“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, January 11, 2025

சித்தர்கள் ஆட்சி - 426 :- காகபுசுண்டர் மாமுனிவர் வாக்கு - கோவை வாக்கு ( April 2024 ) - பகுதி 5

                                                           இறைவா !!!!! நீயே அனைத்தும்.
                                            இறைவா!!!!! நீ நன்றாக இருக்கவேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவையில் காகபுசண்ட மாமுனிவர் வாக்கு ( April 2024 ) - பகுதி 5

நமச்சிவாயனை பணிந்து வாக்குகள் ஈகின்றேன் புசண்டனவன். 

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தர்கள் ஆட்சி - 421- கோவை - பகுதி 1 
சித்தர்கள் ஆட்சி - 422- கோவை - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி - 425- கோவை - பகுதி  4
சித்தர்கள் ஆட்சி - 424- கோவை - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி - 426- கோவை - பகுதி 5

வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.)

121. ( மரம் ) அது கூட நிழலைத் தருகின்றது. நீ என்ன செய்கின்றாய் அப்பா? அது புண்ணியம் செய்கின்றது.? நீ என்ன செய்கின்றாய் அப்பா? நீயே சொல்லிவிட்டாய் நிழல் தருகின்றது என்று. அதுவும் பெரும் புண்ணியம்தானப்பா. மரமே புண்ணியம் செய்கின்றது அப்பா. நீ ஒன்றும் செய்ய வில்லையே அப்பா. 

122. ஆனால் பொய்காரன் ( மரத்தை வெட்டி ) இதை எடுத்துவிட்டால் நன்று என்று சொல்லிவிடுவான். ஆனால் அக்கர்மா அவனைத்தான் சேருமப்பா.  அப்பனே இங்கு காசுதான் விளையாடும் அப்பா. ( மரங்களை வெட்டினால் கடும் கர்மா உண்டாகும். மரம் வெட்டுவதைத் தடுத்தால் புண்ணியங்கள். )

123. மனிதனுக்கு கலியுகத்தில் மனசாட்சியே இருக்காதப்பா. எப்படி ஏமாற்றவேண்டும்? பின் சுலபமாக வாழ வேண்டும், சந்தோசமாக வாழ வேண்டும் என்றெல்லாம் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான். எப்படியப்பா? ( இது நியாயம்) 

124. அப்பனே அப்படி எல்லாம் வாழலாம். அதற்கு என்ன தீர்வு? ( புண்ணியம் அதிகமாக இருந்தால் ) அம்மையே புண்ணியம் அதிகமாக இருந்தாலும் இறைவன் தன் பக்கத்தில் வைத்துக் கொள்வான் ( அதாவது இறைவனடி விடுவார்கள் ). ( இங்கு ஒரு அடியவர் ஐயா கஷ்டப்பட்டால் பாவம் குறைந்து விடும்) கஷ்டப்படவில்லை என்றால் அப்பனே இன்பமே கொடுத்திருந்தால் இறைவன் அழகாக உன்னை தூக்கிவிடுவான். 

125. (திருத்தலங்களில்)  நிச்சயம் அங்கு பலத்த சக்திகள் இருக்கும். (இறைவன்) மிகப் பெரியவன் புண்ணியவன். ஆனாலும் பாவங்களை வைத்துக் கொண்டு ( இறைவனை ) அவ் புண்ணியங்களை நாடினால் என்ன ஆகும்? ( அடியவர் : பாவம் அழிந்துவிடும் ) பாவத்தை அழிக்க விடுவானா இறைவன்? இறைவன் என்ன முட்டாளா? ( பாவம் இருந்தால் ஆலயம் செல்ல முடியாது ) இதை எல்லாம் நீங்கள் கற்றுக்கொண்டால் தர்ம வழியில் சென்றால் சுலபமாகிவிடும். 

126. (இறைவன் என்ற ) அவ் சொந்தத்தைப் பற்றித் தெரியாமல், உலகத்தில் உள்ள சொந்தத்தைப் பற்றி பேசுகின்றீர்களே!!! முட்டாள்களே!!! 

127. (இறைவன் என்ற உண்மையான ) அவ் சொந்தத்தைப் பற்றிக் கொண்டால்,  உன் சொந்தங்கள் நீடோடி வாழும். ஆனால் முதல் சொந்தமே யார் என்று தெரியாமல் இருக்கின்றது. ( இறைவனே நம் முதல் சொந்தம். கெட்டியாக இறைவனைப் பிடித்துக்கொள்ளுங்கள். ) 

128. இறைவனும் அனைத்தும் கொடுப்பதற்குத் தயார். நீங்கள் வாங்குவதற்குத் தயாரா என்றுதான்? ( தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்) அத் தகுதி என்பது தர்மம். தர்மம் என்பது சாதாரணம் இல்லை அப்பனே. அனைத்திற்கும் ஓங்கி நிற்பது. இந்த தர்மத்தைப் பிரித்து,  அதாவது “த” வடிவில் , அதாவது “ம்” , இன்னும் அதனைப் பற்றி விளக்குக? ( த , ர் , ம , ம் - என்று பிரித்து தமிழ் எழுத்துக்களைப் படிக்க உரைத்தார்கள் மாமுனிவர் இங்கு. இதில் 247 தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி எழுதச் சொல்லி சில ரகசியங்கள் உரைத்தார்கள். அவ் ரகசியங்களை இங்கு வாக்கு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. இதனை நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் சித்தன் அருள் 1587 பதிவில் சில ரகசியங்கள் உரைத்துள்ளார்கள். அதனையும் அடியவர்கள் படித்து பலன் பெறவும்) 

129. ( தர்மத்தில் உள்ள முதல் எழுத்தை விரித்து எழுத அது — த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை, தொ, தோ, தௌ — என்று அங்கு மலர்ந்தது) முதல் வார்த்தை சொல்லுகின்றேன் அப்பனே. தீது. ( அடியவர்கள் :- தீதும் நன்றும் பிறர் தர வாரா.)

130. அப்பனே முதலில் “யா” ( அடியவர்கள் :- யாதும் ஊரே யாவரும் கேளீர்) அனைத்தும் என் சொந்தம் என்று நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதன் அதை அறிவதே இல்லையே. எப்படியப்பா அருள்கள் கிட்டும்? ( அடியவர்கள் :- நிச்சயம் தர்மத்தில் அது அடக்கம். தர்மம் செய்யும்போது அனைவரும் சொந்தமாகி விடுகின்றனர்.) 

131. அடுத்து என்ன வருவது? ( 247 தமிழ் எழுத்துக்களை) அப்பனே இதை பயன் படுத்தினாலே வெற்றிகள் உண்டு அப்பா. இவ் எழுத்துக்களுக்கு உள்ளே மந்திரமும் இருக்கும் அப்பா. 

132. அவ் மந்திரத்தை பயன் படுத்திக்கொண்டாலே வெற்றி அப்பா. அப்பா இதை அகத்தியனே வந்து உரைப்பான். 

133. அப்பனே (247 தமிழ் எழுத்துக்கள் ) இதை யார் ஒருவன் மனப்பாடம் செய்து சரியாக உபயோகிக்கின்றானோ, அவந்தன் நிச்சயம் உயர்ந்த பதவிகள் வகிப்பான். 

134. ( 247 தமிழ் எழுத்துக்களை மெதுவாக ) சரியாகச் சொன்னால் இவள் வாழ்க்கை உயர்ந்துவிடும்.

135. அம்மையே கடையிலும் முதலிலும் ஓது? ( அடியவர் ஓதினார்) அம்மையே இதனை நிச்சயம் எழுது ( 247 எழுத்துக்கள் அட்டவணையில் எழுத்துக்களை வரிசைப் படுத்தி எழுதினார் அடியவர். முதல் வரிசை எழுத்துக்கள்  -- க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ. — கடை வரிசை எழுத்துக்கள் — ன, னா, னி, னீ, னு, னூ,னெ,னே, னை,னொ,னோ,னௌ.  இப்பொழுது இந்த இரண்டு வரிகளில் இனைத்து என்ன வார்த்தைகள் பொருள் பட உள்ளது என்று அடியவர்கள் யோசிக்க ஆரம்பித்தனர். )

136. அனைத்தும் பின் எழுதிட்டு அதில்தன் நிச்சயம் அனைத்தும் அர்த்தங்கள் உள்ளது.  அதில் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு வாழ்ந்தாலே அனைத்தும் வெற்றியாம். 

137. ( 247 தமிழ் எழுத்துக்களும்.) மேல் படிப்பிற்குச் சென்று வெற்றி அடைவதற்கும் நிச்சயம் இது தேவைப் படுகின்றது. 

138. அனைத்தும் உங்களிடத்தில் இறைவன் கொடுத்திருக்கின்றான். ஆனால் சரியாக உபயோகப்படுத்த வில்லையே. அவ் உபயோகப் படுத்தவே யாங்கள் இருக்கின்றோம். கவலைகள் இல்லை. வெற்றி நிச்சயம். அகத்தியனே தருவான்.

139. (இப்பொழுது அடியவர்கள் ஒவ்வொருவர் பெயரை எழுதச் சொல்லி , அதில் உள்ள பல சொற்களை பிரித்து எழுத உரைத்தார்கள். இது தனிப்பட்ட வாக்காக உரைத்தாலும், இந்த பெயர் சூட்சுமங்களை வைத்து , அதனை உள் தன்மைகளைப் புரிந்து கொண்டு, அடியவர்கள் அனைவரும் தனது பெயர் ரகசியங்களை புரிந்து,  உலகோர் அனைவருக்கும் பயன் உண்டாகும் என்ற பொது நோக்கத்தில் அந்த பெயர்களை இங்கு வெளியிடுகின்றோம்.) உன் நாமத்தை எழுது. அதில் கூட பல சொற்கள் இருக்கின்றது. அதை நிச்சயம் பிரி.

140. ( முதல் பெயர் - ரம்யா. இதில் உள்ள சில சொற்கள் - யாம், ராம், (யா= ய்+ஆ) ஆம், யார், ராம, மரா, ரம்யம்…) அறிந்தும் கூட அம்மையே ராம ஜெபத்தை உச்சரித்துக் கொண்டே இரு. உன் பக்கத்தில் இருப்பவளையும் கூட எழுது. 

141. ( இரண்டாவது பெயர் - புவனேஸ்வரி) அம்மையே இவளிடத்தில் கூறு. புவனேஸ்வரியின் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கச் சொல். நிச்சயம் அனைத்தும் கிடைக்கும் என்று.

142. ( மூன்றாவது பெயர் - கவிதா) அறிந்தும் உண்மைதனைக் கூட கவிதையாக எழுதச்சொல் வெற்றிகள் நிச்சயம் உண்டு. ( இறைவனே உண்மை. இறைவனைப் பற்றி , இறைவனை நினைத்து பல கவிதைகள் எழுதி மக்களுக்கு இலவசமாக வெளியிட வேண்டும் ) 

143. ( நான்காவது பெயர் - நீரஜா ) இவள்தனை பின் அனைத்து உயிர்களுக்கும் நீரை இடச்சொல். இவள்தன் உயர்வாள். 

144. ( ஐந்தாவது பெயர் - சவிதா ) நிச்சயம் நிச்சயம் இறந்தவர்களுக்கு எல்லாம் , அவ் ஆன்மாக்களுக்கு எல்லாம் உதவி பெறச்சொல். அனைவரிடத்திலும் இதை சொல்லச் சொல். நிச்சயம் இவள் வாழ்க்கை புண்ணியம் அடையும். 

145. ( ஆறாவது பெயர் - கீதா ) நிச்சயம் கீதாச்சரத்தை ( பகவத்கீதை ) நிச்சயம்  அனைவரிடத்திலும் எடுத்து சொல்லச் சொல். புண்ணியமாகும். 

146. ( ஏழாவது பெயர் - நிவேதா ) அறிந்தும் பின் வேதங்களை நிச்சயம் பின் ஓதச்சொல். அதாவது வேதத்தில் உள்ள உண்மைகள் கூட பரப்பச்சொல். நிச்சயம் அனைத்தும் விரும்பியது நடந்துவிடும். 

147. (எட்டாவது பெயர் - காயத்ரி ) இல்லத்தில் அனுதினமும் காயத்ரி மந்திரத்தை ஓதச்சொல். நிச்சயம் உருப்படியாக இருக்கும். அனைத்தும் நடக்கும். 

148. ( ஒன்பதாவது பெயர் - தமிழ்ச்செல்வி) நிச்சயம் பாலாம்பிகையின் மந்திரத்தைச் செப்பிக் கொண்டே வரச்சொல். நிச்சயம் பின் உறுதியாகும் மனது. 

149. ( பத்தாவது பெயர் - சொரூபா) நிச்சயம் சொர்ண பைரவரை வணங்கச்சொல். 

150. ( இப்போது ஒவ்வொரு பெயருக்கும் உரைத்த வழிபாடுகளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துரைத்தார்கள்) ஏன் இதை சொல்ல , நிச்சயம் அங்கெல்லாம் சென்றால்தான் பிற பிற வினைகள் , சக்திகள் அதாவது பெயருக்கும் சக்திகள் இருக்கின்றது அம்மா. இவ் தமிழ் எழுத்துக்களிலே பல உண்மைகள் மறைந்து இருக்கின்றது. அதை தெரியாமல்தான், அதனால்தான் அவ் இடத்திற்கே அதாவது குற்றம் செய்தவன் குற்றம் இடத்திற்கே சென்றால் பாவம் கழியும். அதே போல்தான் பின் எழுத்துக்கள் கூட. அவ் எழுத்துக்கு எங்கு சொந்தக்காரன் என்றெல்லாம் அகத்தியன் எடுத்துரைப்பான். அவ் சக்திகள் , பின் எழுத்துக்களுக்கு கூட ஒவ்வொரு இறைவனை அறிந்தும் பின் பல வழிகளாகவே நிச்சயம் அவ்வாறு இறைவனும் பிரித்து. நிச்சயம் இவையெல்லாம்  இனைத்தால் இறைவன் ஒருவனே. முதலில் அங்கு சென்றாலே நிச்சயம் உண்மைதனை வெளிப்படும். அவ் உண்மைகள் தெரிந்து கொண்டால் நீடோடி வாழலாம். யான் அதைச்செய்தால்தான் இது நடக்கும் என்று சொல்லவில்லை. அங்கு சென்றால் பலம் அதிகரிக்கும். அவ்வளவுதான். 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால், April  2024 கோவையில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்த  கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment