மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, December 26, 2023

சித்தர்கள் ஆட்சி - 264 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - “எப்போது துன்பமே இல்லாத வாழ்க்கை கிடைக்கும்?”


 


“இறைவா!!! அனைத்தும் நீ”

உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

ஆன்மாவுக்குத் தெரியுமப்பா. ஆன்மாவுக்குத் தெரியும். 

அப்பனே சட்டிதானப்பா உடம்பு.  அப்பனே எதை என்று அறிய அறிய அவ் சட்டிதனில் அப்பனே பின் உயிர் அதாவது ஆன்மா அப்பனே உள் நுளைந்து விடுகின்றது அப்பனே. 

அவ் சட்டி எதை என்று அறிய அறிய அப்பனே சிறிது காலமே அப்பனே. பின் ஆன்மா பின் வெளியேறிவிட்டால் அவ்சட்டியும் உடைந்து விடும்.

இதுதான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே மீண்டும் அவ் ஆன்மா சட்டியைத் தேடும் , மற்றொரு சட்டியை. 

அப்பனே இதற்காக மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே. 

அப்பனே, மனிதன் வாழ்வது எதற்காக அப்பனே? புரிகின்றதா? சாவதற்காகவே என்பேன் அப்பனே. 

அவை, இவை என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்கின்றான் அப்பனே. ஆனால் சாகிகின்றோம் என்று எண்ணவில்லையே மனிதன்!!! அப்பனே

அப்படி எண்ணிவிட்டால் அப்பனே துன்பமே கிடையாதப்பா!!!

சொல்லி விட்டேன் அப்பனே!!!!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!



No comments:

Post a Comment