“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, September 10, 2026

சித்தர்கள் ஆட்சி - 709:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 14

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 14


வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

………..

………..

………..


( பகுதி 13  அதன் தொடர்ச்சியாக ….)


குருநாதர் :-  அப்பனே, பிறவி எப்பொழுதோ முடிந்துவிட்டது. அதனால் என்னிடத்தில் உன்னை பின் ஒரு பொம்மையாக வைத்திருக்கின்றேன். போதுமா? 


சுவடி ஓதும் மைந்தன்  :-  பிறவி எப்பொழுதுமே உனக்கு முடிஞ்சு போச்சு. ஆனால் என்னிடத்தில் என் பக்கத்திலே ஒரு பொம்மையாக வைத்திருக்கின்றேன். 


குருநாதர் :-  அப்போது, அப்பொழுது ஆற்றலை ஊட்டுகின்றேன். அவ்வளவுதான். உனக்கு 


சுவடி ஓதும் மைந்தன்  :-   அப்பப்ப என்ன தேவையோ, அது நான் கொடுக்கின்றேன். 


குருநாதர் :-  அப்பனே, கவலை வேண்டாம். அப்பன் பின் எவை என்று ஒரு மோட்சம் தான். இப்பிறவி அதனால் அனைத்தும் கற்பித்து விட்டேன். உனக்கு இப்பிறவி, இந்த பிறவி மோட்சம் தான். அதனால உனக்கு எல்லா விஷயத்தையும் நான் கற்றுக் கொடுத்துட்டேன். 


===========================

# ( கருணைக்கடல் , குருநாதர் அகத்திய மாமுனிவர் இவ் அடியவர் பாடிய பாடலை இரண்டாம்  முறையாக பாட சொல்லி  கேட்டார்கள். எனவே அன்பு அடியவர்க்கு  இவ் பாடலை அனைவருக்கும் எடுத்து சொல்க)

===========================


குருநாதர் :-   அப்பனே, அனைவருக்கும் இன்னொரு முறை இப்பாடலை பாடு. 


( கருணைக்கடல் , குருநாதர் அகத்திய மாமுனிவர் இவ் அடியவர் பாடிய பாடலை இரண்டாம்  முறையாக பாட சொல்லி  கேட்டார்கள். எனவே அன்பு அடியவர்க்கு  இவ் பாடலை அனைவருக்கும் எடுத்து சொல்க)


அ  - என்ற சொல்லினிலே அன்பை தருவாய், போற்றி !!!!! 


ஆ - என்ற சொல்லினிலே ஆணவத்தை போக்குவாய், போற்றி  !!!!!  


இ - என்ற சொல்லினிலே இயல் இசை நாடகத்தை தருவாய்,போற்றி !!!!! 

 

ஈ - என்ற சொல்லினிலே ஈன்றவர் நெஞ்சை மகிழ்விப்பாய், போற்றி !!!!! 


உ  - என்ற சொல்லினிலே உலகெலாம் வலம் வருவாய், போற்றி !!!!! 


ஊ - என்ற சொல்லினிலே ஊன் உடம்புக்குள்ளே ஆலயம் அமைத்தாய், போற்றி !!!!! 


எ - என்ற சொல்லினிலே எங்களையும் வாழ வைப்பாய், போற்றி !!!!! 


ஏ - என்ற சொல்லினிலே ஏழு பிறப்பின் நிலையை மாற்றுவாய், போற்றி !!!!! 

 

ஐ - எனும் சொல்லினிலே ஐயம்பட உரைப்பாய், போற்றி !!!!! 

 

ஒ  - எனும் சொல்லினிலே ஒளியின் ஒளியாய் இருப்பாய், போற்றி !!!!! 

 

ஓ - என்ற சொல்லினிலே ஓம்கார பிரணவ வடிவே, போற்றி !!!!! 

 

ஔவெனும் சொல்லினிலே ஔடதமாய்  இருப்பாய், போற்றி !!!!! 

 

அகத்துக்குள் வாழுகின்ற ஈசனே போற்றி, போற்றி, போற்றி !!!!! 

 

அகத்தீசனே போற்றி, போற்றி, போற்றி, போற்றி !!!!!  


திருச்சிற்றம்பலம். 


( பாடல் பாடி முடித்தபின்னர் …..) 


===========================

# அடியவர் உரைத்த மகத்தான அனுபவங்கள்….

===========================


குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய. அப்பனே, ஏதாவது கருத்தை அனைவருக்கும் தெரிவி. 


சுவடி ஓதும் மைந்தன்  :- ஏதாவது கருத்து அனைவருக்கும் தெரிவி என்றார். 


அடியவர் #5:- எல்லோருக்கும் வணக்கம். அகத்திய அடியார்கள் அத்தனை பேருக்கும் வணக்கம். 


ஐயா, தொடர்ந்து பல விஷயங்கள் உங்களுக்கு சொல்லி இருக்கார். ஆனா, நீங்க எல்லாரும் கேள்வி கேக்குறீங்க. முதல்ல ஜீவநாடி படிக்கும்போதே மொத்தம் சொல்லிட்டார். 


நாம ஒன்றாம் வகுப்பிலிருந்து எப்ப இரண்டாம் வகுப்பு டிகிரிக்கு போறோமோ, அப்பதான் நமக்கு புரியுது. இன்னும் ஒன்றாம் வகுப்பு கீழேயே வரக்கூடாது. 


**** எல்லாம் ஆசான் செயல்னா, எல்லாமே நடந்துரும். ****


இதுக்கு நான் ஒரே ஒரு உதாரணம் சொல்றேன்.  36 வருடங்கள் நான் சித்த மருத்துவர். 36 வருடங்களா அகத்தியருடைய திருநாமத்தை தவிர ஒன்றுமே எனக்கு தெரியாது. 


மரணத்துக்கு போகின்றவரை கூட மாற்றி அமைச்சாருன்னா, நான் இல்ல…. அகத்தீசன் தான். 


அப்போ நாம எல்லாமே கான்சியஸ் மைண்ட்ல இறைவனை பார்க்கணும், பார்க்கணும்னு நினைக்கிறோம். 


**** (subconcious mind) சப்கான்சியஸ் மைண்ட்ல இறைவன் என்கிட்ட தான் இருக்கிறான், அப்படின்னு நம்ம நினைக்கிறது இல்லை. ****


**** அது என்னைக்கு நினைக்கிறோமோ, அன்னைக்கு எல்லாருமே அகத்தியரை பார்க்கலாம். ****


அகதீசாய நமஹ….


அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )


அடியவர் 7:- சாய் ராம்.


===========================

# அனைத்தும் அகத்திய மாமுனிவர் அருளால் நடக்கும்… 

# அனைத்தும் அகத்திய மாமுனிவர் நடத்துகிறார்…

அனைத்தும் அகத்திய மாமுனிவர் நடத்திக் கொண்டிருக்கிறார் …. 

===========================


குருநாதர் :-  அப்பனே, இன்னும் ஒரு விளக்கத்தை கூற வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன்  :- இன்னும் ஒரு விளக்கத்தை கூற வேண்டும். 


அடியவர் #5:-  அதேபோன்று, ஐயா சொன்னது போன்ற, தொடர்ந்து நாம் முதல்ல நாம யாருன்னு பார்க்கணும். எதிர் வீட்டில் இருக்கிற நம்ம குழந்தைகளுடைய தவறுகளை நாம் சுட்டிக்காட்டுறோம். 


நாம யாருன்னு ஏன் பார்க்கிறது இல்ல? நாம் யார்? நாம் என்ன தவறு செய்றோம்? அப்படிங்கிறது நினைக்கும்போதே, இது ஆகுமாங்க. இந்த நாடியில வந்து அகத்தியர் சொல்றது நடக்குமாங்க. அப்படிங்கிற கேள்விகளை நாம கேட்கக்கூடாது. 


நடக்கும்….. 


நடத்துகிறான்…. 


நடத்திக் கொண்டிருக்கிறான்…. 


அப்படின்னு…… 


**** உறுதியா நாம என்னைக்கு நம்பனும்னா, அன்றைக்கு அடுத்த நொடியே, அதாவது அடியார்கள் அழைத்தால், ஆயிரம் கோடி மைலுக்கு அப்பால் இருந்தாலும், அகத்தியன் அடுத்த நிமிஷத்திலேயே வந்துருவான். அதுதான் அகத்தியன். ****


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் ) 


குருநாதர் :-  எதை என்று அறிய பார்த்தீர்களா? எவை என்று கூறப்பின் எவ்வளவு நம்பிக்கை? இப்படி நம்பிக்கை வைத்துக் கொண்டால் போதும். அனைவரும் அதனால்தான் ஒரே அடியில் சொல்லிவிட்டேன். என்னிடத்தில், அதாவது நிச்சயம் தன்னில் கூட உன்னிடத்திலே இருக்கின்றேன். அமர்.


அடியவர் #5:-  ( அகத்தின் ஈசனாரின் அருள் உத்தரவை ஏற்று உடனே அமர்ந்தார்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன்  :-  அவ்வளவுதான். ஒரே அடியில சொல்லிட்டாராம். 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன்  :-  உனக்கு சொல்லிட்டு நான் ஒன்னும் இல்லப்பா. உன் கூடவே இருக்கிறேன். வழிநடத்துறேன் உன் கூடவே இருந்து என்று சொல்லிட்டாருங்க. ஐயா, 


===========================

# முன்னோர்கள் ஆசி மூலம்  வெற்றி மற்றும்  சொர்க்க வாழ்வு. 

===========================


குருநாதர் :- அப்பனே, கேள். 


அடியவர் #4:- அப்பனே, நம் முன்னோர்கள் நலமா? 


குருநாதர் :-  அப்பனே, பின் நிச்சயம் தனனில் கூட பின் நீ அழைத்து வந்தாயே?  அவனிடத்தில் கேள். 


சுவடி ஓதும் மைந்தன்  :- அதை கேளுங்க. அவர் என்ன சொல்றாருன்னு. 


அடியவர் #4:-  ஐயா, முன்னோர்கள் நலமா? 


அடியவர் #5:- முன்னோர்கள் நலமா என்றால்  ஐயா, உங்களுக்கு அவங்க நலமா இருக்காங்களா இல்லையான்னு ஏன் சந்தேகம் வந்தது? 


அடியவர்கள் :- ( குபீர்  சிரிப்புகள் )  


அடியவர் #4:-   அவங்க நன்றாக இருந்தா, ஆசீர்வாதம் பண்ணா இன்னும் நல்லா இருக்கும். 


அடியவர் #5:- அதாவது நீங்கள் ஒன்னு எதிர்பார்த்து தான் இன்னும் வாழ்றீங்களா? அகத்தியன் கிட்ட இவ்வளவு வருடங்களா வந்தும், இன்னும் எதிர்பார்த்து தான் வாழ்றீங்களா? 


அடியவர் #4:-  ஐயா, அருளாசி  இருந்தாலும் பொருளாசியும் இருக்கு. ஐயா, 


அடியவர் #5:- என்னங்க? ஐயா, 


அடியவர் #4:-  அருளாசி இருந்தாலும் பொருளாசியும் இருக்கு. 


அடியவர் #5:- அருளாசியும் இருக்குது. 


அடியவர் #4:-  பொருளாசியும் வேணும். பொருளாசியும் வேணும். 


அடியவர் #5:- அப்ப நீ பொறுத்து தான் பார்க்கணும். 


அடியவர்கள் :- ( குபீர்  சிரிப்புகள் )  


அடியவர் 7:- ( ஆச்சரியத்தில் ) சாய் ராம் 


குருநாதர் :-  அப்பனே, இதனால்  அப்பனே, முன்னோர்கள் ஆசி இன்னும் அப்பனே பொறுத்து தான் ஆக வேண்டும். புரிகின்றதா? அடுத்த வினாவிற்கு வா. 


அடியவர் #4:- அப்பனே, மனை அமையாததால், மனையில் மனமில்லை. 


குருநாதர் :-  அப்பனே, நீ அழைத்து வந்தாயே. அவனை எழுப்பி கேள். 


அடியவர்கள் :- ( குபீர்  சிரிப்புகள் )   


அடியவர் #4:-  ஐயா, இன்னும் மனை அமையாததால மனதில் நிம்மதி இல்லை. 


அடியவர் #5:- அந்த மனை அமையாது. ஏன் அமையல? உங்களுக்கு ஏன் அமையலன்னு தோணுது? அந்த இடம் ? 


அடியவர் #4:-  ஏன் அமையலன்னா, அந்த சூழ்நிலை இன்னும் அமைய மாட்டேங்குது. சூழ்நிலை அமைந்தாலும் அது சரி வருமான்னு தெரியல. 


அடியவர் #5:-  ஐயா, உங்கள் மனதில் ஒரு எண்ணத்தை வைத்து தேடுகிறீர்களா? இருக்கின்ற இடமே சொர்க்கம் என்று நினைக்கிறீர்களா? 


அடியவர் #4:-  இது அலைபாயும் மனது. ஐயா, 


அடியவர் #5:-  அலைபாயும் மனதை முதலில் கட்டுப்படுத்துவதற்கு 


அடியவர் #4:-  சரிங்க. 


அடியவர் #5:-   காலையில் பிரம்ம முகூர்த்தம் மூன்று டு நாலு ஞானிகள் எழும் நேரம். நாலு டு ஆறு மனிதர்கள் எழும் நேரம். நீங்க கொஞ்சம் ஞானிகளா…. மூணு டு நாலு தினம் பண்ணா…. ஒரு 21 நாட்களில் மனம் அமைதி பெறும். அப்பொழுது நீங்கள் இருக்கின்ற இடமே உங்களுக்கு சொர்க்கமாகும்…. 


அடியவர் #4:- சரிங்க. 


குருநாதர் :-  அப்பனே, பின் எவை என்று ஒரு முதலில், அப்பனே, முன்னோர்கள் ஆசி. அப்பனே, பின் அதிகமாக கிடைக்க வேண்டும். அடுத்து, அப்பனே, பின் எவை என்று கூறப்பின் சொர்க்கம் என்பது, அப்பனே, நீ நினைத்த காரியம் நடைபெறும். அப்பனே, அடுத்த கேள்வி என்ன? 


அடியவர்கள் :- ( அமுக்க  சிரிப்புகள் )   


அடியவர் #4:-  அப்பா, மீனாட்சி அம்மாள் காளியாக தெரிந்தார். 


குருநாதர் :-  எது என்று புரியா? பின் , நீ கொண்டு வந்தாயே. அவனேயே  எழுப்பு. 


அடியவர் #5 :-  (பதில் சொல்ல எழுந்தார்கள்)


அடியவர்கள் :- ( குபீர்  சிரிப்புகள் )   


அடியவர் #4:-  ஐயா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல போகும்போது, அங்க மீனாட்சி அம்மா தெரியல. அவர் ஒரு காளி அம்மனாக தெரிந்தால், அது ஏன்? 


அடியவர் #5 :-   அது எத்தனை முறை? அதுபோன்று தெரியுது. 


அடியவர் #4:-  இல்ல, ஒரு தடவை தான். ஒரு தடவை. 


அடியவர் #5 :-   அன்றைய மன சூழ்நிலையில் நீ எப்படிப்பட்ட சூழ்நிலையில் அம்பாளை பார்த்தாய்? 


அடியவர் #4:-  உண்மையா சொன்னா, அன்னைக்கு நல்ல விதமாதான் போயிருந்தேன். ஆனாலும், 


அடியவர் #5 :-  ஐயா, அந்த மாதிரி நிகழ்ச்சிகளை ஏற்கனவே பார்த்து, உங்கள் மனதில் பதிந்து, அந்த நினைப்பில்…. அந்த…. மீனாட்சியை பார்த்தீர்களா? 


அடியவர் #4:-  அப்போ, ஒரு போராட்ட சூழ்நிலை இருந்தது. ஐயா, 


அடியவர் #5 :-  மன சஞ்சலத்தால் பார்க்கின்ற போது, உங்களுடைய கோபம் தான் உங்களுக்கு அது காளியாக இருக்கிறது. அமைதியாக இருந்தால், அது மீனாட்சி. மனம் கோபப்பட்டு, அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு படுகின்ற நிலையில் இருந்தால், அது காளி. 


அடியவர் #4:-  சரிங்க 


குருநாதர் :- அப்பனே, அருகில் உன் மனைவியை, காளி வைத்திருக்கின்றாய். அதனால் தெரிகின்றது. அப்பனே, போதுமா? 


அடியவர்கள் :- (குபீர்  சிரிப்புகள்)   


அடியவர் #4:-  அப்பனே, தாங்களே கூறியுள்ளீர்கள். இது  நான் கொடுத்த வரம் என்று. 


குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட காளி யார்? அப்பனே? 


அடியவர்கள் :- (  சிரிப்புகள்)   


சுவடி ஓதும் மைந்தன்  :-  காளி யாருப்பா? 


அடியவர் #4:-  காளியும் அன்னையே. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு. 


குருநாதர் :-  அப்பனே, கேளும். 


அடியவர் #4:-   அப்பா, சில முறை கனவுகளில் இயற்கை பேரிடர் நிகழ்வுகள் தோன்றுகின்றன. 


குருநாதர் :-  அப்பனே, நீ அழைத்து வந்தாயே. அவனையே எழுப்பு. 


அடியவர்கள் :- (குபீர்  சிரிப்புகள்)   


அடியவர் #5 :-  ( எழுந்தார்கள் ) ஐயா, சொல்லுங்க. 


அடியவர் #4:-  சில சமயம் இயற்கை பேரிடர்கள் வரும்போது, முன்னாடியே கனவு வருது. ஐயா, அதுக்கு தகுந்தாப்புல நடக்கிறது. உலகத்திற்கு அது ஏன் எனக்கு உணர்த்தப்படுகிறது? 


அடியவர் #5 :- ஐயா, சதாகாலமும் (அகத்தீசன் ) என்னுடைய நாமத்தை சொல்லுகின்றவர்கள்…. வருகின்ற காலங்களில் என்ன வரும்?  என்கின்ற உணர்வை அவர்களுக்கு தருகிறார்கள். அந்த உணர்வினால், அப்படிப்பட்ட பேரிடர்கள் இப்ப கூட சொல்றாங்க. இந்த ஆண்டு, இந்த ஆண்டு… நடந்த பத்தாம் தேதி, இந்த ஆண்டு சொல்றார்கள்…. ஜோதிட வல்லுனர்கள் பஞ்சபூதத்தின் தத்துவத்தின்படி… ஒன்பது நவகிரகங்களுடைய கோட்கள் புரட்ட….. அதாவது கும்ப ராசியில்… அவிட்டம் நட்சத்திரத்திற்கு ராகு அமர்ந்திருக்கிறார். அதேபோன்று, மிருகசீரிடத்தில்  சூரியன் அமர்ந்திருப்பதால், இரண்டரை ஆண்டு காலம் உலகம் முழுதும் பொருளாதார சிக்கல், பணவரவு, நோய் நொடிகள், மனிதர்கள் 90 விழுக்காடு அளவுக்கு மீறிய சுயநலமாக வாழ்வார்கள் என்று விதி அமைக்கப்பட்டிருக்கிறது.  அந்த விதியை நீ சதாகாலமும் சிந்திப்பதால், உனக்கு அந்த உணர்வுகளை ஆசான் கொடுத்திருக்கிறார். 


===========================

#  பூமியை நெருங்கி வரும் மிகப்பெரிய கோள்.

===========================

# இன்னும் வெப்பம் இவுலகில் அதிகமாகும் 

===========================


அடியவர் #4:-   ஆனால் அதை தம்மால் தடுக்க முடியவில்லையே என்ற ஒரு வருத்தம் ????


குருநாதர் :-  அப்பனே, இங்கு கேட்க வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன்  :- (சுவடியை நோக்கி ) இங்க கேட்கணும். 


அடியவர் #4:-  (சுவடியை நோக்கி திரும்பினார்  )


அடியவர் #4:-    அப்பா, அப்படி உணர்த்தப்படும்போது…


குருநாதர் :-   அப்பனே, எது என்று கூட பின் அவன் சொன்னானே. அப்பனே, நிச்சயம் எது என்று புரிய. அதாவது, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே, சரியாகவே அப்பனே, எது என்று புரிய, அறிய, அப்பனே, தை மாதத்திலே, பின் நிச்சயம் பின் அதிக வறட்சி தொடங்கிவிட்டது. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  அவர் (அடியவர் #5) சொன்னாரே, இது எப்ப தொடங்கிச்சு? 


அடியவர் #4:-  தையிலே தொடங்கிடுச்சு. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  தையிலவே தொடங்கிச்சு. 


குருநாதர் :-  அப்பனே, ஏனென்றால் அடுத்தடுத்து, அப்படி நிச்சயம் ஏது என்று புரிய, இப் புவி தன்னை, அப்பனே, பின் அதாவது பல பின் நூறு ஆண்டுகளுக்கு, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு கோளானது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அனைத்து கிரகங்களை விட, அப்பனே, அது பெரியது என்பேன் அப்பனே.  


அது நிச்சயம் தன்னில் பூமியை நெருங்கி வரும் என்பேன் அப்பனே.


அவ்வாறு நிச்சயம். அவ்வாறு, அப்பனே, அது சூரியனை விட பல மடங்கு அப்பனே, பின் வெப்பம் வாய்ந்தது என்பேன் அப்பனே. 


அவ்வாறாக அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட பின் புவியானது, அதாவது பூமியினை, பின் நிச்சயம் தன்னில் கூட தொடுகின்ற பொழுது, அப்பனே, எவை என்று அறிய  அப்பனே, பின் அப்பனே, அவ் வெப்பத்திற்கு புவியானது அப்பனே, நிச்சயம் தாங்காதப்பா. 


அதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நெருப்பு, அப்பனே, பின் இன்னும் எரிக்கற்கள். அப்பனே, இன்னும் வெப்பம் அதிகமாகும் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  புரியுதுங்களா? 


குருநாதர் :- அப்பனே, அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, மழையும் கூட அப்பனே, எது என்று புரிய, அப்பனே, பின் நிச்சயம், பின் வெப்பமாகத்தான் பொழியும் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன்  :- அந்த மழை கூட, அது மாதிரி வரும் பொழுது, சூடாதான் பொழியும். 


===========================

# கந்தப்பெருமான் தனது வேலால் வெப்பத்தைத் தடுத்து, பூமியை காத்துக்  கொண்டு உள்ளார்கள்.

===========================


குருநாதர் :-  அப்பனே, இதனால்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சொன்னேனே, அப்பனே, இதனால் தான் முருகன் வேலோடு, அப்பனே, அதை எடுத்துக் கொண்டே வருகின்றான். 


சுவடி ஓதும் மைந்தன்  :- அதனால்தான், அந்த வெப்பத்தை போட்டு போட்டு என்ன பண்றாரு? அந்த வேலை என்ன பண்றாரு? எடுத்து நிறுத்துன்னு வந்து, பூமியை வந்து இருக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு என்ன பண்றாரு? அடிக்கடி க்கு வெப்பத்தை?  


அடியவர் #5:- தணிக்கிறார் . 


===========================

# வரவுள்ள வெப்பத்தின் பேரழிவுகள்…..

===========================


குருநாதர் :-  அப்பனே, வெப்பம் அப்பனே, நிச்சயம் மனிதனை தாக்குகின்ற பொழுது, அப்பனே, மனிதனின் மனநிலைகள் மாறும் அப்பா. பைத்தியம் போல் திரிவான் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன்  :- அந்த வெப்பம் வந்து, மனுஷன் தாக்கும் போது  என்ன ஆகும் ?  


அடியவர்கள் :- மனிதன் பைத்தியம் போல் ஆகிவிடுவான்…


சுவடி ஓதும் மைந்தன்  :- மனிதன் பைத்தியம் போல் யோசிப்பான் என்று சொல்கின்றார்.  


குருநாதர் :-  அப்பனே, உடம்புகள் பழுதாகும் அப்பா. அதிக நோய்கள் ஏற்படும் அப்பா.  திடீர் திடீர்னு இறந்து விடுவான் அப்பா.


சுவடி ஓதும் மைந்தன்  :-  ஓகேங்களா? 


குருநாதர் :- அப்பனே, இதனால்  எது என்று புரிய அப்பனே, நிச்சயம் கேள். 


சுவடி ஓதும் மைந்தன்  :- கேட்கலாம். 


அடியவர் #4:-  இந்த வறட்சியால் லோபமுத்திரை ஆன  தாய் காவேரி வறண்டு கிடைக்கிறாள். வருத்தமாக இருக்கிறது. 


குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய. நிச்சயம், அவனை கேள். எழுப்பி.


அடியவர் #5 :- ( பதில் சொல்ல எழுந்தார்கள்) 


அடியவர்கள் :- (  சிரிப்புகள்)  


அடியவர் #4:- அய்யா இந்த வறட்சியால் தாயான லோபமுத்திரை, காவேரி தாய் வறண்டு கிடைக்கிறாள். வருத்தமாக இருக்கிறது. 


அடியவர் #5:- கால கிரகங்கள் கலியுகத்தில் வருகின்ற கால கிரகங்களில் மாற்றங்கள் என்பது நடந்து கொண்டுதான் இருக்கும். அதே மாதிரி இருக்காது.  உலகம் எப்படி இருந்தாலும், அதேபோன்று கால நிலைகள் கூட நமக்கு மாறிக்கொண்டே வருகிறது. அதற்கான சூழ்நிலையும் நீங்கள் நினைப்பதைப் போல ஒரு நல்ல காரியங்கள் நடப்பதற்கும் சில காலங்கள் பொறுத்து தான் நாம் ஆகவேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன்  :- புரியுதுங்களா? 


குருநாதர் :-  அப்பனே, எது என்று கூற பின் என் மாணவனை தான் நீ அழைத்து வந்திருக்கின்றாய். 


அடியவர்கள் :- ( சிரிப்புகள், கை தட்டல்கள்….)  


அடியவர் #4:-  எல்லாம் தங்கள் அருள் ஆசி அப்பா. 


குருநாதர் :-  அப்பனே, இவ்வாறு ஆசிகள் இருக்கின்ற பொழுது உனக்கு, அப்பனே, தரமாட்டானா  என்ன இவ் அகத்தியன்?  


சுவடி ஓதும் மைந்தன்  :- இவ்வாறு நீயே என்னை சொல்ற.. நீயே என்னை கேட்கிற… இவ்வாறு ஆசிகள் இருக்கும்போது, உனக்கு நான் தரமாட்டேன்னா என்ன? 


குருநாதர் :-  அப்பனே, தராதற்கு ஒரு காரணம் உண்டு. ஏன்  என்றால், இப்பொழுது தந்தால், அவை உன்னால் சமாளிக்க முடியாது. 


அடியவர் #4:-  புரிகிறது..


குருநாதர் :- அப்பனே, எனக்கு புரியவில்லை. 


அடியவர்கள் :- ( பலத்த குபீர் சிரிப்புகள்….)  


அடியவர் #4:-  இப்பொழுது மனை அமைந்தால், அது என்னால் தாங்க முடியாது என்ற கருத்தில் கூறியுள்ளீர்கள்.  


குருநாதர் :- அப்பனே, எது என்று இன்னும் என்னென்ன பின் கேள்விகள் கேட்பாய் என்பதெல்லாம் பின் எனக்கு தெரியும். ஆனால், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் எனக்கு புரியவில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :- எனக்கு உன் வாழ்க்கை பத்தி எனக்கு புரியலப்பா. உன் கூட விளையாடுறாங்க. வேற ஒன்னும் இல்ல. 

ஓகேங்களா? வந்து 


===========================

# எருமை போல் நமது பொறுமை = கருணை = நன்றி…..

===========================


அடியவர் #4:-  கருணை.


குருநாதர் :- அப்பனே, எருமை என்று யான் சொல்கின்றேன். 


அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள்….)  


அடியவர் #4:- எருமை.


சுவடி ஓதும் மைந்தன் :- நீ கருணை என்று சொன்ன,  நான் எருமை என்று சொல்லுகின்றேன். 


குருநாதர் :-  அப்பனே, எதனால்? 


அடியவர் #4:-  (குருநாதர்) எவ்வளவு கருணை மழை பொழிந்தாலும், (எனக்கு ) புரிய மாட்டேங்குது. 


குருநாதர் :- அப்பனே, எதை என்று கூற, என்னுடைய ஆசிகள் என்று சொல்லிவிட்டாய். அப்பனே, இதனால் , அப்பனே, நிச்சயம் எருமை அப்பனே, பின் எவ்வாறு உதைத்தாலும், எவ்வாறு மழை பெய்தாலும், அனைத்தும் பொறுத்துக் கொள்ளும். அதுபோல், பொறுத்துக் கொண்டிரு.  அப்பனே, ஏனென்றால், உன் …………………….. அப்படித்தான். அப்பனே. இழுத்து, அடித்து, …..………. அப்பனே, இதனால் , எருமை போல் இரு. பார்த்துக் கொள்வோம். அனைத்தும் நடக்கும். 


அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள்….)  


அடியவர் #4:-  தாங்கள் கூடவே இருந்தால், அதுவே போதும். 


குருநாதர் :- அப்பனே, புரிகின்றதா? இப்பொழுது எதற்கு சொன்னேன் என்று? 


சுவடி ஓதும் மைந்தன் :- ( சிரிப்பை அடக்கமுடியாமல் ) ஐயா, இப்படி எல்லாம் அகத்தியர் சொல்றாரு. ஐயா, அதனால வந்து எல்லாத்தையும் அது தரல, இது தரல, இப்படி தரல, அப்படி எல்லாம் சொல்லல. எருமை மாட்டு மாதிரி பொறுத்தே ஆகவேண்டும். அவ்வளவுதான். 


அடியவர் #4:-   சிவனேன்னு இருக்கின்றேன் ( அமைதியாக )


===========================

# அனைவருக்குமே ஒரு வாக்கு…..

===========================


குருநாதர் :-  அப்பனே, அனைவருக்குமே சொல்கின்றேன். நிச்சயம் தன்னில் கூட, பின் அவையே, அதாவது அவ் உயிரே, அமைதியாக எவை என்று கூட கடக்கின்றது  காலத்தை. எவ்வளவு அடிகள், எவ்வளவு எவை என்று புரிய பின்  என்ன ஏது என்று எதை செய்தாலும் , ஆனாலும் எதை என்று புரிய பின், மனிதன் காத்துக் கொண்டிருக்கின்றானா என்ன? 


சுவடி ஓதும் மைந்தன் :-  எருமை மாதிரி ஒன்னும் தெரியாதும்மா… அது என்ன அடி அடிச்சாலும், மழை பெஞ்சாலும், எல்லாத்தையும் காத்து நிக்குது…..


குருநாதர் :- அப்பொழுது மனிதன் பெரியவனா? எருமை பெரியதா? எருமை என்று சொல்லக்கூடாது. நிச்சயம் நன்றி என்றே சொல்ல வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நன்றி, அதுக்கு நன்றி என்றே சொல்ல வேண்டும் என்றாரு. அதுவே வந்து காத்து நிக்குதுப்பா. எவ்வளவு அடி வச்சாலும், எட்டி உதைச்சாலும், அது மேல எது போட்டாலும், அது என்ன பண்ணுது? பார்த்து நிக்குது. ஆனால் மனிதன் காத்துக்கொள்ளவில்லை. அப்ப, அது பெருசா? மனுஷன் பெருசா? எருமை தான் பெருசு என்றார். அதனுடைய புத்தி மிக பெருசு என்றார்.  


===========================

# எதை இறைவன் உங்களுக்கு பெரிதாக கொடுப்பார்? 

===========================


குருநாதர் :- எது என்று அறிய, அதேபோலத்தான் நீ எதை தாங்கிக் கொள்கிறியோ, அதை நிச்சயம் பெரிதாக இறைவன் கொடுப்பான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா? 


அடியவர் #4:-  புரியுது. 


குருநாதர் :- அப்பனே, புரிகின்றது, புரிகின்றது என்று சொல்கின்றாய். அப்பனே, கடைசியில், அப்பனே, பின் குழப்பி விடுகின்றாய். 


அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள்….)  


அடியவர் #4:-   என்ன பண்ணறது அப்பா…. நீங்கள் கூட இருக்கின்றதால், நம்பிக்கையை குழப்பிக்கொள்ளும். 


குருநாதர் :- அப்பனே, அதனால் எருமை போல் இரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-   எருமை போல் இரு. எது வந்தாலும், தாங்கிக்கோ. நம்ம பார்த்துக்கலாம். 


===========================

# எருமை அதற்கு மற்றொரு பெயர், கருணை.

===========================


குருநாதர் :-  அப்பனே, சித்தர்கள் அருகில் வந்தால், இப்படித்தான் அப்பா, நிச்சயம். 


**** அப்பனே, எருமை, அப்பனே போல் இருக்க வேண்டும்.  ****


**** அதற்கு பெயர், மற்றொரு பெயர், கருணை. **** 


சுவடி ஓதும் மைந்தன் :-  எருமை மாதிரி இல்ல. அது பேர் என்னது? கருணை, கருணை, கருணை, கருணை, கருணை. 


குருநாதர் :-   அப்பனே, நீ எப்பொழுது கருணையாக போகின்றாய்? 


சுவடி ஓதும் மைந்தன் :- நீ எப்போது வந்து, ஐயா, எருமையா? 


குருநாதர் :-   அப்பனே, என்னிடத்தில் நீ விளையாடுகின்றாய். அதேபோலத்தான் உன்னிடத்தில், பின் விளையாடுகின்றேன்.


அடியவர் #4:- என் அப்பன் அகத்தீசன் இடத்தில் விளையாடாமல் யாரிடத்தில் விளையாடுவது ?

 

குருநாதர் :-  அப்பனே,  அதனால்தான் எருமை என்று சொல்லிவிட்டேன். 


அடியவர் #4:-  எல்லாம் தங்கள் கருணை. 


குருநாதர் :-   அப்பனே, எருமை, 


அடியவர்கள் :- (பொறுமையின் ஆழம் உணர்ந்து ) கருணை, கருணை, கருணை, எருமை…..


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்குகள் தொடரும் ……. ) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.