“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, October 12, 2026

சித்தர்கள் ஆட்சி - 759 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 23/09/2026 அன்று மலேசியா கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடந்த கூட்டுப்பிரார்த்தனை வாக்கு - பகுதி 6 ( நிறைவு பகுதி )

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 

அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர்
மலேசியா கோலாலம்பூர்


அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தன்னில்  அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!! 


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  23/09/2026  அன்று மலேசியா கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடந்த   கூட்டுப்பிரார்த்தனை வாக்கு - பகுதி 6 ( நிறைவு பகுதி )


தேதி: 23 செப்டம்பர் 2026

நாள்: புதன்கிழமை 

நேரம்: மாலை 7:30pm


வாக்குரைத்த ஸ்தலம் : Sri Sakthi Karpaga Vinayagar Temple, Brick fields, Kuala Lumpur, Malaysia


Google map link :- https://maps.app.goo.gl/5tLfwDpfCFeSt2WM8 


கூட்டுப்பிரார்த்தனை ஒருங்கிணைப்பாளர்கள்:- AGATHIYAR UNIVERSAL MISSION, Kuala Lumpur, Malaysia

அடியவர்கள் வசதிக்காக , இவ் 6 பகுதிகளையும் இங்கு அளித்துள்ளோம் - அடியவர்கள் பயன்படுத்தி கொள்க.

சித்தர்கள் ஆட்சி - 750 :- பகுதி 1 https://siththarkalatchi.blogspot.com/2026/10/750.html சித்தர்கள் ஆட்சி - 751 :- பகுதி 2 https://siththarkalatchi.blogspot.com/2026/10/751.html சித்தர்கள் ஆட்சி - 752 :- பகுதி 3 https://siththarkalatchi.blogspot.com/2026/10/752.html சித்தர்கள் ஆட்சி - 753 :- பகுதி 4 https://siththarkalatchi.blogspot.com/2026/10/753.html சித்தர்கள் ஆட்சி - 755 :- பகுதி 5 https://siththarkalatchi.blogspot.com/2026/10/755.html சித்தர்கள் ஆட்சி - 759 :- பகுதி 6 ( நிறைவு பகுதி ) https://siththarkalatchi.blogspot.com/2026/10/759.html

===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின்  பொற்  கமலத்தை  பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் லோபா முத்திரையோடு. 


( பகுதி 5 அதன் தொடர்ச்சியாக……) 


குருநாதர்:- அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே. பின் பலவகை ஞானிகள் கூட  அப்பனே பின் புத்தகங்கள், அப்பனே பலவகை சுவடிகள் , அப்பனே எழுதி வைத்திருந்தார்கள்  அப்பா. 


குருநாதர்:-  ஏனென்றால், அப்பனே, கலியுகத்தில் , அப்பனே, அழிவுகள்  பலமாக வரும் என்பதெல்லாம் தெரியும். அதை வைத்துக்கொண்டு பிழைத்துக் கொள்ளுங்கள் என்று தான் என்பேன் அப்பனே. 


குருநாதர்:-  ஆனாலும், அப்பனே, அதை கூட ஒழுங்காக படிப்பதில்லை என்பேன் அப்பனே மனிதன்.


அடியவர்:- அதாவது பல பல ஞானிகள், அவர்கள்  இறையாற்றால் உணர்ந்ததை எழுதி வைத்திருந்தார்கள். ஆனால் மனிதன் அதை கூட உணர்ந்து புரிந்து கொள்ள முடியவில்லை, அப்படின்றார்.


குருநாதர்:-  இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இப் பூலோகத்திற்கு அப்பனே, நிச்சயம் இறைவனே அனுப்பினான் என்பேன் அப்பனே. பல பல ஞானிகள் என்பேன் அப்பனே. 


குருநாதர்:- ஒவ்வொருவரையும் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட சொல்லிட்டு, பின் வாருங்கள் என்று. ஆனாலும் அப்பனே, வந்தவனை எல்லாம், அப்பனே, மனிதன், அப்பனே, பின் தரித்திரன் என்று அனுப்பிவிட்டான்.


சுவடி ஓதும் மைந்தன்:- பல பல ஞானிகள்… இறைவன் வந்து என்ன பண்றாரு? 


அடியவர்:- அனுப்புறாரு


சுவடி ஓதும் மைந்தன்:- பூலோகத்திற்கு அனுப்புறாரு. நீங்க எல்லாம்  போயிட்டு மக்களுக்கு தெரிவித்து வாங்க என்று  சொல்லிட்டு..அனுப்புறாரு.   யாராக  இருந்தாலும் சரி. எந்த சமயத்துல இருந்தாலும் சரி. பல பல ஞானிகள் இங்க வந்து போயிட்டு மக்களுக்கு உரைச்சு, போதிச்சுட்டு  வாங்க என்று இறைவன் சொன்னா, அடுத்து கடைசியில என்ன ஆகும்? மக்கள் வந்து அடிச்சு, அவங்களையே துரத்திடுறாங்க.


அடியவர்:-  அதாவது  தரித்திரன்  என்று சொல்லி துரத்தி விட்டுறாங்க.


குருநாதர்:-  ஆனால் நிச்சயம் பின் ஏன் என்று கூற  பின் சென்று விட்டால், பின்பு  அவனை பின் வணங்குவார்கள்.  இதுதான் நிச்சயம் மனிதனின் மூளை.


அடியவர்:-  அதாவது அவர்கள் ஜீவ சமாதி அடைந்த பின் தான்…. மறைந்த பின்பு தான்….. அவர்களை தேடி போய் வணங்குவது.


சுவடி ஓதும் மைந்தன்:-  அப்புறம் தேடி போய் கும்பிடுறது….


அடியவர்கள் :-  ( மூட மனிதர்களை நினைத்து சிரிப்புகள் )   


சுவடி ஓதும் மைந்தன்:-   ஐயோ, மறைஞ்சிட்டானே. என்னடா இது? நீங்களே துரத்துவதுதான் . அப்புறம் நீங்களே? 


அடியவர் :-  போய் விழுந்து விழுந்து  வணங்குவது.


சுவடி ஓதும் மைந்தன்:- வணங்குவது தான். இதுதான் மனிதனினோட மூளையா? என்று கேட்கின்றார். 


===========================

# (1) தண்ணீர்மலையில் அருளிய முருகப்பெருமான் வெற்றி மந்திரம் 

# (2) கோலாலம்பூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் - வாழ்வை வளமாக்கும் அன்னை புவனேஸ்வரி மந்திரம் , 

# (3) விநாயகப் பெருமான் வெற்றி மந்திரம்.

===========================

# அடியவர்கள் தினமும் இந்த 3 மந்திரங்களும் அழகாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். “நிச்சயம் உங்களை நீங்கள் வெல்வீர்கள்”.

===========================


குருநாதர்:-  அப்பனே, இதனால் நிச்சயம் தன்னில் கூட அனைவருக்கும், அப்பனே, பிரச்சனைகள் ஒவ்வொன்றாக நீக்குகின்றேன் அப்பனே.  கவலைகள்  வேண்டாம். 


குருநாதர்:-  ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட யான் சொல்லிய மந்திரங்களும், அப்பனே, நிச்சயம் நேற்றைய பொழுதில் சொல்லிய மந்திரங்களும், அழகாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்  என்பேன் அப்பனே. 


***** பின் நிச்சயம் உங்களை நீங்கள் வெல்வீர்கள். *****


அடியவர் :-   அதாவது இன்று சொல்லிய  இரண்டு மந்திரங்களும், நேற்று தண்ணீர் மலையில் கொடுத்த முருகன் மந்திரமும், டெய்லி நீங்க சொல்லி… உங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுங்கள்னு சொல்றாரு.


===========================

# அன்பு மகன்களே, அன்பு மகள்களே…..

===========================


குருநாதர்:-  அப்பனே, எதை என்று புரிய இன்னும் அப்பனே, இன்னும் வாக்குகள் அப்பனே பின்  அதாவது பல எவை என்று காத்துக் கொண்டிருக்கிறது. பல சித்தர்களும் அப்பனே பின் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. ஆனால் நேரம் தான் போதவில்லை, அப்பா. அன்பு மகன்களே, அன்பு மகள்களே. 


அடியவர்கள்:- (பரவசம் அடைந்தனர் இப்படி அன்புடன் தந்தை வாக்குகள் உரைப்பது கேட்டு)


சுவடி ஓதும் மைந்தன்:- இன்னும் பல சித்தர்கள் வாக்கு சொல்றதுக்கு வந்து ரெடியாக இருக்கின்றார்கள் வந்து. ஆனாலும் நேரம் போதவில்லை. அன்பு மகன்களே, அன்பு மகள்களே….எப்படி சொல்லறார் பாருங்க…..இப்படி யாரு கூப்பிடுவாங்க… அன்பு மகன்களே, அன்பு மகள்களேன்னு சொல்றாரு.


===========================

# அன்பு அகத்திய மாமுனிவர் ஏன் துன்பம் உங்களுக்கு கொடுக்கின்றார்?

===========================


குருநாதர்:- எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இதற்காகத்தான் சிறு  சிறு துன்பங்கள்  எல்லாம் வைக்கின்றேன். கவலைகள் இல்லை. நிச்சயம் துன்பம் இருந்தாலும், யான்  அருகிலேயே இருப்பேன். ஏனென்றால், நிச்சயம், என் குழந்தைகள், அப்பனே நிச்சயம் பின் புத்திசாலியாக இருக்க வேண்டும்.


சுவடி ஓதும் மைந்தன்:- அதனால, துன்பம் வச்சாலும், நான் உன் பக்கத்துலயே இருப்பேன். ஏன்னா என் குழந்தைகள் எப்படி இருக்கனும்?


அடியவர்கள்:- புத்திசாலியாக இருக்கனும்  


சுவடி ஓதும் மைந்தன்:-  அதற்காகத்தான் நான் துன்பம் வைக்கின்றேன் என்று சொல்கின்றார். 


குருநாதர்:- இதனால கவலைப்பட தேவையில்லை. அனைத்தும் வழங்குவேன். நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன்:-  அதனால கவலைப்பட தேவையில்லை. அனைத்தையும்?  


அடியவர்:- கொடுப்பேன். 


சுவடி ஓதும் மைந்தன்:-   அனைத்தையும் கொடுப்பேன். 


===========================

# முருகப்பெருமானின் வாழ்க்கை வரலாறு..

# தெரிந்து கொண்டால் இன்னும் செழிப்படைவீர்கள்…….

===========================


குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் இன்னும்  பின் எவை என்று புரிய, இதனால் முருகனின் வாழ்க்கை வரலாற்றை பற்றி நிச்சயம் தெரிந்து கொண்டால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் செழிப்படைவீர்கள் என்பேன் அப்பனே. வருங்காலத்தில் அவை தன் நிச்சயம் செப்புவேன் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன்:-  இன்னும் முருகப்பெருமானின் வாழ்க்கை வரலாறு.. யாருக்காவது தெரியுமா? ஏதோ கொஞ்சம் தெரியும். 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:-  ( ஜீவநாடி மூலம் வரும் செய்திகள் உலகத்துக்கு தெரியாத, புத்தகங்களில் இல்லாத ஆழமான ஞானங்கள். அவை ஒரு மாணவன் படிப்படியாக அறிவை கற்றுக்கொள்வது போல, மனிதன் தன்னுள் ஆற்றலை வளர்த்துக்கொள்ள உதவுகின்றன. ஞானிகள் கூறும் மறைஞானம் மனத்தில் ஆற்றலை அதிகரித்து, தெய்வத்தின் உண்மை வடிவம், முருகனின் சிந்தனை, இறைவனின் இயல்பு ஆகியவை தெளிவாகப் புரியத் தொடங்கும். இந்த ஆற்றல் வளர்ந்தால், மனிதனின் சிந்தனை உயர்ந்து, தெய்வீக உண்மையை உணர முடியும். இதன் சாரம்—ஞானம் படிப்படியாக வெளிப்படும்; ஆற்றல் பெருகும் போது தெய்வத்தை உணர்வது எளிதாகும். )


===========================

# இவ் தேசம்….என் தேசம். அவ் குள்ளர்கள் தான் நீங்கள்….

===========================

# குள்ள மாமுனிவரின் மலரும் நினைவுகள்…. 

===========================


குருநாதர்:- அப்பனே, நலன்களாகவே இதனால் கவலை கொள்ளத்  தேவையில்லை என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட  அப்பனே இன்னும் தேவை செய்யுங்கள். அப்பனே, இவ் தேசம், அப்பனே, நிச்சயம் பின் எப்பொழுதும் செல்வேன். என் தேசம்.


சுவடி ஓதும் மைந்தன்:-  இது அகதியருடைய தேசம். 


அடியவர்:- அதனால, நீங்க சேவை செய்ய வேண்டும்.


குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய இதனால் தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட,  அதாவது அக்குள்ளர்கள் பின் வழியில் வந்தவர்கள் தான் அப்பனே நீங்கள் கூட.  இப்பொழுது நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் எனை. 


சுவடி ஓதும் மைந்தன்:-  இப்பதான் நீங்க எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். அப்பனா அந்த ஜென்மத்துல நீங்கள் எல்லாம் குள்ளர்களாக இருந்தவர்கள்தான்.. அந்த ஜென்மத்துல நீங்க பிறந்திருக்கும் போது… ஆமா…. அதனாலதான் இந்த ஜென்மத்திலேயே நீங்க வந்து என்னை வந்து சந்தித்து, அகத்திய பெருமானை சந்தித்து…. அகத்தியர்… அகத்தியர்…. என்று சொல்லிட்டு வந்திருக்கீங்கப்பா. இதுதான்ப்பா பந்தம். பந்த பந்தமா வந்து… பாசங்கள்  இதுதான் சொல்லிட்டு…. 


===========================

# குள்ளர்கள் தேசத்தில்,  போகர் பெருமானின் ரகசிய மூலிகைகள்….

===========================


குருநாதர்:- அப்பனே, இன்னும் எதை என்று புரிய நிச்சயம் கூட,  அப்பனே, ஏன், எதற்காக, அப்பனே, இன்னும் அப்பனே, ரகசிய மூலிகைகள் கூட அப்பனே, பின் போகன் அப்பனே பின் இங்கு கண்டு அப்பனே, தெளிந்துள்ளான் என்பேன்   அப்பனே. 


குருநாதர்:-  அவ்  மூலிகை பற்றி வருங்காலத்தில் உரைக்கிறேன் அப்பனே. 


குருநாதர்:-  அப்பனே, பல நோய்களும், அப்பனே, வந்து கொண்டே இருக்கிறது. அதற்காகவும்  அப்பனே, யான்  நிச்சயம் போகனே…வரச்சொல்கிறேன் அப்பனே.  உரைப்பான் என்பேன் அப்பனே. 


அடியவர்:-  அதாவது இந்த பத்து மலைக்கும் போகர் சித்த பெருமானுக்கும் சம்பந்தம் உண்டு என்று முருகப்பெருமானே வாக்குல சொன்னாரு. இப்ப இந்த போகரே வந்து வாக்குல உரைப்பார். என்னென்ன மூலிகைகள் எடுத்துக்கொண்டால், எதிர்காலத்தில் வரும் இந்த வைரஸ், இந்த மாதிரி பிரச்சனைகள் எப்படி நம்மளை காத்துக்கொள்ளலாம், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று போகர் சித்த பெருமானே வந்து உரைப்பார் என்று சொல்கிறார்.


குருநாதர்:- அப்பனே, கவலைப்பட வேண்டாம். நிச்சயம் தன்னில் இன்னும்  அப்பனே, ஏராளமான வாக்குகள் காத்து இருக்கின்றது என்பேன் அப்பனே… ஆனாலும்  அப்பனே  பின் தூக்க  எதை என்று அறிய கலகத்திலேயே இருக்கின்றீர்கள் அப்பனே…


அடியவர்:-   சில பேர் தூக்க கலக்கத்துக்கு போயிட்டாங்கப்பா. 


அடியவர்கள் :- ( பலத்த குபீர் சிரிப்புகள்…… )  


அடியவர்:- இப்போது இது போதும்பா, அப்படின்னு சொல்றாரு.


சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா புரிஞ்சுதுங்களா ஐயா ? 


குருநாதர்:-  அப்பனே, நல் ஆசிகள். இன்னும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஞானிகள் வருவார்கள். அப்பனே, நிச்சயம் அவர்களுக்கு  ஏற்றவே வாக்குகள் செப்புவார்கள்.  அப்பனே, கவலை வேண்டாம். 


சுவடி ஓதும் மைந்தன்:-  இன்னும் ஞானிகள்? 


அடியவர்:- வருவார்கள். 


சுவடி ஓதும் மைந்தன்:-  வருவார்கள். இன்னும் பல வாக்குல உரைப்பார்கள். 



(இப்போது முருகப்பெருமான் உரைத்த ஒரு வாக்கினை, இங்கு அடியவர்கள் அறிய தருகின்றோம். இதனை படித்து விட்டு பின் வரும் வாக்கினை படிக்க, அகத்திய மாமுனிவரின்  விஞ்ஞான வல்லமை குறித்து  நன்கு பல புரிதல்கள் உண்டாகும். 


சித்தன் அருள் - 1646

முருகப்பெருமான் வாக்கு:- 


****** எந்தனுக்கு விஞ்ஞானம் அகத்தியன்தான் தான் கற்றுக் கொடுத்தானப்பா. பல விசயங்கள் அறிந்தும் கூட****** 


****** அகத்தியனுக்கு மிஞ்சிய இங்கு பின் விஞ்ஞானமும் இல்லை. ****** 


****** நிச்சயம் அகத்தியனுக்கு மிஞ்சிய பின் அறிவாளியும் இங்கு இல்லை.****** 


****** அறிந்தும் கூட ( அகத்தியனுக்கு மிஞ்சிய பின் ) காப்பவனும் பின் இல்லை.****** 


தெரிவித்துவிட்டேன் (உலகோருக்கு) இங்கு….. )


===========================

# அகத்திய பிரம்மரிஷி மூலம்  அனைத்து ஞானிகளும் பாடம் படித்தவர்கள்…….

===========================


குருநாதர்:-   அப்பனே, எதை என்று புரிய நிச்சயம் தன்னில் புத்தனும் அப்பனே எதை என்று புரிய என்னோடு இருந்தவன் தான் அப்பனே. நிச்சயம் பின்  இயேசுவும் என்னோடு இருந்தவன்தான் என்பேன்  அப்பனே. எவை என்று நபிகளும்  என்னோடு இருந்தவன்தான் அப்பனே.


அடியவர்:-  ஏன்னா, இந்த மூன்று தேசத்திலும் புத்திசம் இருக்கு. அவர் புத்தர், இயேசு, நபிகள் நாயகம் எல்லோரும் என்னுடன் இருந்தவர்கள் என்று அகத்திய மாமுனிவர் சொல்கின்றார்.


குருநாதர்:-  அப்பனே, எதை என்று கூற அதாவது முருகன் இருக்கிறானே அப்பனே, நிச்சயம் அங்கு நிச்சயம், பின் ஆராய்ச்சி கூடத்தை வைத்தேனே….  பின் இவர்கள் எல்லாம் வந்து, அப்பனே சில விஷயங்கள், அங்கு தான் கற்றுக் கொண்டார்கள் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன்.


அடியவர்:-   அதாவது இந்த மூன்று நபிகள் நாயகம், இயேசு பிரான், புத்தர், இவர்கள் எல்லாரும் அந்த ஆராய்ச்சி கூடத்திலேயே பல விஷங்கள் தெளிந்து கொண்டார்கள்.


சுவடி ஓதும் மைந்தன்:-  தெரிந்து கொண்டார்கள். 


===========================

# அழிவின் ஆணிவேர் - பிரிவினை…

# பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்?

===========================


குருநாதர்:-  அப்பனே, ஆனால் மனிதன் இப்பொழுது பின் மாயையில்  விழுந்து விட்டு பிரித்து காட்டுகின்றார்கள் அப்பனே. இதுதான் அப்பனே வேதனைக்குரியது. இதனால்தான் அழிவு பெருமளவில்….


அடியவர்:-   அதாவது இப்ப மதத்தின் பெயரில் நடக்கும் பிரிவினைகள், அதனால் நடக்கும் மோதல்கள் தான் கொடுமை. அதனால்தான் அழிவுகள். ஈசனுக்கு கோபம். அப்படிங்கிறார்.


குருநாதர்:-  அப்பனே, பின்  நிச்சயம் பின் இவ்வாறாக  அப்பனே வேறுபாடும்  வந்து, அப்பனே, சண்டைகள்  வரும் என்பேன்  அப்பனே இவ் தேசத்தில் அப்பனே. 


அதன் முன்னே அப்பனே, நிச்சயம் நீங்கள் தான், அப்பனே என்  பக்தர்கள், அப்பனே, பின் அதாவது தடுத்திட  வேண்டும் என்பேன் அப்பனே. அதற்கு யான் அருகிலேயே இருப்பேன் அப்பனே. 


 *****  வாக்கை கேட்டு, அப்பனே, அதன்படி செயல்பட, நன்றே என்பேன் அப்பனே. ***** 


 கவலைகள் இல்லை அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


***** அப்பனே  உலகோதோருக்கு அப்பனே, நிச்சயம், அப்பனே பின் நல் வாக்கை  யான் செப்புவேன் அப்பனே தொடர்ந்து, அப்பனே யார் தடுத்தாலும் என்பேன் அப்பனே.***** 


அடியவர்:-  அதாவது இந்த இந்த விசயங்களால்…..


சுவடி ஓதும் மைந்தன்:-  வாக்குகள் வந்து கொண்டே இருக்கும் என்று சொல்கின்றார் வந்து …


அடியவர்:-   இந்த இந்த மதங்களினாலே…. வருங்காலத்திலே மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.


சுவடி ஓதும் மைந்தன்:-  வாய்ப்பு உண்டு என்று சொல்கின்றார்.


அடியவர்:-  என்  பக்தர்கள், நீங்கள் அன்பை பரப்பி, தர்மத்தை சொல்லி, சொல்லி.


சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப சொல்லி மத்த மதத்துல என்ன பண்ணுவாரு? மத்த மதத்திற்கு என்ன சொல்லணும்?  இப்படி அகத்தியர் சொல்லியிருக்கிறார் என்று சொல்லவேண்டும்… 


அடியவர்:-  அவர்களும் தர்மத்தை பின்பற்றி நடப்பவர்கள், அன்பை செலுத்துவார்கள். அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன்:- அவர்களும்?  


அடியவர்:- அந்த தர்ம வழிக்கு போவார்கள். அவர்கள் மதத்தை பின்பற்றுவார்கள். ஆனால் அவர்களும் தர்மம் என்று ஒன்று இருக்கு…


சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாரும் நான் புரிய வைத்துவிடுவேன் என்றார் வந்து . ஐயா, புரியுதுங்களா?


===========================

# அன்பு அகத்திய மாமுனிவரின் ஆனந்த கண்ணீர்

=========================== 

# முற்பிறவி தனது செல்லக்  குள்ளர்களை , இப் பிறவியில் பார்த்து  ஆனந்த கண்ணீர்

===========================

# அன்பு அகத்திய மாமுனிவரின் “பசுமையான நினைவுகள்”

=========================== 


குருநாதர்:-  அப்பனே கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. சித்தனுக்கு அனைத்தும் தெரியும் என்பேன் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட எவையென்று புரிய..அப்பனே நிச்சயம்  பல வகையிலும் உங்களுக்கு நன்மையே செய்கின்றேன் அப்பனே. நிச்சயம் ஓடோடி வந்தீர்களே அப்பனே. பின் அதாவது அகத்தியன் என்று பெயரை சொல்கின்றபொழுது அப்பனே  நிச்சயம் தன்னில் கூட அப்பனே  உங்களை பார்த்து ஆனந்த கண்ணீர் அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன்:- அகத்திய பெருமான் என்ன சொல்கின்றார் தெரியுங்களா? எப்பா …என் பெயரை “அகத்தியர்” என்று சொன்னவுடன் ஓடோடி வந்தீர்களே…இப்படியும் இருக்கின்றார்கள் என்று நான் ஆனந்த கண்ணீர்..எவ்வளவு பாசம்…ஐயா புரியுதுங்களா ?


அடியவர்:-  அவரோட வாக்கை கேட்கணும்னு இத்தனை ஆன்மாக்கள் மட்டும் இங்க காத்துக்கொண்டே…. கேட்டுக்கொண்டே இருக்கும் பொது … அவருக்கு  அவ்வளவு சந்தோஷம்.


பொது:- ( அகத்திய மாமுனிவர் உட்பட , அங்கு அனைவருக்கும் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள் அங்கு நடந்தேறியது… அன்பு தந்தையையே ஆனந்த கண்ணீர் விட வைத்துவிட்டனர் இவ் பாசக்கார முற்பிறவி அடியவர்கள்…) 


சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, சொல்லுங்க ஐயா.


அடியவர்:-  ஐயா, தூக்க கலக்கம் போயிட்டாங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-   தூக்க கலக்கம். ஆமா. அப்ப அந்த பார்த்து, அந்த அன்பை பார்த்து நான் வந்து…நீங்க பாசத்தை பொழிந்ததற்காக நான் ஆனந்தக்கண்ணீர் விடுகின்றேன் என்று சொல்கின்றார். அந்த பாசத்தை பார்த்து பார்த்து பெருமைப்படுறேன் என்று சொல்கின்றார் அகத்தியர். அப்படின்னா எவ்வளவு கருணை மிக்கவர் பாருங்க அய்யா…


அடியவர்:-  (நெகிழ்ச்சியுடன்) தலையாய சித்தர்.


===========================

# என் அன்பு மகன்களே , என் அன்பு மகள்களே….

# நாம் ஒன்று சேர்ந்து….. இவ் உலகத்தில் அனைவருக்கும் நல்லதையே செய்வோம். நல்லதையே விளைவிப்போம்…கலியுகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம்….

=========================== 


குருநாதர்:-  அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட இவ் உலகத்தில் அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே  இதனால் நல்லதையே செய்வோம் அப்பனே. நல்லதையே அப்பனே பின் விளைவிப்போம் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட மாற்றுவோம் அப்பனே தலையெழுத்தை.


அடியவர்:-  அதாவது கலியுகத்தை மாற்றுவோம். இந்த கலியுகத்தை தலையற்றே மாற்றுவோம். 


சுவடி ஓதும் மைந்தன்:-   மாற்றுவோம். கலியுகத்துல வந்து நிறைய அழிவுகள் எல்லாம் வந்திருக்கு. ஆனால் தர்மத்தை செய்து, தான தர்மத்தை செய்து, நல்லதை எல்லாம் பரப்பி, இந்த?  


அடியவர்:-  கலியுகத்தில் நல்லதை மாற்றுவோம். 


சுவடி ஓதும் மைந்தன்:- மாற்றுவோம். 


===========================

# எப்போது அழிவுகள் முற்றிலும் தடுக்கப்படும் ?

===========================

# கலியுகத்தின்  அழிவை தடுக்கும் தொலைநோக்கு பார்வை… 

===========================


குருநாதர்:-  அப்பனே  எதை என்று கலியுகத்தில் பின் எவை என்று கூற அப்பனே தேசம்  மனிதனிடத்திலே… அதாவது புவி மனிதனிடத்திலே சென்று விட்டது என்பேன் அப்பனே…. 


அதனால்தான் அப்பனே, வந்து வந்து, அப்பனே வாக்குகள் செப்பிக் கொண்டு…. அப்பனே பின் நல் மாற்றங்கள் அப்பனே. 


இதனால் அப்பனே நிச்சயம் அனைவரையும்  எப்படி மாற்றுவது?  என்பது எல்லாம் அப்பனே  விஞ்ஞானப் பூர்வமாகவே அப்பனே பின் கண்டுபிடித்து உள்ளேன் என்பேன் அப்பனே.  


பின் நிச்சயம் இவை தன் சொல்லி சொல்லி, அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதையும் எடுத்து வந்து விடுவேன் சுலபமாக. 


அப்பனே மனிதனும் மாறிவிடுவான். 


அப்பனே உலகம் அழிவு நிலைக்கு செல்லாது என்பேன் அப்பனே. 


அப்படி மாறவில்லை என்றால் அடிக்கடி அப்பனே  இயற்கை சீற்றங்கள் அப்பனே நிச்சயம் இறைவனே உருவாக்குவான் என்பேன் அப்பனே… பின் அதி விரைவிலே… 


எதை என்று புரிய அதனால் அப்பனே அதை வாராமல் தடுக்க அப்பனே மனிதன் அப்பனே மனிதனிடத்திலே இருக்கின்றது என்பேன் அப்பனே.


இதனால் தான் அப்பனே வருங்காலத்தில் மனிதனுக்கு செப்பி செப்பி,  அப்பனே இறைவனை சாந்தப்படுத்தி விட்டால்……… அப்பனே அழிவுகள் அப்பனே ஏதப்பா? ஏது ?


அடியவர்:-   ரொம்ப முன்னாடி வந்து இந்த பூலோகத்தை தேவர்கள் ஆண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது மனிதர்கள் ஆள்கிறார்கள். ஆனால் எல்லாம் மாறிவிட்டது. தர்மம் இல்லை. அதனால அழிவுகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவர் என்ன சொல்றாருன்னா நான் சயின்டிஃபிக்கா எல்லாத்தையும் கன்வின்ஸ் பண்ண முடியும். இந்த உலகத்துல சயின்டிஃபிக்கான மனசை எப்படி மாற்றுது? அது எனக்கு தெரியும். அதன் வழியிலே மாற்றுவேன். 


===========================

# கற்பக விநாயக பெருமான் ரசித்துக்கொண்டே வாக்குகளை கேட்டார்.

===========================


சுவடி ஓதும் மைந்தன்:-  சயின்டிஃபிக்காக எப்படி அந்த மனசை மாத்துறதுன்னு தெரியும் என்று சொல்கின்றார். அதை மாத்தி நான் வந்து என்ன பண்ணுவேன்? மக்களிடையே தர்மத்தை நிலை நாட்டுவேன் என்று சொல்கின்றார் 


அடியவர்:- அப்ப இறைவன் சந்தம் அடைவார். அப்ப அழிவு என்ற வார்த்தைக்கு வேலை இல்லை அப்படிங்கிறார்.


குருநாதர்:-   அப்பனே இதனால் கவலை கொள்ள வேண்டாம் என்பேன் அப்பனே. 


***** அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் லோபாமுத்திரையோடு உண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட… *****


*****  அப்பனே பிள்ளையான்  அப்பனே மிக ஞானகாரகன் என்பேன் அப்பனே. அவனும் பார்த்து ரசித்துக் கொண்டே இருந்தான் அப்பா. ***** 



அடியவர்:- அதாவது இந்த கற்பக விநாயகர் அகத்தியர் சொன்ன இந்த உரையை ஆனந்தத்தோடு  ரசித்துக் கொண்டிருக்கிறார். இங்கு உள்ள உங்கள் அனைவருக்கும் அன்னை லோபாமுத்திரையோடு அகத்திய பெருமானின் ஆசிகள்..


===========================

# ஆனந்தத்தோடு மந்திரத்தை சொல்லுங்கள். ஆசிகள் பெருகும்.

===========================


குருநாதர்:-   அப்பனே அதனால் தான் நிச்சயம் ஆனந்தத்தோடு அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் மந்திரத்தை சொல்லுங்கள் என்பேன் அப்பனே. ஆசிகள் பெருகும் என்பேன் அப்பனே. 


***** உனை நீங்கள் வெல்லுங்கள். *****


===========================

# அனைவரும் உலக நன்மைக்காக,  அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று, ஒரு பெரிய  கூட்டு வழிபாடு செய்யுங்கள் - இரு மாதத்திற்குள்…

===========================


குருநாதர்:-   அடுத்த நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் எவை என்று கூற பின் அனைவரும்,  


அதாவது அப்பனே நிச்சயம் தன்னில் கூட 


*****  உலக நன்மைக்காக, அப்பனே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று, ஒரு பெரிய அப்பனே பின் நிச்சயம் கூட்டு வழிபாடு செய்யுங்கள் என்பேன் அப்பனே. ***** 


இன்னும் இரு மாதத்திற்குள்ளே எவை என்று கூற… 


***** அப்பனே மனிதன் தலை வணங்குவான் என்பேன் அப்பனே. *****


*****  மதச்சார்பின்மை,  தலை வணங்கும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே ***** 


*****  மக்கள் அப்பனே பின் எவை என்று கூற உங்களால் மாற வேண்டும். ***** 


***** அதாவது அகத்தியன் பிள்ளைகளால் மாற வேண்டும். சொல்லிவிட்டேன். ***** 


அடியவர்:- அதாவது இந்த ஒரு அல்லது ரெண்டு மாசம் அதற்குள்,  நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடி ஒரு கூட்டு பிரார்த்தனை(வழிபாடு)……  லோக சேமத்திற்காக செய்யவேண்டும்.  நீங்கள் செய்யும் பிரார்த்தனை பார்த்து,  மத்த மதக்காரர்கள்….. ஆகா!!!!! எல்லாரும் நல்லா இருக்கணும் என்று வேண்டுகின்றார்களே என்று அனைவரும் நினைப்பார்கள்.


சுவடி ஓதும் மைந்தன்:-  உலகத்தில் எல்லோருக்காகவும் நீங்க வேண்டினால், எல்லோருக்கும், மக்களுக்கும், மற்ற சமயங்களுக்கும், பிற மதத்தவருக்கும்  நீங்கவேண்டுவது   தெரியுமாம்.  எல்லாரும் நல்லதுக்காக வேண்டுறாங்க. நம்ம எல்லாருடைய  நன்மைக்காக வேண்டுறாங்க என்று நினைத்து, அவங்களும் ஒரு மனம் மகிழ்வங்கப்பா…. 


அடியவர்:-  உங்களையும் தலை வணங்குவாங்க. 


சுவடி ஓதும் மைந்தன்:-   உங்களையும் தலை வணங்குவாங்க அப்பா. பரவாயில்லையே, இப்படி கூட்டு வழிபாடு ஏற்படுத்தி, ஆகா!!!!! இப்படி எல்லாரும் நல்லா இருக்கணும். ஆகா!!!!! அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் வேண்டுகின்றார்களே என்று மனம் மகிழ்வங்க. 


குருநாதர்:-   அப்பனே இன்னும் விளக்கங்கள் கூறுகின்றேன். இது போதுமப்பா இப்பொழுது. 


***** எம்முடைய ஆசிகள் பரிபூரணமாக பரிபூரணமாக.. *****


*****  மீண்டும் வந்து வாக்குகள் செப்புவேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட  அன்பானவர் இல்லத்திற்கெல்லாம்  அப்பனே இச்சுவடி தேடி வரும் என்பேன் அப்பனே. ஆசிகள் !  ஆசிகள்!!. ***** 


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  23/09/2026  அன்று மலேசியா கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடந்த   கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் நிறைவு அடைந்தது……. ) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தன்னில்  அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.  


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.