“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, June 3, 2021

சித்தர்கள் ஆட்சி - x8 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - போகர் பெருமான் வாக்கு!

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 

அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!



உலகை ஆளும் நமசிவாயத்தை பணிந்து, என் பாச பிள்ளை கந்தனை வணங்கி ஈரேழு உலகத்தையும் தன் பாச கருணையினால் கட்டி அணைத்து என்குரு நாதனையும் வணங்கி உரைக்கின்றேன் போகன் அவன்.

நிச்சயமாய் எளிதில் மாற்றம் நிகழ்வது கடினம் என்பேன் குரு போன்று நன்மை தீமைகளையும் ஆராய்ந்து இப்பூவுலகில் பின் பல யுகங்கள் வாழ்ந்து வரும் என் குரு அகத்தியர் நல் முறையாக சுற்றித்திரிந்து எவ்வாறு மனிதர்களுக்கு நல் முகமாய் ஆசிகள் வழங்கினால் தப்பித்துக் கொள்வார்கள் என்று நினைத்து உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் மனிதனோ மாயையில் சிக்கி வழி மாறிச் சென்று கொண்டிருக்கின்றான். பூலோகத்தில் அகத்தியரும் வலம் வந்து கொண்டு ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இனிமேலும் மனிதன் தவறு செய்து கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டு பொறுப்பதில்லை. மனிதனைப் பார்த்து பாவம் மனிதன் என்றுதான் அகத்தியரும் கருணையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார். சித்தர்கள் நல்லது செய்ய நினைத்தாலும் கூட மனிதன் மாய வலையில் சிக்கி தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறான். இனிமேலும் மனிதன் தவறான வழியில் செல்வது. ஒரு உயிரை கொன்று உண்ணுவது. இவ்வாறான பாவ காரியங்கள் செய்துகொண்டிருந்தால் இனிமேலும் கஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது. மனிதர்களின் கஷ்டத்திற்கு மனிதர்களே காரணம். யோசித்துப்பார் மனிதனே அகத்தியர் நல்முறையாக வாக்குகள் வழங்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் வரும் காலங்களில் பலவிதமான நோய்கள் வரும் என்ன விதமான நோய் என்று தெரியாமலே போகும் அதற்கு போகன் ஆகிய மருந்துகள் உரைக்கின்றேன். அதன் பயன்படுத்தி நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். கீழாநெல்லி அக்கரகாரம் மாசிக்காய் ஜாதிபத்திரி

இவற்றை நெய்யில் இட்டு ஐந்து கடுகளவு தினமும் உண்ண வேண்டும். மலை நெருஞ்சி இலை முருங்கை இலை துளசி இலை புதினா இலை கறிவேப்பிலை காட்டுக் கொடித்தோடை குப்பைமேனி இலை கண்டங்கத்திரி இலை வில்வ இலை

இவற்றை இடித்து பொடித்து பனை வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வேண்டும். வாரம் ஒருமுறை மிளகு வெள்ளைப்பூண்டு உண்ண வேண்டும். இன்னும் ஏராளமான மூலிகைகளை என்னால் உரைக்க முடியும்.

அவற்றைப் பயன்படுத்த குருமந்திரம் தேவை ஆனால் அந்த குரு மந்திரம் சொல்லி விட்டால் மனிதன் அதை பயன்படுத்தி காசு ஈட்டுவான். பொருள் சம்பாதிப்பதற்கு இதனை தவறான வழியில் பயன்படுத்துவான். இதனை தயார் செய்து வைத்திருந்தால் அவருக்கு குரு மந்திரம் தந்து உபதேசம் செய்வேன். இப்பொழுது குரு மந்திரம் கூறி விட்டால் அதனை பயன்படுத்தி மனிதன் காசாக்குவான். இவற்றை நல்ல முறையில் அகத்தியர் பக்தர்கள் தயாரித்தால் அவர்களுக்கு குரு மந்திரம் உபதேசம் செய்வேன்.

இந்த மருந்துகளை சேகரித்து பயன்படுத்துவதற்கும் குருவின் திருவருள் தேவை குருவின் அருள் இல்லாமல் இதனை செய்ய முடியாது.

நல் முறையாக செய்பவர்களுக்கு என்னுடைய குரு மந்திர உபதேசம் கொடுப்பேன். மனிதர்களை நீங்கள் நேர்வழியில் நடப்பதுதான் உங்களுக்கு பலன் தரும் . மாயையில் சிக்கி தவறு மேல் தவறு செய்யும் மனிதர்களுக்கு இனிவரும் காலம் கஷ்ட காலம் தான். மீண்டும் வந்து சில மூலிகைகளை உரைக்கின்றேன். திரு போகர் சித்தர் உரைத்த பொது வாக்கு!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.