“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, September 10, 2026

சித்தர்கள் ஆட்சி - 700:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 5

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 5


வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

………..

………..

………..

===========================

# 5 + 100 + ஒரு எண்(3) = 108 

===========================


குருநாதர் :-   எது என்று புரிய இதனால் தாயே கவலைகள் வேண்டாம் நிச்சயம் தன்னில் கூட. பின் ஐந்து பின் கூட்டல் அறிந்தும்  கூட 100 எதை என்று கூற, நிச்சயம் நீ ஒன்று கூறு? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா என்ன சொன்னாரு? 


அடியவர் 9:-


அடியவர் 7 :- 100 


சுவடி ஓதும் மைந்தன் :-  நூறு 


அடியவர் 7:- நீ ஒன்னு கூறு 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ ஒன்னு கூறு. 


அடியவர் 7:-  ஒரு நம்பர். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கூட்டல் 


அடியவர் :-  அஞ்சையும் நூறையும் கூட்டுனா ? 


அடியவர் 9 :-  ( அடியவர் 3 என்று ஒரு புது எண்ணை உரைத்தார்)  


குருநாதர் :-  எது என்று பின் நிச்சயம் தன்னில் எடு, எழுது கோலை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா பேப்பர் எடுங்க ஐயா 


அடியவர் 7:- பேப்பர் எடுத்து மூணையும் எழுதுங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுக்குள்ள ரெஸ்ட் எனக்கு ( சிரிப்புகள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-   எனக்கு காமிக்கணும். நானும் பாக்கணும். எது சொன்னாருன்னு… 


அடியவர் 10 :-  மூணு மட்டும் எழுதணுமா? 


அடியவர் 7:-  அஞ்சு, 100, மூணு எழுதுங்க  ( 5+ 100 + 3) 


அடியவர் 10 :-   நீங்க சொன்ன நம்பர் மூணு 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படியே ( பேப்பரில் எழுதியதை ) காமிங்க அம்மா.  


அடியவர் 10 :-  கூட்டினா 108  ( 5+ 100 + 3 = 108 ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  எவ்வளவு? கூட்டி சொல்லுமா?  


அடியவர் 10 :-  108. 


குருநாதர் :-  தாயே இது எப்படி வந்தது நீ கூறு?  


சுவடி ஓதும் மைந்தன் :- ( எழுதிய பேப்பர் )  குடுங்க அம்மா அது. இது எப்படி வந்தது கூறு? 


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் என்ன சொல்றாரு? 


அடியவர் 10 :-  5+100 +3


அடியவர் 6 :- அவர் சொன்னது அஞ்சும்…100ம் சொன்னாரு 


சுவடி ஓதும் மைந்தன் :-  அஞ்சும்…  பிளஸ் 100ம்… பிளஸ் 


அடியவர் 7:-   மூணு…. 


அடியவர் :- அவங்க மூணு சேர்த்துக்கிட்டாங்க…. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (அஞ்சும்…  பிளஸ் 100ம்… பிளஸ் ) மூணும்  நீங்க…. மூணு இது எப்படி வந்தது?  108ன்னு சொல்றாரு சொல்லுங்கம்மான்னு? 


அடியவர் 10 :-  ( ஞான கேள்வியின் ஆழம் புரியாமல் …) கூட்டினால் வருது…


குருநாதர் :-  தாயே நிச்சயம் மூளை இவ்வளவுதான் உனக்கு. கொடுத்தாலும் என்ன பிரயோஜனம்?  


அடியவர் 7:-  ( ……..) 


சுவடி ஓதும் மைந்தன் :- add பண்ணா வருது  இல்ல…. அப்படின்னு சொல்லல… 


அடியவர் 10 :- அஞ்சு வந்து சுக்கிரன். மூணு வந்து குரு…. 


குருநாதர் :- தாயே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஏன் நீ நிச்சயம் மூன்றையும் இங்க எழுதினாய்? கூறு ?


அடியவர் 7:-  நீங்க ஏன் மூணு சொன்னீங்கன்னு கேக்குறாரு? 


அடியவர் 10 :-  108 வரணும் அப்படிங்கிற இதுலதான் எழுதினேன்… 


குருநாதர் :- தாயே எது என்று கூற ஏன் இவ்வாறு எழுத வேண்டும் கூறு?  


அடியவர் 10 :-   108 ஒரு புனிதமான நம்பர் 


குருநாதர் :- நிச்சயம் இல்லை எது என்று புரிய, பின் அவ்வாறு எவை என்று கூறப்பின் எது என்று அறிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நான் இல்லை என்று சொல்கின்றான் என்றார் அகத்தியர் வந்து 


அடியவர் 7:-  108 புனித நம்பர் இல்லைங்கிறார். வேற ஏதோ காரணம்….


அடியவர் 10 :-   எல்லாமே 108ன்னு தானே எழுதுறோம்… 


சுவடி ஓதும் மைந்தன் :-  இல்ல… அந்த அம்மா ஒன்னு சொல்றாங்க… ரைட்டு… நான் ஒத்துக்க மாட்டேன்… நீங்க வந்து ஏதோ மூணு போட்டீங்க வந்து பிளஸ் அஞ்சு பிளஸ் 100ன்னு சொல்லிட்டு அது ஒன்னு ஆனா இந்த அம்மா வந்து… நீங்க வந்து சொல்றீங்க…. அதே உங்க பக்கத்துல …..


அடியவர் 10 :-    அதாவது அவங்க வந்து புனிதமான நம்பர் சொல்லும்போது, நீங்க இல்லைன்னு சொல்லிட்டீங்க… 


சுவடி ஓதும் மைந்தன் :-   அகத்தியர் இல்லைன்னு சொல்லிட்டாரு 


அடியவர் 10 :-  108 ஜெனரல் நம்பர் ….


அடியவர் 9 :- மூணுங்கிறது குருவை நினைச்சு தான்…. 108 வரும் அப்படிங்கிற நினைச்சுதான்… இன்னொன்னு ஒன்பது… 


===========================

# இறைவன் அளிக்கும் வாய்ப்பு - “கஷ்டம்” 

===========================


குருநாதர் :-  தாயே எதை என்று அறிய நிச்சயம் தன்னில் இன்னும் அதனாலதான் இறைவன் எவை என்று புரிய பின் எது என்று புரிய பின் சில மனிதருக்கு பின் நிச்சயம் பின் அனைத்தும் தெரிந்து கொள்ள சந்தர்ப்பத்தை தருகின்றான். அவ்  சந்தர்ப்பம் தான் கஷ்டம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா ? 


===========================

# அனைத்து கிரகங்களையும்  வெல்ல வேண்டும் என்றால்…

# 108 திவ்ய தேசம் தரிசனம் செய்ய வேண்டும்.

===========================


குருநாதர் :-  தாயே எவை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இதிலிருந்து எவை என்று கூறப்பின் அனைத்து கிரகங்களும், வெல்ல வேண்டும் என்றால், நிச்சயம் நீ நினைத்த காரியங்கள் பின் வெல்ல வேண்டும் என்றால், பின் திவ்ய தேசத்தை தரிசித்து வா. 


அடியவர் 6  :-  108 திவ்ய தேசம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  108 திவ்ய தேசம் 


அடியவர் :- அம்மா வந்து சிவ தரிசனத்துக்கு போக சொன்னாங்க…பாடல் பெற்ற ஸ்தலத்திற்கு எல்லாம் கூட்டிட்டு போங்க அப்படின்னாங்க… 


குருநாதர் :-  எது என்று புரிய தாயே அம்மை அம்மை எது என்று கூற அப்பனே அனைத்தும் ஒன்றுதான். இதை எவை என்று கூறப்பின் 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஈசனும் ஒன்னு பெருமாளும் ஒன்னு… அது புரியாதது மண்ணு.. 


அடியவர் 4:- ( ஹரியும் சிவனும் ஒன்னு. இதை அறியாதவர் வாயில மண்ணு…. )


சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? 


குருநாதர் :-  நிச்சயம் பக்கத்திலே நிச்சயம் பின் எவை கூற பின் ஈசனும் இருப்பான் கவலைகள்  இல்லை.


அடியவர் 10 :-  சங்கரன்கோவில்…


சுவடி ஓதும் மைந்தன் :-  திவ்ய தேசம் இருக்குங்கல வந்து… அந்த பக்கத்திலேயே ஈசனும் இருப்பார்… கோயில் நீ எங்கெங்க போறியோ அங்கேயும் ஈசனும் இருப்பார்… 


குருநாதர் :-  தாயே புரிகின்றதா? உன் நிலைமை சரியாக? 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரிகின்றதா?


===========================

# அனுபவ பாடத்தில் 100% மதிப்பெண். 

===========================


குருநாதர் :-  தாயே பின் நிச்சயம் தன்னில் கூட பின் ஐந்தை ஏன் இங்கு சொன்னேன் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட புத்தியை இன்னும் கூர்மையாக்கு.  


அடியவர் 10 :-   புத்திதான் படிக்காம பழகி போச்சு… 10 வருஷமா… 


குருநாதர் :- தாயே பின் படிப்பதை விட அனுபவம் தேவை. இதுதான் நிச்சயம் தன்னில் அனைத்தும் நல் முறையாகும். படிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பின் ஏதோ எவை என்று புரிய. இதனால் அனுபவ பாடம் சிறந்தது. 


குருநாதர் :-  அனுபவ பாடம் எவ்வளவு படித்திருக்கின்றாய் சொல்?. 


அடியவர் 10 :-   அனுபவ பாடம்…. லைஃப் லாங் யார் யாரு எப்படி துரோகம் செய்வாங்கன்னு படிச்சிருக்கேன். 


குருநாதர் :- தாயே 100 படித்திருக்கின்றாய். அதனாலதான் 100 எழுதினேன் இங்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனாலதான் நான் 100 சொல்றேன். அனுபவ பாடம் என்னது வந்து? 


அடியவர் 7 :- 100 படிச்சிருக்கிறீங்க 


சுவடி ஓதும் மைந்தன் :- 100 படிச்சிருக்கீங்க 


குருநாதர் :- ஏனென்றால் எதை என்று புரிய பின் புரிந்துகொள். அதனால்தான் எவை என்று 100 என்று சொன்னேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- புத்தி உள்ளது. ஆனால் அந்த புத்தி இல்லாம…. என்ன பண்ணிட்டீங்க நீங்க வந்து?  எல்லார்களை என் மனுஷனை ஏமாந்துட்டீங்க. அதனால 100% உங்களுக்கு வந்துச்சு. அம்மா புரியுதுங்களா? 


அடியவர் 7 :-  அனுபவம் 100 வந்துச்சு 


சுவடி ஓதும் மைந்தன் :- அனுபவம் 100 வந்துச்சு. அம்மா புத்தி நல்லா கொடுத்தாரு அம்மா இது என்ன சொல்றது தெரியுமா இதுல…. எழுதி இருந்தது புத்தி நல்லா கொடுத்தாரு…. அந்த புத்தி நீங்க யூஸ் பண்ணல அந்த புத்தி யூஸ் பண்ணாததுனால உங்களோட அனுபவம் 100 போனது…. 


குருநாதர் :- எதனாலே எது என்று கூறு பின் குருவின் பாதை பிடித்துவிட்டாய் அவ்வளவுதான் எது என்று கூறு இது மூன்று நீ எழுதிவிட்டாய். பின் யான் 108 வரவேண்டும் என்று அறிய நிச்சயம் இவையெல்லாம் பின் சாதிப்பது.. 


சுவடி ஓதும் மைந்தன் :- 108 என்ன சொல்றாரு?  நான் சாதிக்கிறது சும்மா … அதனால நீங்க வந்து அதுக்குள்ள என்ன மூணு என்பது குரு புரியுதுங்களா ? 


அடியவர் 10 :-  ஆமா ஆமா மூணு 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதனால நீங்க வந்து எல்லாம் இழந்தது எல்லாம் பார்த்த வந்த பிறகுதான் குருவும் வந்தாருன்றாரு. புரியுதா? 


===========================

# மகத்தான பொது வாழ்க்கை பாடம்…

===========================


===========================

# “அனைத்தும் இழந்தால்தான் குருநாதரின் கடைக்கண் பார்வை கிட்டும்” 

===========================


குருநாதர் :- தாயே என்ன புரிகின்றது கூறு ?


அடியவர் 10 :-   ************* நான் இவ்வளவு எல்லாம் இழந்ததுனாலதான்……. குருவோட கடைக்கண் பார்வைக்கு நான் வந்திருக்கேன்.  ************* 


===========================

(நெஞ்சை உருக்கும் மகத்தான 2 ஞான வரிகள்….யாத்திரை குழு அன்பர்களிடம் அனுமதி பெற்று இவ் 2 வாக்குகளும் இங்கு பதிவிடப்பட்டுள்ளது - அடியவர்கள் அனைவரின் பொது நலத்திற்காக…நம்மில் பலருக்கும்  இவ் புரிதல் வாக்கு பொருந்தும்…) 

===========================


அடியவர்கள் :-  ( அனைத்து அடியவர்களும் பலத்த கை தட்டல்கள்….) 


( இவ் அடியவர் உரைத்தது சாதாரண பதில் இல்லை. உலக ஞானத்தின் மொத்த சாரத்தையும் 2 வரிகளில் மிக சுருக்கமாக சொன்னதால்…..) 


அடியவர்கள் :-  ( அனைத்து அடியவர்களும் பலத்த கை தட்டல்கள்….) 


அடியவர் 7  :- சபாஷ்…. 


சுவடி ஓதும் மைந்தன் :-  உங்கள வச்சே… பேனா வச்சே எழுதி…. சூப்பரா அகத்தியர்… புரியுதுங்களா அப்ப?  


குருநாதர் :- தாயே எது என்று கூற இல்லை என்றால் நிச்சயம் தன்னில் கூட, இவையெல்லாம் இல்லை என்றால் நிச்சயம் பின் நீ 108ல் தான் செல்ல வேண்டும் என்று பக்கத்தில் உள்ள எவை என்று புரிய. 


அடியவர்கள் :-  ( அனைத்து அடியவர்களும் பலத்த சிரிப்புகள் ….) 


அடியவர் 4  :- பக்கத்துல இருக்கிறவங்க சொன்னாங்க… 


சுவடி ஓதும் மைந்தன் :-   சொன்னாங்களா இதெல்லாம் இல்லையென்னா குருவர்கள் இல்லையென்னா நீங்க எதுல போயிருக்கணும் கடைசில 


அடியவர் 4  :-  ஆம்புலன்ஸ் 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆம்புலன்ஸ் எல்லாம் போயிருக்கணுமான்றாரு சூப்பரா சொல்லிட்டாரு டைரக்டா ஒரு அப்படியே வந்து இதெல்லாம் நீ அனுபவிக்கலைன்னா உங்களுக்கு என்ன ஆகும் உடம்பு க்ளோஸ் ஆயிட்டு இருக்குமா என்னத்துக்கு வந்து.. அதனால ஒன்னு இழந்து உயிரை கொடுத்துக்கிறார் வேற ஒன்னும் இல்ல.. 


அடியவர் 10 :-  ஆமா இது அட்டமாதிபதி திசை எனக்கு 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஓ…… 


அடியவர் 10 :-  அது 20 இயர்ஸா அதுதான் போயிட்டு இருக்கு அதுலதான் லூஸ் பண்ணிருக்கேன் 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஓ…. அதனால வந்து…. அது அதுக்கு… உங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்குது… உங்க உயிரை காப்பாத்தி விட்டார். அதுதான்மா கணக்கு. அதனாலதான் இல்லன்னு சொல்லிட்டு என் வாயைன்னு சொல்லி எப்படி எல்லாம் சொல்றாரு பாருங்க வந்து.. 


அடியவர் 7 :-ஆம்புலன்ஸ்… 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமா ஆம்புலன்ஸ் வந்து அதனால இதெல்லாம் நீ இழங்கலைன்னா என்ன பண்ணிருப்ப அது 


அடியவர் 10 :-   சரியில்லன்னு சொன்னா நான் 


சுவடி ஓதும் மைந்தன் :-   இல்ல இல்ல அதெல்லாம் இறைவன் எடுத்து விடுறதுதான் அதனால வந்து அதனால இதெல்லாம் வந்து நீங்க இழப்பு ஏற்படலைன்னா என்ன ஆகும் வந்து? இப்ப குருவும் கூட இருக்காரு அது பயன்படுத்திக்கோமான்றாரு 


குருநாதர் :-   தாயே நிச்சயம் தன்னில் புண்ணியத்தை செய்து கொண்டே இரு அனைத்தும் நடக்கும். யாரை பற்றியும் கவலைப்படாதே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   இனிமேல் என்ன பண்றாரு வந்து? புண்ணியத்தை செய்து கொண்டே இரு…


அடியவர் 10 :-  புண்ணியம்  செய்யறதுக்கான வழி வகை எல்லாம் செஞ்சு கொடுத்தா நல்லா இருக்கும். 


குருநாதர் :-   தாயே தேவையில்லை எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட புண்ணியம் செய்பவர்கள் பின்னால்  போ. 


அடியவர் 10 :-  சரி 


சுவடி ஓதும் மைந்தன் :-  புண்ணியம் பண்றாங்க பாருங்க…. அவங்க பின்னாடி போங்க.


அடியவர் 10 :-  ஓ…. சரி….. 


சுவடி ஓதும் மைந்தன் :- அவர் பின்னாடி போங்க…. பின்னாடி பிடிச்சுக்கோங்க…. 


அடியவர் 3 :- அகஸ்தியர பிடிச்சுக்கோங்க…. எப்போதும் அகஸ்தியா..அகஸ்தியா.. என்று சொல்லிக்கொண்டே (இருங்க).


===========================

# “ஒரு புண்ணியவானின் பின்னே சென்றால், புண்ணியம் தான்.”

===========================


குருநாதர் :-   பின் ஒரு கெட்டவன் பின்னே எவை என்று சென்றால் நிச்சயம் உனக்கும் பின் பாவம்தான். 


குருநாதர் :-   ஒரு புண்ணியவானின் பின்னே சென்றால் புண்ணியம் தான். அவ்வளவுதான் வாழ்க்கை. நிச்சயம் உனக்கு பின் கொடுத்துத்தான் எவை என்று கூறப்பின் எவ்வாறு என்பதை எல்லாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ புண்ணியம் செய்து பின்னாடியே போனேன்னாவே… புண்ணியம் தான்மா… 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு கெட்டவன் செய்து பின்னாடி போனா என்ன சொல்லிக் கொடுப்பான் உனக்கு வந்து? 


அடியவர் :- பாவம் தான் வரும்.


சுவடி ஓதும் மைந்தன் :- பாவம் தான் வரும். அப்ப புண்ணியம் சொல்லிவிட்டு பின்னாடி போனா…. 


===========================

# நீங்கள் செல்லும் ரயில் - பாவ ரயிலா ? புண்ணிய ரயிலா? 

===========================

“The train you are travelling on — is it the train of sin (or) the train of virtue?” 

===========================


குருநாதர் :- இப்படித்தான் பெருக்கிக் கொள்ள வேண்டும் நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று கூட தொடர வண்டியை நினைத்துக்கொள் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின்.. 


சுவடி ஓதும் மைந்தன் :-  தொடர் வண்டி ன்னா என்ன சொல்றாரு தெரியுமா?  


அடியவர்கள் :- ட்ரெயின் 


குழந்தை :- ட்ரெயின் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ட்ரெயின் நினைச்சுக்கொள்.  இன்ஜின் பின்னாடி என்ன போகுது?  


அடியவர்கள் :- பெட்டிகள்


சுவடி ஓதும் மைந்தன் :-  நிறைய பெட்டிகள் போகுது. அதே மாதிரி என்ன பண்ணனும்? புண்ணியம் பின்னாடி புடிச்சிக்கினு… என் பின்னாடி வாமா.. நானு இப்படி… அப்பனா.. சின்ன வயசுல விளையாடுவோம் தெரியுங்களா? ட்ரெயின் மாதிரி. 


அடியவர்கள் :-  ஆமா ஆமா 


அடியவர் 10 :- ஆமா 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்ணனும்னா?  முன்னாடி இன்ஜின். அவன்தான் புண்ணியவான். நீங்க என்ன பண்ணனும்?  ஏதாவது பின்னாடி இன்ஜினை புடிச்சு போயிட்டே இருக்கணும்… 


அடியவர்கள் :-  பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் 


குருநாதர் :-  எது என்று அறிய ஆனாலும் எவை என்று புரிய ஆனாலும் யான் முன்னே செல்கிறேன் என்றால் நிச்சயம் தன்னில் கூட அவன்தான் செய்வானா என்று?  நீ முன்னே சென்றால் என்ன ஆகும்?  பெட்டியை பின் நினைத்துக்கொள்.. 


அடியவர் 10 :- ஓ…


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இன்ஜின் வந்து… யாருக்கு அந்த தகுதி இருக்கோ அவங்க புண்ணியம் செஞ்சுகிட்டு  இருக்காங்க வந்து…. டேய் இவன்தான் (புண்ணியம் ) பண்ணுவானாடா? … நானும் வந்து… அந்த பெட்டி வந்து முன்ன போச்சுன்னா… என்ன ஆகும்? 


அடியவர்கள்  :- போகாது… 


சுவடி ஓதும் மைந்தன் :- போகாது இல்ல… இன்ஜின் வந்து இடிச்சு அந்த பெட்டி எங்கேயோ போயிடுமா…. அதனால ஒன்னு ஒன்னு தெரிஞ்சுக்கணும்ன்றாரு அகத்தியர் வந்து…. முதல்ல ஒன்னு தெரியலையா?  யாராவது புண்ணியம் பண்றாங்களா அவங்க பின்னாடி போ.  புரியுதுங்களா?  தெரிஞ்சுக்கோ.


குருநாதர் :-  எது என்று புரிய இதனால் தாயே நிச்சயம் தன்னில் எவ்வாறு செய்து கொண்டே இருந்தாலே போதுமானது நிச்சயம் தன்னில் கூட 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதுதான். யாராவது புண்ணியம் செய்றாங்க… அவங்க பின்னாடியே போயிட்டு…. 


குருநாதர் :- எதை என்று கூற தாயே பின் இதற்கு பலபேர் சொல்வார்கள் யாரும் கேட்டிருக்கின்றேன். பின் கும்பலில் எவை என்று அறிய. 


அடியவர் :- கோவிந்தா  !!!!!  கோவிந்தா  !!!!!


அடியவர் 10 :- ஓ !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  கும்பல்ல கோவிந்தா போட்டு போயிட்டே இருக்கணும்…. புண்ணியம் வந்து உன்னால செய்ய முடியலையா… இவங்க, இந்த அம்மா புண்ணியம் பண்ணதா… இந்த அம்மா புண்ணியம் பண்ணதா… இந்த அம்மா புண்ணியம்… பின்னாடி போய்க்கோ… 


அடியவர் 10 :- பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்….


சுவடி ஓதும் மைந்தன் :-  அவ்வளவுதான். புண்ணியம் பின்னாடி போயிட்டு… புண்ணியம் செஞ்சுக்கோமா. அதுவும் ஒரு ஆற்றல். 


குருநாதர் :- எதை எவை என்று கூற பின் நிச்சயம் இந்த இறைவன் அப்படித்தான் செய்வான். புண்ணியம் செய்ய முடியவில்லை என்றால் நிச்சயம் யாரோடு இணைத்து நிச்சயம் எவை என்று கூற பின் அப்படியே சென்றாக வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  புண்ணியம் இருந்தால் இல்லைன்னா யாராவது புண்ணியம் செய்ற இடத்துல வந்து.. நுழைச்சு என்ன பண்ணுவாங்க வந்து?  அவங்க பின்னாடி வந்து போக வைப்பாங்க ஓகேங்களா?  அப்ப நீங்க என்ன பண்ணனும் ? 


அடியவர் 10 :-  அவங்க பின்னாடியே 


சுவடி ஓதும் மைந்தன் :- அவங்க பின்னாடியே போகணும் 


குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட பின் இறைவன் அனைவருக்கும் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட சந்தர்ப்பத்தை தருவான். அதை பயன்படுத்திக் கொள்வது நாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் எல்லாருக்கும் 


அடியவர் :- சந்தர்ப்பத்தை கொடுப்பாரு 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதை பயன்படுத்திக்கணும் பயன்படுத்திக் கொள்வது 


அடியவர் :-  நம்முடைய கடமை 


சுவடி ஓதும் மைந்தன் :-  நம்முடைய கடமை 


===========================

# குலதெய்வம் குறித்த ஒரு தனி கேள்வி….

===========================


அடியவர் 10 :-  குலதெய்வம் தெரியவில்லை….


குருநாதர் :- தாயே எவை என்று இத்தனை நாட்கள் தெரியவில்லை. இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்து ம்  கூட இதனால் நன்விதமாகவே ________  ( குலதெய்வம் குறித்து தனி  வாக்குகள் ) ____________ நிச்சயம் தன்னில் கூட பின் உரைக்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-________  ( குலதெய்வம் குறித்து தனி  வாக்கு விளக்கங்கள்  ) ____________ 


குருநாதர் :- எதை ஏது என்று புரிய இதனை ஏன் சொன்னேன் என்று நீ கூறு இப்பொழுது? 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ரெண்டு கிரகத்தை நான் ஏன் சொன்னேன்னு சொல்லிட்டு நீ கூறணும் 


அடியவர் 10 :-   ………… ( தனது சுய ஜாதக விளக்கங்கள் )  …………


குருநாதர் :-  தாயே எதை என்று புரிந்து கொண்டாயா?


சுவடி ஓதும் மைந்தன் :- புரிஞ்சுகிட்டீங்களா 


அடியவர் 7  :- புரிஞ்சுகிட்டாங்க 


குருநாதர் :-  அங்கேதான் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய காண்பிப்பான் 


சுவடி ஓதும் மைந்தன் :- அவரே ஏதாவது ஒன்னு உங்களுக்கு காண்பிப்பார்ன்றார் 


குருநாதர் :-  தாயே எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( அங்க ) போயிட்டு வாங்கம்மா ஏதாவது ஒன்னு உங்களுக்கு வந்து இது பண்ணுவார் ஓகேங்களா 


குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் அவன் ஏற்படுத்தியவனே எது என்று கூற குரு.


சுவடி ஓதும் மைந்தன் :- யார்? உங்களுக்கு அஷ்டமாதிபதி யாருன்னா அவர்தான் உங்களுக்கு குருவை காமிச்சிருக்கார்… அவருக்கு நன்றி செலுத்துவது…. யார் அவர்தான் உங்களுக்கு யார் வந்து என்ன பண்ணிருக்காரு தேங்க் பண்ணனும் தேங்க் பண்ணனும் 


அடியவர் 7  :- அவருக்கு தேங்க் பண்ணனும்…. 


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவின் இன்ஜின் யார் ?

===========================

# பூவை வைத்து பதில் உடனே கிடைத்தது…

===========================


அடியவர் 5   :-  ஐயா இந்த ட்ரெயின் அப்படித்தான் ஃபார்ம் ஆச்சா… ஐயா அப்போ இந்த ஒரு பெரிய ட்ரெயின்….?  ( ட்ரெயின் = அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழு )  


அடியவர் 6 :-  இந்த ட்ரெயின் இவ்வளவு ஜாயிண்ட் ஆயிருக்கு பாருங்க இன்ஜின் யாருன்னு கேட்டு சொல்லுங்க? 


அடியவர் 6 :- இன்ஜின்  குருநாதர்தான்….


அடியவர் 4 :- முருகன் 


அடியவர் :- நம்ம இன்ஜினே முருகன் தான்ப்பா…. அறுபடை வீடு  முருகன் தானே ஐயா ?


முருகப்பெருமான் படம் :- ( அங்கு இருந்து ஒரு பூ கீழே விழுந்தது )  


அடியவர் 7 :- இப்ப பூ விழுந்ததா உங்களுக்கு? 


அடியவர் 6 :- நாங்க கேட்டுட்டு இருந்தோம் ஐயா…. இவ்வளவு பெட்டிகள்  இருந்திருக்குல… இன்ஜின் யாரு அப்படினு கேட்டோம் அய்யா…


அடியவர் 7 :-  பதில் சொல்லிட்டாருல… கம்முனு இருங்க பதில் சொல்லியாச்சு…. 


அடியவர்கள் :- ( பதிலாக பூ விழுந்ததில் பரவச சந்தோஷம்… )


சுவடி ஓதும் மைந்தன் :- நான்தான்டா இங்கயே  இருக்கிறேன் என்று சொல்லறார் அய்யா 


அடியவர் 7 :-  முருகன் நான்தான் 


சுவடி ஓதும் மைந்தன் :-  கேட்க தேவையில்லை 


அடியவர் 7 :-  அதான் இங்க வரக்கூடாது என்ட்ட என்று…. (நாடி) இங்க வாராத ….( பூ போட்டு ) 


அடியவர்கள் :- ( பதிலாக பூ விழுந்ததில் பரவச சந்தோஷம்… )


அடியவர் 7 :-  அங்கேயே பதில் சொல்லிட்டாரு முருகன்… நான்தான்ட்டு…. 


சுவடி ஓதும் மைந்தன் :- கேள்வியும் இவர்களே…பதிலும் அவரே 


அடியவர் 7 :-   ஆமா 


குருநாதர் :-  அடுத்து எவை என்று புரிய ஒன்று இலக்கை. 


சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து ஒன்று இலக்கம் அம்மா… இருங்கமா. திருப்பி… ஒன்று இலக்கம்னா… ஒன்னாம் தேதி… அப்புறம் பத்தாம் தேதி… 19 ஆம் தேதி…. 28 ஆம் தேதி… அப்புறம் சூரியன். அப்புறம் வந்து… ஒன்று இலக்கம்னா சூரியனோட ராசி… சிம்ம ராசி யாராவது இருக்காங்களா?  

( இது தொடர்பான அடியவர்கள் எழுந்தனர்….. ) 


===========================

# திருவாசகம் 48வது பதிகம் ஓதுக

===========================


குருநாதர் :-   எது என்று புரிய திருவாசகத்தில் பின் நிச்சயம் 48வது பின் பதிகத்தை ஓதுக. 



அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழு அடியவர்கள் :- 

( திருவாசகம் 48வது பதிகம் பாட ஆரம்பித்தனர்…..)


அருளியவர் :-  மாணிக்கவாசகர்

தலம் :-   திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)


பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்

கண்டாரு மில்லை கடையேனைத்- தொண்டாகக்

கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே

உண்டாமோ கைம்மா றுரை.  1


உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்

வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த- வள்ளல்

மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்

கருவுங் கெடும்பிறவிக் காடு.  2


காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்

நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை- வீட்டி

அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்

மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து.  3


வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்

தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ்- சூழ்ந்தமரர்

சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை

நன்றிறைஞ்சி ஏத்தும் நமர்.  4


நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல

எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்

மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்

கழியா திருந்தவனைக் காண்.  5


காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்

பேணும் அடியார் பிறப்பகலக் - காணும்

பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்

பிரியானை வாயாரப் பேசு.  6


பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த

மாசில் மணியின் மணிவார்த்தை - பேசிப்

பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல

மருந்தினடி என்மனத்தே வைத்து.  7


( பதிகம் பாடி முடித்த பின்னர் ) 



அடியவர் :- நமச்சிவாய. குருநாதா!!!!! 


அடியவர் :-  புக் எல்லாத்தையும் வச்சுக்கோங்க. எல்லாம் வச்சுக்கோங்க. எல்லாத்தையும் குடுக்கணும்னு தான் எடுத்து வச்சோம். போன வாரம் தான் வந்தது. ( இந்த திருவாசகம் புத்தகம் ) ₹20 தான். மலிவு விலை பதிப்பகம். நீங்களே இந்த புத்தகத்த வச்சுக்கோங்க.


( அனைத்து அடியார்களுக்கும் இவ் யாத்திரை குழுவினர் இந்த மலிவு விலை புத்தகத்தை அங்கு வழங்கினார்கள்….. ) 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்குகள் தொடரும் ……. ) 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.