“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, December 29, 2021

சித்தர்கள் ஆட்சி - 28 : அகத்தியம்



அகத்திய மஹரிஷி பாதம் காப்பு


அகத்தியத்தை எடுத்துக் கொள். அந்த அகத்தியத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு.அகத்தியத்தையே கனவுகாண். அகத்தியத்தை ஒட்டியே வாழந்து வா. மூளை, தசைகள்,நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு அகத்திய கருத்தேநிறைந்திருக்கட்டும். அந்த அகத்திய நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்து விடு.உங்கள் ஆத்ம வெற்றிக்கு இதுதான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால் -மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால் – நம்முள் நாம் அகத்தியத்துள் மேலும் ஆழ்ந்துசென்றாக வேண்டும்.



அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

Tuesday, December 28, 2021

சித்தர்கள் ஆட்சி - 27 : விதியே என்னால் மாற்ற முடியும்


 

6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.


அனைவருக்கும் நலமே. ஆனாலும் ஒன்றைச்சொல்லுகின்றேன். சிறு பிரச்சினைகள் எவ்வாறுஎனபதையும் கூட விதியில் கூட ஒவ்வொருவருக்கும் இப்பொழுதும் கூட நல்முறைகளாக சிலவினைகள் தோன்றி தோன்றி வந்து கொண்டு இருக்கின்றது. அதையும் யான் மாற்றுவேன். எதைபற்றியும் கவலை கொள்ள இருங்கள். விதியே என்னால் மாற்ற முடியும் அளவிற்க்கும் கூட தகுதிகள்இருக்கின்றது. அதனால் நல்முறைகளாக அவ்விதியை தகுதியானவர்களுக்கே யான் வழங்குவேன்என்பேன். என்பேன் அவ்தகுதியை நீங்கள்தான் வளரத்துக்கொள்ள வேண்டும். புன்னியங்கள் பலபுன்னியங்கள் பல தர்ம காரியங்கள் செய்து வந்தால் பின் மாற்றுவேன் யான். பிரம்மன் இடத்தில்முறையிட்டும் கூட. 

சித்தர்கள் ஆட்சி - 26 : நிலையானது இறைவன் அருளே. மற்றவை எல்லாம் நிலை அற்றது.


 

6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.

நிலையானது இறைவன் அருளே. மற்றவை எல்லாம் நிலை அற்றது. ஆனால் முட்டாள் மனிதன்நிலையற்றதையே தேடிக்கொண்டு இருக்கின்றான். நிலை இல்லாத்தை தேடிப்போனால் மோசம்போய்விடுவான் மனிதன். ஆனாலும் நல்முறைகளாக அனைத்தும் நீயே ( இறைவா ) என்று கூறிவிடுஅதுவும் நன்முறையாகவே நடக்கும். அப்பனே அனைத்தும் எந்தன் இல்லை , இறைவாஉன்னிடத்திலேயே ஒப்படைத்து விடுகின்றேன் என்று ஒரு நிலையை யோசித்தால் பின் இறைவன்பாரத்துக்கொள்வான். ஆனாலும் ஒருவன் கூட அவைபோல் நினைப்பதும் இல்லை. இதுவரை யான் பார்ததும் இல்லை. 


நல்முறைகளாக பிறருக்காக வாழவேண்டும் என்ற கொள்கையைபிடித்தால் உந்தனுக்காக இறைவன் வாழ்வான். அதை விட்டு விட்டு தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று என்னினால் இது நிச்சயம் முடியாது என்பேன். 

சித்தர்கள் ஆட்சி - 25 : கர்மங்களும் கரையும் ரகசியம் - மதுரை பசுமலை அகத்திய மகரிஷி ஆலயத்தில்...


 

6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.

நினைத்த காரியத்தை நினைத்தபடியே நல்முறைகளாக சொல்லுகின்றேன். இப்பொழுது பக்கத்தில்ஒரு மரம் இருக்கின்றதே அதை 108 முறை சுற்றி நல்முறைகளாக அன்னத்தை 30 பேர்களுக்குஅன்னதானம் இவை இட்டு வந்தாலே தன் கர்மங்களும் கரையும் என்பேன். நான் இங்கு இருக்கும்போது நாள் பார்க்க தேவை இல்லை. 


( நாள் ஏதும் பார்க்காமல், இந்த ஆலயத்தில் உள்ள வேப்ப மரத்தை 108 முறை சுற்றி வந்து, 30 நபர்களுக்கு அன்னதானம் அளித்தால் கர்மவினைகள் கரையும் எனபது அகத்திய மஹரிஷி வாக்கு. )


நல்முறைகளாக புரிந்து கொள்ளுங்கள். ஆனாலும் ஓர் நாள் சுற்றிவிட்டு நடைபெறவில்லை என்றுஎன்னக்கூடாது என்பேன். 



சித்தர்கள் ஆட்சி - 24 : தெய்வ உதவி கிடைக்கும் ரகசியம் - மதுரை பசுமலை அகத்திய மகரிஷி ஆலயத்தில்...

 



6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.

இன்னும் ஒரு சூட்சுமத்தை நல்முறைகளாக உரைக்கின்றேன். மாற்றத்தை யான் ஏற்ப்படுத்தியே தீர்வேன். சில சில வினைகளால் மனிதர்களுக்கு விமோச்சனம் இல்லாமலே போய்க்கொண்டே இருக்கின்றது. இங்கு வருபவர்கள் அரை மணி நேரம் நல்முறைகளாக தவத்தை மேறக்கொண்டு அவரவர் விருப்பப்படி நல்முறைகளாக பின் தெய்வங்களை எண்ணினால் நிச்சயம் கைகொடுப்பான் என்பேன். அனைத்து தெய்வங்களும் இங்கு வலம் வந்து கொண்டுதான் இருக்குன்றது என்பேன்.

சித்தர்கள் ஆட்சி - 23 : அதி சிறப்பு பெற - மதுரை ஆலய சூட்சும ரகசியம்



6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.

நல்முறைகளாக வினையை தீர்த்துக்கொள்ளலாம் என்பேன். கந்தனிடத்தில் இங்கு வந்து நல்முறைகளாக கந்தர் அனுபூதியும் , கந்த சஷ்டி கவசத்தையும் ஓதி வந்தால் அதி சிறப்பை பெறலாம் என்பேன். இவையன்றி இன்னும் மாற்றங்கள் உண்டு என்பேன். நிச்சயம் இவை அனைத்தையும் நல்முறைகளாக முடித்தால் போல் மீனாட்சி தாயே இங்கு வருவாள் என்பேன்.

 

Monday, December 27, 2021

சித்தர்கள் ஆட்சி - 22 : இறைவனை வணங்கும் சூட்சும ரகசியம்


 அப்பனே இறைவனே நீ என்று நீ என்று கூட இறைவனே அனைத்தும் உந்தனுக்கே தெரியும் என்றுபின் நல்முறைகளாக கேட்டு விட்டால் அனைத்தும் தருவான். ஆனாலும் அறியாத முட்டாள்கள் எதைஎதையோ கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். 


-  6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு. 

சித்தர்கள் ஆட்சி - 22 : ஜீவகாருண்யம்


 

நல்லவிதமாக வாழ்வதற்க்கு ஜீவகாருண்யம் என்பது அடிப்படை.

- அகத்திய மஹரிஷி வாக்கு



01 திருவாசகம்-சிவபுராணம் -பொழிப்புரை

 




ஆதி கணபதி பாதம் காப்பு

ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு.

வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் காப்பு

பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

மாணிக்கவாசப்பெருமான் பாதம் காப்பு
01 திருவாசகம்-சிவபுராணம்பொழிப்புரை:
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்கதிருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! திருவைந் தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்கஇமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க!
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்கதிருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தி யினது திருவடி வாழ்க!
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்கஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க!
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க!
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்கமன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்கபிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக!
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்கதன்னை வணங்காத அயலார்க்கு எட்டாத வனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக!
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்ககைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக!
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக!
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றிஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம்.
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றிஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம். சிவ பிரானது திருவடிக்கு வணக்கம்.
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றிஅடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்.
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றிநிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம்.
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம்.
ஆராத இன்பம் அருளுமலை போற்றிதெவிட்டாத இன்பத்தைக் கொடுக் கின்ற மலைபோலும் கருணையையுடையவனுக்கு வணக்கம்.
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னைமனம் மகிழும்படி சிவபுராணந்தன்னை ( சிவனது அநாதி முறைமையான பழமையை)
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20முன்னைய வினை முழுமையும் கெடவும் யான் சொல்லுவேன்
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்திநெற்றிக் கண்ணை உடைய சிவன் தன் கருணையை காட்டியதால் இங்கு வந்து
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சிஎண்ணத்தில் கற்பனை செய்து பார்க்க இயலாத பேரழகை கொண்டவனுடைய சிவனின் திருவடி வணங்கி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்வானம் பூமி என்று எங்கும் பரந்து நிற்கும் ஒளியாய் விளங்குபவனே
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்எண்ணிப்பார்த்து அளவிடும் எல்லை இல்லாதவனே நின் பெரிய இயல்புகொண்ட உன்னுடைய மிக்க சிறப்பை
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25கொடிய வினையையுடையவனாகிய யான் , புகழுகின்ற விதம் சிறிதும் அறிகிலேன்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்பல மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்கல்லாகியும், மனிதராகியும், பேயாகியும், - பூத கணங்களாகியும்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்வலிய அசுரராகியும், முனிவராகியும், தேவராகியும்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30இயங்குகின்ற இந்த நிலையியற் , அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்எல்லாப் பிறவிகளிலும் பிறந்து யான் மெலிவடைந்தேன் எம்பெருமானே
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்உண்மையாகவே உன் அழகிய திருவடிகளைக் கண்டு வீடு (மோட்சம் ) பெற்றேன்.
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்றநான் உய்யும்படி என் மனத்தில் (ஓம்) பிரணவ உருவாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்உண்மையானவனே, வெற்றியுடையவனே, காளை வாகனத்தவனே, வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35ஐயனே என்று துதிக்க உயர்ந்து அளவிட முடியாத ஆழமாகவும், அகலமாகவும், நுண்ணிய சிறிய பொருளாகவும் இருப்பவனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலாவெப்பமாய், குளுமையாய், யாகம் செய்விக்கும் தூய்மையானவனே
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளிபொய்யான மாயைகள் எல்லாம் என்னிருந்து தூர போய் அகல, வந்து அருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரேமெய்ஞானம் ஆகி ஒளிர்கின்ற உண்மைச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானேஎந்த ஞானமும் இல்லாதவனாக இருக்கின்ற எனக்கு இன்பத்தைத் தந்த இறைவனே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40அஞ்ஞானம் என்ற இருளைப் போக்கும் நல்ல அறிவாகவும் இருக்கும் சிவனே
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்தோற்றம் நிலை முடிவு என்பவை இல்லாதவனே, எல்லா உலகங்களையும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்படைப்பாய்,நிலைபெறுத்துவாய், ஒடுக்குவாய், அருள் செய்வாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்பிறவியிற்செலுத்துவாய் அடியேனை உன்னைத் தொழும் அடியார்கள் கூட்டத்தில் என்னை புகவைப்பாய்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானேபூவின் மணம்போல நுட்பமாய் இருப்பவனே, தொலைவில் இருப்பவனே, அண்மையில் இருப்பவனே,
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45சொல்லும் மனமும் கடந்து நின்ற வேதப் பொருளாய் உள்ளவனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்சிறந்த அன்பரது மனத்துள் கறந்த பாலும் ( கரும்பு) சருக்கரையும் நெய்யும் கூடின போல இன்பம் மிகுந்து நின்று
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்றுசிறந்த அன்பரது மனத்துள் தேன் போல் இன்பம் மிகுந்து நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எங்கள் பெருமானே
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்தஐந்து நிறங்களை உடையவனே , தேவர்கள் துதிக்க
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50தேவர்கள் உன்னை துத்திபோதும் அவர்களுக்கு காட்சி தராமல் நீ உன்னையே மறைத்து நின்றாயே, வலிய வினையையுடையவனாகிய என்னை
மறைந்திட மூடிய மாய இருளைகடுமையான வினைகளில் சிக்கியிருக்கும் என் உடலினுள், அறியாமை, ஆணவம் போன்ற மாய இருளை மூடி மறைத்தும்
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் (விதிகளால் ) கட்டி
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடிஅதை வெளிப்புற அழுக்கு நிறைந்த தோலினால் மூடி , எவ்விடத்தும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலைமலம் ஒழுகுகின்ற,ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55குலையும்படி, ஐம்புலன்களும், வஞ்சனை பண்ணுதலால் (அந்த உடலுக்கு மலத்தை வெளியேற்றும் ஒன்பது துளைகளையும் வைத்து, அதிலிருக்கும் ஐந்து புலன்களும் உன்னை அறியவிடாமல்,)
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்உன்னை விட்டு நீங்கும் விலங்கு மனத்தினாலே, உன்பொருட்டு
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்அன்பினால் உன் நினைவினில் கலந்து, உன்னையே எண்ணி உள்ளத்தினால் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கிநோய் தாக்கக்கூடிய உடலையுடைய இந்த நன்மையில்லாத சிறியேனுக்காக கருணை புரிந்து,
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டிபூமியின்மேல் எழுந்தருளி நீண்ட திருவடிகளைக் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனேஇவ்வுலகிலேயே தாயின் அன்பு தான் மிகப்பெரியது. அந்த தாயினும் மிகுதியான அன்பை உடைய தத்துவமானவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரேகளங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த, பூப்போன்ற சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனேகுரு மூர்த்தியே,தேனே ,அரிய அமுதே, சிவபுரத்தை யுடையானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனேபாசமாகிய பற்றினை அறுத்து அருள் புரியும் அறிவில் சிறந்தவனே , காக்கின்ற ஆசிரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65அன்போடு கூடிய அருளைச்செய்து, என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழிய,
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறேஎன் உள்ளம் அகலாது நின்ற பெருங்கருணையாகிய பெரிய நதியே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானேதெவிட்டாத அமிர்தமே, எல்லையில்லாத பெருமானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானேஆராயாதார் மனத்தில் மறைகின்ற ஒளியையுடையானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானேஎன் மனத்தை நீர் போல உருகப்பண்ணி, என் அரிய உயிராய் நின்றவனே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70சுகமும் துக்கமும் இயற்கையில் இல்லாதவனே, அன்பர்பொருட்டு அவற்றை உடையவனே
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்அன்பர்களிடத்து அன்புள்ளவனே, கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி, தன்மையினாலே அல்லாதவனும் ஆகின்ற
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனேபேரொளியையுடையவனே, நிறைந்த இருளானவனே, புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானேமுதல்வனே, முடிவும் நடுவும் ஆகி அவையல்லாது இருப்பவனே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானேஎன்னை இழுத்து ஆட்கொண்டருளின எமது தந்தையாகிய சிவபெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75மிகுந்த உண்மை ஞானத்தால், சிந்தித்து அறிபவர் மனத்தினாலும்,
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வேஎதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய காட்சியே, இயற்கையில் நுட்பமாகிய அறிவே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனேபோக்கும் வரவும் நிற்றலும் இல்லாத புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியேஎம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே, காண்பதற்கரிய பெரிய ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்றமகாநதி போன்ற இன்பப் பெருக்கே, அப்பனே, மேலோனே, நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும்,சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகியும்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்மாற்றம் ஆம் வையகத்தின் - மாறுபடுதலையுடைய உலகத்தில்,
வெவ்வேறே வந்து - வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து,
அறிவு ஆம் - அறிவாய் விளங்கும்,
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்தேற்றனே - தெளிவானவனே, தேற்றத் தெளிவே - தெளிவின் தெளிவே, என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானேஊற்று ஆன - என் மனத்துள் ஊற்றுப் போன்ற, உண் ஆர் அமுதே - பருகுதற்கு அரிய அமிர்தமே, உடையானே - தலைவனே.
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப: வேற்று விகார - வெவ்வேறு விகாரங்களையுடைய, விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் - ஊனாலாகிய உடம்பினுள்ளே தங்கிக் கிடக்கப் பொறேன்,
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85எம் ஐயா - எம் ஐயனே, அரனே - சிவனே, ஓ என்று என்று - ஓ என்று முறையிட்டு,
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்வணங்கி, திருப்புகழை ஓதியிருந்து, அறியாமை நீங்கி,அறிவுருவானவர்கள்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமேமறுபடியும் இவ்வுலகில் வந்து,வினைப் பிறவியையடையாமல்,
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானேவஞ்சகத்தையுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை அறுக்க வல்லவனே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனேநடு இரவில்,நடனம் செய்கின்ற, இறைவனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90திருத்தில்லையில் நடிப்பவனே, தென்பாண்டி நாட்டையுடையவனே
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்றுதுன்பப் பிறப்பை அறுப்பவனே, ஓவென்று முறையிட்டு
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்துதித்தற்கு அருமையானவனைத் துதித்து,அவனது திருவடியின்மீது
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்பாடிய பாட்டின்,பொருளையறிந்து துதிப்பவர்,
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்செல்வர் சிவநகரத்திலுள்ளவராய்
சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலை பெறுவர்.
பல்லோரும் ஏத்தப் பணிந்து 95எல்லாரும் துதிக்க வணங்கி.
நன்றி:-

http://www.tamilvu.org