மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Monday, July 17, 2023

சித்தர்கள் ஆட்சி - 101 : அகத்தின் ஈசன் வாக்கு - இரண்டு சிதம்பர ரகசியங்கள்


 



*எந்தை அகத்தின் ஈசன் அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க*

*🌸2 சிதம்பர ரகசியம்*🌸

அப்பனே அவை மட்டுமில்லாமல் இன்னும் பல அப்பனே சூட்சுமங்கள் உள்ளது என்பேன்.

அப்பனே ஈசனே அப்பனே தில்லையில்(சிதம்பரம் நடராஜன்) அவந்தன் காலடியில் பல சுவடிகளை ஒளித்து வைத்துள்ளான் என்பேன்.

ஏனென்றால் அப்பனே பல புலவர்களும் பல வழிகளில் அரசர்களும் இதை கொடுத்தால் இவை பின் மனிதர்களை நன்றாக்குவோம்!! உருவாக்குவோம்!! என்றெல்லாம் அப்பனே பின் மனிதர்களும் எடுத்துச் செல்வார்கள் என்பதற்கிணங்க ஆனாலும் நேரங்கள் வரட்டும் தக்க சமயத்தில் மனிதர்களுக்கு இவையெல்லாம் போய் சேரும் என்பதைக் கூட அவன் காலடியில் அப்பனே அப்படியே பலகோடி சுவடிகள் புதைந்துள்ளன என்பேன் அப்பனே.

இவையன்றி கூற அதுவும் யாருக்கும் தெரியாது அப்பனே.

(சிதம்பர ரகசியம் -1 )

*ஈசன்!! கால்!!!! அப்பனே பின் அதனையும் எடுத்தால்தான் அப்பனே உண்டு என்பேன். அதனால் அப்பனே அவன் காலடியில் இதுவும் ஒரு சூட்சுமமப்பா!!! *

*சிதம்பர இரகசியத்தில் இதுவும் ஒரு சூட்சுமமப்பா.* 

( சிதம்பர ரகசியம் - 2)

இதனால்தான் தில்லை என்கின்றார்களே!!! *அப்பனே இவையன்றி கூற அனைத்தும் அவனிடத்தில் எந்தனுக்கு ஏதும் தேவையில்லை என்று கூட அவந்தனிடத்தில் சென்று விட்டால் ...*

*அவந்தன் உந்தனக்கு எவை என்று கூறும் அளவிற்கு கூட அவந்தன் இல்லை என்றே சொல்லி விட மாட்டான் என்பேன்.*

*இதுதானப்பா தில்லை.!!!*

*இல்லை என்ற வார்த்தைக்கு அர்த்தம் உண்டு என்பேன்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment