“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, September 30, 2023

சித்தர்கள் ஆட்சி - 165 : கர்ம வட்டம், எல்லை இல்லா புண்ணியம்

 



ஓம் அன்னை லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்.. 

Friday, September 29, 2023

சித்தர்கள் ஆட்சி - 164 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு



அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 
(மதுரையில் அன்னதான சேவை செய்யும் அடியவர் இல்லத்தில் உரைத்த நாடி வாக்கில் உள்ள பொது வாக்கு மட்டும்)

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.


அப்பனே, அம்மையே எம்முடைய ஆசிகள் நலங்களாக கூடிக்கொண்டு போகும். போகும் என்பேன் ஆனாலும் சில சில வருத்தங்கள் மனக்குழப்பங்கள் ஆனாலும் இவை எல்லாம் வருவது இயல்பே. இவை எல்லாம் தாண்டி சென்றால் தான் நிச்சயம் பல வழிகளில் கூட உண்மை நிலைகளை பின் அறிந்து அறிந்து அதாவது உண்மை நிலையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் சிறிது அளவாவது நிச்சயம் பின் அதாவது இறைவன் கஷ்டங்கள் கொடுக்காவிடிலும் கூட நிச்சயம் பின் உண்மை நிலையை அதாவது ஞான வழியை நிச்சயம் பின்பற்றல் ஆகாது.

இதனால்தான் நிச்சயம் யானே இருக்கின்றேன். அதனால்தான் வாக்குகள் எப்பேர்பட்ட அதாவது எப்படி பின் கொடுக்க வேண்டும் என்பவை எல்லாம் யான் உணர்ந்திருக்கின்றேன். அதனால்தான் எவை என்றும் அறியாமலே எப்பொழுது எதை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் யான்கூட எவை என்று அறிய அறிய நீங்கள் அனைவருமே ஏதாவது ஒரு பின் விதத்தில் உண்மைகள் அதாவது புரிந்து உதவிகள் அங்கும் யான் இருந்து உங்கள் பக்கத்திலேயே கவணித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இதனால் யான் உங்களுக்கு என்ன கூறுவது? நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அதனால்தான், சில சில வழிகளில் கூட உண்மை நிலைகள் இன்னும் இன்னும் செல்லச்செல்ல சில சில வழிகளில் கூட கஷ்டங்களை கொடுத்தாகினும் நிச்சயம் எப்படி இருக்கின்றார்கள் என்பதை எல்லாம் பக்குவப்படுத்தவே யான் சில சோதனைகளும் செய்தாலும் நிச்சயம் எளிதில் அனைத்தும் கொடுத்து விடுவேன். கவலைகள் இல்லை. ஆனாலும் விதியில் போராட்டங்களும் அறிந்தும் மாறி மாறி வருவது இயல்பு.

அவை எல்லாம் நிச்சயம் மாற்றி அமைத்து மாற்றி அமைத்து பக்குவப்படுத்தி அழைத்து சென்று கொண்டேதான் இருக்கின்றேன். இதனால் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.

ஆசிகள் என்பதைவிட எதை என்றும் பொறுத்துப் பொறுத்து அதனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்தைக்கூட யான் அருகில் இருந்து கவனித்துக்கொண்டேதான் இருக்கின்றேன். நிச்சயம் அதனால்தான் அறிந்தும் கூட என் பக்கத்திலேயே இருப்பவர்களைக்கூட யான் கவனித்துக் கொள்ளமாட்டேனா ? என்ன? பின் அவ்நம்பிக்கை உங்களுக்கு இல்லையே…… (நீங்கள் வேண்டி) கேட்டால்தான் யான் சொல்வதா? எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் நீங்கள் கேட்டு பெறத்தேவையே இல்லை.

எதை என்றும் அறிய அறிய எப்பொழுது எங்கு செப்ப வேண்டும்? எதனை செப்ப வேண்டும்? என்பவை எல்லாம் யான் நிச்சயம் வாக்குகளாக ஏன்? எதற்காக இப்பிறவிகள் எல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் அறியாமலும் வந்து விட்டீர்கள். இதனால் நிச்சயம் இப்பிறவியின் ரகசியத்தை எல்லாம் ஓர் நாள் உரைப்பேன். கவலைகள் இல்லை. பின் அனைத்து குருமார்களின் ஆசிகளையும் கூட உங்களுக்கு பெற்றுத் தந்தேதான் கொண்டிருக்கின்றேன்.

ஆனாலும் அறிந்தும் இருப்பினும் சில சில வினைகள் ஆனாலும் மனிதனாக பிறந்து விட்டாலே சில வினைகள் ஏன்? எதற்காக ? என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் ஏதோ ஒர் ரூபத்தில் மனிதனை பின் கவலைகள் (தொற்றிக்) கொள்ளும். ஆனாலும் அதைக்கூட யான் பாரத்திருக்கின்றேன் உங்கள் அருகில் இருந்து. ஆனாலும் அதைக்கூட மறுகணமே நீக்கி உள்ளேன். ஆனாலும் இதனால் பின் எவர்? எப்பேர்பட்டவர்கள்? எதை என்று அறிய அறிய இன்னும் பேச்சுக்கள் இவை எல்லாம் வந்த வண்ணம் (இருக்கும்).

ஏனென்றால் நிச்சயம் உலகத்தில் அறிந்தும் அறியாமலும் கூட பிறந்து விட்டு ஆனால் எப்படி எப்படி எல்லாம் வாழந்தாலும் மனிதனின் பேச்சுக்கள் நிச்சயம் எடுபடாது மனிதன் ஏதோ ஒன்றை குறை கூறியே் சென்று் கொண்டிருப்பான். இதுதான் இவ்வுலகம்.

அவை எல்லாம் நிச்சயம் சாதித்து பின் இருக்கின்றான் அகத்தியன் என்றெல்லாம் நிச்சயம் இறைவன் இருக்கின்றான் என்பவை பின் நம்பி பின் நம் தன் அதாவது கடமையை சரியாக செய்து வந்தால் இதைத்தான் யான் செய்வேன் யார் எதைச்சொன்னாலும், ஆம்

எதை என்று அறிந்து பின் இறைவன் இருக்கின்றான். எந்தனுக்கு பக்க பலமாக இருக்கின்றான். நான் தர்மத்தைத்தான் கடை பிடிக்கின்றேன். இதனால் நல்லதாகவேதான் நடக்கும் என்று யார் ஒருவன் மனதில் எண்ணி, எண்ணி தனக்கு போராட்டங்கள் வந்தாலும் சென்று கொண்டிருக்கின்றானோ அவன் தனக்கு இறைவனே வழிகள் காட்டுவான்.

தர்மத்தின் பின் வழிகள் செல்லச் செல்ல ஆனாலும் குழப்பங்களும் போராட்டங்களும் வரும். இது இயல்பே. அவை எல்லாம் தட்டிச் சென்று பின் எவை என்று அறிய அறிய பின் அதாவது பின் ஆறு. ஆறிலே ஆறு எதை என்று அறிய அறிய அதாவது நீர் சரியாக போய்க்கொண்டே இருக்கும். எத்தடைகள் வந்தாலும் பின் அடித்து நொறுக்கிச் செல்லும். அது போலத்தான் பின் தர்மம் செய்யும் பொழுது பின் பல தடங்கல்கள் இன்னல்கள் வரும் பொழுது பின் அடித்து நொறுக்கிச் சென்றால் கடைசியில் இறைவன் பாதையை அடைந்து விடலாம். இதனால் பின் தர்மம் செய்பவர்களுக்குக் கூட சில தடங்கல், தாமதங்கள் , மனக்குழப்பங்கள் எவை என்றும் அறியாமலேயே வரும். இவை எல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் கூட எப்படி பட்டு எதை என்றும் அறிய அறிய பின் சென்று கொண்டே இருந்தால் நீரைப்போல நிச்சயம் ஒர் நாள் இறைவனிடத்தில் சரணடைந்து பின் மோட்ச கதி அடைந்து விடலாம்.

இறைவனே அனைத்தும் செய்வான். இதனால் எப்பொழுது பின் வாக்குகள் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் யான் சொல்வேன்.

ஆசிகள் ஆசிகள். அனைவருக்குமே.

அடியவர் கேள்வி:- அன்னை லோபாமுத்ரா எப்பொழுது எங்களுக்கு வாக்குகள் செப்புவார்கள்?

அகத்தியர் வாக்கு:- அறிந்தும் அறிந்தும் அம்மையே எவை என்றும் அறிய அறிய அம்மையே திடீர் திடீரென்று கூற ஆனாலும் அம்மையே நிச்சயம் உண்டு அம்மையே எதை என்றும் அறிய அறிய அம்மையே நீயும் மேற்கல்வி படிப்பதற்கு அம்மையே சிறிது சிறிதாக படித்துத்தான் மேல் செல்கின்றாய் அம்மையே. அது போலந்தான் சிறுகச் சிறுகச் சொல்லி அம்மையே அனைத்தும் தெளிவு படுத்துகின்றேன் பொறுத்திருருக்க.

அடியவர்:- மகாகுரு , ஈசனுக்கும், பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் மேலே உள்ள அகத்தியப் பெருமான் இந்த இல்லத்தில வந்து எங்களுக்கு …( இந்த அடியவர் சொல்லி முடிக்கும்

முன்னரே)

அகத்தியர் வாக்கு:- அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே யார் மனது எவை என்று கூற நேற்றைய பொழுதில் சொல்லிவிட்டேன் அப்பனே இவை எல்லாம் ஒரு முறை கேள். அனைவரும் கேளுங்கள். நல்விதமாக அனைத்தும் அதிலே தெளிவு. உங்கள் கடமையை நீங்கள் செய்து கொண்டு இருந்தால் யானே உங்கள் இடத்திற்கு வந்து வாக்குகள் கூறுவேன். இதுதான் புண்ணியமப்பா.

அடியவர்:- இந்த பிறவியில குருநாதரின் திருவடியையே (எப்போதும்) சேவை செய்து இருக்க வேண்டும்.

அகத்தியர் வாக்கு:- அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே கவலையை விடு. அப்பனே யான் இருக்கின்றேன் அப்பனே. யானேதான் உனை அழைத்தேன். நீயாக வரவில்லை. அப்பனே அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே அப்படித்தானப்பா!!! நீங்கள் என்னை  தேடி வரவில்லை அப்பனை, யான்தான் அப்பனே ஏதாவது ஒரு கஷ்டத்தை (உங்களிடத்தில்) வைத்து என்னிடத்தில் வர வைத்திருக்கின்றேன் அப்பனே.

அடியவர்:- நாங்க கஷ்டத்திலேயே இருந்து விடுகின்றோம்.

அகத்தியர் வாக்கு :- அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் அப்பனே நீக்குகின்றேன். கவலைகள் இல்லை. ஆசிகளப்ப்பா!!!

அடியவர் கேள்வி:- சேவை செய்யும் சமையலில் ஏதாவது குறை உள்ளதா என்று கூற வேண்டுகின்றோம்.

அகத்தியர் வாக்கு:- அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வளவு நேரம் என்ன சொல்லிக்கொண்டு இருந்தேன் அப்பனே. நீங்கள் செய்யும் எதை என்று அறிய அறிய அனைத்திலும் எவை என்றும் புரியாமலும் யான் அருகிலே இருப்பேன் அப்பனே!!!


ஓம் அன்னை லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் இந்த நாடி வாக்கு சமர்ப்பணம். 

Thursday, September 28, 2023

சித்தர்கள் ஆட்சி - 163 : அகத்திய பிரம்ம ரிஷி காசி வாக்கு

 



நம் குருநாதர் அகத்திய பெருமான் இன்று காசியில் இருந்து மஹாளய பட்சத்தில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று வாக்குகளில் தெரிவித்து இருக்கின்றார். இதை அனைவரும் கடைப்பிடித்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன். அகத்தியன்!!!!

அப்பனே நலன்கள் ஆசிகள்!!!

இவ் மாதத்தில் அப்பனே வளிமண்டலத்தில் இருந்து  அணுக்களானது புவியை நோக்கி வரும் எதை என்று கூற அதாவது  அவ்அணுக்களானது என்பது அப்பனே ஆன்மாக்கள் என்பேன் அப்பனே!!!!

முக்தி பெறாத ஆத்மாக்கள் இவ் மாதத்தில் வளிமண்டலத்தில் இருந்து தானாக உதிர்ந்து புவியை நோக்கி வரும் அப்பனே. இவ் அணுக்கள் அதாவது ஆன்மாக்கள் அதிகம் ராமேஸ்வரத்தில் விழும் என்பேன் அப்பனே !!!

ஆன்மாக்களை ஈர்க்கும் சக்தி அதிக அளவில் ராமேஸ்வரத்தில் அப்பனே அதனால்தான் அப்பனே இராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு என்பேன் அப்பனே!!!

இவ் மாதத்தில் கங்கை காவேரி தாமிரபரணி நர்மதா கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் அப்பனே

இவ் ஆன்மாக்களை மீண்டும் இங்கிருந்து அதாவது புவிலிருந்து அப்பனே மீண்டும் மேல் நோக்கி அனுப்ப வேண்டும் அப்பனே இல்லையென்றால் அவ் ஆன்மாக்கள் மீண்டும் பிறவி எடுத்து விடும்!!!!

இப்படி மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் அப்பனே!!!

அவ் ஆன்மாக்கள் மீண்டும் பிறவி தனை எடுக்கக் கூடாது என்பேன் அப்பனே !!!

அதாவது ஆன்மாக்களுக்கு புவியில் தங்க நேரிட்டால் அப்பனே மனித உடலில் இழுத்துக் கொள்ளும் அப்பனே அதனால் பல கஷ்டங்களும் நோய்களும் ஏற்படும் அப்பனே!!!!! அவ்ஆன்மாக்களை நல்முறையாக மேலே செலுத்த இவ் மகாளய பக்ஷத்திலிருந்து கோமாதாக்களுக்கு அகத்திக்கீரை வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளிப்பது ஏதாவது அவர்களுக்கு உணவளித்து வந்தால் அப்பனே அவ் ஆன்மாக்கள் அமைதி பெறும் அப்பனே. இயலாதவர்களுக்கு அன்னத்தையும் வாயில்லா ஜீவராசிகளுக்கு அன்னம் மற்றும் நீர் வழங்கிடுதல் வேண்டும் அப்பனே.

இவைதன் மகாளய பக்ஷ காலங்களில் தொடங்கி அமாவாசை வரை செய்திட்டு அப்பனே அமாவாசை பின் மூன்றாம் பிறை வரை செய்து மூன்றாம் பிறை தரிசனம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!

இப்படி என் பக்தர்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!

இவ் கன்னி (புரட்டாசி) திங்களில்தான் இவ் அணுக்கள் அதாவது ஆன்மாக்கள் பெரும்வாரியாக புவியை நோக்கி வரும் புவியில் இருக்கும் வாயில்லா ஜீவராசிகள் அணுக்களை ஈர்த்துக் கொள்ளும் அப்பனே அதனால் தான் அப்பனே உயிரை கொன்று தின்றால் அணுக்கள் மனிதர்கள் உடலில் உடனடியாக ஈர்த்துக் கொள்ளும் கஷ்டங்களும் நோய்களும் அதிகப்படியாக வந்து சேரும் அப்பனே.

இதனால்தான் அப்பனே எந்த ஒரு உயிரையும் கொன்று தின்றலாகாது என்பேன் அப்பனே!!! இதனால் பெரும் துன்பங்களும் நோய்களும் கஷ்டங்களும் வந்து சேருமப்பா!!!!

இவ் மாதத்தில் தான் காக்கும் கடவுளான விஷ்ணுவை வழிபடுவது எதற்கென்றால் அப்பனே காக்கும் கடவுள் பெருமான் விஷ்ணு இவ் ஆன்மாக்களை முக்தி பெற செய்வான் அப்பனே. அவ் ஆன்மாக்கள் இப்புவியில் தங்கக்கூடாது என்பேன் அப்பனே!!!! பெருமான் ஆன்மாக்களை மேலே அனுப்பி விடுவான் அப்பனே!!!! ஆன்மாக்களுக்கு நல்ல முறையாக உதவி செய்வான் அப்பனே!!!

முக்தி பெறாத ஆத்மாக்கள் தன் பந்தங்களை தேடி இவ் மாதத்தில் தான் புவியை நோக்கி வரும் அப்பனே அவை மனித உடலில் சேரக்கூடாது என்பேன் அப்பனே!!!!! அவை சேராத படி அவற்றிற்கு முக்தியை அளிக்க வேண்டும் என்பேன் அப்பனே இதற்கு பெருமான் உதவிடுவான் என்பேன். அப்பனே.

இவ் மாதத்தில் பெருமானை யான் உரைத்தபடி நல்படியாக வணங்கிட்டு யான் கூறியவற்றை செய்து வந்தாலே போதுமானது என்பேன் அப்பனே!!!!

இதனைப் பற்றி இன்னும் மார்கழி திங்களிலும் விரிவாக வாக்குரைப்பேன் அப்பனே!!!

பெருமானை இவ் மாதத்தில் நல் முறையாக  விரதம் இருந்து அப்பனே ஏற்கனவே விரதம் எப்படி இருப்பது என்பதை பற்றி உரைத்திருக்கின்றேன் அப்பனே!!!! 

அப்பனே விரதம் என்றால் என்ன எப்படி கடைப்பிடிப்பது என்பதை பற்றியும் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே

அதன்படி எந்த உயிரையும் கொல்லாமல் கொன்று புசிக்காமல் ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்து வரவேண்டும் அப்பனே!!!!

இவ் மாதத்தில் அசைவ உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு உடனடியாக அந்த அணுக்கள் ஆனது ஈர்த்துக் கொள்ளும் அப்பனே இதனால் பல கஷ்டங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே அத்துகளானது மனித உடலில் ஒட்டிக் கொள்ளும் என்பேன். அப்பனே!!!! அப்படி உடலில் ஒட்டிக் கொண்டால் பல நோய்களும் கஷ்டங்களும் வரும்ப்பா!!!

அணுக்களை வாயில்லா ஜீவராசிகள் அதிகப்படியாக ஈர்த்துக் கொள்ளும் அப்பனே அப்படி ஜீவராசிகளை கொன்று சமைத்து உண்டால் அணுக்கள் எளிதில் மனித உடலில் ஒட்டிக் கொள்ளும் என்பேன் அப்பனே.

அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே எந்த ஒரு உயிரையும் கொன்று தின்றால் மிகப்பெரிய பாவம் வந்து சேரும்!!!! இதனால் பிறவி எடுத்த பிறவி எடுத்து கஷ்டங்களை பட்டு துன்பங்கள் அடைந்து நிம்மதி இல்லாத நோய்களோடு கஷ்டங்களும் சேர்ந்த பிறவியாகவே போய்விடும் அப்பனே!!

இவ் மகாளய பட்ச காலங்களில் புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் அப்பனே.

கலியுகத்தில் அப்பனே அதிகப்படியான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் கஷ்டங்களும் வருமப்பா!!!!

யான் கூறியதை என் பக்தர்கள் அனைவரும் செய்ய வேண்டும் அப்பனே இப்படி செய்தால் அவர்களுடைய சந்ததியினர் நல்ல முறையில் வாழ்வார்கள் அப்பா!!

இதனைப் பற்றி அறிவியல் ரீதியாகவும் அறிவியல் வழியாகவும் வாக்குகளாக எடுத்துரைப்பேன் அப்பனே!!!

என் பக்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

பிறப்பினை வீணாக்கக்கூடாது என்பேன் அப்பனே அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் அறிந்து நடந்து கொள்ள வேண்டும் அப்பனே நீங்கள் யான் கூறியவற்றை அப்படியே கடைப்பிடித்து வந்தால் அப்பனே இறைவனை யான் காட்டுவேன் அப்பனே!!!

அப்பனே தெரியாமல் வாழ்ந்து வந்தால் அப்பனே மீண்டும் பிறப்பு எடுத்து பிறப்பு எடுத்து!!!! அப்பனே எதற்கப்பா??? பிறவிகள் அப்பனே!!!!

பிறவிகளே வேண்டாம் என்பேன் அப்பனே என் வழியில் வருபவர்களுக்கு யான் நல்முறையாக வழிதனை காட்டி என் வழியில் வருபவர்களுக்கு முக்தியையும் மோட்சத்தையும் அளித்து இறைவனையும் காண வைப்பேன் அப்பனே!!!!


என் பக்தர்கள் அனைவரும் யான் கூறியதை செய்து வர வேண்டும் அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் இங்கிருந்தே!!!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

Friday, September 22, 2023

சித்தர்கள் ஆட்சி - 160 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 



அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு


அப்பனே!! """"""""""பிறவி """"""""""" இறைவனை பார்ப்பதற்கே!!!!!!!!!!!!!


அப்பனே!! ""'"""'"'கண்கள்""""""" இறைவனை பார்ப்பதற்கே!!!!!!!!! 


அப்பனே!! """"""காதுகள்""""""" இறைவன் நாமத்தை கேட்பதற்கே!!!!!!!!!!!! 


அப்பனே!!!!!!  """""""வாய் """""""""


எதையென்றும் அறிய அறிய இறை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 


பின் எவை என்று கூட பின் """"""""சுவாசித்தல் """""""""


அப்பனே இறைவனுக்காகவே!!!!!


அப்பனே எதை என்று 


""""""""""""நாவு """""""""""""" அப்பனே பின் இறைவன் கொடுப்பதை தின்பதற்கே!!!!!!!!!!!!!!!


அப்பனே இப்படி இருந்தால் அப்பனே அனைத்தும் பார்த்து விடலாம் அப்பனே!!!!


அப்படி மாறுபட்டு இருந்தால் அப்பனே அழிந்து விடுவாய் என்பேன் அப்பனே!!!!!


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

Thursday, September 21, 2023

சித்தர்கள் ஆட்சி - 159 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 



அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

வாசிக்கப்பட்ட திருத்தலம்:- மதுரை பசுமலையில் அருள்பாலிக்கும் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி ஆலயம்

நாடி வாசிக்கப்பட்ட நாள்:- 7-செப்டம்பர்-2023


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே, அம்மையே எவை என்று புரியப்புரிய நிச்சயம் யான் உங்களை வழி நடத்துவேன். எக்குறைகளும் கொள்ள அவசியம் இல்லை. 

ஆனாலும் அறிந்தும், அறிந்தும் சில சில பின் பணக்கஷ்டங்கள், இன்னும் எதை என்று கூற நோய்கள், ஆனாலும் அனைத்தும் யான் குணப்படுத்துவேன். கவலைகள் இல்லை. 

ஆனாலும் சந்தோஷமே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் நிச்சயம் சில விசயங்களைக்கூட என்னிடத்தில் நிச்சயமாய் அதாவது (கந்த) வேலனவனும் இங்கே வந்து எப்படி? ஏது? எவை? என்றும் அறிய அறிய இன்னும் உலகத்தில் எதை என்று நடக்க நடக்க அநியாயங்கள் எப்படி? எதை? என்றும் அறிந்து பின் மக்கள் எப்படி எல்லாம் பின்பற்றுகின்றார்கள்? எப்படி எல்லாம் அதாவது கர்மா நிலைக்கு செல்கின்றார்கள்? என்பதை உணர்ந்து உணர்ந்து என்னிடத்தில் கேட்டுவிட்டுத்தான் செல்கின்றான். 

அப்பொழுது உங்களையும் அறிந்தும் அறிந்தும் கூட உங்களைப்பற்றியும் கூட எதை என்றும் புரியப்புரிய ஆனாலும் பின் இங்கிருந்தே சில சில எவை என்று கூற வினைகள் கூட தாக்கிக்கொண்டேதான் இருக்கின்றது. 

ஆனாலும் குறைகள் இல்லை. நிச்சயமாய் அதனையும் கூட நிச்சயம் யான் மாற்றுவேன் பொருத்திருந்தால். 

இதனால் எதை என்றும் அனுபவிக்கும் திறன் எதிலிருந்து வருகின்றது எனபவை எல்லாம் சிந்திக்கத்தெரியாது. ஏன்? எதற்க்காக? என்றெல்லாம் ஆனாலும் என் அருளை பெற்றவர்கள் அனைவருமே. 

இதனால் நிச்சயம் பின் விதியில் கூட ஆனாலும் சில சில மனிதர்களுக்கும் கூட போராட்டங்கள் , இன்னும் மனக்குழப்பங்கள், இன்னும் என்னென்ன வினை என்பதைக்கூட யான் ஆராய்ந்து விட்டேன். நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இவைதன் நிச்சயம் மாற்றுகின்றேன் பொறுத்திருந்தால். 

ஏன்? எதற்க்காக? எவை? என்றும் அறிய அறிய இங்கிருக்கும் அனைவருக்குமே பிரச்சினைகள்தான். அறிந்தும் அறிந்தும் கூட. யான் நோக்கிக்கொண்டேதான் இருக்கின்றேன். 

ஒவ்வொரு பிரச்சினை என்னவென்பதெ கூட. 

ஆனாலும் இத்திருத்தலத்தில் கூட எதை என்றும் அறியாமலே சில சில குளறுபடிகள் ஏற்க்கனவே ஆனாலும் அறிந்தும் அறிந்தும் அதை யான் சமநிலைப்படுத்தினேன். அறிந்தும் இதனால் நிச்சயம் பின் உயர்ந்த பக்தியை காண்பியுங்கள் போதுமானது. மற்றவை எல்லாம் தேவை இல்லாத்து. 

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் கண்கூடாகவே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் யானும் அதாவது பின் பெருமான் அதாவது அங்கிருக்கின்றானே பெருமாள் ( ஶ்ரீ நாராயணர் சன்னதி ) அங்கேயே அமர்ந்து விடுவேன். (பெருமாள் சன்னதியில் இருந்து) பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றேன். 

ஒருவர் ஒருவரைக்கூட இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட எதையும் கேட்டுவிடாதீர்கள். ( பக்தர்கள் மனதில் எதையும் வேண்டாமல் வணங்கவேண்டும்) நிச்சயம் உங்கள் நிலை அறிந்து யானே கொடுப்பேன். 

நிச்சயம் உங்கள் இல்லத்திற்க்கும் கூட நிச்சயம் வந்து எதை என்றும் அறிய அறிய ஆராய்ந்து ஆராய்ந்து நிச்சயம் பின் அனைத்தும் கொடுப்பேன். பொறுத்திருக்க வேண்டும். 

ஏன் பெரியவர்கள் எதை என்று அறிய அறிய பின் ஒரு பழமொழியும் உண்டு “பொறுத்தார் பூமி ஆள்வார்” . அதனால் யானே சில சோதனைகள் செய்வேன் செப்பிவிட்டேன். எதை என்று அறிய அறிய என்னை வணங்கினாலும் சரி. எந்தனுக்கே திருத்தலம் கட்டினாலும் சரி. நிச்சயம் சோதனைகள். சோதனைகள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. 

நீங்கள் கேட்க்கலாம் ஏன் (எந்தனுக்கு) சோதனைகள்? என்று ஆனாலும் அறிந்தும் அறிந்தும் இதனையே பல உரைகளிலும் கூட தெரிவித்து விட்டேன் யான். ஏனென்றால் அதாவது நிச்சயம் ஒரு தாய் , ஒரு தந்தை தன்பிள்ளையை அதாவது தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று என்னென்ன செய்வாள்? என்னென்ன செய்வான்? எதை என்று அறிய அறிய தவறு செய்தால் அடிப்பான். இதே போலத்தான் ஆசிரியன் கூட. 

அறிந்தும் அறிந்தும் கூட தன் பிள்ளை அதாவது பின் தன் மாணவன் எதை என்றும் அறிய அறிய ஏதாவது தவறு செய்திட்டால் நிச்சயம் சொல்லிப்பார்ப்பான். ஆனால் திருந்தவில்லை என்றால் அடிதான். 

எவை என்று அறிய அறிய அது போலத்தான் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் அறிந்து அறிந்து உங்களை பக்குவங்கள்படுத்தவே சில கஷ்டங்கள். 

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் இதை கட்டியவர்க்கும் கூட சில சோதனைகள். ஆனாலும் அனைத்தும் கொடுத்திருக்கின்றேன். மறந்து விட்டார்கள் நன்றி கெட்ட மனிதர்கள். அறிந்தும் அறிந்தும் கூட உங்களுக்கே தெரியும் அவ்நன்றி கெட்ட மனிதர்களுக்கு எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய யான் எப்படி புத்தி எவை என்றும் அறிய அறிய ஒன்றை சொல்கின்றேன் கொடுத்தால் அகத்தியன் கொடுக்கவில்லை என்றால் எதை என்றும் அறிய அறிய இப்படித்தான் வணங்கி் வணங்கி எதை என்றும் அறிய அறிய என்னை சிலபேர் மறந்தே எதை என்று அறிய அறிய போய்விட்டனர். ஏன் எதற்க்காக? தெரிகின்றதா? உங்களுக்கு.

எதை என்றும் அறிய அறிய இதனால் எவை என்றும் புரிய புரிய அதனால் யானே நிறுத்தி வைத்திருக்கின்றேன் சில பேருக்கு. கொடுக்கலாமா? வேண்டாமா ஏன் எப்படி சொல்கின்றார்கள்  ? என்று பாரப்போம். அறிந்தும் அறிந்தும் கூட அகத்தியன் இருக்கின்றானா என்று. சில சோதனைகள் கூட ஆனால் அதில் தோல்வி அடைந்து விடுகின்றார்கள். எப்படியம்மா யான் கொடுக்க முடியும் கூறு? 

அம்மையே எதை என்றும் அறிய அறிய ஆனால் அனைவருக்குமே எவை என்று அறிய அறிய யான் கொடுக்கின்றேன் என் பிள்ளைகளாக நினைத்து அம்மையே. என்னிடத்தில் வந்து விட்டீர்கள். ஆனாலும் அம்மையே சோதனை செய்தால்தான் அம்மையே பக்குவங்கள் பிறக்கும் அம்மையே. 

இவ்வுலகம் அதாவது கலியுகம் அம்மையே கலியுகத்தில் கெட்டதுதான் நடக்கும் என்பது விதியம்மா. எதை என்றும் புரிய புரிய அதனால் புத்திகள் மாறுபட்டு மாறுபட்டு சில வினைகள் சேகரித்து சேகரித்துக்கொண்டே மனிதன் பின் எவ்வழி எல்லாம் சென்று கொண்டு இருக்கின்றான். 

அதனால்தான் உங்களை நிச்சயம் யான் விடமாட்டேன். கஷ்டங்கள் கொடுப்பேனே தவிர நிச்சயம் உங்களை கைவிடமாட்டேன். என்னென்ன தேவை உன் பிள்ளைகளுக்கும், எதை என்று அறிய அறிய உங்களுக்கும் என்றெல்லாம் நிச்சயம் கொடுத்திடுவேன் கவலைகள் இல்லை. பொறுமை காத்திருங்கள். 

அம்மையே அறிந்தும் அறிந்தும் கூற நோய்கள் கூட அதனையும் குணப்படுத்துவேன். நலமாக எதை என்றும் அறிய அம்மையே , அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் என்னிடத்தில் இருந்தால் யான் சோதனை செய்வேன். எவை என்று அறிய அறிய அதற்க்கு தயாராக இருந்தால் இருங்கள். 

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூற இதனால் அப்பனே, அம்மையே யான் கொடுத்துக்கொண்டே இருந்தேன். அனைவருக்குமே!!!

ஆனால் லோபாமுத்திரையோ எப்படி எதை என்று அறிய அறிய உன்மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றார்கள்? என்று சிறிது நிறுத்துங்கள் என்று ஆனாலும் பார்த்தால் எவனும் எதை என்று அறிய அறிய என்னிடத்தில் வரவில்லையே அப்பொழுதுதான் புரிந்தது எது? எவை? என்று அறிய அறிய. 

“”””அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் அப்பனே சித்தர்களை நம்பினோர்கள் எப்பொழுதும் கெடுவதில்லை என்பேன் அப்பனே.””””

அறிந்தும் அறிந்தும் ஆனால் கொடுப்பது எவை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய எதுவாக ஆகினும் அப்பனே நிச்சயம் யானே கொடுப்பேன் அப்பனே. கவலைகள் இல்லை. எதை என்று அறிய அறிய அப்பனே ஓர் நொடியில் அப்பனே எவை என்று அறிய அறிய என்ன வேண்டும் என்று யான் கொடுத்துவிடுவேன். ஆனால் அப்பனே நீங்கள் அதை சரியான வழியில் பயன்படுத்துவீர்களா ????? என்பது சந்தேகமே. அதனால்தான் அப்பனே சில சில துன்பங்களை ஏற்ப்படுத்தி அனைத்தும் கொடுப்பேன் அப்பனே. 

ஏனென்றால் அப்பனே எவை என்று அறிய அறிய என் பக்தர்கள் கேட்டார்கள் என்று கொடுத்துவிட்டேன் அப்பனே ஆனால் கடைசியில் பார்த்தால் அப்பனே எவை என்று அறிய அறிய ஒரு வேளை கூட என்னைக்கூட நினைக்க மாட்டார்கள் அப்பனே. எப்படியப்பா யான் கொடுப்பது சொல்லுங்கள்?????

அறிந்தும் அறிந்தும் இதனால் எவை என்று புரியப்புரிய கந்தனும் அழகாக (இங்கு) அமர்ந்திருக்கின்றான். பிள்ளையோனும் அழகாக அமரந்திருக்கின்றான். எதை என்று அறிய அறிய அதாவது ஆவணித்திங்களில் எதை என்று அறிய அறிய நிச்சயமாய் (விநாயகர்) சதுர்த்தி அன்று நிச்சயமாய் இங்கு அன்னத்தை இடுங்கள். நிச்சயம் அங்கிருந்து ஓடி வருவான் முருகன் சொல்லிவிட்டேன். 

அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அனைத்தும் சமாளித்துக்கொண்டேதான் இருக்கின்றேன் யான். 

அப்பனே எது சரி எது தவறு என்றெல்லாம் அப்பனே எந்தனுக்கே தெரியும் அப்பனே. அனைத்தும் சமநிலைப்படுத்தி அனைத்தும் கொடுக்கின்றேன் அப்பனே நீங்கள் பொறுத்திருந்தால் அப்பனே. அடுத்தபடியும்  எவை என்று அறிய அறிய அப்பனே இன்னும் கந்தனுடைய வாக்குகள் இருக்கும்பொழுது அனைவருக்குமே வாக்குகள் கிட்டும் என்பேன் அப்பனே. 

விதியின் பயனைக்கூட யான் சொல்லி இருக்கின்றேன். சொல்லியும் வைக்கின்றேன் அப்பனே நலனகளாக. எக்குறைகளும் கொள்ளவேண்டாம் அப்பனே. 

“””மீண்டும் , மீண்டும் இச்சுவடி வரும்ப்பா. எதை என்றும் அறிய அறிய அப்பனே. “””

அப்பனே இதனால் அறியாமல் அப்பனே இருந்தாலும், புரியாமல் இருந்தாலும் யான் அனைவருக்குமே புரிய வைக்கின்றேன் அப்பனே. ஏன்? எதற்க்காக? 

அப்பனே ஒர் மாற்றம் ஓர் முறை அதாவது ஐந்து மாதத்திற்க்கு முன்பே எந்தனுக்கு கோபம் வந்துவிட்டதப்பா. இப்படி எல்லாம் நடக்கின்றார்கள் என்றெல்லாம். யானே பற்ற வைத்து விட்டேன் அப்பனே. 

அப்பனே எதை என்ற அறிய அறிய அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய சித்தர்கள் உங்களுக்கு கொடுப்பதற்க்கு எவை என்று அறிய அறிய தயாராக எவை என்று அறிய அறிய அப்பனே பின் அனுதினமும் பின் அருணகிரி ( சித்தர் அருணகிரிநாதர் - ஆலயசன்னதியில் மேல் முகப்பில் சித்தபெருமான் திருமூலர் உடன் வீற்று உள்ளார் என்பதை இங்கு அறிய தருகின்றோம்) எவை என்று அறிய அறிய இங்கு அமர்ந்து கொண்டுதான் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றான். அனைவரையுமே பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றேன் அப்பனே. 

நீங்கள் செய்யாவிடிலும் சரி. செய்தாலும் சரி. ( அகத்திய பிரம்ம ரிஷி சன்னதியில் அபிஷேகங்கள்) எவை என்று அறிய அறிய அருணகிரி  எந்தனுக்கு எவை என்று அறிய அறிய அதிகாலையிலே ( பிரம்ம மூகூர்த வேளையில் ) வந்து செய்து விடுகின்றான் அப்பனே. 

ஏனப்பா உந்தனுக்கு என்று கேட்க அப்பனே எவை என்று அறிய அறிய யான் அமைதியாகத்தானே இருக்கின்றேன். எந்தனுக்கு என்ன வேலை. உன்னை விட்டால், முருகனை விட்டால் என்றெல்லாம் வந்து (தினம் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் அபிஷேகம், பூசை ஆகம விதிப்படி) செய்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. 

எவை என்று அறிய அறிய யாருக்காக உங்களுக்காக மட்டுமே அப்பனே. அப்பனே (ஆலயம் கட்டுதல்) செய்வது அப்பனே சிறப்பு என்றால் அதை பாதுகாப்பது அதை விட சிறப்பு எனபேன் அப்பனே. (ஆலயம் கட்டிவிட்டால்) செய்து விட்டால் போதுமா? அப்பனே. (பாதுகாக்காமல் இருப்பது) தரித்திரம்தான் என்பேன் அப்பனே. எவை என்று அறிய அறிய புரிந்து கொள்ளுங்கள் அப்பனே. அதை நன்றாக பாதுகாக்க வேண்டும் அப்பனே. பாதுகாக்கவே தெரியவில்லை என்பேன் அப்பனே. 

எதை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே பிள்ளையோனை அழைக்கின்றேன் அன்றைய நாளில் (விநாயகர் சதூரத்தி) அப்பனே. எவை என்றும் அறிய அறிய அப்பனே அவை மட்டும் இல்லாமல் கந்தன் எவை என்று அறிய அறிய வள்ளி தெய்வானையோடு வருவான் அப்பா. அப்பனே எவை என்று புரியப்புரிய ஏழுமலையானையும் வரவழைக்கின்றேன் அன்றைய தினத்தில் அன்னத்தை இடுங்கள். 

அப்பனே நலன்களாக நலன்களாக அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய என்னையே நம்பி வந்து விட்டீர்கள் அப்பனே சத்தியமாகச்செய்வேன் அப்பனே. 

கவலை கொள்ளாமல் இருங்கள். அப்பனே எதை என்று அறிய அறிய விதியில் கூட சில சில நபர்களுக்கு எதை என்று அறியாமல் அப்பனே எவை என்று புரியாமல் இருந்தாலும் அதாவது அப்பனே, நோய்கள் அதாவது எதை என்று அறிய அறிய போராட்டங்கள், மனக்குழப்பங்கள், சண்டை, சச்சரவுகள் இவை எல்லாம் இருக்கின்றது அப்பனே. அவை எல்லாம் யான் மாற்றித்தருகின்றேன் பொருத்திருந்தால். 

அப்பனே மனிதனாக பிறந்து விட்டாலே அப்பனே கஷ்டம்தான் அப்பனே. என்னென்ன கஷ்டங்கள் அனுபவிக்கவேண்டும் அப்பனே எப்படி எல்லாம் எவை என்றும் அறிய அறிய என்னுடத்தில் இருந்து எவை என்று அறிய அறிய அப்பனே சேவைகள் செய்வோர்களுக்கு முடிப்பேன் பிறவியை அப்பனே. எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே பிறவிக்கடலை எதை என்று அறிய அறிய முடித்துவிடுவேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. 

அதனால் அப்பனே பொருத்திருக்க வேண்டும் எத்துன்பம் வந்தாலும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. அனைத்தும் கொடுத்து விடுவேன் அப்பனே ஒரு நொடி போதும் எவை கூற என்று கொடுப்பதற்க்கு எந்தனுக்கு தெரியாதா?  உங்களுக்கு அப்பனே ஆனால் பக்குவங்கள் வேண்டும்.

அன்பு மகன்களே , அன்பு பிள்ளை எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரியப்புரிய அப்பனே ஒரு பிள்ளையை எவை என்று கூற தன் தந்தையோ , தாயோதான் தண்டிக்க முடியும். அது போலத்தான் என்னிடத்தில் வந்து விட்டால் தண்டித்துத்தான் யான் கொடுப்பேன். நலன்களாக நலன்களாக வெற்றிகள் வெற்றிகள் உண்டு. 

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய கந்தனின் ஆசிர்வாதங்கள் இவ்வம்மை ( ஶ்ரீ சக்தி மாரியம்மன்) எதை என்று அறிய அறிய அழகாகவே இங்கு அமர்ந்திருக்கின்றாள்  சக்தி அவள் எதை என்று அறிய அறிய இதனால் எவை என்று புரியப்புரிய அனைத்தும் கொடுப்பாள். 

எவை என்று கூற பெருமானும் சில கர்மாக்களை ஈரத்துக்கொண்டே இருக்கின்றான். ( மனித கர்மங்களை) ஈர்க்கும் சக்தி அங்கு (பெருமாள் சன்னதியில்) வந்து விட்டது. எதை என்று அறிய அறிய இதனால் அனுதினமும் அவனிடத்தில் சிறிது நேரம் உட்காருங்கள். போதுமானது. கர்மத்தை ஈர்த்து வைப்பான்.  (பக்தர்கள் ஒரு அரை மணி நேரமாவது அங்கு பெருமாள் சன்னதி முன் அமர வேண்டும். )

எதை என்று அறிய அறிய பின் பெருமாளுக்கு எவை என்று அறிய அறிய மாலை இட்டிருக்கின்றீர்களோ அதனை எதை என்று அறிய அறிய வாரத்திற்க்கு ஒர் முறையாவது பன்னீரால் கழுவுங்கள். எதை என்று அறிய அறிய ( பெருமாளிடம் உள்ள சாளக்கிராம மாலை) கர்மத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கின்றது அது. 

“””அப்பனே எவை என்று அறிய அறிய கர்மா எதை என்று அறிய அறிய அதி விரைவிலேயே நீக்கிட்டு அனைத்தும் தருகின்றேன்.””” 

அப்பனே இங்குள்ள அனைவருமே ஒரு பக்குவங்களை எதை என்று அறிய அறிய அப்பனே முருகனை பார்த்தவர்கள் தான் என்பேன். எவை என்று அறிய அறிய யான் பார்க்கவில்லை என்று சொன்னாலும் முருகன் உங்களை பார்த்துவிட்டான் அப்பனே. 

எவை என்று அறிய அறிய அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். ஒருவருக்கு ஒருவராக அடித்தடுத்து நிச்சயம் வாக்குகள் தருகின்றேன் அப்பனே. 

எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய சித்தர்களின் ஆசிகளும் பரிபூரணம் அப்பனே எவை என்றும் அறிய அறிய அனைவருக்குமே அதனால்தான் இங்குவந்து யான் சொல்லிஇருக்கின்றேன். எவை என்று அறிய அறிய இன்னும் வாக்குகள் காத்திருக்க அப்பனே எவை என்று புரிய இங்குள்ள அனைவருக்குமே என்னுடைய வாக்குகள் உண்டு இங்குள்ள அனைவருக்குமே அப்பனே சொல்கின்றேன். 

நலன்கள் அப்பனே எவை என்று அறிய அறிய இறைவன் அனைத்தும் கொடுத்துவிட்டால் அப்பனே இறைவனே மறந்து விடுவீர்கள் நீங்கள் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய சிறிது சோதனைகள் கொடுத்தே கொடுக்கின்றேன் போதுமா? சந்தோசமா உங்களுக்கு அப்பனே? சந்தோசம் இல்லை என்றால் என்னை அழையுங்கள் மீண்டும். 

( அங்கு அமர்ந்த  ஒரு அம்மை வாக்கு கேட்டு தலை ஆட்ட ) எதை என்று அறிய அறிய அம்மையே தலை ஆட்டினாயே உந்தனுக்கு பணங்கள் கொடுத்தால் இங்கு வருவாயா என்ன? 

( அந்த அம்மை வருவோம் என்று சொல்ல)

அம்மையே எதை என்று அறிய அறிய அம்மையே வாய்தான் சொல்கின்றது அம்மையே. 

அம்மையே இதுபோல் எத்தனை பேர்களுக்கு யான் கொடுத்தேன் அம்மையே வரவில்லையே ஏன் வரவில்லை கூறு? 

( அந்த அம்மை இல்லத்தில் குருநாதர் சொன்னபடி திருமணம் நடத்தி முடிந்தது என்று உரைத்தார்) 

அம்மையே எதை என்று அறிய அறிய முடித்தேன் ஆனாலும் பணங்கள் கொடுத்தால் அப்படியே போய்விடுவாய் நீ.அம்மையே மீண்டும் மீண்டும் எவை என்று கூற அனைத்தும் செய்கின்றேன். அம்மையே. 

