*எந்தை ஆதி ஈசனின் அகத்தின் ஈசன் அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க*
( ஆதி ஈசனின் அகத்தின் ஈசன் அகத்திய பிரம்ம ரிஷி இந்நாள்வரை மனித குலமே ஓம் என்ற மந்திரத்தை இதுவரை தவறாக உச்சரித்து கர்மங்களை சேரந்துக்கொண்டு உள்ளது என்ற அம்மை சக்தி, அப்பன் ஈசனிடம் உரையாடிய போது வெளியான விஞ்ஞான வாக்கு - சித்தன் அருள் 1362)
""""" ஓம் """""" முதலில் மந்திரம்!!!!! ஏன்?? எதற்காக?? செப்புகின்றார்கள்???? என்பதை கூட தெரியவில்லை!!!! அம்மையே!!!! அப்பனே!!!!
ஓம்!!!! ஓம்!!!! என்று கூட மந்திரத்தை செப்பி!! செப்பி!! மனிதன் அழிந்து கொண்டிருக்கின்றான்!!!!
எப்படி??? செப்ப வேண்டும் என்பதை கூட!!!......
ஆனாலும் வளி மண்டலத்தில் இருந்து வரும் "" ஒலி "" ஓம்!!!!!
ஓம் எனும் கேட்கும் திறன் படைத்தது!!!
அவ் "" ஓம்!!! என்றும் பின் கேட்கும் திறன்கள் பல வகையிலும் கூட பின் பரந்து!!! விரிந்து காணப்படுகின்றது பல பல கதிர்களால்!!!!!!
அக் கதிர்கள் மனிதன் நிச்சயம் மனிதனை ஈர்க்க வேண்டும்!!!!!!
அதற்காகத்தான் ஓம்!!!
ஆனாலும் வாயிலே ஓம் என்று சொல்லக்கூடாது!!!!
"""""""""""""" ஓஓஓம்ம்"""""" என்று மூச்சை உள்ளிழுத்து... ஓமை ( ஓம் மந்திரத்தை) வயிற்றுக்குள் அடைக்க வேண்டும்!!!!
அடைத்து மற்ற மந்திரங்களை இறைவனை நினைத்தால் நிச்சயம் அனைத்தும் ஆகுமே!!! தவிர நிச்சயம் மற்றவையெல்லாம் ஆகாது!!!
( ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணா என்று இறைவனுடைய மந்திரங்களை இணைத்து)
ஆனால்!!!!! மந்திரங்கள் தந்திரங்கள் இவையெல்லாம் எதற்கு???
ஆனால் மந்திரத்தை தெரியாமலே மந்திரத்தை கூறிக்கொண்டு இருக்கின்றான் மனிதன்!!!
எப்படி?? தாய்!!! தந்தையே!!! (இப்படி ஜெபித்தால்) எப்படி?? மனிதனால் இவ்வுலகத்தை கடக்க முடியும்??????
—————
சித்தன் அருள் - 1350 - அன்புடன் அகத்தியர் - திருமூலர் வாக்கு!
உன் உடம்பை ஊண் உள்ளே உன் உடம்பு எதை என்றும் அறிவது மூச்சை கட்டுப்படுத்துவதே வயிற்றின் உள்ளே!!!
வயிற்றின் உள்ளே அலைய வைப்பது நிச்சயம் பின் காற்றடா!!!!!
அக் காற்றை வயிற்றுக்குள்ளே சுற்றி சுற்றி வந்தாலே ஞானங்கள் வருமடா !! இறைவனை உன் மனதில் வைத்துக் கொள்ளலாமடா!!!!
ஆனால் தெரிவதில்லை மனிதனுக்கு அலைந்தும் திரிந்தும் இறைவனை இல்லை என்று தான் சொல்கின்றானே தவிர இன்னும் இறைவனை உணர்வதே இல்லை மனிதன்
மனிதனுக்கு எட்டாத ஒன்று நமச்சிவாயன் தான்!!!
அதை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு கூட நீங்கள் தகுதிகள் பெற வேண்டும் என்றால் சுற்றித் திரிய வேண்டும் அன்பை காட்ட வேண்டும்!!!!!
ஆனால் அவ் அன்பு இல்லையடா!!!! இருந்தும் பயன் இல்லையடா
புத்திகள் இருந்தும் பயனில்லை உடம்பிற்குள் அனைத்தும் இருந்தும் பயனில்லை அறிவுகள் இருந்தும் பயனில்லை கைகள் இருந்தும் பயனில்லை கால்கள் இருந்தும் பயனில்லை கண்கள் இருந்தும் பயனில்லை பற்கள் இருந்தும் பயனில்லை வாய் இருந்தும் பயனில்லை!!!
ஆனால் உபயோகிக்க தெரிவித்து கொள்கின்ற மனிதா இதை எப்படி உபயோகிக்கலாம் என்பதை கூட நிச்சயம் பின் வழிகள் காட்டுவார்கள் சித்தர்கள்
ஆனால் அதற்கும் புண்ணியங்கள் தேவைப்படுகின்றது!!!
No comments:
Post a Comment