“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, April 8, 2026

சித்தர்கள் ஆட்சி - 613 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - ஆதி இராமாயண காவியம் - அன்னை சீதா தேவியின் தந்தை இராவணேஸ்வரர் காவியம் - பகுதி 5

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.




அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 5


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத,  மாபெரும் சிவ பக்தர்,  மகிமை புகழ், அன்னை சீதா தேவியின் தந்தை இராவணேஸ்வரர்  காவியம்……


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத,   மகிமை புகழ், இராமாயண காவியம்…….


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  25.03.2026 அன்று  நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த  வாக்கு. 


நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை

நாள் :-  29-3-2026 (ஞாயிற்றுக்கிழமை)  

நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

இடம் :-  ஆதிகோணேஸ்வரர் ஆலயம், தம்பலகாமம், திருகோணமலை.

Tampalakamam-Kinniyai Rd, 31100, Sri Lanka


கூகிள் மேப் லிங்க் (google map link) :- 

https://maps.app.goo.gl/StG8m11LrXK8f7pz6


(இவ் தொடர் வாக்கின் இதர பகுதிகள் 

சித்தர்கள் ஆட்சி - 609 :-  பகுதி 1
சித்தர்கள் ஆட்சி - 610 :-  பகுதி 2
சித்தர்கள் ஆட்சி - 611 :-  பகுதி 3
சித்தர்கள் ஆட்சி - 612 :-  பகுதி 4
சித்தர்கள் ஆட்சி - 613 :-  பகுதி 5
சித்தர்கள் ஆட்சி - 614  :-  பகுதி 6
சித்தர்கள் ஆட்சி - 615 :-  பகுதி 7
சித்தர்கள் ஆட்சி - 616 :-  பகுதி 8
சித்தர்கள் ஆட்சி - 617 :-  பகுதி 9

)

===========================

#  அன்புடன்  அகத்திய  மாமுனிவர்  வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன். 


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 5

===========================


குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட இதனால் என்ன பயன், ஏது என்று அறிய, அப்பனே, பல வகையிலும் கூட சீதையை அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் தன் அரண்மனையான அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இவ்வுலகத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இல்லாத அரண்மனையை அப்பனே நிச்சயம் ஒன்று வடிவமைத்தானப்பா. அப்பனே, இராவணன் கூட, 


குருநாதர் :-  அப்பனே, அழகாக, அப்பனே, சிறுவயதில் என்னென்ன, ஏது என்று அறிய பார்த்துக் கொண்டே இருந்தான் அல்லவா? அதேபோலவே அப்பனே, அனைத்தும் அப்பனே நிச்சயம் பின் சீதைக்கு, அப்பனே, பின் கிடைத்தது. ஆனாலும் சீதையின் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட வேதனை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ராமனை காண்பதே என்பேன் அப்பனே.


அடியவர் :- என்ன சொல்றாருன்னா, அங்க  ஜனக மன்னன் கிட்ட சின்ன வயசுல எப்படி இருந்தாங்களோ, வந்து அதே மாதிரி இருக்கணும்னு சொல்லிட்டு எல்லாத்தையும் வாங்கி கொடுத்தாரு. இராவணன் இங்க.. இராவணன் அரண்மனை போல இவ்வுலகத்தில் எதுவுமே இல்லையாம். அப்படி  ஒன்று வடிவமைச்சாராம். அதனால அந்த அரண்மனையில சீதைக்கு என்னென்ன தேவையோ எல்லாமே எடுத்துக்கோ, இந்தான்னு சொல்லிட்டு எல்லாமே கொடுத்து அனுப்பிச்சாராம். ஆனால் சீதைக்கு என்ன மன வேதனை?


அடியவர் 1:- ராமனை  பிரிஞ்சு இருக்கங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  ராமன்?


அடியவர் 1:- ராமனை  பிரிஞ்சு இருக்கங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான். 


===========================

# கணவன் மனைவி ஒன்றாக எப்போதும் இருக்கவேண்டும்.

# கணவன் மனைவி பிரிந்துவிட்டால் , வேதனையே……..

===========================



குருநாதர் :-  இதுவும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஏனென்றால் கலியுகத்தில் அப்பனே இவ்வாறாக (கணவன், மனைவி) பிரிந்திருந்தால் அவர்களுக்கு அப்பனே பின் பொருள் இல்லை என்று. இதுவும் அப்பனே பின் எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :- ஒரு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மனைவி அவள், அப்பனே பின் அதாவது நிச்சயம் இல்லத்தவனை  பிரிந்து விட்டால் அப்பனே நிச்சயம் என்னென்ன, ஏது என்று கூட பல கவலைகள் நடக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவே இதுவும் அப்பனே நிச்சயம் இறைவனுடைய வேலையே. 


சுவடி ஓதும் மைந்தன் :- இதுவும் ஒரு இறைவனுடைய வேலைதான் என்று சொல்கின்றார். ஏன்? அடுத்து கலியுகத்தில் எல்லாம் நடக்கப்போகுது. அப்ப இது மாதிரி வந்து ஒரு கணவன் வந்து ஒரு என்ன?


அடியவர் :- கணவன் மனைவியை பிரிஞ்சிருக்கிறதும், மனைவி கணவன் பிரிஞ்சு எவ்வளவு வேதனை.


சுவடி ஓதும் மைந்தன் :- வேதனை. அதனால இதுவும் ஒரு லீலைதான்ப்பா. இது பிரிஞ்சிருந்தா பெரிய சண்டை சச்சரவு வரும். 


===========================

# கணவன் மனைவி ஒன்றாக இருந்தால் அனைத்தும் வெல்லலாம். 

# பிரிந்துவிட்டால், இவ்வுலகத்தில் எதுவும் நடக்காது.

===========================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இவை உணர்த்துவதே இதுதான். நிச்சயம் தன்னில் கூட கணவன் மனைவி ஒன்றாக இருக்க வேண்டும். நிச்சயம் தன்னில் கூட இருந்தால் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் வெல்லலாம் என்று. 


===========================

# இராமாயணம் - இறைவன் நடத்திய நாடகம்.

===========================



குருநாதர் :- பிரிந்து விட்டால் நிச்சயம் எதுவும் பின் எதை என்று அறிய இவ்வுலகத்தில் நடக்காது என்பதை எல்லாம் இறைவன் பின் நடத்திய நாடகம் இது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா? கலியுகத்துல இது மாதிரி எல்லாம் நடக்கும். ரொம்ப பெண்களும் ஆண்களுக்கும் சண்டை வந்து பிரியுவாங்க. ஆனால் அப்படி பிரிஞ்சிட்டா நிம்மதி இல்லாமல் போய்விடும் வாழ்க்கை. 


அடியவர் :- அதான் சொல்லிட்டாரு. பாசம் வச்சா என்ன நடக்கும்னு சொல்லிட்டாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா. பாசத்திற்கான இறைவனே வச்சு இது வந்து ஒரு போராட்டம், ராமாயணம் என்பது ஒன்று. புரியுதுங்களா ஐயா? 


குருநாதர் :-  அப்பனே இன்னும் அப்பனே இன்னும் எதை எதை  என்று அறிய அப்பனே. அதனால்  அப்பனே மேலோட்டமாகத்தான் யான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் இப்பொழுது இங்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நான் என்ன பண்றேன்?


அடியவர் :- மேலோட்டமாதான் சொல்றீங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  மேலோட்டமாகத்தான் சொல்றாரு இது வந்து. இன்னும் அடியில போயிட்டு இன்னும் வந்து…. இது பண்ணாருன்னா… அது வந்து…. இப்ப வந்து மேலோட்டமாதான் சொல்றாரு. 


===========================

# ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் வருகை…..

# மகிமை புகழ் “சுந்தர காண்டம்” ஆரம்பம்….

===========================



குருநாதர் :- ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் அப்பனே உண்மை நிலையை தெரிய வேண்டும் அப்பனே. அதனால் அப்பனே மீண்டும் பின் இது பெரிதாக போய்விடும் என்று அப்பனே பின் பின் கயிலை மலையிலிருந்து ஈசன் யோசித்தான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஈசன் அப்பதான் யோசிக்கிறாரு. இதை விட்டா என்ன ஆகும்? பெரிய விஷயமா போயிடும் என்றார். இதை விட்டா வந்து ஏன்னா இவரும் நம்ம கடந்து போயிட்டாரு யாரு? நம்மள வந்து திட்டி ராவணனும் நம்மள விட்டு போயிட்டாரு. ராவணனும் நம்மள விட்டு இது மாதிரி சண்டை போட்டு போயிட்டாரு. இன்னும் விட்டா என்ன ஆகும்?


அடியவர் :- ராமனும் வேற.


சுவடி ஓதும் மைந்தன் :-  இல்ல இல்ல. பெரிய விஷயமா போயிடும்னு சொல்லிட்டு….. 


குருநாதர் :-  அறிந்தும் எது என்று புரிய, பின் அதாவது, பின் ஈசன் பின் அனுமான் போல் வேடம் அணிந்து வருகின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஈசன் யாரு? அப்ப எல்லாம் போயிடும்னு சொல்லிட்டு…. அனுமான் வேடம் அணிந்து வருகின்றார். அப்ப யாரு?


அடியவர் :- சிவன் தான் அனுமான்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சிவன் தான் அனுமான். அப்ப அனுமான் வடிவுல… 


===========================

===========================

# (இவ் சத்திய வாக்கு படிக்கும் வேளையில் ஓர் அதிசயம் நடந்தது. சுவடி ஓதும் மைந்தன் கண்ணனுக்கு அப்போது ஸ்ரீ ராம பக்த அனுமான், அங்குள்ள ஒரு  சிவன் சன்னிதியின் மீது அழகாக காட்சி கொடுத்தார்…சுவடி ஓதும் மைந்தன் அதனை அங்குள்ள அனைவருக்கும் எடுத்து உரைத்தார்கள். உடனே படம் பிடிக்க சொன்னார்கள். அடியவர்கள் உடனே படம் எடுத்தனர். அடியவர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ள அவ் கட்சியினை படத்தில் காண்க….)

===========================

===========================


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா இங்க பாருங்க. சிவன் (சன்னதி)  மேல அங்க பாருங்க அந்த கேமரா எடுங்க ஐயா. சிவன் மேல அனுமான் இங்க நிக்கிறார். அகத்தியர் இங்க நாடியில் சொல்றாரு. அது கேமரா வாட்ச் பண்ணிடலாம். ஏய் எடுங்க இதை அழகா. அங்க சிவன் இருக்காரா? எங்க நிக்குது பாருங்க. இதெல்லாம் ஒரு ஆச்சரியங்கள். இதெல்லாம் பெரிய ஒரு ஆச்சரியங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஈசன் தான் அனுமான் இங்க சொல்றாரு. அவர் பாரு எங்க நிக்கிறார். ஈசன் மேல கரெக்டா வந்து ஈசன் அங்க இருக்காரு. அது மேல அவ்வளவுதான் போயிட்டாரு. அதை பார்த்தீங்களா? இதெல்லாம் வந்து அந்த நேரத்துல மட்டும்தான். அந்த நேரத்துல மட்டும்தான்… அந்த காட்சிகள் போயிட்டாரு. அய்யா எடுத்தீங்களா? அது கரெக்டா?


அடியவர் :- போன்ல இருந்தே படம் எடுத்தேன். ( இவ் அடியவர் எடுத்த படம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது… ஓம் ஆஞ்சநேயர் திருவடிகள் போற்றி !!!!! )


சுவடி ஓதும் மைந்தன் :-  அவ்வளவுதான். அந்த நேரத்தில் மட்டும்தான். பாருங்க அய்யா …. எப்படி எல்லாம் க்ளூ கொடுப்பாரு பார்த்தீங்களா? அப்படியே பாருங்க. (சன்னதியில்) ஈசன் இருக்காரு. அதுக்கு மேல அங்க (அனுமான்) இருக்காரு. 




===========================

===========================

# பல அதிசயங்கள் அகத்திய மாமுனிவர் அருளால் , அனுமான் அருளால் இதே போல இவ் ஆதி இராமாயண வாக்கு தட்டச்சு செய்யும் நேரத்தில் - பல அதிசயங்கள் நடந்தது. பல முறை அனுமன் கோயில் தரிசனம். லேப்டாப் அதனில் background image ஆக சஞ்சீவிராயன் மலை அனுமான் வந்து அமர்ந்தார் …. ஹனுமான் சாலிசா தமிழில் பலமுறை படிக்க நேரிட்டது….சித்தன் அருள் தலத்தில் வந்த வாக்குகளில் உள்ள அனுமான் 108 போற்றி உருவாக்கினார்…அதனை மக்களுக்கு அவரே இட்டார்…தட்டச்சு செய்யும் இல்லத்தில் பல வடிவங்களில் அனுமான் பரிபூரணமாக காட்சி…பலமுறை வெற்றிலை மாலை இட வைத்தார்…ராம நவமி திருக்கல்யாண தரிசனம் காண வைத்தார் ….மொபைலில் பல தரிசனங்கள் கொடுத்தார்…எங்கு பார்த்தாலும் அனுமான் காட்சி கொடுத்தார்…தியானம் தானாக வந்து,  அதில் குழந்தை போல அனுமான் வாலில் சறுக்கி விளையாடுவது போல காட்சி கொடுத்தார் …அனுமான் வாலினை குழந்தையாக இழுத்து விளையாடுவது போல தியானத்தில் காட்சி கொடுத்தார் இன்னும் பல அதிசயங்கள் அகத்திய மாமுனிவர் அருளால் , அனுமான் அருளால் நடந்தேறியது என்று அடியவர்கள் அறிய தருகின்றோம்.

===========================

===========================


குருநாதர் :-  ஈசன் எது என்று புரிய. இதனால் நிச்சயம் தன்னில் கூட அனுமானும் எவை என்று புரிய, அழகாகவே பின் நிச்சயம் தன்னில் கூட சீதையை தேடி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப சீதைக்கு தெரியும் யாரு வந்துட்டாரு? யாரு? 


அடியவர்கள்  :- ( அமைதி ) 


சுவடி ஓதும் மைந்தன் :- சிவன் தாங்க ஐயா அவர். 


===========================

# அன்னை சீதை , அனுமான் உரையாடல் 

===========================



குருநாதர் :-  நிச்சயம் பல விஷயங்கள் எதை என்று புரிய. எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப பல விஷயங்கள்… என்ன சொல்றாரு? சீதைக்கு கற்பிக்கிறார்.. இப்படித்தான் அம்மா  இருமான்னு சொல்லிட்டு.

சீதைக்கு சொல்றார் மறைமுகமா வந்து.


அடியவர் :- அனுமான் சொல்றார் 


சுவடி ஓதும் மைந்தன் :-  அனுமான் வந்து சொல்றார் சீதைக்கு வந்து 


குருநாதர் :-  (சீதையும்)  எதை என்று அறிய ஆனாலும் நிச்சயம் பின் அதாவது ராமன் தான் பின் வேண்டும். அவன் என்ன சொல்கின்றானோ அதைப்படித்தான் நான் நடப்பேன் என்று பின் சீதையும் கூட. 


குருநாதர் :-   (அனுமான்) பின் நிச்சயம் நீ என்ன சொல்லப் போகின்றாய் எது என்று புரிய. நிச்சயம் பின் அதை நான் எடுத்துச் சொல்கின்றேன் ராமனிடம் சென்று என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அனுமான் என்ன சொல்றாரு சரிமா? நீ என்ன சொல்றியோ… நான் அது அது எடுத்துட்டு போயிட்டு நான் ராமன் கையில சொல்றேன்ன்னு சொல்றாரு. 


குருநாதர் :- (சீதையும்)  எதை என்று புரிய. நிச்சயம் பின் ஆனாலும் பின் எவை என்று அறிய. அதாவது நிச்சயம் இங்கு வந்துவிட்டேன். நிச்சயம் ஏது ஏதோ குழப்புகின்றார்கள். அதனால் முறையாக வந்து அழைத்திட பின் வரச் சொல். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஏதேதோ சொல்கிறார்கள் இங்க …ஒண்ணுமே புரியல. ஏதுன்னே தெரியல. அதனால் ஸ்ரீ ராமர் அவர் முறையா வந்து என்னை அழைச்சு போக சொல்லு என்று அனுமானிடம்  சீதை  சொல்லி, ஸ்ரீ ராமரிடம் , அவரை  அனுப்புறாரு…


அடியவர் :- சீதை சொல்லி அனுப்புறாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  சீதை சொல்லி அனுப்புறாங்க. ராமனுக்கு. 


குருநாதர் :-  எதை என்று அறிய. இதனால் நிச்சயம் மீண்டும் அதாவது பின் யாரோ எதை என்று புரிய, பின் வருவது போல் பேசியது போல் இராவணனுக்கு சொப்பனத்தில் சீதையிடம். இதனால் மீண்டும் சீதையிடம் சென்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இராவணனுக்கு தூங்கும் பொழுது ஏதோ ஒரு கனவு வந்திருக்குது. ஏதோ வந்து யாரோ  சீதையிடம் பேசுற மாதிரியும் ஏதோ கனவு வந்திருக்குது. அப்ப சீதையிடம் என்ன பண்றாரு இராவணன்? இராவணன் வராருங்க ஐயா. சீதையிடம் புரியுதுங்களா?


===========================

(இவ் நேரத்தில் மீண்டும் ஆஞ்சநேயர் அங்கு மீண்டும் , மீண்டும்  தாவி , தாவி ஆலயத்தில் பல தரிசனங்கள் அளித்தார் அங்குள்ள அடியவர்களுக்கு) 

===========================


அடியவர் :- அய்யா நீங்க சொல்ல சொல்ல…( குரங்கு ரூபத்தில் அனுமான் அங்கு ஆலயத்தில்  )  அவர் இங்க வந்து பார்த்துட்டு இருக்காரு ஐயா.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா.


அடியவர் :- அந்த ஆஞ்சநேயர்… இங்க வராரு பாருங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எங்க வராருங்க ஐயா?


அடியவர் :-  ( சுவடி ஓதும் மைந்தனுக்கு காண்பித்தார்கள் மீண்டும் )  அதான் வந்து இங்க பார்த்தாரு போறாரு. பார்த்தாரு போறாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  ( அதனை பார்த்து ஆச்சரியப்பட்டார் )


குருநாதர் :-  இதை என்று தெரிவிக்க நிச்சயம் மீண்டும் பின் அன்புடனே… தாயே!!!! யான் தான் உன் தந்தை. நிச்சயம் தன்னில் கூட இதை புரியாமல் நிச்சயம் பின் எனை எது என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  மீண்டும் என்ன பண்றாரு?


அடியவர் :- ……..


சுவடி ