“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, April 22, 2026

சித்தர்கள் ஆட்சி - 622 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்னை கண்ணகி தேவி காவியம் - பகுதி 5

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவரின்  அன்னை கண்ணகி தேவி  காவியம் - பகுதி 5 


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும்,  உலகம் அறியாத, மகிமை புகழ்,  கற்புக்கரசி, அன்னை கண்ணகி தேவியின்  காவியம்……


நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை

நாள் :-  03.04.2026 (வெள்ளிக்கிழமை)  

நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

இடம் :-  வேலோடு  மலை முருகன் ஆலயம், சித்தான்டி, கிழக்கு மாகாணம், இலங்கை.


கூகிள் மேப் லிங்க் (google map link) :- 

https://maps.app.goo.gl/tTU46Rq7V4Um8pf2A


( இவ் தொடர் வாக்கின் அனைத்து பகுதிகளின் வரிசை 

சித்தர்கள் ஆட்சி - 618- பகுதி 1

சித்தர்கள் ஆட்சி - 619- பகுதி 2

சித்தர்கள் ஆட்சி - 620- பகுதி 3

சித்தர்கள் ஆட்சி - 621- பகுதி 4

சித்தர்கள் ஆட்சி - 622- பகுதி 5

சித்தர்கள் ஆட்சி - 623- பகுதி 6

சித்தர்கள் ஆட்சி - 624- பகுதி 7 ( நிறைவு பகுதி )

)

===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================



ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அம்மையே அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் நிச்சயம் தன்னில். 


===========================

# பகுதி 5 வாக்குகள் ஆரம்பம் 

===========================


===========================

# வேலொடு மலை கந்தப் பெருமாளே, நின் தாள்  போற்றி போற்றி போற்றி !!!

===========================



குருநாதர் :-  எதை என்று புரிய எவை என்று அறிய இதனால் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக அறிந்தும் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது முருகனும் ஏது என்று அறிய அதாவது கிழவன் ரூபத்தில் வந்தான் ஏது என்று புரிய. 


அடியவர் :- இதனாலே முருகன் என்ன செஞ்சாரு?  கிழவர்… ஒரு வயசான உருவத்துல வந்து.. கன்னிகையை பார்க்க வராரு அவர்… 


குருநாதர் :- அறிந்தும் ஏது என்று கூற,  தெரியாமல் நிச்சயம் தன்னில் கூட பெண்ணே !!!!!! பின் யார்  நீ?  எதை என்று கூற. எங்கிருந்து வருகின்றாள்?  என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட 


அடியவர் :- வந்து கேட்கிறார் கண்ணகி அம்மா கிட்ட 


சுவடி ஓதும் மைந்தன் :-  தெரியாம 


அடியவர் :- தெரியாம கேட்கிறார் நீங்க யாரு எங்கிருந்து வந்திருக்க பெண்ணே அப்படின்னு கேட்கிறார் அவர் 


சுவடி ஓதும் மைந்தன் :-  எங்கிருந்து வந்திருக்கேன்னு கேக்குறாங்க 


குருநாதர் :- எதை என்று கூற ஆனாலும் மௌனம் சாதிக்கின்றாள் கண்ணகி. 


அடியவர் :- அதனால கண்ணகி அம்மா என்ன செய்றாங்க? ஒண்ணுமே சொல்லாம, மௌனம் சாதிக்கிறாங்க 


குருநாதர் :- அறிந்தும்  கூட ஏனென்றால் அப்பொழுதெல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட இறைவன் பின் மனித ரூபம் எடுத்து வருவார்கள். ஆனாலும் பின் நிச்சயம் தன்னில் கூட பின் மயக்கி விடுவார்கள் ஏது என்று அறிய. 


பின் அதாவது தெரிந்துவிட்டால் நிச்சயம் தன்னில் கூட. 


அதனால்தான் நிச்சயம் பின் எவ்வாறு என்பதை எல்லாம் , பின் இவை சுற்றி பின் மதி மயக்கம் எனும் மூலிகையும் பின் அதிகம் உள்ளதால், நிச்சயம் தன்னில் அதனால்தான். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன சொல்றாருன்னா… அப்பொழுதெல்லாம் மனித ரூபம் எடுத்து தெய்வம் வருவாங்க…பேசுறதுக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணுவாங்கன்னா மதி மயங்கிட்டு வச்சிருவாங்களாம். வந்து மதி மயங்குனா என்ன பண்ணுவாங்க? வந்து ஒண்ணுமே தெரியாம போயிடுவாங்க. எவ்வளவு ஆற்றல் இருந்தாலும், இறைவனே வந்து, அவங்களுக்கு ஒன்னும் தெரியாம, இறைவன் நம்ம வர்றது தெரியாம இருக்கணும்னு சொல்லிட்டு?  


அடியவர் :-  இறைவனே செஞ்சிருவாரு 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனே செஞ்சிருவாரு.  அப்ப அதனால இங்க வந்து சில விஷயங்கள், மூலிகைகள்  அதிகமா இருக்குதுன்றாரு. 


குருநாதர் :- அப்பனே நலங்களாக எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் மீண்டும்… 


பின் யார் நீ?  எதை என்று புரிய. 


எதற்காக இங்கு வந்தாய்?  


இது எனக்குத்தான் சொந்தம் என்றெல்லாம் நிச்சயம் முருகன் பின் கண்ணகியிடம் விளையாடினான். 


அடியவர் :- கண்ணகியை பார்த்து கேக்குறாரு.  நீ இங்க எப்படி வந்த?  இது எனக்கு சொந்தமான இடம்.  நீ ஏன் வந்த?  யார் நீ? ன்னு கேக்குறாரு அவர். 


குருநாதர் :- எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது கிழவனே!!!!!! எதை என்று புரிய மனிதன் அனைவரும் சேர்ந்து என்னை இப்படி ஆக்கிவிட்டார்கள். 


எதை என்று புரிய யானும் நிச்சயம் பின் ஏதோ இங்கு வந்துவிட்டேன்.


தனால் பின் எவை என்று புரிய அதாவது தஞ்சம் கொடுக்கின்றாயா?  பின் இல்லையா? 


பின் யான் செல்லப் போகின்றேன் என்று அதாவது நிச்சயம் தன்னில் கூட.


வயதானவன்  போல் இருக்கின்றாய். பின் உனக்கு கருணை மனம் உண்டா? என்று நிச்சயம் தன்னில் கூட 


அடியவர் :-  கண்ணகி சொல்றாங்க. என்னை எல்லாரும் ஏமாத்திட்டாங்க. அதனாலதான் போறதுக்கு இடம் இல்லாம, இங்க வந்தேன். நான் இருக்கணுமா?  போகணுமா உனக்கு? நீங்க வயசான தோற்றத்துல இருக்கீங்க. கருணை காட்டி எனக்கு இருக்க இடம் கொடுக்குறீங்களா?  இல்லையா?  அப்படின்னு கேக்குறாங்க அந்த அம்மா. 


குருநாதர் :- எது என்று கூற பெண்ணே…. பல தோஷங்கள் ஏது என்று எப்படிப்பட்டவள் ஏது என்று அனைத்தும் பின் யான் அறிந்திருக்கின்றேன்.  அதாவது நிச்சயம் தன்னில் கூட இங்கு நிச்சயம் ஏது என்று புரிய ஒரு வைர நிச்சயம் தன்னில் கூட ஆறு இருக்கின்றது. அதாவது குளம் இருக்கின்றது அங்கு குளித்து வா.  அனைத்தும் சொல்கின்றேன் என்று. 


அடியவர் :- ( சந்தேகம் கேட்டார் ) இங்க வந்து வைர குளமா ?


சுவடி ஓதும் மைந்தன் :-  வைர குளம். ஏதோ இருக்குது இங்க பக்கத்துல


அடியவர் :-   ஏதோ வைர குளம் ஒன்னு இருக்காம் இங்க. அந்த குளத்துல குளிச்சிட்டு வா. உனக்கு எல்லா விஷயமும் சொல்றேன்னு சொல்றாராம். 


===========================

மாமாங்க ஈஸ்வரர் ஆலயம், மட்டக்களப்பு - 2/4/2026 அன்று சுவடி வாசிக்கப்பட்டது.  இவ் வாக்குகள் பின்னர் வெளிவரும். 

https://maps.app.goo.gl/ZtyufnpY8RkapCjM8


(வைர குளம்) மாமாங்க குளம் - கூகிள் மேப் லிங்க் 

https://maps.app.goo.gl/grBYM4zC9UfYbbrTA

===========================


குருநாதர் :- அப்பனே மறந்து விட்டீர்களா என்ன? நேற்றே பொழுது சொன்னேனே அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே அத் திருத்தலத்தில் தான் அப்பனே, பின் அது எவை என்று கூறிய அப்பனே அப்பொழுதே பல முதலைகள் அங்கே இருக்கின்றது என்பேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  (மாமாங்க குளம், மாமாங்க ஈஸ்வரர் ஆலயம், மட்டக்களப்பு) நேற்று நாம போனேன்ல…. அதுதான்…. அந்த குளம்தான்…. 


அடியவர் :-  ஓ…( புரிந்துவிட்டது)  மாமாங்க குளம், மாமாங்க ஈஸ்வரர் ஆலயம்.   


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா.


அடியவர் :-   அங்க மாமாங்க குளத்துல குளிச்சிட்டு வர சொல்லி இருக்காரு முருகன்.. அங்க வந்து… 


சுவடி ஓதும் மைந்தன் :-  அது வந்து ஒரு பெரிய ஒரு வைரகுளம்ன்றாரு. அங்க வந்து குளிச்சோம்னா பல தரித்திரங்கள் எல்லாம் நீங்கும். 


குருநாதர் :- ஆனாலும் அப்பனே இறைவன் சரியாகத்தான் ஏது என்று கூற,  அப்பொழுதெல்லாம் அப்பனே பின் எவை என்று புரிய குளிக்காமல் ஏது என்று நிச்சயம் தன்னில் கூட முதலைகள் பல இருந்தது என்பேன் அப்பனே. 


அடியவர் :-  அந்த காலத்துல நிறைய முதலைகள் இருந்ததாம். 


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அப்படியே ஏது என்று புரிய பின் அப்படியே அறிந்தும் புரிந்தும் கூட. இதனால் என்னவென்று ஏது என்று அறிய. ஆனாலும் நிச்சயம் தன்னில் சரியாகவே நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட. ஆனாலும் மீண்டும் எங்கு இருக்கின்றது? என்று நிச்சயம் தன்னில் கேட்டால் அவளே. 


அடியவர் :-  ஆனா அவங்க கண்ணகிக்கு தெரியல. அவங்க கேக்குறாங்க எங்க இருக்கு? ன்னு கேக்குறாங்க,  முருகன் கிட்ட 


சுவடி ஓதும் மைந்தன் :-  முருகன் கிட்ட


===========================

# வேலொடு மலையில் இருந்து, 27 கிலோமீட்டர் தொலைவில், அதாவது  மட்டக்களப்பு - மாமாங்க ஈஸ்வரர் ஆலயம் அருகில் முருகப்பெருமான் உரைத்த மாமாங்க குளம் உள்ளது.

===========================



குருநாதர் :- எது என்று புரிய நிச்சயம் பின் அதாவது சென்று கொண்டே இரு. பின் உனக்கு பின் நீர் தாகம் எவை என்று கூட எடுக்கும் நிச்சயம் தன்னில் கூட. அங்குதான் நிச்சயம் பின் நீ அருந்துவாய் என்று. 


அடியவர் :-  அவர் சொல்றாரு. உனக்கு நீ போற நேரம், எங்க நீர் தாகம் வருதோ, அந்த இடம்தான், அந்த குளம்,அப்படின்னு சொல்லி. குறி சொல்லி அனுப்புறாரு. 


குருநாதர் :- எது என்று தாகமும் ஏற்பட்டது நிச்சயம் தன்னில் கூட. அவையும் கூட எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட நிச்சயம் எவை என்று கூற பின்  அப்படியே ஏது என்று புரிய நிச்சயம் பின் அதாவது குளத்தில் பின் நீர் எடுத்தாள். 


அடியவர் :-  எந்த இடத்துல வச்சு அவருக்கு ஒரு தாகம் வருது. அந்த இடத்தை போயிட்டு, அவர் நீர் எடுக்கிறார். அந்த குளம்தான்…. அந்த மாமாங்கு குளம்னு சொல்லி… 



குருநாதர் :- அறிந்து பின் நீர் எடுத்தவுடன் பல முதலைகள் ஏது என்று கூற பின் அப்படியே நிச்சயம் தன்னில் கூட வாயை பிளந்து. 


அடியவர் :- எடுத்த உடனே எல்லா முதலைகளும் வாயை பிளந்து வருது எது என்று கூற கண்ணகி யோசித்தாள் 


குருநாதர் :-  எதை என்று புரிய இவ்வாறு பின் நீராட சொன்னார்களே நிச்சயம் பின் எவ்வாறு நீராடுவது நிச்சயம் தன்னில் கூட அதாவது இங்கு நீராடினால் பாவங்கள் போகும் என்று நிச்சயம் தன்னில் கூட கிழவர் அதை சொல்லிவிட்டான் என்று எண்ணினாள். 


அடியவர் :- இங்க குளிச்சா பாவம் எல்லாம் போகும்னு அந்த கிழவர் சொன்னாரு.  ஆனா இப்படி முதலைகள் இருக்கு எப்படி குளிக்கிறது? ன்னு யோசிக்கிறாங்க அம்மா. 


குருநாதர் :-  அறிந்தும் ஏது என்று புரிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் ஒரு யோசனை வந்தது நிச்சயம் தன்னில் கூட. அறிந்தும் கூட,  சரி.  பின் இவ் முதலைகளுக்காவது நிச்சயம் இவ் உடம்பு நிச்சயம் போகட்டுமே என்று. 


குருநாதர் :-  ஆனாலும் பின் அதாவது முதியவன் சொல்லிவிட்டானே நிச்சயம் தன்னில் கூட சில சாபங்கள் இருக்கின்றது என்று.  அவனிடமே கேட்போம் என்று, மீண்டும் இங்கு வந்தாள். 


அடியவர் :- கண்ணகி அம்மா நினைக்கிறாங்க. சரி பரவாயில்லை. உடம்பை எப்படியும் அந்த முதலைகள் வந்து சாப்பிடட்டும். அப்படின்னு நினைச்சுட்டு… திரும்பியும் கண்ணகி அம்மா யோசிக்கிறாங்க. எனக்கு ஏதோ தோஷம் இருக்குன்னு சொன்னாங்களே???  சரி போயிட்டு, அவர் கிட்ட  கேட்டு வருவோம்னு,  திரும்பி என்ன செய்றாங்க ? இந்த வேலொடு மலைக்கு வராங்க கண்ணகி அம்மா.


குருநாதர் :-  எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் கிழவனே ஏது என்று புரிய ஆனாலும் நீ அனுப்பி பின் நிச்சயம் தன்னில் கூட எனை…. ஏது எவை என்று நீயும் சோதிக்கின்றாயா  என்ன??? 


அங்கு எவ்வளவு முதலைகள் இருக்கின்றது நிச்சயம் தன்னில் கூட உனக்கு தெரியுமா என்ன நிச்சயம்? 


அதில் போய்… அதாவது நீ தெரிந்து தான் சொல்லி இருக்க வேண்டும். அதில் போய் பின் நீராட சொல்கின்றாயே ??? நியாயமா இது??? 


அப்பொழுதுதான் சாபங்கள் நீங்கும் என்றும் சொல்லிவிட்டாய். 


ஆனாலும் யான் நீராட தயார். ஆனால் ஏதோ சாபங்கள் உள்ளது ஏது என்று புரிய, நீதான் சொன்னாய் நிச்சயம் தன்னில். அதனால்தான் மீண்டும் உன்னிடத்திலே வந்து கேட்கின்றேன். 



அடியவர் :- கண்ணகி அம்மா அவங்க சொல்றாங்க. இவ்வளவு முதலை இருக்குன்னு தெரிஞ்சும் என்னை நீங்க வந்து அங்க குளிக்க சொல்றீங்களே!!!!  சரி நான் குளிக்கிறேன். பிரச்சனை இல்லை. ஆனா அங்க அவ்வளவு முதலை இருக்குது. அந்த முதலை கடிச்சா நான் என்ன ஆகுவேன்னு உனக்கு தெரியும். சரி பரவாயில்லை. எனக்கு ஏதோ சாபம் இருக்குன்னு சொல்றீங்க. அந்த சாபம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கணும். அதுக்காகத்தான் திரும்ப வந்தேன் அப்படிங்கிறாங்க. 


குருநாதர் :-  எதை எவை என்று புரிய நிச்சயம் அறிந்து கூட இதனால் நிச்சயம் நீ அங்கு நீராடு நிச்சயம் தன்னில் கூட முதலில் என்று. 


அடியவர் :- அவங்க சொல்றாங்க அதெல்லாம் பிரச்சனை இல்லை நீ போய் நீராடு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  முதல்ல நீராடு அங்க. 


அடியவர் :- முதல்ல நீராடு அப்படிங்கிறாரு 


குருநாதர் :-  எது என்று கூற பின் கிழவனே எனை சாகடிக்கவே முடிவு செய்துவிட்டாயா  என்ன நீ?  என்றெல்லாம் 


அடியவர் :-  அவங்க சொல்றாங்க என்னடா இது.  என்னை சாகடிக்கவே முடிவு பண்ணிட்டியா அப்படிங்கிறாங்க கண்ணகி அம்மா. 


குருநாதர் :-  எது என்று கூற பின் அதாவது பெண்ணே ஏது என்று அறிய ஆனாலும் இவை சொன்னாலும் நிச்சயம் பின் உனக்கு புரியாது. இதனால் நீ,  நீராடியே  தீர வேண்டும் என்று. 


அடியவர் :-  உனக்கு புரியாது.  போய் நீராடு என்றார் அவர் 


குருநாதர் :- எது என்று புரிய மீண்டும் யோசித்துக் கொண்டே சென்றாள். எது என்று அறிய…. ஆனால் மீண்டும் பின் சென்றவுடன், நிச்சயம் அதாவது முதலைகள் இன்னும் பலமாகிவிட்டது. 


அடியவர் :-  முதலில் இருந்ததை விட, முதலைகள் இன்னும் பலமாயிருச்சாம்… குளிக்க போற நேரம் 


குருநாதர் :-  ஆனால் மீண்டும் ஏது என்று அறிய மீண்டும் பின் ஓடோடி வந்தாள்.. கிழவனை பார்க்க அறிந்தும் கூட. அதாவது நிச்சயம் தன்னில் கிழவனே ஏன் என்னை ஏமாற்றுகின்றாய் நிச்சயம் தன்னில் சாபம் இருக்கிறது என்று. நிச்சயம் இவ்வாறாக இப்பொழுது அதிகமாகிவிட்டதே. இப்பொழுது நிச்சயம் நீராட முடியாது அங்கு என்று. 


அடியவர் :-  திரும்ப வந்து இந்த கிழவர்கிட்ட சொல்றாங்க. முதல்ல விட முதலைகள் கூடிருச்சு. இப்ப போயிட்டு,  கட்டாயம் குளிக்கவே இயலாது. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமா 


அடியவர் :- ஆனா எனக்கு சாபம் இருக்குன்னு நீங்க சொல்றீங்க.  


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சாபம் ? 


அடியவர் :- என்ன சாபம்? னு ….திரும்ப திரும்ப கேக்குறாங்க. 


குருநாதர் :-  எதை என்று கூற பெண்ணே நிச்சயம் எதை என்று புரிய மீண்டும் பின் நீராடு எதை என்று கூற. பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  (கண்ணகி அன்னை) பின் அட பின் கிழவனே !!!!!! இப்படி ஏது என்று எனை அலைய வைக்கின்றாயே ???? நியாயமா இது????? என்றெல்லாம். 


அடியவர் :- அவரும் சொல்றாரு போ குளி. குளிச்சாதான் உனக்கு தெரியும்னு. அப்ப இவங்க சொல்றாங்க, உனக்கு நியாயம் இல்லையா?  ஏன் இப்படி என்னை அலைய வைக்கிற என்று அந்த அம்மா கேக்குறாங்க. 




குருநாதர் :-  ( கிழவன் ரூபத்தில் வந்த முருகப்பெருமான் ) எது என்று புரிய அதாவது யான் குளித்து வருகின்றேன். நீ என் உடைமையுடன்  இங்கே பாதுகாப்பாக இரு என்று நிச்சயம் தன்னில் கூட. 


அடியவர் :-  கண்ணகி அம்மா அவங்க சொல்றாங்க. சரி. நான் குளிச்சிட்டு வரேன்….. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (இடை மறித்து ) அப்படி இல்ல அய்யா. அப்புறம் இந்த முதியவர் சொல்றாரு, நான் குளிச்சிட்டு வரேன். என் உடைமைகள் எல்லாம் இங்கே இருக்கு. நீ பார்த்துக்க ஏன்ட்டாரு வந்து… 


அடியவர் :-  சரி


குருநாதர் :-  அறிந்து கூட எது என்று கூற பின் எதை இவ்வயதில் என்ன உடைமையில் நீ வைத்திருக்க போகின்றாய் சரி ஏது என்று கூற யான் பார்த்துக் கொள்கிறேன் நீ முடிந்தால் நீ நீராடி வா என்று 


அடியவர் :-  வயசு போற காலத்துல நீங்க என்ன உடைமை வச்சிருக்க போறீங்க…. சரி வச்சிட்டு போங்க நான் பார்த்துக்கிறேன் அப்படிங்கிறாங்க…


குருநாதர் :-  அறிந்து கூட பின் அப்படியே கிழவனும் நீராடி பின் அதாவது மீண்டும் வந்துவிட்டான் கண்ணகியிடம் 


அடியவர் :-  அவரும் போயிட்டு குளிச்சிட்டு நல்லபடியா வந்துட்டாராம் கண்ணகி அம்மா கிட்ட 


குருநாதர் :-  எது என்று எவை என்று புரிய பின் நீராடி விட்டேன் என்று நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது கண்ணகியும் நிச்சயம் கிழவனே!!!!!! யான் நம்ப போவதில்லை. எப்படி ஏது என்று கூற உன்னை, பின் அதாவது முதலைகள் விட்டது???


அடியவர் :- அவங்க சொல்றாங்க. எனக்கெல்லாம் நம்பிக்கை இல்லை. அவ்வளவு முதலை இருக்கிற நேரம், நீ எப்படி குளிச்சிருப்பீங்க???? அப்படின்னு அவங்க கேக்குறாங்க. 


குருநாதர் :-  எதை என்று புரிய இதனால் யானும் வருகின்றேன் நிச்சயம் தன்னில் கூட. பின் என் முன்னே நிச்சயம் தன்னில் கூட நீராடு. பின் அதை யான் பார்க்க வேண்டும் என்று கண்ணகியும் கூட. 


அடியவர் :-  கண்ணகி அம்மா சொல்றாங்க. நானும் கூட வரேன். என் முன்னுக்கு குளி. அப்பதான் நான் நம்புவேன். அப்படிங்கிறாங்க. 


குருநாதர் :-  (முருகப்பெருமான்) எதை என்று புரிய நிச்சயம் என் உடைமைகள் பின் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று?  


குருநாதர் :-  (கண்ணகி அன்னை) ஆனாலும் நிச்சயம் பின் உன் உடைமைகள் என்னதான் இருக்கின்றது? யான் சுமந்து வருகின்றேன் என்று.


அடியவர் :- அப்ப அவர் சொல்றாரு. நீ வந்து ஏன் உடைமைகளை யார் பார்த்துக்கிறேன்னு. அதெல்லாம் பிரச்சனை இல்லை. நான் உன் உடைமையோட சுமந்துகிட்டு வர்றேன். நீ குளிக்கிறதை நான் பார்க்கணுங்கிறாங்க. 


குருநாதர் :-  எதை என்று புரிய நிச்சயம் தன்னில் அறிந்து கூட இதனால் பின் எவை என்று புரிய அழகாக பின் நீராடினான்  முருகன். 


அடியவர் :- இதெல்லாம்… அவங்க முன்னுக்கு… என்ன செய்றாரு?  முருகன் நல்ல அழகா நீராடுறாரு. 


குருநாதர் :-  ஆனாலும் முதலைகள் ஒன்றும் செய்யவில்லை அனைத்தும் வாய் அடைத்துவிட்டது 


அடியவர் :- முதலைகள் ஒன்றும் செய்யாம அது பாட்டுக்கு வாய் அடைச்சிருக்கு 


===========================

# கிழவன் - அழகனாக மாறிவிட்டார்.

===========================



குருநாதர் :-  கிழவனே  எதை என்று கூற பின் எதை என்று ஆனால் பின் அதாவது நிச்சயம் தன்னில் நீ மட்டும் பின் அதாவது இவ்வாறு இருக்கின்றாய் ஏது என்று புரிய. இதனால் பின் நிச்சயம் தன்னில் கூட நீராடு பின் வந்திருக்கையில் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இளைஞனாக மாறிவிட்டான். 


அடியவர் :- நீராடி முடிச்ச உடனே முருகன், இளைஞரா மாறிடுறாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இளைஞனா மாறிட்டாரு… 


குருநாதர் :-  எது என்று அறிய பின் நிச்சயம் தன்னில் ஆச்சரியத்தோடு பின் கண்ணகி பார்க்கின்றாள் எது என்று கூற. 


பின்  அதாவது முதியவனா????  


எது என்று கூற பின்  அதாவது இறந்துவிட்டானா?? 


இவன் புதியவனா???? என்று யோசிக்கின்றாள் சிறிது பின் நிச்சயம் தன்னில் கூட. 


அடியவர் :-  இப்ப யோசிக்கிறா கண்ணகி அம்மா. என்னடா கிழவரா இருந்தாரு. இப்ப எப்படி இளைஞனா மாட்டாரு. ஒருவேளை இறந்திருப்பாரோ.  இறந்து புதுசா வந்திருப்பாரோன்னு கண்ணகி அம்மா யோசிக்கிறாங்க. 


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட 


பெண்ணே!!!!!! 


பின் யார் என்று தெரிகின்றதா?????  


நன்றாக உற்றுப் பார் என்று இளைஞனும் கூட 


அடியவர் :-  அவர் சொல்றாரு வந்து கண்ணகி அம்மா கிட்ட. உனக்கு என்னை  தெரியுதாமா?  உற்றுப் பார்… அப்படிங்கிறாரு. 


குருநாதர் :-  எதை எவை என்று புரிய இதோ எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட… அழகாக நிச்சயம் பின் அதாவது மேலைப் பின் கை ஏந்தினான். வேல் ஒன்று அழகாக.. 


அடியவர் :-   உற்றுப் பார்க்கும் பொழுது, அவர் கை ஏந்தும் பொழுது அப்படியே வேல் ஒன்னு கையில வந்து வருது… 




குருநாதர் :-  எதை என்று பின் மதிமயக்கமும் பின் கலைந்து விட்டது. பின் முருகா !!!!!! என்று நிச்சயம் தன்னில் குழந்தாய் !!!!!! என்றெல்லாம் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்  எதை என்று புரிய. 


அடியவர் :-  மதிமயக்கம் கலைந்த, அப்பதான் கண்ணகி அம்மாக்கு.. முருகா பின்னு சொல்லி…. கால் இறுக்கி பிடிச்சுக்கிறாங்க.


குருநாதர் :-  மன்னித்து விடு எதை என்று கூற பின் அதாவது பின் இக்கிழவனாக வந்துவிட்டாய் எதை என்று கூற.  


பின்  புரியவில்லை ஏது என்று கூற. 


என் மனதும் தடுமாற்றம் ஆயிற்று. 


இதனால் நிச்சயம் நீ சொல்லும் பொழுதே,  நிச்சயம் பின் முதலைகள் பின் ஏது என்று அறிய நிச்சயங்கள் கொன்றாலும், பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய பின் அதாவது  ஆனால் குதிக்க பின் யான் இருக்க வேண்டும். 


ஆனாலும் பின் சாபம் ஒன்று இருக்கின்றதே என்று சொல்லிவிட்டாயே. 


அதனால்தான் யான் நிச்சயம் தன்னில்… 


முருகா !!!!!! என்னை மன்னித்து விடு நீ என்று.  


பின் எனக்கு பின் தெரியவில்லையே. 


அடியவர் :-  அதான் சொல்றேன்.. முருகா நீன்னு எனக்கு தெரியல. நான் எப்படியும் குளிச்சிருப்பேன். முதலைகள் இருந்தாலும் பரவாயில்லை. நான் குளிச்சிருப்பேன். ஆனா சாபம் இருக்குன்னு நீ சொல்லிட்ட.. அந்த சாபம் என்னன்னு தெரியாம, எனக்கு குதிக்க விருப்பமில்லை. அதனாலதான் நான் வந்து கேட்டேன். நீன்னு தெரிஞ்சிருந்தா அப்படி சொல்லி இருக்க மாட்டேன். மன்னிச்சுக்க அப்படிங்கிறாங்க. 


===========================

# தேவலோக ரம்பை அன்னையாக மாறிவிட்டார் கண்ணகி அன்னை.

===========================



குருநாதர் :-  எது என்று புரிய நிச்சயம் தன்னில் இவ்வாறாகவே எது என்று ஒரு பரிசுத்தமாக நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் குதித்தாள் கண்ணகி நிச்சயம் தன்னில். மீண்டும் பின் சாபம் நீங்கி நிச்சயம் பின் தேவதையாக, பின் நிச்சயம் அதாவது ரம்பையாக மாறிவிட்டாள் 


அடியவர் :-  அந்த கண்ணகி அம்மா, அங்க குளிச்சு, அவங்க சாபம் நீங்கி, தேவலோக ரம்பையா வர்றாங்க. அந்த மாமாங்க குளத்துல கண்ணகி அம்மா குளிச்சு,  ரம்பையா வர்றாங்க… பாருங்க. இளமையோடு..


அடியவர் 1 :- திரும்ப வர்றாங்க. 


அடியவர் :-  திரும்ப வராங்க 


குருநாதர் :-  எது என்று புரிய பின் அதாவது ஆச்சரியங்கள் ஏது என்று புரிய அனைத்தும் ஏது என்று அறிய. இதனால்தான் முருகன் சொன்னான் அப்பொழுதுதான். நிச்சயம் இவ்வாறு தான் பின் அலைந்து, திரிந்து ஏதோ பின் எவை என்று, பூலோகத்திற்கு அனுப்பி, அதாவது பின் அதாவது நிச்சயம் தன் திருவிளையாடலை இவையும் கூட. பின் ஒரு ஜென்மத்தில் ஏது என்று கூற அனைத்தும் சொன்னான் முருகன். 


அடியவர் :- இது எல்லாமே ஒரு திருவிளையாடல் தான். நீ பூலோகத்துக்கு வந்தது. இந்த மாதிரி பிறந்தது. இது எல்லாமே ஒரு திருவிளையாடல் அப்படின்ட்டாரு முருகன். 


