“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, September 22, 2025

சித்தர்கள் ஆட்சி - 481 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - உலகம் அறியாத புரட்டாசி விஷ்ணு வில் ரகசியங்கள்

                                              இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். 





ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!


Sunday, September 14, 2025

சித்தர்கள் ஆட்சி - 480 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 11

                                        இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். 



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 10

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

01.சித்தர்கள் ஆட்சி - 467 - பகுதி 1
02.சித்தர்கள் ஆட்சி - 468 - பகுதி 2
03.சித்தர்கள் ஆட்சி - 469 - பகுதி 3
04.சித்தர்கள் ஆட்சி - 471 - பகுதி 4
05.சித்தர்கள் ஆட்சி - 472 - பகுதி 5
06.சித்தர்கள் ஆட்சி - 473 - பகுதி 6
07.சித்தர்கள் ஆட்சி - 474 - பகுதி 7
08.சித்தர்கள் ஆட்சி - 475 - பகுதி 8
09.சித்தர்கள் ஆட்சி - 477 - பகுதி 9
10.சித்தர்கள் ஆட்சி - 479 - பகுதி 10
11.சித்தர்கள் ஆட்சி - 480 - பகுதி 11

)

அடியவர் :- ( ஒரு துன்பம் தொடர்ந்து வருவது குறித்து கேட்ட போது…)

குருநாதர் :- நிச்சயம் அதாவது சொன்னேன். எவ்வளவு கஷ்டத்திலும் நீந்திச் செல்.

அடியவர் :- குருவே ஞானம் அடைவது சாத்தியமா? 

குருநாதர் :- அப்பப்பா !!! இன்னும் இதற்கு சிறந்த விளக்கங்கள் உண்டு. பொருத்திருக்க வேண்டும். 

அடியவர்கள் :- ( சில பல சுய கேள்விகளை முன்வைக்க..) 

குருநாதர்:- அப்பனே, மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. உலகம் அழிவு நிலைக்குச் செல்கின்றது. நிச்சயம் அப்பனே அதாவது பின் அப்பொழுது கேட்டாளே,  பின் இத்தனை பேர்கள் இறந்திட்டார்களே என்று , அவளை அக்குழந்தையை எழுப்பு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அந்த சின்னப்பெண், அந்த குழந்தையை கூப்பிடுங்க ஐயா. 

ஐயா இது ஜீவ நாடிங்க ஐயா. அகத்தியர் உத்தரவு கொடுத்தால் மட்டுமே தொடவும் முடியும். படிக்கவும் முடியும். பாருங்க அந்தப் பெண்ணை கூப்பிட்டுவிட்டார். 

( குருநாதர் அழைத்த அக்குழந்தை விமான விபத்தை எப்படித் தடுக்க வேண்டும் என்று உயர் எண்ணங்களுடன் கேள்வி கேட்டது சற்று நேரம் முன்னர். இதனை இதன் முந்தைய பகுதி 10 அங்கு படித்து அறியவும்.) 

குருநாதர் :- தாயே!!! இப்படி கேட்டிட்டாய். ஆனாலும் பின் அனைவரும் எப்படி இருந்தால் வருங்காலத்தில் நிச்சயம் தன்னில் கூட உலகம் அழியாமல் இருக்கும் என்பதை எடுத்துரைக்க. இதை நீ நிச்சயம் எடுத்துரைக்க வேண்டும். 

உயர்  பொது நல எண்ணங்கள் உடைய  குழந்தை அடியவர் :- 

(இவ் குழந்தை உரைத்த வாக்கினை பின் வரும் YouTube பதிவில் சென்று அவசியம் பார்த்து தெரிந்து கொண்டு மேலும் தொடருங்கள்) 

சுவடி ஓதும் மைந்தன் :- இதுபோல் (பலர் உயிரிழந்த விமான விபத்து) நடந்துவிட்டது. இனிமேல் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நீங்க சொல்லுங்க அம்மா.  அந்த பக்குவநிலை…நீங்க சொல்லுங்க அம்மா. 

மற்றொரு அடியவர் :- காலையில் இருந்து கேட்டீங்க இல்லையா?. குருநாதர் என்ன சொன்னாங்களோ, அதை எடுத்துச் சொல்லுங்கள். 

உயர்  பொது நல எண்ணங்கள் உடைய குழந்தை அடியவர் :-  எல்லோரும் மற்றவர்களுக்கு உதவி செய்யனும். மற்றவர்களைப் பற்றி நினைக்க வேண்டும். தான் , தான் என்று நினைக்கக் கூடாது. எப்படி ( குருநாதர் ) சொல்ல வருகின்றார் என்றால் , நமக்குத் தெரிஞ்சவங்களுக்கு மட்டும் இல்லாமல், யார் என்றே தெரியாதவங்களுக்கும் நம்ம உதவி செய்யனும் என்று அவர் சொல்கின்றார். யார் என்றே தெரியாதவங்கள் கூட நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும். அவங்க நம்ம எதிரியாக இருந்தாலும் பரவாயில்லை. எல்லாருமே நல்லா இருக்கனும். 

சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் சொல்லுங்க. 

உயர்  பொது நல எண்ணங்கள் உடைய குழந்தை அடியவர் :-  (ராகு கிரகம் புவியை நோக்கி வேகமாக வருவதால் , இதனைத் தடுக்க) அதுக்கான வழி , உலகமே அழியப் போகுது என்ற நிலையில் (அகத்திய மாமுனிவர்) நான் வந்து நிற்கின்றேன். நான் வந்து உலக மக்கள் எல்லோரையும் காப்பாற்ற try பன்றேன் என்று அவர் சொல்ல வரார். 

( இவ்விடத்தில் அக்குழந்தை, இரும்பு போன்ற மன உறுதியுடன்,  ஒரு மாபெரும் மக்கள் தலைவரைப் போல, அங்கு உள்ள அனைவருக்கும் ஓங்கி எடுத்துரைத்த அறிவுரை).

“””””அதுக்கு வந்து நம்மளும் கன்டிப்பா அவர் கூட நிக்கனும். கன்டிப்பா வந்து நாம் அவர் சொல்ரத நாம செய்யனும்.””””

எப்படி சொல்ல வருகின்றார் என்றால்…. அவர் வந்து… நவகிரக தீபத்தை……. ( அதற்குள் கருணைக்கடல்…...) 

குருநாதர் :- தாயே!! எவை என்று கூற.. நிறுத்து!. அறிந்தும் கூட அனைவருக்கும் பின் ஏன் இப்புத்தி வரவில்லை. இதனால் எப்பொழுது இவ் புத்தி வருகின்றதோ , அப்பொழுதுதான் நல்லதே நடக்கும். சொல்லிவிட்டேன்.  

“”””””அப்பனே, நிச்சயம் தன்னில் கூட , பலர் இறக்கப் போகின்றார்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?””””””

அடியவர்கள் :- (விளக்கங்கள், உரையாடல்கள்)

குருநாதர் :- தாயே , நிச்சயம் தன்னில் கூட, உலகம் பல அழிவுகளைச் சந்திக்கப் போகின்றது இன்னும் சில மாதங்களிலே. இதனால் யாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். இதனால் உங்கள் குறைகள் , ஒரு குறைகளே இல்லை. 

இத்துடன் (வாக்குகள்) விட்டுப் போவதில்லை. நிச்சயம் மீண்டும் உரைக்கின்றேன். அனைத்தும் பின் யானே நன்மைகளாகச் செய்துவிடுவேன் உங்களுக்கு. சில அதாவது பின் இது ஒரு சிறு, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும்,  விரல் அளவிற்கே. 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்கள் குறைகள் எல்லாம் விரல் அளவுக்குத்தான் இருக்கு. பெரிசு எல்லாம் கிடையாது. ஏன்னா, உயிரே நிறைய  அழிவு வரப்போகுது. உங்கள் விரல் அளவுக்குத்தான் குறை இருக்குது. அதை நானே தீர்த்து வைத்துவிடுவேன் என்று சொல்ரார். சரிங்களா? 

குருநாதர் :- இதனால் உங்கள் வேலையை தொடர்ந்து செய்யுங்கள் யான் பார்த்துக் கொள்கின்றேன்.  இதனால்தான் மிக்க மிக்க யான் சொல்லியதை (கூட்டுப் பிரார்த்தனை, நவகிரக தீபம் அனுதினமும் இல்லங்களில் ஏற்றி உலக நன்மைக்காக வழிபாடு, தான தர்மங்கள், பல புண்ணியங்கள் இவற்றை) ஏற்று நடங்கள். நிச்சயம் அடுத்தடுத்த வாக்குகள் வந்து கொண்டே இருக்கும். 

பல புண்ணிய சேவை புரியும் மதுரை அடியவர் :- ( திருவாதவூர் அருகில் முக்கம்பட்டி ஏஞ்சல் தேவகி முதியோர் இல்லம் நடத்தி சேவை செய்யும் பிரபாகரன் என்ற மற்றொரு அடியவருக்காக கருணைக்கடலிடம் அருள் ஆசி கேட்ட போது….. ) 

குருநாதர் :- அப்பனே பிறப்பின் ரகசியத்தை, அதாவது முதலிலேயே யான் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே. 

“”””””அப்பனே பிறப்பு என்பது ஏதாவது அப்பனே உபயோகத்திற்காக இருக்க வேண்டும் அப்பனே. “””””””

அவன் என்ன செய்கின்றான் என்று அவனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. ஓர் முறை கூறு அப்பனே? 

உயர் சேவை செய்யும் அடியவர் :-  என்னுடைய wife accident ஆகி இறந்துவிட்டாங்க. அவங்களுடைய ஞாபகாரத்தமாக 2011ல் இருந்து முதியோர் இல்லம் நடத்தி வருகின்றோம். இதுவரைக்கும் ஆதரவே இல்லாதவங்களை மட்டும்தான் இல்லத்தில் சேர்போம். அவங்களை வந்து ரொம்ப கடுமையான கஷ்டத்திலதான் நடத்திக்கொண்டு இருக்கோம்.  இப்ப   திருவாதவூர் பக்கத்தில முதியோருக்காக ஒரு இல்லம் கட்டியிருக்கோம். அங்க வந்து இறுதிச் சடங்கு கிட்டத்தட்ட 622 பேருக்கு இதுவரைக்கும் செஞ்சிருக்கோம். எனக்கு வயசு 43 வயசுதான். அதனால இந்த உலகத்துல நாம (போகும்போது) எதையும் கொண்டு போறதில்லை. இருக்கிற வரைக்கும் 4 பேருக்கு உதவி செஞ்சுட்டு போகனும். இந்த செல்போன் கூட வேண்டும்னா யாருக்காவது கொடுத்திட்டு போகனும். அதை நம்ம உணர்ந்துட்டோம்னாலே போதும். 

_______

( அன்பு அடியவர்கள் கவனத்திற்கு :- 

இவ் அடியவரின் முழுவிபரம் :- 

திரு.P.பிரபாகரன்,

அறக்கட்டளை நிர்வாகி, 

திருவாதவூர் அருகில் முக்கம்பட்டி ஏஞ்சல் தேவகி பிரபாகரன் பவுன்டேசன், 

Angel Devaki Prabhakara foundation, (Reg No: IV 9/2011) 

ஆதரவற்ற முதியோர் இல்லம்,

3/52, முக்கம்பட்டி, தெற்காமூர்(PO) , மேலூர் தாலுகா, 

திருவாதவூர், மதுரை - 625110.


ஆதரவற்ற முதியோர் இல்லம்


Mobile :  +91-9626292907

Email : adpt.mdu@gmail.com

Donate / Website: www.adpftrust.in/donate.html

Contact :- www.adpftrust.in/contact.html

Google map link :- 

https://maps.app.goo.gl/cNAsBzjYEBFMow4R6


Angel Devaki Prabhakaran Foundation

Account number: 3420101004829

Bank : Canara Bank 

Branch : Madurai Gomathipuram Branch 

IFSC : CNRB0003420

வணக்கம் அடியவர்களே, குருநாதரால் இவ்வலகிற்கு மதுரை சத்சங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திரு. பிரபாகரன் அவர்களைத் தொடர்பு கொண்டு உங்களால் இயன்ற ,  ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவிக் கரம் நீட்டி, உங்கள் புண்ணிய சேவைகளைப் பலம் பெறச் செய்யுங்கள்.

————————————————

குருநாதர் :- எதை என்று அறிய நிச்சயம் வாழ்க்கையைப் பற்றிப் பின் தெரியாதவன்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பான். நிச்சயம் அப்பொழுது கூட இறைவன் மீது இவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. மீண்டும் அறிந்தும் கூட, பல வகையாக் கூட எடுத்துரைத்து விட்டேன். 

யான் உங்களுக்காகச் செய்கின்றேன் என்று. ஆனாலும் நிச்சயம் அவன் என்ன செய்கின்றான்? யாங்கள் நிச்சயம் அகத்தியப் பெருமானே!!!!! நிச்சயம் தன்னில் கூட நீங்கள் சொல்லியதை யாங்கள் நிறைவேற்றி வருவோம். பின்பே எங்களுக்கு வாக்குகள் தந்தால் போதும் என்று யாராவது சொன்னார்களா என்றால், நிச்சயம் இல்லை. அதனால் மனங்கள் பேய்களாக இருப்பவர்களுக்கு யான் எப்படி வாக்குகள் செப்புவது????

அடியவர்கள் :- ( அகத்திய மாமுனிவர் வழியில் நின்று உலகத்தைக் காக்க, போராட வேண்டும் என்று உரையாடல் பல) 

அடியவர் :- நெடார் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தல விருட்சம் என்னங்க ஐயா? 

குருநாதர் :- அறிந்தும் நிச்சயம்  புரிந்தும் சரியாகவே பக்கத்திலேயே உள்ளது. தேர்ந்து எடுங்கள். அப்படி இல்லை என்றால் யான் உரைப்பேன். 

_______

( இவ் அடியவர் கேட்ட மகத்தான ஆலயம்  ராசராசசோழனின் விதியையே மாற்றி அமைத்தது இவ்வாலயம். இதன் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள பின் வரும் பதிவில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். 

சித்தன் அருள் - 1117 - அன்புடன் அகத்தியர் - பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!

https://siththanarul.blogspot.com/2022/04/1117.html?m=1

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், நித்யகல்யாணி அம்பாள், ஆலங்குடி நெடார்.கிராமம் மானாங்கோரை அஞ்சல் தஞ்சாவூர் மாவட்டம். ) 

——————————————

அடியவர் :- ஐயா. நமச்சிவாயம். நெடார்  விநாயகர் , முருகருக்கு ஆலயம் அமைக்க விண்ணப்பம் ஐயா. 


குருநாதர் :-  அப்பனே,  சொல்லிவிட்டேன் அப்பனே. அனைத்து காரியங்களும் தடைப்பட்டுத்தான் நடக்கும். ஏன் என்றால் உலகம் பேரழிவை நோக்கிச் செல்கின்றது. மீண்டும் மீண்டும் இதைத்தான் செப்புகின்றேன். 

அப்பனே அறிந்தும் கூட அக்குழந்தையை எழுப்பு. 

உயர்  பொது நல எண்ணங்கள் உடைய குழந்தை அடியவர் :- அவர் என்ன சொல்ல வர்ரார் என்று எல்லாருக்குமே புரியுது. கரெக்டா? எல்லாருமே வந்து உங்க மனசுக்குள்ள ஆழமா , உங்களுக்குள்ள , இந்த உலகத்துக்காக நாங்க செயல்படுவோம்னு, எதுக்கு இன்னைக்கு நம்ம கூடுனோன்னு நல்லா யோசிங்க. அவர் திருப்பி திருப்பி அதேதான் சொல்ரார். ஆனா நீங்க உங்க மனசுக்குள்ள ok சரி, சரின்னு. உங்க மனசுக்குள்ள இறங்கி அவர் சொல்ல வருவதை நீங்க நினைக்கனும். 

சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் சொல்லுங்கம்மா. சொல்லுங்கம்மா. உங்களுக்கு அந்த பக்குவம் இருப்பதால்தான் உங்களை சொல்லச் சொல்ரார். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- அவர் பேசுகின்றார். (உங்களுக்குள் இருந்து) 

——————————————

YouTube link - மனமது செம்மையானால் என ஒரு சிறுமி மூலம் மதுரை சத்சங்க ஜீவநாடி நிகழ்வு :- 

https://youtu.be/QwD4_wzbGhE

————————————————


உயர்  பொது நல எண்ணங்கள் உடைய குழந்தை அடியவர் :-   அதுதான். நீங்க வந்து மனதார நீங்க வந்து நினைக்கனும். எப்படி சொல்ரதுன்னா , நீங்க எப்படி உங்க குடும்பத்தில யாருக்காவது ஏதாவது  ஆகிவிட்டால், மனதார இவருக்கு உடம்பு சரி ஆகிவிடனும்னு அப்படின்னு மனதால், என்ன  சொன்னாலும் நீங்க செய்வீங்க. கரெக்டா? அந்த மாதிரி நம்பனும் நீங்க முதல்ல. (குருநாதர் சொல்வதை) நம்பி நீங்க வந்து அவர் என்ன சொல்லுகின்றாரோ அதைக்  கடைப்பிடிக்கனும். இது உங்களுக்காக இல்லை. மொத்த உலகத்துக்காக நம்ப வந்து (குருநாதர்) கூட நிற்கின்றோம். அவர் கூட இந்த மொத்த உலகத்தையும் காப்பாற்ற நம்ம கூட நிற்கின்றோம். அதனால நம்ம வந்து மனதால எல்லாமே செய்யனும். நம்ம மனதாலதான் எல்லாமே நடக்கனும். 


குருநாதர் :- தாயே!!! 

(பெண் குழந்தைகளை எப்படி அழைக்கின்றார் நம் கருணைக்கடல் என்று அறிந்து அதே போல் வணங்குக) 

தாயே!!!! எதை என்றும் புரிய. இங்கு ஒருவன் இருக்கின்றானே, இவனுக்கு நல்புதியை எடுத்துரை. 

( உயர் நல் பொது எண்ணங்களால் ஒரு பெண் குழந்தைத் தாயே இங்கு ஒரு குரு உபதேசம் செய்த நிகழ்வு) 

சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லுங்கம்மா. என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க அம்மா நீங்க. 

உயர்  பொது நல எண்ணங்கள் உடைய குழந்தை அடியவர் :-  ஐயா இவர் ரொம்ப பாலாக (குழந்தை மனம்) இருக்கிறாரு. கொஞ்சம் silentஆக இருக்கனும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா எல்லாருக்கும் வாக்கு உண்டு. கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் ஐயா. 

அடியவர் :- (குருநாதர்) ஐயாவோட ஆசி (வேண்டும் ஜானகி) ஐயா. 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் அனைவருக்குமே ஆசிகள் உண்டு என்பேன் அப்பனே. மீண்டும் அப்பனே, அனைவருக்குமே வாக்குகள் உண்டு  அப்பனே. ஆனாலும் கால சூழ்நிலைகள் சரியல்லையப்பா இப்பொழுது. அதனால் அப்பனே,  உங்களை யான் காத்திடுவேன். கவலையை விடுங்கள். 

அடியவர் :- (மற்றொரு அடியவருக்காக சில கேட்ட போது)

குருநாதர் :- அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. (கால சூழ்நிலை சரியில்லாமல் இருப்பதால்) இப்பொழுது போதும் அப்பனே. 

அடியவர்கள் :- ( புத்தகங்கள், ருத்திராட்சங்கள் அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தனர் அடியவர்கள். அதனைக் கீழ்க்கண்ட பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

https://youtu.be/Jeh1-ChQ3lo?si=OIOFJby9xpHIdsjm

https://youtu.be/YLRlzksD31c?si=Ku64HiJfttMBJV09  

___________________

நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

—————————————-

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... ) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Saturday, September 13, 2025

சித்தர்கள் ஆட்சி - 479 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 10

                                             இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். 



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 10

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

01.சித்தர்கள் ஆட்சி - 467 - பகுதி 1
02.சித்தர்கள் ஆட்சி - 468 - பகுதி 2
03.சித்தர்கள் ஆட்சி - 469 - பகுதி 3
04.சித்தர்கள் ஆட்சி - 471 - பகுதி 4
05.சித்தர்கள் ஆட்சி - 472 - பகுதி 5
06.சித்தர்கள் ஆட்சி - 473 - பகுதி 6
07.சித்தர்கள் ஆட்சி - 474 - பகுதி 7
08.சித்தர்கள் ஆட்சி - 475 - பகுதி 8
09.சித்தர்கள் ஆட்சி - 477 - பகுதி 9
10.சித்தர்கள் ஆட்சி - 479 - பகுதி 10

)

அடியவர் :- ஐயா கால் வலி இருக்கு. நடக்க முடியல.

குருநாதர் :- தாயே அதை சரியாக்க முடியாது. இதைக் கேட்டு விடாதே. 

அடியவர் :- ( ஆசி கேட்ட போது ) 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் அனைவருக்குமே என்னுடைய ஆசிகள். நிச்சயம் அப்பனே எம்முடைய ஆசிகளோடு அனைத்தும் நடக்கும் அப்பா. 

அடியவர் :- திருவாசகம் பொருள் உணர்ந்து படிக்க கேள்வி கேட்டார். இவ்அடியவரை ஆறுபடை வீடுகளுக்கு சென்று வரச் சொன்னார்கள் முந்தைய வாக்கில் உரைத்தார். அதன் பின் கேள்வி கேட்ட போது. 

குருநாதர் :- அப்பனே ராமேஸ்வரம் சென்றடைந்து, கேள். 

(சில உரையாடல்கள்) 

யான் சொல்லியதை அனைவரும் கேட்க நன்று.

அடியவர் :- (திருப்பரங்குன்றம் அருகில் ஓர் ஆலயம் தொடர்பாக ஆசி கேட்ட போது..) 

குருநாதர் :- அப்பனே சித்தர்கள் யாங்கள் நிற்க, வராக தேவியும் அங்கே நிற்க அதி விரைவிலே நடைபெறும் என்பேன் அப்பனே. 

அடியவர் :- எப்போது கும்பாபிஷேகம் செய்யலாம் ஐயா? 


குருநாதர் :- அப்பனே மனம் போலே ஆகட்டும் அப்பனே. 


அடியவர் 2 :- தந்தைக்கு வணக்கம். என்னுடைய கேள்வி. அகிலாண்டேஸ்வரி , அகத்தீஸ்வரர் திருக்கோயில், மற்றும் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் தள்ளிக்கொண்டே போகின்றது. அதை விரைவாக சிறப்பாக முடித்திட உத்தரவு. 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் பிள்ளையான்பட்டி சென்று, (பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆலயம்) அங்கிருக்கும் (குளத்து) நீரை எடுத்து வந்து , (கும்பாபிஷேகம் நடக்க உள்ள ஆலயம்) அங்கு வை அப்பனே. அதிவிரைவிலேயே நடைபெறும் என்பேன் அப்பனே. 

அடியவர் 3 :- (ஒரு வழக்கின் விவரங்களைக் குறிப்பிட்டு , சாதகமாக தீர்ப்பு வர ஆசி கேட்ட போது….)

குருநாதர் :- அப்பனே, இதற்கு பொறுத்தாக வேண்டும். யான் சொல்லியதெல்லாம் (நவகிரக தீபம், கூட்டுப் பிரார்த்தனை) செய்து கொண்டே வா அப்பனே. நிச்சயம் அடுத்த முறை விவரமாக விவரிக்கின்றேன் இதைப் பற்றி. 

அடியவர் 4 :- பொதுமக்களுக்கு பயன்படுகின்ற மாதிரி வகுப்புகளை எடுக்கலாமா? 

குருநாதர்:- தாயே, கால் வலி என்கின்றாய். கைவலி என்கின்றாய். எப்படி? ஏது? எவை என்றும் புரிய. 

அடியவர் :- ஐயா, அன்னை கண்ணகிக்கு மதுரையில் ஒரு கோயில் கட்டனும் என்று உணர்த்தப்பட்டிருக்கு. 

