அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!
அப்பனே கவலைகள் விடு. நிரந்தரம் ஏதும் இல்லை அப்பா
இவ்வுலகத்திலேயே. அப்பனே ஆனாலும்இதையும் கூட பல பல
மனிதர்களுக்கு யான் சொல்லிவிட்டேன் அப்பனே. நீயும் கூடவா
எதை என்றுஅறிய அறிய. மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்.
ஞாபகத்தில் வைத்துக்கொள் அப்பனே. திரும்பத்திரும்ப எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்திற்க்கும் காரணங்கள் உண்டா?
மீண்டும் என்பது திரும்பும் என்பது இதறக்கும் பல அர்த்தங்கள்
உண்டு. ஆனாலும் மனிதன்நிலமையே இப்படித்தான். இதையும்
வரும் வாக்குகளில் தெளிவுபடுத்துகின்றேன் அப்பனே. பிறக்கும்
போதும் ஒன்றும் இல்லை. அப்பனே எதை என்று அறிய இறக்கும்
பொழுதும் ஒன்றும்இல்லை. நடுவில் இறைவன்தான் அனைத்தும்
கொடுக்கின்றான். அப்பொழுதே இறைவன்பிடுங்கிக்கொள்வான்
அப்பனே. எதை என்று அறிய அறிய இதுதான் நடந்து கொண்டு
இருக்கின்றதுஅப்பனே இவ்வுலகத்தில். அப்பனே எதுவானாலும்
எதை என்று அறிய அறிய பின் அனைவருக்கும்எவை என்று அறிய
பின் எவை என்று கூற கூற இன்னும் இருக்கின்றது என்று பார்தால்
அப்பனேஒவ்வொரு விதத்திலும் கூட எதை மனிதனிடத்தில் இருந்து
பிடுங்கினால் எதை என்று அறியாமலேபின் அனைத்தும் போய்விடும் என்பதைக்கூட இறைவன் நிச்சயம் கனித்திருப்பான் அப்பனே.
அதனால் நீ செய்யும் புண்ணியங்களே அதனால் புண்ணியத்தை
சேர்த்து வைத்துக்கொண்டுஇருக்கின்றாய் அப்பனே அப்புண்ணியம் வரும் காலங்களில் உன்னை பாதுகாக்கும் என்பேன்அப்பனே.
பாவமூட்டை சுமக்கவில்லை சொல்லிவிட்டேன் அப்பனே.
இதுதான் வேண்டும்குறைந்தது.
- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு