“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, January 12, 2025

சித்தர்கள் ஆட்சி - 427 :- காகபுசுண்டர் மாமுனிவர் வாக்கு - கோவை வாக்கு ( April 2024 ) - பகுதி 6

                                                             இறைவா !!!!! நீயே அனைத்தும்.
                                            இறைவா!!!!! நீ நன்றாக இருக்கவேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவையில் காகபுசண்ட மாமுனிவர் வாக்கு ( April 2024 ) - பகுதி 6 ( நிறைவு பகுதி ) 

நமச்சிவாயனை பணிந்து வாக்குகள் ஈகின்றேன் புசண்டனவன். 

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-


சித்தர்கள் ஆட்சி - 421- கோவை - பகுதி 1 
சித்தர்கள் ஆட்சி - 422- கோவை - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி - 425- கோவை - பகுதி  4
சித்தர்கள் ஆட்சி - 424- கோவை - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி - 426- கோவை - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி - 427- கோவை - பகுதி 6

வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.)


151. ( பதினொன்றாவது பெயர் - பிரகல்யா) அதாவது நாராயணனை நினைத்துக்கொண்டே இருக்கச் சொல்.

152. ( 12வது பெயர் - அகத்தீஸ்வரி ) பெயரிலேயே இருக்கின்றான் அகத்தியன். 

153. ( பதிமூன்றாவது பெயர் - அகத்தியா ) இதிலும் கூட பெயரிலேயே இருக்கின்றது. அனைத்தும் நிச்சயம் அகத்தியன் பார்த்துக் கொள்வான். விடச்சொல் கவலைகளையும் விடச்சொல். அகத்தியன் வழியிலேயே நிச்சயம். 

154. ( 14வது பெயர் - பரணி ) ஏற்றச் சொல் தீபமாக. அண்ணாமலையை நினைத்து. கஷ்டங்கள் தீரும்.

155. ( இப்போது உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் குறித்து உரைக்க ஆரம்பித்தார் அந்த உரையாடலில் இடையில். ஈசன் பாடலை பாடச்சொன்னார் ஒரு அடியவரை. சிவபுராணம் பாட ஆரம்பித்தார் அவ் அடியவர். இதன் பின் வாக்கு தொடர்ந்தது…) அனைவரும் இதை மனப்பாடம் செய்ய வேண்டும். ( சிவபுராணம்) இதில் தன் நிச்சயம் வார்த்தைகளே பல பாவங்களைப் போக்கும். இதை நிச்சயம் அதிகாலையில் சொல்லி வந்தாலே நிச்சயம் மாற்றங்கள். ஒன்றைப் பிடித்து ஒன்றை எடுப்பான் இறைவன். பயங்கள் வேண்டும் இறைவன் மீது. உண்மையைச் சொன்னாலும் இவ்வுலகத்தில் பைத்தியக்காரன் என்று சொல்வான். மூடன் என்று சொல்வான். முட்டாள் என்று சொல்வான். ஆனால் முதலில் அவனை எல்லாம் உதைப்போம். நிச்சயம் இதைச் செப்பிக் கொண்டே வாருங்கள். 

156. இறைவனைக் காணவே நீங்கள் எல்லாம் வந்து இவ்வுலகத்தில். ஆனால் மாயையில் சிக்கிக்கொண்டு,  நசுங்கி , பாவத்தில் சிக்கிக் கொண்டு இறைவனைக் காணாமலே செல்கின்றீர்களே!!!!! அதற்காகத்தான் சித்தர்கள் யாங்கள் மனிதர்களைப் பாவம் என்றே சொல்கின்றோம். 

157. ( சிவபுராணம் அதிகாலையில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி ஓதினால் ) அம்மையே பல தொந்தரவுகள் தீரும் என்று சொல். ஆனால் ஓர் நாள் இல்லை. ஈர் நாளில்லை. தொடர்ந்து செய்யவேண்டும். ஆனால் உண்ணுவதும் தொடர்ந்து செய்கின்றான் அல்லவா? 

158. அதாவது உண்டால்தான் உயிர் வாழ முடியும் என்று மனிதனுக்குத் தெரியும். ஆனால் ( சிவபுராணம் ) இதை சொன்னால்தான் நன்றாக வாழமுடியும் என்று மனித முட்டாளுக்குத் தெரிவதில்லையே. அப்பொழுது மனிதன் முட்டாளா? இறைவன் முட்டாளா? 

159. நல்லதைச் சொன்னால் இவ்வுலகத்தில் யாரும் ஏற்கமாட்டார்கள். ஆனாலும் தீயவை செய் , உடனே செய்துவிடுவார்கள். இதுதான் கலியுகம். 

160. அறிந்தவன் யான். இவ்வுலகத்தில் அதாவது அதற்கு முன்பே தோன்றியவன் யான். ஆனால் சிவனை மட்டும் என்னால் நிச்சயம் எங்கிருந்து வந்தான் என்பவை எல்லாம் வருங்காலத்தில், இவ்வுலகத்தில் யாருக்கும் தெரியாது. யானே சொல்கின்றேன் அனைத்தும் கூட. நீங்கள் பக்குவம் அடையுங்கள். அனைத்திலும் கூட. பக்குவம் அடைந்து விட்டால் அனைத்தும் தெரிந்து கொள்ளும் அளவிற்கும் சக்திகள் உங்களுக்கு யான் கொடுப்பேன். 

161. தாயே!!! தந்தையே!!! இறைவனை வணங்காதவனும் கூட மேல் நோக்கி இருக்கின்றான். இறைவனை வணங்குகின்றவன் ஒன்றுமே இல்லாமல் செல்கின்றான். ஏன்? எதற்கு? என்று சிந்தித்தீர்களா? நிச்சயம் உங்களுக்குத் தெரியவில்லை. அதை தெரிந்து கொண்டு உங்களை உயர்த்தப் போகின்றான் அகத்தியன். 

162. நிச்சயம் யாங்களே உயர்த்தி வைப்போம். நீங்கள் கடமையை மட்டும் செய்து வாருங்கள். 

163. (சிவபுராணம்) சொன்னால் இன்னும் நல்லது என்று சொல். தான் தன் பிரச்சினைகள் நிவர்த்தி செய்யும். ஏன் எதற்கு என்றால் அதில் உள்ளவை நாக்கு அதாவது அசைக்கும் பொழுது பல கர்மாக்கள் வெளியே போகும். உடம்பில் பல அணுக்கள் உள்ளது தாயே. இதை எல்லாம் அகத்தியன் சொன்னால்தான் புரியும். 

164. அதனால் தெரியாமலே சிவபெருமானை வணங்கிக் கொண்டிருப்பான். ஆனால் ஒன்றும் கொடுக்கவில்லை என்றால் ஈசனே இல்லை என்று சொல்லி விடுவான். அதனால்தான் என் மக்களே தெரிந்து வாழ வேண்டும் என்று.

165. பக்தி லோகம் வந்தால்தான் அனைவருக்கும் நல்லது. அவ் பக்தி லோகத்தை அடைய யாங்கள் அடிப்போம் அனைவரையும் கூட. யாரையும் பார்க்க மாட்டோம் சொல்லிவிட்டோம். தர்மத்தில் இருப்பவனை யாங்கள் தொடக்கூட மாட்டோம். தர்மத்தில் இல்லாதவனை ஓங்கி அடிப்போம். 

166. வருங்காலத்தில் நிச்சயம் ஏமாற்றுவான். பெண்களும் ஆண்களும் கூட பின் வசப்பேற்றுவார்கள். பின் காதலைச் சொல்லி நடிப்பான். பின் எதை எதையோ சூதாடுவான். இன்னும் பணத்திற்காக எதை எதையோ செய்வான். நிச்சயம் யாங்கள் விட்டு விட மாட்டோம். 

167. நிச்சயம் அடிப்போம் இங்கிருந்தே சொல்கின்றேன். அதாவது முருகன் தலத்தில் இருந்தே சொல்கின்றேன். அதாவது மருதமலையின் மேலே ஆணையாகச் சொல்கின்றேன். நிச்சயம் அனைவருக்கும் தண்டனை உண்டு. தாய் தந்தையைரை மதிக்காதவர்கள் கூட , காதல் இன்னும் எதை எதையோ சிக்கிக் கொண்டு அழித்தவர்கள், பிறர் மனம் நோகச் செய்தல், வார்த்தைகள் பன் மடங்கு தீயதாகப் பேசுதல், இறைவனை தரம் தாழ்த்திப் பேசுதல், இவருக்கெல்லாம் நிச்சயம் அடி!!!!!!!!. அதாவது யாங்கள் கொடுக்க மாட்டோம். சூரியனுக்குச் சொன்னால் நெருங்குவான். சந்திரனுக்குச் சொன்னால் நெருங்குவான். புதனுக்குச் சொன்னால், அதாவது (நவ) கிரகங்களுக்குச் சொல்லிவிட்டாலே நிச்சயம் போதுமானது. 

168. நிச்சயம் தர்மத்தை மட்டுமே அதனால் நல்லது செய்தால் நல்லது. தீயவை செய்தால் தீயவை. தான் தன் வாழ்க்கை தன்னிடத்தில் கொடுத்திருக்கின்றான் இறைவன். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலே நிச்சயம் நீங்கள் வாழ்க்கையை நிச்சயம் பின் அனுபவித்து வாழ்வீர்கள். அப்படி இல்லை என்றால் நரகமாகப் போய்விடும் சொல்லிவிட்டேன்!!!!!!. எச்சரித்து விட்டேன்!!!!!!!!!! 

169. தான் தன் வினைக்கு தானே காரணம்  என்று கூட எடுத்துரைத்து விட்டார்கள் சித்தர்கள். இனிமேலும் திருந்தவில்லை என்றால் அழிவுதான்!!!!! அதனால் ஒருவன் போதும் என்று சொல்லிவிட்டேன் இவ்வுலகத்தை மாற்ற. 

170. நிச்சயம் அறிந்தும் கூட இன்னும் கலியுகத்தில் தீயவைதான் நடக்கும். இன்னும் இடிகள் எங்கெங்கோ விழும். அதாவது இல்லம் என்று கேட்கின்றார்களே, இல்லமும் அதனால் தீய சக்திகள் வந்து ஆட்டும். மனதை மாற்றும். தீயவை செய்ய வைக்கும். நிச்சயம் மனிதன் பின் பைத்தியமாகிவிடுவான். அதாவது இக் கலியுகத்தில் பாதிக்குப் பாதி பேர் பைத்தியங்களாகப் போய்விடுவார்கள்.

171. நிச்சயம் பூகம்பங்கள் எழும்பும். நிச்சயம் வீடுகள் அழியும். பின் தண்ணீரில் வரும். நிச்சயம் அரக்கர்கள் இன்னும் வருவார்கள் அழிப்பதற்கு. நிச்சயம் யாங்கள் விடமாட்டோம். 

172. முருகன் மீது ஆணை !!!!!!. மருதமலையான் மீது ஆணை !!!!!!. மற்றொரு வாக்கில் அனைவருக்கும் உரைப்பான் அகத்தியன். நன்நடந்து அகத்தியன் நிச்சயம் இதுவரை கருணை உள்ளவனாக சொல்லிக் கொண்டே இருந்து யான் சொல்லிவிட்டேன். அனைத்தும் கடைப்பிடித்தால் நன்று. இல்லையென்றால் என் வாக்குகளை ( கடைபிடிக்கவில்லை என்றால்) நிச்சயம் யானே வந்து அடிப்பேன்!!!!. சொல்லிவிட்டேன். நலன்கள். ஆசிகள்!!!!!


கோவையில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்த சத்சங்கம் வாக்கு முற்றே!!!!!

(நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால், April  2024 கோவையில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்த  கேள்வி, பதில் வாக்குகள் நிறைவு அடைந்தது.  இந்த மகத்தான வாக்குகளை அடியவர்கள் தொகுத்து, இலவசமாக அனைவருக்கும் அச்சிட்டு வழங்க புண்ணியங்கள் உண்டாகும்.  அனைவருக்கும் இதனை ஒரு பாடமாக வகுப்பு எடுத்து சொல்ல முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும்.) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment