அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை அன்புத் தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!!
![]() |
| கலியுகத்தில் முதல் முறையாக ஜாதக ரகசியங்கள் |
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7
நாள், நேரம் :27/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : உலக நன்மைக்காக 13 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://www.youtube.com/live/PKohTFGg6R8
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
( பகுதி 6 அதன் தொடர்ச்சியாக….)
https://youtu.be/PKohTFGg6R8?t=26383
===========================
# கலியுகத்தில் முதல் முறையாக ஜாதக ரகசியங்கள்
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=26478
குருநாதர்:- அப்பனே, அழகாக ஜாதக கட்டத்தை இடு.
அடியவர்கள்:- ( ஜாதக கட்டம் வரைந்தார்கள் )
குருநாதர்:- அப்பனே, பின். மேடத்தில் ஒன்னை இடு.
அடியவர்கள்:- (மேஷம் -1 , ரிஷபம் - 2 …….. மீனம் - 12 ….. என்று எழுதினார்கள் )
https://youtu.be/PKohTFGg6R8?t=26564
===========================
# மேஷ ராசி - ஆடு, கோழி ( சாப்பிடுவதை தவிர்க்கவும்)
===========================
குருநாதர்:- அப்பனே, ஒன்றில் ஆடு, கோழி என்று இடு.
சுவடி ஓதும் மைந்தன்:- ( மேஷ ராசியில் ஆடு, கோழி எழுதுங்க )
===========================
# ரிஷப ராசி - பசு கன்றுகள், பசு மாடுகள் ( சாப்பிடுவதை தவிர்க்கவும்)
===========================
குருநாதர்:- அப்பனே, பசு, கன்றுகள். அப்பனே, பசு, மாடுகள்.
சுவடி ஓதும் மைந்தன்:- ( இரண்டாவதுல…ரிஷப ராசியில் பசு கன்றுகள், பசு மாடுகள் என்று எழுதுங்க. அவ்வாறே எழுதினார்கள் அடியவர்கள்)
===========================
# மீன ராசி - மீன்கள்…. ( சாப்பிடுவதை தவிர்க்கவும்)
===========================
குருநாதர்:- அப்பனே, அதாவது குரு தன்னில் கூட, அப்பனே, நலமாக மீனை இடு.
சுவடி ஓதும் மைந்தன்:- ( மீனா ராசியில் மீன் என்று எழுதுங்க…அவ்வாறே எழுதினார்கள் அடியவர்கள்)
===========================
# infinity என்ற எல்லையில்லாத இறைவன் ஜாதக கட்டத்தின் நடுவில்…..
===========================
குருநாதர்:- அப்பனே, பின் நடுவில் அப்பனே, முடிவில்லா.
சுவடி ஓதும் மைந்தன்:- நடுவில் வந்து இங்க முடிவில்லாதுன்னு போடுங்க.
அடியவர் 6:- ( inifinity ஜாதக கட்டத்தின் நடுவில் வரைந்தார்கள்)
https://youtu.be/PKohTFGg6R8?t=26619
குருநாதர்:- அப்பனே, இதை நாமம் போல் இடு.
சுவடி ஓதும் மைந்தன்:- ( ஐயா, நாமம் போல் இடு. பெருமாள், இதை நாமம் போல் இடு என்றாரு.)
அடியவர்கள்:- ( முயற்சி செய்தார்கள்..ஆனால் எப்படி என்று புரியவில்லை)
குருநாதர்:- அப்பனே, பின் மூன்றிற்கும் இடு.
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, இது மூன்றிற்கும் ஒரு நாமம் மாதிரி போடணுங்க, ஐயா. இப்படி போட்டு, இப்படி போடுங்க, ஐயா.
( அவசியம் இவ்விடத்தில் காணொளியில் பார்த்தால் மட்டுமே புரியும் )
அடியவர்கள்:- ( நாமம் வரைந்தார்கள்…)
குருநாதர்:- அப்பனே, மிதினத்திற்கும் இடு.
குருநாதர்:- அப்பனே, வெளியே இடு.
அடியவர்கள்:- ( நாமம் வரைந்தார்கள்…)
குருநாதர்:- அப்பனே, பார்ப்போம். எவ்வாறெல்லாம் ஜாதகத்தை பார்த்தவர்கள் இதைச் சொல்லுங்கள், பார்ப்போம்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாருக்கும் ஜாதகம் கட்டை எழுதி போறீங்க இல்ல? இதை முதல்ல சொல்லுப்பான்றாரு. இது என்ன? இதுக்கு அர்த்தம்?
அடியவர்:- சொல்லுங்க, யாருக்கு தெரியும்? சொல்லுங்க. யாருக்கு தெரியும்? மைக் தரேன். யார் பேசுறா?
அம்மை அடியவர்:- செவ்வாய் வந்து... செவ்வாய் ஃபர்ஸ்ட். மேஷம். மேஷம் செவ்வாய் அதிபதி. சோ, ஆடு, கோழி அந்த... அதெல்லாம் எடுத்துக்க கூடாது. நான்வெஜ்.
ரிஷபம் வந்து... ரிஷபம் பசுமாடு. அதனுடையது. அதுக்காக பசுமாடு, கன்றுகள்.
மீன லக்னம். 12 ஆம் இடம் குரு. சோ, மீன் வந்து அது. அது மீன லக்னம், மீன ராசி. அவங்க வந்து அதை எடுக்க கூடாதுங்கறது ஒரு பொதுவான விஷயம்.
===========================
# மிதுன ராசி - ரெண்டு குழந்தை. இரட்டைத்தனம். இரட்டை குணம்
===========================
அம்மை அடியவர்:- மிதுனம். இப்போ அதுதானே சொல்லினார் இதுக்கு முன்னாடி.
சுவடி ஓதும் மைந்தன்:- மிதுனம் என்ன குறியீடு?
அம்மை அடியவர்:- மிதுனம் வந்து பெருமாள். அவர்தான் அதிபதி.
சுவடி ஓதும் மைந்தன்:- இங்க என்ன குறியீடு விடும்?
அம்மை அடியவர்:- புதன் வீடு.
மற்றொரு அடியவர் :- ரெண்டு குழந்தை. இரட்டைத்தனம். இரட்டை குணம் கொண்டது. இரட்டைத்தனம் அது. மிதுனமுடைய வீடு. இரண்டு பெண்களுடைய முகம். இரண்டுடைய ஆண்கள்.
அடியவர்:- என்ன சிம்பல் அம்மா? குறியீடு என்ன ?
மற்றொரு அடியவர் :- ஆண்களுடைய முகம். இரண்டு பெண்களுடைய முகம் தான் வரும் அந்த இடத்துல.
சுவடி ஓதும் மைந்தன்:- போடுங்க. இரண்டு பெண்கள் முகம்னு சொல்லிட்டு.
அடியவர் 6:- ( வரைந்தார்கள்)
https://youtu.be/PKohTFGg6R8?t=26881
===========================
# ஏன் ஜோதிடர்களுக்கு நோய்கள், வருத்தங்கள் கட்டாயம் வரும்?
===========================
# அதனை எப்படி தடுப்பது, தப்பித்துக்கொள்வது?
===========================
குருநாதர்:- அப்பனே, எது என்று புரிய அப்பனே, இவ்வாறாக அப்பனே, இவ் நான்கு அப்பனே நிச்சயம் இடங்களை ( மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம்) நீங்கள் கடக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பொழுதுதான். அப்பனே, தலையில் இருக்கும் அறிவே செயல்படும் என்பேன் அப்பனே.
(மூளை வேலை செய்ய ஆரம்பிக்கும்)
இதைத் தெரியாமல் ஜாதகத்தை சொல்பவன், அவனுக்கு அப்பனே, நோய்களும் வருத்தங்களும் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
அதனால் உண்மையைச் சொல்லி தப்பித்துக் கொள்ள வேண்டும். அப்பனே.
எதை, எதை என்று புரிய தலைகள் பின் ஆணாகவும் பெண்ணாகவும் வைத்துக்கொள்ளலாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- (மிதுன ராசியில் ) தலை… ஆண், ஆண், பெண் ஏதாவது வச்சுக்கலாம். ரெண்டு பெண்ணுதான். ஆனாலும் அப்பதான் இது வந்து வேலை செய்யுமே. தலையே வேலை செய்யும்.
அடியவர்:- மீன் சாப்பிட்டாலும், ஆடு கோழி சாப்பிட்டாலும், பசு கண்ணு சாப்பிட்டாலும். வேலை செய்யாது.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆடு, கோழி, பசு, கன்றுகள், பசுமாடு எல்லாமே இதுல அடங்கிடுச்சு. இந்த நாமத்தை அதுதான் பெருமாளுக்கு நாமம் இப்படித்தான். இதுதான் நாமம் என்றாரு. இதனால்தான் நாமம். யாருக்காவது தெரியுமா, ஐயா? புரியலையா யாருக்கும். நாமம் ஏன் போடுறோம்?
அடியவர்:- எல்லாருக்கும் ஒரு சந்தேகம் இருக்கு. எதுக்காக மீன் சிம்பல்? எதுக்காக ஆடு சிம்பல்? எதுக்காக மாடு சிம்பல்? ஆடு சிம்பல் எதுக்கு? இதெல்லாம் சாப்பிட்டோம்னா ஒன்னு எல்லாம் போயிடும். ஒன்னு வேலை செய்யாது.
அம்மை அடியவர்:- அய்யா மிதுனம் வந்து புதன் ஸ்தலம். புதன் அறிவு.
சுவடி ஓதும் மைந்தன்:- அதுதான். அதனால அறிவு வேலை செய்யாம போகும்.சும்மா நான் நாமம் போட்டுக்கிறேன்னு எல்லாம் கிடையாது. வந்து ஓகேங்களா? இதெல்லாம் கடந்து வந்தவன் தான் நாமம் போடணும். எதை கடந்து வரணும்? மீனு, ஆடு, கோழி, முட்டை இதெல்லாம் சாப்பிடக்கூடாது. பசு, கன்றுகள், பசுமாடுகள் வறுத்து பொரித்து (அசைவ உணவு ) எல்லாம் பண்ணீங்கன்னா இந்த அறிவு என்பது செயல்படாமல் போய்விடும். அடுத்து?
===========================
# கடக்க ராசி - மனநிலை - உங்கள் கையிலே உள்ளது.
===========================
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் அப்பனே, வருத்தம் தான், குழப்பங்கள் தான் மனதில். பைத்தியம் போல் திரிவானப்பா. இன்னும் கலியுகத்தில் இதுதான் நடக்கப் போகின்றது. அப்பனே, பின் கற்கடத்தை (கடகம்) ….
சுவடி ஓதும் மைந்தன்:- அடுத்து, கடகம் . இதெல்லாம் சாப்பிடுறோமா? அடுத்து பைத்தியக்காரன் மாதிரி ஆயிடுவானாம்.
அடியவர் :- மெண்டல் தான்.
அம்மை அடியவர்:- நான்காம் இடம். அது வந்து கடகம் வந்து சந்திரன் ஸ்தலம். சந்திரன் மனசு வந்து மைண்ட் கரெக்டா இருந்தாதான் எல்லாமே நல்லா இருக்கும்.
https://youtu.be/PKohTFGg6R8?t=27035
சுவடி ஓதும் மைந்தன்:- இதெல்லாம் ஒழுங்கா இருந்தால் அறிவு வளர்ந்துரும். இதெல்லாம் ஒழுங்கா தெரியலன்னா என்ன ஆகும்? பைத்தியம்.
சுவடி ஓதும் மைந்தன்:- (கடக ராசியில் “பைத்தியம்” என்று எழுதினார்கள்) கஷ்டம்… மன குழப்பங்கள்…
அடியவர் :- அதாவது மனசு குழம்பி போகும்.
===========================
# சிம்ம ராசி - சூரியன் - நெருப்பு
===========================
குருநாதர்:- அப்பனே, அடுத்து நெருப்பு வந்து அழித்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அடுத்து நெருப்பு. சூரியன். ( சிம்ம ராசி கட்டத்தில் சிம்மம் என்று எழுதினார்கள்) துன்பம் எனும் நெருப்பு நம்மை அழித்துவிடும்.
===========================
# கன்னி ராசி - முன்னோர்கள் என்ற தேவர்கள் உதவுவார்கள்…
===========================
குருநாதர்:- நெருப்பில் கூட நிச்சயம் அடுத்து இறைவன் சில நிச்சயம் தன்னில் அறிந்தும். அதாவது எவ்வாறு என்பதெல்லாம் அறிவு கொடுப்பான் நிச்சயம் தன்னில் கூட, ரகசிய சில நிச்சயம் தேவர்களையும் கூட அழைத்து.
சுவடி ஓதும் மைந்தன்:- திருப்பி இங்க எரிஞ்சு நின்றா கூட டேய் திருந்திக்கொடா என்று ஒரு வாய்ப்பு அளிப்பார்.
சுவடி ஓதும் மைந்தன்:- கன்னி ( ராசியில் எழுதினார் “கன்னி” என்று).
சுவடி ஓதும் மைந்தன்:- என்ன அனுப்புவாரு? ஒரு வாய்ப்பு. டேய், அறிவு பயன்படுத்திக்கொடா. புதன் அறிவு பயன்படுத்தி எரிஞ்சு நிக்கிற நீ ஏற்கனவே.
அடியவர்:- ஐயா, அதான புரட்டாசி மாசம் ஆரம்பிக்குது.
சுவடி ஓதும் மைந்தன்:- அதான் நீ வந்து ஏற்கனவே எரிஞ்சு கொண்டு இருக்க. இறைவன் அனுப்புவார். சில தேவர்களையும் எல்லாம் (உங்களிடம்) அனுப்புவார். டேய், எரிஞ்சுகிட்டு இருக்க. ஒழுங்கா திருந்திடுடா. யாரு?
அடியவர்:- கன்னி. புதன்.
===========================
# துலாம் ராசி - பாவ புண்ணிய எடை.
===========================
குருநாதர்:- அப்பனே, அடுத்து எடையப்பா. பாவமோ புண்ணியமோ முடிந்தது வாழ்க்கை.
சுவடி ஓதும் மைந்தன்:- (துலாம் என்று எழுதினார்கள்) அடுத்து எடை. அவ்வளவுதான். இதெல்லாம் நீங்க எல்லாம் தராசு போட்டுருவாங்க. வாய்ப்பு கொடுத்து திருந்தல. பாவம் தாண்டா அதிகமா இருக்குது….
அடியவர்:- எடை போடு. ( பாவ புண்ணிய கணக்கு )
===========================
# விருச்சிக ராசி - பாவ புண்ணிய எடை.
===========================
குருநாதர்:- அப்பனே, அடுத்து.
அடியவர்:- தேள் . விருச்சிகம்.
சுவடி ஓதும் மைந்தன்:- (தேள் என்று விருச்சிக ராசியில் எழுதினார்கள்)
குருநாதர்:- அப்பனே, பிடித்தால் என்ன ஆகும்?
அடியவர்:- அவ்வளவுதான். உடுமைப்பிடி.
===========================
# தனுசு ராசி - ஆன்மா இறைவனிடம் சென்றுவிடும்…
===========================
குருநாதர்:- அப்பனே, ஆன்மா நேரடியாக இறைவனிடம் சென்றுவிடும். அப்பா, அவ்வளவுதான்.
அடியவர்:- சோலி முடிஞ்சது.
சுவடி ஓதும் மைந்தன்:- வில்லு. டைரக்டா எங்க போயிடும்? அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு.
===========================
# மகர, கும்ப ராசி - இதனை நீங்களே கண்டுபிடிங்கள்
===========================
குருநாதர்:- அப்பனே, அடுத்து இரண்டு. இதனை நீங்களே கண்டுபிடிங்கள். அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன்:- அடுத்து இரண்டு. நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க.
அடியவர்:- மகரம் கும்பம். சொல்லுங்க.
===========================
# மகர, கும்ப ராசி - தர்ம தேவனின் தர்ம அடி….
===========================
குருநாதர்:- அப்பனே, எதை என்று அறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதெல்லாம்.
அப்பனே, இதைச் சார்ந்து அப்பனே உள்ளவர்கள், அனைத்திலும் அப்பனே நிச்சயம் சனீஸ்வரன் அப்பனே, தர்மனாக இருந்து…..
அடி அடி என்று அடிப்பான் அப்பா.
சொல்லிவிட்டேன் அப்பனே.
அவ்வளவுதான். பின் கட்டமே முடிந்துவிட்டது.
அடியவர்:- அப்பா, அவ்வளவுதான். வாழ்க்கை முடிஞ்சு போச்சு.
சுவடி ஓதும் மைந்தன்:- இங்க (தனுசு ராசியில் அந்த ஜாதக நபர் ) இறந்தால் கூட, அவரை சார்ந்து இருகாங்க பாருங்க (சந்ததிகள்) , வாழ முடியுமா என்றால்…. வாழ முடியாது. சாத்து சாத்துன்னு யார் சாத்துவாரு? நீதிமான்.
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் அனைவரிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இவ் நீதிபதியிடம் தப்பித்துக் கொள்ளவே முடியாதப்பா. பின் நிச்சயம் இவர்கள்தான் நீதிபதி இந்நாட்டிற்கு, அப்பனே, நீதிபதியாக இருந்தாலும்….
அடியவர்:- எங்க தப்பிச்சாலும் இங்க மாட்டிப்பான். மகர கும்பத்துல மாட்டிப்பான்.
சுவடி ஓதும் மைந்தன்:- யார்கிட்ட மாட்டிப்பாங்க?
அடியவர்:- தர்ம தேவன் , சனி பகவான் கிட்ட மாட்டிடுவாங்க.
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அப்பனே, பின் அதாவது நிச்சயம் பட்டை இலை. அப்பனே, எப்படி பார்த்தாலும் அதுதான் அப்பனே.
https://youtu.be/PKohTFGg6R8?t=27222
சுவடி ஓதும் மைந்தன்:- பட்டை இலை என்றால் ஒன்னு ஒன்னு ஒன்னு. என்னது நாமம். எப்படி போட்டாலும் பட்டை. முடிஞ்சு போச்சுடா. அவ்வளவுதான். பட்டை எதுக்கு, ஐயா? புரியலையா?
அடியவர்:- மூணு கோடு.
சுவடி ஓதும் மைந்தன்:- மூணு கோடு. அப்படி போட்டாலும் மூணு கோடுதான். இப்படி போட்டாலும் மூணு கோடுதான்.
அடியவர்கள்:- ( சற்று நேரம் கழித்து ….. பலத்த கை தட்டல்கள் )
அடியவர்:- ஆமா, பாருங்க, மீனு, ஆடு, கோழி, பசு. இதான் மூணு கோடு. இதை விட்டாதான் அறிவே வேலை செய்யும். இல்லைன்னா சோலி முடிஞ்சு போயிடும்.
===========================
# இவ் வாக்குகளை தேடி மக்கள் வருவார்கள் வருங்காலத்தில்…..
===========================
குருநாதர்:- அப்பனே, உங்களுக்கு தெரியாமலும்….
ஆனாலும் வருங்காலத்தில் கஷ்டங்கள் வருகின்றதே.
ஓடோடி வருவான் இதையெல்லாம் பார்ப்பதற்கு என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே, அதனால் இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- இப்ப நீங்க புரிஞ்சுக்கொள்ள முடியாமல்…. இன்னும் அதிகமா கஷ்டங்கள் வரும் பொழுது தேடுவானாம். மனுஷன், டேய், ஒண்ணுமே பலிக்கலையே என்று…
குருநாதர்:- அப்பனே, இதனால்தான் அப்பனே, நிச்சயம் அப்பனே, ஆடை அப்பனே, வைத்துக்கொண்டே உன்னை அழிக்கப் பார்க்கின்றான்அப்பனே, செயற்கை முறையில்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால இந்த ஆடை வைத்தே….. இதான் AI….. ஆடுதாங்க AI. அப்படித்தான் சொல்றாரு. அப்ப, இந்த ஆடை வச்சுக்கினே. ஆடு, கோழி, இதெல்லாம் வெட்றீங்களே நீங்க வந்து…. இதை வச்சுக்கினே. உங்களை அழிக்க பாக்குறாங்கப்பா. செயற்கை முறையில. அய்யா புரியலையா?
அடியவர்:- அதான், அதான், அது ஆட்டுக்கும் அந்த AI க்கும் தொடர்பு இருக்கு. இதை சாப்பிடுறதுனால AI க்கு அடிமை ஆயிடுறோம் போல. அந்த AI க்கு அடிமை ஆகுறப்போ, அதை வச்சு இந்த உலகத்தை அழிக்கிறான்.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த ஐயா, புரியல. படிக்கிறேன்.
அடியவர்:- ஏதோ தொடர்பு இருக்கு. சொல்லுவாரு.
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய அப்பனே, இதனால் நிச்சயம் தன்னில் கூட இதை வைத்துக்கொண்டே அப்பனே, மனிதன் அனைத்தும் கண்டுபிடித்திருக்கின்றான் என்பேன் அப்பனே. ஆனாலும் நீங்கள் இன்னும் அப்பனே ஏமாந்து நிற்கின்றீர்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த 12 கட்டத்தையும் பார்த்து மனுஷன் வந்து செயற்கையில போயிட்டான். நீங்க என்ன பண்ணிக்கிறீங்க? நீங்க இன்னும் ஏமாந்து நிக்கிறீங்க அம்மா. ஜாதகத்தை பத்தி தெரியல உங்களுக்கு முதல்ல. எத்தனை பேர் ஜாதகம் பார்த்திருப்பீங்க? ஏன்னா, ஜாதகத்தை வந்து ஏன் கொண்டு வராருன்னா, எல்லாமே நீங்க ஜாதகம் பார்த்தவங்க தான் இங்க வந்து
அடியவர்:- எல்லாரும் தேடி தேடி ஓடிப்போய்,
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாரும் தேடி தேடி போய் ஜாதகம் பார்த்தவங்க தான்.
அடியவர்:- (ஜாதகத்தில்) விழுந்து புரண்டிருப்போம்….
அம்மை அடியவர்:- நான்வெஜ், அதாவது இதெல்லாம் சாப்பிடும்போது அறிவு மழுங்கி போயிடும். அறிவு மழுங்கி போயிட்டா, செயற்கையான அறிவை கொண்டுதான் அந்த “AI” ங்கிறது வருது.
செயற்கை இந்த நான்வெஜ் சாப்பிடும்போது நம்மளுடைய அறிவு மூளை வந்து மழுங்கிடும். கம்மியா இந்த மூளை மழுங்கிருச்சுன்னா…
நமக்குன்னு இருக்கக்கூடிய அப்பா சொன்ன உயிருக்கும் உடலுக்கும் ஆதாரமா இருக்கக்கூடிய அறிவு மழுங்கிருச்சுன்னா….
நம்ம சுயமா யோசிக்க போறதில்ல.
செயற்கையான முறையில வர்றதுதான் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ். சோ, அதை சார்ந்து தான் எல்லாமே போகும். அதை வச்சுதான் நம்மள ஃபுல்லாவே அவன் அழிக்க போறான்.
===========================
# ஏன் மென்பொருள் இருக்கும் இடத்தில் முதலில் மாமிசத்தை பரப்ப திட்டங்கள்?
===========================
குருநாதர்:- அப்பனே, உலகத்தில், அப்பனே, நிச்சயம் மென்பொருள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இருக்கும் இடத்தில் முதலில், அப்பனே, மாமிசத்தை பரப்ப பார்க்கின்றான் அப்பனே.
அவர்கள் பின் அனைவரும், அப்பனே, பின் நிச்சயம் அப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் அறிவு வளராமல் தடுத்திட வேண்டும் என்பதெல்லாம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன்:- சாப்ட்வேர்.
அடியவர்:- எங்க எல்லாம் சாப்ட்வேர் இருக்கோ, முதல் அவங்க மாமிசத்தை தான் உணவா கொடுக்குறாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- உணவா வந்து கொடுப்பாங்களாம் இனிமேல்
அடியவர்:- ஆமா, உணவா கொடுக்குறாங்க.
https://youtu.be/PKohTFGg6R8?t=27421
சுவடி ஓதும் மைந்தன்:- சாப்ட்வேர்ல என்ன பண்ணுவாங்க? அவனுக்கு தெரிஞ்சு போச்சு. இவனுடைய மூளை வந்து மக்கி பண்ணிட்டு, அவன் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி, அப்ப வந்து என்ன ஆகணும்?
அடியவர்:- செயற்கை அறிவை கொண்டு வந்து நம்மளை யோசிக்க விடாம, அறிவை எல்லாம் காலி பண்ணிடுவானுங்க. அவ்வளவுதான் இருக்கிற அறிவு வேலை செய்யாது.
===========================
# மனிதர்களை விட உயிரினங்கள் இங்கு குறைவு.
# பின் எங்கிருந்து வருகின்றது அசைவ உணவு?
===========================
குருநாதர்:- எதை என்று புரிய, அப்பனே , நிச்சயம் செயற்கை அப்பனே , நிச்சயம் மூளையை அழித்துவிடும். அதற்கு காரணம் ஒன்று மாமிசம் தான். அப்பா, சொல்லிவிட்டேன்.
அப்பனே, முக்கால் பங்கு பரப்பி விட்டான் அப்பனே.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மீண்டும் மீண்டும் யான் சொல்வேன். அப்பனே.
மனிதர்களை விட, அப்பனே, உயிரினங்கள், அப்பனே, இங்கு குறைவப்பா.
ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதன் ஆசைப்பட்டு எவ்வெவ் உணவை எடுத்துக் கொள்கின்ற பொழுது, அப்பனே, பின் அதிர்ஷ்டங்கள் போய்விடுகின்றது.
சுவடி ஓதும் மைந்தன்:- மனிதனை விட விலங்குகள் கம்மி இந்த உலகத்துல. அப்ப, எங்கிருந்துடா கறி வரும்னு கேக்குறாரு. அகத்தியர், எங்கிருந்து வரும்?
https://youtu.be/PKohTFGg6R8?t=27498
குருநாதர்:- அப்பனே, பெரிய பெரிய மருத்துவமனை எல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று அறிய அப்பனே, பின் மனிதனின் உடம்பு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதாவது மனிதனுக்கு சென்று கொண்டிருக்கின்றது.
பின், அப்பனே, எவ்வாறப்பா கஷ்டம் வராமல் இருக்கும்?
அப்பனே, இதைக்கூட தெரியாத மனிதன் இறைவனை பார்க்கப் போகின்றானாம். முட்டாள் மனிதன்.
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்க எல்லாரும் ஆட்டுக்கறி, கோழிக்கறி சாப்பிடுறீங்கன்னு தான் நினைச்சுட்டு இருக்கீங்க வந்து. ஆனா, அப்படி இல்லை. பல இதுல என்ன ஆகுது வந்து? பல பெரிய பெரிய ஹாஸ்பிட்டல்ல என்ன ஆகுது வந்து? மனித உடம்பு ஒருதான் வெளியில வந்து. மறைமுகமா. அது வந்து நீங்க சாப்பிடுகின்ற பொழுது என்ன ஆகுதாம்? கர்மா அதிகம் ஆகும். இன்னும் கர்மா அதிகம் போது, மக்கள் மனதில் என்ன ஆகுதாம் வந்து?
===========================
# பணத்திற்காக மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.
===========================
குருநாதர்:- அப்பனே, இன்னும், அப்பனே, சொல்லப்போனால், அப்பனே, இன்னும் எதை என்று புரிய அப்பனே, அதற்காகத்தான். அப்பனே, இதனால், அப்பனே, திருந்தி கொள்ளுங்கள் என்பேன் அப்பனே.
அப்பனே, அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பணத்திற்காக மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்வானப்பா இக்கலியுகத்தில்.
சுவடி ஓதும் மைந்தன்:- பணம் தான் பிரதானம். பிரதானம், பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் மனிதன் செய்வான்.
===========================
# நிச்சயம் மாமிசம் ஒரு ஒரு போதை பொருள்
===========================
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் மாமிசம் ஒரு ஒரு போதை பொருள் அப்பா, சொல்லிவிட்டேன் அப்பனே.
அதை ஒருமுறை உட்கொண்டால், அவ்வளவுதான். அதற்கு அடிமை. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
இறைவனும் காண முடியாது.
பின், நிச்சயம் வாழ்க்கையும் வாழ முடியாது.
அப்பனே, சிந்தித்து செயலாற்றும் திறனும் போய்விடும்.
அப்பனே, நோயும் வந்துவிடும்.
பாவமும் வந்துவிடும்.
அப்பனே, உன்னை சார்ந்தவர். அப்பனே, அனைத்தும் அப்பனே, மேலும். அப்பனே, பின் மேல்நோக்கி செல்ல வேண்டியதுதான் என்பேன் அப்பனே.
ஒருவர் கூட, அப்பனே, நிம்மதியாக வாழிட முடியாது.
அடியவர்:- எல்லாத்தையும் லிஸ்ட் போட்டாங்க. மாமிசம் சாப்பிட்டா என்னென்ன பிரச்சனை வரும்ன்றத வரிசையா சொல்லிட்டாங்க.
குருநாதர்:- அப்பனே, ஆனால் மனிதன் இப் புரட்டாதி மாதத்தில் மட்டும்தான், அப்பனே, உண்ணக்கூடாது என்று இருக்கின்றான் என்பேன் அப்பனே. எவ்வாறு நியாயம்?
அடியவர்:- அதான் புத்திசாலி நினைச்சுட்டு இருக்கிறான் மனுஷன், புரட்டாசி மாசம் மட்டும் நான் விரதம் இருக்கிறேன்றான்.
===========================
# பக்திமான்கள் என்ன சொல்ல வேண்டும் என்றால் தர்மத்தை கடைபிடியுங்கள் என்றே சொல்ல வேண்டும்.
===========================
குருநாதர்:- அப்பனே, இதைச் சொல்லித் தராத ஒரு பக்தன், அப்பனே, இருக்கின்றான் என்றால், பின் ஏன்? எதற்கு? என்றால், அப்பனே, உன்னை பின் ஏமாற்றி, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட மனிதன் மனிதன் ஏமாற்றுகின்றான். அவ்வளவுதான்.
முதலில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பக்திமார்கள் என்ன சொல்ல வேண்டும் என்றால், பின் தர்மத்தை கடைபிடியுங்கள் என்றே சொல்ல வேண்டும்.
அப்பனே, சொல்லுங்கள், பார்ப்போம். தர்மம் என்பது என்ன?
அப்பனே, ஒருவராவது வாயில் வருகிறதா என்று பார்ப்போம். அப்பனே, சொல்லுங்கள் அனைவரும் சேர்ந்து.
ஒரு அடியவர்:- (............. ஆடியோ தடங்கல்கள்…….. )
குருநாதர்:- அப்பனே, கொன்று கொன்று, அப்பனே, நிச்சயம் பல வழிகளில் கூட போர்களில் கூட, அப்பனே, மக்கள், அப்பனே, மடிந்து உள்ளார்கள் முதலில், என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- பல போர்களில் கூட, முதல்ல என்ன பண்ணுவாங்களாம்? மாமிசம் என்ன பண்ணுவாங்களாம்? பலியிடுவாங்களாம். அதை பலியிட்டு போர்கள்ல நீங்க பார்த்தீங்கன்னா என்ன ஆயிடுச்சு கடைசில? செத்து போயிருவாங்க. அவ்வளவுதான். எத்தனையோ பேர் வந்து நல்லவங்க எல்லாம் கூட என்ன பண்ணிட்டு இருக்காங்க வந்து?
===========================
# சிந்திக்க வேண்டிய முக முக்கிய கேள்வி….
# இவ் கேள்வியை குறித்து சித்தனை செய்தலே புண்ணியங்கள்
===========================
குருநாதர்:- அப்பனே, எதை என்று அறிய அப்பனே, அப்பனே, ஒன்றை சொல்லுகின்றேன். உங்களைப் பார்த்தே.
அப்பனே, வாயில்லா ஜீவராசிகளை கொல்கின்றீர்கள் என்பேன் அப்பனே.
மனிதனை, அப்பனே, அப்படி கொல்லலாமா?
சொல்லுங்கள், நீங்களே பார்ப்போம்?
சுவடி ஓதும் மைந்தன்:- ஏன்பா, மனுஷன் எவ்வளவு பேர் முட்டாள் பாரு. ஏதோ வாய் பேச தெரியாத ஜீவராசியை கொல்றீங்க. மனிதன் கொன்னா என்ன ஆகும்?
குருநாதர்:- அப்பனே, இதிலிருந்தே பார்த்துக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே.
கலியுகத்தில் எவ்வளவு அறிவாளிகள் எல்லாம் இவ்வுலகத்தில் இருந்திருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
அப்பனே, இதை மாற்ற வேண்டும்.
அதனால்தான் சித்தர்கள், யாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அவை தன நிச்சயம் அவ்வாறாக, நிச்சயம் பின் வெற்றி பெறவில்லை என்றால், அப்பனே, உடனடியாக அனைவரும் அழித்து அழிவுகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
இதனை தடுத்திட , அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய,
சுவடி ஓதும் மைந்தன்:- கண்டிப்பா தடுக்கணும்.
அடியவர்:- தடுக்கலைன்னா, அழிவுகள் வந்து கொண்டே இருக்கும்.
https://youtu.be/PKohTFGg6R8?t=27732
===========================
# மாமிசம் உண்பவருக்கு எந்த கிரகமும் வேலை செய்யாது.
===========================
குருநாதர்:- அப்பனே, கஷ்டங்கள் ஏன் வருகின்றது?
நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களா அப்பனே?
அப்பனே, எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இறைவனை வணங்கினாலும், கஷ்டங்கள் பின் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே.
ஏன்? எதற்காக என்று சிந்தித்தீர்களா? நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே, அதாவது மாமிசம் உண்பவனுக்கு எந்த கிரகமும்
வேலை செய்யாது.
வேலை செய்யாது.
வேலை செய்யாது.
அப்பனே, அண்ணாமலையிலிருந்தே தெரிவிக்கின்றேன் அப்பனே.
அடியவர்:- சொல்லிட்டாங்க. இந்த அண்ணாமலையிலிருந்து குருநாதர் வாக்கு கொடுத்துட்டாங்க. மாமிசம் சாப்பிடுறவனுக்கு ஜாதகம் வேலை செய்யாது. நான் எனக்கு கிரகம் உச்சத்துல இருக்கு. ஆட்சியில இருக்கு. ஒண்ணுமே ஆகாது. எதுவும் வேலை செய்யாது.
===========================
# மாமிசம் உண்ணும் ஆண்களிடம் பெண்கள் பேசினால்…..
===========================
குருநாதர்:- அப்பனே, இவ்வாறு. அப்பனே, பெண்களுக்கும்…
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஆண்கள், அப்பனே, உட்கொண்டு கொண்டிருந்தால்….
அவரிடம் (ஆண்களிடம்) பேசினாலும்…..
பெண்கள் வாழ்க்கை, அப்பனே, போய்விடும் என்பேன் அப்பனே, சொல்லிவிட்டேன்.
அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பெண்களுக்கு, அப்பனே, பின் பலமாக ஜாதகம் இருந்தும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட…..
ஆண்களிடம், அப்பனே, நிச்சயம் சில சில, அப்பனே, பின் கெட்ட பின் நடவடிக்கைகளால்…
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இவர்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் வாய்ப்பளிப்பார்கள் என்பேன் அப்பனே.
இதனால், பெண்களும் அழிந்து போகின்றார்கள். அப்பனே,
இதுதான், அப்பனே, நிச்சயம் உண்மை.
சுவடி ஓதும் மைந்தன்:- பெண்கள் என்ன பண்ணுவாங்க? நிறைய சக்தி இருக்குது தெரியுமா? இவன் தப்பு பண்றான்னு தெரியுமாம். ஆனா என்ன பண்றாங்க? அவங்க சப்போர்ட் பண்ணுவாங்களாம். இவன் திருடன் எல்லாமே பண்றான்னு தெரியுமாம். பெண்கள், அவங்களுக்கு சப்போர்ட் பண்ணும்போது, நீங்க என்ன ஆயிடுவீங்க? தானாவே சக்தி போயிட்டு, அம்மா, புரியுதுங்களா அம்மா?
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட
நல்லது சொல்வதற்கு ஆள் இல்லை. அப்பா இவ்வுலகத்தில்.
சொல்லிவிட்டேன் அப்பனே.
இதனால் பிழைத்துக் கொள்ளுங்கள்.
பிழைத்துக் கொள்ளுங்கள்.
அப்பனே, பின் சித்தர்கள், நாங்கள் வந்து, அப்பனே, பல மக்களுக்கு உரைப்போம் அப்பனே.
ஏன்? எதை என்று கூற, பல ஞானிகள், அப்பனே, நிச்சயம் பிறந்த, அப்பனே, பின் பூமி அப்பா இது, மக்களை காக்கவே,
அப்பனே, நிச்சயம் புத்தனும் சொன்னான். அப்பனே, அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டு என்று.
நபிகளும் சொன்னான் அப்பனே, அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டு என்று.
அப்பனே, பின் இயேசுவும் சொன்னான் அப்பனே. பின் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டு என்று.
அப்பனே, யார் ஏற்பான் அப்பனே? சொல்லுங்கள், பார்ப்போம்.
https://youtu.be/PKohTFGg6R8?t=27870
===========================
# இறைவா, வாயில்லா ஜீவராசி ஆகிய என்னை கொன்றவன் அவன்.
===========================
# இறைவா, அவனை அழித்து விடு என்று இறைவனிடம் அழுகும் வாயில்லா ஜீவராசி ஆன்மாக்கள்….
===========================
குருநாதர்:- ஆனாலும், அப்பனே, நிச்சயம் அன்பு காட்டவில்லையே.
எப்படி அப்பனே, உலகம் பின் நன்றாக இருக்கும்?
அப்பனே, தீவைத்தான் நடக்கும் என்பேன் அப்பனே.
அப்பனே, எதை என்று புரிய அப்பனே, இவ்வளவு, அப்பனே, பின் செய்தால், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் இறைவன் ஏற்க மாட்டானப்பா நிச்சயம் தன்னில் கூட,
முதலில் அவ் ஆன்மா இறைவனிடத்தில், பின் நிச்சயம் நின்று, இது ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே.
அவன் என்னை கொன்றவன்….
பின் நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று புரிய,
பின் அனைவரும், அப்பனே, பின் எதை என்று கூற, பின் அவ் ஆன்மா, பின் அனைவரும், பின் நீதானே என்னை படைத்து வைத்தாய், இறைவா.
நிச்சயம் அனைவரும் வருகின்ற போது, அனைவரும் சேர்த்து அழித்து விடு என்று நிச்சயம் தன்னில் கூட அழுகும் அப்பா. அழுகும் அப்பனே. போதுமா?
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- ( அவசியம் இவ் விளக்கங்களை கேளுங்கள் பின் வரும் நேரலையில்….. )
https://youtu.be/PKohTFGg6R8?t=27914
===========================
சுவடி ஓதும் மைந்தன் இவ்விடத்தில், தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில், 'புலால் மறுத்தல்' (அறத்துப்பால்) அதிகாரத்தில் வரும் 251-வது குறள் அதனை நினைவு கூர்ந்தார்கள் .
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
குறளின் எளிய விளக்கம்:
தன் ஊன் பெருக்கற்கு: தன் உடம்பை (சதையை) வளர்ப்பதற்காக,
தான் பிறிது ஊன் உண்பான்: மற்றொரு உயிரின் உடம்பைக் (கொன்று) சாப்பிடுபவன்,
எங்ஙனம் ஆளும் அருள்: அவனுக்குள் "அருள்" அல்லது இரக்கம் என்னும் குணம் எப்படி இருக்க முடியும்? (கண்டிப்பாக இருக்க முடியாது).
===========================
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் யாராவது எவன் ஞானியாவது, நிச்சயம் பின் மாமிசம் உட்கொள் என்று சொல்லி இருக்கின்றானா என்று பாருங்கள்?
அப்பனே, ஒன்றை சொல்லுகின்றேன் அப்பனே.
அனைத்தும் பணத்திற்காக மட்டுமே அப்பனே
அப்பனே, பணம் ஒரு நாள் பறந்துவிடும் என்பேன் அப்பனே.
ஆனால் தனியாக நிற்பது நீதான் என்பேன் அப்பனே.
தர்மத்தை கடைபிடித்து செல் போதும்.
===========================
# பணம் அதிகமாக, அதிகமாக…….
===========================
குருநாதர்:- அப்பனே, எது என்று புரிய அப்பனே, பார்ப்போம். சம்பாதியுங்கள் என்பேன் அப்பனே. அதாவது கோடிக்கணக்கில். அப்பனே, கடைசியில் உன்னை காக்கின்றார்கள் என்று பார்ப்போம்.
அப்பனே, நிச்சயம் பணம் அதிகமாக, அதிகமாக….. அப்பனே, ஒவ்வொரு உறுப்பும் பழுதாக போயிடும் என்பேன் அப்பனே.
அதாவது அப்பனே, இது இயந்திரம். அப்பனே, ஒவ்வொன்றாக கலைந்து பின் கீழே விழுந்துவிடும் என்பேன் அப்பனே. நீங்கள் ஒட்ட வேண்டும் அல்லவா?
அப், பணத்தை எடுத்து ஒட்டிக்கொள்வது. அவ்வளவுதான்.
அடியவர்கள்:- ( பலத்த கை தட்டல்கள்….. )
அடியவர்:- அவ்வளவுதான். சிம்பிளா சொல்லிட்டாரு. அவ்வளவுதான். இந்த பணம் சம்பாதிக்க எதுக்குன்னா?
சுவடி ஓதும் மைந்தன் பணம் சம்பாதிங்க. நல்லா சம்பாதிங்க. ஆனா?
அடியவர்:- பார்ட் எல்லாம் கழண்டு போய், கழண்டு போய் கீழ விழும்பா. அப்ப எல்லாம் போய் ரிப்பேர் பண்ணி, ரிப்பேர் பண்ணி…. நீங்க ரிப்பேர் பண்ணிக்கலாம். அதுக்கு தான் அந்த பணம்.
https://youtu.be/PKohTFGg6R8?t=28076
===========================
# முதலில் அறிவை பெருக்கிக் கொள்ளுங்கள்
===========================
குருநாதர்:- அப்பனே, புத்திகள் இல்லையப்பா.
அதனாலதான் அப்பனே, வாக்குகள் சொன்னாலும், அப்பனே, புரிவதில்லை.
அதனாலதான் அப்பனே, முதலில், அப்பனே, நிச்சயம் இதையெல்லாம் தெளிவுபடுத்துகின்றேன் அப்பனே.
இதை தெளிவுபடுத்திய பிறகு வாருங்கள் அப்பனே.
வாக்குகள் விவரமாக (செப்புகின்றேன்)....
உன் வாழ்க்கை என்ன?
எதற்காக பிறந்திருக்கின்றாய்?
எப்படி வாழப்போகின்றாய்?
வருங்காலத்தில் பின் எப்படி வாழ்ந்தால் வெற்றி கிடைக்கும்?
நீயும் உன் சந்ததிகளும் , அப்பனே, பின் எப்படி? எதை என்று கூற, பின் யான், அப்பனே, புண்ணியத்தை அளித்து (கொடுத்து) காக்க வைக்கின்றேன்.
முதலில் அறிவை பெருக்கிக் கொள்ளுங்கள் அப்பனே.
https://youtu.be/PKohTFGg6R8?t=28118
===========================
# நமச்சிவாயா !!!!! இறைவா !!!!! நீ வாழ்க என்று ஞானிகள் இறைவனை போற்றி போற்றி பாடுவார்கள்.
===========================
# இறைவனிடம் - மனித மடையன் தான் எனக்கு அதை, இதை தா என்று வேண்டுவான்.
===========================
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வளவு எது என்று புரிய அப்பனே, ஞானியே, அப்பனே , நிச்சயம் தன்னில் கூட யான் என்ன தவறு செய்தேனே, எதை என்று புரியவில்லை. நிச்சயம் நீ வாழ்க என்றுதான்…. முதலில் இறைவனை நோக்கி எதை பின் எதை என்று, ஞானிகள் கேட்க மாட்டார்கள். நீ வாழ்க என்றுதான். நிச்சயம் பின் போற்றி பாடுவார்களே தவிர, அதுதான் ஞானி.
குருநாதர்:- நிச்சயம் கேட்பவன் எதை என்று அறிய பின் மடையன்.
===========================
# குலதெய்வ ஆலயங்களில் பலி கொடுப்பது குறித்த கேள்வி.
===========================
ஒரு அடியவர்:- ( ஜீவராசிகளை குலதெய்வ ஆலயங்களில் பலி கொடுக்கிறார்களே. அது எதனால் ? )
குருநாதர்:- அப்பனே, எதை என்று அறிய யான் முன்னதாகவே சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே.
ஆடு, மாடு, அப்பனே, ஆலயத்தில் வைத்து, அப்பனே, பின் நீங்கள் தான் உண்ணுகின்றீர்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் இறைவனுக்கா படைக்கின்றீர்கள் என்பேன் அப்பனே?
எது நியாயம் அப்பா?
எதை என்று அறிய அப்பனே, உன் உடம்பு, அப்பனே, பின் இன்னும் பலமாக்க அப்பனே, நீங்கள் உண்ணுகின்றீர்கள் என்பேன் அப்பனே.
அதனாலதான் சொன்னேன் அப்பனே. பின் இறைவனுக்காக விட்டு விடுவதுதானே !!!???
இறைவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று.
அப்பனே, அப்பொழுது நம்பிக்கை இல்லை. இறைவன் மீது அவ்வளவுதான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
அப்ப, நீங்கள் பின் உண்ணுவது. இறைவன் மேல் பழி சுமத்துவது. அவ்வளவுதான்.
ஆனாலும், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே,
இப்படித்தான் அப்பனே, உலகம்.
அப்பனே, பின் மற்றவரிடம் எப்பொழுது பழி போடலாம் என்று மனிதன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
மனிதன் மிகப்பெரிய திருடன் அப்பா. திருடன். போதுமா?
அப்பனே, பின் நிச்சயம் பார் அப்பனே, இதை பார்.
(வரைப்பலகையில் எழுதிய ஜாதக கட்டத்தை, கேள்வி கேட்ட அவ் அடியவரை பார்க்க சொன்னார்கள்)
ஒரு அடியவர்:- ( தொலைவில் இருந்து ஒரு கேள்வி கேட்டார்)
===========================
# அனைத்து மதத்திலும் 3 கோடுகள்….
===========================
குருநாதர்:- அப்பனே, இது பொருந்தும். அனைத்து மதத்திலும் இக்கோடுகள் பொருந்தும். பின் நீங்கள், அப்பனே, சரி பார்த்து கொள்ளுங்கள்.
அடியவர்:- எந்த மதத்திலயும் இது எல்லாமே வந்து கிட்டத்தட்ட பொருந்தி வரும். பாருங்க,
சுவடி ஓதும் மைந்தன்:- பொருந்தி வரும்ன்றாரு. எல்லாம் மூணு கோடுகள் தான்.
சுவடி ஓதும் மைந்தன்:- இங்க சமயம் சொல்லல. அகத்தியர் வந்து தன் மதம், அந்த மதம் பத்தி சொல்லல. எல்லாத்தையும் என்ன பண்ணாரு? அன்பை பத்தி தான் பேசுறாரு. ஜீவகாருண்யம் பத்தி தான் பேசுறாரு.
===========================
# வள்ளல் பெருமான் - ஜீவகாருண்யத்தை கடைபிடித்தால் இறைவனை காணலாம்.
===========================
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய, வள்ளல் வந்தான் அப்பா. நிச்சயம் சொன்னான் அப்பா. ஜீவகாருண்யத்தை கடைபிடித்தால் இறைவனை காணலாம் என்று அப்பனே. அதுவும் ஏற்கவில்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- யாரு? இராமலிங்க அடிகளார்.
அடியவர்:- இப்போ ரீசன்ட்டா வந்தாரு. ஒரு 200, 300 வருஷத்துக்கு முன்னாடி அவர் சொல்லியும் கேட்கலப்பா. அவ்வளவு பாட்டு எழுதினாரு. எவ்வளவு பாட்டு எழுதினார்? திருவருட்பா.
===========================
# ஏன் இப்போது புவியை துன்பம் சூழ்ந்து உள்ளது?
===========================
குருநாதர்:- அப்பனே, இவ்வாறெல்லாம். அப்பனே, நிச்சயம் நீங்கள் திருந்தவில்லை. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே, பின் நீங்கள் திருந்தவில்லை என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இறைவன் அடி அடி என்று அடிப்பானப்பா.
அதனால்தான், அப்பனே, துன்பம் சூழ்ந்து உள்ளது அப்பா.
அப்பனே, நிச்சயம் தன்னில் புவிதன்னிற்கு.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

