மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Saturday, December 18, 2021

அகத்தியர் ஆலயம் இரண்டாம் கந்த நாடி - 14/2/2019

 



உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

திருச்சிற்றம்பலம்
முருகா

காலனை காலால் உதைத்தொரு கங்காதரி பாதம் போற்றியது செய்த தொருவேளை கந்த சீடன் குருமுனிவன் ஆலய விருத்தி நாடி ஓடும் அவிழ்கின்ற வேளை நல்லது.


 பரிபூரண ஆசிர்வாதம் உண்டு. முறையாக லாபம் அது நண்மை 7 பேர்களுக்கே அதிகாரம் உண்டு.( 3 பெண் 4 ஆண்). நலமுண்டு லாபம் அனுகூலம் ஆகும். முறையாக 2 மங்கை இன்னும் ஒரு மங்கை லாபம். ( 3 பெண்கள் தான் முதல் காரணம் இந்த கோயிலுக்கு).

சீராக லாபம் சீருண்டு முறையாக நண்மை லோபாமுத்திரையோடுதான் அமைய வேண்டும் நல்லதாம்.  பாண்டி நாடு சிறப்பு.

சிறப்புண்டு லாபம் நண்மை. சீராக லாபம் அது நண்மை. பரங்கிரியே லாபம் என்பேன். ( திருப்பரங்குன்றம் அருகில் ). 

சிறப்பாக லாபம் அது நண்மை ஆகும். பரங்கிரிக்கு அருகிலே முறையாக லாபம். கண்டதொரு அகத்தியனுக்கு இடம் உண்டு. 

மச்ச முனி இருக்கும் இடம்தான் இன்னவனுக்கு உரிய இடமதாகும். ஆதலால் அங்கு நல்லதாம் பெரிய கல்லூரிச்சாலைக்கு அருகிலேயே வை. 

அனுகூலம் ஆகும் முறையாகவே நண்மை ஆகும். கண்டதொரு பெரும் தடை ஏதும் இல்லை. 

கண்டனன் சித்தர்களுக்கும் சிறப்பான இடமதாம். விளையாட்டு பிரியனாய் வந்து அகத்தியன் குருமுனிவன் என் சீடன் விளையாடுவான் அங்கே. 

ஆதலால் பெரு வீதி இல்லை. அருகிலே ஆறுமுகனுக்கும் வழி உண்டே. 

சீருண்டு நீர்த்தேக்கம் நலமாக நல்லதாம் மாற்றுப்பாதை வழியிலாய் முறையாக சோலை போலும் நல்லது தென்னை என வாழை என முக்கனிகளில் ஒரு கனி வரும். 

சீருண்டு முறையாக நல் மரங்களும் உண்டு. நலமாக லாபம் நண்மை நிலை கண்டன்ன் முறையாக சீர் புகழுமாய் நல்லதொரு ஆகம பண்டிதனை பார்த்தாலே போதும். சிறப்பாக மாற்றங்கள் உருவாகும். இன்னும் சில இடங்களில் விசாரணை செய்து அங்கேயே பூர்த்தி செய் நடக்கும். 

உரிய நிதி வரும். 7 பேர் அனுகூலம் ஆகும். பெரிய அளவில் குடமுழுக்கு நடக்கும். முறையாக குருமுனிவன் விளையாடுவான் அங்கே. சிறப்பாகவே நல்லதாம்.

சிறப்பாகவே நல்லதாம் திருக்கயிலாய காட்சி அதுபோலும் கல்யான கோலம் பூர்வ ஜென்மத்திலே கண்ட இடமதாகும். ( ஏற்கனவே அகத்தியருக்கும் அந்த கோயிலுக்கும் தொடர்பு உண்டு) ( கோயிலில் சிவபெருமானின் அம்பிகை பார்வதி கல்யான காட்சியை முருகனோடு வைக்கவும். முருகனின் அலங்காரங்களை விதவிதமாக அங்கு வைக்கனும்னு சொல்லபட்டிருக்குது).

முறை உண்டு செய்யலாம் ஆதலால் செய்கின்ற அனைவரும் சீர் புகழாய் சீர்த்தி ( பெரும் புகழ்) பெருவர். சிறப்பு பெருவர். உரிய காரியம் நடக்க பெருவர். 

இறை அருளும் சித்தர்கள் திருவிளையாடல்கள் காணப்பெருவர். பூர்வ ஜென்மத்தில் அகத்தியன் தொடர்புடையவர்கள் தான் வந்து அங்கு ஆலயம் அமைக்க வழி புரிவர். 

முறையாகவே இதுபோலும் கண்டிட்டு வா. குட முழுக்கிற்கும் நாள் குறித்திவிட்டு வந்து கேள்.

-( நாடி உரை முற்றே )-