“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, May 24, 2022

சித்தர்கள் ஆட்சி - 63 : மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலய பொது நாடி வாக்கு


அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன் உறை அகத்திய மஹரிஷி பாதம் போற்றி போற்றி போற்றி!!!







 

( திருமுறை வகுப்பு காட்சிகள் ) 


மதுரை அகத்திய மஹரிஷி பொது ஆலய நாடி 23/5/2022


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். 


அப்பனே இவையன்றி கூற கவலைப்பட அவசியம் இல்லை. யான் இருக்கும் பொழுது அப்பனே ஏன் கவலைகள் அப்பனே. இவையன்று கூற அப்பனே முக்காலத்தையும் யான் உணரந்தவன். எந்தனுக்கு தெரியும் நீங்கள் அமைத்திருப்பீர்களா என்று எண்ணி அப்பனே உங்கள் கடமையை செய்ய பழகுங்கள். மற்றவை எல்லாம் யான் பார்த்துக்கொள்கின்றேன் அப்பனே அதனால் குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை அப்பனே. 


எதற்க்காக அப்பனே இறைவன் அப்பனே மனிதர்கள் மீதுதான் பரிதவிக்க வேண்டும். ஆனால் அப்பனே மனிதர்கள் இறைவன் மீது பரிதவிக்க அவசியம் இல்லை. அது போன்று தான் அப்பனே சொல்லிவிட்டேன். யான் இருக்கின்றேன். யான் அனைத்தும் பார்த்துக்கொள்கின்றேன் அப்பனே. 


பெருமாளும் நல்முறையாக அங்கு வருவோருக்கும் தரிசனங்கள் கொடுத்து அனைத்தையும் செய்து கொண்டேதான் இருக்கின்றான். அதனால் அப்பனே நலமே மிஞ்சும் என்பேன். இறை பலத்தை அதிகமாக அதிகமாக உன் கடமையை செய் போதுமானது என்பேன் அப்பனே. அப்பனே தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே. நல்முறைகளாக பல மனிதர்களுக்கும் அங்கு வருபவர்களுக்கு எதை என்று கூற அப்பனே நிச்சயம் அப்பனே நல்விதமாக உணவை பரிமாறக்கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. நல்முறையாகவே வரும் வரும் காலங்களில் நிச்சயம் எதை என்று கூற ஏதாவது நல்முறைகளாகவே கொடுத்ருள வேண்டும் அப்பனே. 


அப்பனே பின் ஆலயத்தையும் உறுவாக்கிவிட்டீர்கள் ஆனால் அப்பனே இதை என்று கூற அதை எல்லாம் யாங்கள் பார்த்துக்கொள்கின்றோம். இனிமேலும் எதை என்று கூற அன்னத்தையும் இடும் வேலையையும் யாங்கள் பார்த்துக்கொள்வோம் அப்பனே நல்முறைகளாக. ஏதாவது ஒன்றை மக்களிக்கு கொடுத்து வந்தால்தான் புண்ணியங்கள் பெருகும் என்பேன் அப்பனே.  அப்படி இயலாமல் அப்பனே எதையன்றி கூற அதனால் வருத்தங்கள் தேவை இல்லை அப்பனே. நல்விதமாகவே வரும் வரும் காலங்களில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் நிச்சயமாய் கொடுக்க நன்று என்பேன் அப்பனே. பெருமாளும் அப்பனே நல் முறையாக ஆசிர்வாதங்கள் கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றான். 


ஆனாலும் அப்பனே மனவேலை எந்தனுக்கும் எவை எவை என்று கூற. இப்படி அமைத்து விட்டு பின் இவையன்றி கூற அங்கங்கே சென்று விட்டார்களே என்ற எண்ணமும் எந்தனுக்கு வருகின்றது. அதனால் அப்பனே ஓர் முறை அனைவரும் கூடி நிச்சயம் அங்கு வந்து பாடல்களை பாட வேண்டும் செப்பிவிட்டேன் அப்பனே. அவர் அவர் வேலையை அவர் அவர் பாரத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும் அப்பனே இப்படியே சென்று கொண்டு இருந்தால் யான் நிச்சயம் அதில் கூட கை எதை என்று கூற ஆனாலும் அப்பனே நீங்கள் வெகு தொலைவில் இருக்கின்றீர்கள். 




அப்பனே நலமாக நலமாக என்னுடைய ஆசிகள் இருக்கும்பொழுது நலமாகவே இன்னும் சிறப்புக்கள் தோன்றும் என்பேன் அப்பனே. நல்முறையாக அப்பனே யானும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் அங்கே வாசகத்தை ( திருவாசகம் ) அப்பனே குழந்தைகள் பாடும் பொழுது. அவர்களுக்கும் நல் ஆசிகள். இன்னும் உயரச்செய்ய வேண்டும். யானும் பலமுயற்சிக்கு எதை எதை என்று கூற அப்பனே இதைத்தன் தொடரந்து செய்ய புண்ணியங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே. இன்னும் அதை சுற்றி நல்விதமாக உயர் பெரியோரின் அப்பனே ஆசிகள் கிடைத்து இன்னும் பன்மடங்கு ஆகட்டும் என்பது கூட எனது ஆசிகள் என்பேன் அப்பனே. எவையன்றி கூற வரும் காலங்களில் இதற்க்கும் சம்பந்தம் ஆன சில மனிதர்கள் அப்பனே வருவார்களப்பா. எதை எதை என்று கூற இதற்க்கும் கடைக்க ( கலைக்க )  ஆனாலும் அப்பனே நிச்சயமாய் யான் விடவும் மாட்டேன் என்பேன் இன்னும் பல பல தளங்களிலும் ( பல பல ஆலயங்களிலும் ) இதனை நிச்சயம் இயற்றவேண்டும் ( தினமும் திருவாசகம் பாராயணம் செய்ய வேண்டும் ) என்பேன் அப்பனே. அப்போதுதான் இறைவன் நிச்சயம் நல்முறையாக ஆசிகள் கொடுத்துக்கொண்டே வருவான் என்பேன் அப்பனே. 



அப்பனே இன்னும் இன்னும் ஒவ்வொரு வாக்கில் ஒவ்வொரு சிறப்பை யான் கற்பித்தே வருகின்றேன் அப்பனே நல்முறைகளாகவே உண்டு உண்டு என்பேன் அப்பனே. இதனால் நால்வரும் ( அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ) இங்கே ( மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் ) வந்து மகிழ்சியாக தங்கிவிடுகின்றனர் அப்பனே என்பேன் அப்பனே. எவர்களது இந்த குழந்தைகள் பாடும் பாடலை பார்த்து அவைகளுக்கும் ( நால்வர்களுக்கும் ) மிக்க சந்தோசங்களப்பா சொல்லிவிட்டேன். எவை எவை என்று கூற அதனால் அப்பனே எவை என்றுகூற உயர் ஞானிகளுக்கு எது சந்தோஷமோ அதையும் அப்பனே நல்விதமாக ஆக்கினால் அவர்கள் வாழ்க வாழ்க என்று சொல்ல ( வாழ்த்த ) நிச்சயமாய் அப்பனே பல கர்மங்கள் போய்விடும் ( அங்கு அமர்ந்து இந்த பாடல்களை பாடும் அனைவருக்கும்  ) இவை மனிதர்களுக்கு அப்பனே எப்படி செப்புவது அப்பனே. சிறு வயதில் இருந்தே தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் அப்பனே நல்விதமாக எதை எதை என்று கூற அதனால் அப்பனே தர்மத்தை கடைபிடிக்க கடைபிடிக்க எதாவது எதையன்றி கூற அப்பனே நல்முறையாக திருவாசகத்தையும், தேவாரப்பாடல்களையும் பாடி வந்தால் அவர்களுக்கு தானாகவே தர்மத்தை பிடிக்க நல்விதமாக மாறும் என்பேன் அதனால் அப்பனே தெரிவித்துக்கொண்டேன் அப்பனே தர்மத்தை (சிறுவர்களைக்கொண்டே ) பிடிக்கப்பிடிக்க இன்னும் மாற்றங்கள் உண்டு என்பேன்.


அப்பனே வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொண்டிருப்பாய் இப்போழுது கூட. இதுதான் அப்பனே வாழ்க்கை. அப்பனே வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டு எதை என்று கூற அனைத்தும் தெரிந்து கொண்டால்தான் அப்பனே அனைத்தும் தெரியும் எவையன்று கூற இறைவனும் அருகில்  வருவான் என்பேன். மற்றவை எல்லாம் ஏதோதான் கூட என்று சென்று கொண்டு இருந்தால் நிச்சயம் ( இறைவன் நம் அருகில் ) வர இயலாது. 


——பொது நாடி உரை முற்றே ——



No comments:

Post a Comment