அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!
அப்பனே பல கோடி என்பேன் அப்பனே. அதனால் கவலையை
விடு அப்பனே. எதை என்றுஉணர்ந்து உணரந்து
பல ரகசியங்களும் யான் உந்தனுக்கு தெரிவிப்பேன் அப்பனே.
மனிதன் எப்படிஎல்லாம் பொய் சொல்லி ஏமாற்றிக்கொண்டு
இருக்கின்றான் அப்பனே. உந்தனுக்கு உண்மை
உரைக்கப்போகின்றேன். அதன் மூலம் நீ வெற்றி கொள்ளலாம். பொய் எதை என்று அறிந்து அறிந்துபொய் என்றால் அப்பனே
எதை என்று கூற கர்மா.
நீ உண்மையைச்சொல்லி பிழைத்துக்கொள்.
( சனி பெயர்சிக்குப்பின் ).
அப்பனே நலமாக எதை என்று அறிய அறிய அதனால் குறையை விடு. அப்பனே நலமாகவே எதைஎன்று உணர்ந்து உணர்ந்து
பணத்தையும் கொடுப்பான் சனி தேவனே. அப்பனே ஆனாலும்
எதைஎன்று அறிய அறிய சனி தேவனுக்கும் கோபங்கள்.
மனிதனுக்கு என்னதான் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொண்டு இருக்கின்றான் என்று கோபம் வந்து விட்டால் அனைத்தும் எடுத்துவிடுகின்றான் அப்பனே.
இதுதான் அவனுடைய செயல்.
அதனால் எதை என்று அறிய அவன் ( சனி தேவன் ) கொடுக்கும்போது இவற்றுக்கெல்லாம் காரணம் நிச்சயம் பின் இறைவனே
( ஈசனே) என்றுகூறிவிட்டால் சனியவன் பின் எதை என்று அறிய
அறிய பின் மனம் சந்தோசமாகி அனைத்தும்கொடுத்து விடுவான் அப்பனே இப்பொழுதே எதை யான் சொல்வது.
- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு
No comments:
Post a Comment