“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, May 13, 2021

சித்தர்கள் ஆட்சி - x5 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - ஒரு எளிய மருந்து முறை!

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 

அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே! சமீபத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு சில விஷயங்களை கேட்டு அதற்கு நாடி வழி நம் குருநாதர் பதிலளிக்கையில், பொதுவாக ஒரு விஷயத்தை கூறினார். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். இனி வரும் காலங்களில், மனிதனுக்கு, என்ன வியாதி இது என்று தெரியாத அளவுக்கு நோய்கள் வரும், என்கிறார் அகத்தியப்பெருமான். அவற்றிலிருந்து விடுபட, கீழ் கூறிய மூலிகைகளை பொடித்து, ஒன்று சேர்த்து, தேனில் கலந்து, ஒரு சிறு உருண்டையாக்கி, தினம், காலை, மதியம், இரவு என மூன்று வேளை உட்கொண்டால், நோயிலிருந்து விடுபடலாம் என்ற தகவலை நமக்கு அருளிய பின் "இருவாரங்களுக்கு த்யானத்தில் இருக்கப்போகிறேன், அருள் வாக்கு யாருக்கும் இப்போது கிடையாது" என்று கூறி சென்றிருக்கிறார். அவர் கூறிய மூலிகைகள் (அளவு குறிப்பிடவில்லை):- 01.எலுமிச்சை தோல் - 4 02.சோம்பு 03.கிராம்பு 04.பட்டை 05.சுக்கு 06.மிளகு 07.ஏலக்காய் 08.அதிமதுரம் 09.சித்தரத்தை 10.ஆடாதோடை 11.துளசி 12.மஞ்சள் 13.கடுக்காய் 14.இஞ்சி 15.கரிசலாங்கண்ணி 16.பொன்னாங்கண்ணி 17.மணத்தக்காளி 18.கோரைக்கிழங்கு 19.நித்யகல்யாணி 20.ஆவாரம்பூ பொடி 21.குறுமிளகு 22.கருஞ்சீரகம் 23.செம்பருத்தி பூ 24.அவுரி இலை 25.வெற்றிலை 26.தூதுவளை 27.கற்பூரவல்லி 28.நெல்லிப்பொடி 29.காசினிப்பொடி 30.வேப்பம்பூ

இயன்றவர்கள், அகத்தியப்பெருமானின் இந்த மூலிகைகளை பயன்படுத்தி, நல் ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.