இப்பொழுது இதைத்தான் அனைவரும் கேட்கின்றார்கள் அனைவருமே. பணம் பணம் என்று அம்மையே. ஆனால் அருள்கள் எவை என்று கூட தேவை உங்களுக்கு கர்மா நீக்கிவிட்டு அருள்களை பெற்றுத்தந்து அனைத்தும் கொடுத்து விடுகின்றேன். அனைத்து குடும்பங்களில் கூட சந்தோசங்கள் நிரம்பும் கவலைகளை விடுங்கள்.

நலன்களாக நலன்களாக எதை என்றும் அறிய அறிய இன்று அனைவருக்குமே முருகனின் ஆசிர்வாதங்கள் பரிபூரணம். சொல்லிவிட்டேன். 

எதை என்று அறிய அறிய முருகனே எவை என்றும் அறிந்து அறிந்து எவை என்றும் புரியாமல் கூட பின் சிறிது நேரத்திற்க்கு பிறகு மயில் எவை என்று கூற  பின் மயில் என்று சொல்கின்றார்களே அவ்வாகனத்தில் வந்து உங்கள் அனைவரையுமே பாரத்துவிட்டான். பாரத்ததும் யான் சொல்லிவிட்டேன் எதை என்று அறிய அறிய ஆசிர்வாதங்கள். 

அதனால் சில கர்மாக்களை பின் தீர்த்து முன்னேற்றப்பாதையில் யான் அழைத்துச்செல்கின்றேன். கவலைகள் இல்லை. தைரியமாக இருங்கள். யானே இருக்கின்றேன்.

எவை என்று அறிய அறிய என்னிடத்தில் இருப்பது எவை என்று கூற பின் எவை என்று அறிய  பின் எவை என்று கூற தங்கத்தில் நிற்ப்பதற்க்கு எவை என்று அறிய அறிய சமம் என்பேன். அப்பொழுது எவை என்று அறிய அறிய பின் தங்கம் இருந்தாலும் ஆனால் எவை என்றும் அறிய அறிய உங்களுக்கு சொறிய (புரிய) எவை என்று அறிய அறிய தெரியவில்லையே. ஆனால் அதற்க்கும் என் ஆசிகள் வேண்டும். ஆசிகள் கொடுத்து விட்டேன். சிறிது பொறுங்கள். அதையும் சொறிந்துவிட்டு ( புரிந்துவிட்டு ) செல்லுங்கள் அப்பனே. நலன்கள் அம்மையே. அனைத்தும் கொடுக்கின்றேன் அனைவருக்குமே. 

நலன்கள் நலன்கள் அப்பனே அனைவருக்குமே என்னுடைய ஆசிகள் என்பேன் அப்பனே. மீண்டும் இத்தலத்திலே வந்து அனைவருக்கும் ஆசிகள் கொடுக்கின்றேன் அப்பனே. நலன்கள். ஆசிகள்.ஆசிகள் அப்பா. 

===  அகத்திய பிரம்ம ரிஷி நாடி உரை முற்றே ===


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம். 

Tuesday, September 19, 2023

சித்தர்கள் ஆட்சி - 158 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

புண்ணியம் எப்பொழுதுமே அழியாதப்பா! புண்ணியத்தால் ஒரு மனிதன் பெறக்கூடிய விஷயத்தைப் பொருத்துதான் அது அழியக்கூடியதா? அழியாததா! என்பதை  தீர்மானிக்க முடியும். புண்ணியம் யாவற்றையும் இறைவனுக்கே அர்பணித்து, அருட்புண்ணியமாக மாற்றிக் கொண்டால், அதனால் வரக்கூடிய பலன்கள் என்றும் அழியாது. ஆனால் புண்ணியம் யாவும் லோகாய ஆதாயத்திற்காக ஒரு புண்ணியமாக மாற்றிவிட்டால், அதனால் வரக்கூடிய விஷயங்கள் யாவும் அழிந்துவிடும்.


சித்தர்கள் ஆட்சி - 157 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

குரு வழி காட்டுவார். ஆனால் ஊட்டமாட்டார் என்பதை எப்பொழுதுமே புரிந்துகொள். நாங்கள் ஊட்டினாலும் துப்புகின்ற குழந்தைகளாக இருந்தால், குதப்புகின்ற குழந்தைகளாக இருந்தால், எப்படியப்பா பாவ வினை தீரும்? எனவே, நாங்கள் கூறுகின்ற விஷயத்தை ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் ஆய்வு செய்யாமல் தொடர்ந்து எம் வழியில் வந்தால் கட்டாயம் ஞானக் கதவு திறக்குமப்பா!

Monday, September 18, 2023

சித்தர்கள் ஆட்சி - 156 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த சுய நலமும் இல்லாமல் , வேறு சூது எண்ணங்கள் இல்லாமல், திறந்த மனதோடு பெருந்தன்மையோடு செய்கின்ற செயலே உண்மையில் இறை சாரந்த தர்மமாகும். பெரும்பாலும் மனிதர்கள் செய்கின்ற உதவி கோடைக்கால கூரை போல் இருக்கின்றது. யாங்கள் கூறிகின்ற தர்ம வழி மழைக்கால கூரைபோல் இருந்திடல் வேண்டும். இதில்தான் எப்பொழுதுமே வேறுபாடுகள் இருந்துகொண்டே வருகின்றது மனிதர்களுக்கும் மான்களுக்கும்.

Sunday, September 17, 2023

சித்தர்கள் ஆட்சி - 155 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 



அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

அளவு பார்க்காமல், நாள் பார்க்காமல், திதி பார்க்காமல், நாழிகை பார்க்காமல், இரவு பகல் பார்க்காமல் பிறர் குறிப்பறிந்து தந்து கொண்டே இருக்கவேண்டும். அது(வே) சித்தர்கள் வழி. எது அளவில் உயர்வோ அதை முதலில் தருவது சித்தர்கள் வழி. அதைப்போல் மனதிலே அணுஅளவும் எவ்வித தடுமாற்றமில்லாமல் கொடுப்பதும், கொடுக்கின்ற தருணத்திலே இந்த அளவா? அந்த அளவா? என்ற எண்ண அலைகளின் ஏற்ற இறக்கம் இல்லாமல் கொடுப்பதும் சித்தர்கள் வழியில் வருபவர்களின் தன்மையாகும். சற்றும் அஞ்சறக்க. சலனம் வேண்டாம். இஃதொப்ப எதிர் காலத்தில் இன்னும் செய்ய செய்ய அஃதொப்ப நிலையை இறைவன் நல்குவார், அருள்வார் என்று எண்ணி தொடர்ந்து சராசரி மனித சிந்தனையிலிருந்து விடுபட்டு எமது வழியில் வருகின்ற சிந்தனையை வளர்த்துக்கொள்ள அனைவருக்கும் நண்மையாம்.

சித்தர்கள் ஆட்சி - 154 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-


"உலகியல் ரீதியான வெற்றி ஒரு மனிதனுக்கு இல்லையென்றால் அத்தனை எளிதாக விட்டுவிடுகிறானா? போராடிப் போராடி, அது வேண்டுமென்று அதன் பின்னால் செல்வது போல, நல்ல காரியங்களை, நல்ல அறச்செயல்களை, நல்ல தர்மங்களை தொடர்ந்து செய்ய, விதியே, ஒரு மனிதனுக்கு தவறாக எழுதப்பட்டிருந்தாலும், (அதாவது, அவன் இந்தப் பிறவியில் தவறே செய்து வாழவேண்டும் என்று இருந்தாலும்) கூட, அந்த விதி மெல்ல மெல்ல மாறத்துவங்கும். இஹுதொப்ப, ஒருவன் பருக வேண்டிய மோரிலே சிறிதளவு உப்பை சேர்க்கலாம். தவறுதலாக அதிக அளவு உப்பை சேர்த்துவிட்டால், "இல்லை இல்லை! இதை குடிக்க முடியவில்லை. உப்பின் சுவைதான் தூக்கலாக இருக்கிறது.  என்ன செய்வது என்று தெரியவில்லை! எனவே இதில் உள்ள உப்பை மட்டும் பிரித்துத் தா! என்றால், அது கடினம். அதற்க்கு பதிலாக என்ன செய்யலாம். இன்னும் சிறிதளவு மோரை ஊற்றி, உப்பின் அளவை அதன் மூலம் குறைக்கலாம். எனவே, ஏற்கனவே செய்த பாபங்களின் அளவை ஒரு மனிதன் பிறப்பிலிருந்து பிரிப்பது கடினம். ஆனால் மேலும், மேலும் புண்ணியத்தை சேர்க்க, பாவங்களின் அளவு குறையும், என்பதை  புரிந்து கொண்டிட வேண்டும். அதற்குத்தான் ஜீவ அருள் ஓலையிலே புண்ணியம், புண்ணியம், புண்ணியம், புண்ணியம் என்று ஒவ்வொரு மனிதனையும் அறச் செயல் செய்ய நாங்கள் தூண்டிக் கொண்டே இருக்கிறோம். ஏன் என்றால், இந்த புண்ணியத்தின் அளவு அதிகமாக, அதிகமாக, கரிக்கின்ற உப்பைப் போன்ற பாபங்களின் அளவு சரி விகிதமாகிவிடும் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்."

சித்தர்கள் ஆட்சி - 153 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 



அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

"கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் என்று எந்த கவசமாக இருந்தாலும் அதை ஒரு மனிதன் தன் சொந்த கவசம் என்று எண்ணி பாராயணம் செய்யாமல், பிறர் கஷ்டம் நீங்க பாராயணம் செய்தால் நன்றாக இருக்கும். ஏன் என்றால், இது போன்ற பாசுரங்களை இறை வழிபாட்டுப் பாடல்களைப் பாடியவர்கள் யாரும் தன் கஷ்டம் நீங்க வேண்டும் என்று பாடவில்லை. அதனால்தான் ஆதிசங்கரர் பிக்ஷை எடுத்தார். தனக்காக அன்னை மஹாலக்ஷ்மியை அவர் வேண்டவில்லை. பிறர் வறுமை நீங்கத்தான் வேண்டினார். எனவே இது போன்ற விஷயங்களை பிறர் துன்பம் நீங்க ஒரு மனிதன் பயன்படுத்தினால்  பலிதமாகும். அதிலேயே பிறர் நலத்தைப் பார்ப்பதால் அவன் பாபங்கள் குறைந்து அவனுக்கும் இறைவனருளால் நலம் கிட்டும்.  இவை எல்லாம் ஒன்றுதான்."


Saturday, September 16, 2023

சித்தர்கள் ஆட்சி - 152 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

நீங்களும் ஆளலாம்!!!

அனைவருக்குமே ஒரு சக்தி இருக்கின்றது அப்பனே!!!

ஆனால் சரியாகவே பயன்படுத்துவது இல்லை.

அதை சரியாக யார்? ஒருவன் பயன்படுத்துகின்றானோ ?!?!? அவன் ""வெற்றியாள்""!!! அப்பனே!!! 

சரியாக பயன்படுத்தவில்லை என்றால் தோல்வி அப்பனே!!!!

இதுதான் அப்பனே ஆனாலும் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!! 

அதனால் தான் சித்தர்கள் யாங்கள் இன்னும் பல விஷயங்களை கற்றுக் கொடுப்போம் மனிதர்களுக்கு!!!

அதை சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே நீங்கள் உங்களையே ஆளலாம்.

அப்பனே முதலில் அப்பனே நீங்கள் எதை என்றும் அறியும் அளவிற்கு கூட உங்களை ஆள கற்றுக் கொண்டால் அப்பனே அனைத்தும் மாறலாம்.

சித்தர்கள் ஆட்சி - 151 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 



அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

நாங்கள் கூறுகின்ற சூட்ச்சுமத்தை யாரும் புரிந்துகொள்ளவே  இல்லை. ஒரு மனிதன் தன் தேவையை மறந்துவிட்டு, பிறருக்கு சேவையையும், பொதுநலத் தொண்டையும் செய்யத் துவங்கும்போழுதே, அவன் தேவையை இறைவன் கவனிக்கத் தொடங்கிவிடுவார் என்பதே சூட்ச்சுமம். எனவே, தன்னைத்தான்,  தனக்குத்தான், தன் குடும்பத்தைத்தான், பார்ப்பதை விட்டுவிட்டு, தான் , தான், தான், தான் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இறைவனைத்தான், இறைவனின் கருணையைத்தான், இறையின் அன்பைத்தான், இறையின் பெருமையைத்தான், இறையின் அருளைத்தான், இறையின் பெரும்தன்மையைத்தான் புரிந்துகொண்டால், இந்தத் "தான்" ஓடிவிடும், இந்தத் "தான்" ஓடிவிட்டால், அந்தத் "தான்" தன்னால் வந்துவிடும். அந்தத் "தான்" வந்துவிட்டால், எந்தத்"தானும்" மனிதனுக்குத் தேவை இல்லை.


(இதே கருத்தை வெளிப்படுத்தும் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த மற்றொரு வாக்கு உங்கள் பார்வைக்கு)

அப்பனே இங்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அப்பனே!!!!.... 

"""""'தான் மட்டும் வாழ வேண்டும் தன் சொந்த பந்தங்கள் வாழ வேண்டும் என்று நினைக்க கூடாது அப்பனே!!!!!!! 

அங்கு அப்பனே!!!!!

 வாருங்கள் (என்று அழைத்து) பின் முதலில் அவந்தனுக்கு கொடுத்து பின் யார் ஒருவன் இருக்கிறானோ!!!!! அவன் தானப்பா!!!!! மனிதன். 

(விருந்துகளில் யாராவது இயலாதவருக்கு வரவழைத்து அன்னத்தை முதலில் அளிப்பவர்) 

ஆனால் அப்படிப்பட்ட மனிதன் எங்கு?????????! இருக்கின்றானப்பா?????????

அப்பனே இவை போன்று அப்பனே எதை என்று அறிய அறிய சொல்லிக்கொடுத்திருக்கின்றேன் அப்பனே!!!!!!!!! (நமக்கு) 

பிள்ளைகளுக்கு சொல்வதைப்போலே யான் ஒவ்வொரு வாக்கிலும் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே!!!! 

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! 

அங்கு மனது எங்கு???? போய்விட்டதப்பா?????? (இரங்கும் மனது) 

அவ் (திரு) மணத்தில் எதை என்று கூட எத்தனை பேர்கள்????????? ஒருவனுக்காவது அந்த மனது இல்லையப்பா.

அதனால் அப்பனே பின் பிள்ளையோன் தலை குனிந்து இப்படியெல்லாம் இருக்கின்றார்களே!!!!!!! மனிதர்கள்!!!!

இவர்களுக்கு கொடுத்தாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை என்று திரும்பி பின் போய்விட்டான் அப்பனே!!! 

அப்பனே பார்த்துக் கொண்டீர்களா அப்பனே!!!!





சித்தர்கள் ஆட்சி - 150 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 



அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

'திருத்தலத்திற்கு சென்றால் அப்பனே எதை என்று கூட ஏதாவது எடுத்துக்கொண்டு செல்க!!! அப்பனே!!!

( இனிப்புகள், உணவுப் பொருள்கள்)

தன்னால் முடியும் வரை அப்பனே!!! அப்படி இல்லை என்றால் ஏதாவது இனிப்பை கூட பின் யாராவது கேட்டால்!!!!.....

"""" இந்தா!!!! என்று கொடுத்து விடுங்கள் அப்பனே!!!!! 

அப்பனே!!!! இறைவன் எவ்ரூபத்திலும் வரலாம்!!!

எவ் ரூபத்தில் வருவான் என்று யாருக்கும் தெரியாதப்பா!!!!

""""இல்லை !! என்று சொல்லி விடாதீர்கள் என்பேன் அப்பனே!!!!! 

இல்லை!!! என்ற ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் அப்பனே நீயும் கூட அதாவது அப்படி        

அப்படியே ஆகட்டும்!!!!! என்று இறைவன் சொல்லிக்கொண்டே போய்விடுவான் அப்பனே. 

( நீ இல்லை !!! என்று சொன்னால் உனக்கும் எதுவும் இல்லை என்று இறைவன் சொல்லி விடுவார்)

Friday, September 15, 2023

சித்தர்கள் ஆட்சி - 149 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


சித்தர்கள் ஆட்சி - 148 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


சித்தர்கள் ஆட்சி - 147 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


(பகவான் ஶ்ரீ விஷ்ணு கொடிய அரக்கர்களை அழித்து உலகை காக்க ஶ்ரீ ராமர் அவதாரத்தை எடுத்த அதே வேளையில் , ஆதி ஈசன் - ஶ்ரீ ராமர் அவதாரத்திற்க்கு துணை புரிய ஶ்ரீராம பக்த ஹனுமானாக அவதரித்தார். இப்போது குருநாதர் கூறியவாக்கை நன்கு உள் வாங்கி படிக்க , நமக்கு இறைவன் கருணை  தெளிவாக விளங்கும். தினம் பிறருக்கு இயன்ற உதவி செய்க. இறைவன் உங்களுடைய தேவையை கவணித்துக்கொள்வார்.)

Thursday, September 14, 2023

சித்தர்கள் ஆட்சி - 146 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு


 


அடியவர் கேள்வி:- 

பெண்கள், பெண் குழந்தைகள், தற்போதுள்ள சூழ்நிலையில் பத்திரமாக வெளியே சென்று வர எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும்? எந்த கடவுளை வணங்க வேண்டும்?

அகத்திய பிரம்ம ரிஷி பதில் வாக்கு:-

அப்பனே! எது என்று அறிய! அறிய! பாலாம்பிகை தேவியை வணங்கச்சொல்! போதுமானது! அப்பனே, எதை என்று அறிய, அறிய, எதை என்று கூற, கூற "ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக, வருக" என்று ஜெபிக்க, குழந்தை ரூபத்தில் வந்து கொண்டே இருப்பாள் அவள். நிச்சயம் தெரிவித்துவிடு அப்பனே!



சித்தர்கள் ஆட்சி - 145 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


குருவே மக்கள் அனைவரும் கஷ்டப்படுகின்றார்கள் அவர்களுக்கு மந்திர உபதேசம் ஏதாவது உபதேசித்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வழியை கூறுங்கள்?

அகத்திய பிரம்ம ரிஷி பதில் வாக்கு:-

அப்பனே எதை என்றும் அறிய அறிய இப்பொழுது தான் இதன் விளக்கத்தை யான் சொன்னேன் அப்பனே!!!!

ஒருவன் எவ்வாறெல்லாம் திரிந்து ஞானத்தை பெற்று அப்பனே இறைவியே காட்சியளித்தாள் என்பதையெல்லாம் இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய கவலைகள் இல்லை அப்பனே எவை என்று கூற ஒருவனை பற்றி சொன்னேன் அப்பனே அவந்தனுக்கு எவ்வளவு ஞானங்கள் அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே அதனால் திரிந்தாலே போதுமானதப்பா !!!

எவையென்று அறிய அறிய பின் திரிவது அப்பனே 100 மடங்கு!!! பலன் அப்பனே 

மந்திரத்தை அதாவது அப்பனே ஒரு மந்திரத்தை ஒரு தடவை சொன்னால் அப்பனே எதை என்று அறிய அறிய சற்று குறைவு தான் அப்பனே!!!

எதை எதை என்று அறிய அறிய அதாவது திருத்தலங்களுக்கு சென்று சென்று வணங்கினால் அப்பனே ஆயிரம் மடங்கிற்கு சமம் என்பேன் அப்பனே!!!

(வீட்டில் இருந்து மந்திர ஜெபங்கள் செய்வதை காட்டிலும் திருத்தலங்கள் திருத்தலங்களாக சென்று தரிசனம் செய்வது ஆயிரம் மடங்கு பலன் தரும் என்பதை குருநாதர் இங்கு தெளிவுபடுத்துகின்றார்)

அதனால் சென்று கொண்டு தான் இருக்கின்றது அப்பனே இருப்பினும் பாலாம்பிகை தேவியின் மந்திரத்தை செப்பினாலே போதுமானது என்பேன் அப்பனே!!!!

(அடுத்த பதிவில் குருநாதர் அருளிய  பாலாம்பிகை மந்திரம் காண்க)

சித்தர்கள் ஆட்சி - 144 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


சித்தர்கள் ஆட்சி - 143 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு


 

Wednesday, September 13, 2023

சித்தர்கள் ஆட்சி - 142 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


அகத்திய பிரம்ம ரிஷி நாடி வாக்கு- மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் வாசிக்கப்பட்ட பொது வாக்கு - செப்டம்பர் 2023 

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

அப்பனே அனுதினமும் யாருக்காவது உதவிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே. அப்படி செய்யாவிடில் அப்பனே எதை என்று அறிய அறிய துன்பம் நெருங்கிக்கொண்டே இருக்கின்றது அப்பனே.

சித்தர்கள் ஆட்சி - 141 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு



 


அகத்திய பிரம்ம ரிஷி அளித்த தங்கமான வாக்கு:-



அகத்திய பிரம்ம ரிஷி நாடி வாக்கு - மதுரை பசுமலையில் செப்டம்பர் 2023 மாதம் அடியவர்கள் முன்னர் திருத்தலத்தில் வாசிக்கப்பட்ட நாடி வாக்கு:- 


முன்னேற்றப்பாதையில் யான் அழைத்துச்செல்கின்றேன். தைரியமாக இருங்கள். யானே இருக்கின்றேன். எவை என்று அறிய அறிய என்னிடத்தில் இருப்பது எவை என்று கூற பின் எவை என்று அறிய  பின் எவை என்று கூற தங்கத்தில் நிற்ப்பதற்க்கு எவை என்று அறிய அறிய சமம் என்பேன். அப்பொழுது எவை என்று அறிய அறிய பின் தங்கம் இருந்தாலும் ஆனால் எவை என்றும் அறிய அறிய உங்களுக்கு சொறிய (புரிய) தெரியவில்லையே. ஆனால் அதற்க்கும் என் ஆசிகள் வேண்டும். ஆசிகள் கொடுத்து விட்டேன். சிறிது பொறுங்கள். அதையும் சொரிந்துவிட்டு ( புரிந்துவிட்டு ) செல்லுங்கள் அப்பனே. நலன்கள் அம்மையே. அனைத்தும் கொடுக்கின்றேன் அனைவருக்குமே.





Monday, September 11, 2023

சித்தர்கள் ஆட்சி - 140 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


சித்தர்கள் ஆட்சி - 139 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


சித்தர்கள் ஆட்சி - 138 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


சித்தர்கள் ஆட்சி - 137 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


சித்தர்கள் ஆட்சி - 136 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


சித்தர்கள் ஆட்சி - 135 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


சித்தர்கள் ஆட்சி - 134 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


சித்தர்கள் ஆட்சி - 133 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


Sunday, September 10, 2023

சித்தர்கள் ஆட்சி - 132 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


சித்தர்கள் ஆட்சி - 131 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


( பாவங்கள குறைவதை எப்படி உணர்வது எப்படி? என உணரத்தும் அற்ப்புத அருள் வாக்கு )

“பாவங்கள் குறைந்தாலும், அல்லது முற்றிலுமாக தீர்ந்தாலும் கூட பெருங்காயப் பேழைபோல் அதன் நறுமணம் தாக்கிக் கொண்டேதான் இருக்கும். இருந்தாலும், பாவம் கூடுமானவரை குறைந்திருகின்றது, மிக மிக சிறிய அளவுதான் இருக்கிறது என்றால், தன்முனைப்பும், அகங்காரமும் இல்லாமல் போய்விடும். "நான் யார்?, நான் எத்தன்மை வாய்ந்தவன்? எந்த அளவு கல்வி கற்றவன்? என் வலிமை என்ன? என்னுடைய செல்வம் என்ன? என் பதவி என்ன? என் செல்வாக்கு என்ன? என்னை ஏன் இவன் எதிர்க்கிறான்?" என்பது போன்ற எண்ணங்களெல்லாம், மெல்ல மெல்ல விலகிவிடும். மனம் அமைதியை விரும்பும். கூடுமானவரை தனிமை விரும்பும். புரிதல் இல்லாத மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிவிட்டு போகட்டும். அவன் விதி, அவன் அவ்வாறு நடந்து கொள்கிறான். அவனுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம், என்ற ரீதியில் தான் மனித மனம் இருக்கும். இவன் எதிரி, இவன் நண்பன் என்கிற நிலை எல்லாம் கடந்து போகுமப்பா. எனவே, பாவங்கள் குறைய, அதை அனுபவத்திலே மனம் உணரும்." 


Friday, September 8, 2023

சித்தர்கள் ஆட்சி - 130 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


சித்தர்கள் ஆட்சி - 129 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு


 

சித்தர்கள் ஆட்சி - 128 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 



அதனால் மாற்றியும் அமைத்து விட்டார்கள் எதை என்று கூட...... பின் சுங்கன் அங்கு சேர்ந்தால்இங்கு சேர்ந்தால் தீயவை!!! பின் எவை என்று புரியாமல் அவை என்று புரியாமல் நல்லவை!!! என்பதையெல்லாம் என்றெல்லாம் மாற்றி மாற்றி அமைத்து மனிதன் நிலைமைக்கு இப்படி கர்மத்தில்சேர்த்து விட்டு நிச்சயம் கலியுகத்தில் அதாவது சொன்னார்களே அவர்களும் நன்றாக வாழவில்லை!!!!!! அதை கேட்டார்களே அவர்களும் நன்றாக வாழ வில்லை!!!!(ஜாதகத்தை கணித்துஇப்படி சொன்ன சோதிட மனிதர்களும் அதைக் கேட்டு நடந்த மனிதர்களும்)


ஏன் எதற்காக என்று கூட இதனால் எதை என்று கூட மறைத்து விட்டான் சாதகத்தை எவை என்றுஅறிய அறிய பின் சுங்கனுக்கு தெரியாத வித்தைகள் எவை என்றும் அறிய அறிய இன்னும்அவ்வித்தைகளை பற்றி எல்லாம் சொல்கின்றேன் பிழைத்துக் கொள்ளுங்கள் எதை என்று அறியஅறிய!!!!


சுங்கனுக்கு பிடித்தமானது எதை என்றும் அறிய அறிய தீய வழியில் செல்பவர்களை எல்லாம்நல்வழிப்படுத்தி இழுத்து அணைத்து அடித்து துவைத்து நிச்சயமாய் எதை என்றும் அறிய அறியமுதலிலே!!!......


அதனால் சுங்கனுக்கு பிடிக்காத ஒன்று இன்பம்!!!!


எதையென்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அதாவது பெண்களை எல்லாம் எதை என்று அறியஅறிய தெய்வமாக நினைக்கும் எதை என்றும் அறிய யார் ஒருவன் அது போல் நினைக்கின்றானோஅவந்தனுக்கு நிச்சயமாய் சுக்கிரனவன் நிச்சயம் நீண்ட ஆயுளையும் எதை என்றும் அறிய அறிய பின்எவை என்று புரிய  புரிய அதாவது பார்வதி தேவியின்  நிச்சயம் பின் நல்விதமாகவே தரிசனத்தையும்கொடுக்க ஏற்பாடுகள்!! எதை என்று அறிய அறிய!!!!


அதை விட்டுவிட்டு எதை என்று கூட சுகத்தை நீ தேடி சென்று கொண்டே இருந்தால் அதன் மீதேஅழிவுகள் ஏற்பட்டு மீண்டும் எழ முடியாமல் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியாமல்செய்திடுவான்!!!


தெரிந்து கொள்ளுங்கள் எதை என்றும் அறிய அறிய!!