மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, September 28, 2023

சித்தர்கள் ஆட்சி - 163 : அகத்திய பிரம்ம ரிஷி காசி வாக்கு

 



நம் குருநாதர் அகத்திய பெருமான் இன்று காசியில் இருந்து மஹாளய பட்சத்தில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று வாக்குகளில் தெரிவித்து இருக்கின்றார். இதை அனைவரும் கடைப்பிடித்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன். அகத்தியன்!!!!

அப்பனே நலன்கள் ஆசிகள்!!!

இவ் மாதத்தில் அப்பனே வளிமண்டலத்தில் இருந்து  அணுக்களானது புவியை நோக்கி வரும் எதை என்று கூற அதாவது  அவ்அணுக்களானது என்பது அப்பனே ஆன்மாக்கள் என்பேன் அப்பனே!!!!

முக்தி பெறாத ஆத்மாக்கள் இவ் மாதத்தில் வளிமண்டலத்தில் இருந்து தானாக உதிர்ந்து புவியை நோக்கி வரும் அப்பனே. இவ் அணுக்கள் அதாவது ஆன்மாக்கள் அதிகம் ராமேஸ்வரத்தில் விழும் என்பேன் அப்பனே !!!

ஆன்மாக்களை ஈர்க்கும் சக்தி அதிக அளவில் ராமேஸ்வரத்தில் அப்பனே அதனால்தான் அப்பனே இராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு என்பேன் அப்பனே!!!

இவ் மாதத்தில் கங்கை காவேரி தாமிரபரணி நர்மதா கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் அப்பனே

இவ் ஆன்மாக்களை மீண்டும் இங்கிருந்து அதாவது புவிலிருந்து அப்பனே மீண்டும் மேல் நோக்கி அனுப்ப வேண்டும் அப்பனே இல்லையென்றால் அவ் ஆன்மாக்கள் மீண்டும் பிறவி எடுத்து விடும்!!!!

இப்படி மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் அப்பனே!!!

அவ் ஆன்மாக்கள் மீண்டும் பிறவி தனை எடுக்கக் கூடாது என்பேன் அப்பனே !!!

அதாவது ஆன்மாக்களுக்கு புவியில் தங்க நேரிட்டால் அப்பனே மனித உடலில் இழுத்துக் கொள்ளும் அப்பனே அதனால் பல கஷ்டங்களும் நோய்களும் ஏற்படும் அப்பனே!!!!! அவ்ஆன்மாக்களை நல்முறையாக மேலே செலுத்த இவ் மகாளய பக்ஷத்திலிருந்து கோமாதாக்களுக்கு அகத்திக்கீரை வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளிப்பது ஏதாவது அவர்களுக்கு உணவளித்து வந்தால் அப்பனே அவ் ஆன்மாக்கள் அமைதி பெறும் அப்பனே. இயலாதவர்களுக்கு அன்னத்தையும் வாயில்லா ஜீவராசிகளுக்கு அன்னம் மற்றும் நீர் வழங்கிடுதல் வேண்டும் அப்பனே.

இவைதன் மகாளய பக்ஷ காலங்களில் தொடங்கி அமாவாசை வரை செய்திட்டு அப்பனே அமாவாசை பின் மூன்றாம் பிறை வரை செய்து மூன்றாம் பிறை தரிசனம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!

இப்படி என் பக்தர்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!

இவ் கன்னி (புரட்டாசி) திங்களில்தான் இவ் அணுக்கள் அதாவது ஆன்மாக்கள் பெரும்வாரியாக புவியை நோக்கி வரும் புவியில் இருக்கும் வாயில்லா ஜீவராசிகள் அணுக்களை ஈர்த்துக் கொள்ளும் அப்பனே அதனால் தான் அப்பனே உயிரை கொன்று தின்றால் அணுக்கள் மனிதர்கள் உடலில் உடனடியாக ஈர்த்துக் கொள்ளும் கஷ்டங்களும் நோய்களும் அதிகப்படியாக வந்து சேரும் அப்பனே.

இதனால்தான் அப்பனே எந்த ஒரு உயிரையும் கொன்று தின்றலாகாது என்பேன் அப்பனே!!! இதனால் பெரும் துன்பங்களும் நோய்களும் கஷ்டங்களும் வந்து சேருமப்பா!!!!

இவ் மாதத்தில் தான் காக்கும் கடவுளான விஷ்ணுவை வழிபடுவது எதற்கென்றால் அப்பனே காக்கும் கடவுள் பெருமான் விஷ்ணு இவ் ஆன்மாக்களை முக்தி பெற செய்வான் அப்பனே. அவ் ஆன்மாக்கள் இப்புவியில் தங்கக்கூடாது என்பேன் அப்பனே!!!! பெருமான் ஆன்மாக்களை மேலே அனுப்பி விடுவான் அப்பனே!!!! ஆன்மாக்களுக்கு நல்ல முறையாக உதவி செய்வான் அப்பனே!!!

முக்தி பெறாத ஆத்மாக்கள் தன் பந்தங்களை தேடி இவ் மாதத்தில் தான் புவியை நோக்கி வரும் அப்பனே அவை மனித உடலில் சேரக்கூடாது என்பேன் அப்பனே!!!!! அவை சேராத படி அவற்றிற்கு முக்தியை அளிக்க வேண்டும் என்பேன் அப்பனே இதற்கு பெருமான் உதவிடுவான் என்பேன். அப்பனே.

இவ் மாதத்தில் பெருமானை யான் உரைத்தபடி நல்படியாக வணங்கிட்டு யான் கூறியவற்றை செய்து வந்தாலே போதுமானது என்பேன் அப்பனே!!!!

இதனைப் பற்றி இன்னும் மார்கழி திங்களிலும் விரிவாக வாக்குரைப்பேன் அப்பனே!!!

பெருமானை இவ் மாதத்தில் நல் முறையாக  விரதம் இருந்து அப்பனே ஏற்கனவே விரதம் எப்படி இருப்பது என்பதை பற்றி உரைத்திருக்கின்றேன் அப்பனே!!!! 

அப்பனே விரதம் என்றால் என்ன எப்படி கடைப்பிடிப்பது என்பதை பற்றியும் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே

அதன்படி எந்த உயிரையும் கொல்லாமல் கொன்று புசிக்காமல் ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்து வரவேண்டும் அப்பனே!!!!

இவ் மாதத்தில் அசைவ உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு உடனடியாக அந்த அணுக்கள் ஆனது ஈர்த்துக் கொள்ளும் அப்பனே இதனால் பல கஷ்டங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே அத்துகளானது மனித உடலில் ஒட்டிக் கொள்ளும் என்பேன். அப்பனே!!!! அப்படி உடலில் ஒட்டிக் கொண்டால் பல நோய்களும் கஷ்டங்களும் வரும்ப்பா!!!

அணுக்களை வாயில்லா ஜீவராசிகள் அதிகப்படியாக ஈர்த்துக் கொள்ளும் அப்பனே அப்படி ஜீவராசிகளை கொன்று சமைத்து உண்டால் அணுக்கள் எளிதில் மனித உடலில் ஒட்டிக் கொள்ளும் என்பேன் அப்பனே.

அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே எந்த ஒரு உயிரையும் கொன்று தின்றால் மிகப்பெரிய பாவம் வந்து சேரும்!!!! இதனால் பிறவி எடுத்த பிறவி எடுத்து கஷ்டங்களை பட்டு துன்பங்கள் அடைந்து நிம்மதி இல்லாத நோய்களோடு கஷ்டங்களும் சேர்ந்த பிறவியாகவே போய்விடும் அப்பனே!!

இவ் மகாளய பட்ச காலங்களில் புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் அப்பனே.

கலியுகத்தில் அப்பனே அதிகப்படியான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் கஷ்டங்களும் வருமப்பா!!!!

யான் கூறியதை என் பக்தர்கள் அனைவரும் செய்ய வேண்டும் அப்பனே இப்படி செய்தால் அவர்களுடைய சந்ததியினர் நல்ல முறையில் வாழ்வார்கள் அப்பா!!

இதனைப் பற்றி அறிவியல் ரீதியாகவும் அறிவியல் வழியாகவும் வாக்குகளாக எடுத்துரைப்பேன் அப்பனே!!!

என் பக்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

பிறப்பினை வீணாக்கக்கூடாது என்பேன் அப்பனே அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் அறிந்து நடந்து கொள்ள வேண்டும் அப்பனே நீங்கள் யான் கூறியவற்றை அப்படியே கடைப்பிடித்து வந்தால் அப்பனே இறைவனை யான் காட்டுவேன் அப்பனே!!!

அப்பனே தெரியாமல் வாழ்ந்து வந்தால் அப்பனே மீண்டும் பிறப்பு எடுத்து பிறப்பு எடுத்து!!!! அப்பனே எதற்கப்பா??? பிறவிகள் அப்பனே!!!!

பிறவிகளே வேண்டாம் என்பேன் அப்பனே என் வழியில் வருபவர்களுக்கு யான் நல்முறையாக வழிதனை காட்டி என் வழியில் வருபவர்களுக்கு முக்தியையும் மோட்சத்தையும் அளித்து இறைவனையும் காண வைப்பேன் அப்பனே!!!!


என் பக்தர்கள் அனைவரும் யான் கூறியதை செய்து வர வேண்டும் அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் இங்கிருந்தே!!!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

No comments:

Post a Comment