( தனது கணவன் கோவலன் நீதியின்றி கொல்லப்பட்டதால், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டு வாதாடி, அவனது குற்றத்தை நிரூபித்து, மதுரை நகரையே

தன் மகிமை புகழ் கற்பு தர்மத்தின் வலிமையால் மதுரை மாநகரை எரித்த கற்புக்கரசி கண்ணகி அம்மையாருக்கு,  மதுரையில் ஆலயம் கட்ட குருநாதரிடம் ஆசி கேட்டபோது)

குருநாதர் :- தாயே அதிக முயற்சிக்கள் எடுத்துத்தான் கட்ட வேண்டும். இதனைச் சுலபமாக செய்ய இயலாது. நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் யான் துனையிருப்பேன். 


அடியவர் :- (தனது குடும்பத்தினருக்கு வேலை பார்க்கும் இடங்களில் பல தொல்லைகள் நீங்க கருணைக்கடல் இறைவனிடம் கேட்ட போது) 

குருநாதர் :- தாயே, பின் இராமேஸ்வரத்தில் ஏறி நிச்சயம் பின், முன்னோர் சாபத்தை நீக்குங்கள். அவை மட்டும் இல்லாமல், இறந்தவர் இன்னும் பின், ஆன்மா முழுமை பெறவில்லை. ஏங்கிக்கொண்டே (இருக்கின்றனர்). இதனால் மனக்குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே (இருக்கின்றது உங்களுக்கு). இதனால் அவ்ஆன்மாவை நிச்சயம் சமநிலைப்படுத்த , நிச்சயம் அதாவது கயாவுக்கு சென்று வருவது சிறப்பு. 


உயர்  பொது நல எண்ணங்கள் உடைய ஒரு குழந்தை அடியவர் :- ( யாருமே எதிர்பார்க்காத நிலையில் ஓர் குழந்தை அடியவர், அங்கு உலகின் மிகப்பெரும் கேள்வியை கருணைக் கடல் முன் வைத்த நிகழ்வு) 

யா இப்போது விமான விபத்து நடந்தது இல்லையா? (12 June 2025 ஆம் தேதி நடந்த மிகவும் சோகமான விமான விபத்து ) இந்த மாதிரி , இது இயற்கையாக நடந்ததா? இந்த மாதிரி பாதிப்பு நடக்காமல் எப்படி நம்ம தடுக்கிறது? 

குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன். இதற்கு ஏற்றவாறே நிச்சயம் தன்னில் பின் ஏற்கனவே சொல்லி மனிதனுக்கு. ஆனாலும் மனிதன் சரியாகவே பின்பற்றவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( உலக நன்மைக்காக நம் குருநாதர் நவகிரக தீபம் ஏற்றச் சொல்லியும், பலர் அதனை ஏற்றவில்லை. அது குறித்த நல் விளக்கங்கள் அளித்தார்கள் இங்கு.) 

அடியவர் :- (குழந்தை பாக்கியம்) 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் உண்டு. 

(பொது வாக்கு ஆரம்பம் ஆனது) 

குருநாதர் :- அப்பனே, அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். வாக்குகள் உண்டு அனைவருக்குமே.  இப்பொழுது நிச்சயம் ஏதோ ஒரு (சுய) நன்மைக்காகவே கேட்டுக்கொண்டே. இதனால் வாழ்க்கை பற்றி அனைத்தும் யான் சொல்வேன். பொறுத்திருந்தால், அதாவது உங்களுக்கு சில தீர்வுகளை ஏற்படுத்த நிச்சயம்

வாக்குகளாக ஈய்ந்துவிட்டேன். ( உலக நன்மைக்காக நவகிரக தீபம், நவகிரக தீபம் ஏற்ற பிறரைத் தூண்டுதல், சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை செய்தல்) இதை அதாவது சரியாகவே செய்திட்டு வந்தால்,  உங்கள் வாழ்க்கை பற்றி யான் சொல்வேன். உங்கள் குறைகள் அனைத்தும் யானே நீக்குவேன். ஆனால் அனைத்தும் முன்பே தெரிவித்து விட்டேன். மீண்டும் (சுயநலக் கேள்விகள்) அதைத்தான் கேட்டுக்கொண்டிருக்க, யான் என்ற சொல்ல???? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா (எடுத்து) சொல்லுங்க. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் மதுரை அடியவர் :- ( அழகாக அனைத்து வாக்குகளை சுருக்மாக எடுத்து உரைத்தார் அங்குள்ள அனைவருக்கும். சுயநலமாக கேட்க வேண்டாம் என்று உரைத்தார்) 

(இப்போது அகத்திய மாமுனிவர் அளித்த 2023ஆம் ஆண்டு மதுரை சத்சங்க வாக்கு புத்தகம் அனைவருக்கும் ஒரு அடியவர் முற்றிலும் இலவசமாக , உயர் சேவை நோக்கில் அச்சிட்டு,  100 புத்தகங்கள் எடுத்து வந்திருந்தார். அதனை அனைவருக்கும் அளிக்க ஆரம்பித்தார் அங்கு. நம் குருநாதர் ஆசியால் இவ் வாக்குகளை முதல் முதலில் புத்தக வடிவில் அருமையாக வெளியிட்டுள்ளார் அவ் அடியவர். அந்த புத்தகத்தில் நம் குருநாதர்  பெயர் தவிர எந்த ஒரு பெயரும் இடம் பெறவில்லை - பதிப்பகத்தார் பெயர் உள்பட என்று அடியவர்கள் அறியத் தருகின்றோம். தன்னை மறைத்து செய்யும் சேவைகளே உயர் புண்ணியம் பெற்றுத்தரும்) 

குருநாதர் :- அப்பனே,  நிச்சயம் தன்னில் கூட அனைவருக்குமே ஒன்றைத் தெரிவிக்கின்றேன் அப்பனே. 

இக்கலியுகத்தில் நிம்மதியாக வாழ முடியாத காலம் அப்பா. அப்பனே பின் சண்டையும் , சச்சரவுகளும், நோய்களும் அப்பனே பெருக்கெடுத்து வரும் அப்பா. அவை மட்டும் இல்லாமல் மனக்குழப்பங்கள். அப்பனே இதனால் மனிதன் தன்னைத்தானே அழித்து , இல்லத்திலே பல சண்டைகள் அப்பனே. இதனால் நிம்மதி , உறக்கங்கள் இவையெல்லாம் தொலையும் அப்பா. ஏனென்றால் வருங்காலங்கள் 5, 6 அல்லது 7 மாதங்கள் அப்பனே பெருத்த அழிவுகள் பலமாக இருக்கின்றதப்பா. 

அதனால் அனைவரையுமே யாங்கள் காத்திட வேண்டும்.  அதனால்தான் உங்களுக்குச் சொன்னேன் அப்பனே. (யான் உரைத்த நவகிரக தீபம், சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்தும் ) பொது நலமாக அப்பனே நீங்கள் செய்தால் , உங்களை நீங்களே சரிகட்டிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. நிச்சயம் செய்வீர்களாக அப்பா. 

___________________

நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

—————————————-

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... ) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Wednesday, September 10, 2025

சித்தர்கள் ஆட்சி - 478 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் போகர் சித்தர் உரைத்த வாக்கு - 31.08.3025 -திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.

இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.






















அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் போகர் சித்தர் உரைத்த வாக்கு - 31.08.3025 -திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.


ஆதி மூலனை மனதில் எண்ணி, என் வேலோனையும் மனதில் எண்ணி பரப்புகின்றேனே போகனவனே!!!

அருளும் பொருளும் கூர்ந்து கொடுக்கும் இறைவா!!! இறைவியே!!! போற்றி!!!

மகன்களை உள்ளத்திலே வைத்து உரைக்கின்றேனே!!!

மானிடன் பல கர்மங்களைச் சேர்த்து வைத்திருக்கின்றான். அதாவது பாவ கணக்கையும் , புண்ணிய கணக்கையும் எடுத்துரைக்கப் போகின்றேன்.

(திருஅண்ணாமலையார், திருஉண்ணாமலை தாய்)
பின்
ஈசனே!!! உன் முன்னாலே,
தாயே!!! உன் முன்னாலே,

முதலில் பாவத்தை எப்படித் தொலைப்பது என்பதை மானிடனுக்கு எடுத்துரைக்கப் போகின்றேன்.

அறியா மானிடனே!!!
இருந்தும் பலன் என்ன?
இல்லாவிடிலும் பலன் என்ன?

இருந்தும் பலன் இன்னும் மேம்படுத்த , வாழ்கையில் இன்பம் பெற்று , மற்றவர்களையும் இன்பத்திற்கு அழைத்துச் செல்ல, என் பின் மைந்தனான வேலவனை மனதிலே நினைத்து, கர்மம் சேராமல், பிரம்மாவை நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட அவனிடமும் பின் கேட்டு, பின் என் மைந்தன் அறிந்தும் புரிந்தும் வேலவனே!!!!!!

உனை நினைத்தே நிச்சயம் எடுத்துரைக்கப் போகின்றேன்.

இன்னும் மனிதனிடத்தில் பாவங்கள் சேர்க்கச் சேர்க்க, நிச்சயம் அதாவது கஷ்டங்களும் வாழ்விலும் இன்னும் இன்னும் நோய்களும் வந்து கொண்டே.

அதனை நிச்சயம்
“”””உன் தாய் மடியின் மீதே, தந்தையின் மடியின் மீதே நிச்சயம் யான் சொன்னால் நிச்சயம் அது பின் உடனடியாக நடந்திடும். “”””

“”””யானே நடத்திடவும் முடியும். தீர்வும் கிட்டும்.””””

மானிடர்களே!!!! அறிந்தும் புரிந்தும் நிச்சயம் என் பிள்ளையிடம் வந்து கொண்டே இருக்கின்றீர்கள்.

அதாவது அறுபடை வீடுகளுக்கும் கூட. ஆனாலும் என்னென்ன பின் என் மைந்தன் செய்தான் என்பவையெல்லாம் விளக்கங்களாக இன்னும் என்னென்ன , எப்படி அங்கு வந்தால் இன்னும் அருள்கள் தித்திக்கும் என்பதையெல்லாம். ஆனால் நிச்சயம் அங்குச் சென்றால் அவை நடந்துவிடும் என்றெல்லாம் நிச்சயம் பொய்யான கணக்கு.

ஆனாலும் முதலில் பாவத்தைச் சிறிதாவது எறிந்து அதாவது எரித்து எறிந்து தூரே!!!

நிச்சயம் அவ்வாறாக வந்தால் மட்டுமே உங்களுக்கு இன்பம் கிடைக்கும். 

அதனை இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். யான் எடுத்துரைக்கப் போகின்றேன்.

முதலில் நிச்சயம் ஈசனையும்!!!!! அதாவது பஞ்ச பூதங்களையும் தரிசிக்க, (அதன் பின்) அதாவது அறுபடை வீடுகளையும் தரிசிக்க (வேண்டும்). நிச்சயம் இவ்வாறுதான் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் மட்டுமே சிறு பாவ கணக்கை எரித்து , நிச்சயம் புண்ணியக் கணக்குத் தொடங்கும். 

அவ்வாறு இல்லையே என்றால் நிச்சயம் பின் (அறுபடை வீடுகளுக்கு) வந்து வந்து ஒன்றும் நடக்கவில்லையே என்றெல்லாம் புலம்புதல்.

இவ்வாறுத்தான் , பின் நிச்சயம் பன்னிரண்டு அறிந்தும் புரிந்தும் கூட , இதனை தன்மையும் கூட அதாவது புண்ணிய நதிகளில் முதலில் நீரை எடுக்க வேண்டும். அவ்வாறு அங்கு எடுத்த நீரை இல்லத்திற்கு அழகாக எடுத்திட்டு. பின் எங்கெங்கு எடுத்து அறிந்தும் , எங்கெங்கு எடுக்கின்றீர்களோ அங்கெல்லாம் ஒவ்வொரு திருத்தலமும் இருக்கும். அத்திருத்தலத்தில் நிச்சயம் பரிபூரணமாக பின் அதாவது கந்த புராணத்தையும் கூட நல் ஓதி, அவைமட்டும் இல்லாமல் பின் சிவபுராணத்தையும் ஓதி நன்முறைகளாகவே, பின் அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் அவ் ஆற்றிலே சில மணல்கள் எடுத்து சிறிய அளவில், நிச்சயம் ஒவ்வொரு பின் அதாவது விதவிதமாக நிச்சயம் நிறத்திலும் கூட சரியாகவே, அதாவது கிரகங்களின் நிறத்தில் நிச்சயம் அறிந்தும் கூட ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நிறம் உள்ளது அல்லவா? நிச்சயம் அறிந்தும் இதைத்தன் எடுத்திட்டு அதாவது சரியாக பின் கட்டிக்கொண்டு இல்லத்தில் வைத்து , இல்லத்தில் வைத்து அவைதன் பூசை செய்ய நன்று.

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் இவை அறிந்து மீண்டும் இவை நிச்சயம் பின் இல்லத்திலேயே வைத்துவிட்டு, நிச்சயம் அகத்தியன் பின் உருவாக்கிய பின் குற்றால நாதனிடம் சென்று அங்கும் கூட நீரை பின் சரியாக எடுத்திட்டு , எடுத்திட்டு அதனையும் இல்லத்தில் வைத்து , நிச்சயம் இவைதன் கூட இதனால் அதாவது இப்பொழுது சொன்னேன் நிச்சயம்.

இவை அறிந்தும் கூட அதில் கூட நிச்சயம் திரிபலா, திரிகடுகம் அதனை அப்படியே அதில் இடக்கூடாது. ஒவ்வொன்றாகப் பச்சையாகவே இடவேண்டும்.

அதாவது நெல்லிக்கனி என்று வைத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்கனியைச் சரியான சமளவில் அதில் இடவேண்டும்.

இதேபோலத்தான் நிச்சயம் பின் அவ் நீரில் இட்டு, அவை மட்டும் இல்லாமல் வெற்றிலை சாற்றையும் சிறிதளவு இட்டு, மிளகையும் சீரகத்தையும் இட்டு, அவை மட்டும் இல்லாமல் இன்னும் பல வகையான கீரைகளையும் கூட இட்டு , இவைதன் அதிலே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே, இவை மட்டும் அல்லாமல் அனுதினமும் சிறிதளவே பின் நீரை எடுத்திட்டு , நிச்சயம் இவையெல்லாம் அதாவது இன்னும் பொன்னாங்கண்ணி, இன்னும் கரிசலாங்கண்ணி, இன்னும் பின் மணத்தக்காளி, இன்னும் முருங்கை இலைகளையும் கூட , இன்னும் வில்வத்தையும் கூட இன்னும் பல மூலிகைகளையும் கூட இட்டு நசுக்கி பின் சாறை (மூலிகைச் சாற்றை ) நிச்சயம் அதனுள்ளே இட்டு.

இட்டிட்டு நிச்சயம் அதிகாலையிலும் மாலை வேளையிலும் அதாவது உறங்கச் செல்வதற்கு நிச்சயம் ஒரு 5 நிமிடம் அல்லது 10 நிமிடங்களுக்கு முன்பு இதை நிச்சயம் பின் அதாவது சரியாகவே , பின் இவ்வாறாகவே அனுதினமும் அதாவது இரவில் ஊற வைத்து நிச்சயம் அதிகாலையிலும் சிறிதளவு நிச்சயம் அவைதன்னை மாலை வேளையிலும் கூட அருந்திவர அருந்திவர நிச்சயம் சில நோய்கள் நீங்கும் அப்பா.

இவைதன் தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஏனென்றால் அனைவருக்குமே நோய்கள் காலமாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அதை முதலில் நிறுத்தினால்தான், ஆரோக்கியம் நல் முறையாக இருந்தால் மட்டுமே உங்களால் இன்னும் இன்னும் இறைவனைச் சேவிக்க முடியும். இன்னும் மன சந்தோசங்கள் ஏற்பட்டு அனைவருக்கும் சொல்ல முடியும்.

இதைச் செய்து கொண்டே வர வேண்டும்.

உடலில் உள்ள அழுக்குகள் நீக்கப்பெற்று இறை சக்திகள், இறை பலங்கள் இன்னும் அதிகமாகும்.

இவ்வாறாகவே அவை மட்டும் இல்லாமல் இவை தொடர்ந்து நிச்சயம்.

அவை மட்டும் இல்லாமல் என் செல்லப் பிள்ளை பழனிதன்னில் இருக்கின்றானே, அங்கு வந்து நிச்சயம் இவைதனும் கூட சிறிதளவு பின் சந்தனத்தையும் நிச்சயம் தன்னில் அங்கிருக்கும் சில பிரசாதங்களையும் கூட எடுத்து வந்து அனுதினமும் அதிகாலையிலே அவையும் கூட கடுகளவு உட்கொள்ள வேண்டும்.

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் இதைத்தன் அறிய பின் இவை என்று கூர்ந்து, செந்தூரில் அழகாக என் மைந்தன் நிற்கின்றானே அங்கேயும்
நிச்சயம் நீரை எடுத்திட்டு , அதைத்தன் பின் அனுதினமும் நிச்சயம் பின் இவைதன் பின் நீராடுகின்ற பொழுது நிச்சயம் சிறிதளவு அவையும் சேர்த்து, அவை மட்டும் இல்லாமல் ராமேஸ்வரத்திலும் பின் நீரை எடுத்திட்டு நிச்சயம் பின் அனுதினமும் நிச்சயம் பின் அதாவது நீராடிவர , அதாவது அதிகளவு நீர் இருந்தாலும் அதில் சிறிதளவு இட்டு, நிச்சயம் அதிகளவு (பல முறை) நீராடிக்கொண்டே வந்தாலே கிரக தோஷங்கள் மறையும்.

பின்பு இவைதன் இப்படியே செய்யச் செய்ய பின் மறைந்திருக்கும் அழுக்குகள் நீங்கி, மறைந்திருக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும்.

இதை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விவரிக்கலாம். ஆனாலும் எங்களுக்கு அனைவருமே ஒன்றுதான். அதனால்தான் இதை யாங்கள் இங்கு சொன்னோம்.

அண்ணாமலையிலும் அறிந்தும் பின் புரிந்தும் என் தாயிடமே நிச்சயம் மடியின் மீதே அமர்ந்து யான் எடுத்துரைத்தேன்.

இதை சரியாக யார் ஒருவன் கடைப்பிடிக்கின்றானோ நிச்சயம் அவந்தனக்கு உண்மை நிலை, கிரக நிலைகள் இன்னும் எதை எவை என்றும் ஒரு சக்திகள் ஏற்படும் நிச்சயம் அறிந்தும்.

“””””” இதற்கும் சில புண்ணியங்கள் வேண்டும். இப்புண்ணியங்கள் நிச்சயம் இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். “”””””

இதனை, இப்புண்ணியங்கள் நிச்சயம் எப்படிச் செய்துவர?

அனுதினமும் பின் அதாவது பின் கோமாதாக்களுக்கு உணவு கொடுத்துவர, கொடுத்துவர சிறப்பு.

அவை மட்டும் இல்லாமல் எறும்புகளுக்கும், இன்னும் பல ஜீவராசிகளுக்கும் நிச்சயம் ஈர் மாதம், மும் மாதம் கொடுத்துக் கொண்டே வந்தாலே சில புண்ணியங்கள் ஏற்படும்.

“””””அப்புண்ணியத்தின் மூலம் நிச்சயம் இதைச் செய்யும் பாக்கியம் கிட்டும். “”””””

“””””அனைவருக்கும் நிச்சயம் பின் கிடைக்காது. “””””

அனைத்தும் இப்பொழுது நிச்சயம் ஈசன் அருளாலும், நிச்சயம் பார்வதிதேவியின் அருளாலும் நிச்சயம் யான் இங்கு சொல்ல வந்தேனே!!!!

இதைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு இன்னும் இன்னும் அழகாகப் பக்குவங்கள் ஏற்பட்டு, இறை சக்தியும் பலமாயிற்று, நிச்சயம் இவை உணர்ந்து இன்னும் பன்மடங்கு இன்னும் நீங்கள் என்ன விரும்பியதெல்லாம் கிடைக்கும்.

அவை  மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் பல யோகங்கள் கிட்டும்.

பின் மணச்சநல்லூர் சென்று நிச்சயம் இறைவனிடத்தில் வேண்டி, நிச்சயம் அங்கு இருக்கும் பிரசாதங்களைக்கூட இல்லத்தில் வைக்க, நிச்சயம் சில யோகங்கள் உண்டு உண்டு. ஏற்றங்கள் உண்டு.

இவ்வாறாகவே பணத்தேவைகளைப் பூர்த்தி செய்ய நிச்சயம் அதாவது அனைத்தும் பின் (குடும்பத்துடன்) ஒன்றாக இனைந்து கூத்தனூர் பின் தேவிக்கு நிச்சயம் தன்னில் கூட அதாவது சென்று அங்கு நிச்சயம் இயலாதவர்களுக்கு எதை எங்கிருந்தாலும் சரி ,நிச்சயம் பின் பாடப் புத்தகங்களை எழுதுவதற்கு, எழுதி அறிந்தும் அவர்களுக்குக் கொடுத்து…..

நிச்சயம் இவைதன் நிச்சயம் அதாவது தாங்கள் தங்கள் பிள்ளைகளையும் கூட கல்வி ஸ்தானத்தில் உயர் நிலை வகிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களும், நிச்சயம் பொருளுக்காகவும் அதாவது பணத்திற்காகவும் பின் கூத்தனூர் தேவியே சாலச் சிறந்தது.

அப்படியே பக்கத்தில் இருப்பானே ஞான கணபதி அங்கும் வணங்கி வர, நிச்சயம் அறிந்தும் புரிந்தும் அதாவது அப்படியே எதை என்று புரிந்து கொள்ளும் அளவிற்கும் கூட சில விதிகளை மாற்றி பின் கணபதி அங்கு கொடுத்திருக்கின்றான்.

அவை மட்டும் இல்லாமல் கும்பகோணத்தில் வசிக்கும் பின் வலஞ்சுழியும் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட ஞான கணபதி வீற்றிருக்கின்றான் அல்லவா, அங்கும் சென்று தரிசித்து, பின் அப்படியே சுவாமிமலை ஏறி, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய , அப்படியே பின் வைகை நதியில் அழகாக வீற்றிருக்கும் நிச்சயம் தேவி, பார்வதி தேவி மீனாட்சி என்றே அழைக்க, நிச்சயம் அவளையும் வணங்கி , பின் அங்கிருக்கும் குங்குமத்தையும் எடுத்து வந்து, இல்லத்தில் வைக்க உங்களுக்கு சில அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

ஏனென்றால் நீங்கள் அனைவருமே பின் என்ன விரும்புகின்றீர்கள் எதை, எவை என்றெல்லாம்.

ஆனாலும் பின் இவையெல்லாம் கஷ்டங்கள் பட்டு செய்தால் மட்டுமே சில புண்ணியங்கள் ஏற்பட்டு , அனைத்தும் கிட்டும்.

அதாவது நீங்களும் கேட்கலாம். சுலபமான வழி இல்லையா? இவை கஷ்டம் என்று.

ஆனாலும் படிப்பதும் இங்கு கஷ்டம்.

அதாவது உயர் கல்விகளைப் படிப்பதும் கஷ்டம்.

அதாவது பணங்களும் கஷ்டம். வேலைக்குச் செல்வதும் கஷ்டம்.

உண்ணுவதும் கஷ்டம் என்றால் யாங்கள் என்ன செய்வது?

ஆனால் நிச்சயம் அதற்கு ஏற்றவாறு பின் இப்புண்ணியத்தைச் செய்தால் தானாக அதையும் செய்து விடலாம்.

இதை நிச்சயம் செய்திட்டு வாருங்கள்.

உங்களுக்கு நோய் நொடிகளும் தீரும்.

நிச்சயம் உங்கள் பிரச்சனைகளும் தீரும்.

நிச்சயம் இவையன்று அறிய அதாவது போகனவன் இன்னும் வாக்குகளை உரைப்பேன் (திருஅண்ணாமலை) இங்கே. ஆசிகள்! இப்பொழுது ஆசிகள்!


—————————————————

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

வணக்கம் அடியவர்களே,

இவ் வாக்கின் செயல் முறை விளக்கம்:-

1. இவ் பூசை வழிபாடு செய்ய ஆரம்பிக்கும் முன்னர் 60 அல்லது 90 நாட்கள் அவசியம் கோமாதாக்களுக்கு உணவளிக்க வேண்டும். அத்துடன் 60 அல்லது 90 நாட்கள் பல ஜீவராசிகளுக்கும் , எறும்புகளுக்கும், பறவைகளுக்கும் கட்டாயம் உணவு வழங்குதல் வேண்டும். இந்த புண்ணிய பலத்தினால் மட்டுமே இவ் பூசையை செய்ய இயலும் என்பது போகர் சித்தர் வாக்கு.

2. 90 நாட்கள் செய்து இப்போது புண்ணிய பலம் பெற்று இருப்பீர்கள். நல் வாழ்வு காண வாழ்த்துக்கள்.

3. அடுத்து பஞ்ச பூதத் தலங்களை மட்டும் முதலில் கீழ்க்கண்ட வரிசையில் தரிசிக்க வேண்டும். திருஅண்ணாமலை, திருக்காளகத்தி காளத்த்தீஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம், சிதம்பரம் நடராஜப்பெருமான் ஆலயம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம். இந்த முறை தரிசனம் ரகசிய வாக்காக நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளியது. சித்தன் அருள் - 1280 என்ற பதிவில் படித்து, ரகசியங்களைத் தெரிந்து கொள்க. https://siththanarul.blogspot.com/2023/02/1280.html அதன்படி இவ்வாறு முதலில் பஞ்ச பூத திருத்தலங்களை முதலில் தரிசிக்கத் துன்ப வினைகள் பாவங்கள் நீங்கும். பாவங்கள் எரிந்துவிடும் என்பது அன்புடன் போகர் சித்தர் இங்கு உரைத்த வாக்கில் படித்து அறிந்து கொள்க.

4. பஞ்ச பூத திருத்தலங்களை தரிசனம் செய்த பின்னர் மட்டுமே, அறுபடை வீடு மட்டும் தரிசனம் தொடர்ந்து செய்ய வேண்டும். அறுபடை வீடுகளை எந்த வரிசையில் செய்ய வேண்டும் என்ற விபரம் அறிய சித்தன் அருள் 1861 என்ற பதிவில் உள்ளது. திருச்செந்தூரில் ஆரம்பித்து திருத்தணியில் முடிக்கலாம். அல்லது திருத்தணியில் ஆரம்பித்து திருச்செந்தூரில் முடிக்கலாம். இவை இரண்டில் ஒன்று உங்கள் விருப்பமே. https://siththanarul.blogspot.com/2025/05/1861.html இப்போது நிச்சயம் உங்கள் புண்ணியக் கணக்குத் தொடங்கும் என்று அன்புடன் போகர் சித்தர் உரைத்துள்ளார்கள்.

5. அடுத்த நிலையில் பன்னிரண்டு (12) புண்ணிய நதிகளில் நீர் எடுக்க வேண்டும். அதனை இல்லத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும்.

6. அந்த நதிகளின் அருகில் உள்ள திருத்தலங்களில் சிவபுராணம் மற்றும் கந்தபுராணம் , சிவபுராணத்தையும் நல்மனதாக பாட வேண்டும்.

7. அந்த நதிகளிலிருந்து மணல் எடுக்க வேண்டும். நவகிரகங்களின் நிறத்தில் உள்ள மணல்களை எடுத்து கட்டிவைத்து (மஞ்சள் துணியில் கிழி போல்) இல்லத்தில் வைத்து பூசை செய்தல் வேண்டும்.

8. நம் குருநாதர் உருவாக்கிய திருக்குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால நாதர் ஆலயம் சென்று அங்குள்ள நீரையும் எடுத்து வர வேண்டும்.

9. இப்பொழுது உங்களிடம் 13 வகையான நீர் சேர்ந்து இருக்கும். அதாவது 12 புண்ணிய நதி நீர், மற்றும் திருக்குற்றாலம் நீர்.

10. இந் நீரில் திரிகடுகம் மற்றும் திரிபலா செய்ய உதவும் மூலப் பொருளைப் பச்சையாக அந்த 13 நீர் கலந்த, நீரில் இட வேண்டும். (10.1) திரிபலா என்பது கடுக்காய் (Chebulic Myrobalan), தான்றிக்காய் (Beleric Myrobalan), மற்றும் நெல்லிக்காய் (Indian Gooseberry) ஆகிய மூன்று பழங்களின் கலவையாகும். (10.2) திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் கலவையாகும். இந்த 6 மூல மூலிகைகளை பச்சையாக அந்த 12 நீர் கலவையில் சேர்க்க வேண்டும். உதாரணமாக நெல்லிக்கனி என்றால் பச்சையாகச் சரியான சம அளவில் மற்ற 5 மூலிகைகளுடன் சரியான சம அளவில் கலக்க/இட வேண்டும். நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் நமக்கு உரைத்த சித்த வைத்தியர் திரு. தனகுமார் ஐயா (Mobile no +91 95668 25599). அவர்களை டொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்து கொள்க.

11. இந்த நீரில் வெற்றிலை சாறு சிறிதளவு, மிளகு, சீரகம், பல வகையான கீரைகள் சாறு, பொன்னாங்கண்ணி சாறு, கரிசலாங்கண்ணி சாறு, மணத்தக்காளி சாறு, முருங்கை இலைச் சாறு, வில்வ இலைச் சாறு இன்னும் பல மூலிகைச் சாறுகளையும் இடவேண்டும்.

12. இப்போது நீங்கள் தயார் செய்த ஆற்று நீர் மற்றும் மூலிகைச் சாறு கலந்த நீரை அதி காலையிலும், மாலையில்/இரவில் உறங்கும் முன்னர் 10 நிமிடங்களுக்கு முன்னர் சிறிதளவு தொடர்ந்து அருந்திவர வேண்டும். இப்படிச் செய்தால் சில நோய்கள் நீங்கும் என்று போகர் சித்தர் வாக்கு.

13. இதன் மூலம் நல் ஆரோக்கியம் கிட்டி, இறைவனை நிம்மதியாக வழிபட முடியும். உங்களுக்கு மனம் சந்தோசம் அடைந்து பலருக்கும் இதனை எடுத்துச் சொல்லி செய்யச்சொல்லுங்கள்.

14. இப்படித் தொடர்ந்து செய்ய உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி இறை பலம் அதிகரிக்கும்.

15. இவ் நீருடன் பழனி முருகப் பெருமானின் சந்தனத்தையும் அங்குள்ள பிரசாதங்களையும் எடுத்து வந்து அதிகாலையில் கடுகளவு உண்ண வேண்டும்.

16. இதனுடன் திருச்செந்தூர் மற்றும் இராமேஸ்வரத்தில் உள்ள புனித நீரை எடுத்து வந்து தினமும் நீராடினால் கிரக தோஷங்கள் உங்களுக்கு மறையும். அழுக்குகள் நீங்கி மறைந்திருக்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தானாக உங்களைத் தேடி வரும்.

17. இதனைப் பயன் படுத்தும் போது உங்களுக்குப் பக்குவங்கள் உண்டாகி, இறை பலங்கள் அதிகரித்து , பன்மடங்கு நீங்கள் விரும்பியது எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

18. மண்ணச்சநல்லூர் பூமிநாதர் ஆலயம் சென்று , இறைவனை நல் முறையாக வேண்டி, அங்குள்ள பிரசாதங்களை இல்லத்தில் வைக்க சில யோகங்களும் உங்களுக்கு கிட்டும். ஏற்றங்களும் உங்களுக்கு உண்டாகும்.

19. பின்னர் கூத்தனூர் சரஸ்வதி தேவி ஆலயம் குடும்பத்துடன் சென்று அங்குள்ள இயலாதவர்களுக்குப் பாடப் புத்தகங்கள், எழுதுவதற்கு நோட்டு புத்தகங்கள் , எழுது கோல் முதலியவற்றை தானம் அளிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் கல்வியில் சிறந்து உயர மற்றும் உங்கள் பொருளாதாதர் உயர்வும் கூத்தனூர் சரஸ்வதி தேவியே சாலச்சிறந்த வழிபாடு என்று அன்புடன் போகர் சித்தர் உரைத்துள்ளார்கள்.

20. அதன் பின் திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே 2 கிலோ மீட்டர் அருகே சிதிலபதியில் உள்ளது ஸ்ரீமுக்தீஸ்வரர் ஆலயம். இந்தக் கோயிலில் இருக்கும் விநாயகர் யானை முகமின்றி மனித முகத்துடன் , “ஆதி விநாயகர்" என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். இந்த ஞான கணபதியை வணங்க வேண்டும். விதிகளை மாற்றி அருளிய கணபதி என்று வாக்கு.

21. திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் - வலஞ்சுழி விநாயகர் சென்று தரிசித்து, சுவாமிமலை தரிசித்து , மதுரை மீனாட்சி தேவி வணங்கி அங்கிருக்கும் குங்குமத்தையும் எடுத்து வந்து, இல்லத்தில் வைக்க உங்களுக்கு சில அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

22. இதை நிச்சயம் செய்திட்டு வாருங்கள். உங்களுக்கு நோய் நொடிகளும் தீரும். நிச்சயம் உங்கள் பிரச்சனைகளும் தீரும் என்று அன்புடன் போகர் சித்தர் அருளிய வழிமுறைகளை வழிமுறைகளைக் வாழ்வில் நீங்களும் உயர்ந்து , மற்றவர்களுக்கும் எடுத்து அவர்களையும் உயர்வடையச் செய்யுங்கள்.

=========================================================================

இங்கே தமிழ்நாட்டின் முக்கியமான நதிகள் ஒவ்வொன்றின் கரையில் அமைந்துள்ள சிறப்பான கோவில்களின் தொகுப்பு உள்ளது. இந்த கோவில்கள் ஆன்மிகம், வரலாறு மற்றும் கலாசாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன:


### 🏞 **காவிரி நதி**
- **ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில்** – திருச்சி  
- **திருவையாறு ஐயரப்பர் கோவில்** – தஞ்சாவூர்  
- **மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்** – மயிலாடுதுறை  
- **திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில்** – நாகப்பட்டினம்

### 🌊 **பாலாறு நதி**
- **காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்** – பச்சையப்பன் பாளையம் அருகில்  
- **வண்டவாசி கோவில்கள்** – பாலாறு கரையில்


### 🌿 **பவானி நதி**
- **பவானி சங்கமேஸ்வரர் கோவில்** – பவானி  
- **திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்** – நாமக்கல்


### 💧 **மணிமுத்தாறு நதி**
- **திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்** – மணிமுத்தாறு அருகில்  
- **பாபநாசம் கோவில்கள்** – மேல் ஓட்டம் பகுதியில்

### 🌊 **வெள்ளாறு நதி**
- **சிதம்பரம் நடராஜர் கோவில்** – வெள்ளாறு அருகில்  
- **கட்டுமன்னார் கோவில்** – கடலூர் மாவட்டம்


### 🏞 **வைகை நதி**
- **மதுரை மீனாட்சி அம்மன் கோவில்** – மதுரை  
- **அழகர் கோவில்** – அழகர் மலை  
- **திருப்பரங்குன்றம் முருகன் கோவில்** – மதுரை அருகில்


### 🌾 **பென்னையாறு நதி**
- **திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்** – திருவண்ணாமலை  
- **விழுப்புரம் கோவில்கள்** – நதிக்கரையில்


### 🌴 **தாமிரபரணி நதி**
- **பாபநாசம் சிவன் கோவில்** – பாபநாசம்  
- **திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்** – திருநெல்வேலி  
- **அம்பாசமுத்திரம் கோவில்கள்** – நதிக்கரையில்


### 🌿 **அமராவதி நதி**
- **கரூர் பசுபதீஸ்வரர் கோவில்** – கரூர்  
- **திருப்புகழூர் கோவில்** – அருகிலுள்ள சிற்றூர்

========================================================================

இந்தியாவின் முக்கியமான நதிகள் ஒவ்வொன்றின் கரையில் அமைந்துள்ள சிறப்பான கோவில்களின் பட்டியல் கீழே தமிழில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோவில்கள் ஆன்மிகம், வரலாறு மற்றும் கலாசாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன:


🌊 கங்கை நதி

  • காசி விஸ்வநாதர் கோவில் – வாராணசி, உத்தரபிரதேசம்
  • கங்கோத்தரி கோவில் – உத்தரகாண்ட்
  • ஹரித்வார் கோவில்கள் – ஹரிகி பைரி தீர்த்தம்

🌊 யமுனை நதி

  • மதுரா கிருஷ்ணர் கோவில் – உத்தரபிரதேசம்
  • வ்ரிந்தாவன் கோவில்கள் – ராதா கிருஷ்ணர் கோவில்கள்
  • யமுனோத்திரி கோவில் – உத்தரகாண்ட்

🌊 சரஸ்வதி நதி (மறைந்த நதி, ஆன்மிகத்தில் முக்கியம்)

  • குருக்ஷேத்திர சரஸ்வதி தீர்த்தம் – ஹரியானா
  • திருவெண்காடு கோவில் – தமிழ்நாடு (சரஸ்வதி தீர்த்தம்)

🌊 நர்மதா நதி

  • ஓம்காரேஸ்வர் கோவில் – மத்திய பிரதேசம்
  • மஹேஸ்வர் கோவில் – நர்மதா கரையில்
  • நர்மதா உத்திரவாஹினி கோவில்கள் – ஜபால் புர்

🌊 கோதாவரி நதி

  • திர்யம்பகேஸ்வர் கோவில் – நாசிக், மகாராஷ்டிரா
  • பாஸரா சரஸ்வதி கோவில் – தெலுங்கானா
  • பஞ்சவதி கோவில்கள் – நாசிக்

🏞 காவிரி நதி

  • ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் – திருச்சி
  • திருவையாறு ஐயரப்பர் கோவில் – தஞ்சாவூர்
  • மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் – தமிழ்நாடு

🌊 கிருஷ்ணா நதி

  • விஜயவாடா கனகதுர்கா கோவில் – ஆந்திரா
  • அமராவதி கோவில்கள் – கிருஷ்ணா கரையில்
  • நாகர்ஜுனகொண்டா கோவில்கள் – ஆந்திரா

🌊 சிந்து நதி

  • சிந்து தர்பார் கோவில் – லே, லடாக்
  • சிந்து யாத்திரை கோவில்கள் – ஜம்மு & காஷ்மீர்
  • சிந்து புனித தீர்த்தங்கள் – ஆன்மிக யாத்திரைகளில் குறிப்பிடப்படும்

🌊 தபதி நதி

  • சுரதா கோவில்கள் – குஜராத்
  • புர்ணா கோவில்கள் – தபதி துணைநதி
  • பத்மநாப் கோவில் – தபதி அருகில்

🌊 பிரம்மபுத்ரா நதி

  • உமா நந்தி கோவில் – அசாம்
  • காமாக்யா கோவில் – குவாஹாத்தி, அசாம்
  • நவக்ரஹ கோவில்கள் – பிரம்மபுத்ரா கரையில்

🌊 ஸரயு நதி

  • அயோத்தி ராமர் கோவில் – உத்தரபிரதேசம்
  • ஸரயு தீர்த்தம் – ராமர் யாத்திரையில் முக்கியம்
  • ஹனுமான் கோவில்கள் – ஸரயு கரையில்

🌊 பம்பா நதி

  • சபரிமலை ஐயப்பன் கோவில் – கேரளா
  • பம்பா தீர்த்தம் – யாத்திரையில் முக்கிய தீர்த்தம்
  • எருமேலி கோவில்கள் – பம்பா அருகில்




ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!