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, இதனால் நீ ஏது என்று அறிய, பின் அதாவது இப்பொழுது தேவலோகத்திற்கு செல்லப் போகின்றாய். உனக்கு என்ன வேண்டும்? என்று, 


அடியவர் :- முருகன் கேட்டாரு. இப்போ ஒரு சாபம் முடிஞ்சுச்சு. நீ தேவலோகத்துக்கு போகப்போற உனக்கு தேவையான வரத்தை கேளுன்னு 


குருநாதர் :-  எது என்று அறிய உன்னிடத்தில் எது என்று கூற பின் அனைத்தும் பார் எப்படி ஜொலிக்கின்றது என்று. பின் வைரங்கள் என்று.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நிறைய அந்த தேவலோகத்துல அதேமாதிரி மாறிட்டாங்க.  அந்த வைரங்கள் எல்லாம் நிறைய இருக்குது… ஏதுன்னு சொல்லிட்டு வந்து ரொம்ப…


அடியவர் :- அதே மாதிரி, தேவதை மாதிரி இருக்காங்க அப்படின்னு… 


சுவடி ஓதும் மைந்தன் :-  தேவதை மாதிரி வந்துட்டாங்க.. வந்து 


குருநாதர் :-  எதை என்று புரிய அதனால் பின் அதாவது எதை என்று கூற முருகனும் கூட, நீ எதை கேட்கின்றாயோ அதை உடனடியாக உன் கையில் வரும் என்று. 


அடியவர் :-  அவர் சொல்றாரு நீ என்ன கேட்கிறியோ, அது உடனடியா கைக்கு வரும்னு, வரத்தையும் கொடுக்கிறார் முருகன். 




குருநாதர் :- எது என்று புரிய இதனால் நிச்சயம் இவ்வளவு பின் வைரங்களா??? நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :- மீண்டும் பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட. இவ்வைரங்கள் பின் எவ்வளவு ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, என் அதாவது எடை எவ்வளவு உள்ளதோ, அவ்வளவு நிச்சயம் தன்னில் கூட பின் வைரங்கள் வேண்டும் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  மீண்டும் வந்து ஒரு சோதிக்கிறாங்க வந்து முருகன் வந்து/ என்ன சொல்றாரு?  என் எடை எவ்வளவுதோ அவ்வளவு வைரம் வரட்டும்னு 


அடியவர் :- வரட்டும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  வரட்டும்னு சொல்லி. அப்ப அதே மாதிரி வந்துருச்சு. 


அடியவர் :- ம் 


குருநாதர் :-  அறிந்தும் ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய இதனால் நிச்சயம் எவ்வாறு ஏது என்று புரிய. அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் பின் முருகா இவை என்ன செய்யட்டும்?  என்று நிச்சயம் பின்  எவ்வாறு என்பதை எல்லாம் 


சுவடி ஓதும் மைந்தன் :- வந்துருச்சு. இதை நான் என்ன செய்றது? 


அடியவர் :- என்ன செய்யணும்னு கேக்குறாங்க 


குருநாதர் :-  அறிந்தும் புரிந்தும் அதனால் நிச்சயம் தன்னில் கூட அதாவது உன் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட உன் உடைமைகளை சுமந்து வந்தேனே எங்கே என்று?.  ஆனாலும் பின் அவ் உடைமைகள் பார்த்தால் அங்கும் பின் வைரம் மலையில். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அது ஏதோ முருகர் உடைமைகள் வந்து துணி என்று நினைச்சுட்டு இருந்தாங்க கண்ணகி அம்மா. ஆனா அதுவும் வந்து? 


அடியவர் :-  வைரம்தான் 


சுவடி ஓதும் மைந்தன் :-  வைரம்தான் 


குருநாதர் :-  முருகா நிச்சயம் தன்னில் கூட நீ எவை என்று கூற பின் எவ் மலையில் இருந்தாயோ அங்கே செல்கின்றோம் நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று கூற உன் உடைமைகளை யானே சுமந்து வருகின்றேன் என்று. ரம்பையும் கூட நிச்சயம் தன்னில் உள்ள பல பின் வைரங்கள். 


அடியவர் :- வைரங்கள் எல்லாம் சுமந்துகிட்டு ரம்பை என்ன செய்றாங்களாம் இருந்த மலைக்கே போவோம்பான்னு சொல்லி, திரும்ப இதே மலை திரும்பி இங்க வராங்க. 


குருநாதர் :- எதை எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் என்ன செய்யட்டும்? என்று பின் நிச்சயம் பின் அதாவது ரம்பையும் கூட 


அடியவர் :- இதெல்லாம் என்ன செய்யணும் முருகா அப்படின்னு கேக்குறாங்க ரம்பை 


குருநாதர் :- எது என்று கூற பின் தூரே வீசி விடு என்று. 


அடியவர் :- தூர வீசு அப்படின்ட்டாரு 


===========================

# வேலொடு மலையின் - உடல் வைரமாகும் பரம ரகசியங்கள்.

===========================



குருநாதர் :-  அறிந்தும் எது என்று புரிய இதனால் பின் தூக்கி எறிந்தாள். அங்கங்கு ஒட்டிக்கொண்டது எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. 


அவை இப்பொழுது பாறைகளாக மாறி நிற்கின்றது. 





குருநாதர் :-  ““““““அங்கே தவம் செய்தாலே நிச்சயம் வைரம் போல் உடம்பு ஆகும்.”””””” 


அடியவர் :-  இங்க இருக்க பாறை எல்லாம், அந்த வைரங்கள் ஒட்டி இருக்குதாம்…


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப தூக்கி எரிஞ்ச அந்த பாறைகள் அது என்ன ஆச்சாம்? பாறைகள் ஆயிடுச்சாம் 


அடியவர் 1:- (வேலொடு) மலை பாறைகள் 


சுவடி ஓதும் மைந்தன் :-  பாறைகள். பாறைகள்னா இந்தா பாருங்க…. பாறை 


அடியவர் :-  இந்தா பாருங்க.. கீழ… பாறை ( வேலொடு மலையின் பாறைகளை காண்பித்தார் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  பாறை ஆயிடுச்சு. அங்கங்க அந்த பாறைகள் மீது உட்கார்ந்து தியானம் செய்தால், உடம்பு என்ன ஆகுமாம்? 


அடியவர் :- வைரமாகும் 


சுவடி ஓதும் மைந்தன் :- வைரமாகும் 


குருநாதர் :-  அனைத்தும் தெளிவு பெறும். அனைத்தும் தெரியவரும். 


அடியவர் :- அனைத்தும் தெளிவு பெறும். அனைத்திலும் 


குருநாதர் :-  அனைத்தும் தெரிந்து கொள்ளலாம் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :- முருகா அறிந்தும் கூட பின் உன்னைப்போல் எவை என்றது எப்படி எதற்கும் ஏது என்று அறிய அதனால் நிச்சயம் பின் சாபமும் நிச்சயம் தன் நிறைவேற்று ஏது என்று சாபத்தை நீக்கிவிட்டாய். யான் என்ன செய்ய வேண்டும் என்று கூறு? 


அடியவர் :- எல்லாம் செஞ்சு, சாபத்தையும் நீக்கிட்ட முருகா. அப்ப நான் என்ன செய்யணும் கேக்குறாங்க  கண்ணகி அம்மா. 


குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் தாயே அனைத்தும் உன்னுடைய இஷ்டமே என்று முருகன் மீண்டும் கூறினான்.


அடியவர் :-  எல்லாம் உன் இஷ்டம் அம்மா. நீ என்ன செய்றியோ செய்ய பின்ட்டாரு முருகனும் 


குருநாதர் :-  எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் முருகா நீயே இப்படி சொல்லலாமா?  என் சாபத்தை அதாவது அதி விரைவிலே அதாவது சில நாட்கள் தான் இங்கிருப்பேன். தேவலோகத்திற்கு செல்லப் போகின்றேன். அதனால் என்ன வேண்டும் ஏது என்று புரிய, பின் ஏதாவது சொல் பின் நிச்சயம் தன்னில் கூட. 


அடியவர் :- இந்த கொஞ்ச நாளைக்கு தான் நான் இங்க இருப்பேன். அப்புறம் தேவலோகம் போயிருவேன். இங்க இருக்க நேரமே, நான் என்ன செய்யணும்?  அதை சொல்லு முருகா.. அப்படிங்கிறாங்க. 




குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தன்னில் சரி எவை என்று கூற தேவலோகத்திற்கு செல்கின்றாய். இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட உனக்கு பின் பறப்பதற்கான எவை என்று அறிய நிச்சயம் ஆற்றலை தருகின்றேன். பின் மனிதனை பார்த்திட்டு வா மீண்டும் ஒரு தடவை என்று. 


அடியவர் :- அவர் சொல்றா உனக்கு தேவலோகம் போறதுக்கு வாய்ப்பு தர்றேன் பரப்புறதுக்கான வரம் தர்றேன் நீ போயிட்டு மனிதனை 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி இல்ல. நீ கொஞ்ச நாள்லயே வந்து தேவலோகத்துக்கு போற…


அடியவர் :- ஆமா 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து, நீ மனிதனால ரொம்ப கஷ்டப்பட்ட. எல்லாத்தையும் யாரும் உனக்கு துணை இல்லை. ஒண்ணுமே இல்லை. அதனால திருப்பி உனக்கு பறக்கறதுக்கு ஒரு (வானில் பறக்கும் சக்தி)  இறக்கை கொடுக்கிறேன். நீ வந்து மனுஷனை திருப்பி ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வா. பார்த்துட்டு வான்னு சொல்லிட்டு.. என்ன பண்றாரு? 


அடியவர் :- இறக்கை கொடுக்கிறாரு 


சுவடி ஓதும் மைந்தன் :- இறக்கை கொடுக்கிறார் 


குருநாதர் :-  பின் பறந்து சென்றுட்டு வா. அப்பொழுது புரியும் என்று.




குருநாதர் :-  அப்பனே இன்னும் சொல்கின்றேன் அப்பனே. மீண்டும் அப்பனே, அனைவரையும் அப்பனே பின் நல் மனதாக அப்பனே பின் உலகம் சுபிட்சம் பெற வேண்டும். இத்தேசம் வாழ வேண்டும் என்று சிவபுராணத்தை ஓதுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணம் மீண்டும் சொல்றாரு. எல்லாரும் சிவபுராணம் பாடணும்.


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்,  கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும்,  உலகம் அறியாத, மகிமை புகழ்,  கற்புக்கரசி,  அன்னை கண்ணகி தேவி  காவிய வாக்குகள் தொடரும் …..) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.