்தி மிகுந்தவைகளாக மாறிவிடும்.

எதை என்று அறிந்து அப்பொழுது பின் கிரகங்கள் நீச்சம் இருந்தாலும் எதை என்று சிறிது தாழ்வு இருந்தாலும் அவை உயர்வாக அனைத்து பலன்களையும் கொடுக்கும்.

அதை மீறி மாமிசங்களை தின்று தின்று பின் அனைத்து பின் எதை என்று கூற கறிகளையும் தின்று மென்று தின்றால் நிச்சயம் நீ அழிவது உறுதி!!!!

அனைத்து கிரகங்களும் எதை என்று கூற நீச்சம் என்று நினைத்துக் கொள்!!!
அப்படி என்றால் எப்படி உந்தனுக்கு கிரகங்கள் நன்மைகள் செய்யும்???? மனிதா!!!!!

புரிந்து கொண்டாயா!!!!

புரிந்து கொண்டு வாழ கற்றுக்கொள்!!!!

எதை என்றும் அறிந்து அறிந்து இதனை நீ நிச்சயம் புரிந்து கொண்டால் மனிதன் மனிதன்!!!

அப்படி இல்லை என்றால் நீ மனிதனே இல்லையப்பனே!!
எதை என்று அதனால் நிச்சயம் யோசித்துக் கொள்ளுங்கள்!!!

பின் பக்திமான் பக்திமான் என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி கொண்டிருப்பவர்களுக்கும் கிரகங்கள் என்ன செய்யும் என்பதை கூட அப்பொழுது யோசித்து கொள்ளுங்கள் நீங்கள் !!!

அதனால் தான் உண்மை சரியாக எதை என்று அறியாத உண்மை நிலையை புரிந்து புரிந்து புரிந்து செயல்பட்டாலே கிரகங்கள் உன் பின்னால் வரும்!!!! என்ன செய்ய வேண்டும் என்று காத்திருக்கும்!!!!

அதை மீறி எதை என்று அறியாமலே நிச்சயம் மாமிசத்தை உண்டு கொண்டு வந்தால் உன் முன்னே கிரகங்கள் சென்று அனைத்தையும் பாழாக்கிவிடும்!!!

இதை நிச்சயமாய் வரும் வரும் காலங்களில் மனிதனுக்கு ஏற்படுத்தும் கிரகங்கள்!!!!!

ஆனால் சில மனிதர்கள் சொல்வார்கள் அனைவரும் மாமிசத்தை உண்ணுகின்றார்களே அவர்கள் நன்றாகத்தான் இருக்கின்றார்கள் என்று கூட.....

ஆனால் அவன்  இல்லத்தில் சென்று பாருங்கள் என்னென்ன கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கின்றது ஆனால் மூடி மறைக்கின்றான் மனிதன் அவ்வளவுதான் சொல்லிவிட்டேன் எதை என்று அறிந்து!!!!

ஆனால் அவந்தனுக்கு எவ்வளவு பெரிய ஆபத்துக்கள் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் காத்திருக்கின்றது என்பதை கூட மனிதன் அறிவதில்லை!!!

ஆனால் எங்களைப் போன்ற சித்தர்கள் நிச்சயம் அறிவார்கள்!!! எதை எதை என்று அறிய!!!!

அதனால் நிச்சயம் அண்ணாமலையிலே யான் நிச்சயம் வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!!

பல மனிதர்களையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!!!

ஏதோ!!! வருவது !!!ஏதோ போவது !!!!ஏதோ கிரிவலம் வருவது?!! ஏதோ!!! இறைவனை வணங்குவது!!

அனைத்தும் கொன்று தின்றுவிட்டு வருகிறார்கள்!!!

மனிதர்களே!!! எப்படி?? அண்ணாமலையான்?? எப்படி கொடுப்பான்??

ஆனால் தூய உள்ளத்தோடு ஈசா!! ஈசா !!என்று நிச்சயம் வலம் வந்தால் தான் அனைத்தும் கொடுப்பான்!!!!

பின் பக்தி போல் நடிப்பது போல் வந்தாலும் ஒன்றும் செய்ய மாட்டான் கஷ்டத்தை தான் கொடுப்பான்!!!

இதை நிச்சயம் யான் ஓதுவேன்!!!!

இதை எங்கு வேண்டுமானாலும் யான் செப்புவேன்!!!!

அதனால் ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்றவாறு இன்னும் ஏற்றங்கள்!!!!

இதனால் நிச்சயம் பின் எவை என்று அறியாமலே பின் எவற்றினின்றும் பின் சூடு ஆனவன்(சூரியன்) சூடானவன் என்று கூட யான் சூரியனை குறிப்பிடுவேன்!!!!

எதை என்று அறியாமலே அவந்தன் பலமாக இருக்க வேண்டும்(ஜாதகத்தில் சூரிய திசை) இவ்வுலகத்தில் வாழக்கூடிய அளவிற்கு கூட அனைத்திற்கும் தகுந்தவன் அவன்!!! பின் எதை என்று இவந்தனின் ஆசிர்வாதங்கள் பெறுவதற்கு நிச்சயம் எதை என்று அறியாத அளவிற்கும் கூட பின் உண்டு எதை என்று!!!

அதனால் முதலில் மாமிசத்தை உட்கொள்ளக் கூடாது இவந்தனுக்கும் அதுதான் சிறந்தது என்று தோன்றும்!!!!

தோன்றும் என்பதனைப் பார்த்து பார்த்து மற்றவர்களை உதாசீனப்படுத்தி நீ வாழ்ந்தால் பின் நிச்சயம் சூரியனே பின் கெடுத்து விடுவான் சொல்லிவிட்டேன்!!!

அதனால் மற்றவர்களை நீங்கள் எப்பொழுது வாழ வைக்கின்றீர்களோ அப்பொழுது சூரியன் உன்னை வாழ வைப்பான் முன்னேற்றப்பட வைப்பான்!!!

அப்படி இல்லை என்றால் பொய் சொல்லி நடித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நிச்சயம் சூரியன் உதவிகள் செய்ய மாட்டான்!!!

இதை தன் பல பக்தர்களையும் யான் பார்த்துவிட்டேன்!!! 
ஏன் பல சித்தர்களை பல பக்தர்களை யான் பார்த்து விட்டேன்!!!

சித்தர்களை வணங்கி வணங்கி அனைத்தும் செய்து எவை என்று கூறாமலே பின் எதை என்று பின் அழகாக இறைவனை வணங்குகின்றான்!!! பின் உடனடியாக சென்று பின் மாமிசத்தை கறியை சமைத்து உண்ணுகின்றான்..... மனிதா!!!! நீ எல்லாம் ஒரு மனிதனா!!!!!!

யான் காறி துப்புவேன்!!!!

எதை என்று அறியாத ஒரு உயிருள்ள ஜீவ ராசியை உண்டு மகிழ்கின்றாயே!!!
நீ எதை என்று கூற நீ நன்றாக இருப்பாய் என்று எண்ணி கொண்டிருக்கின்றாயா???????? கூறு!!!!!!!

எதை என்று கூற கறியின் மீது ஆசைப்படுகின்றவனை யான் எதையெதையோ சொல்வேன்!!!! எதையெதையோ சொல்லி திட்டி தீர்ப்பேன்!!!!

காறியும் துப்புவேன்!!!! கீழான மனிதனே!!!!

இதையென்று அறிந்து அதனால் நிச்சயம் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடியுங்கள் கடைபிடியுங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்!!!

இதனால் இப்படி நீங்கள் கடைப்பிடித்தால் தான் நிச்சயம் யாங்கள் வந்து வாக்குகள் உரைப்போம்!!!

அப்படி இல்லை என்றால் கஷ்டத்தை படுங்கள் படுங்கள்!!!

யானே சாபம் விடுகின்றேன்!!!!!!! 

எதையென்று அறியாது ஏன்?? மனிதா!!!! உன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயே!!!! அதுபோல ஒவ்வொரு ஜீவராசியும் அப்படித்தானே நினைக்கும்!!!!!

எண்ணிக்கொள்!!!!

பின் அதாவது எதை என்று கூற ஒரு ஜீவராசியை கொன்று தான் நீ சந்தோசம் அடைய முடியும் என்றால் நீ எதற்கு?? மனித ஜாதியாக??.. எதற்கு ?நீ மனிதனாக பிறந்து விட்டாய்!!! பிறப்பும் எடுத்தாய் மற்றவர்களை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்றால் எதற்காக மனிதா மற்றவர்களை குறை சொல்லி தான் பிழைக்க வேண்டுமா!????

இதையென்று இவ்வாறு இவ்வாறு செய்து கொண்டிருப்பவர்கள் மனித ஜென்மங்களே இல்லை!!!!

அவர்களுக்கு நிச்சயம் சித்தர்கள் நிச்சயம் எப்பொழுதும் கூட உதவிகள் செய்ய மாட்டார்கள்!!!!

நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்!!!!

இதையென்று கூற இங்கே கீதை எதை என்று கூட பின் அர்ஜுனனுக்கு சரியான பாதையிலே எவ்வாறு என்பதையும் கூட கிருஷ்ணன் எடுத்துரைத்தான்!!!!

அதே போலத்தான் யான் மனிதனுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றேன்!!!

அதனால் நிச்சயம் திருந்தி கொள்ளுங்கள்!!!!

வரும் காலங்களில் மனிதா உன் நிலைமை எதை என்று அதனால் ஒன்றை கேட்கின்றேன்!!! உங்களை!!!

சிறுவயதிலிருந்தே எதை என்று அறியாமலே நீ என்ன பின் மாமிசத்தை உட்கொண்டாயா?? என்ன???

பல ஜீவராசிகளை பின் சமைத்து சமைத்து ஏனடா?? மனிதா!!! புத்திகெட்ட மனிதா !!அறிவு கெட்ட மனிதா!! காறித்துப்புவேன்!!

நிச்சயம் எதை என்று அறிய மற்ற ஜீவராசிகளை கொன்று கொன்று உட்கொள்பவர்களை நிச்சயம் யாங்கள் விடமாட்டோம்!!!
பல வழிகளிலும் சிக்கல்களை ஏற்படுத்துவோம்!!!

எதையென்று அறிய ஆனால் நிச்சயம் பின் அனைத்தும் வந்துவிடும் எதை என்று கூற அதனால் நிச்சயம் திருந்துங்கள்!! நல்வழிப்படுத்துங்கள்!!

எதை எதை என்று அறியாமலே அதனால் சில கிரகங்களின் பாதைகளையும் யான் காட்டினேன் என்னால் நிச்சயம் எதை என்று அறிய!!!!


==========================================


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!


No comments:

Post a Comment