“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, December 18, 2021

அகத்தியர் ஆலயம் - ஆதி சக்தி வாலை பொது ஜீவ நாடி வாக்கு 26/2/2020




மதுரை பசுமலையில் பிப்ரவரி 7ஆம் தேதி குடமுழுக்கு கண்ட ஶ்ரீ லோபாமுத்திரா உடன்உறை அகத்திய மஹரிஷி ஆலயத்திற்க்காக ஆலய அகத்தியர் அடியவர்கள் வேண்டி உரைக்கப்பட்ட பொது நாடி வாக்கு.

  • நாடி வாக்கு ஆரம்பம் -

அருள் வடிவான சிவத்தை போற்றி  அருளுகிறேன் அன்னை என் ஜீவ மொழி ஆசி.

புவிதனில் அகத்தியனுடன் லோபமாதா தாயும் பரசிவமாய் பரம்பொருளாய் வரத்தை வந்த தடத்தில் , தடத்திலே கையிலை ஈசன் சக்தி யானும் தரணி காக்க வந்திட்டோம் அகத்தியன் லோபா மாதாவாக. நிலமதில் நல்லோர்கள்,தனவான்கள், தயவான்கள் நீதியுடன் யாசகம் பெற்று அமைத்த நல் சித்தர் குடில் அதுவில் அருளாய் முப்பெரும் தேவர் உடன் தேவியரும் , சித்தர்கள், ரிஷி கணங்கள், முனிவர்கள், யோகிகள், சிவ கணங்கள், நவ நாத சித்தர்கள் சூட்சும வடிவில் வடிவிலே வாழுகின்றார் இதுவே உண்மை.

வகை பட அமைத்த நல் கோட்டம் அதில் கந்தனும் வேல் படையும் ஆதி மூலரும், ஔவையும் கலியுகம் காக்க கருணைபட வந்திருக்கார். வந்திருக்கார் நவகோடி சித்தர்களும் சூட்சுமத்தில் விண்ணுலக தெய்வ கணங்கள் மனம் மகிழ்ந்து இருக்கார். விகாரி ஆண்டு கலைத்திங்கள் ஆறிரண்டு திகதி புகர் வாரம் ( தை மாதம் 24 வது நாள் - குடமுழுக்கு நடந்த பிப்ரவரி 7,2020 ஆம் நாள், வெள்ளிக்கிழமை) விண்ணிலிருந்து இறை கணங்கள் அகத்தியனை கண்டு ரசித்தார்.
கண்டு ரசித்தார் கலையுகம் காவல் தெய்வம் வெளிப்பட கூறிடம் இது தடம் வருவோர் மூவினை சாபமுடன் பிரம்ம சாபம், பித்ரு சாபம், பெண் சாபம், பிரேத சாபம், பூமி சாபம், கங்கா சாபம், குல தெய்வ சாபம் தீரும்மென்பேன்.

தீருமென்பேன் சர்ப்ப தோஷம், நவ கிரக தோஷம், புத்திர தோஷம், தீரும் மாங்கல்ய தோஷம், குசன் தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், புணர்ப்பூ தோஷம், மைந்தன் குற்றம் , இதனுடன் கலியுகத்தில் பிறவி பலன் பயன் தோஷம் தீரும். தீரும் பாலரிஷ்டம் , உடல் உயிர் மனக்குறைகள்,தர்ம வழி தவ வழி செல்லுவோர்க்கு உலகில் சைவ நெறி தவராது நிற்ப்பவர் தமக்கும் சத்தியமாய் முக்தியும் அருளிடுவர் சிவ கணங்கள். சிவ கணங்கள்
மகிழ்ந்து இருக்கார் இங்கு.

சிவமுடன் நாராயணர் அருளும் இது தடம் இருப்பதுவால் பல குறைகள் சாம்பலாய் போகும்.

இயம்பிட விதி மாற்றும் வித்தை கூட உண்டு. அகத்தியரும் பிரம்ம சொரூபமாக நிற்க்க உரைத்திட இனி வரும் காலம் முழு மதிதோரும் ( ஒவ்வொரு பௌர்ணமி அன்றும்)
அகத்தியருக்கும் அன்னைக்கும் விழா எடுக்க அருள் வடிவில் சித்தர்கள் எல்லாம் கலந்து செல்வர். செலவர் மனம் மகிழ்ந்து அருள் வரம் தந்து ஜெகத்திலே சூட்சும சக்திகள் வந்திறங்கி வரம் தருவர் பனிவோர்க்கெல்லாம். வந்த வினை, வரும் வினை, பெற்ற இரு வினைகள் ( குழந்தைகள் பெற்ற வினை) யாவும் தீரும்.( வந்த வினை- சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா,ஆகாமிய கர்மா) தீரும் போகாத கொடு வினை எல்லாம் தவசிகளே விரும்பி அமைத்த குடில் இது அறியவேண்டும்.

உண்டுதான் பக்குவம் உள்ள மனிதர் தவம் இயற்றும் காலம் பராசக்தி பார்வை படும் அருள் தடம் இது.


( இந்த ஆலயத்தில் யாராவது தவம் செய்தால் ஆதி வாலை பரமேஷ்வரியே கண் திறந்து அந்த ஆலயத்தை பார்க்கக்கூடிய அருள் சிறந்த ஒரு தடமாக இந்த இடம் உள்ளது. இப்பேர்பட்ட்வல்லமை பொருந்திய இந்த அகத்திய மஹரிஷி ஆலயத்தில் மக்கள் வந்தால் அவர்கள் வினை எல்லாம் தீரும். இந்த உலகத்தில் எந்த தெயவத்தினிடம் சென்று நம் குறைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் அப்படீன்னு தெரியாதவங்க இந்த அதி மகத்துவம் மிக்க ஆலயத்துக்கு வந்தால் எந்த குறைகளாக இருந்தாலும் அத்துனை குறைகளையும் ஆசான் அகத்திய மஹரிஷிகளும் அன்னை லோபாமுத்திரையும் கண் திறந்து அருள் ஆசி வழங்கி சிவ சக்தி சொரூபத்தில் இருந்து மக்களுக்கு வினைகளை/விதிகளை நீக்கி வாழ்வில் வளங்களை அருளுவார்கள் என்ற சத்திய வாக்கை வாலை அன்னை இந்த ஆலயத்திற்க்கு அளித்த விளக்கத்தை நிறைவு செய்கின்றோம்)

  • நாடி ஆசி முற்றே -