மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Saturday, September 16, 2023

சித்தர்கள் ஆட்சி - 150 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 



அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

'திருத்தலத்திற்கு சென்றால் அப்பனே எதை என்று கூட ஏதாவது எடுத்துக்கொண்டு செல்க!!! அப்பனே!!!

( இனிப்புகள், உணவுப் பொருள்கள்)

தன்னால் முடியும் வரை அப்பனே!!! அப்படி இல்லை என்றால் ஏதாவது இனிப்பை கூட பின் யாராவது கேட்டால்!!!!.....

"""" இந்தா!!!! என்று கொடுத்து விடுங்கள் அப்பனே!!!!! 

அப்பனே!!!! இறைவன் எவ்ரூபத்திலும் வரலாம்!!!

எவ் ரூபத்தில் வருவான் என்று யாருக்கும் தெரியாதப்பா!!!!

""""இல்லை !! என்று சொல்லி விடாதீர்கள் என்பேன் அப்பனே!!!!! 

இல்லை!!! என்ற ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் அப்பனே நீயும் கூட அதாவது அப்படி        

அப்படியே ஆகட்டும்!!!!! என்று இறைவன் சொல்லிக்கொண்டே போய்விடுவான் அப்பனே. 

( நீ இல்லை !!! என்று சொன்னால் உனக்கும் எதுவும் இல்லை என்று இறைவன் சொல்லி விடுவார்)

No comments:

Post a Comment