“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, November 3, 2026

சித்தர்கள் ஆட்சி - 777 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 


அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை அன்புத் தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!! 



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  13 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4


நாள், நேரம்  :27/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


இடம் : உலக நன்மைக்காக 13 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  

https://www.youtube.com/live/PKohTFGg6R8 


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

===========================


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.  


அப்பனே அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 


( பகுதி 3 அதன் தொடர்ச்சியாக….) 


( அறுபடை வீடு கொண்ட திருமுருகா…. பாடல் பாடி முடித்த பின்னர்…..)


===========================

# முருகப்பெருமானின் பெருங்கருணை - அனைத்து பௌர்ணமி தன்னில் கூட

===========================


குருநாதர்:- அப்பனே, அம்மையே, முருகன் அனைத்தும் எதை என்று புரிய, 


பின் நிச்சயம் அனைத்து பௌர்ணமி தன்னில் கூட, 


பின் பல ஆலயங்களுக்குச் சென்று…. 


கடைசியில் முடிகின்ற தருவாயில், நிச்சயம் தன்னில் கூட… 


(திருவண்ணாமலையில்) தாய் தந்தையிடம், பின் வந்து… 


நிச்சயம் உன்னை நோக்கி, வருவோருக்கெல்லாம் அருள்கள் செய்க என்றெல்லாம் வேண்டுவான். 


இதனால், நிச்சயம் தன்னில் கூட…


முருகா!!!!!!  


இனி எங்களுக்காக எல்லாம் வேண்டி, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட… 


தாய் தந்தையிடமே என்று, மனதார, நிச்சயம் உங்கள் குறைகளை, பின் எவை என்று கூட, பின் அறிந்தும், எதை என்று விதியை மாற்ற, எவை போராடி, நிச்சயம் தன்னில் கூட. 


இதனால் மீண்டும், அதாவது நினைத்து, முருகனை, பின் அதாவது உருகிப் பாடங்கள். 


சுவடி ஓதும் மைந்தன்:- மீண்டும் வந்து, கடைசியில் என்ன சொல்றாரு, முருகனை உருகிப் பாட சொல்றாரு.


அடியவர்:- அவர் தான் ரெக்கமெண்ட் பண்ணனும்.


சுவடி ஓதும் மைந்தன்:- (ஒவ்வொரு பௌர்ணமிக்கும்) முருகர் எல்லா ஆலயத்துக்கும் போயிட்டு, கடைசில திருவண்ணாமலைக்கு எப்போ வருவாராம்? பௌர்ணமி முடியும் தருவாயில் வந்து சொல்வாராம். அப்பா!!!!! எல்லாரும் உன் கையில வந்தாங்கப்பா…. தெரிஞ்சும் தெரியாமலும் இருந்தாலும், அவங்களை மன்னித்து,  அவங்களுக்கு  எல்லாம் ஏதாவது கொடுத்துட்டு அப்பா என்று சொல்லிட்டு…. கடைசில பௌர்ணமி முடியும் தருவாயில், முருகப்பெருமான் அவர் வருவாராம்.   அதனால எல்லாரும் முருகனை நினைச்சு, உங்க அப்பா கிட்ட (அண்ணாமலையார், உண்ணாமலை அம்மையிடம் )  , எனக்காக சேர்த்து வேண்டிக்கோப்பா.  அடுத்தடுத்து பௌர்ணமி எல்லாம் வருது இல்ல…. நல்லா வேண்டிக்கோங்கன்றாரு வந்து…. முருகன் கையில வேண்டிக்கோங்கன்றாரு வந்து. 



பாடகர்:- (முருகப்பெருமான் பாடல் - பாடகர் தளுதத்து..பாதியில்..) 

(பக்தியில் பாடகர் தழுதழுத்த தருணம்….)

https://youtu.be/PKohTFGg6R8?t=16872


( பாடல் பாடி முடித்த பின்னர்….. ஒரு அம்மை அடியவரை பாட சொன்னார்கள்…..)


குருநாதர்:-  எதை என்று புரியாத, எவை என்று அறியாத, அறியாதவொன்று மூதாட்டியே எதை என்று கூற… அறிந்தும், அதாவது என் பின்னோக்கி வந்துவிட்டாய். 


ஆனாலும் எப்படி பொறுப்பது என்று வருங்காலத்தில் நீ தெரிந்துகொள்ள வேண்டும். 


அதனால் நிச்சயம் பாடிட்டு, அனைவருக்காகவும் நல்லதை எண்ணு. 


நிச்சயம் சிவபுராணத்தை பாடு. 


சுவடி ஓதும் மைந்தன்:-  அம்மா, உங்களுக்கு தான் சொல்றார். தெரிஞ்சோ தெரியாமோ, என் பின்னாடி வந்துட்டீங்க அம்மா. இனிமேலாவது வந்து அதை சொல்றார். அதனால அம்மா, ஈசனை வந்து நோக்கி ஒரு சிவபுராணம் பாடுங்கன்றார், எல்லாரும் வந்து. 



அம்மை அடியவரின் சிவபுராணம் பாடல்:- ( சிவபுராணம் பாடினார்கள்) 

https://youtu.be/PKohTFGg6R8?t=17322 


( பாடல் பாடி முடித்த பின்னர்….. …..)


குருநாதர்:-  எதை என்று அறிய எவ்வளவு பாடல்கள் பாடுகின்றாய். ஆனால் என்ன சொல்லப் போகின்றாய் நீ? 


சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லா இடத்திலும் பாடல் நீ பாடுகின்றாய் அம்மா. நீ என்ன சொல்லப் போற மக்களுக்கு?


சிவபுராணம் பாடிய அம்மை அடியவர்:- நான் என்ன சொல்லப் போறேன்? "அன்பே சிவம்" ….


குருநாதர்:-  எதை என்று புரிய எவ்வாறு என்பது எல்லாம் நிச்சயம். தன்னில் கூட தர்மத்தை பின் கடைபிடிக்கச் சொல். அனைவரையும் கூட தர்மத்தை கடைபிடித்தால் நிச்சயம் தர்மம் தன்னை காத்து, பிறரையும் காத்து, நிச்சயம் அப்பொழுது இறைவன்… அத்தர்மம் இறைவனிடத்தில் போய் நிச்சயம் கொண்டு சேர்க்கும்.


சிவபுராணம் பாடிய அம்மை அடியவர்:- அன்பே சிவம். சாப்பாடு இல்லாதவங்களுக்கு நீங்க சாப்பாடு கொடுத்தா நீங்க இறைவன். அவர் உங்களுக்கு இறைவன்.


===========================

# எல்லா பின் ஜீவராசிகளுக்கும் உணவு அளிப்பவன் இறைவனே….

===========================


குருநாதர்:-   தாயே, எதை என்று புரிய எவ்வாறு என்பது எல்லாம் உணவு அளிப்பவன். எல்லா பின் ஜீவராசிகளுக்கும் உணவு அளிப்பவன் இறைவனே. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட மனிதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நிச்சயம் சொல்லிவிட்டேன், தாயே. இதனால் அனைத்தும், அதாவது பின் ஒவ்வொரு உயிரும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இறைவனுக்கு சொந்தமானவை. அப்பொழுது நிச்சயம் இறைவன் விட்டு விடுவானா என்ன, தாயே?


சிவபுராணம் பாடிய அம்மை அடியவர்:-  இறைவன் வந்து நமக்குள்ள தான் இருக்கிறார்.


===========================

# “சைவத்தை மேற்கொண்டால் மட்டுமே புண்ணியம்” - என்று அனைவரிடமும் சொல்லுங்கள். 

===========================


குருநாதர்:-   ஆனால் மக்கள் தான் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கொன்று குவித்து உண்ணுகின்றார்கள் தாயே, நிச்சயம் தன்னில் கூட. 


உனக்கு இன்னும் புண்ணியம் பெருக வேண்டும் என்றால்…… நிச்சயம் தன்னில் கூட அனைவரிடத்திலும் யான் சைவத்தை பரப்புகின்றேன். 


அதாவது பின், அதாவது பின் 


***** திருவாசகமே ஒரு சைவம் தான். ***** 


*****  அதனால் சைவத்தை மேற்கொண்டால் மட்டுமே புண்ணியம் என்று சொல். அது அவர்களுக்கும் புண்ணியம், உன்னையும் வந்து காக்கும், உன் தலைமுறையும் காக்கும், தாயே. ***** 


அடியவர்கள்:- ( பலத்த கை தட்டல்கள் ) 



சிவபுராணம் பாடிய அம்மை அடியவர்:-  திருவாசகம் தான் உயிர். அதைத்தான் நானும் சொல்றேன். திருவாசகம் பாடினா எல்லாமே கிடைக்கும். அவர் சொல்றதையே தான் நானும் சொல்றேன். இறைவன் தினமும் திருவாசகம் பாட எனக்கு திருவருள் புரிந்திருக்கிறார். அதுவே நான் செய்த பெரிய புண்ணியம். இன்னைக்கு நான் பாடுற மேடைக்கு முன்னாலே இங்க குருநாதர் மேடை கொடுத்ததுக்கு மிகவும் நன்றி. இப்பவும் சொல்றேன், ஒவ்வொரு மூணாவது ஞாயிற்றுக்கிழமையும் குருநாதரை தரிசிக்காம இருக்கிறதுல எந்த வேலை இருந்தாலும், எனக்கு எவ்வளவு வேலை இருந்தாலும், அவரை லோபமுத்திரா தாயும் அகத்தியர் பெருமானை தரிசிச்சு, அவருக்கு திருவாசகம் பாடிட்டு தான் வெளியே எங்கேயுமே வச்சுக்கிறது. அவர் அந்த மூணாவது ஞாயிற்றுக்கிழமை அதை தவிர்க்காம போயிட்டு இருக்கிறேன். அவர் அருளால் தான், குருவின் திருவருளால் தான்.


சுவடி ஓதும் மைந்தன்:- அதனாலதான் உங்களை கூப்பிட்டாரு. டக்குனு.


சிவபுராணம் பாடிய அம்மை அடியவர்:-  குருவின் திருவருள்.


சுவடி ஓதும் மைந்தன்:-  அருமை.


https://youtu.be/PKohTFGg6R8?t=18073


சிவபுராணம் பாடிய அம்மை அடியவர்:-  ( அருமையான குருநாதர் பாடல் பாடினார்கள் )



வருவாய், வருவாய், குருநாதா !

வந்தருள் புரிவாய், குருநாதா !

வருவாய், வருவாய், குருநாதா !

வந்தருள் புரிவாய், குருநாதா !


அனுதினம் வருவாய், குருநாதா !

அனுகிரகம் செய்வாய், குருநாதா !


அனுதினம் வருவாய், குருநாதா !

அனுகிரகம் செய்வாய், குருநாதா !


மாதா, பிதா, குரு, நீதானே, 

மனக்கவலையை தீர்ப்பதும், நீதானே. 


மாதா, பிதா, குரு, நீதானே, 

மனக்கவலையை தீர்ப்பதும், நீதானே. 


நடமாடும் தெய்வமே, குருநாதா !

நலமெல்லாம் தருவாய், குருநாதா !


நடமாடும் தெய்வமே, குருநாதா !

நலமெல்லாம் தருவாய், குருநாதா !


கனவு பலித்தது , குருநாதா !

மனதும் குளிர்ந்து , குருநாதா !


கனவு பலித்தது , குருநாதா !

மனதும் குளிர்ந்து , குருநாதா !


கருணையின் கடலே, குருநாதா !

காத்தருள்வாயே, குருநாதா !


கருணையின் கடலே, குருநாதா !

காத்தருள்வாயே, குருநாதா !


கருணையின் கடலே, குருநாதா !

காத்தருள்வாயே, குருநாதா !


குருக்கடாட்சம் பரிபூரணம், 


திருச்சிற்றம்பலம்.


சுவடி ஓதும் மைந்தன்:-  சந்தோஷம்.

https://youtu.be/PKohTFGg6R8?t=18188  


அடியவர்கள்:- ( பலத்த கை தட்டல்கள் ) 


===========================

கருணைக்கடல், இதன் பின்னர் செப்பு நாணயம் வழிபாடு , கோமதி சக்கரம் வழிபாடு குறித்து பல ரகசிய வழிபாடுகளை அருளினார்கள். அவ் வாக்குகள் முன்பே பின் வரும் பதிவில் வெளிவந்தது. அடியவர்கள், பின் வரும் பதிவினை படித்து , தெரிந்து, உங்கள் இல்லங்களில் பூசை செய்து பலனடைந்து, அனைவருக்கும் எடுத்து சொல்லி, செழிப்படையுங்கள். 


https://siththarkalatchi.blogspot.com/2026/09/747.htm 


சித்தர்கள் ஆட்சி - 747 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1 ( செப்பு நாணயம் வழிபாடு , கோமதி சக்கரம் வழிபாடு )

===========================


https://youtu.be/PKohTFGg6R8?t=18444 


குருநாதர்:- நிச்சயம், தன்னில் கூட இறைவன் அனைவருக்குமே சமமான அறிவை கொடுத்திருக்கின்றான். ஆனால் ஒருவன் பயன்படுத்துகின்றான். மற்றவன் ஏன் பயன்படுத்துவதில்லை சொல்லுங்கள், பார்ப்போம்?


சுவடி ஓதும் மைந்தன்:-  இறைவன் படைப்பில் எல்லாம் சமம்; அறிவை சமமாதான் கொடுத்திருக்கார். ஆனா ஒருத்தன் பயன்படுத்துறான், இன்னொருத்தன் ஏன் பயன்படுத்துறதில்லை? சொல்லுங்க, பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, உங்களைதான் கேட்கிறார். ஐயா, எடுத்துட்டு போங்க. ஐயா, மைக் கொடுங்க. ஐயா, யார் யார் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.


கூட்டுப் பிரார்த்தனை ஒருங்கிணைப்பு அடியவர்கள்:-  ( அனைவரும் பேச மைக் எடுத்து கொடுக்க ஆரம்பித்தனர்…..)  


அடியவர் 4 :-  கர்ம வினைகள்.


குருநாதர்:-  தாயே, எவன் என்று புரிய அனைவரும் சொல்வார்கள், இதைத்தான். நீயும் அப்படியேதான் சொல்கின்றாய். 


சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாரும் கர்ம வினைன்னு சொல்லிடுவாங்க. அப்படி இல்லை என்றார்.


அடியவர் :- வேற?


===========================

# உங்கள் அறிவின் மூலம் புண்ணியத்தை எப்படி சேர்ப்பது?

===========================


குருநாதர்:-  தாயே, ஒன்றைச் சொல்கின்றேன். அறிவை இறைவன் கொடுத்து, அவ் அறிவை பின் பயன்படுத்தவில்லை என்றால், பாவங்கள் சேரும்னு சொல்லிவிட்டேன்.


சுவடி ஓதும் மைந்தன்:- அறிவு இறைவன் எல்லாருக்கும் ஒண்ணாதான் கொடுத்திருக்கிறார்.


அடியவர் :- கொடுத்திருக்கிறார்.


சுவடி ஓதும் மைந்தன்:- அந்த அறிவை நீ பயன்படுத்தவில்லை என்றால்.


அடியவர் :- அதுவும் பாவத்துல போய் சேரும்.


சுவடி ஓதும் மைந்தன்:-  பாவத்துலதான் போய் சேரும் என்றார். 


குருநாதர்:-  தாயே, எவ் அறிவை இறைவன் கொடுத்திருக்கின்றான்?


சுவடி ஓதும் மைந்தன்:-  சொல்லுங்கள். தாயே, இறைவன் எந்தெந்த அறிவை கொடுத்திருக்கிறார் என்று சொல்லுங்கன்னு சொல்றார். சொல்லுங்க.


அடியவர் :-  ஐயா, அதுக்குத்தானே இறைவன் பிறவி கொடுக்கிறார்.


அடியவர் 4 :-  பிறவியும் கொடுத்து, எவை நல்லவை, எவை தீயவை, அதை பகுத்து அறியக்கூடிய உணர்வையும் கொடுத்திருக்கிறார். அந்த உணர்வை கொடுத்து, நம்ம புண்ணிய காரியங்கள்ல மட்டுமே ஈடுபடனும்.


குருநாதர்:-   தாயே எதை என்று புரிய நிச்சயம், தன்னில் கூட அவ்வாறு கொடுத்தும் நிச்சயம், அறிவில்லாமல் இருக்கின்றார்களே. அப்பொழுது மனிதனை என்ன செய்யலாம்? 


அடியவர் 4 :-   மனிதனுக்கு துன்பங்களை கொடுத்து, அவனை அனுபவத்தால் மட்டுமே அறியச் செய்ய முடியும்.


குருநாதர்:-  தாயே, இதனால்தான் பின் மனிதனுக்கு இறைவன் துன்பத்தை கொடுக்கின்றான். ஆனால் அத்துன்பம் பின் எவ்வாறு வருகின்றது என்று தெரியாமல், அத் துன்பத்தை போக்க, மீண்டும் பின் ஐயோ என்று இறைவனை பின் வேண்டுகின்றானே. அப்பொழுது எவ்வளவு முட்டாள் என்பது மனிதன் நிச்சயம் நீ தீர்மானிப்பாய். 


சுவடி ஓதும் மைந்தன்:- ஏன் துன்பம் வருது தெரியுங்களா?


அடியவர் :-கொடுக்கிறதே அவர் தான்.


சுவடி ஓதும் மைந்தன்:- கொடுக்கிறதே அவர் தான். டேய், பக்குவப்படுத்திக்கோடா. அறிவு வளர்த்துக்கோடா. 


===========================

# உங்கள் அறிவை எதன் மூலம் பலப்படுத்த முடியும் ?

===========================


குருநாதர்:-  தாயே, துன்பம் மூலம்தான் அறிவை பலப்படுத்த முடியும். இது பின் நிச்சயம் அனைவருக்கும் சொல்கின்றேன். மீண்டும் சொல்லுங்கள். துன்பத்தின் மூலமாகத்தான் அறிவு பலப்படும் என்று அனைவரும் சொல்லுங்கள்.


சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாரும் சொல்லுங்க, ஐயா.


அடியவர் 4 :-  அறிவு பலப்படும்.


சுவடி ஓதும் மைந்தன்:-  துன்பத்தால் மட்டும்தான்? 


அடியவர் 4 :-  அறிவு வளரும்.


குருநாதர்:-   தாயே, இன்பம் கொடுத்தால் எதை என்று அறியா அறிவு வளராது. இப்பொழுது கூறுங்கள். கூறுங்கள், அறிவு வளர வேண்டுமா? இல்லை என்றால், அறிவு வளரக்கூடாதா? சொல்லுங்கள்.


அடியவர் 4 :-   அறிவு வளர வேண்டும்.


குருநாதர்:-  தாயே, அப்பொழுது இறைவன் துன்பத்தை கொடுப்பான். அதை சகித்துக் கொள்ளுங்கள். போதுமா?


அடியவர் 4 :-  கண்டிப்பாக. அனுபவித்து தான் அறிய வேண்டும்.


அடியவர் :- ஐயா, இறைவன் துன்பத்தை கொடுத்தாலும் இவ்வளவு வாய்ப்பு கொடுக்கிறார் இல்லையா?


சுவடி ஓதும் மைந்தன்:-  வாய்ப்பு கொடுக்கிறார். இன்பத்தை கொடுத்தால் அறிவு வளராது. அதனால்.


அடியவர் 4 :-  அதனால் துன்பத்தையே நமக்கு கொடுக்கிறார்..


குருநாதர்:-  நிச்சயம், தன்னில் கூட எவ்வாறு என்பது என்றால், இறைவனிடத்தில் வேண்டிக்கொள்ள வேண்டும். இறைவா, துன்பம் கொடுக்கின்றாயா? கொடு. 


சுவடி ஓதும் மைந்தன்:- இறைவன் என்ன வேணும்? துன்பம் கொடுக்கிறியா?


சுவடி ஓதும் மைந்தன்:- கொடுத்துக்கோ.


அடியவர் 4 :-   எல்லாம் அவன் செயல்.


===========================

# இறைவனை காணும் ஒரே ஒரு வழி என்ன ?

===========================


குருநாதர்:-  தாயே, துன்பத்தின் மூலம் அனைத்தும் அறிந்து கொள்ள முடியும். துன்பத்தின் பின் மூலமாகத்தான் இறைவனும், அதாவது துன்பம் என்ற சொல்லுக்கு ஒரு வழி என்று பொருள். அத்துன்பத்தின் வழியாகத்தான் இறைவனையும் காண முடியும். அப்பொழுது இறைவனை காண வேண்டுமா? இல்லை, காணும் பின் எவை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன்:-  நீயே அது இங்க வந்து முடிவு பண்ண வேண்டியதுதான். துன்பம் என்ற ஒரு வழி பாதைதான் இறைவனுக்கு செல்லக்கூடிய வழி.


சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப நீங்க என்ன பண்ணனும்?


அடியவர் :- இறைவனை பார்க்கறதுக்குரிய ஒரு வழி.


சுவடி ஓதும் மைந்தன்:-   இறைவனை பார்க்கறதுக்கு….. அப்ப இறைவனை பார்க்க வேண்டுமா? பார்க்க கூடாதா? எல்லாரும் சொல்லுங்க, ஐயா. 


அடியவர்கள்:- ( ஒருமித்த குரலில் “இறைவனை பார்க்க வேண்டும்”) 


குருநாதர்:-  அப்பொழுது துன்பத்த நிச்சயம், தன்னில் கூட துன்பத்தின் வழியாக சென்றால்தான் இறைவனை பார்க்க முடியும். ஆனாலும் துன்பத்தின் வழியாக செல்ல முடியாமல் எதை என்று அறிய நிச்சயம், தன்னில் கூட 


சுவடி ஓதும் மைந்தன்:- துன்பத்தின் வழியா சென்றால்தான்.


அடியவர் :-  இறைவனை காண முடியும்.


சுவடி ஓதும் மைந்தன்:- இறைவனை பார்க்க முடியும்.


அடியவர் :-  ஆனால்? 


சுவடி ஓதும் மைந்தன்:-  ஆனால் மனிதன்.


அடியவர் :-  பொறுமை இல்லை.


சுவடி ஓதும் மைந்தன்:-   அந்த துன்பத்தின் வழியா யாரும் போகறதுக்கு? 


அடியவர் :-  தயாரா இல்லை.


சுவடி ஓதும் மைந்தன்:-    தயாராக இல்லை. 


குருநாதர்:-   ஆனால் இறைவனை பார்க்க வேண்டும், இறைவன் ஆசிகள் பெற வேண்டும் என்று நிச்சயம், தன்னில் கூட எவ்வாறு நியாயம்? 


குருநாதர்:-    எதை ஏது என்று புரிய நிச்சயம், தன்னில் கூட 


***** துன்பத்தால் தான் அனைத்தும் வெல்ல முடியும். *****


***** இன்பத்தால் அல்ல. *****


சுவடி ஓதும் மைந்தன்:-    துன்பத்தால் தான் சகலத்தையும் ஜெயிக்க முடியும்.


குருநாதர்:-   


*****  துன்பம் ஒரு வகையான பாடம். சந்தோஷமான பாடம். ***** 


===========================

# இறைவன் இன்பத்தை ஏன் உடனடியாக கொடுத்து, உடனடியாக பிடுங்கி விடுகின்றார்? என்ன ரகசியம்?

===========================


குருநாதர்:-  ஆனாலும் அதை விட்டுவிட்டு, இறைவன் ஏன் இன்பத்தை கொடுக்க எவை என்று அறிய, சிறிது இன்பத்தை கொடுத்து, நிச்சயம் மீண்டும் எடுத்துக் கொள்கின்றான் என்றால், நிச்சயம், தன்னில் கூட 


பாவத்தை நிச்சயம் மனிதன் சுமந்து கொள்வான் அதிகமாக. 


அதனால் இறைவன் மிகவும் கருணை படைத்தவன். 


இவனுக்கு இன்பத்தை கொடுத்தால், இன்னும் இவனும் பாவத்தை உருவாக்கி, மற்றவர்களுக்கும் பாவத்தை செலுத்தி, அனைத்தும் அழித்திடுவான் என்று. அதனால்தான் இறைவன் உடனடியாக கொடுத்து, உடனடியாக பிடுங்கி விடுகின்றான். சொல்லிவிட்டேன்.


அடியவர்:- யப்பா !!!!!


https://youtu.be/PKohTFGg6R8?t=18756 


குருநாதர்:-  ஆனால் இறைவன் பின் நிச்சயம் தன்னில் கூட துன்பத்தை பிடிக்க, பின் அதாவது நிச்சயம் எதை என்று கூற, பின் பிடுங்க விடமாட்டான். 


சுவடி ஓதும் மைந்தன்:-  இறைவன் என்ன பண்ணுவாரு? துன்பத்தை பிடுங்க மாட்டார்.


அடியவர்:- அது இருக்கும்.


சுவடி ஓதும் மைந்தன்:-  அது இருக்கும். எப்ப இருந்தாலும். அம்மா, இதெல்லாம் வந்து நான் என்ன சொல்றதுன்னு தெரியல. இதெல்லாம் வந்து.


அடியவர்:- பெரிய.


சுவடி ஓதும் மைந்தன்:-  பெரிய இதுமா சித்தர்கள் எல்லாம் (இப்படி ரகசியங்கள் சொல்வது) யாருக்கும் இறைவன் எதை பிடுங்க மாட்டார்  உங்களிடம் இருந்து.?  துன்பத்தை புடுங்க மாட்டார். எதைபிடுங்குவார்? இன்பத்தை பிடுங்குவார். ஏன் இன்பத்தை பிடுங்குவார்? அதிகமா இன்பத்தை கொடுத்தாலும், நீ என்ன ஆயிடுவ?


அடியவர்:- தானும் பாவம் செஞ்சு…...


சுவடி ஓதும் மைந்தன்:-  நிறைய பாவம் செஞ்சு.


அடியவர்:-  பிறரையும் கெடுத்து.


சுவடி ஓதும் மைந்தன்:-  நீயும் கெட்டு, மத்தவங்களையும் கெட்டு, எல்லாத்தையும் கெத்து விட்டுவுடுவடா. அதனால என்ன பண்ணுவாரு?


அடியவர்:- கொடுத்து பிடுங்கிடுவார்.


சுவடி ஓதும் மைந்தன்:-  அதனால பார்ப்போம், இவனுக்கு கொடுத்தா, இவன் யூஸ் பண்ணிக்கிறானா இல்லையான்னு சொல்லிட்டு கொடுப்பாரு. இவன் லாயக்கு இல்லடா. கர்மத்துல சேர்த்துட்டு, எல்லாத்தையும் பாவத்துல சேர்த்துட்டு…. என்ன பண்ணுவாரு?


அடியவர்:-  பிடுங்கிடுவார்.


சுவடி ஓதும் மைந்தன்:-  பிடுங்கிடுவாரு. 


குருநாதர்:-  எதை என்று அறிய, கொடுப்பதும் அவனே, பிடுங்குவதும் அவனே. அப்படி இருக்க, நீ யார்?


சுவடி ஓதும் மைந்தன்:-   கொடுப்பதும் அவர். எடுப்பதும் அவர்.  நீ யார்?


அடியவர்:-   பொம்மை.


குருநாதர்:- அப்பா, வாயில் வந்தபடி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதே. 


அப்பனே, பிறக்கும் பின், அதாவது நிச்சயம், பின் அதாவது எவை என்று புரிய குழந்தை. அப்பனே, நிச்சயம், குழந்தை என்ற பெயரே. 


அப்பனே, நிச்சயம், தன்னில் கூட இறந்த பிறகு, பிணம் என்று. ஆனால் நடுவில் என்னென்ன பெயர்? வித்தியாசமான பெயர் எல்லாம். அப்பனே, எதற்கு?


அடியவர்:-    ஒரு குழந்தை பிறந்ததுல இருந்து வர்ற வரைக்கும்.


சுவடி ஓதும் மைந்தன்:-    அப்படி இல்ல. குழந்தை பிறக்குது. என்ன சொல்றோம் எல்லாரும்? டேய், குழந்தை பிறந்துச்சுன்னா, குழந்தை பிறந்துச்சுன்னு சொல்றோம். இறந்துட்டாங்க. போயிட்டு இருக்குது. டேய், பிணம் போதுடா. பிணம் போதுடான்னு சொல்றோம். இடைவில், இடையில் நிறைய பேரு. என்னென்ன பேரு? ராமசாமி, குப்பசாமி, உறவுகள், பட்ட பெயர்கள்,  சித்தப்பன், பெரியப்பன்……..


===========================

# குழந்தை பிறந்தது , பிணம் ஆகும் வரை  - இதற்கு இடைப்பட்ட காலம் எதற்கு மனிதனுக்கு கொடுக்க[படுகின்றது?

===========================


குருநாதர்:- அப்பனே, எதை என்று கூற அப்பன். எதை என்று புரிய. நினைத்துக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையை. 


குருநாதர்:-  அப்பனே, பிறந்த அப்பனே, அதாவது பிறக்கும் அப்பனை பின் நிச்சயம், தன்னில் கூட பின், அதாவது குழந்தை. இறப்பது பிணம். அப்பனே, பின் குழந்தை… பிணம். இதற்கு என்ன? ஏதாவது கூறுங்கள், பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன்:-  குழந்தை பிணம். அவ்வளவுதான். முடிஞ்சு போச்சு. இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்கிறார்.

https://youtu.be/PKohTFGg6R8?t=18921 


குருநாதர்:-  அப்பனே, சொல்லட்டும். அனைவரும் ஏதாவது சொல்லட்டும். 


அடியவர் 3:- இடைப்பட்ட காலத்தில் அனுபவம்.


குருநாதர்:-   எதை என்று புரிய. அதாவது நிச்சயம், தன்னில் கூட அறிந்து கூட, இறைவனை காணத்தான் எதை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன்:-  அந்த இடைப்பட்ட காலம் யாருக்காக?


அடியவர் :- இறைவனுக்காக.


குருநாதர்:-   ஆனால் மனிதன் மனிதனுக்காகவே வாழ்கின்றான். தெரிந்து கொள்ளுங்கள். பின் கூறுங்கள், நீங்களே.


சுவடி ஓதும் மைந்தன்:-   வாழ்க்கையே இறைவனுக்காக வாழ்றது இல்ல. யாருக்காக வாழ்றீங்க?.......


சுவடி ஓதும் மைந்தன்:-   மனிதன் மனிதனுக்காக வாழ்றான். மனிதனுக்காகவே. 


குருநாதர்:-   இறைவன் அடித்துக் கொள்வான் ஐயோ, ஐயோ என்று. டேய் அடேய், யான் இருக்கின்றேன்டா இங்கு என்றெல்லாம். ஆனாலும் கண்டுகொள்ள ஆள் இல்லை.


அறிந்தும். அதாவது சிறுவயதில் வளர்ந்தால், நிச்சயம் பின் திருமணம். குழந்தைகள் இன்னும். அவர்களுக்கு குழந்தைகள் இன்னும். இதே போலத்தான் சென்று, பின் என்ன சாதித்தீர்கள் என்றால், நிச்சயம் இல்லை.

……..


இறைவன் கருணை படைத்தவன். அதனால்தான் இறைவன் அவனே பின் பார்க்க வேண்டும் என்று, அவனே ஒரு முடிவெடுத்து, துன்பத்தை கொடுக்கின்றான். அவ்வளவுதான்.


எதை என்று அறிய அதாவது பூலோகத்தில் பின் உங்கள் குழந்தைகள், அதாவது கணவன், அதாவது எவை என்று அறிய. நிச்சயம், மனைவி. இவர்களிடம் பாசம் வைத்திருக்கின்றீர்கள். இவையெல்லாம் அழியக்கூடியது. ஆனால் உங்களிடத்தில் இறைவன் எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றான். அவன் படைத்தவன் அல்லவா? அதனால் படைத்தவனுக்கு உங்கள் மேல் எவ்வளவு பாசம் இருக்கும். மீண்டும் இவன் நம்மிடையே வரவேண்டும் என்று, அவன் நினைப்பான் அல்லவா? அவன் நினைப்பது தான் நிச்சயம் துன்பம். அப்பொழுதுதான்.


( சில விளக்கங்கள்) 


குருநாதர்:- அப்பனே, ஏன் மனித பிறவி என்று யாராவது யோசித்தீர்களா? அப்பனே, அடுத்தடுத்த வாக்கில் இதை குறிப்பிடுகின்றேன். பொறுத்திருங்கள், அப்பனே. இன்னும் அப்பனே, அறிவை வளர்க்க வேண்டும். 


===========================

# ஏன் மனிதனுக்கு மட்டும் பேசும் திறமை? 

# ஏன் மனிதன் அதனால் தான் பெரும் முட்டாள்?

===========================


குருநாதர்:-  அப்பனே, ஒவ்வொன்று எதை என்று அப்பனே, ஒன்றை மட்டும் குறிப்பிடுகின்றேன் என்பேன்  அப்பனே. 


இறைவன் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பேசுவதற்கு திறமை அப்பனே, எதை என்று கூற, இறைவன் கொடுத்திருக்கின்றான். 


அப்பனே, எதை என்று புரிய அப்பனே, அதாவது பின் இறைவனை எதை என்று கூற  அழைக்கவும் கூட. அப்பனே, பின் நிச்சயம் மனிதனால் மட்டுமே முடியும் என்பேன்  அப்பனே, அதாவது யூகித்துக் கொள்ளுங்கள். 


அப்பனே, இந்த தகுதியை அப்பனே வைத்துக்கொண்டு, மற்ற உயிர்களை அப்பனே கொல்லுகின்றானே. நியாயமா?


அப்பனே, அனைத்து அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, இறைவனுக்கு அப்பனே, பின் ஒன்றுதான் என்பேன்  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


எவ்வளவுக்கு எவ்வளவு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட எவ்வாறு உயிர்களை, அதாவது வாயில்லா ஜீவராசிகளை கொல்கின்றீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உலகமும், அப்பனே, அழியும். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. குடும்பத்திற்குள்ளே, அப்பனே, பல பிரச்சனைகள் உருவாகும். அப்பனே, நிச்சயம் பிரிந்து சென்று விடுவார்கள். சொல்லிவிட்டேன், அப்பனே.


அப்பனே, நிச்சயம் உங்களுக்குத்தான் குடும்பம் இருக்கின்றதா? அப்பனே, அனைத்து ஜீவராசிகளுக்கும் இருக்கின்றது அப்பா. 


மனிதன் அதனால்தான் பெரும் முட்டாள்  என்று யான் குறிப்பிடுவேன் அப்பனே. 


அதாவது மனிதன், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட ஏதாவது, அப்பனே, பின் நிச்சயம் சந்தோஷப்பட்டால், அப்பனே, மற்றவர்களை கொல்வான் என்பேன்  அப்பனே, மற்ற குடும்பங்களை கெடுத்து, பின் உன் குடும்பங்களை, பின் நீங்கள் வாழ வைக்கின்றீர்களே என்பேன்  அப்பனே.


இறைவன் பார்த்துக் கொண்டே இருப்பான். அப்பனே, எதை என்று புரிய.


அடியவர்:- பாருங்க, ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா இருப்பான். வெட்டுறான் ஒரு ஆடை, வெட்டுறான் ஒரு கோழியை. அதுக்கு குடும்பம் இல்லையா? அது சந்தோஷமா இருக்கணும் இல்ல? அதான் சொல்றாங்க.


===========================

# ஏன் அசைவம் உண்ணுபவர்கள் குடும்பத்தில் குழப்பங்கள் , சண்டைகள் உண்டாகும்?

===========================


குருநாதர்:-  அப்பனே, உலகம் அழிவு நிலைக்கு சென்றுவிட்டது என்பேன்  அப்பனே. 


ஏனென்றால் நிச்சயம் எதை என்று புரிய அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட அப்பனே, ஒன்றை சொல்கின்றேன். அப்பனே. 


யார் ஒருவன் சந்தோஷத்துக்காக மற்ற குடும்பத்தை கெடுக்கின்றானோ, அப்பொழுதே நீங்கள் தீர்மானத்தைக் கொள்ளுங்கள். 


உங்கள் குடும்பமும் கடைசியில் கெடும் என்பேன்  எதை என்று கூட. 


அதாவது பின் மனம், மனைவி, கணவன், இவர்களுக்குள்ளே சண்டை வந்து, இன்னும் பல சண்டைகள், பிள்ளைகளுக்கும் முன் வந்து, பின் தாய் பேச்சும் கேட்கப் போவதில்லை. 


எதை என்று அறிய பிள்ளைகள் எவை என்று இப்படியே தான் காலம் சென்று கொண்டே இருக்கும். இது கலியுகம். சொல்லிவிட்டேன். இதனால் ஒரு வாய்ப்பு தெரிந்து கொள்ளுங்கள். திருந்திக்  கொள்ளுங்கள்.


அப்பனே, நிச்சயம் ஏன், எதற்காக, அப்பனே, (அசைவம்) உண்ணுகின்றீர்கள் என்றால், எனக்கு சக்தி வேண்டும் என்று. 


அப்பனே, அந்த சக்தி முதலில் பிடுங்கி விடுவான். உடம்பு பாழாகிவிடும்.


எதை என்று அறிய, இவை தன் சாதாரணமானவை இல்லை. 


ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு எதை என்று புரிய நிச்சயம், தன்னில் கூட. பின் ஈர்ப்பு விசை, இறைவன் கொடுத்திருக்கின்றான். 


அதனால் நீங்கள் எதை என்று ஒரு பின் எதை என்று புரிய நிச்சயம், தன்னில் கூட. ஒரு உயிரை காப்பாற்றினால், நிச்சயம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நிச்சயம் அப்படியே செல்வார்கள். 


நீங்கள் ஒரு உயிரை பின் கொன்றால், அது தன் நிச்சயம்  அடுத்த அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட தாயே, எவை என்று அறிய உங்கள் பின், அதாவது பிள்ளைகளுக்கும் பரவி, நிச்சயம் பின் அனைத்தும் அப்படி, அப்படியே, நிச்சயம், தன்னில் கூட. உங்கள் பின், அதாவது கலியுகத்தில், இவை உண்டால், உங்கள் பிள்ளைகளே, உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். 


உங்கள் பிள்ளைகளே, தவறான வழியில் சென்று விடுவார்கள். 


உங்கள் பிள்ளைகளே, எதை செய்து கொண்டு அழிவார்கள். சொல்லிவிட்டேன்.


அடியவர்:- தெளிவா சொல்றாங்க. இதுக்கு மேல சொல்லித் தர முடியாதுங்க. குழந்தைக்கு சொல்லித்தர மாதிரி சொல்லித் தர்றாங்க. குடும்பமே அழிஞ்சிரும்ன்றாங்க. மாமிசம் சாப்பிட்டா, நீங்க செய்யறதுதான் பிள்ளை தான் செய்யும். அப்பனா, மாமிசத்தை உயிரை கொன்னோம்னா, அவ்வளவுதான். உங்க குழந்தை உங்க பேச்சை கேட்காது. அவ்வளவுதான். அவன் பிள்ளை, அவன் பேச்சை கேட்காது. குடும்பம் இப்படியே அழிஞ்சிருப்பான்ட்டாங்க.


===========================

# கண்ணனுக்கு கண் (An eye for an eye) என்பது ஒருவர் செய்த தீமைக்கு அல்லது குற்றத்திற்கு, இறைவனால்  அதே அளவுக்குரிய தண்டனையைத் திரும்பச் செய்வதைக் குறிக்கும் ஒரு பழமொழி அல்லது நீதி நெறியாகும் 

===========================


குருநாதர்:-   இதனால், நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறு என்பதெல்லாம், ஒரு உயிரைக் கொன்று, நிச்சயம், பின், அதாவது அதைப் பின் உட்கொண்டு, அப்பனே, எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, இது மனிதனுக்குத்தான் பொருந்தும் என்பேன்.


எதை, எதை, எதை என்று புரிய. இதனால், நிச்சயம், பின் கொல்பவனுக்கு, நிச்சயம், கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். தெரிவித்துவிட்டேன். 


அனைத்தும், அதாவது 


தலைவலி, 


பின் கண் வலி, 


காது வலி, 


மூக்கு வலி, 


வாய் வலி, 


தொடை வலி, 


வயிறு வலி, 


இன்னும் எங்கெங்கோ வலிகள் ஏற்பட்டு. 


ஆனால் இறைவனிடத்தில் முறையிட்டாலும், இனிமேல் நடக்காது. சொல்லிவிட்டேன். ஒன்றும் நடக்காது. 


ஏனென்றால், தர்மத்தை காக்கப்பட வேண்டும். 


தர்மம் தான் இவை. 


இத்தர்மம் யாராவது தெரியுமா என்றால், தர்மம் என்றால் என்ன என்ற சொல்லுக்கே, நிச்சயம், பின் அர்த்தம், பின் தெரியாமல் இருக்கின்றது. மனிதனுக்கு என்ன புத்திசாலி மனிதன்.


இதனால்தான், நிச்சயம், தன்னில் மீண்டும் அனைவரும், அதாவது இவ்வுலகம், சமநிலை பெற வேண்டும். 


பின் அனைவருக்காகவும், பின் வணங்குகள்.


உங்களுக்காக, ஏதோ சில புண்ணியத்தை தந்து காக்குகின்றேன். 


மீண்டும், பின், அதாவது ஈசனை நினைத்து, சிவபுராணத்தை பாடுக.


ஈசனார் அடியவர்:- ( சிவ புராணம் பாட ஆரம்பித்தார்கள் …..)



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  13வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.