மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Sunday, September 17, 2023

சித்தர்கள் ஆட்சி - 155 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 



அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

அளவு பார்க்காமல், நாள் பார்க்காமல், திதி பார்க்காமல், நாழிகை பார்க்காமல், இரவு பகல் பார்க்காமல் பிறர் குறிப்பறிந்து தந்து கொண்டே இருக்கவேண்டும். அது(வே) சித்தர்கள் வழி. எது அளவில் உயர்வோ அதை முதலில் தருவது சித்தர்கள் வழி. அதைப்போல் மனதிலே அணுஅளவும் எவ்வித தடுமாற்றமில்லாமல் கொடுப்பதும், கொடுக்கின்ற தருணத்திலே இந்த அளவா? அந்த அளவா? என்ற எண்ண அலைகளின் ஏற்ற இறக்கம் இல்லாமல் கொடுப்பதும் சித்தர்கள் வழியில் வருபவர்களின் தன்மையாகும். சற்றும் அஞ்சறக்க. சலனம் வேண்டாம். இஃதொப்ப எதிர் காலத்தில் இன்னும் செய்ய செய்ய அஃதொப்ப நிலையை இறைவன் நல்குவார், அருள்வார் என்று எண்ணி தொடர்ந்து சராசரி மனித சிந்தனையிலிருந்து விடுபட்டு எமது வழியில் வருகின்ற சிந்தனையை வளர்த்துக்கொள்ள அனைவருக்கும் நண்மையாம்.

No comments:

Post a Comment