மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, January 4, 2022

சித்தர்கள் ஆட்சி - 31 : அகத்திய மஹரிஷி சூட்சும அதி ரகசிய தியான முறை.


 அகத்திய மஹரிஷி பாதம் காப்பு


குருநாதர் அகத்திய மஹரிஷி பாத்த்தை சிரசில் தியானம் அன்புடன் ( எந்த உலக எதிர்பார்ப்பும் இல்லாமல் ) செய்ய மிக்க நலன் விளையும். 


இந்த சூட்சும்ம் யுகபுருஷன்  சிவன் பார்வதிக்கு உபதேசித்த குரு கீதை என்ற நூலில் பின்வருமாறு உள்ளது.


நமது சகஸ்ராரம் என்ற ஆயிரம் இதழ் தாமரையில் அ ,  க ,  ர என்ற அஷரங்களை முதலாக கொண்ட மூன்று பத்மங்களை உடைய ஹம்ச முக்கோணத்தின் மத்தியிலே குருவை தியானிக்க வேண்டும் !!!


- சிவன் பார்வதிக்கு உபதேசம் செய்த இடம் இது !உத்திரன் +கோசம் +மங்கை =மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம் !``குருகீதை `` என்பது சிவன் பார்வதிக்கு குருவின் மகத்துவத்தை பற்றி உபதேசித்தது.


எம்பெருமான் ஈசன் உலக மக்களின் நண்மைக்கு உபதேசித்த இந்த மகா புண்ணிய சூட்சும முறையை தினமும் உள் அன்போடு தியானத்தில் அகத்திய மஹரிஷி பாத்த்தை சிரசில் தியானித்து உங்கள் வாழ்வு உய்யட்டும். 


நற்பவி நற்பவி நற்பவி.


அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

No comments:

Post a Comment