“இறைவா!!! அனைத்தும் நீ”
அழகன் கந்தன் வாக்கு (19-12-2023):-
ஒரு கருவியை நினைத்துக் கொள். கருவியை வைத்து விடுகின்றான். ஆனாலும் பின் அதை இயக்கும் சக்தி உன்னிடத்தில்தான் இருக்கின்றது. அதே போலத்தான் (இறைவன்) மனிதனைப் படைத்து விடுகின்றான். ஆனாலும் அதனை இயக்கும் சக்தி இறைவனிடத்தில் இருக்கின்றது என்பது சரியாக எவன் ஒருவன் உணர்ந்து விடுகின்றானோ, அப்பொழுது அவன்தன் புண்ணியப்பாதையில் செல்கின்றான்.
பின் அப்படி இல்லை என்றால் யான் அதைச் செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்று இறைவனுக்கு, எங்களுக்கு…யான் தான் அனைவருக்கும் நன்மை செய்யவேண்டுமே தவிர எங்களுக்கு ஏன் செய்ய வேண்டும் என்று… அதாவது இறைவனுக்கு ஏன் செய்ய வேண்டும் என்பதைக்கூட அறிந்தும் கூட சிந்தித்ததுண்டா மனிதன்? ஆனால் சிந்திப்பதில்லை மகனே கேள்.
( விளக்கம் :- இறைவன்தான் மனிதனுக்கு அனைத்தும் கொடுக்க வேண்டுமே தவிர, மனிதன் முட்டாள்தனமாக இறைவனுக்கு அதைச் செய்கின்றேன், இதைச் செய்கின்றேன் என்று புரியாமல் அனைத்தும் செய்கின்றான். இது ஆணவத்தை விலைக்கு வாங்கும் செயல். இறைவன்தான் அனைத்திற்கும் காரணம் என்றால் அவ் மனிதனிடம் ஜீவகாருண்யம் தலை தூக்கி அவனிடம் கருணையுடன் அரசாளும் என்பதை உணர்க.)
இவ் சிந்திப்பு இல்லை என்றால் என்ன கொடுத்தாலும் புரயோஜனம் இல்லை. இறைவன் தான் அனைத்திற்கும் காரணம் என்பதை எல்லாம்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment