“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, April 23, 2026

சித்தர்கள் ஆட்சி - 624 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்னை கண்ணகி தேவி காவியம் - பகுதி 7 ( நிறைவு பகுதி )

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவரின்  அன்னை கண்ணகி தேவி  காவியம் - பகுதி 7 ( நிறைவு பகுதி )


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும்,  உலகம் அறியாத, மகிமை புகழ்,  கற்புக்கரசி, அன்னை கண்ணகி தேவியின்  காவியம்……


நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை

நாள் :-  03.04.2026 (வெள்ளிக்கிழமை)  

நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

இடம் :-  வேலோடு  மலை முருகன் ஆலயம், சித்தான்டி, கிழக்கு மாகாணம், இலங்கை.


கூகிள் மேப் லிங்க் (google map link) :- 

https://maps.app.goo.gl/tTU46Rq7V4Um8pf2A


( இவ் தொடர் வாக்கின் அனைத்து பகுதிகளின் வரிசை 

சித்தர்கள் ஆட்சி - 618- பகுதி 1

சித்தர்கள் ஆட்சி - 619- பகுதி 2

சித்தர்கள் ஆட்சி - 620- பகுதி 3

சித்தர்கள் ஆட்சி - 621- பகுதி 4

சித்தர்கள் ஆட்சி - 622- பகுதி 5

சித்தர்கள் ஆட்சி - 623- பகுதி 6

சித்தர்கள் ஆட்சி - 624- பகுதி 7 ( நிறைவு பகுதி )

)

===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அம்மையே அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் நிச்சயம் தன்னில். 


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவரின்  அன்னை கண்ணகி தேவி  காவியம் - பகுதி 7

===========================




குருநாதர் :- எது என்று கூற பின் அதாவது பங்குனி சித்திரை வைகாசி தன்னில் தான் வந்து கொண்டே இருந்தார்கள். இதுவும் பின் முற்று பின் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட வரங்கள் கொடுத்தது ஒரு வருடம் என்று நிச்சயம் தன்னில் கூட, இவ் பங்குனி மாதத்திலே. 


அடியவர் :-  அவங்க எப்ப பங்குனி வைகாசி சித்திரை…. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ரம்பை அம்மா அவங்க ,  பங்குனி மாசத்துல தான் வந்து, இந்த வரத்தை பெற்றார் முருகன் கிட்ட வந்து. அப்ப வரத்தை பெற்றுட்டு, பங்குனியிலிருந்து சித்திரை. வைகாசி இதெல்லாம் என்ன பண்ணாங்க?  தேவலோகத்திலிருந்து ரம்பை பூமிக்கு வந்து இப்படி பூலோகத்துல வந்து கண்ணகியாக  பிறந்து, ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சுட்டு, இப்படி மீண்டும் ரம்பையாக மாறிட்டாங்கன்னு சொல்லிட்டு வந்து… தேவலோகத்தில் இருந்து  எல்லாம் வந்து பார்க்க வராங்க.




குருநாதர் :- அறிந்தும் எதை என்று கூற  அனைத்து பின் தேவர்கள் கூட. பின் இப்படி மனிதனாக பிறந்துவிட்டால் இப்படித்தான் கஷ்டம் என்று நிச்சயம் உணர்ந்து கொண்டோம். எவ்வளவு கஷ்டங்கள் யாங்கள் மேலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டே தான் இருந்தோம் என்று. 


அடியவர் :-  தேவர்கள் எல்லாம்  சொல்றாங்க. மனுஷனா பிறந்துட்டாலே கஷ்டம்தான். இதை  மேலோகத்திலிருந்து நாங்க பார்த்துக் கொண்டே இருந்தோம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா. நாங்க பார்த்துக் கொண்டே இருந்தோம். எதுவோ சாபம் பெற்று, இப்படி மனுஷன், இங்க பிறந்துட்டு, நீ வந்து எவ்வளவு கஷ்டப்பட்ட?  எங்களுக்கு தெரியும். ஒரு ஏதோ ஒரு சின்ன சாபத்துக்கு இவ்வளவு கஷ்டம். அதனால்தான் அங்கிருந்து நாங்க உங்களை பார்க்க வந்தோம் என்று சொல்றாங்க. 


குருநாதர் :- எதை என்று கூற பின் அதாவது அழகாக நிச்சயம் பின் பின் அதாவது பின் எதை என்று கூற, தங்கத் தேரும் நிச்சயம் பின் எவை என்று கூற, காத்துக் கொண்டிருந்தது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப? 


அடியவர் :-  கூட்டிட்டு போறதுக்கு தங்கத் தேரும் … 


சுவடி ஓதும் மைந்தன் :-  தங்கத் தேரும் வந்துருச்சு..


( இவ்விடத்தில் ஆச்சரியங்கள் அனைவரிடமும் )


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் வந்து எப்படி தெரியுமா இருக்குது?  இப்படி எல்லாம் நடக்குமான்னு சொல்லிட்டு… இதுல இருந்தாதான் தெரியுதுங்க ஐயா. இப்படி எல்லாம் பாருங்க. இதெல்லாம் ஹிஸ்டரி யாருக்குனா தெரியுங்களா ஐயா !!!!!!!


===========================

# தங்கத்தேர் வேண்டாம்

===========================




குருநாதர் :- அறிந்தும் ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட புரிந்தும் கூட அதாவது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இத் தங்கத்தேர் வேண்டாம் என்று நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, பின் மிதித்தாள். அடியில் சென்றுவிட்டது நிச்சயம் தன்னில் கூட. 




குருநாதர் :- அதாவது நிச்சயம் தன்னில் கூட இங்கிருந்து அதனாலதான் இங்கு வழிபட்டவர்கள் நிச்சயம் தன்னில் கூட எப்பொழுதும் நிச்சயம் தன்னில் கூட பின் தங்கத்தேர் மேல் அமர்வது போல், நிச்சயம் சக்தி ஏற்பட்டு, பல காரியங்களில் வெற்றி பெறலாம். 


அடியவர் :-   தங்கத்தேர் என்ன செஞ்சுட்டாங்க?  எனக்கு தங்கத்தேர் வேணும்,  காலாலே மிதிச்சு முருகன் இடத்துக்கு கிழே அனுப்பிட்டாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  அடியில அனுப்பிட்டாங்க. அப்ப இங்க வந்து வந்து வழிபட்டு, நம்ம இந்த மலையில சுத்தி வழிபட்டு சென்றோம் என்றால், நம்மளுக்கு ரதம் மாதிரி… என்ன கிடைக்கும்?


அடியவர் 2 :-   உயர்ந்த வாழ்க்கை 


அடியவர் 3  :-  உயர்ந்த வாழ்க்கை 


சுவடி ஓதும் மைந்தன் :- உயர்ந்த வாழ்க்கை கிடைக்கும். ரதமும் கிடைக்கும். வண்டி வாகன யோகமும் கிடைக்கும். வண்டி வாகனம் அதுவும் ஒரு ரதம் தானே ?!!?!!!… 


அடியவர் :- இங்க வந்து கும்பிட்டா வண்டி வாகனம் கிடைக்குமாம். 


சுவடி ஓதும் மைந்தன் :- கிடைக்கும். நீங்க வந்து வண்டி வாகனம் வாங்கலாம். அது வந்து ரதம் தானே… ஒரு இதுதானே வந்து… அப்ப (வாகனம் வாங்கும்)  அந்த பலமும் ஏற்படும்…. 


அடியவர் 4 :-  ( இந்த கோயிலை அந்த தங்க ரதம் இருக்குதா? )


அடியவர் :-  கோயிலுக்கு தங்க ரதமே இருக்காம். அம்மா சொல்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- (அந்த தங்க ரதம்) கீழே இருக்குது. 


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன் கூட சொல்லிவிட்டாய் அப்பனே. அனைத்தும் நிச்சயம் யாங்கள் தர  தயார் அப்பனே நிச்சயம் பின் கொடுக்க. ஆனாலும் இவையெல்லாம் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் அப்பா.


அடியவர்கள் :- ( சிரிப்புகள்  )  


சுவடி ஓதும் மைந்தன் :-  நான் எல்லாமே இந்த கோயிலுக்கு எல்லாம் கொடுக்க ரெடி. கடைசில என்ன ஆகுமா? வந்து அரசாங்கம் கை வச்சிருப்பா வந்து.. 


அடியவர் :-  அதனாலதான் கொடுக்காம வச்சிருக்கேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனாலதான் வந்து இப்படியே இருக்கட்டும்பா.  உங்களுக்கெல்லாம் ஆசிகள் பெற்றுட்டு நல்லா வாழட்டும்பா. போப்பான்ட்டாரு. நான் எல்லாத்தையும் கொடுப்பேன்றார் சித்தர்கள் வந்து… 


குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அதனால்  அப்பனே எங்கள் ஆசி அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கட்டும் என்பேன் அப்பனே கவலையில்லை உனக்கும் கிடைக்கும் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   நீ கவலைப்படாதப்பா. எல்லாருக்கும் இங்க வந்து போறவங்க எல்லாருக்கும்  எல்லாம் கிடைக்கும் உனக்கும்? 


அடியவர் :- கிடைக்கும்


சுவடி ஓதும் மைந்தன் :-    கிடைக்கும் 


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எப்படி இருந்தவனே. முருகன் இங்கு அழைத்தான் பார்த்தாயா? என்ன ஏது என்று கூற. இப்படி எல்லாம் நினைத்தாயா? இங்க வந்து பின் அமர்வாய்?  என்று 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ எப்படி இருந்தவனே எனக்கு தெரியும்பா அகத்தியர் சொல்றாரு. நீ எல்லாம் முருகன் இப்படி வந்து இப்படி பக்தியா மாறிடும்னு நீ நினைச்சியா? 


அடியவர் :-  ஐயா உங்களைத்தான் கேக்குறாரு 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா உங்களதான் கேக்குறாரு. டக்குனு வருது. மாறிடும். இதெல்லாம் ஜீவனாடிங்க ஐயா. நம்மகிட்ட பேசுற மாதிரியே இருக்கும். அவ்வளவுதான். உடனே வரும். இப்ப உங்களைத்தான் கேக்குறாரு…


அடியவர் 4 :- ………….. பிரச்சனை வந்திரக்கூடாது எங்களுக்கு ஐயா.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனாலதான் வந்து நாங்க எதுவும் தராம வச்சிருக்கோம். இல்லைன்னா அள்ளி குத்துட்டு இருப்போம் இந்த கோயிலுக்கு. 


குருநாதர் :- அப்பனே ஒரு காலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீயும் தேரோட்டியாகத்தான் இருந்தாய் என்பேன் அப்பனே. அதனால் உனக்கு கிடைக்கும் வாகனங்கள் பல. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு காலத்துல? 


அடியவர் :- நீங்களும் தேரோட்டி தான்… 


சுவடி ஓதும் மைந்தன் :-  தேரோட்டியாக பிறந்திருக்கீங்க இங்க. ஏதோ இங்க ஒரு காலத்துல அரசர்கள் கிட்ட. அதனால இந்த உங்களுக்கு வந்து வண்டி வாகனம் கிடைக்கும்பா. அதை வச்சு சந்தோஷப்பட்டுகோப்பா. என்று சொல்கின்றார். அய்யா புரியுதுங்களா? 


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட மறைமுகமாக அப்பனே பின் வருவதற்கு எவை என்று அறிய எப்பனே பின் எங்களுக்கு வாகனங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. கவலைகள் வேண்டாம். ஆனாலும் பாசத்தோடு கேட்டுவிட்டாய். கவலை வேண்டாம். உனக்கே தருகின்றேன். எடுத்துக்கொள். 


அடியவர் :- முருகா முருகா !!!!!! 


சுவடி ஓதும் மைந்தன் :-   அய்யா புரியுதுங்களா? ஆமா ஏன்னா ஜீவநாடியில் அப்படியே நமக்கு டக்குனு வந்துரும். சரியா?  அப்படியே பேசுற மாதிரியே வரும் இங்க வந்து… 


குருநாதர் :- அதனாலதான் அப்பனே கவலை வேண்டாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் அனைத்து நலன்களும் யானே செய்கின்றேன் உனக்கு அப்பனே. உனை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ கவலைப்படாதப்பா. எல்லா இதுவும் உனக்கு நான் செய்றேன். வந்து கவலைப்படாத. நான் உன்னை பார்த்துட்டே தான் இருக்கிறேன். எப்படி போற, எப்படி வரேன்னு…


குருநாதர் :- அப்பனே நலன்கள் ஆக, கவலை வேண்டாம் நிச்சயம் தன்னில். இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட பல வழியில் கூட நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :- பின் அதாவது பின் எவை தேவலோகத்திலிருந்து வந்தவர்கள் எல்லாம் நிச்சயம் தன்னில், இம்மலையில் இன்னும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் உருவேற்றினார்கள் என்பேன் அப்பனே. அதனால்தான் சிறப்புமிக்க இம்மலை அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான்.. தேவலோகத்திலிருந்தும் ?


அடியவர் :- இங்க வராங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க வந்து அந்த ரம்பையை பார்க்கிறதுக்கு வராங்க, அப்ப என்ன ஆச்சு இந்த மலை இன்னும்? 


அடியவர் :-  சிறப்பாயிடுச்சு 


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லா ஆற்றல் ஆயிடுச்சு வந்து இன்னும் வந்து பிரசித்தி தான் பெரும் என்று சொல்றாங்க… நல்லா இன்னும் 


அடியவர் :-  ( வேலொடு மலையை பலர் வருவது போல் இயக்கி ) ரன் பண்ணி.. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ரன் ஆகும்ன்றாரு 


குருநாதர் :- அப்பனே இதனாலதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று கூட இங்கு வந்தவர்கள் எப்பொழுதும் கெட்டுப்போனதாக சரித்திரமே இல்லை என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  யாராவது கேட்டு பாருங்க? 


அடியவர் :-  இங்க வந்து யாரும் கெட்டுப்போனது சரித்திரமே இல்லையாம். கேட்டு பார்க்க சொல்லிட்டாரு. 


குருநாதர் :- அப்பனே ஆனாலும் புண்ணியம் நிறைந்தவர்கள் தான் முருகனும் அழைப்பான் அப்பனே. ஆசிகளும் கொடுப்பான் அப்பனே. நிச்சயம் அனைவருக்கும், யார் ஒருவன் நல்லது நினைக்கின்றார்களோ, நல்லது செய்ய துடிக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் முருகன் வழி விடுவான்  அப்பனே. இல்லையென்றால் நசுக்குவான். 


அடியவர் :-  இங்க வந்து புண்ணியம் செஞ்சவங்க மட்டும்தான் வரலாம். புண்ணியம் செய்யாதவங்க யாரும் வர இயலாது. யாராச்சும் வந்து கெட்டது செஞ்சாங்கன்னா, அவங்களும் நசுக்கிருவேன் என்றாரு… 


சுவடி ஓதும் மைந்தன் :-  நசுக்கிருவேன் என்றாரு… அதனால புண்ணியம் செய்யறவங்க மட்டும்தான் வந்து…. நாலு பேருக்கு நன்மை செய்யறவங்க மட்டும்தான்… கூப்பிட்டு நல்லது செய்வர். சரிங்களா ஐயா 


===========================

# மகிமை புகழ் இலங்கை தேசம்.

===========================


குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே இன்னும் அப்பனே நலன்கள். 


குருநாதர் :-  இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று அறிய.  அப்பனே இத்தேசம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவை என்று புரிய அப்பனே பின் அதாவது தேவலோகத்திலிருந்து வந்திருக்கின்றார்கள்  அப்பனே. நிச்சயம் தன்னில் பின் ரம்பையை பார்க்க.


குருநாதர் :-  அதேபோலத்தான் அப்பனே இத்தேசம் அப்பனே பின் பெரிய ஸ்தலமாக இருக்க வேண்டியது என்பேன் அப்பனே. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் இப்படி ஆகிவிட்டது இத்தேசம். இதனால் அப்பனே வெளி நாட்டத்தவர்கள்  எல்லாம் அப்பனே இத்தேசத்தை அப்பனே தேடி வந்திருக்க வேண்டும். ஆனால் நடுவில் குழம்பி போனது என்பேன் அப்பனே. 


அடியவர் :- இது வந்து தேவர்கள் கூட வந்துட்டு போன தேசமாம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம்.


அடியவர் :- இது இப்படி இருக்க வேண்டிய தேசமே இல்லையாம்…பெரிய லெவல்ல இருக்க வேண்டிய தேசம்… 


சுவடி ஓதும் மைந்தன் :-  பெரிய லெவல்ல எல்லாரும் வந்து தேடி வரணுமாம் இந்த தேசத்தை. 


அடியவர் :-  இடையில.. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இடையில ஏதோ ஒன்னு நடந்ததுனால, அது அப்படியே என்ன ஆச்சாம் ?


அடியவர் 5 :- எல்லாம் குழம்பிடுச்சு 


சுவடி ஓதும் மைந்தன் :- குழம்பி போச்சு 


===========================

# இலங்கை தேசம் - இனிமேல் அட்டகாசமாக உயரும்.

===========================




குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய இன்னும் அப்பனே அட்டகாசமாக உயரும் என்பேன் அப்பனே இத்தேசம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


அடியவர் :- இத்தேசத்துக்கு எதிர்காலத்தில் நல்ல உயர்வு இருக்குன்னு சொல்லிட்டாருங்க 


குருநாதர் :- அப்பனே நிச்சயம் அழிவுகள் இருந்தாலும் அப்பனே பின் ஒவ்வொன்றாக யான் எழுப்பி, அழிவிலிருந்து காக்கப் பெறுவேன் அப்பனே 


அடியவர் :- அழிவுகள் இருக்கு. அழிவுகள் இருந்தாலும், இறைவன் ஒவ்வொன்றாகவும் காத்து தான் நிப்பார்.


===========================

# இலங்கை தேசம் - “வசியமான நாடப்பா இது”.

===========================


குருநாதர் :- அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது தேவலோகத்திலிருந்து ரம்பையை பார்க்க அப்பனே வந்தார்கள் என்றால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ்வளவு வசியமான நாடப்பா இது. 


அடியவர் :- தேவலோகத்திலிருந்து ரம்பையை பார்க்கிறதுக்கு தேவர்கள் இங்க வந்தாங்கன்னா, அவ்வளவு வசியமான நாடுங்கிறார்.


சுவடி ஓதும் மைந்தன் :-  வசியமான நாடு. வசியம் என்பது இந்த ஊருக்கு உண்டு. 


அடியவர் 4 :- வசியம் 


சுவடி ஓதும் மைந்தன் :-   வசியம் 




குருநாதர் :-  அப்பனே இதனால் அப்பனே நல்விதமாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பல வகையில் கூட அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட ரம்பை ஏது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அப்பனே எவை என்று கூற,  பல பின் பெண்களை நிச்சயம் தன் பின் பிறப்பெடுத்து ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இத்தேசத்தை அழகாக பின் நிச்சயம் பின் காக்க வைப்பாள்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த ரம்பை அம்மா வந்து,  இன்னும் இந்த தேசத்துக்காக போராடிய வங்க  எல்லாம் இறந்துட்டாங்க. அதனால அந்த பெண்களையே வந்து மீண்டும் பிறக்க வச்சு இன்னும் வந்து.. நாட்டுக்கு நல்லது செய்வாங்க. 


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஏற்கனவே நிச்சயம் பின் பிறந்தும் விட்டிருக்கின்றார்கள் நிச்சயம் தன்னில் கூட. எவை என்று புரிய பின் நல்விதமாகவே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏற்கனவே பிறந்தும் இருக்காங்கப்பா. அந்த பெண்களால இந்த தேசத்துக்கு …ரம்பை வந்து… 


குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கண்ணகிக்கு நிச்சயம் பின் சாப விமோசனம் பெற்ற இடம். இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அடிக்கடி இங்கு வந்து சென்று கொண்டுதான் இருக்கின்றாள். 


அடியவர் :- ரம்பை 


சுவடி ஓதும் மைந்தன் :-  மேல தேவலோகத்திலிருந்து ?


அடியவர் :-  வந்து போயிட்டு தான் இருக்காங்க.  


சுவடி ஓதும் மைந்தன் :-   வந்து போயிட்டு தான் இருக்காங்க அடிக்கடிக்கு இங்க வந்து, இந்த மலையில்தான் வருவாங்க. வந்து அதனால என்ன ஆகுமாம்? 


அடியவர் :-  ஆற்றல்… 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆற்றல் பெருகிக்கொண்டே போகும். ஒரு பக்கம் அழிவுகள் இருந்தாலும்..


அடியவர் 6 :-  (கண்ணகி) அன்னைக்கு கோயில் கட்டிடலாமா ?


குருநாதர் :- அப்பனே எதற்கு எடுத்தாலும் அப்பனே உடனடியாக பின் கோயில் கட்டி விடலாமா?  கோயில் கட்டி விடலாமா?  என்றுதான் சொல்கின்றாய் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   எதை சொன்னாலும்.. யார் சொன்னாலும் , உடனே கோயில் கட்டலாம்… கோயில் கட்டலாம்னு சொல்லிட்டு… 


குருநாதர் :- அப்பனே நிச்சயம் அதற்கும் நேரங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் அனைவரும் நீங்கள் முடிவெடுத்து பேசுங்கள். அவ் முடிவில் யானும் வருகின்றேன் அப்பனே. பின்பு உரைப்பேன். இன்னும் வாக்குகள் உண்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :- இப்பொழுது இல்ல 


அடியவர் 6 :-  அப்பா இன்னொரு கேள்வி கேட்டேன். நீங்க வந்து இங்க இருக்க இளவரசியும், கண்ணகியும் ஒன்னு தானா? 


குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் நீங்கள் மண்டையை அப்பனே நிச்சயம். அதாவது மண்டை எவை என்று கூட தெரிகின்றதா?  அப்பனே விளையாட்டாகத்தான் சொல்கின்றேன். அதை குழப்புங்கள்.  பின்பு சொல்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-   நீங்க மண்டைன்னு ஒன்னு இருக்குது இல்ல.. ஆமா அதை குழப்பிக்கோங்கப்பா. அப்புறம் நீங்க குழப்பம் பிறகு அப்புறம் வந்து உங்களுக்கு தெளிவு வரும். அது ஏதோ வரட்டும். அப்புறம் தான் நான் சொல்லுவோம்பான்றாரு. 


குருநாதர் :- அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட அழகாக எதை என்று புரிய அப்பனே இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் எவை என்று கூட பின் அதாவது தெரியாமல் போனதப்பா பல ஞானிகளின் பற்றியும் கூட. 


குருநாதர் :- அவ்வாறாக அப்பனே பின் தெரிந்து அப்பனே உலகத்தோர்க்கு அப்பனே தெரிந்து எவை என்று கூட பன்மடங்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அவ் வசியமானது அப்பனே அனைத்தும் பின் நிச்சயம் தன்னில் கூட வெல்லும் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நிறைய பேர் வந்து… ஐயா நிறைய விஷயங்கள் தெரியாமல் போகுது. அப்ப அவங்களோட பேர்  சொல்லி  வந்தாவே என்ன ஆகும் வந்து எல்லாருக்கும்?  


அடியவர்  :- வசியமாயிடும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  வசியமாயிடும் 




குருநாதர் :- அப்பனே நீ தீயவை பார்த்தால் அப்பனே அதுவே உன் ஞாபகத்தில் வரும். 


அப்பனே நிச்சயம் நல்லவை கேட்டால் நிச்சயம் நல்லதே நடக்கும். 


இதுதான் அப்பனே நிச்சயம் மனிதனின் உடம்பு. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஒரு தீயவை பார்த்தா என்ன ஆகும் உங்களுக்கு? வந்து எண்ணங்கள் என்ன ஆகும்? அதன் மேலேயே நாட்டம் போகும். ஒரு நல்லது இருந்தா என்ன ஆகும்?  


அடியவர்  6 :-  நல்ல சிந்தனையே வரும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்ல சிந்தனையே வரும் 


===========================

# ரம்பை, ரம்பை, ரம்பை, ரம்பை, ரம்பை, ரம்பை

===========================




குருநாதர் :- அதனால்தான் அப்பனே நிச்சயம் ரம்பை பற்றி எடுத்து வந்தேன். இனிமேல் அப்பனே நிச்சயம் ரம்பை , ரம்பை என்று சொல்வார்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் நீரோடி வாழலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இனிமேல் என்ன பண்ணுவாங்க? அவங்களையும் எடுத்துட்டு வந்துட்டேன் நான். அதை என்ன பண்ணனும்? எப்படியாவது யாராவது என்ன சொல்லுவாங்க…இங்க எல்லாம் தெரியும் அப்ப என்ன ஆகும் வந்து? ஆற்றல் கூடும் கூடும் என்றார் 


அடியவர்  6 :- கண்ணகி அம்மாவை  கும்பிடுவான் 


அடியவர்  :- இந்த இந்த பூமி அப்பா ஒரு வசிய பூமின்னு சொன்னீங்க. அப்ப இங்க வர்றவங்களுக்கெல்லாம், ஒரு வசிய சக்தி கிடைக்க வாய்ப்பு கிடைக்குமா ? 


சுவடி ஓதும் மைந்தன் :- கிடைக்க   வாய்ப்பு இருக்குதுன்றார் வந்து 




குருநாதர் :- அப்பனே இவை சொல்லியது ஒரு பகுதிதான் என்பேன் அப்பனே. இன்னும் அப்பனே ஏராளமான ஞானிகள் வந்திருக்கின்றார் இங்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :- இது நான் சொன்னது? 


அடியவர்   :- ஒரு ஆள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு பகுதிதான். இன்னும் பல பகுதி இருக்குது. அப்ப 


அடியவர்   :-  பல ஞானிகள் வந்திருக்கிறார்கள் 


சுவடி ஓதும் மைந்தன் :-  பல ஞானிகள் வந்திருக்காங்க வந்து 


குருநாதர் :- அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் அப்பனே. காக்க வேண்டும் அல்லவா? எழுப்புகின்றேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :-   ( உலக நன்மைக்காக ஞானிகள் வழங்கிய அறநூல்களையும் பக்தி இலக்கியங்களையும் மக்கள் அலட்சியப்படுத்தும் சூழலில், குருநாதர் அந்த ஞானிகளை மீண்டும் எழுப்பி, தகுதியுள்ள நபர்களைக் கருவியாகக் கொண்டு அந்த இறை ஆற்றலை உலகில் பரப்பச் செய்கிறார். "மக்களிடம் நீங்களே நேரில் சென்று உங்கள் ஆற்றலால் நல்வழியைப் புரிய வையுங்கள்" என்ற குருவின் கட்டளைப்படி, அந்த ஞானிகளின் சக்தி நம்மூலமாக வெளிப்படும்போது, நாம் ஆன்மீகக் கருத்துக்களை வெறும் தகவலாகச் சொல்லாமல், அதன் ஆழமான பொருளை விளக்கி மக்களிடையே பக்தி உணர்வைத் தூண்ட வேண்டும். இவ்வாறு நம் வழியாகப் பாயும் அந்த ஞான ஆற்றல், மக்களிடம் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை நல்வழியில் செலுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த உலகமும் நலம் பெறும்.) 


குருநாதர் :- அப்பனே ஏனென்றால் கலியுகம் அழியுகம் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கலியுகம். 


அடியவர்   :-  அழியுகம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அழியுகம். 


குருநாதர் :-  அப்பனே இதனால் அப்பனே உடனடியாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல ஞானிகள் எழுப்புதலே சாலச்சிறந்தது என்பேன் அப்பனே. இன்னும் எவை என்று கூட என்னென்னவோ அழிவுகள் அப்பனே பின் நிச்சயம் பின் பின் அவ் அழிவுகள் வருவதற்கு முன்பே பல ஞானிகள் எழுப்புதே சாலச்சிறப்பு என்பேன் அப்பனே. எழுப்புவேன் அப்பனே. 


அடியவர்   :-   நன்றி நன்றி அய்யா.


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இன்னும் அழிவுகள் பெரும் பெரிய அழிவுல இருக்குது. அதுக்குள்ள? 


அடியவர்   :- ஞானிகள்.. எழுப்பனும்… 


சுவடி ஓதும் மைந்தன் :-  பல ஞானிகளை எழுப்புவது வந்து அதிக சிறப்பு. 


குருநாதர் :- அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய மீண்டும் அப்பனே பின் எதை என்று அறிய  அப்பனே பின் அதாவது சுற்றிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இவ் மூன்று மாதங்களே அதிக அளவு சுற்றி உள்ளாள்  பின் ரம்பை என்பேன் அப்பனே. அதாவது நிச்சயம் தன்னில் அறிந்து கூட, அதாவது அறிய, அப்பனே பின் பங்குனி சித்திரை வைகாசி தன்னில் கூட. 


அடியவர்   :- பங்குனி சித்திரை வைகாசி இந்த மூணு மாசம்னா ரொம்ப அதிகமா இங்க இருந்திருக்காங்க. 


குருநாதர் :- மீண்டும் அப்பனே எதை என்றது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சிறிது நேரம் அப்பனே இங்கே தியானங்கள் செய்து. பின் ஆடி தன்னில் கூட பல பின் இடத்திற்கு சென்றிருக்கின்றாள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  திருப்பியும் இங்கே கொஞ்ச நேரம் இருந்து, திருப்பியும் ஒரு வருஷம் இங்க இருக்கேன் என்று கேட்டாங்க இல்ல. ஆடி மாசம் திருப்பியும்… ம் ஐயா ஆடி மாசம்… 


குருநாதர் :- ஆடி மாசம் அப்பனே எவ்வளவு நலன்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. இன்னும் சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் ஒவ்வொன்றாக அப்பனே சொல்லிக்கொண்டே இருந்தால் அப்பனே பின் நிச்சயம் பின் பல வருடங்கள் தேவைப்படும் என்பேன் அப்பனே. பல ஞானிகளுக்கு. ஆனால் இப்பொழுது போதும் அப்பா இவை 


அடியவர் :-  சொல்லிட்டு இருந்தா, சொல்லிக்கிட்டே இருக்கலாமாம்.  இப்போதைக்கு போதும் அப்படின்ட்டாரு 


===========================

# ஆதி ஈசனாரை மகிழ வைக்கும் 2 பதிகங்கள்.  

===========================


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது நிச்சயம் பின் போற்றி அப்பனே பின் ஈசனை துதித்து போற்றி எனும் பாடலை பின் நிச்சயம் பின் நிச்சயம் பாட வேண்டும் அனைவருமே. 


குருநாதர் :- பின்பு பின் எவை என்று அறிய அப்பனே வேற்றாகி எனும் பாடலையும் நிச்சயம் அப்பனே பாட வேண்டும். சொல்லிவிட்டேன் பாடுங்கள் அனைவருமே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( திருவாசகம் போற்றி திருவகவல் மற்றும் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி என்ற 2 பதிகங்களும் போட வேண்டும் ) 


அடியவர் :-  ( குடிநீர் பற்றி கேளுங்க அய்யா. இங்க குடிக்கிறதுக்கு தண்ணீர் வேணும் அய்யா ) 



குருநாதர் :- அப்பனே பின் என்ன ஏது என்று அப்பனே நிச்சயம் எடுத்துக்கொள் அப்பனே. இவ் மலையே ஒரு  நீர்தான் என்பேன் அப்பனே. எங்கிருந்தாலும் அப்பனே நிச்சயம் பின் அவசியம் ஏது என்று புரிய அப்பனே நிச்சயம் பின் தருகின்றோம். கவலைகள் இல்லை என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த மலையே நீர் மலைதான்ப்பா. நீரும் நிறைய இருக்குது அங்கங்க வந்து. நீர் தானே வேணும்?  தந்துறேன்னு சொல்லிட்டாரு. வந்து எடுத்துக்கோன்னு சொல்லிட்டு… இது ஃபுல்லா தண்ணிதான் இருக்காம் மலையே பக்கத்துல எல்லாம் தண்ணிதான் பக்கத்துல தண்ணிதான் இருக்கு ஆமா அதனால ஒன்னும் பிரச்சனை இல்லைப்பான்றாரு வந்து 


குருநாதர் :- அப்பனே எது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட எவை என்று கூட அப்பனே அறிந்தும் எது என்று புரிய அப்பனே யாங்கள் கொடுக்கின்றோம் அப்பனே. தேவையான அளவு மட்டும் அப்பனே. அதை உபயோகித்துக் கொள்ளுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  தேவையான அளவு தேவையான அளவுக்கு சித்தர்கள் வந்து, நாங்களே தருவோம்பா. அதை உபயோகித்துக் கொள்ளுங்கப்பா. போதும். 


அடியவர் :-  ஐயா நாங்க தண்ணி எடுக்குறதுக்கு சில முயற்சி செய்றோம். அது வெற்றி அளிக்கணும். 


குருநாதர் :- அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே இப்பொழுதுதான் என்பேன் அப்பனே கவலைகள் வேண்டாம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா வெற்றி கிட்டும்.


குருநாதர் :- அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் நிச்சயம் தன்னில் கூட. இன்னும் விவரிக்கின்றேன். போதும் இப்பொழுது. 


ஆசிகள் ! 


ஆசிகள் !!




அடியவர்கள் :- ( பதிகங்கள் பாட ஆரம்பித்தனர் ….)


===========================

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்,  கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும்,  உலகம் அறியாத, மகிமை புகழ்,  கற்புக்கரசி,  அன்னை கண்ணகி தேவி  காவிய வாக்குகள் நிறைவு அடைந்தது.) 

===========================


===========================

# 2026 ஆம் ஆண்டு அன்னை கண்ணகி தேவி விழா (சித்திரை பௌர்ணமி) விபரங்கள்:

===========================

  • தேதி: மே 1, 2026 (வெள்ளிக்கிழமை).

  • சிறப்பு: வருடத்தில் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் மங்கலதேவி கண்ணகி கோவிலும், வற்றாப்பளை கண்ணகி அம்மன் மஞ்சத்திருவிழாவும் முக்கிய நிகழ்வுகளாகும்.

  • பௌர்ணமி திதி: ஏப்ரல் 30 இரவு 9:51 மணி முதல் மே 1 இரவு 11:07 மணி வரை.

  • இடம்: தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் உள்ள மங்கலதேவி கோவில், பளியங்குடி, தமிழ்நாடு.

  • கூகிள் மேப் லிங்க் :- https://maps.app.goo.gl/T9JQdnAKk6M6G9Yv7

2026 சித்திரை பௌர்ணமியான மே 1 வெள்ளிக்கிழமை அன்று வருடத்திற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் மங்களாதேவி கண்ணகி அம்மன் கோவில் தரிசன வாய்ப்பு கிடைக்கிறது. 


கேரளா–தமிழ்நாடு எல்லை மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த புனித தலத்தில் தரிசனம் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி, குடும்ப அமைதி, பெண்களுக்கு மனவலிமை மற்றும் அருள் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த அரிய தரிசனத்தை தவறவிடாதீர்கள். 


பயண வழி : மங்கலதேவி கோவில் அல்லது மங்களா தேவி கண்ணகி கோயில் தேனி மாவட்டம், தமிழ்நாட்டில் உள்ளது. இக்கோயில் தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி என்னுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிலும், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்ட அளவில் இருந்து சுமார் 5000 அடி உயரத்தில் உள்ளது. ஆண்டுக்கு சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோயில் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.


மங்கலதேவி  கண்ணகி அன்னை கோயில் விழா:- 


ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. சித்திரை முழுநிலவு விழா நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. 


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்,  கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும்,  உலகம் அறியாத, மகிமை புகழ்,  கற்புக்கரசி,  அன்னை கண்ணகி தேவி  காவிய வாக்குகள் நிறைவு அடைந்தது.) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.