“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, September 8, 2026

சித்தர்கள் ஆட்சி - 663 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9


நாள், நேரம்  : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  

https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s 



===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

===========================


===========================

வேல் பூசை வாக்குகள் அருளினார்கள்…அவ் வாக்குகள் முன்பே அடியவர்கள் பயன் அடைய முன்னர் வெளியிட்டு …அதன் பதிவு விபரங்கள் பின் வருமாறு 

===========================

சித்தர்கள் ஆட்சி - 654 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - வேல் பூசை வாக்கு https://siththarkalatchi.blogspot.com/2026/09/654.html

===========================


( இவ் வேல் பூசை வாக்கின் இடையே குருநாதர் , மாணிக்க வாசகப் பெருமான் எப்படி எல்லாம் சிவபுராணம்  பாடலுக்கு விளக்கம் அறிய அரும் பாடு பட்டர்கள் என்ற விபரங்களை அழகாக எடுத்துரைத்தார்கள். அவ் அமுத அருள் வாக்குகளை காண்போம் இப்போது இங்கு. வாருங்கள்…..) 



===========================

# சிவபுராணம் பாடலின் பொருள் உணர்ந்து ஓதல் வேண்டும்

===========================

# சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ் 

===========================

இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=34694 



குருநாதர் :- அப்பனே, அறிந்தும். அப்பனே, இச் சிவ புராணத்திற்கு அனைத்தும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பொருள் உணர்ந்து ஓதல் வேண்டும் என்பேன், அப்பனே. 


ஆனால் ஓதவில்லை என்றால், அப்பனே, நிச்சயம் கஷ்டம் தான், அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- சிவபுராணம் பாடுறாங்க இப்போ வந்து, அதை வந்து என்ன பண்ணனும்? 


அடியவர்கள் :- பொருள் உணர்ந்து பாடணும். 



சுவடி ஓதும் மைந்தன் :-  பொருள் உணர்ந்து பாடணும்.  பொருள் உணர்ந்து படிக்கணும், அப்பதான் கஷ்டங்கள் வளராது. 


குருநாதர் :-  எதை, ஏன் எடுத்த சிவபெருமானுக்கும், நிச்சயம் மாணிக்க வாசகனுக்கும். ஏது என்று புரிய, நிச்சயம் பின் பலத்த, பின் சண்டைகள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மாணிக்கவாசக பெருமான் யாருமா? சொல்லுங்கம்மா.

அம்பிகை வேடத்தில்  ஞான சிறுமி :-  ( பதிலுரைத்தார்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப என்ன பண்ணாங்க வந்து, திருவாசகத்தை இயற்றியவர் யாரு? 


அம்பிகை வேடத்தில்  ஞான சிறுமி :-   மாணிக்கவாசகர்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன ஆச்சாம்? யாரு? மாணிக்கவாசக பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் சண்டையாகுதாம். 


குருநாதர் :- எதனால் என்பது எல்லாம் நிச்சயம் மாணிக்கவாசக பெருமானும். எது என்று புரிய, நீதான் நான், நான்தான் நீ என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- மாணிக்கவாசகர் என்ன சொல்றாரு?

எப்படி சொல்றாருன்னா, நீதான் நான், நான்தான் நீ என்றார். 


===========================

# ஆதி ஈசனார் கொடுத்த வரம்.

===========================


குருநாதர் :- எதை, எவை என்று அறிய. இதனால் நிச்சயம். அப்படி என்றால், எதை என்று அறிய, நிச்சயம் பார்ப்போம். 


குருநாதர் :- பின் இதில் தன், அதாவது சில வரிகளிலே, எதை என்று புரிய, நிச்சயம் நவகிரகங்களே, பின் அனைத்தும் அடக்கும். 


குருநாதர் :- பின் இதை, ஏது என்று புரிய, அதாவது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, இப்பாடலை, அதாவது பின் கஷ்டமான எவை என்று அறிய, பின் பாடலை, நிச்சயம் தன்னில் உன்னால் முடிந்தால், நிச்சயம் விளக்குக. 


குருநாதர் :- எதை என்று கூறப்பின், அதாவது பின் வரத்தை கொடுத்துவிட்டான். அப்படி விளக்கினால், நிச்சயம் இவ்வுலகமே, நிச்சயம் பின், அதாவது எவை என்று கூற பின், உலகத்தின் கீழ் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றார்  தெரியுங்களா?


…….


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த பாடலை, கஷ்டமான பாடல். எது? 


அடியவர்கள் :- சிவபுராணம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணம் வந்து, இவர் ஈசன் சொல்றாரு. யாருகிட்ட? 


அடியவர்கள் :- மாணிக்கவாசக பெருமான் கிட்ட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  மாணிக்கவாசக பெருமான் கிட்ட.  எல்லாம் ஒன்னுதான் சொல்றாரு. அதை அப்புறம் எடுத்துட்டு வராரு. சின்ன சின்னதா நடு நடுல இணைப்பார். அகத்தியர் ஏன்னா சித்தர் பெருமக்கள் இல்ல. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப சரி, இது ஒரு கடுமையான, இந்த பாடலை யார் ஒருத்தர் பொருள் தெரிஞ்சுகிட்டு பாடுறாரோ, அவர் வந்து என்ன பண்ணுவாராம்? 


அடியவர்கள் :- …………………..


https://youtu.be/q8Hs63mXjrc?t=34849


சுவடி ஓதும் மைந்தன் :-  நவகிரகங்களுக்கு கீழ, இந்த உலகத்துக்கு என்ன பண்ணுவாரு? அந்த பவர் இருக்குது பார்த்தீங்களா? கீழ இருந்து ஒரு பவர் போகுதுங்களா? அதை வெல்லலாம். அங்க இருக்கலாம். 


குருநாதர் :- எதை என்று அறிய, நிச்சயம் சரி என்று பல ஆண்டுகள் ஆயிற்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  சரி, இது நான் விளக்கம்  வந்து கண்டுபிடிக்கிறேன்னு யாரு போறாரு? 


அடியவர்கள் :-  மாணிக்கவாசகர் 


சுவடி ஓதும் மைந்தன் :- மாணிக்கவாசகர் வந்து போறாரு. பல வருஷம், பல ஆண்டுகள்… ஓடி போயிடுது. 


குருநாதர் :- ஆனாலும் எப்படி ஏது என்று புரிய, காடுகள், மேடுகள், அதாவது நிச்சயம் எங்கெங்கோ எவை என்று அலைந்து திரிந்து, கைலாயத்தையும், ஆனாலும் பொருள் விளங்கவில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எங்கெங்கோ போறாரு. காடுகள், மேடுகள், கடைசில எங்க போறாரு? 


அடியவர்:-  கைலாயம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கைலாயத்துக்கு போறாரு. என்ன பண்ண முடியல? 


அடியவர்கள் :-  கண்டுபிடிக்க முடியல. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவரால பொருள் கண்டுபிடிக்க முடியல. 


குருநாதர் :- மீண்டும் பின் ஈசனிடத்தில், அதாவது அண்ணாமலையில் தான் இது நடந்தது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எங்க நடந்தது இது? 


அடியவர்:-  இதெல்லாம் நடந்ததெல்லாம் திருவண்ணாமலை. 


சுவடி ஓதும் மைந்தன் :- இங்கதான் நடந்தது. விளையாட்டு இங்கதான் நடந்தது. 


குருநாதர் :-  எது என்று அறிய, நிச்சயம் பின் ஏது என்று புரிய, நிச்சயம் அதாவது பின் பார்வதியும் மகனும் வந்துவிட்டான். எப்படி சொல்லி சமாளிக்க போகின்றீர்கள் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எங்கேயும் கண்டுபிடிக்க முடியல. சிவபுராணம் இந்த வரிகளுக்கு வந்து ( அர்த்தத்தை ) . ஓகேங்களா? அப்ப வந்து வந்துறார். திருப்பியும் பார்வதி அம்மா சொல்லுது, யார்கிட்ட? 


அடியவர்கள் :-  சிவபெருமான்ட்ட


சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபெருமான்ட்ட. எப்பா வந்துட்டான். நீ இப்ப எப்படி சமாளிக்க போற அவர வந்து? ஐயா, புரியுதுங்களா? அவர் ஒரு பதில் சொல்லுவாரு. நீ எப்படி சமாளிக்க போறான்றாரு. 


குருநாதர் :- முதலில் பின் பார்வதி, நீ வாய் திறக்காமல் இருந்தால் போதும். பின் நிச்சயம் தன்னில் கூட அவனே வாயை திறக்கட்டும். 


அடியவர்கள் :- ( இப்படி ஒரு உரையாடல் வாக்கை  கேட்டு ஆச்சரியம் தாங்காமல்….. சிரிப்புகள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன அவர் சொல்றாரு வந்து, நீ வாய் திறக்காதம்மா. நீ அமைதியா இரு. அவன் என்ன வந்து கேட்கிறானோ, பார்ப்போம்ன்றாரு. 


குருநாதர் :-  எதை, ஏது என்று புரிய, என்னுள் கலந்தவனே, உன்னில் இருப்பவனே, என்னால் கண்டு உணரவில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு? 


அடியவர்கள் :-  …….


சுவடி ஓதும் மைந்தன் :-  என்னோடு கலந்தவனே, நான் உன்னுள் நான் இருப்பவனே, என்னால? 


அடியவர் :- கண்டுபிடிக்க முடியவில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-   கண்டுபிடிக்கவில்லை. 


குருநாதர் :- அறிந்தும் பார்வதி தேவியும் பின் வாயை விட்டு விடுகின்றாள். எது என்று கூற, உன் அப்பனை போற்றி பாடு என்று. 


அடியவர் :- சிவாய நம 


அடியவர்கள் :- ( இப்படி ஒரு உரையாடல் வாக்கை  கேட்டு ஆச்சரியம் தாங்காமல்….. சிரிப்புகள் ) 


https://youtu.be/q8Hs63mXjrc?t=34970



சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப யார் சொல்றாரு? 


அடியவர்கள் :- பார்வதி அம்மையார். 


சுவடி ஓதும் மைந்தன் :-   பார்வதி அம்மையார்.  எப்பா, உன் தந்தையை போற்றி பாடிட்டு போ. நீ போற்றி பாடுனேன்னா, உனக்கு வந்து கொடுத்துட்டு போறாரு. அவர் என்ன பண்றாரு? 


குருநாதர் :-  நிச்சயம் எதை, ஏது என்று புரிய, ஈசனுக்கும் வந்தது கோபம். பார்வதியே, யான் நில்லு என்று சொன்னேன். பின் ஏன் இவ்வளவு பேச்சுக்கள்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  பார்வதி அம்மா, அவர் சொல்றாரு, ஈசன் வந்து. 


அடியவர் :-  நான்தான் சொன்னேன்ல, எதையும் பேசாதன்னு சொன்னேன்மா. நீ ஏன் பேசுற?


சுவடி ஓதும் மைந்தன் :-   எதுவும் வந்து பேசன்னு சொல்லக்கூடாதுன்னு சொன்னேன். நீ ஏன் வந்து … எப்படி?


அடியவர் :-  நீ ஏன்மா பேசுன்னு அப்படிங்கிறாரு. ஈசன் கேக்குறாரு.


===========================

# சிவபுராணத்தின் உண்மை அர்த்தம் புரிந்தால் , ஆதி ஈசன் பாதத்தில் எப்போதும் இருக்கலாம்

===========================


குருநாதர் :-   எதை என்று அறிய, நிச்சயம் பின் ஈசனாரும் எவை என்று அறிய. இதனால் நிச்சயம் பின், அதாவது உன்னில் நானே, என்னுள் நீயே என்று சொல்லிவிட்டாய். யானும் அப்படியே சொல்கின்றேன். 


குருநாதர் :- ஆனால் நிச்சயம் தன்னில் கூட இப்பாடல் வரிகளுக்கு பின் அர்த்தம் தெரிந்தால், நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் எவை என்று கூற, கிரகங்களும் சரியாகிவிடும். அனைத்தும் வென்று, நிச்சயம் தன்னில் கூட என் காலடியிலே இருந்திருப்பான். நிச்சயம் அனைத்தும் வெல்லலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாருங்க, ஐயா? 


ஓதுவார் ஆடியவர் :- காலடியே இருந்திருக்கலாம். இப்படி சிவபெருமான் காலடியிலேயே இருந்திருக்கலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-   இல்ல, இல்ல, மாணிக்கவாசக பெருமான் சொல்றாரு. 


அடியவர் 4 :- மாணிக்கவாசக பெருமான் வந்து இந்த பாடலுக்கு பொருள் தெரிஞ்சிருந்தா, 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இதுல போயிடும். எழுத்துக்கு வந்து என்னதான் அந்த நேரத்துல, அந்த நேரத்துல இருந்தா, அதனாலதான் ரெக்கார்ட் பண்றது இல்லன்னா, எழுதிக்கணும் வந்து. அந்த நேரத்துல ஓடி போயிடும். எழுத்துக்கள் வந்து. 


அடியவர் 4 :- சிவபெருமான் வந்து சொல்றாரு, பார்வதி அம்மா கிட்ட, நீ அவரை வந்து போற்றி பாடுன்னு சொல்லிட்ட. நீ சொல்லாம இருந்திருந்தா, அவன் பொருள் எப்படியாவது கண்டுபிடிச்சு, என் காலுக்கு அடியிலேயே இருந்திருப்பான். அப்படின்னு சொல்லி, சிவபெருமான் சொல்றாரு. வந்துட்டு, நவகிரகத்தையும் வென்று, என் காலுக்கு அடியிலேயே அவன் இருந்திருப்பான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவன் இருப்பான். எதுக்கு? எதுக்கு வந்து? 


அடியவர் 4 :-  நீ சொல்லிட்ட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ சொல்லிட்ட.  சொல்லிட்டேன்றாரு. 


குருநாதர் :-  எதை என்று அறிய, நிச்சயம் உன்னுள் இருப்பவனே, என்னுள் இருப்பவனே, அனைத்தும் நீயே, அனைத்தும் நானே. இதனால் உன்னை எப்படி யான் போற்றி பாடுவது? 


சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப என்னன்றாரு? எல்லாம் உனக்கு தெரியும்பா. எல்லாமே உனக்கு தெரியும். என்னுள் இருக்கிற எல்லாத்தையும் இருக்கிறார் வந்து… அப்புறம் நான் வந்து எது? 


அடியவர் 4 :- எப்படி உன்னை நான் போற்றி பாடுறது? 


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி உன்னை நான் போற்றி பாடுறது?  மக்களுக்கு எப்படி நான் தெளிவுபடுத்துறேன்றாரு. 


குருநாதர் :-  கலியுகத்தில் மக்கள் திருந்து போவதில்லை. இதனால் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட நீயும் அங்கங்கு எதை என்று புரிய. பின் எவ்வாறு என்பது எல்லாம் திருத்தலம், திருத்தலமாக சென்று, நிச்சயம் பின் பொருள், பின் நீயே புரிய வை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்லிட்டாரு? கலியுகத்துல 


அடியவர் 4 :-  யாரும் திருந்து போறதில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணத்துக்கு யாரும் திருந்து போறதில்லை. உண்மையான பலத்தையும் வந்து? 


அடியவர் 4 :- அடைய போறதில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அடைய போறதில்லை. அதனால நீ திருத்தலம், திருத்தலம், திருத்தலமா போ. 


அடியவர் 4 :-  போய் எல்லாருக்கும் எடுத்து சொல்லு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் எடுத்து சொல்லு. பார்ப்போம், நீயே புரியவை என்று சொல்லறாரு. 


குருநாதர் :-  எதை என்று புரிய, மாணிக்கவாசகனும் எதை என்று அறிய, ஏது என்று புரிய. பின் அதாவது எனக்கே பொருள் தெரியவில்லை. பின் நான் எப்படி புரிய வைப்பது? பின் தாயே, தந்தையே என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன சொல்றாரு? 


அடியவர் 4 :-   எனக்கே புரியல. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நான் எப்படி?  எனக்கே இந்த புரிய புரியல. வந்து அப்ப மக்களுக்கு நான் புரிய வைக்கிறது என்னன்னு சொல்றாரு. 


===========================

# அன்னை பார்வதி தேவியின் கவலை 

===========================


குருநாதர் :-  பின் அப்படி எது என்று புரிய சரி, உனக்கு ஒன்று உத்தரவை கொடுக்கின்றேன். எனை யாரெல்லாம் அழைக்கின்றார்களோ, அவரிடத்தில் சென்று புரிய வை முதலில் என்று. நிச்சயம் பார்வதி தேவியும். ஐயயோ, இப்படி ஒரு எவை என்று கூற பின், வேலையா இவனுக்கு என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஈசன் சொல்றாரு. யாருகிட்ட? 


அடியவர் :-  மாணிக்கவாசகன் கிட்ட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நீ தெரிஞ்சுக்கணும்ல, உன்னெல்லாம் யாரெல்லாம் நமச்சிவாயன்னு சொல்றாங்களோ, அவன் கையில போயிட்டு என்ன பண்ண சொல்றாரு? 


அடியவர் 4 :-  புரிய வை. 


சுவடி ஓதும் மைந்தன் :- புரிய வை. இப்ப இவர் நமச்சிவாய சொல்றாரா? இவருகிட்ட ஓடிடு. இவர் அவர் நமச்சிவாய சொல்றாரா? இப்ப நீங்க நமச்சிவாய சொல்றாரா? யாரெல்லாம் என் பேர் நமச்சிவாயன்னு சொல்றாங்களோ, நீ அவன் கையில போயிடுப்பா. போயிட்டு 


அடியவர் 4 :-  இதை புரிய வை. புரிய வை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரிய வை என்றாரு. 


குருநாதர் :-   எதை, ஏது என்று புரிய நிச்சயம் இப்படியே பல ஆண்டுகள் ஆயிற்று. புரிய வைக்க முடியவில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படியே மாணிக்கவாசகர் யாரெல்லாம் கூப்பிடுறாரோ, இப்ப நீ கூப்பிட்டாலும் வந்து, அவர் கூப்பிட்டாலும் வந்து, இவர் கூப்பிட்டாலும் வந்து, நீங்க கூப்பிட்டாலும் வந்து, நமச்சிவாயன்னு சொல்லிட்டாரு. என்னது? 


அடியவர் 4 :-  போயிடுறாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  போயிடுறாரு. மாணிக்கவாசகர். 


===========================

# இன்றளவும் சிவபுராணத்தின் பொருள் புரிய வைக்க மாணிக்கவாசகர் பெருமான்  போராடி வருகின்றார்கள்….

===========================


குருநாதர் :- அப்பனே, இன்றளவும் அப்பனே, பின் இது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 


அடியவர் 4 :-  இப்ப வரைக்கும் நடக்குது. 


சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப வரைக்கும் நடந்துட்டு இருக்குது. நடந்து தான் இருக்குதாம். வந்து 


அடியவர் :- எங்கெல்லாம் நமச்சிவாயர் பேரை சொல்றாரோ, மாணிக்கவாசக பெருமான் அங்க நேரா போயி புரிய வைக்க முயற்சி பண்றாரு. முடியல. 


சுவடி ஓதும் மைந்தன் :- புரியவைக்க  முடியல. 


அடியவர் :- திருப்பி வந்துறாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :- முடியல. 


குருநாதர் :- அறிந்தும் எது என்று அறிய. ஏனென்றால் பின் மீண்டும் பின் அண்ணாமலைக்கு வந்து, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், பின் எதை என்று புரிய வைக்க முடியவில்லை என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் திருப்பி வந்துட்டாரு திருவண்ணாமலைக்கு. எப்பா, என்னால புரிய வைக்க முடியல. ஆனா இன்றளவும் என்ன பண்ணிருக்காரு? வந்து 


அடியவர் 4 :-இன்னும் போய்க்கிட்டே இருக்கிறார். 


சுவடி ஓதும் மைந்தன் :- போய்க்கிட்டே இருக்கிறார். வந்து 


அடியவர்  :- (ஆச்சரியத்தில்) அப்பா !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :- போய்க்கிட்டே இருக்கிறார். 


===========================

# களைத்து போய்விட்ட “மாணிக்க வாகனம்”

===========================


குருநாதர் :-  இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட மாணிக்கவாசகன் எவை என்று கூற பின், அதாவது மாணிக்க பின் வாகனம் என்றே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அவர் என்ன சொல்றாங்க? வந்து மாணிக்க வாகனம். 


அடியவர்  :- மாணிக்க வாகனம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மாணிக்க வாகனம். வாகனம். இன்னும் அந்த வாகனம் என்ன ஆயிட்டு இருக்குது? 


அடியவர் 4 :- போய்க்கிட்டே இருக்குது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ரிப்பேர் ஆகல. ஒன்னும் ஆகல. என்ன ஆயிட்டு இருக்குது? 


அடியவர் :- அவருக்கு வாகனம் ஆக்கிட்டாங்க. அவரையே வாகனம் ஆக்கிட்டாங்க. அவர் பேரே மாணிக்க வாகனம் தான். ஓடிக்கிட்டே இருக்கிறார். யாரெல்லாம் நமச்சிவாயர் பேரை சொல்றாங்களோ, அந்த வீட்டுக்கு போயிட்டே இருக்கிறார். அர்த்தத்தை புரிய வைக்க அவரும் முயற்சி செய்றார். யாரும் புரிஞ்சுகிட்ட பாடு இல்லை. திருப்பி வர்றாரு. ஈசன்ட்ட கம்ப்ளைன்ட் பண்றாரு. 


குருநாதர் :- எதை, எது என்று புரிய ஆனாலும் இவ்வாறாக அறிந்தும் அங்கங்கே சென்று எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட கைலாயத்தில் சென்று எதை என்று புரிய. என்னால் முடியாது. நிச்சயம் எவை என்று கூற பின், உயிரை விட்டு விடுகின்றேன் என்றெல்லாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்பா, என்னால புரிய வைக்க முடியாதுப்பா. 


அடியவர் :-  போதும்பா, விட்டுரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  உன் சொல்லுக்கு எனக்கு முடியாது. உன்னால என்னை நீ சொல்லிட்ட எல்லாம் நானேன்னு சொல்லிட்ட. உன்னை புரிஞ்சுக்க என்னால முடியாதுப்பா. முடியல. கைலாயத்துக்கு போய் என்ன பண்றது? வந்து 


அடியவர் :-  புரிஞ்சுக்கவும் முடியல. புரிய வைக்கவும் முடியல. 


சுவடி ஓதும் மைந்தன் :-  முடியல. 


அடியவர் :- என்னை விட்டுருப்பா. நான் முடிச்சுக்கிறேன். அப்படின்றாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்னது? வந்து?  


அடியவர் 4 :-  உயிரை விட்டுறேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-   உயிரை எடுத்துருப்பான்றாரு. 


குருநாதர் :- அது, அது எப்படி எது  என்று புரிய. உயிரை எடுக்க முடியும். எவை என்று அறிய  நீதான் கேட்டாய் அல்லவா? 


சுவடி ஓதும் மைந்தன் :-   அது எப்படி உயிர் நான் எடுக்க முடியும்? நீதானே கேட்ட? இதுக்கு மாணிக்கவாசகர் வந்து இப்படி எல்லாம் வந்து இதெல்லாம் பாடணும்னு நீதானே கேட்ட? இப்ப இதுல நீ வந்து தோல்வி அடைஞ்சுட்டா, உயிர் எடுத்து… நீ கண்டுபிடிக்க முடியலன்னா, 


அடியவர் :- அது எப்படி எடுக்குறது? நீதான்  வந்த…


சுவடி ஓதும் மைந்தன் :-  நீதான் அது அப்படி என்னது? உயிர் எடுக்க சொல்ற. எப்படி நியாயம்ன்றாரு? வந்து 


குருநாதர் :- எதையும் அப்பொழுது கூட பார்வதியும் மனம் இரங்கி. மகனை, இவ்வாறு எல்லாம் சோதிக்காதே. எவ்வளவுதான் தாங்குவான் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்றாரு? 


அடியவர் :-  அம்மா, நடுவுல வந்து உன் பிள்ளையை சோதிக்காதப்பா. அப்படின்றாங்க. 


ஓதுவார் அடியவர் :- மகனை சோதிக்காதே. 


அடியவர் :-  ஆமா. 


===========================

# நமச்சிவாய வாழ்க !!!!!  நாதன் தாள் வாழ்க !!!!!

===========================


குருநாதர் :-  எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. அறிந்து கூட இவ்வாறாக சோதிக்காதே என்றெல்லாம்… நிச்சயம் தன்னில் கூட கடைசியில் பின் நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப பாடுறாரு. எப்பா, என்ன சொல்றாரு? 


அடியவர் 4 :-  நமச்சிவாய வாழ்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ வாழ்க. 


அடியவர் 4 :-  நாதன் தாள் வாழ்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- நாதன் தாள் யாரு? 


அடியவர் 4 :- நமது ஈஸ்வரன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்பா, உன்னை நான் கையெடுத்து வணங்குறேன்டா. 


அடியவர்  :- சிவனுடைய பாதத்தை போற்றி வணங்குறார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  போற்றி உன்னை பாடுறேன். நான் வந்து எனக்கு வந்து பொருள் விளங்க வை. 


குருநாதர் :- நிச்சயம் விளக்கி வைக்கிறேன். ஆனால் உன் பக்தர்கள் நிச்சயம் தன்னில் கூட கடைசியில் பொருள் உணர்ந்து தான் படிக்க வேண்டும் என்று எது என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் உனக்கு நான் விளக்கம் சொல்லிடுறேன். ஆனால் உன் பக்தர்கள் என்ன பண்ணனும்? கடைசில வந்து?.... 


அடியவர் 4  :- பொருள் உணர்ந்து தான் படிக்கணும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பொருள் உணர்ந்து தான் படிக்கணும். 


அடியவர்  :-  படிக்கணும் .


சுவடி ஓதும் மைந்தன் :- பொருள் உணராமல் படித்தால்?


அடியவர்  :- பிரயோஜனம் இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பிரயோஜனம் இல்லை. 


https://youtu.be/q8Hs63mXjrc?t=35398


குருநாதர் :- அறிந்தும் ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதேபோல் பலமுறை நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க என்றெல்லாம். பின் நிச்சயம் இப்படியே பல ஆண்டுகள் கூறிக்கொண்டே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ ரெண்டு எழுத்துக்கு ( வரிக்கு )  அவர் வந்து எத்தனை வருஷமா?


அடியவர்கள் :- ( பல ஆண்டுகளாக …) 


சுவடி ஓதும் மைந்தன் :-   நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. நமச்சிவாய. இப்படியே தான் இருக்கிறாராம். பல ஆண்டுகள். 


===========================

# இப்பாடலை பாடினால் ஈசன் நிச்சயம் இறங்குவார் . 

===========================


குருநாதர் :-  அதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இப்பாடலை பாடினால் ஈசன் நிச்சயம் இறங்குவான். 


சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால்தான் இந்த பாடலுக்கு?


அடியவர்  :- சிவபுராணத்திற்கு அவ்வளவு சக்தி. அவ்வளவு சக்தி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்கள் பாடினால் 


அடியவர்  :-   நிச்சயம் ஈசன் இறங்குவார். ஈசன் இறங்குவார். என்ன சொல்றாரு? மாணிக்கவாசக பெருமான் என்ன குட்டி சொல்றாரு? அப்படியே நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. நமச்சிவாய வாழ்க. இப்படியே சொல்லிக் கொடுக்கிறார். சொல்லிக்கொண்டே இருக்கிறாராம். வந்து 


அடியவர்  :-  எது புரியுதோ, அதை தான் சொல்றாரு. 


குருநாதர் :-  அப்பனே, அடுத்து அப்பனே, நிச்சயம் பல ஆண்டுகள். அப்பனே, அடுத்த வரி வருவதற்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அடுத்து நமச்சிவாய வாழ்க. 


அடியவர்  :-   நாதன் தாள் வாழ்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-   நாதன் தாள் வாழ்க. 


அடியவர்  :-   இமைப்பொழுதும், 


சுவடி ஓதும் மைந்தன் :-   இமைப்பொழுதும் 


அடியவர்  :-   என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்ப என்ன விட்டு போயிடாதடா. அப்பான்னு சொல்லிட்டு, அடுத்து என்ன பண்றாரு? 


அடியவர்  :-   அடுத்த வரி, 


சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்த வரியை திருப்பி சொல்றாரு. 


அடியவர்  :-   ரெண்டு பல வருடம் கழிச்சு இதை சொல்றாரு….


சுவடி ஓதும் மைந்தன் :-  பல ஆண்டுகள் படிச்சு, 


அடியவர்  :-    படிச்சு நமச்சிவாய வாழ்க. நான் சொல்லி சொல்லி 


===========================

# சிவபுராணம் - பூமி அழியும் வரை இருக்கும். 

===========================


குருநாதர் :-  அப்பனே இவ்வாறாக பல நூறு ஆண்டுகள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே உருகி உருகி படித்தது நிச்சயம் பின் எவை என்று கூற, பூமி அழியும் வரை இருக்கும். 


அடியவர்  :-   அப்பா!!!!! சிவாய நம!!!!! 


சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப, இதெல்லாம் ஒரு வரியில சும்மா எழுதுனது கிடையாது. வந்து இதெல்லாம் வந்து 


அடியவர்  :-   அப்பா, அப்பா, 


அடியவர் 4 :-  பல நூறு ஆண்டுகள், 


சுவடி ஓதும் மைந்தன் :-   பல நூறு ஆண்டுகள் தவம் இயற்றி ….


அடியவர்  :-  இந்த பாடல் முழுசா படிச்சிருக்காங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அவர் என்ன பண்றாரு? 


அடியவர்  :-  ரெண்டு வரியை பல வருடங்கள் படிக்கிறாங்க. அதுக்கப்புறம் ரெண்டு வரியை பல வருடங்கள் படிக்கிறாங்க. 


குருநாதர் :-   அதனால்  அப்பனே, நீங்கள் பின் ஒரே நாளில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒருமுறை படித்துவிட்டு நலங்கள் ஆகவில்லையே என்று  அப்பனே, நியாயமா? 


சுவடி ஓதும் மைந்தன் :-    அப்ப, 


அடியவர்  :-  நாலு நிமிஷம், அஞ்சு நிமிஷம் படிச்சிட்டு எனக்கு ஒன்னும் கிடைக்கலன்னா…. கிடைக்குமா? என்னன்னு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் படிச்சிருக்கிறார். 


சுவடி ஓதும் மைந்தன் :-   கிடைக்குமா? 


குருநாதர் :-  அப்பனே, இப்ப கலியுகத்தில் பலர், அப்பனே, படித்து படித்தும் ஒன்றும் நடக்கவில்லையே என்றெல்லாம். அப்பனே, 



சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா இதை படிச்சு, படிச்சு மனுஷன் இந்த கலியுகத்துல என்ன சொல்றானாம்? சும்மா சொல்லிக்கிறான். 


அடியவர்  :-  நான் படிக்கிறேன், என்னால பிரயோஜனம் இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :- பிரயோஜனம் இல்லைன்றாரு. 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் தொடரும் ) 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.