மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Friday, April 29, 2022

சித்தர்கள் ஆட்சி - 60 : ஆஞ்சேநேயர் வழிபாடு



 


அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடன் உறை பொதிகை அகத்திய மகரிஷி பாதம் காப்பு 


ஸ்ரீ ராம ஜெயம்! 

ஸ்ரீ ராம ஜெயம்! 

ஸ்ரீ ராம ஜெயம்! 

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் பாதம் காப்பு. 




அடியவர் கேள்வி:- 

குருவே நமஸ்காரங்கள்.

ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள், முடியாதவர்கள்  எப்படி ஆஞ்சநேயரை வணங்குவது???


எந்தை அகத்திய மஹரிஷி அளித்த அருள் வாக்கு:-

அப்பனே நல் முறையாக சனிதோறும் இல்லத்தில் ஆஞ்சநேயனுக்கு நல் தீபமேற்றி... ஸ்ரீராம ஜெயத்தை ஜபித்து வந்தாலே அவனருள் பெறலாம். சனியவனும் விலகிச் செல்வான் அப்பனே.


அடியவர் கேள்வி:-

குருவே நமஸ்காரங்கள் 

ஆஞ்சநேயரின் பரிபூரண அருள் கிடைக்க எவ்விதம் வழிபாடு செய்ய வேண்டும்???


எந்தை அகத்திய மஹரிஷி அளித்த அருள் வாக்கு:-

அப்பனே சொல்கின்றேன் அப்பனே மாதம் ஒருமுறை வரும் உத்திர நாளன்று( உத்திர நட்சத்திர நாள்) அவந்தன் ஆலயத்திற்குச் சென்று பின் தியானங்கள் ஸ்ரீராமஜெயம் ஜெபம் செய்து வந்தாலே அவந்தன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறலாம் அப்பனே! 

வாயில்லா ஜீவராசிகளுக்கும் உதவிட அவந்தன் அருள்கள் பலமாகும் அப்பனே.!!!!

ஞாயிறு அன்று ராகுகாலத்தில் அவந்தனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்ய, செய்ய சில வினைகள் விலகும் என்பேன். அவந்தன் அருள்கள் கிட்டும் என்பேன் அப்பனே!! 


இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே வரும் வரும் ராகு காலத்தில் அப்பனே நல் விதமாகவே அனுமானுக்கு அப்பனே வெற்றிலை மாலை சாற்றி தன் எண்ணத்தில் உள்ள குறைகள் பின் அவனுக்கு அவனிடத்தில் சொன்னால் அப்பனே அதி அற்புதம் நடக்கும் என்பேன் அப்பனே.

ஆனாலும் இவையெல்லாம் கூட இதுவும் ராகு காலத்தில் செய்துவிட வேண்டும் என்பேன் ஞாயிறு தோறும் . ஆனால் பல மக்களுக்கு இது தெரியாமல் போய்விட்டது அப்பனே.

சொல்லிவிட்டேன் சூட்சுமத்தை அப்பனே.

------------------------------------------------------------------------------------------------

மூல நாடி வாக்கு https://siththanarul.blogspot.com/2022/04/1125.html

------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment