உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
20/9/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த இடம் திருவண்ணாமலை.
ஆதி மகேஸ்வரனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன்.
நலன்கள் காண அப்பனே நல் முறைகள் ஆக இன்றிலிருந்து நல் முறையாகவே எவை என்று சொல்ல தன் குலதெய்வத்தை நல் முறைகள் ஆகவே அமாவாசை திதி அன்றுவரை வணங்கி வந்தால் குலதெய்வத்தின் அருள் ஆசிகளும் முன்னோர்களின் அருளாசி களும் பலம் பெற்று அனைத்தும் நிறைவேறும் என்பேன்.
சிறிது சிறிதாக மனிதன் துன்பத்தில் நுழைந்து விட்டான் அதனால் இம்மாதத்தில் நிச்சயமாய் இதனைச்செய்ய நல் முறையாகும்.
நல் முறையாகும் ஆனாலும் இன்னும் விளக்குகின்றேன் அதிகாலையிலேயே நல் முறையாகவே துயிலெழுந்து பின் துளசி நீரை பருக பின் பருகிய பின் நல் முறைகளாய் ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளுக்கு பின் உணவளித்து நல் முறைகள் ஆகவே பின் ஒருவேளை விரதமிருந்து நல் முறைகள் ஆகவே பின் ஐந்து அல்லது நவ(9 நபர்) மனிதர்களுக்கு அன்னம் அளித்து பின் உண்டால் அப்பனே நல் முறைகளாக தம் தாம் முன்னோர்களும் உண்ணுவார்கள் என்பேன் சில துன்பங்கள் கரைந்துவிடும் கரைந்து ஓடும் என்பேன்.
ஆனாலும் அப்பனே முட்டாள் மனிதன் பின் இதைச் செய்தால் அவை நடக்கும் அதைச் செய்தால் இது நடக்கும் என்றெல்லாம் ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கின்றான் இது தவறு என்பேன்.
இனிமேலும் யான் தவறு செய்தால் நிச்சயமாய் தண்டிக்க பின் அனைத்து சித்தர்களும் வருவார்கள் என்பேன்.
யான் ஏற்கனவே சில மனிதர்களை தண்டித்து விட்டேன் ஆனாலும் அவர்கள் எவை என்று கூறாமலேயே பொய் தனமாகவே நடந்துகொண்டு வருகின்றார்கள் அப்பனே.
திரும்பவும் கடைசியில் வரும் வரை எச்சரித்து விடுகின்றேன் துன்பத்திற்கு காரணம் யார்? எவை என்று கூற பின் சித்தர்களா? இறைவனா?
அனைத்து துன்பத்திற்கு காரணம் மனிதன் என்பேன் யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
மனிதனின் பிறப்பு மிக கீழ்தரமாக உள்ளது வரும் காலங்களில் கூட அப்பனே இவையன்றி கூட ஆனாலும் இறை பலத்தை நல் முறையாக பிடித்துக் கொண்டால்தான் அப்பனே அக் கீழ்தரமான பிறவி நல் முறையாக மேல் தரமாக மேலோங்கும் என்பேன்.
அப்பனே மேன்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் அப்பொழுதுதான் மேன்மையாக வாழ முடியும் வாழ முடியுமே தவிர மற்றவையெல்லாம் அப்பனே எவை என்று கூற உன் புத்திகள் கீழ்தரமாக இருந்தால் இறைவனை வணங்கினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பேன் அப்பனே.
அதனால் எதனை என்று கூற அப்பனே மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள் வரும் காலங்களில் திருடர்கள் மிகுந்து காணப்படுவார்கள் என்பேன் ஆனாலும் அப்பனே யாங்கள் சித்தர்கள் விடமாட்டோம் என்போம் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட ஆனாலும் சில மனிதர்கள் எவை என்று கூட தெரியாமலே எப்படி வணங்குவது என்பது கூட தெரியாமல் புத்தி கெட்ட மனிதர்கள் திரிந்து திரிந்து பின் இறைவனை காணாமலே இறந்துவிடுகின்றான்.
இது ஒரு பிறவியா?
அப்பனே பிறவியை நல் முறையாக உபயோகிக்க வேண்டும் என்பேன். தான் நன்றாக இருக்க வேண்டும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் தன் காந்தர்வங்கள் இருக்க வேண்டும் என்றுதான் நிறைய மனிதர்கள் பின் நினைத்து நினைத்து இறைவனை வேண்டுகிறார்கள் ஆனாலும் ஒருவன் கூட இறைவா உன்னை எவ்வாறு காணலாம்? உன்னை எங்கு தரிசிக்கலாம் எல்லாம் நீயே இறைவா அனைத்தும் நீயே இறைவா என்றெல்லாம் கூட ஒருவனும் வணங்குவது இல்லை.
அப்பனே சுயநலத்திற்காக எதைச்செய்தாலும் இறைவன் நிச்சயமாய் கொடுக்கமாட்டான்.
சொல்கின்றேன் சித்தர்கள் யாங்களும் கொடுக்கமாட்டோம் நிச்சயமாய் அப்பனே
நல் முறைகள் ஆக எதற்காக நீ பிறந்தாய்? எதற்காக வளர்ந்தாய்? எதற்காக இறக்கின்றாய்? அப்பனே தெரியுமா?
தெரியவில்லை அதனால்தான் அப்பனே யான் நான்கு யுகங்களிலும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே ஆனாலும் அப்பனே வருகின்றான் திருமணம் செய்கின்றான் பிள்ளைகளை பெறுகின்றான் சுயநலமாக வாழுகின்றானே தவிர இறைவனை காணாமலே சென்று விடுகின்றான் அப்பனே இதனால் என்ன லாபம்? பிரயோஜனம் இல்லை அப்பனே.
அப்பனே ஒன்றைமட்டும் சொல்கின்றேன் அப்பனே நல் முறைகளாக ஆகவே சிறுவயதிலிருந்து துன்பத்தை அனுபவித்து அனுபவித்து அனுபவித்துக் கொண்டே வந்து நல் முறைகளாக முப்பான்ஆறின்(36வயது) மேல் இவ்வளவு பின் கஷ்டங்களை கடந்தும் இறைவன் வரவில்லையா என்று நினைப்போர்க்கு நிச்சயம் நிச்சயமாய் உண்டு என்பேன் தரிசனம் .
அதனால்தான் அப்பனே பொறுத்திருக பொறுத்திருக என்றெல்லாம் யான் வாக்குகள் கூறிக்கொண்டே வந்து கொண்டிருக்கிறேன்.
ஆனாலும் மனிதர்கள் அதைப் பின்பற்றி பின்பற்றுவதும் இல்லை அப்பனே மனிதன் எதை எதையோ நினைத்து எப்படி எப்படியோ ஏமாற்றி ஏமாறுகின்றார்கள் ஏமாற்றுகின்றார்கள் இதனைத்தான் அப்பனே இன்னொரு முறையும் திரும்பத் திரும்ப இதைத்தான் யான் சொல்கின்றேன் அப்பனே.
இவ்வுலகத்தில் ஏமாற்றுபவர்கள் அதிகம் அதை விட ஏமாறுகிறவர்கள் அதிகம் அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே என்னை நம்பியே வாழ்கின்றனர் அப்பனே ஆனாலும் அப்பனே என்னையும் எவ்வாறு என்பதையும் கூட என் பெயரை வைத்தே ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர் அப்பனே இது நியாயமா?
அப்பனே நல் முறைகளாக அப்பனே முதலில் நீ திருந்து பின் நல் முறையாய் உன் குடும்பத்தை திருத்து பின் உலகத்தை திருத்திக் கொள்ளலாம் பின் ஆண்டவனை நேரில் தரிசிக்கலாம் என்பேன்.
அப்பனே இனியாவது திருந்தி கொள்ளுங்கள் வரும் காலங்களில் ஆண்டவனை எப்படி தரிசிக்கலாம் என்பதையும் கூட யான் எடுத்து உரைக்கின்றேன் அப்பனே.
ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் அப்பனே பின் நீங்கள் எவ்வாறு எதனை நினைத்து பூஜை செய்தாலும் அப்பனை பலன் இல்லை என்பேன். எதற்காக பூஜை செய்கிறோம்? எதற்காக? இறைவனை வணங்குகின்றோம்? எப்படி இறைவனை வணங்குவது? என்பதைக்கூட தெரியாமல் முட்டாள் மனிதனுக்கு தெரியாமல் பிழைப்பு நடத்தி வருகின்றான் அப்பனே.
இதனால் கடைசியில் கஷ்டங்கள் வரும் பொழுது கஷ்டங்கள் எந்தனுக்கு இறைவா இறைவா என்றெல்லாம் ஓடோடி வருகின்றான்.
அப்பனே ஆனாலும் அப்பனே புத்தியை நல் முறையாக பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை.
அப்பனே சில மனிதர்களுக்கு மந்திரம் எதற்காக உச்சரிக்கின்றோம் என்பது கூட தெரியவில்லை.
பின் அதனால் என்ன பயன் அப்பனே மந்திரங்களை நல் முறைகளாக எவ்வாறு உச்சரிப்பது? எவ்வாறு நன்கு புரிந்து கொள்ளுவது? என்றெல்லாம் அறிந்து உச்சரித்து வந்தால் தான் அதனுடைய பலன்கள் பன்மடங்கு ஆகும் அப்பனே.
இதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே மந்திரங்களை எதற்காக உச்சரிக்கின்றோம் என்றால்? அப்பனே மனதை தூய்மைப்படுத்த பின் உடம்பை நல் முறையாக பயன்படுத்த.
ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள் மனிதன் யான் திரும்பவும் சொல்கின்றேன் மனிதனை திருடன்தான் என்று சொல்லுவேன்.
திருடன் திருடன் மனிதன் என்பேன்.
எதனால் என்றால் அப்பனே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் மனிதன்.
மந்திரத்தைச் சொன்னால் பின் அனைத்தும் வருமாம்!!
அப்பனே பின் யானே பூலோகத்தில் திரிந்து கொண்டிருக்கின்றேன் அப்பனே மனிதன் ஏமாந்து கொண்டேதான் இருக்கின்றான் அப்பனே.
மந்திரங்கள் சொன்னால் எவையும் வராது துன்பங்கள் எவ்வாறு என்பதையும் கூட பிற்பகுதியில் உரைக்கின்றேன் அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பனே மந்திரங்கள் முறையாக பின் எவை என்று கூற ஒவ்வொரு விதத்திற்கும் அப்பனே சரி முறையாய் உடம்பில் உள்ள குறைகள் நல் முறையாக நல் மனதாக மாற்றவே மந்திரங்கள் என்போம்.
இப்பொழுது கூட யான் சொல்லிவிட்டேன் அப்பனே அதை தவிர்த்து விட்டு இதைச் சொன்னால் அது நடக்கும் அதைச் சொன்னால் இவை நடக்கும் என்று சொன்னால் அப்பனே தவறாக போய்விடும்.
இன்னொரு முறையும் அப்பனே யான் எச்சரிக்கின்றேன் மனிதர்களை அப்பனே ஒழுங்காகக் வாழ கற்றுக் கொள்ளுங்கள் ஏமாற்றிப் பிழைக்காதீர்கள். பொய் சொல்லாதீர்கள் அப்பனே இதைச் சொன்னால், செய்தால், அனைத்தும் சித்தர்களும் வந்து தண்டிப்போம் நிச்சயமாய்.
தண்டனை நிச்சயம் உண்டு என்பேன்.
இறைவனைக் காண ஒரு கூட்டம் பொய்களின் பாதையில் ஒரு கூட்டம். ஒரு கூட்டமோ இறைவன் கிடைப்பானா?
கிடைப்பானா அப்பனே?
யார் செய்த தவறுகள்? அப்பனே யான் மனிதர்கள் மீது தான் தவறு என்று கூறுவேன்.
அப்பனே மனிதன் அனைத்தும் செய்து விடுகின்றான்.
கடைசியில் இறைவன் என்று வருகின்றான் அப்பனே எவ்வாறு இறைவன் காண்பிப்பான் தரிசனத்தை?
அப்பனே அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே முன்னோர்களின் வாக்கு பெரியவர்களின் வாக்கு இளமையில் கல் எதற்காக சொல்லியிருக்கின்றார்கள்?
அப்பனே மெய்மறந்து நல் முறைகளாக இறைவனை இளமையிலேயே நீ இறைவனை பிடித்தால்தான் அப்பனே கடை காலங்களில் இறைவனை தரிசிக்க பின் ஆண்டவனை நேரில் காணலாம் என்பேன்.
அதனை விட்டுவிட்டு அப்பனே சுகபோகங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட்டு பின் இவை எல்லாம் வீண் என்று இறைவனை இறைவா நீயே தான் கதி என்று தாடியும் மீசையும் வைத்துக்கொண்டு அதனை விடவும் கேவலமாக இறை பக்தனாக நடித்துக் கொண்டிருக்கிறான் மனிதன் இவ்வாறு பொய் வேடத்தில் திரிகின்றான் மனிதன் அப்பனே.
அப்பனே வேண்டாம் அப்பனே பொய் சொல்லி ஏமாற்றி வாழாதே என்பேன்.
அப்பனே நல் முறைகளாக வயதான காலத்தில் ஏன் பக்தி வருகின்றது?
ஏன் உந்தனுக்கு இளம் வயதில் பக்திகள் இல்லையா? உனக்கு வராதா? தோன்றவில்லையா? அப்பனே இளம் வயதில் பக்திகள் எண்ணிப்பாருங்கள்.
எதற்காக? எதற்காக? அனைத்தையும் ஆண்டு அனுபவித்து விட்டு எவ்வாறு அனைத்தும் பொய் என்ற நிலைமையில் தான் கடைசியில் இறைவனை காண வருகின்றான் பக்தி செலுத்துகின்றான் ஆனால் இறைவன் கொடுப்பானா??
இவன் தன் அனைத்தும் அனுபவித்துவிட்டு ஒன்றுகூட இல்லை என்றுகூட உட்கார்ந்து கொண்டிருக்கின்றான் என்பதுதான் இறைவனின் தீர்ப்பாக இருக்கும் ஆனால் அருள் கிடைப்பது அரிதாகும்.
அப்பனே அருள்கள் எவ்வாறு முறையாக வரும் என்பதைக்கூட யான் வரும் காலங்களில் தெரிவிக்கின்றேன் அப்பனே.
அப்பனே இனிமேலும் இவ்வாறாக முட்டாளாக முட்டாள்களாகவே இருந்தால் அப்பனே அனைத்தும் அழிந்து போகும் என்பேன் உன் பிள்ளைகளும் அனைத்தும்.
ஆனாலும் அப்பனே பந்த பாசங்கள் யாரை விட்டது? அப்பனே? அதனால் தான் தெரிந்து விழித்துக்கொள்ளுங்கள் அப்பனே.
யான் சொல்கின்றேன் அப்பனே இறைவன் முறையாகவே மனிதனுக்கு ஆறாம் அறிவை படைத்தான் ஆனால் அப்பனே அவ் ஆறாவது அறிவை பின் எவரும் பின்பற்றுவதே இல்லை இதுவரை.
யான் பின் முன் வாக்கிலும் இதைத்தான் சொன்னேன் ஆறாவது அறிவை பயன்படுத்துங்கள் பயன்படுத்துங்கள் என்று.
ஆறாவது அறிவை பயன்படுத்தினால் அப்பனே இறைவனை நல் முறைகளாக ஏழாவது அறிவுக்கு அழைத்துச் செல்வான் என்பேன்.
ஏழாவது அறிவில் அப்பனே இறைவனை காணலாம்.
அதைவிட எட்டாவது அறிவில் நல் முறைகள் ஆகவே அப்பனே அனைத்து சித்திகளும் நல்ல முறையில் கிடைக்கும் .அப்பனே.
எட்டாவது அறிவில் அட்டமா சித்திகளும் கிடைக்கும்
ஆனாலும் அப்பனே இன்னும் ஆறாவது அறிவிற்கே மனிதன் இதுவரை வரவில்லையே அப்பனே.
அப்பனே புத்திகள் கொண்டு வாழுங்கள். யாரையும் ஏமாற்றி விடாதீர்கள்
என்(அகத்தியன்) பெயர் சொல்லி ஏமாற்றாதீர்கள்.
அப்பனே உன் பிழைப்பிற்காக எங்கேயும் கஷ்டப்பட்டு வா யாங்கள் துணை இருப்போம்.
இறைவன் பெயரைச் சொல்லி எங்கள் பெயரை சொல்லி ஏமாற்றாதீர்கள் ஏமாற்றாதீர்கள்.
நிச்சயம் இக்கலியுகத்தில் தண்டனை உண்டு என்பேன்.
தண்டனை உண்டு என்பேன் அப்பனே நீங்கள் செய்த தவறுக்கு நீங்கள் தான் தண்டனையை அனுபவித்தாக வேண்டும் அனுபவித்து விடுவீர்கள் என்பேன்.
அதனால் அப்பனே வேண்டாம் அப்பனே நல் முறைகளாக நல் மனதாக அப்பனே கீழ்த்தரமான பிறவி மனிதப்பிறவி அதை மேல் தரமாக ஆக்குவது மேல் முறையான எண்ணங்களே ஆகும் என்பேன்.
அப்பனே மேன்மையான எண்ணங்கள் இருந்தால் அப்பனே நீ மேல் நோக்கியே செல்வாய். என்பேன்.
அப்பனையும் ஒன்றைமட்டும் சொல்கின்றேன் அப்பனே உன் மனதை தொட்டு சொல் நீ நல்லவனா?? என்று.
அப்பனே நீ நல்லவன் என்றால் இறைவனிடத்தில் ஈசன் இடத்தில் சண்டையிடு. அனைத்தும் கொடுப்பான் என்பேன்.
அப்பனே வேண்டாம் அப்பனே அழிவு காலம் மனிதனை மனிதன் தின்னுவான் என்பேன்.
அப்பனே இவையெல்லாம் அப்பனே இனிமேலும் அன்போடு ஒன்றாக இணையுங்கள் அப்பனே ஆனாலும் மனிதனுக்கு பொறாமை புத்திகள் கூட அதிகமாகிவிட்டது.
அகத்தியன் என்னை வணங்குபவர்களுக்கு கூட, என்னுடைய பக்தர்களுக்கு கூட, யான் தான் பெரியவன் என்ற கர்வம் அதிகமாகிவிட்டது. நான் தான் பெரியவன் என்று கூட தெரிந்து கொண்டிருக்கின்றார்கள் இதனால் என்ன பயன்??
பின் நீதான் பெரியவனா??
ஏன் உன்னால் எதையும் சாதிக்க முடியவில்லை?
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் இறைவன் தான் பெரியவன் இவ்வுலகத்தில் மனிதர்களால் ஒன்றுகூட செய்ய இயலாது ஏனென்றால் அப்பனே ஆறாவது அறிவிற்கே மனிதன் இன்னும் நுழைய முடியவில்லை அப்பனே.
எப்படி ஏழாவது அறிவு க்கு செல்வான்??
எப்படி எட்டாவது அறிவு க்கு செல்வான்??
ஏன் அப்பனே ஒன்பதாவது அறிவும் இருக்கின்றது இதனைப் பற்றி எல்லாம் தெரிவிக்கின்றேன் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்.
அப்பனையும் ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் அப்பனே உயர்வான எண்ணத்தோடு வாழுங்கள்
வாழுங்கள் அப்பனே சொல்கின்றேன் வேண்டாம் அப்பனே இன்னும் இன்னும் கர்மத்தை சேர்த்துக்கொண்டு சேர்த்துக்கொண்டு பிறவிகள் எல்லாம் கடந்து அப்பனே எவ்வாறு வேண்டாம் ஐயனே இவ்வுலகத்திலே பிறந்தாய் உலகத்தை விட்டு நல் முறைகளாக செல்லுங்கள் அப்பனே மறுபிறப்பு வேண்டாம் இது எவரிடத்தில் இருப்பது என்றால் உங்கள் இடத்தில் தான் இருக்கின்றது அப்பனே அதனால்தான் வரும் காலங்களில் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் அப்பனே என் பெயரைச்(அகத்தியர்) சொல்லியே பொறாமைக்காரர்கள். அப்பனே சிறு வயதில் இருந்து எவ்வாறு இருந்து சிறுவயதில் கூட யான் பெரியவன். நான் தான் அகத்தியன் என்றுகூட திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே.
நிச்சயமாய் வேண்டாம் அப்பனே திரும்பவும் எச்சரித்து விடுகின்றேன் வேண்டாம் அப்பனே வேண்டாம் வேண்டாம் அப்பனே. நல் முறைகள் ஆகவே யான் சொல்லிவிட்டேன் அப்பனே இம்மாதத்தில் நல் முறைகளாக முன்னோர்களை நல் முறையாகவே மதித்து நல் முறைகளாக செய்து வாருங்கள் யான் கூறியவற்றை அப்பனே இன்றிலிருந்து.
இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் அப்பனே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கஷ்டத்திலும் இருந்து கொண்டிருக்கின்றீர்கள் இதனால் அப்பனே பொதுவாகவே யாம் சொல்லி விடுகின்றேன் அனைத்தும் கூட அப்பனே திருந்திக்கொள்ளுங்கள்.
தப்பித்துக் கொள்ளுங்கள் பிழைத்துக் கொள்ளுங்கள் என்பேன்.
மறு வாக்கும் நல் முறைகள் ஆகவே உரைக்கின்றேன் அப்பனே அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment