“நமச்சிவாயா!!!!! அனைத்தும் நீ”
1/10/2021 பிரம்மமுகூர்த்தத்தில் காசி கங்கைகரையில் - உலகையாளும் பரமேஸ்வரன் பார்வதி தேவியின் கேள்விகளுக்கு உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: காசி. கங்கைகரை.
படைத்தல் காத்தல் அழித்தல் முத்தொழிலும் செய்யும் என் தேவனே மனதில் நன்றாக துதித்து சில கேள்விகளை நாட்டுகின்றேன் பார்வதி தேவி.
தேவனே இவ்வுலகத்தில் என்னென்ன இனியும் நடைபெறும்?
தேவியே பின் அநியாயங்கள் அக்கிரமங்கள் பித்தலாட்டங்கள் இன்னும் பலவகையான தரித்திரங்கள் எல்லாம் இனிவரும் காலங்களில் நடந்தேறும் என்பேன்.
தேவனே இதனையும் தடுக்க யாரிடம் சக்தி உள்ளது??
சொல்கின்றேன் தேவியே மனிதனிடத்தில் சக்திகள் இருக்கின்றது ஆனாலும் இதை உணரவே இல்லை மனிதன்.
மனிதன் பைத்தியக்காரனாகவே திரிந்து கொண்டிருக்கின்றான் இவ்வுலகில்.
இவ்வுலகில் என்று யான் எடுத்துச் சொல்வேன்.
மனிதனாலே அழிவுகள் வரும் என்பேன்.
இதனால் மனிதன் ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும் பொய் கூறாமை இருக்க வேண்டும் நன்மைகளை செய்ய வேண்டும் தானங்களைச் செய்ய வேண்டும் இவையெல்லாம் செய்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் மனிதன் பிழைப்பதற்கான வழிகள் என்பேன்.
தேவனே! ஏன் இன்னும் மனிதனின் செய்கைகள் மாறவில்லை??
சொல்கின்றேன் தேவியே!
சில மனிதர்கள் பணத்தை தேடி.
சில மனிதர்கள் பெண்ணை தேடி.
சில மனிதர்கள் எதை எதையோ தேடி தேடி இப்படியே அலைந்து திரிந்து அதனாலே அழிவுகள் பெற்று பின் கடைசியில் நமச்சிவாயா என்று என்னையே அழைக்கின்றனர் பின் இப்பொழுது இப்படி எல்லாம் மனிதன் செய்துவிட்டு பின் மனிதனே அழிவுகள் ஏற்படுத்திக்கொண்டு பின் திரும்பவும் என்னிடத்தில் வந்து விடுகின்றான்.
தேவாதி தேவனே!
நீயும் அவர்களுக்கு நன்மைகள் செய்யக்கூடாதா??
தேவியே!
ஆனாலும் யான் ஒவ்வொரு முறையும் பிரம்மாவிடம் எடுத்துச்சொல்லி பின் பிறப்பின் ரகசியத்தை கூறி பிறப்புக்களை நன்றாகவே படை என்று கூறிவிட்டு கூறிக்கொண்டே தான் ஆனாலும் இதனையும் மனிதன் உணர்வற்ற செயலுக்கு எடுத்துச்சென்று ஆனாலும் பிரம்மா மனிதனை நல் விதமாக படைத்துப் படைத்து தன் வேலையை சரியாக செய்து வருகின்றான் ஆனாலும் படைக்கும் பொழுது நல் முறைகள் ஆகவே இவ்வுலகத்தில் குழந்தை ஈன்றெடுத்து பின் குழந்தை நன்றாகத்தான் வளர்கின்றது வளர்கின்றது ஆனாலும் வயது ஆக ஆக சில கட்டுப்பாடுகள் இல்லாமல் வாழ்ந்து விடுகின்றனர் இதனால்தான் மனிதன் அழிந்து விடுகின்றான். ஏனெனில் யான் கூட துணை இருந்து கொண்டேதான் இருக்கின்றேன் ஆனாலும் இவன் செய்கைகள் இவனையே அழித்து நொறுக்குகின்றது என்பேன்.
தேவாதி தேவனே இன்னும் வரும் கால கட்டங்களில் இவ்வுலகத்தில் என்னென்ன நடக்கப் போகின்றது??
தேவியே
தாய் தந்தையரை தன் குழந்தை எவ்வித பேச்சையும் கேட்க போவதில்லை ஒழுக்கமற்று வாழ்வார்கள் ஒழுக்கமே அழிந்துபோகும் இவ்வுலகத்தில் வாழ்வோருக்கு துன்பங்கள் அதிகமாகும் ஆனாலும் இதை போக்குவதற்கு பலப்பல திருத்தலங்களும் உள்ளது. அங்கெல்லாம் சென்று தானதர்மங்கள் செய்தாலே போதுமானது.
தேவாதி தேவனே!! அத் திருத்தலங்களை பற்றி பற்றி எடுத்துரைக்குக !
சொல்கின்றேன் தேவியே!
முதலில் திருவாரூர் நன்கு செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது அங்கே தானங்களும் இட வேண்டும்.
ராமேஸ்வரத்திற்கு சென்று அங்கும் பல தானங்கள் செய்ய வேண்டும் பின் காசியிலும் கங்கையில் நீராடி அங்கே பல தானங்களும் செய்யவேண்டும் அண்ணாமலை என்று என்னுடைய பெயரை சொல்கின்றார்களே அங்கேயும் வலம் வந்து பல தானங்களை செய்ய வேண்டும். செய்ய வேண்டும் இதனையும் பல திருத்தலங்கள் உள்ளன அங்கெல்லாம் சென்று இயலாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே இக்கலியுகத்தில் மோட்சம் கிடைத்து நல் முறையாக நல் முறையாகவே மற்ற பிறவிகள் இல்லை. இல்லை தேவியே!.
தேவாதி தேவனே இங்கே எல்லாம் மனிதர்கள் செல்லப் போவது இல்லை ஏனென்றால் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு தான் மனிதர்கள் செல்வான் என்பேன்??
தேவியே செப்புகின்றேன்! மனிதனுக்கு கஷ்டங்கள் வருவது இயல்பே!
இதனால் கஷ்டங்கள் பட்டு பட்டு பின் இவைகளையெல்லாம் வணங்கி விட்டால் அவன் தனக்கு நேரடியாகவே யான் தரிசனம் கொடுப்பேன் கலியுகத்தில் நினைத்தாலே என் பெயரை நமச்சிவாயா என்று சொன்னாலே நிச்சயம் விடிவெள்ளி உண்டு உண்டு உண்டு.
தேவாதி தேவனே ஏன் உன் பெயரை பலமுறை மனிதர்கள் உச்சரித்து தான் கொண்டு வந்திருக்கின்றனர் ஆனாலும் நீ ஏன்?? அவ் மனிதர்களுக்கு கஷ்டங்கள் கொடுக்கின்றாய்??
தேவியே செப்புகின்றேன்!
மனிதன் நன்றாக வாழ வேண்டும் என்பதே எனது கடமையாகவே யான் செப்புகின்றேன். மனிதன் ஒழுங்காக வாழ்வது இல்லை திருட்டு பொய் களவு பொறாமை ஒழுக்கம் இல்லாமை இவையெல்லாம் செய்துகொண்டே நமச்சிவாயா என்று அழைக்கின்றான் இது தகுமா? அவந்தனக்கு !. அதனால் தான் எந்தனக்கும் கோபம் வருகின்றது தேவியே!.
தேவனே
படைக்கும் தொழில் பிரம்மா தொழிலையும் நல் முறைகள் ஆகவே அவன் தன் இஷ்டத்திற்கு படைத்துக் கொண்டே இருக்கின்றான் இவ்வுலகில், இதை எவ்வாறு தடுப்பது??
தேவியே இதனை தடுக்க முடியாது கர்மங்களுக்கு ஏற்பவே பிறந்துகொண்டே வந்து கொண்டிருக்கின்றான் அதனால் பின் பல சித்தர்கள் இவ்வுலகத்தில் தோன்றி புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய் என்றெல்லாம் மனிதர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். ஆனாலும் மனிதன் இப் பேச்சைக் கேட்பதே இல்லை இதனால்தான் பிரம்மாவிற்கும் இனிவரும் காலங்களில் படைப்புத் தொழில் அதிகமாக உள்ளது என்பேன் புண்ணியங்கள் புண்ணியங்கள் செய்க !செய்க! என்றெல்லாம் கூறி சித்தர்கள் இப்புவி உலகத்தில் உலாவந்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் மனிதன் திருந்தப் போவதாகவே இல்லை. அதனால் பிறப்பிற்கு காரணம் பிரம்மாவா?? தேவியே! மனிதன்தான் காரணம் என்பேன்.
தேவாதி தேவனே இவ்வளவு மனிதர்களுக்கு பார்த்தால் இன்னும்கூட துன்பங்கள் வந்து கொண்டிருக்கின்றது எவ்வாறு? நிறுத்துவது? அதை?
சொல்கின்றேன் தேவியே !
பணம் பணம் என்று மனிதன் போய்க் கொண்டிருக்கிறான் அதை முதலில் நிறுத்த வேண்டும் படைக்கும் முத்தொழிலின் அதிபதியாகிய யான் மனிதனுக்கு என்ன தேவை என்று என்னால் தீர்மானித்து கொடுக்க முடியும். ஆனால் மனிதனே நான் தான் இவ்வுலகத்தில் ராஜா என்று பின் சில மனிதர்கள் பணத்தை தேடி சில மனிதர்கள் பெண்களை தேடி சில மனிதர்கள் பல பலவற்றையும் தேடித்தேடி திரிகின்றனர் ஆனாலும் இவையெல்லாம் நியாயமா?
தேவாதி தேவனே!
ஆனாலும் மனிதனுக்கு ஆசைகள் இவற்றின் மேலே உள்ளது இவற்றின் மூலம் உள்ளது இதனை எவ்வாறு மாற்றி அமைப்பது???
தேவியே செப்புகின்றேன்!.
மனிதனின் தன்மைகள் மாற இவையெல்லாம் மாற்ற முடியாதது மாற்ற முடியாதது ஆனாலும் இறை சக்தியால் மாற்ற முடியும் மாற்ற முடியும்.
தியானங்கள், சிலசில திருத்தலங்களுக்குச் செல்லுதல், பலவகைகளில் பல வழிகளில் நன்மைகள் செய்தல், இவையெல்லாம் செய்துகொண்டு வந்தாலே போதுமானது. சீரும் சிறப்புமாகவே வாழலாம்.
மனிதனுக்கு புத்திகள் வரும் காலங்களில் பின் மிகவும் தாழ்வுடமையாகத்தான் இருக்கும்.
தேவாதி தேவனே எதனையும் இவ்வுலகத்தில் நடக்கும் என்கின்றானே?! மனிதன், மனிதன் சொல் பலிக்குமா???
தேவியே இவையெல்லாம் பலிக்காது என்பேன் என்னைவிட மீறிய சக்திகள் இவ்வுலகத்தில் எதுவும் இல்லை.
ஆனாலும் மனிதன் அவை செய்து தருகின்றேன் இவை எல்லாம் நடக்கும் அதெல்லாம் நடக்கும் என்று கூட தன் பொய் நாக்கினால் எடுத்துரைக்கின்றான். ஆனாலும் கடைசியில் கர்மா அவனையும் விட்டுப் போவதில்லை பின் நிற்கும்பொழுது இவனையும் சொல்பவனும் அழிந்துவிடுகின்றான் செய்பவனும் அழிந்து விடுகின்றான். இதனால் என்ன லாபம்??.
தேவாதி தேவனே இன்னும் இக்கலியுகத்தில் என்னென்ன நடக்கப் போகின்றது???
மனிதன் மனிதனையே அழித்து விடுவான் ஒழுக்கம் இல்லாமல் வாழ்வார்கள். சிறுவயதிலேயே கெட்டுப் போவார்கள் இறைவன் புத்திக்கு வரமாட்டான் தீய எண்ணங்களே புத்திக்கு வரும்.
தாய் தந்தையரை மதிக்கமாட்டார்கள். தாய் தந்தையர் சொற்களையே மீறுவார்கள்.
குரு சொல்வதையும் மீறுவார்கள். இறைவன் சொன்னதை எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஏன்? இக்கலியுகத்தில் நேரில் யான் சென்றாலும் நீயா ஈசன்? என்று நகைத்து விடுவார்கள்! தேவியே.
தேவாதி தேவனே இன்னும் நீ எப்படி இவ்வுலகத்தை காப்பாய்??
தேவியே சொல்கின்றேன் பல ஞானியர்களை யான் அனுப்பி வைத்தேன் . பல பலப்பல உண்மைகளை உண்மையான ஞானியர் களும் பிறந்தனர் ஆனாலும் அவர்களும் மனிதர்களுக்கு நல் முறைகள் ஆகவே பல சொற்களை எடுத்துரைத்தனர். ஆனாலும் மனிதன் திருந்துவதாக தெரியவில்லை. இன்னும் பல கஷ்டங்களில் மனிதர்களுக்கு கஷ்டங்கள் மிகுந்து காணப்படுகின்றது அவையெல்லாம் ஓட ஒன்றே பக்தி பக்திக்கு வந்தால்தான் இவையும் பிறந்து சிறந்து விளங்குவதோடு மனிதர்களுக்கு பெருமை சேர்க்க முடியும்.
தேவனே !
இனிவரும் காலங்களில் மனிதர்களை யார்? காப்பது?
சொல்கின்றேன் தேவியே!
முதலில் காப்பது அகத்தியனே!
அகத்தியனே என்பேன். பின் இதனை அறிந்து யான் அகத்தியனிடம் சென்றேன்.
அகத்தியனே! நீ ஓடோடிச் இவ்வுலகத்தை காத்துக் கொண்டிருக்கின்றாய்!
ஆனாலும் மனிதர்கள் உன் பெயரை சொல்லி ஏமாற்றி ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டு வந்திருக்கின்றார்களே.
ஏன் அவர்களுக்கு திரும்பவும் நீ நல்லதே செய்து கொண்டிருக்கின்றாய் என்று கேட்கும்போது!
அகத்தியன் ஒரே வார்த்தை சொல்லி விட்டான்
பிழைத்தால் பிழைக்கட்டும் என்று.
ஏன்? அப்படியாவது நன்றாக வாழட்டும் என்று.
யானும் கூறினேன் அகத்தியனிடம்.
இவை ஆனால் மனிதனக்குள் மனிதன்களுக்கு போட்டிகள் .
ஆனால் மனிதர்கள் சித்தர்கள் இடையே போட்டி போடுவது சரியா?
அதனால் அகத்தியனும் சொன்னான் அவந்தனக்கு கர்ம பலம் அதிகம் உள்ளது அதனால் தான் சித்தர்களிடமே போட்டிபோட்டு கொண்டிருக்கின்றான். இது அழிவிற்கு சமமானது.
ஆனாலும் என் கருணை மனம் பின் பிழைத்துக் கொள்ளட்டும் பிழைத்துக் கொள்ளட்டும் என்றே கூறுகின்றது. இவையும் சொல்லிவிட்டான் சித்தர்கள் வரும் காலங்களில் நல் வழி களாகவே எடுத்துரைப்பார்கள் மனிதர்களுக்கு. மனிதர்கள் வழியை பின்பற்ற வில்லை என்றால் பின் கஷ்டங்களை மிகுதியாக கொடுப்பார்கள். இப்பொழுதே தொடங்கிவிட்டான் அகத்தியன் மனிதர்களுக்கு கஷ்டங்களை கொடுப்பதற்கு.
ஏன் ?
அகத்தியன் அகத்தியன் என்று பெயரைச் சொல்லி ஏமாற்றுவதற்கா? பிழைப்பதற்கா?
சரி இன்னொரு கேள்வி கேள் தேவியே!
தேவாதி தேவனே! படைத்தல் தொழிலையும் காக்கும் தொழிலையும் அழித்தல் தொழிலையும் ஓர் ஒருவராக கூ நன்றாக செய்கின்றீர்களே ஆனாலும் ஏன்? உன்னை நம்பியவர்களுக்கு பல துன்பங்கள் வருகின்றது?
தேவியே இதனையும் யான் உரைத்தேன் முத்தொழிலுக்கும் நீயே சொன்னாய் யான் அதிபதி என்று என்னால் காக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் படைக்கவும் முடியும் ஆனால் அதற்கு தகுந்தார்போல் மனிதன் இருக்க வேண்டும். ஆனால் மனிதன் தன்மை இல்லையே? தேவி!.
தேவாதி தேவனே கலியுகத்தில் வரும் காலங்களில் என்னென்ன?? கஷ்டங்கள் நிகழப் போகின்றது??
சொல்கின்றேன் தேவியே மனிதனுக்கு தெரியாத நோய்கள் வரும்.
நோய்கள் வரும் அதனை சிறிது சிறிதாக தன் குடும்பத்திற்கே வரும் இவைபோன்றவை தான் கலியுகத்தில் வரும் என்பேன். மற்றவை ஆனாலும் கலியுகத்தில் எதனைத்தேடி? செல்கின்றோமோ!
அதனாலும் கவலைகள் வரும் என்பேன்.
பணத்தைத் தேடி சென்றால் அதன் மூலமே நிச்சயம் அழிவான்.
பெண்ணைத் தேடிச் சென்றால் அதன் மூலமே நிச்சயம் அழிவான்.
நிச்சயம் அழிவான் எதனை எதனையோ தேடி.
எதனை எதனையோ தேடித்தேடி இறைவனை தேடுவதில் மனிதன் தயங்கிவிடுகின்றானே !இதுதான் மனிதனுக்கு அழிவு.
தேவாதி தேவனே எப்படி எப்படி சிறுவயதிலேயே இறைவனை காண முடியும்??
தேவியே செப்புகின்றேன் . சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் தன் பிள்ளைகளை இறைவன் இருக்கின்றான் என்று வளர்க்க வேண்டும் வளர்க்க வேண்டும் என்பேன்.
சரி முறையாக ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டுமென்று ஊட்டி ஊட்டி வளர்க்க வேண்டும்.
உணவை ஊட்டுவதை விட ஒழுக்கத்தை ஊட்ட வேண்டும்.
ஏனென்றால் சிறுவயதிலிருந்தே ஒழுக்கம் தவறி வாழ்கின்றனர் இதனால்தான் அவந்தனை அவந்தனே அழித்துக் கொண்டிருக்கிறான்.
வரும் காலங்களில் ஏன் சிறுவயதிலேயே அழிந்து விடுவான் பின் அனைத்தும் இவ்வாறு நடந்து விட்டதே என்று இறைவனை நினைத்து என்னிடத்தில் வந்தால் யான் கூட எப்படி செய்வது??
தேவாதி தேவனே!
இவ்வளவு சொல்கிறாயே? ஏன்? அவந்தனை நீ மாற்றக் கூடாதா??
சொல்கின்றேன் தேவியே !
என்னால் மாற்ற இயலும் . ஆனாலும் சிறிது இவனை விட்டு விடுகின்றேன் இவன் என்ன செய்யப் போகிறான்? என்று!இவள் என்ன செய்ய போகிறாள் என்று!
ஆனாலும் ஒழுக்கத்திற்கு கீழாகவே கீழ் பிறவியாக வே இளைஞர்கள் நடந்து கொண்டு நடந்து கொண்டு பின் அழிவை அவர்களே தேடிக்கொண்டு தேடித்தேடி அலைந்து அழிந்து போகின்றார்கள்.
இதனால் யானும் மீட்டெடுக்க பின் மனதை மாற்றும் பொழுது கூட ஆனாலும் விடுவதில்லை ஏன் என்று கூட.
சரி போகட்டும் தேவனே! வரும் காலங்களில் என்ன செய்ய வேண்டும்?? மனிதன் சரியாக வாழ்வதற்கு??
தேவியே சொல்கின்றேன் கலிகாலம் முற்றிக் கொண்டே வருகின்றது அதனால் பொறாமைகள் போட்டிகள் மது மாது சூது இவையெல்லாம் செய்து கொண்டுதான் மனிதன் வாழ்வான்.
இறைவா என்பான் மறைமுகமாக போடா என்பான்.
இறைவனே நேரில் வரும்பொழுது நீயா இறைவன் என்று நகைப்பான்.
அதனால் தான் அகத்தியனும் மறைமுகமாகவே செயல்பட்டு கொண்டிருக்கின்றான்.
அனைவரும் இவ்வுலகத்தில் அகத்தியனை நேசிக்கும் அளவிற்கு அகத்தியனே மனம் திருப்பி விடுவான்.
ஆனாலும் அகத்தியனே நேரடியாக வந்து மனிதா!
யான் அகத்தியன் என்று சொன்னால் மனிதர்கள் நம்பிவிட மாட்டார்கள் .
ஏன் என்று தெரிந்து கொள் .
அப்பொழுது எதற்காக வணங்குகிறார்கள் என்று.
எல்லாம் வேஷம் தான்.
தேவாதி தேவனே! விடிவுகாலம்! இல்லையா? இவ்வுலகத்திற்கு?
தேவியே !
உண்டு என்பேன்.
பொய் கூறுதல் கூடாது .
தன் கஷ்டத்தால் வாழவேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். நன்றாக இருக்க வேண்டும். ஒழுக்கத்தில் சிறந்தவையாக இருக்க வேண்டும்.
சிறுவயதிலிருந்தே பக்தியை கடைப்பிடிக்க வேண்டும்.
என்னால் படைக்கப்பட்ட அனைத்து உயிரும் எந்தனக்கு சொந்தமானது.
அவையெல்லாம் பின் அவை தன்னில் அழிவை மனிதனால்
அதனை அழித்து விடக்கூடாது.
இவ்வாறே செய்து வந்தால் நிச்சயம் மாறும் நிலை.
தேவாதி தேவனே அதிகாலைப் பொழுதில் பல கேள்விகளை உன்னிடத்தில் யான் கேட்டு விட்டேன்.
ஒரு கேள்விக்கு விடை சொல்!
உலகம் மாறுமா? மாறாதா?
தேவியே !
நிச்சயம் மாறாது மனிதன் மாறினால்தான் மாறும்.
தேவாதி தேவனே!
அனைத்து செயல்களும் செய்கின்ற நீயே இவ்வாறு கூறலாமா??
தேவியே யானும் பலப்பல வழிகளில் மக்களுக்கு நன்மைகளை செய்ய துடிக்கின்றேன் ஆனாலும் மனிதன் அனைத்துமே தீய செய்கைகளால் செய்துவிட்டு திரும்பவும் என்னிடத்திலே வந்து என் பெயரையே உச்சரிக்கின்றான். நமச்சிவாயா நமச்சிவாயா என்று.!
எந்தனுக்கு கோபம் சற்று மிகுதியாகவே காணப்படுகின்றது.
தேவாதி தேவனே! கோபம் மனிதர்களுக்கு வருவதெல்லாம் எவ்வாறு??
செப்புகின்றேன் தேவியே!
ஒரு மனிதனுக்கு கோபம் வந்துவிட்டால் அவன் அனைத்திற்கும் அடிமையாவான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுதே கூறுகின்றேன்.
இதனை நிச்சயமாய் மனிதனுக்கு கோபம் வந்தால் அவன் அனைத்திற்கும் அடிமை என்பேன் தீய செயல்களுக்கும்.
இதனை நன்கு உணர்ந்து கொண்டால் சிறப்பு என்பேன்.
கண்டுபிடித்துவிடலாம் இவன் பொய்யானவனா? வேடதாரியா?என்று.
சித்தர்கள் பெயரைச் சொல்லி என் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் சிறுது அவனிடத்தில் சென்று பின் ஏதாவது அவனிடத்தில் பழகினால் அவனுக்கு எப்பொழுது கோபம் வந்துவிட்டதோ அங்கேயே ஆணவம் தாண்டவமாடும்.
தாண்டவமாடும் பொய் பித்தலாட்டங்கள் செய்கின்றான் என்பதை உணர்க.
என்னுடைய அடியார்களுக்கும் சித்தர்கள் அடியவர்களுக்கும் சித்தர், அகத்தியரை வணங்குபவர்களுக்கு கோபங்கள் நிச்சயம்
வரக்கூடாது வரக்கூடாது வரக்கூடாது என்பேன்.
அதை மீறி வந்தால் அவன் பொய்யானவனே.
தேவாதி தேவனே!
அகத்தியன் பாவம் புவி உலகத்தில் அலைந்துகொண்டு இருக்கின்றான்.
மனிதர்களை நம்பி! நம்பி நம்பி அகத்தியனும் நன்மை செய்யலாமே என்று எண்ணி எண்ணி எண்ணி புவி உலகத்தில் வலம் வந்து மக்களை காப்பாற்றி கொண்டிருக்கின்றான்.
தேவியே சொல்கின்றேன்.
அகத்தியனும் புவி உலகத்திலே நடமாடிக் கொண்டிருக்கும் பொழுது
அகத்தியனை கூட ஒரு விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் மனிதன்.
அகத்தியனை மட்டும் வணங்கவில்லை.
மந்திரம் தந்திரம் மாந்திரீகம் இவையெல்லாம் மனிதன் சென்று விட்டு அதன்மூலம் அழிவைத் தேடிக் கொண்டு கடைசியில் அகத்தியா என்று கூட வருகின்றனர்.
ஆனால் அகத்தியனே அங்கு சென்று மௌனத்தை காத்து விடுகின்றான்.
சொல்கின்றேன் தேவியே!
இவ்வுலகத்தில் என்னைவிட மீறிய சக்திகள்
இல்லை
இல்லை
இல்லை... அதனை விட்டுவிட்டு மற்றவைகளிடம் தேடிச் சென்றால்
அதன் மூலம் நிச்சயம் அழிவுகள் உண்டு. தேவியே.
தேவாதி தேவனே அனைத்திற்கும் விடை அளித்தாய் இன்னும் இன்னொன்று கேட்க போகின்றேன்
மனிதர்களுக்கு துன்பங்கள் எப்பொழுது வளராது??
சொல்கின்றேன் தேவியே
மனிதன் இதையும் தாண்டி ஒழுக்கமுடன் தியானங்கள் யாருக்கும் தீங்கு செய்யாமல் பிறர் துன்பத்தை தன் துன்பமாக எடுத்துக்கொண்டு அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளித்து கொண்டு முதலில் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்தால் சீரும் சிறப்புமாக வாழலாம்.
யான் நல் முறைகளாக படைத்தும் இப்போவே உலகத்திற்கு அனுப்பும் பொழுது மனிதனே தன் அழிவைத் தேடிக் கொண்டிருக்கையில்
எவ்வாறு நிச்சயம்?
ஆனாலும் யானும் கருணை உள்ளவன் தான்.
கருணை உள்ளம் கொண்டவன் தான். நமசிவாயா என்று என்னை அழைத்தாலே ஓடோடி வந்து விடுகின்றேன்.
அவனை மாற்றலாமா என்று எண்ணும் பொழுது அவன் பல தீய செய்கைகளை செய்து கொண்டு வருகின்றான் இதனால்தான் யானும் மௌனத்தை காக்க முடிகின்றது.
வரும் காலங்களில் மனிதன்தான் இவ்வுலகத்தை நிச்சயமாய் ஆட்சி செய்கின்ற எண்ணம் நிகழ்கின்றது. அதனை நிச்சயமாய் யானே தடுப்பேன் என்பேன்.
மனிதனுக்கு தன்னால் அனைத்து செய்ய முடியும் என்ற நிலைமை வந்துவிட்டது. அதனால் இன்னும் சில வழிகளில் கஷ்டங்கள் நிச்சயமாய் யான் கொடுக்க போகின்றேன். தெரிந்து கொள்ளுங்கள். இதனை பிரம்மா வும் தடுக்க முடியாது விஷ்ணுவும் தடுக்க முடியாது வேறு எவ் சக்தியாலும் தடுக்க முடியாது. முடியாது என்பேன் தேவியே எச்சரிக்கின்றேன் மனிதர்களை.
நல் முறையாக கடமைகளுடன் செயல்படுக.
தன் கடமைகளை ஒழுங்காக செய்க செய்து கொண்டே வந்தால் நலமாகும். அதைவிட்டுவிட்டு
வீணாக ஏமாற்றுதல், பித்தலாட்டம் ,
பிறரை கவருதல்.
பிறர் துன்பங்களுக்கு ஆளாகுதல். இவைகளெல்லாம் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் கஷ்டங்கள் ஏற்படுத்துவேன்.
என் மகன் அகத்தியன் பெயரைச்சொல்லி ஏமாற்றித்திரிபவர்களை யான் நிச்சயம் அழிப்பேன் அழிப்பேன்
அழிப்பேன்! பொய் பித்தலாட்ட மனிதர்களே திருந்துங்கள்.
திருந்தா விடில் யான் அழிப்பேன்.
இன்னும் சொல்கின்றேன் பின் அகத்தியன் பெயரைச்சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு நல் முறைகளாக யான் கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டே
வந்து கொண்டிருக்கிறேன்.
புத்திகெட்ட மனிதனே இன்னும் திருந்த வில்லையா
நிச்சயமாய் திருந்துங்கள் திருந்துங்கள் என்பேன்.
உங்களுக்கும் அனைத்தும் உண்டு ஏன்? அகத்தியன் பெயரைச் சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கின்றீர்கள்? ஏன் வேறு வேலைகள் உந்தனுக்கு இல்லையா??
ஏன் பொய் வேடதாரிகள் செய்து சித்தர்களை ஏமாற்றுகின்றீர்கள்?
இப்படியே செய்து கொண்டிருந்தால்
ஏன் இதனை கூட நம்ப மாட்டார்கள் அதனால் தான் உலகத்தை நம்பி நம்பி எவ்வாறு நின்ற பொழுதும் கூட எடுத்துரைக்கின்றது மனிதன் கடவுள் இல்லை என்ற நிலைமை க்கு கூட வந்து விடுகின்றான்.
ஏமாற்றாதீர்கள் இனிவரும் காலங்களில் அவ்வாறே செய்து கொண்டிருந்தால் நீயும் ஏமாறுவாய் மனிதர்களும் ஏமாற்றுவார்கள்.
ஒன்று சேருங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே விடிவெள்ளி உண்டு என்பேன்.
விடிவெள்ளி உண்டு என்பேன் இதனை விட்டுவிட்டு அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் இவ் மந்திரத்தைச் சொல்லி செய்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு செய்து கொண்டே இருந்தால் நீயும் அழிந்து போவாய். மற்றவர்களையும் அழிந்துபோக அழைத்துச் செல்வாய். இதனால் பொய்யாகும் கடமைகள்.
உன் கடமையை நீ சரியாக செய். யான் யானே என் கடமையை சரியாக செய்கின்றேன்.
மனிதனை வேண்டாம் இனிமேலும் பொய் பித்தலாட்டங்கள் பொறாமைகள் பொறாமைகள் நின்ற கோலத்தில் நின்ற கோலங்கள் கூட இதனால் மனிதன் தன்னையே ஈசனையே பொய் என்று கூட கூறுகின்றான். ஆனால் இதற்கெல்லாம் காரணம் மனிதனே அதனால் தான் இன்னும் சில கஷ்டங்களை யான் நிச்சயமாய் மனிதர்களுக்கு கொடுப்பேன் யான்.
அதனையும் மனிதனால் தீர்த்துக் கொள்ள முடியாது என்பேன்.
இவ்வாறே செய்துகொண்டிருந்தால் அனைத்தும் அனைத்து திருத்தலங்களும் அழிந்து போகும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது.
இதற்கெல்லாம் யார் காரணம் என்றால் மனிதனே.
பைத்தியக்கார மனிதனே திருந்திக்கொள்.
தேவனே! தேவனே! கோபம் கொள்ளாதே சற்று பொறுத்திரு !
தேவியே கோபப்படவில்லை
மனிதன் எப்படி இறைவனே கீழ்நோக்கி விழும்படி செய்து விட்டான். இதற்கு யார்? காரணம்?
இனி மேலும் சில அழிவுகளை ஏற்படுத்தி தான் மனிதனைத் திருத்தி வைக்க வேண்டும் அவ் அழிவின் மூலமே நன்றாக வழி காட்டுவேன்.
மற்றவை எல்லாம் வீண்.
நன்மைகளாக செய்துகொண்டு மனிதனுக்கு வழி விட்டால்
இறைவன் பொய்யென்று அதனால்தான் இன்னும் என்னுடைய திருத்தலங்கள் அழிந்து போய்க் கொண்டிருக்கின்றது.
வரும் காலங்களில் அழியும் மக்களால் மட்டுமே.
இதனால் கஷ்டங்கள் நிச்சயம் கொடுப்பேன் பல மாற்றங்கள் ஏற்படுத்துவேன் சித்தர்களாலும் சித்தர்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் யான் சொல்லிவிட்டேன். அனைத்தும் மாறும். இவ்வுலகத்தை ஆட்சி செய்வான் இவ்தேசத்தை புண்ணிய தேசத்தை ஒரு புண்ணியவானே வரும் சில ஆண்டுகளில் ஆன்மிக பூமியாக மாற்றுவதற்கு யானே ஏற்பாடு செய்கின்றேன்.
தேவாதி தேவனே நல் முறைகளாக கோபங்கள் உந்தனுக்கும் தாண்டவமாடி விட்டது.
கேள்விகளை நிறுத்தி வைக்கின்றேன்.
தேவியே போதும் இன்னும் வாக்குகள் மறுமுறையும் செப்புகின்றேன்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment