மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Wednesday, April 20, 2022

சித்தர்கள் ஆட்சி - 58 : ஆதி ஈசன் உரைத்த அகத்திய மஹரிஷியின் மகத்தான மகிமை குறித்த அருள் அமுத வாக்கு



ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு 


அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடன் உறை பொதிகை வேந்தன் அகத்திய மகரிஷி பாதம் காப்பு 


அகத்திய மஹரிஷி 7/4/2022 அன்று உரைத்த வாக்கு


ஆதி ஈசன் , அகத்திய மஹரிஷியை குறித்து இராஜராஜ சோழன் தவத்தை மெச்சி அவ்மன்னனுக்கு காட்சி  கொடுத்தபோது உரைத்த அருள் அமுத வாக்கு


🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏

அகத்தியன் போல் இவ்வுலகத்தில் கருணை உள்ளவர் யாரும் இல்லை!!!

ஒருவரை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அளவிற்கு தகுதிகள் படைத்தவன் அகத்தியன்.

ஆனால் அவன் மீது பற்றாத பற்று!! 

நம்பிக்கை வைத்து விட்டால் கைவிடமாட்டான் இவ்வுலகத்தில்.  அது எவரேனும் சரி!!!!

திருடனாக இருந்தாலும் சரி!! 

நல்லோர் ஆக இருந்தாலும் சரி!!!

மாற்றிவிடுவான் எளிதில் அகத்தியன்.

ஆனால் நம்பிக்கை வேண்டும் !!!

நம்பிக்கை வேண்டும் அன்பு வேண்டும்!! 

அவ் அன்பிற்கு பன்மடங்கு செய்வான் என்பது குறிக்கோளாக.!!!



No comments:

Post a Comment