அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன் உறை அகத்திய மஹரிஷி
அகத்திய மஹரிஷி நாடி வாக்கு - 4/4/2022
( அடியவர் ஒருவருக்கு உரைத்த வாக்கில் வந்த பொது வாக்கு )
ஆதி மூலனின் பொற்க்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே என்னுடைய ஆசிகள் இருப்பதாலும் நலமே மிஞ்சும்.
இயற்க்கையான வகையிலே உண்டுகொள்ள நன்று என்பேன்.
அப்பனே நலமாக நலமாக வரும் சித்திரை திங்களில் ( சித்திரை மாதம் ) அப்பனே பலபேர்களுக்கு அப்பனே பின் குளிர்ந்த நீரை அப்பனே கொடுத்தால் அப்பனே இன்னும் பல புண்ணியங்கள் பெருகும்.
யான் இதைத்தான் அனைவருக்கும் சொல்வேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே வாயில்லா ஜீவ ராசிகளுக்கும் அப்பனே நல்விதமாக ஓர் பானையில் நல்விதமாகவே அமைத்து அப்பனே கொடுத்துவா அப்பனே.
இன்னும் சித்தர்களின் ஆசியும் அனுக்கிரகமும் கிடைக்கும். அப்பனே என்னுடைய அருள் நல்விதமாக இருக்குதப்பா.
அதனால் அப்பனே யாங்களும் சில சில நேரங்களில் அப்பனே அங்கும் இங்கும் சென்று வருவோம் அப்பனே இச்சித்திரை திங்கள் தனில் ( சித்திரை மாதம் தனில் ). அதனால் அப்பனே யான் சொல்லி விட்டேன். அதை செய்து கொண்டே வா.
மீண்டும் கேள் அப்பனே.
——- நாடி உரை முற்றே ——-
No comments:
Post a Comment