“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, April 25, 2026

சித்தர்கள் ஆட்சி - 626 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - முருகப்பெருமானின் வேல் திருவிளையாடல் - பகுதி 2

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு  - முருகப்பெருமானின் வேல் திருவிளையாடல் - பகுதி 2


நாள் :-  பங்குனி உத்திரம் 31/3/2026 , செவ்வாய்க்கிழமை

இடம் :-  வேலோடு  மலை முருகன் ஆலயம், சித்தான்டி, கிழக்கு மாகாணம், இலங்கை.


கூகிள் மேப் லிங்க் (google map link) :- 

https://maps.app.goo.gl/tTU46Rq7V4Um8pf2A


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

===========================


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


(முருகப்பெருமானின் வேல் திருவிளையாடல் - பகுதி 2 ஆரம்பம் …) 


சுவடி ஓதும் மைந்தன் :- அந்த வேல் வந்து என்ன ஆச்சு? ஐயா நேரா வந்து கைலாயத்துல…… அப்ப ஐயா இங்க இருந்து பார்த்தா கைலாயம் நேர் டைரக்டா இருக்கும். நேருக்கு நேரா இருக்கும். அப்ப என்ன ஆகுது? அங்க வீசினாரு வேல். 


அடியவர்  :-  கைலாயத்துல இருந்து வீசின வேல் வந்து விழுந்த இடம்தான் இதுன்னு சொல்றாரு. இங்க இருந்து பார்த்தா கைலாயம் நேரா தெரியும்னு சொல்லி இருக்காங்க நாடியில…


சுவடி ஓதும் மைந்தன் :-  நாடியில… இங்க இருந்து பார்த்தா நேரா கைலாயம் தெரியும் அப்ப நீங்க வந்து மேப்ல எல்லாம் பார்த்தீங்கன்னா தெரியும் ஐயா. ஓகேங்களா. அப்ப அங்கிருந்து நேரா வந்து கோவத்துல வீசி இருக்காரு வந்து. படிக்கிறேன் அய்யா  திருப்பியும். 




குருநாதர் :-  அறிந்தும்  எதை என்று மீண்டும் விளையாட்டாக முருகன் எதை என்று அறிய அதாவது நிச்சயம் இப்பொழுது சென்றுவிட்டது அல்லவா வேல்? பின் நீங்கள் அனைவரும் வந்திருக்கின்றீர்கள் அல்லவா? பின் நீங்கள் அனைவரும் சென்று தேடி எடுத்து வாருங்கள். அப்பொழுதுதான் நான் இங்கிருப்பேன் என்று. 


அடியவர்  :- முருகன் சொல்றாரு..


சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா புரியுதுங்களா. அப்ப என்ன சொல்றாருன்னா.. வேல் எரிஞ்சிட்டு, வேல் இங்க வந்துருச்சு. அப்ப ஈசனும் பார்வதியும் எல்லாரும் வர சொல்லி இருந்தாங்க. தேவர்களும் முனிவர்களையும் பல வழி எல்லாரையும் அங்க வர சொல்லி இருந்தாங்க. அப்ப என்ன பண்ணாரு? முருகன் டக்குனு மாத்திட்டாரு. என்ன மாத்துனாருன்னா நான் வந்து இங்கே கைலாயத்துல இருக்கணும்னா, நீங்க அங்க அங்க வந்து அந்த வேலை எடுத்துட்டு வாங்க போயிட்டு. எல்லாரும் போயிட்டுன்னு சொல்லிட்டு… முனிவர்களும் தேவர்களும் சித்தர்களும் என்ன பண்ணாரு, முருகன் வந்து? 


அடியவர்  :- கட்டளை சொல்லிட்டாரு 


சுவடி ஓதும் மைந்தன் :-  கட்டளையிட்டாரு. வேணா நீங்க எடுத்துட்டு வாங்க. எல்லாரும் போய் எடுத்துட்டு வாங்க. நான் வந்து அம்மா அப்பாவுக்கு பாசத்துக்காக நான் கைலாயத்துல இருந்துறேன்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டாரு?


அடியவர்  :- அவங்கள  அனுப்பிட்டாரு 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவங்கள அனுப்பிட்டாரு 




குருநாதர் :-  ஏது என்று அறிய பின் அனைவரும் ஏது என்று புரிய. சரி பின் குழந்தை, பின் அதாவது ஈசனாரே எதை என்று கூற பின் தாயே தந்தையே பின் மன்னியுங்கள் அனைவரும் கூட. ஏதோ பின் முருகன் அதாவது (வேல் அதனை) இட்டு எதை என்று கூற,  (முருகன்) இங்கே இருக்கட்டும். யாங்கள் தேடி எடுத்து வருகின்றோம் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்ணிட்டாரு? எல்லா தேவர்களும் எல்லா முனிவர்களும் எல்லாரும் என்ன பண்ணிட்டாருன்னா, நாங்க வேல் எடுத்துட்டு வரோம். முருகர் இங்கேயே இருக்கட்டும் எங்க விழுதுன்னு சொல்லிட்டு எங்க இருந்து வராரு? 


அடியவர் 1 :- கைலாயத்துல… 


சுவடி ஓதும் மைந்தன் :-   கைலாயத்துல இருந்து எல்லா தேவர்களும் எல்லா சித்தர்களும் எல்லா முனிவர்களும் , அங்கிருந்து என்ன பண்றாங்க? 


அடியவர் 1 :- (வேலொடு மலை) இங்க வராங்க 


குருநாதர் :-  எதை என்று புரிய பின் தாயவளும் முருகனே இப்படி செய்துவிட்டாயே.. விளையாட்டுத்தனமாக?? நீங்கள் மட்டும் விளையாடியது என்ன? 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்ணாரு? இப்படி செஞ்சுட்டியேப்பா. நாங்க ஒரு காரணத்துக்காக அழைச்சோம் .எல்லாரையும். ஆனா நீ என்ன பண்ண? எல்லாரையும் அங்க அழைச்சிட்ட. எல்லாரும் அங்க அனுப்பிவிட்டியே என்று சொல்லிட்டு… 


குருநாதர் :-  எதை எவை என்று புரிய மீண்டும் வரட்டும். ஏது என்று அறிய அப்பொழுதுதான் பின் எவை யான் உறங்குகின்றேன். அவர்கள் வேலோடு வரட்டும். அப்பொழுதுதான் நான் எழுவேன். அப்பொழுது எதை என்று கூற பின் இதனால் அவர்கள் எப்பொழுது வேல் கொண்டு வருகின்றார்களோ அப்பொழுதுதான் உங்களிடத்தில் நான் பேசுவேன் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப முருகன் என்ன சொல்லிட்டாரு. ஏன்னா நான் தூங்க சொல்லிட்டீங்களே நான் போய் தூங்குறேன். நான் எப்பவுமே நீங்க எதுவுமே என்னிடம் பேசாதீங்க வந்து. அவங்க எல்லாம் எல்லாம் வேல் எடுத்துட்டு வரட்டும். அப்ப என்ன பண்ண வந்து? அப்பதான் நான் உங்களை பேசுவேன். வேல் எடுத்துட்டு வரட்டும் என்று சொல்லிட்டு 


===========================

# வேல் அதனை ஆழத்தில் செலுத்தி, மீண்டும் ஒரு திருவிளையாடல்….

===========================



குருநாதர் :-  எதை எவை என்று அறிய முருகன் விளையாடுவதில் கூட நிச்சயம் எதை என்று அறிய பின் அவனைப் போல் சிறந்த எவை என்று, அது போல் பின் நிச்சயம் தன்னில் கூட சிறுவயதிலிருந்தே பெரு ஆற்றல் இருந்தது. 


குருநாதர் :- இதை பின் அதாவது பின் எவை என்று மீண்டும் ( வேலொடு மலையின்)  அடியில் செலுத்தினான். அதாவது மறைமுகமாக தூங்கிக்கொண்டே எவை என்று கூற. 


குருநாதர் :-  ஆனாலும் பின் தாய்க்கும் தந்தைக்கும் பின் தெரியும். பின் என்ன விளையாட போகின்றானோ?? இவனிடத்தில் அனைத்து சக்திகளும் இருக்கின்றதே என்று. பின் ஈசனாருக்கும் பார்வதிக்கும் நன்றாக தெரியும் எதை என்று. 


குருநாதர் :-  அதேபோல் நிச்சயம் இவை தன் பின் இவர்கள் சென்றாலும் அது கிடைக்கக்கூடாது என்று இன்னும் அமுக்கிவிட்டான் எதை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அந்த வேல் கிடைக்கக்கூடாது.  இவங்க போனா கூட அந்த வேல் வந்து கிடைக்கக்கூடாதுன்னு என்று சொல்லிட்டு அவர் விளையாட்டு போலே.  அவர் பெரிய ஆற்றல் படைச்சிருந்தார் குழந்தைன்னு அவருக்கு வந்து அப்ப அவங்க தாய் தந்தைக்கு ஈசனாருக்கும் தெரியும். பார்வதி தேவிக்கும். தெரியும் இவர் என்ன பண்ணாரு? மறைமுகமா தூங்குறேன்னு சொல்லிட்டு, அது வந்து கிடைக்கக்கூடாது இவர்களுக்கு. என்ன பண்ணிட்டாரு? இன்னும் ?


அடியவர் 1 :- புதைச்சிட்டாரு 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆழமா புதைச்சிட்டாரு. 


===========================

# இலங்கை முழுவதும் தேடினார்கள்…..

===========================



குருநாதர் :-  பின் அறிந்தும் எதை என்று கூற பின் அனைவரும் வந்தார்கள் இங்கு. ஏது என்று புரிய ஆனாலும் இங்குதான் விழுந்தது இங்குதான் விழுந்தது அனைவரும் கூட தேடி தேடி. ஆனாலும் கிடைக்கவில்லையே எதை என்று புரிய. 


குருநாதர் :-   ஆனாலும் பல வகையிலும் தேடினார்கள் எங்கெங்கு ஏது என்று புரிய அப்பனே அதனால்தான் அப்பனே முருகன் விளையாட்டு பெரிய விளையாட்டப்பா எதை என்று கூற. எங்கெங்கு ஏது மலையிலும் கூட பின் அடுத்தடுத்து அப்பனே பின் அப்படியே தேடினார்கள் என்பேன் அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :- இங்க, அப்படியே எங்கெங்கெல்லாம் மலை  இருக்குதோ அங்கெல்லாம் தேடினார்கள். எங்க விழுது.. எங்க விழுந்தது.. எங்கெங்கெல்லாம் விழுந்ததுன்னு… சொல்லிட்டு தேடுறாங்க. கேடுறாங்க வந்து. 


குருநாதர் :-  எது என்று அறிய எவை என்று புரிய இதனால் எண்ணற்ற ஏது என்று புரிய அப்பனே நிச்சயம் அப்பொழுதெல்லாம் அப்பனே இன்னும் நீண்டு காணப்பட்டது இத்தேசம். ஆனாலும் சிறு சிறுதாக அழிந்து அதாவது கடல் கடல் தண்ணில் கூட பின் மூழ்கி. ஆனாலும் எதை என்று புரிய 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்பொழுதெல்லாம் இன்னும் நீண்டுதான் இருந்தது. இன்னும் வந்து நீண்டு இருந்தது இந்த தேசம் எல்லாம் வந்து…. ஆனா போக போக என்ன ஆச்சு?  


அடியவர் 1:- கடல்…. 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடல்ல மூழ்கிடுச்சு 


குருநாதர் :-  எதை எவை என்று அறிய ஆனாலும் தேடினார்கள். அப்பப்பா எங்கெல்லாம் அப்பனே பின் இத்தேசத்தில் அப்பனே பின் எவை என்று புரிய அழிவுகள் பலமாக எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. முருகன் பின் இருக்கும் ஆலயங்கள் ஒவ்வொன்றும் பின் நிச்சயம் தன்னில் கூட. பின் அனைத்து சித்தர்களும் ஞானிகளும் பின் முனிவர்களும் ரிஷிகளும் இருக்கும் இடமே. அதனால்தான் முருகன் இருக்கும் இடமெல்லாம் சக்திகளாக நிச்சயம் தன்னில் கூட ஏன் எதற்கு அங்கெல்லாம் யாங்கள் தேடியது தான் வேலை. 


சுவடி ஓதும் மைந்தன் :-   என்ன சொல்றாரு தெரியுங்களா?  இந்த தேசத்துல எங்கெல்லாம் 


அடியவர் :- வேல் வழிபாடு 


சுவடி ஓதும் மைந்தன் :-  வேல் வழிபாடு  (வடிவில்) இருக்கிறாரோ அங்கெல்லாம் வந்து 


அடியவர் 1 :- சக்தி கூட… 


சுவடி ஓதும் மைந்தன் :-  சக்தி கூட. ஏன்னா சித்தர்களும் நாங்க எல்லாமே வந்து அது தேடி இருக்கிறோம் வேலை வந்துட்டு 


குருநாதர் :-  ஆனாலும் எதை என்று புரிய அறிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவையும் விளையாட்டு போலத்தான் தெரியும் உங்களுக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :- இது ஒரு விளையாட்டு. 


குருநாதர் :-  ஏன் எதற்கு இவ்வாறாக எதை என்று புரிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அமுக்கினான் எதை என்று கூற யாருக்கும் தெரியக்கூடாது என்று. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பின் அனைவரும் பின் எதை என்று புரிய பின் ஒன்று சேர்ந்தனர் இங்கேயே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எல்லா இடத்திலும் தேடி கடைசில என்ன பண்ணிட்டாங்க? ஆனா வேல் இங்கதான் இருக்குது அடியில அப்ப என்ன பண்ணிட்டாங்கன்னா வந்து 


அடியவர் 1 :-  எல்லாம் ஒன்னா வந்துட்டாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் ஒன்னா வந்துட்டாங்க. இங்கதான் இருக்குதுன்னு சொல்லிட்டு தெரிஞ்சு போச்சு. 


===========================

#  சித்தர்கள் செய்த மாபெரும் தவம்….

===========================



குருநாதர் :-  எதை எவை என்று புரிய ஆனாலும் அனைவருக்கும் பின் தெரிந்தது. பின் வேல் அடியோடு எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட 


முருகனே மறைத்து வைத்திருக்கின்றான் அமுக்கி அமுக்கி என்று. ஆனாலும் பின் எவை என்று கூற அனைவரும் பின் தவங்கள் செய்யுங்கள். நிச்சயம் மேல் வரட்டும் என்று நிச்சயம் தன்னில் கூட. 


நாமாக எடுத்தாலும் நிச்சயம் தன்னில் கூட ஏதோ மீண்டும் முருகன் விளையாடத்தான் போகின்றான். 


அதனால் தவத்தின் வழியே நிச்சயம் தன்னில் கூட மேல்நோக்கி வரட்டும் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லுங்க ஐயா 


அடியவர் 1 :-  ஐயா முக்கியமான வார்த்தை சொல்லிட்டாங்க. இந்த வேல் இன்னும் இதுக்குள்ள தான் இருக்குதாம். அதனாலதான் எல்லா சித்தர்களும் வந்து இங்க தவம் செஞ்சுட்டு இருக்காங்களாம். தவ வலிமை கூட கூட அந்த வேலோட சக்தி கூடுமாம். அதனால வர்றவங்க எல்லாமே உட்கார்ந்து அவங்க தவ வலிமை கூட கூட… இந்த வேலோட சக்தி மேல வந்து கொண்டே இருக்கு 


சுவடி ஓதும் மைந்தன் :-  மேல வந்துகிட்டே இருக்குதாம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்றாராம் சரி ஏதோ விளையாட்டு நம்ம எடுத்தா கூட வந்து முருகன் திரும்பவும் விளையாடுவார் வந்து. அப்புறம் என்ன நம்ம என்ன பண்றோம்?  எல்லாம் தியானம் செய்வோம். தியானம் வந்து செஞ்சுட்டே இருந்தா, அந்த வேல் வந்து தானா மேல வரும். அப்ப வந்து என்ன பண்ணுவார் வந்து அவருக்கு அங்க தெரியும். நம்ம எடுத்துட்டு போனா திரும்பவும் ஒரு விளையாட்டு விளையாடுவார். முருகர் அப்படின்னு சொல்லிட்டு வந்து யாரை எல்லா சித்தர்களும் தேவர்களும் எல்லா விஷயங்களும் நினைக்கின்றார். புரியுதுங்களா ஐயா. 




குருநாதர் :-  எதை எவை என்று புரிய இதனால் அறிந்தும் கூட எதை என்று அறியாமல் கூட மேல்நோக்கி வந்தது. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் புரிந்து கொண்டான் பின் முருகனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மேல்நோக்கி? 


அடியவர் 1 :- வேல் வந்துருச்சு. 


சுவடி ஓதும் மைந்தன் :- வேல் வந்துருச்சு அப்ப புரிந்து கொண்டார். தியானம் பண்ணி… என்ன பண்ணிட்டாங்க வந்து?  


அடியவர் :- வேலோடு மலையில் மேலே வந்துருச்சு 


சுவடி ஓதும் மைந்தன் :- வேல் மேலே வந்துருச்சு 


குருநாதர் :-  எவை என்று அறிய புறப்படுவோம் என்று பின் மயில் மீது எதை என்று அறிய எதை என்று அறிய மீண்டும் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப சரி நம்ம அங்கிருந்து என்ன பண்ணுவோம்? 


அடியவர் 1 :-  இங்க வருவோம்


சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வருவோம்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டாரு? 


அடியவர் 1 :-  இங்க வந்துட்டாரு 


சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வந்துட்டார். இங்க வந்து என்ன பண்ணாரு? இங்க வராருங்க ஐயா 


அடியவர் 1 :-  ம் 


சுவடி ஓதும் மைந்தன் :- மயில் மீது வராரு. 


===========================

# நாகங்களாக மாறிய தேவதைகள்……

===========================



குருநாதர் :-  எதை என்று கூற அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பல தேவதைகள் கூட, நிச்சயம் துணைக்கு வருகின்றார்கள் நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :- அத்தேவதைகள் கூட இப்பொழுது எதை என்று கூற இங்கு நிச்சயம் தன்னில் கூட பல ஆண்டுகள் வாழ்ந்த, நிச்சயம் தன்னில் கூட பின் நாகங்களாக மாறி, நிச்சயம் வேலையும் காத்துக் கொண்டிருக்கின்றார். முருகனையும் காத்துக் கொண்டிருக்கின்றார் குழந்தை மீண்டும் ஏதாவது விளையாட்டு செய்துவிடுவானா என்று எண்ணி. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப முருகர் அங்கிருந்து மயில் மேல வரும்பொழுது என்ன பண்ணாரு தேவதைகள் அவங்க வந்து சின்ன பையன் எல்லாம் வந்து அம்மாவா பாருங்க அப்ப வந்து தேவதைகள் எல்லாம் என்ன பண்றாங்க வந்து?

அடியவர் 2 :- கூட வராங்க 


சுவடி ஓதும் மைந்தன் :- கூட வராங்க . அப்ப முருகர் வந்து இங்க வந்துட்டாரு வந்து. அந்த இப்ப வந்து அந்த தேவதைகள் எல்லாம் என்ன பண்றாங்க இங்க வந்து? 


அடியவர் 3 :- கூட இருந்து பார்த்துக்கிறாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவங்க நாகங்களா மாறிக்கிட்டாங்களாம். இன்னும் கூட நாகங்களா மாறிவிட்டு, அந்த தேவதைகள் இங்க இருக்கிறாங்க. 


குருநாதர் :-  எதை என்று அறிய முருகன் மீண்டும் பின் விளையாட்டாக ஏதாவது செய்துவிடுவானா என்று எண்ணி அங்கங்கு தவம் புரிந்து கொண்டிருக்கின்றார், பாம்பின் வடிவமாகவே. 



சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப முருகன் திரும்பியும் ஏதாவது விளையாட்டு செய்துவிடுவானா என்று எண்ணி, பாம்பு பாம்பு இருக்குல்ல, பாம்பு… அதுவா மாறி அந்த தேவதைகள், அங்கங்க. 


அடியவர் 1 :- தவம் செஞ்சு 


சுவடி ஓதும் மைந்தன் :- தவம் செஞ்சுட்டு இருக்காங்களாம் இன்னும் கூட. 


குருநாதர் :-  எதை எவை என்று புரிய இதனால் பின் முருகனுக்கு கூட எவை என்று அழகாக அறிந்து கூட பின் அனைவரையும் அழைத்து பின் சந்தோஷமே. ஏது என்று புரிய அனைவரும் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் எப்படியோ நான் இங்கு வந்துவிட்டேன். எனக்கு இதுதான் நிச்சயம் நிம்மதி என்று முருகனும் கூற. 


சுவடி ஓதும் மைந்தன் :-  முருகன் என்ன பண்ணாரு? நீங்க வந்துட்டீங்க இங்க. எனக்கு இங்கதான் நிம்மதி. நிம்மதி எனக்கு. ரொம்ப புடிச்சிருக்குது. நான் இங்கதான் இருப்பேன். எனக்கு ரொம்ப புடிச்சிருக்குதுன்னு சொல்லிட்டு யார் சொல்றாரு?  


அடியவர் 1 :- முருகன் சொல்றாரு.


சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் சொல்றாரு.


குருநாதர் :-  எதை என்று புரிய நீங்களும் இங்கே இருங்கள். நாம் அனைவரும் சேர்ந்து விளையாடுவோம் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எல்லா சித்தர்களும்,  நான் இங்க வந்துட்டு எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது. நீங்களும் இங்கேதான் இருக்கணும். அப்படின்னு சொல்லிட்டு வந்து முருகர் கேட்டுக்கொள்றார். 




குருநாதர் :-  ஆனாலும் பின் அதாவது சித்தர்கள் எவை என்று புரிய ஞானிகள் ரிஷிகள் பின் அதாவது பின் அதாவது கயிலை தன்னில் கூட பின் எதை எவை என்று புரிய தாயும் தந்தையும் காத்திருப்பார்கள். இதனால் யாங்கள் அங்கு சென்று எதை என்று கூற. 


குருநாதர் :-  (முருகப்பெருமான் பதில்) ஆனாலும் நீங்கள் சென்றால் மீண்டும் ஒரு விளையாட்டை யான் விளையாடுவேன். அதற்கு தயாரா நீங்கள்? 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப,  எப்பா முருகா !!!!!! ஏதோ வந்தோம். நீ விளையாட்டு எல்லாம் ஏதேதோ பண்ணிட்ட. 


அடியவர்  :- திரும்ப நாங்க போகாட்டி கைலாயத்துல தனியா இருப்பாங்க நாங்க போகணும். 


சுவடி ஓதும் மைந்தன் :- நாங்க போகணும். அதனால எங்களை என்னை விட்டுடுப்பான்னா…. திருப்பி என்ன சொல்றாரு முருகர்?  நீங்க போனா திரும்பவும் நான் விளையாட்டு காட்டுறேன் சொல்லிட்டு என்ன பண்றாரு? 


அடியவர்  :-  கூப்பிடுறாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :- அவர் கூப்பிடுறாரு 


===========================

#  சித்தர்கள் எடுத்த மகத்தான முடிவு… 

===========================




குருநாதர் :-  எவை எது என்று புரிய அறிய இதை அறிய இதனால் பின் அதாவது அழகாக இங்கேயே எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் அறிந்தும் கூட. 


குருநாதர் :- அதனால் எவ்வாறு என்பதை எல்லாம் அதனால் மீண்டும் பின் அனைவரும் சேர்ந்து அதாவது பின் முருகனே அறிந்தும் கூட நீயும் குழந்தாய். 


குருநாதர் :- அதனால் பின் எதை என்று கூட பார்த்துக் கொள்வதற்கு யாங்கள் ஏதோ ஒன்று எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் எங்களை அதாவது பின் அறிந்தும் புரிந்தும் கூட ஏதோ ஒரு உயிரினாக மாற்றி பின் உன்னை காத்துக் கொண்டே இருக்கின்றோம். 


குருநாதர் :- அவற்றுக்காவது, ஏனென்றால் உங்க தந்தை பேச்சை கேட்டு நிச்சயம் யாங்கள் சேவை செய்ய வேண்டும். அது போல் உங்களுக்கும் ஏது என்று புரிய முருகா இங்கே இருந்து, ஏதோ ஒரு ரூபத்தில் யான் உங்களுக்கு சேவை செய்கின்றோம். அது போதுமா என்று நிச்சயம் தன்னில் கூட 


அடியவர்  :-  அவங்க கேக்குறாங்க. நாங்க அப்பாவையும் போய் பார்க்கணும். இங்கேயும் இருக்கணும். அதனால ஏதாவது ஒரு ரூபத்துல இங்க சேவை செய்றோம். அதுக்கு எங்களுக்கு உத்தரவு தாங்க அப்படிங்கிறாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்றாரு?  நாங்க சில சில ஜீவராசிகளா இங்க இருந்து.. அதாவது சித்தர்கள் உடம்பு எங்க வேணாலும் வச்சிட்டு போக முடியும். ஐயா புரியுதுங்களா? அதனால வந்து.. 


===========================

#  வேலொடு மலை மர்மங்கள்.

# பின் வரும் வாக்கை பலமுறை படியுங்கள்…

===========================



குருநாதர் :-  எதை எவை என்று புரிய இதனால் நிச்சயம் அறிந்தும் கூட இதனால் முருகனும் கூட சரி எவை என்று புரிய. அதாவது நீங்கள் தான் அனைவருமே தெரிந்திருப்பீர்கள் அல்லவா? பின் கூடுவிட்டு கூடு. அதாவது எவை என்று வித்தைகள். அதாவது உயிர்கள் அனைத்தும் விட்டுவிட்டு பின் நிச்சயம் எவை எதை அதாவது கூண்டோடு எவை என்று அறிய நிச்சயம் பின் உடம்பை விட்டுவிட்டு நிச்சயம் எது என்று உயிரோடு எது என்று மீண்டும் ஏதோ உடம்பை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம். 


குருநாதர் :- இதனால் அறிந்தும் கூட எப்பொழுதும் பின் அறிந்தும் கூட இதனால் இப்படி நீங்கள் இருந்தால், வருவோருக்கெல்லாம் பின் மனதார என் மனதும் சந்தோஷம். அனைவருக்கும் அருளாசிகள் என்னென்ன வேண்டுமோ அவை தந்து விடுகின்றேன் என்று. 




குருநாதர் :-  நிச்சயம் பின் அதுபோலே ஆகட்டும் நிச்சயம் யாங்கள் பின் உடம்பை எது என்று அறிய. அதனால்தான் உடம்பு பல வகையான எது என்று கூற பின் ரிஷிகளும் சித்தர்களும் இங்கு வைத்து நிச்சயம் இன்னும் கூட அங்கங்கு தியானங்கள் பின் எவை என்று கூட செய்து கொண்டே இருக்கின்றோம் முருகனுக்காக. 


குருநாதர் :- நிச்சயம் முருகன் என்ன ஆசைப்படுகின்றானோ அவையெல்லாம் நிச்சயம் வருவோருக்கெல்லாம் மனமகிழோடு ஏன் எதற்கு என்று அறிய நிச்சயம் பின் ஆசிகள் தந்து கொண்டே இருக்கின்றோம். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாரு? சித்தர்கள் அங்கங்க என்ன பண்றாரு?  இன்னும் நிறைய ஞானிகள் தியானம் செய்துகொண்டே இருக்காங்க. அப்ப முருகருக்கு மனமகிழ்ச்சி ஏற்படுத்தினே இருக்காங்க. அப்ப வருவோருக்கு, யாரெல்லாம் வராங்களோ, அவங்களுக்கு என்னென்ன தேவையோ,  அதெல்லாம் வந்து கொடுத்து அனுப்பிச்சுட்டே இருக்கார்.


===========================

#  உலகம் அறியாத இலங்கை தேசத்தின் சிறப்புகள்….

===========================


குருநாதர் :-  எதை என்று அறிய அறிய தேசம் அவ்வளவு சிறந்தது. எவை என்று கூற பின் முருகன் அப்படியே சுற்றுவான் மயில் மீது அங்கங்கு ஏது என்று கூற ஏறி. 


குருநாதர் :- இதனால் எவை என்று கூற பின் பலமாக பின் மகிழ்ச்சியுடனே பின் அங்கங்கு சென்றால் “அனைவருக்கும் உயர்வுகள் தான் எப்பொழுதும் கூட” நிச்சயம். 


குருநாதர் :- இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் கூட சிலர் இங்கே இருக்கின்றார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப முருகர் வந்து அப்படியே சுத்துவாராம். இங்க மலை மேல ஏறுனா அப்படியே ஒரு ரவுண்டு வருவாராம். அப்ப எங்கெல்லாம் முருகர் கோயில் அங்க இங்க தேசத்துல இருக்குதோ, அங்கெல்லாம் யார் இருக்காரு? உண்மையாகவே 


அடியவர் :- முருகன் இருக்கிறார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  முருகன் இருக்கிறார்.  இன்னும் அந்த தேவதைகள் பார்த்துட்டு காத்துட்டே இருக்குது. இன்னும் சித்தர்கள் தவம் செஞ்சுட்டு இருக்காங்க. அப்ப அந்த சித்தர்கள் , தேவதைகள் என்ன பண்ணுவாங்களாம்? வந்து என்ன தேவையோ அதை வந்து கொடுத்துக்கொண்டே இருக்காங்க.  கொடுத்துருவாங்களாம் அப்ப சில பேருக்கு அது மாதிரி அனுபவப்பூர்வமா உணர்ந்து இருக்காங்களாம் இங்க உள்ள சிலர்.  


சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா  இப்ப கபிலத்தை கூட அங்க கூட அவ்வளவுதான் அவர் சுத்துற இடம்தான். அப்ப இன்னொரு இடம் கதிர்காமம் அதுவும் அவரோட இடம்தான். அப்ப இதுவும் அப்ப இப்படி வரும்பொழுது இங்க யாரெல்லாம் போறீங்களோ அவங்களுக்கு என்ன தேவையோ அதை கொடுத்துட்டு தான் இருக்கிறார்ப்பா. முருகன் சந்தோஷமா வந்து அப்படின்னு சொல்றார். 


குருநாதர் :-  பின் ஏனென்றால் விளையாட்டு பிள்ளை. கேட்டவுடன் அனைத்தும் கொடுத்து விடுவான். அவ்வளவுதான் நீங்கள் எதை என்று கூட பெற்றுக் கொண்டால் ஆனால் சரியா தவறா என்று நீங்கள் யோசித்து செய்ய வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா வரங்களும் கொடுப்பாங்க ஐயா. 


குருநாதர் :-  அப்பனே பல பேருக்கு இவ்வாறாக கொடுத்திருக்கின்றான் அப்பனே முருகன். இங்கு இருப்பவர்களுக்கும் சில பேருக்கு கொடுத்திருக்கின்றான் அப்பனே. யான் மறைமுகமாக பெயரை சொல்லவில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப இங்க இருக்கிறவங்களுக்கு தான் பல வரங்கள் கொடுத்துட்டார் முருகர் வந்து. ஆனால் பெயர் நான் இங்க சொல்ல விரும்பல என்றார் அகத்தியர் வந்து. 


குருநாதர் :-  அப்பனே இவ்வாறத்தான் அப்பனே இன்னும் அப்பனே ஏது என்ற அப்பனே இதை சுருக்கமாகத்தான் யான் சொன்னேன் அப்பனே.  இன்னும் அப்பனே விளையாட்டு தலங்கள் இருக்கின்றது அப்பனே ஏன் எதற்காக முருகன் இங்கு வந்தான்? அப்பனே எதற்காக ஈசனும் பார்வதியும் அப்பனே பின் இவ்வாறாக அப்பனே திருவிளையாடல்  நடத்தினார்கள்? என்பதை எல்லாம் இன்னும் அப்பனே வாக்கியத்தில் எடுத்துரைப்பேன். 


ஆசிகள் ! 


ஆசிகள் !!


அனைவருக்கும் கவலை இல்லை. 




குருநாதர் :-  அப்பனே பின் இவ்வாறாக அப்பனே முருகன் எதை என்று அறிய அப்ப நிச்சயம் தன்னில் கூட சொல்ல வந்தேனே அப்பொழுதே முருகன் கேட்டுக்கொண்டே தான் இருக்கின்றான், அகத்தியன் என்ன சொல்லப் போகின்றான் என்று. 


அதனால் அப்பனே பின் உங்களையும் பார்த்துவிட்டான் அப்பனே. அனைவருக்குமே ஆசிகள். என்னென்ன வேண்டுமோ இப்பொழுது பின் நீங்கள் அவனிடத்தில் சமர்ப்பித்து, அப்பனே பின் அழகாக ஆசிகள் பெற்றுக்கொண்டு அப்பனே அனைத்தும் நடக்கும். 


ஆசிகள் ! 


ஆசிகள் !!



குருநாதர் :-  எங்களுடைய ஆசிகளும் கூட சித்தர் பெருமக்களும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்கெல்லாம் முருகன் இருக்கின்றானோ அங்கெல்லாம் யாங்கள் இருப்போம், ஆசிகளோடு.


ஆசிகள் ! 


ஆசிகள் !!


பெரும் ஆசிகள் !!!


அடியவர்கள் :- (முருகா   அரோகரா !!!!  அரோகரா !!!!  அரோகரா !!!! )


அடியவர் :- கடைசியா என்ன சொன்னாங்க?


சுவடி ஓதும் மைந்தன் :-  பெரும் ஆசிகள். பெரும் ஆசிகள்.


(பெரும் ஆசிகள் என்ற ஆசி வாக்கு மிகவும் அரிதாகும் அன்று அடியவர்கள் அறியவும். இவ் இடத்தின் மகிமையை உணர்ந்து கொள்ளுங்கள்.) 


அடியவர் :-  அந்த வார்த்தையை இப்பதான் முதல் முறையாக கேட்குறேன் 


சுவடி ஓதும் மைந்தன் :-   இன்னும் கூட என்ன அகத்தியன் என்னதான் சொல்ல போறாருன்னு முருகன் கேட்டுட்டு இருக்காராம். அப்ப உங்களையெல்லாம் பார்த்துட்டு தான் இருக்காங்களாம். எல்லாரையும் முருகர் பார்த்துட்டு தான் இருக்கிறார். அப்ப தேவையான விருப்பங்கள் அவங்களிடத்தில் கேளுங்கள்ன்றாருமா. உங்களுக்கு தேவையான என்னென்ன விருப்பங்களோ அவங்க எல்லாம் நல்லா இப்ப பூஜை பண்ணுவாங்க. இல்ல நல்லா வேண்டிக்கிட்டு போங்க. எல்லாமே நல்லா நடக்கும்ன்றாரு அகத்தியப் பெருமான். 


அடியவர்கள் :- வெற்றிவேல் முருகனுக்கு    அரோகரா !!!!  அரோகரா !!!!  அரோகரா !!!!


( ஆலய பூசை ஆரம்பமானது) 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த ,  முருகப்பெருமானின் வேல் திருவிளையாடல்  வாக்கு நிறைவு. )



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.


சித்தர்கள் ஆட்சி - 625 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - முருகப்பெருமானின் வேல் திருவிளையாடல் - பகுதி 1

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு  - முருகப்பெருமானின் வேல் திருவிளையாடல் - பகுதி 1


நாள் :-  பங்குனி உத்திரம் 31/3/2026 , செவ்வாய்க்கிழமை

இடம் :-  வேலோடு  மலை முருகன் ஆலயம், சித்தான்டி, கிழக்கு மாகாணம், இலங்கை.


கூகிள் மேப் லிங்க் (google map link) :- 

https://maps.app.goo.gl/tTU46Rq7V4Um8pf2A



இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

===========================


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


குருநாதர் :-  அப்பனே, அன்பாகவே அப்பனே, பின் அழைத்தாலே அப்பனே, சந்தோஷமே முருகனுக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, அன்பாக.. முருகா என்று சொன்னாவே, அவருக்கு ரொம்ப சந்தோஷம். 


குருநாதர் :- அப்பனே, நலங்கள். அப்பனே, அனைத்து சித்தர்களும் கூட அப்பனே இங்கு, அப்பனே, தவம் ஏற்றியுள்ளோம். அப்பனே, எதை அன்று அறிய , அப்பனே, ஏன், எதற்காக, பல அப்பனே, இப்ப தேவர்களும் அப்பனே இங்கு வந்து, அப்பனே, பல வழியிலும் கூட முருகனை துதித்து பல வெற்றிகள் பெற்றனர் என்பதை அப்பனே, ஏன், எதற்கு என்றெல்லாம் செப்புகின்றேன் இங்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா  புரியுதுங்களா, நாம அப்படியே படிச்சுட்டு போட்டுமா?


அடியவர் 1 :- அர்த்தம் சொல்லுங்க, ஐயா.


சுவடி ஓதும் மைந்தன் :-  பல சித்தர்களும் வந்து, பல ஞானிகளும் வந்து இங்க தவம் செஞ்சிருக்காங்க வந்து. ஏன் செஞ்சிருக்காங்க? நான் அடுத்து  சொல்லப்போறேன். தேவர்களும் இங்க வந்திருக்காங்க. ஏன்னு நான் சொல்லப்போறேன் என்று  இப்ப அகத்திய முனிவர் சொல்றாரு. 


குருநாதர் :-  அப்பனே, எவை, ஏது என்று அறிய, அப்பனே, முருகன் சிறு விளையாட்டாக, அதாவது சிறுபிள்ளைத்தனமாக ஏதோ செய்து விடுவான் அப்பனே. ஆனால் கடைசியில், அப்பனே, அதுவும் பெரும் வினையாக போகும் அப்பா ஈசனுக்கு. இதுவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தின் கட்டாயமாக இருக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, முருகர் வந்து விளையாட்டுக்காக எதையோ  செஞ்சுடுவாராம், ஆனா அதுவே என்ன ஆகும்?


அடியவர் 1 :- பெரிய பிரச்சனையா வந்து நிற்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால அதே பெரிய பிரச்சனையாக நிற்கும், ஆனா அந்த பிரச்சனை என்ன ஆகும்?  மக்களுக்கு நன்மை செய்ய மாதிரி தான் இருக்கும்ன் என்று சொல்கின்றார்.




குருநாதர் :-  அறிந்தும் எதை என்று புரிய, இதனால் பின் அறிந்தும் உண்மைதனை, ஏன், எதற்கு என்று கைலாய மலை தன்னில் கூட, பின் சிவன், பார்வதி, பின் அறிந்தும் கூட அனைவரும், பின் அதாவது முனிவர்களும் தேவர்களும் எண்ணற்ற, பின் அனைவரும், பின் இறை பால் பக்தி இருப்பவர்கள் எல்லாம் வரச் சொல் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, கைலாய மலையில ஈசனும் பார்வதி தேவியும் என்ன சொல்றாங்க?  கைலாயத்துக்கு எல்லோரையும் அழைக்கிறாங்க. யாரெல்லாம் நல்ல பக்தியில இருக்கிறாங்களோ எல்லாரும் வர வை. எல்லா ஞானிகளும், எல்லாம் முனிவர்களும், எல்லாரும், சித்தர்களும் வரவேண்டும் என்று சொல்கின்றார்.


===========================

# முருகப் பெருமானின் வேல் திருவிளையாடல் ஆரம்பம்…

===========================



குருநாதர் :-  அறிந்தும் எதை என்று புரிய இவ்வாறாக அனைவரும் வந்தனர். ஆனாலும் முருகன் பின் உறங்கிக் கொண்டிருந்தான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் வந்துட்டாங்க வந்து ஆனால் முருகன் என்ன பண்ணாரு? 


அடியவர் 1 :-  தூங்கிட்டாரு 


சுவடி ஓதும் மைந்தன் :-  தூங்கிட்டு இருக்காரு வந்து.. 


குருநாதர் :-  எதை எவை என்று அறிய ஆனால் பின் எதை என்று புரியாமல் கூட ஆனால் விழித்துப் பார்த்தான் எதை என்று கூற  அனைவரும் வந்தனர். ஆனால் முருகனுக்கு பின் கோபம் பின் அதிக அளவு வந்துவிட்டது. அனைவரும் அழைத்தார் தந்தை. ஆனால் நிச்சயம் அதாவது தாய் தந்தையும் என்னை அழைக்கவில்லையே என்னை எழுப்பவில்லையே என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  முருகருக்கு விளையாட்டுத்தனமாக  என்ன பண்ணிட்டாரு?  தூங்கிட்டாரு. அதுக்கு என்ன சொல்றாரு வந்து? 


அடியவர் 1 :- என்னை கூப்பிடல. 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்னை கூப்பிடவே இல்லையே. எல்லாரும் கூப்பிட்டாரு எங்க அம்மாவும் அப்பாவும்.. 


அடியவர்  :- அம்மாவும் அப்பாவும் எல்லோரையும் கூப்பிட்டாங்க. ஆனா என்னை கூப்பிடலைன்னு அவருக்கு … 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்னை கூப்பிடலையேன்னு சொல்லிட்டு.. 


அடியவர் 1 :-  கோவம் வந்துச்சு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  கோவம் வந்துச்சு. 



குருநாதர் :-  அறிந்தும் அனைவரும் மத்தியில், பின் தாயே தந்தையே நில்லும். அனைவரும் அழைத்திருக்கின்றாய். பின் அதாவது இங்கே ஒருவன் இருப்பதை மறந்துவிட்டாயா நீங்கள் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா சொல்லுங்க ஐயா 


அடியவர் :-  அதாவது முருகன் கேக்குறாரு எல்லாத்தையும் கூப்பிட்டீங்களே. நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்துட்டீங்களே, பின்னே சிவன் கிட்டயும் சக்தி கிட்டயும்  அவர் போயிட்டு கேக்குறாரு அவர். 


சுவடி ஓதும் மைந்தன் :- கேக்குறாரு வந்து 




குருநாதர் :-  எவை என்று புரிய அப்பொழுது யான் பிள்ளை இல்லையா? எதை என்று புரிய அதாவது எவை என்று அனைவரும் நீங்கள் தான் சொன்னீர்களே. அழகான பிள்ளையே!!!!!!! உலகத்தை காக்க வந்தவனே!!!!!! என்றெல்லாம் நீங்கள் தான் என் கொஞ்சி  கொஞ்சி எனை வளர்த்தீர்களே.  இப்பொழுது மறந்துவிட்டீர்களா? என்று எண்ணி. 


அடியவர்  :-  முருகன் கேட்டாரு. நான் அழகான பிள்ளை. இந்த உலகத்தை காப்பாத்த வந்திருக்கேன், எல்லாம் சொன்னீங்களே. இப்படி சொல்லிட்டு நீங்க என்னை கூப்பிடாம விட்டீங்களேன்னு கேக்குறார். 


குருநாதர் :-  எது ஏது என்று அறிய ஆனாலும் அனைவருக்கும் நீங்கள் கட்டளையிட போகின்றீர்கள் என்பதை எல்லாம் யான் அறிந்திருக்கின்றேன். ஆனாலும் என்னையும் பின் எழுப்பி, நிச்சயம் பின் எவை என்று அமர்த்தி வைத்திருக்கலாமே நீங்கள்?  என்று கோபமுடன் பின் பேசினான். 


அடியவர்  :- யார் யாருக்கு என்னென்ன கட்டளை கொடுக்க போறீங்கன்னு எல்லாம் எனக்கு தெரியும். அப்படி இருந்தும்  என்ன வந்து நீங்க எழுப்பாமல், அவங்களுக்கு கட்டளை கொடுக்க போறீங்களே…. அப்படிங்கிற ஒரு கோபத்தில்  அவர் கேக்குறாரு. 




குருநாதர் :-  அனைவரும் சித்தர்களும் எதை என்று கூட ஞானியர்களும் பின் பல பின் தேவர்களும் எதை என்று புரிய, நிச்சயம் முருகனே பின் அனைத்தும் நீதான். ஏதோ தவறு நடந்துவிட்டது என்று பின் உறக்க கத்தினார்கள் அனைவரும் சேர்ந்து. 


அடியவர்  :- பாக்குறாங்க தேவர்கள் சித்தர்கள் எல்லாம். இது ரொம்ப பிரச்சனை ஆயிப்போகுதுன்னு சொல்லி, எல்லாரும் போயிட்டு, முருகன் கிட்ட என்ன சொல்றாங்க? முருகா எல்லாமே நீதான் இங்க. நீ இல்லாம எதுவுமே இல்லை அப்படின்னு முருகன் கிட்ட சரணடைகிறாங்க. 


குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தாயும் தந்தையும் இப்படியும் நினைத்திருப்பார்கள் அல்லவா?  குழந்தை உறங்கட்டும் என்று?  என்று பின் சித்தர்கள் அனைவரும் பின் ஒன்று கூடி. 


அடியவர்  :-  அவங்க என்ன சொல்றாங்கன்னா நீ சின்ன குழந்தை. நீங்க தூங்கி இருப்பாங்கன்னு நினைச்சு, அவங்க உங்களை எழுப்பாம விட்டுட்டாங்க. இதை பெருசு படுத்த வேணாம்னு முருகன்ட்ட சொல்லி பாக்குறாங்க. 


குருநாதர் :-  எது என்று புரிய அறிய யான் சிறுபிள்ளையா ????? நிச்சயம் பின் அறிந்தும் கூட. 


பின் அப்படி இல்லை. நீங்கள் தான் அனைத்திலும் வல்லவன் என் குழந்தை என்றெல்லாம் எதை என்று, அதாவது பின் நீங்களே சொன்னீர்கள் என்று சித்தர்களை பார்த்து, எவை என்று யான் எது என்று புரிய 


அடியவர்  :-  முருகன் சொல்றாரு. நான் வந்து சின்னவன் இல்ல. எனக்கு எல்லாம் தெரியும். ஆனா எல்லாம் தெரிஞ்சிருந்தும், நீங்க இந்த நேரத்துல இந்த மாதிரி சொல்றது, என்னால ஏத்துக்க முடியாது அப்படிங்கிறாரு. 


குருநாதர் :-  எது என்று புரிய அனைவரும் என்னை ஏமாற்றுகின்றீர்கள் என்று பட்டத்தை கட்டிவிட்டான் முருகனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் சேர்ந்து? 


அடியவர்  :-  என்னை ஏமாத்திட்டீங்கன்னு சொல்லிட்டார்  அவர். 




குருநாதர் :-  எதை எவை என்று புரிய, யான் இனிமேல் கைலாயத்தில் தங்கப்போவதில்லை என்று நிச்சயம் தன்னில் கூட. 


அடியவர்  :-  இனிமேல் நான் கைலாயத்தில் இருக்க போவதில்லை. அப்படின்னு முருகன் சொல்லிட்டார். 


குருநாதர் :-  எவை என்று புரிய எந்தனக்கு பிடித்தார் போல் பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய, எங்கு பின் சமநிலை இருக்கின்றதோ அங்கு சென்று விடுகின்றேன் யான். தாயும்  வேண்டாம். தந்தையும் வேண்டாம். யாரும் வேண்டாம் என்று. 


அடியவர்  :-  அவர் என்ன செய்றாரு?  எனக்கு தாய் வேணாம். தந்தையும் வேணாம். நான் எங்க அமைதியா இருக்கோ, அந்த இடத்துக்கு போயிருவேன் அப்படிங்கிறாரு.


===========================

# அன்பு அகத்திய மாமுனிவரின் அறிவுரை, சமாதானம்.

===========================


குருநாதர் :- எதை என்று அறிய எப்பொழுது ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் அறிந்தும் கூட பின் யானும் கூட பின் அதாவது பின் எதை என்று கூற,  இப்படி எல்லாம் பேசக்கூடாது சிறுவயதாக இருந்து என்று 


சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியரும் சொல்றாரு. இப்படி எல்லாம் பேசக்கூடாதுப்பா. அகத்தியர் அவர்கிட்ட சொல்றாரு. என்ன சொல்றாரு?


அடியவர் 1 :-  சின்ன பிள்ளை 


சுவடி ஓதும் மைந்தன் :- நீ சின்ன பிள்ளை. இப்படி எல்லாம் தந்தை  கிட்ட பேசக்கூடாது அப்படினு  சொல்லிட்டு என்ன பண்றாரு? 


அடியவர்   :-  சமாதானப்படுத்துறார் 


சுவடி ஓதும் மைந்தன் :-  சமாதானப்படுத்துனார் 


குருநாதர் :-  எதை எவை என்று புரிய இருப்பினும் பின் தாய் தந்தையர் ஒரு வார்த்தை பேசுகின்றார்களா என்ன? என்று. 


அடியவர்   :-   இவ்வளவு நடந்தும்,  அம்மா அப்பா எதுவும் இன்னும்  பேசல தானே அப்படிங்கிறாரு அவர். 


===========================

#  ஆதி ஈசன் , அன்னை பார்வதி தேவியின் திருவிளையாடல். 

===========================



குருநாதர் :-  ஏன் எதற்கு எவை என்று புரிய ஆனாலும் நிச்சயம் இத்தேசம்  (இலங்கை) அழியப்போகின்றது என்பதை எல்லாம் பின் முன்கூட்டியே ஈசன் பார்வதிக்கும் தெரியும். இவையெல்லாம் ஒரு திருவிளையாடலே என்பதை நிச்சயம் தன்னில் கூட,பின் ஈசன் பார்வதிக்கும். 


அடியவர்   :- அதாவது தேசம் அழியப்போவது. இதெல்லாம் ஒரு திருவிளையாடல் செஞ்சு முருகனை ஏதோ ஒரு காரியத்துக்கு அனுப்புறதுக்காக செய்யப்பட்ட ஒரு திருவிளையாடல் இதெல்லாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆம்…. 


குருநாதர் :-  அறிந்தும் எது என்று புரிய பின் யானும் உணர்ந்தேன். இவை நிச்சயம் அதாவது ஈசன் பின் எப்படியாவது திருவிளையாடல் நடத்துவான். 


அடியவர்   :-  இது எல்லாமே இறைவனுடைய திருவிளையாடல் அப்படிங்கறத அவர் புரிஞ்சுக்கிறார் 


சுவடி ஓதும் மைந்தன் :-   அகத்தியரும் புரிஞ்சுக்கிறார் வந்து. 




குருநாதர் :-  ஆனாலும் ஏன் எதற்கு எவை என்று புரிய அதேபோலத்தான் கலியுகத்தில் ஈசனை நம்பி நம்பி ஒருவருக்கெல்லாம் நிச்சயம் சில கஷ்டங்களை கொடுத்து கொடுத்து பார்க்கின்றான். ஆனால் கடைசியில் நிச்சயம் பின் எதை என்று புரிய எவை என்று அறியாமல் நிச்சயம் பின்னோக்கி சென்று விடுகின்றான். இதனால்தான் வினைகள் பல சேர்கின்றது மனிதனுக்கு. 


அடியவர்   :- அதாவது ஈசன் நோக்கி வரும்போது மக்களுக்கு கஷ்டம் வருது. ஆனா அந்த கஷ்டத்தை விட்டு நம்ம வெளிய வரணும்னு சொன்னா, ஈசனை நம்ம கெட்டியாக  புடிச்சுக்கணும். அப்படி பிடிக்காததுனாலதான் என்ன செய்றாரு? ஈசனும் விலகி போயிடுறாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்றாருன்னா, ஈசன் கொஞ்சம் சோதிப்பார். மனுஷனை சோதிப்பார். அப்ப சோதித்த பிறகு அதை கொஞ்சம் நம்ம என்ன பண்ணிடுவோம்? என்னடா இவ்வளவு கஷ்டம் வருதுன்னு என்ன பண்ணிருவோம்? நம்ம வந்து பக்தியில இருந்து? 


அடியவர் 1 :- விலகிடுவோம் 


சுவடி ஓதும் மைந்தன் :- விலகிடுவோம். பின்னோக்கி சென்று விடுவோம்ன்றாரு வந்து. 


குருநாதர் :-  ஆனாலும் இதைத்தன் அறிவித்து எவை என்று புரிய ஆனாலும் கந்தனும் எதை என்று கூட புறப்படுகின்றேன் தாயே தந்தையே என்று.


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கைலாய மலைத்திலிருந்து என்ன பண்றாரு முருகர்? நான் கிளம்புறேன். 


குருநாதர் :-  எது என்று அறிய, எனக்கு ஒரு தேசம் இருக்கின்றது. அங்கு செல்வேன் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- எனக்கு ஒரு தேசம் இருக்கின்றது அங்கு நான் வந்து செல்லப்போறேன்னு சொல்லிட்டு கிளம்புறார் 


குருநாதர் :-  எது என்று அறிய அனைவரும் தவிக்கின்றார்கள். ஆனாலும் நிச்சயம் பின் யார் பேச்சையும் பின் அதாவது முருகன் கேட்கவில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்றாரு? 


அடியவர் 1 :- நான் போய்தான் ஆவேன் 


சுவடி ஓதும் மைந்தன் :- நான் போய்தான் ஆவேன் 


சுவடி ஓதும் மைந்தன் :- நான் யார் பேச்சையும் 


அடியவர் 1 :- கேட்க மாட்டேன் 


சுவடி ஓதும் மைந்தன் :- கேட்க மாட்டேன் 


குருநாதர் :-  எதை அறிவித்து எதை என்று அறிய பின் அப்பொழுது போகனும் வந்து எதை என்று அறிய, நிச்சயம் பின் அவ்வாரெல்லாம் பேசக்கூடாது. பின் குழந்தாயே எதை என்று புரிய என்னுள் எவை என்று அறிய பின் உன்னைத்தானே எண்ணி இருக்கின்றேன் யான்? நிச்சயம் என் பிள்ளையாகவே எண்ணி இருக்கின்றேனே!!!!!! இப்படி எல்லாம் பேசுதல் சரியா என்றெல்லாம். 


குருநாதர் :-  அவர் கேக்குறாரு என் பிள்ளையாவே இருக்கியே. இப்படி எல்லாம் பேசுனது சரியா அப்படின்னு போகர் சொல்லி அவர் கேட்காம சொல்றாரு அவர். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா 


குருநாதர் :-  எதை என்று புரிய இவ்வாறாகவே பல வழியில் கூட பல பலவற்றை கூட கடந்து. ஆனாலும் எதை என்று அறிய அதாவது பின் முருகன் பின் அதாவது புறப்படுகின்றேன் என்று மயில் மீது ஏறி. 


அடியவர்  :- முருகன் என்ன செய்கிறார்? யாரோட பேச்சையும் கேட்காம மயில் மேல ஏறி புறப்பட்டுட்டாரு. 


குருநாதர் :-  எது என்று புரிய ஆனாலும் பின் ஒருமுறை யோசித்தான் முருகன். பார்ப்போம். பின் அனைவரும் நம் அருகே, அதாவது நிச்சயம் பின் வருகின்றார்களா என்று. 


அடியவர்  :- முருகன் யோசிக்கிறார். சரி பார்ப்போம். இவ்வளவு செஞ்சும் இங்க என் வீட்டுக்கு வராங்களா. பின்னு பார்ப்போம். அப்படின்னு அவர் டெஸ்ட் பண்ணி பார்க்கிறதுக்காக இதை செய்றாரு. 




குருநாதர் :-  எதை என்று புரிய ஆனாலும் பின் அனைவரும் தடுத்து நிறுத்தினர் ஆனாலும் பின் முருகன் என் மீது பாசம் இருந்தால் நிச்சயம் அனைவரும் என்னோடு வாருங்கள். நிச்சயம் தாய் தந்தையர் இங்கே இருக்கட்டும் என்று. என்னை எழுப்பவில்லை அல்லவா? 


அடியவர்  :- அவர் சொல்றாரு நீங்க எல்லாரையும் சமாதானப்படுத்துறீங்க. உங்களுக்கு என் மேல பாசம் இருந்தா நான் போற இடத்துக்கு எல்லாரும் வாங்க. நம்ம அம்மா அப்பாவை மட்டும் இங்க இருக்கட்டும் அப்படிங்கிறாரு. 


குருநாதர் :-  அப்பொழுது எதை என்று கூற பின்  தாய் தந்தையர் இருக்கும் இடம்தான் கைலாயமா? நிச்சயம் யாமும் கைலாயத்தை அமைப்போம் என்று விளையாட்டுத்தனமாகவே இவையெல்லாம் 


அடியவர்  :- அவர் சொல்றாரு,  ஏன் எங்க அம்மா அப்பா இருக்கிற இடம் மட்டும்தான் கைலாயமா? நானும் கைலாயம் அமைப்பேன். அப்படின்னு விளையாட்டுத்தனமா முருகன் சொல்றாரு. அவர் சொல்றாரு 


குருநாதர் :-  எதை என்று அறிய ஆனாலும் ஈசன் பார்வதியும் அமைதியாகவே இருந்தனர். ஏதும் பேசவில்லை. ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட இவ்வாறெல்லாம் பின் செய்தால்தான் நிச்சயம் தன்னில் கூட இத்தேசத்தை காக்க முடியும் என்பதை எல்லாம் ஈசனுக்கும் பார்வதிக்கும் பின் நன்றாகவே தெரியும். 


அடியவர்  :- இதெல்லாம் ஈசனும் பார்வதியும் தெரிஞ்சு தான் செய்றாங்க. ஏன்னா இந்த தேசத்தை காப்பாத்தணும்னா, முருகன் இப்படி வெளியே வந்து, ஒரு இடத்தை அமைக்கணுங்கிறதுதான் விதியா இருக்குது.


( அன்பு குருநாதர்  வாக்கு உரைக்கும் இவ்விடத்தில், இவ் நேரத்தில்  ஆலய மணி ஒலித்தது….)  


குருநாதர் :-  எவ்வாறாக எதை என்று புரிய இவ்வாறாகவே பின் மயில் மீது எது என்று அறிய, அழகாகவே எவை எதை என்று புரிய. பின் நேரடியாகவே பின் வாருங்கள் அனைவரும். செல்வோம் ஓரிடத்திற்கு என்று. 


அடியவர்  :- முருகன் என்ன செய்கிறார்? மயில்ல ஏறி எல்லாத்தையும் கூப்பிட்டுக்கிட்டு, வாங்க…. நான் எல்லாம் ஒரு இடத்துக்கு நான் செல்வோம். அப்படின்னு சொல்லி எல்லாத்தையும் கூட்டிட்டு ஒரு இடத்துக்கு வராரு அவர். 


குருநாதர் :-  மகனே எதை என்று புரிய அப்பொழுதுதான் பின் பேசுகின்றார் பின் ஈசனாரும் !!!!!.  


மகனே !!!!!! எதை என்று புரிய எதை எவை என்று எவை என்று அறிவிக்க. இதனால் என்ன பயன்? ஏது என்று அறிய? பின் எங்கு செல்லப் போகின்றாய் எங்களை விட்டு?. 


அடியவர்  :-  அப்ப ஈசன் கேக்குறாரு. நாங்க எது சொல்லியும் கேட்காம எங்களை விட்டுட்டு நீங்க எந்த இடத்துல போய் இருக்க போறீங்கன்னு கேக்குறாரு. 


குருநாதர் :-  எதை என்று புரிய என்னையும் கூட, நீங்கள் தான் இப்படி உலகத்தை காக்க வந்தவன் என்றெல்லாம் பின் ஊட்டி ஊட்டி எதை என்று புரிய.  ஆனால் எழுப்பவில்லையே அனைவரும். பின் ஏது என்று புரிய பின் அனைவரும் பின் அழைத்து பின் வந்துவிட்டு என்னை ஏன் எழப்பவில்லை தந்தையே. 


அடியவர்  :- அவருக்கு திரும்ப திரும்ப கேக்குறாரு. எல்லாரையும் வர சொல்லிட்டு, என்னை மட்டும் ஏன் எழுப்பாம விட்டீங்க. இதுக்கு என்ன காரணம்?  சொல்லுங்க? ன்னு கேக்குறாரு முருகன்.


குருநாதர் :-  எதை எவை என்று புரிய இதனால் பின் அதாவது உன் விருப்பம் போலே செய் மகனே. அறிந்தும் ஏது என்று புரியாமல் இருந்தாலும் பின் அனைவரும் இப்படி பின் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டால், யானும் பின் உன் அன்னையும் இங்கு இருப்பதா? எங்களுக்கு பின் யார் துணை? என்று. 


அடியவர்  :- நீ வந்து எல்லாத்தையும் கூட்டிட்டு போயிட்டீங்கன்னா முருகா, நானும் அன்னையும் மட்டுமா இருக்கிறது? எங்களுக்கு யார் துணை? என்று  ஈசன் கேக்குறாரு முருகன் கிட்ட. 


குருநாதர் :-  எவை எது என்று புரிய இதோ இருக்கின்றானே எவை என்று கூற. பின் அதாவது பின் எல்லா எல்லாவற்றையும் கூட சமாளிப்பது வல்லவனே பிள்ளையோன்  எதை என்று கூற.  பின் அவன் இருக்கின்றானே. அவனே உங்களுக்கு பிள்ளை என்று. 


அடியவர்  :- அவர் பிள்ளையாரை சொல்றாரு. பிள்ளையார் தான் எல்லாத்தையும் சமாளிப்பாரே. அவரே இருக்கட்டும். நான் வந்து எல்லாரையும் கூட்டிட்டு போறேன்றாரு. 


குருநாதர் :-  பின் அவனை மட்டும் எழுப்பி பின் தாயவள் மடியில் பின் உறங்க செய்துவிட்டாள். அப்பொழுது என் மீது என் மீது பாசம் இல்லையா உங்களுக்கு? ஏன் எழுப்பவில்லை? 


அடியவர்  :-  அவர் கேக்குறாரு. பிள்ளையாரை மட்டும் நீங்க மடியில போட்டு தூங்க வச்சிருக்கீங்க. ஆனா என்னை எழுப்பல. பிள்ளையாரை மட்டும் எழுப்பிட்டீங்க. அப்ப என் மேல பாசம் இல்லையான்னு கேக்குறாரு. 


குருநாதர் :-  எதை என்று புரிய, ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் ஏன் எதற்கு எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே சரி. என்னதான் உன் முடிவு? என்று. பின் ஆனாலும் பின் மகனே இவ்வாறு சென்று விடாதே. இங்கு பின் உலகம் அழியப்போகின்றது பின் கலியுகத்தில் எதை என்று புரிய மனிதன் புரிந்து கொள்ளாத தன்மைகள் எல்லாம் கிடைத்து, பாவத்தை ஈர்த்துக்கொள்ள போகின்றான் அதனால்தான் அனைவரையும் யாங்கள் அழைத்தோம் என்றெல்லாம் பார்வதி தேவியும் கூட. 


அடியவர்  :-  பார்வதி தேவியும் சொல்றாங்க கலியுகத்துல இந்த உலகத்திலிருந்து நிறைய அழிவுகள் வரப்போகுது. அதனால மக்களை காக்குறதுக்காக இவங்க எல்லாம் கூப்பிட்டு நாங்க சில விஷயங்கள் சொல்லிட்டு இருந்தோம். அதனால நீங்களும் இப்ப நம்மள விட்டு போக வேணாம்னு, அந்த அம்மா சொல்றாங்க. முருகன் கிட்ட. 


குருநாதர் :-  எதை எவை என்று புரிய இதனால் தத்துவம் அறிந்து கூட இதனால் அனைவருக்கும் எவை என்று ஒரு வேலை இருக்கின்றது. அறிந்தும் பின் அனைத்தும் கொடுக்கப் போகின்றேன் என்றெல்லாம் பின் ஈசனாரும்.


அடியவர்  :- ஈசன் சொல்றாரு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை இருக்குது. அவங்களுக்கு என்னென்ன வேலையோ, அந்த வேலைகளை அவங்களுக்கு நான் கொடுக்க போறேன். அப்படிங்கிறாரு. 


குருநாதர் :-  அதனால் நிச்சயம் மீண்டும் அறிந்தும் பின் எதை என்று முருகனும் கூட, அதாவது பின் நீங்கள் அனைவரும் அதாவது தாய் தந்தை பக்கமா? என் பக்கமா? என்று. 


அடியவர்  :- அவர் கேக்குறாரு நீங்க என்ன தாய் தந்தை பக்கமா என் பக்கமான்னு சித்தர்களை பார்த்து அவர் கேக்குறாரு. 


குருநாதர் :-  அப்பப்பா இவையெல்லாம் நல்லதற்காகத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் ஒரு திருவிளையாடல் தான் இவையும் கூட. 


அடியவர்  :-  அவர் சொல்றாரு இதெல்லாம் ஒரு திருவிளையாடல் தான். இதெல்லாம் நல்லதுக்காக தாங்க சொல்றாரு அவர். 


குருநாதர் :-  ஏன் எதற்கு எவ்வாறாக இதனால் பின் அனைவரும் பின் தேவர்களும் எதை என்று புரிய பின் முனிவர்களும் அதாவது ரிஷிகளும் சித்தர்களும் அனைவரும் அமைதியாகி  போய் அமைதியாகி போயினர் 


அடியவர்  :- இதை கேட்ட பிறகு அவங்களுக்கு வந்து தெளிவு வந்து அவங்க அமைதி ஆயிட்டாங்க 


குருநாதர் :-  எதை என்று கூற  அனைவரும் கூட இப்படி தலை பின் ஆட்போதா அப்படி பின் தலை ஆட்டுவதா என்றெல்லாம். அனைவரும் பின் அப்படியே நின்றோம். 


அடியவர்  :- இது ஒண்ணுமே சொல்ல முடியாம பேசாம எல்லா சித்தர்களும் நின்றதுல அகத்தியர் சொல்றாரு 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் அமைதியா நின்னாங்க. இப்படி தலை சாய்க்கிறதா? அப்படி தலை சாய்க்கிறதா? அதனால என்ன பண்ணாங்க? வந்து எல்லாரும் அமைதி ஆயிட்டாங்க. 


===========================

#  அன்னை பார்வதி தேவி அளித்த மகிமை புகழ் வேல்.

===========================



குருநாதர் :-  எதை எவை என்று உணர இதனால் பின் அதாவது பின் எதை என்று அறியாமல் கூட அதாவது நிச்சயம் தன்னில் கூட சரி மகனே எதை என்று அறிய. இதோடு எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பாசத்தோடு பின் அதாவது ஏதாவது ஒன்றை நான் தருகின்றேன். இவ்  வேலையாவது எடுத்துச் செல் என்று நிச்சயம். பின் வேண்டாம் வேண்டாம் என்று பின் கந்தனும் கூட. 


அடியவர்  :- அம்மா சொல்றாங்க. இந்த வேலை, சரி கொண்டு போ அப்படின்னு பாசமா கொடுக்குறாங்க. அதையும் வேணாங்கிறாரு முருகன். 


குருநாதர் :-  எதை எவை என்று புரிய ஆனாலும் எதை என்று அறிய ஆனாலும் இவையெல்லாம் அறிந்தும் கூட இதனால் பின் விளையாட்டுகளில் திறன் பெற்றவனே முருகன். எதை என்று கூற  விளையாட்டுகளிலே பல பாவங்களை போக்குபவன் பின் முருகனே.


அடியவர்  :- முருகன் தான் எல்லா விளையாட்டுகளிலும் கட்டளை செஞ்சவர். எல்லா திருவிளையாடலையும் செஞ்சு பாவத்தை போக்குறதுலயும் முருகன் தான் சிறந்தவர்.


குருநாதர் :-  (அன்னை பார்வதி தேவி வாக்கு) எதை எவை என்று அறிய எதை என்று புரிய இதனால் நிச்சயம் பின் தாயவளும் கூட, பின் குழந்தாய் அழகாக நீ உறங்கிக் கொண்டிருந்தாய். அதனால்தான் நான் எழுப்பவில்லை என்று நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  (முருகப்பெருமான் வாக்கு) அதாவது யான் குழந்தை என்று எப்படி சொல்கின்றாய் தாயே நீ ? பின் யான் வளர்ந்தவன் என்று. 


அடியவர்  :- அம்மா அவங்க சொல்றாங்க குழந்தையா நீ தூங்கிட்டு இருந்ததுனால, நான் உன்னை எழுப்பல அப்படின்னு சொல்றதுக்கு… முருகன் சொல்றாரு. நான் சின்ன பையன் என்று  எப்படி நீங்க சொல்ல முடியும்? னு அம்மாவோட அவர் வாதிடுறாரு. 


===========================

#  முருகப்பெருமான் கோபத்தில், கைலாயத்திலிருந்து  வீசி எறிந்த வேல் விழுந்த இடம் - வேலொடு மலை முருகன் ஆலயம்.

===========================




குருநாதர் :-  எதை எவை என்று அறிய பின் அதாவது மீண்டும் பின் அதாவது தாயும் பின் தந்தையும் இணைந்து இதோ வேல் ஒன்றை வைத்துக்கொள் என்று. ஆனாலும் பின் வேலை பின் வேகமாக வீசுகின்றான். பின் கையாயத்திலிருந்து பின் மடமடவென்று அது நிச்சயம் பின் பறந்து  நோக்கி அப்படியே வந்து கொண்டே இருக்கின்றது. 


அடியவர்  :- அவர் வேலை கொடுக்க, அவர் வேலை என்ன செய்றாரு? கையாயத்திலிருந்து அந்த வேலை வீசுறாராம். அந்த வேல் அங்கிருந்து அங்கிருந்து பறந்து வந்து கொண்டே இருக்காம்.




குருநாதர் :-  எதை எவை என்று புரிய இதனால் இப்படி பின் பல திருவிளையாடல்கள். ஆனால் கடைசியில் எதை என்று புரிய நிச்சயம் சத்தம் பல் மடங்கு கேட்டு இங்கே அதாவது விழுந்தது அவ்வேல். 


அடியவர்  :-  “முருகா” !!!!!! !!!!!! !!!!!! !!!!!! !!!!!! !!!!!!


( அங்குள்ள அடியவர்கள் அனைவரும்…மாபெரும் இறை திருவிளையாடல் ரகசியம் உணர்ந்து….பக்தி பரவசம் அங்கு…...)


அடியவர்  :-  அந்த வேல் விழுந்த இடம்தான் இதுன்னு சொல்றாரு ஐயா. 




( அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த  - முருகப்பெருமானின் வேல் திருவிளையாடல்  தொடரும்….. )


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.