“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, March 3, 2023

சித்தர்கள் ஆட்சி - 91 : அகத்திய மாமுனிவர் வாக்கு - புவிதன்னில் பிறந்துவிட்டால் கர்மாதானப்பா.

 




அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


அப்பனே ஒன்றை தெரிவித்துக்கொள்கின்றேன் அப்பனே

யான் ஏற்க்கனவே இதை யான் செப்பியும்விட்டேன் அப்பனே

அதாவது புவிதன்னில் பிறந்துவிட்டால் கர்மாதானப்பா

இதனால் அப்பனே பின்ஒவ்வொருவரும் பின் கட்டங்கள் பட வேண்டியதுஅதாவது நிச்சயம் ஆணித்தரமான உண்மை என்பேன் அப்பனேபல பல வழிகளிலும் கூட அப்பனே ஞானத்தை பெற்றவர்களாயினும் இறைவன்கள் எதை என்று அறிய அறிய ஞானிகள்

ரிஷிகள் வந்தாலும் கட்டங்கள்தான் என்பேன்அப்பனே

எவை என்று அப்பனே பரந்த உலகம் அப்பனே எதை என்று 

எளிதில் புரிந்து கொள்ளஇயலாது அப்பனே இவை எல்லாம் வரும் காலங்களில் விஞ்ஞானப்பூர்வமாகவே யான் நிச்சயம்

எடுத்துரைப்பேன் அப்பனே மனிதர்களுக்கு தெரிந்து 

கொள்ளும்படியே அப்பனே.

ஏனைன்றால் இன்னும் அப்பனே முதல் வகுப்பிலேயே மனிதர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பேன்அப்பனேஇதனால் எப்படித்தான் இறைவனைக்கானப்போகின்றார்கள் அப்பனே தெரிந்துகொள். 


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு