மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Wednesday, January 1, 2025

சித்தர்கள் ஆட்சி - 421 :- காகபுசுண்டர் மாமுனிவர் வாக்கு - கோவை வாக்கு ( April 2024 ) - பகுதி 1

                                                           இறைவா !!!!! நீயே அனைத்தும்.
இறைவா!!!!! நீ நன்றாக இருக்கவேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவையில் காகபுசண்ட மாமுனிவர் வாக்கு ( April 2024 ) - பகுதி 1 

( வணக்கம் அடியவர்களே. ஏப்ரல் 2024 - கோவையில் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் ஒரு சத்சங்கம் நடந்து முடிந்தது. அதில் காகபுசண்ட மாமுனிவர் பல முக்கிய வாக்கு உரைத்தார்கள்.  அவ் வாக்கில் உள்ள முக்கிய வாக்குகளை , வாக்கு சுருக்கமாக இங்கு காண்போம்.)

நமச்சிவாயனை பணிந்து வாக்குகள் ஈகின்றேன் புசண்டனவன். 

1. (உலகத்தில் தர்மத்தின் நிலை.) தான தர்மங்கள் இதைச் செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அதைச் செய்வதே இல்லை. மனிதன் ஒரு முட்டாளே. 

2. (சித்தர்கள் இறங்கி வந்து விட்டனர்.) யாங்கள் மலைதன்னில் வாழ்கின்றோமே என்று. ஆனால் இதுவரை விட்டு விட்டோம். கீழே இறங்கி விட்டோம். பின் அடி பலமாகக் கொடுக்க ஏற்பாடுகள். ஏனென்றால் தர்மங்கள் மனிதனிடத்திலே இல்லை. பொய் சொல்லி நடித்துக்கொண்டிருக்கின்றான். சித்தன் பற்றிய ரகசியங்கள் யாருக்குமே தெரிவதில்லை. 

3. கலியுகத்தில் திருடர்கள்தான் மிச்சம்.

4. மனிதன் வாயா ஜாலன். பொய் கூறுவதில் மாயா ஜாலன். 

5. அனைவரிடத்திலுமே ஒரு சக்தி இருக்கின்றது. அதை வெளிக்காட்டத் தெரியவில்லை. அகத்தியன் அனைவருக்குமே சக்தி கொடுத்திட்டான். ( புண்ணியம் செய்யாமல் மனிதர்களை நம்பியதால் அவ் சக்தி செயல்படாது. நேரடியாக இறைவனை, சித்தர்களை மட்டும் நம்புங்கள். பணம் பறிக்கும் மனித குரு உங்கள் தரித்திரம் என்று உணருங்கள்.) 

6. மனிதனை மிதித்தால்தான் நிச்சயம் உலகம் நிமிர்ந்து வாழும். 

7. சித்தன் வழியில் வருபவனுக்குத் தர்மத்தைப் போதிக்க வேண்டுமே தவிர, அவை செய் செய் என்றெல்லாம் சொல்லக்கூடாது. இதிலிலே தோல்வி அடைந்து விடுகின்றான். எவ்வாறு எங்கள் பக்தனாவான்? 

8. ( தர்மங்கள் செய்யாமல் ) வாழத்தெரியாமல் வாழ்ந்து வருகின்றான். தன் வினைக்கு தானேதான் காரணம்.

9. அங்கே தீயவை உள்ளது என்று சொல்கின்றார்கள். அங்கேயேதான் மனிதன் காலடி வைக்கின்றான் மனிதன். 

10. ( பரிகாரங்கள் ) பொய் என்று உணர்ந்து விட்டாயா? 

11. எப்பொழுது உனை நீ நம்பி செல்கின்றாயோ அப்பொழுது உயர்வுகள். நீ அடுத்தவனை நம்பி சென்றால் வாழ்க்கையே பறிபோய் விடும். ( இறைவனை , சித்தர்களை நம்பாமல் - பணம் பறிக்கும் தரித்திரம் பிடித்த மனித குருவை நாடிச் சென்றால் வாழ்க்கை பறிபோய்விடும். ) 

12. எங்களால் விதியை மாற்ற முடியும்.

13. ( புண்ணியம் செய்யும் ) தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். இத் தகுதியை வளர்த்துக் கொண்டாலே அனைத்தும் நிச்சயம் யாங்கள் கொடுப்போம். அத் தகுதி இல்லை என்றால் மனிதன் அதாவது கொடுத்தாலும் எங்கேயோ பின் மாயையை தேர்ந்தெடுத்து அனைத்தும் அழித்து விடுவான். சோம்பேறிகள்.

14. நம்மால் முடியாது என்றால் முடியாமல் போய்விடும். ஆனால் முடியும் என்றால் நிச்சயம் ( செய்ய முடியும் ). ஆனால் அது வருவதில்லையே. ஏன்? 

15. பாவ புண்ணியத்தை மனிதனால் நீக்க முடியுமா? எப்படி நீக்க முடியும்? மனிதன் புண்ணியங்கள் செய்கின்றானா? 

16. தர்மம் தலை கீழாகச் சென்று கொண்டிருக்கின்றது. நிமிர்த்த வேண்டும். (தர்மம் செய்யாமல் இருந்தால்  இனி) அடிதான். 

17. பக்தியைச் சொல்லிச்சொல்லி மனிதன் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றான். 

18. ( ஏன் பரிகாரங்கள் தோல்வி அடைகின்றன?) பாவம் புண்ணியங்கள் சரிபார்கப்பட்டது பிறவி. அதில் பாவங்கள் இருக்கும் வரை எதைச் சொன்னாலும் பின்  நிச்சயம் நடக்காது. புண்ணியங்கள் தேங்கி இருக்கும் பொழுதை அப்புண்ணியத்தைக்கூட நாம்தான் களரிவுட வேண்டும். ஆனால் களர்வதற்கு வழிகள் தெரியவில்லையே ( உங்கள் யாருக்கும் ). யாரும் செப்புவதில்லையே!!!!! ஏனென்றால் களரிவிடுவதற்கு தெரிவதில்லை. அதனால்தான் அவை செய் இவை செய் என்றெல்லாம். ஆனால் புண்ணியங்கள் அப்படியே தேங்கி நிற்கின்றது. மகன்களே சொல்கின்றேன். புண்ணியத்தை (களரிவிட) கலைத்து விட , கடல் அடிகள் அறிந்தும் கூட அலை அலையாக வரும் என்பதற்குச்ண சான்றாகவே பின் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் நிச்சயம். ( கடல் அலைகள் போல தொடர்ந்து இடை விடாமல் நீங்கள் உலகில் தர்மத்தை நிலை நாட்ட வேண்டும். அப்போதுதான் புண்ணியத்தை களரிவிட முடியும். ) மற்றவை எல்லாம் ஒன்றும் செய்ய இயலாது.

19. வாசி யோகம் அது அனைத்து கர்மாத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ளும். அனைவருமே கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள். வாசி யோகம் செய்தவன் யான் நன்றாக இருக்கின்றேன் என்று யாராவது சொல்லட்டும் பார்ப்போம்?  ( வாசி யோகம் செய்தால் கர்மா அதிகமாகும்.) 

20. முதலில் வாசியோகம் கற்றுக்கொண்டவன் இல்லத்தில் பிரச்சினை வரும். மனைவியால்,  மனை விட்டுப் பிரிதல் நேரிடும். பிள்ளைகள் விட்டு பிரிதல் நேரிடும். வாசி யோகத்தில் முழுமை பெற்றவன் 5 பெண்களை வைத்திருப்பான்.

21. ஞானம் அடைவதற்கு முதல் வழி புண்ணியம். 

22. அவரவர் கடமையைச் செய்தாலே உயர்ந்து விடலாம். ஆனால் கடமையைச் செய்வதில்லையே.

23. சித்தன் வழியில் வருபவருக்கு நிச்சயம் தர்மத்தை பின் பற்ற வேண்டும். அப்படி  பின்பற்றுபவனே எங்கள் அருகில் யாங்களே வைத்துக் கொள்வோம். அனைத்தும் தருவோம். அப்படி பின் பற்ற வில்லை என்றால் யாங்களே நோய்களை ஏற்படுத்தி அனைத்தும் அழிப்போம்.

24. ( எங்களிடம்) வந்தால் தர்மத்தோடு வாருங்கள். அப்படி இல்லையென்றால் வராது இருங்கள். வந்தாலும் கஷ்டம்தான். 

25. (அடியவர் ஒருவர் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கேட்டதற்குப் பதில்  ) தர்மத்தைச் செய்.

26. மனிதர்களிடத்தில் தர்மம் செய்,  தர்மம் செய் என்று அவன் சொன்னாலும் பின் ஏற்காவிடிலும் பரவாயில்லை. ஏற்பவன் புண்ணியவான். ஏற்காதவன் உன் பாவத்தை அவன் சுமந்து செல்வான். புரிகின்றதா? 

27. சித்தர்கள் நிச்சயம் அன்பைத்தான் எதிர்பார்த்தார்கள். தர்மத்தைத்தான் ( எதிர் பார்த்தார்கள்) அறிந்தும் கூட. ஆனால் செய்வதில்லையே!!!!

28. பரிகாரத்தால் எதை வெல்ல முடியும் இவ்வுலகத்தில்? 

29. தர்மத்தைப் போதி. ( பிரச்சினை ) இதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

30. தாய் தந்தையை மதியுங்கள். முதலில் அதை மதித்தாலே தானாகவே உங்களை அனைத்தும் தேடி வரும். 


( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால், April  2024 கோவையில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்த  கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment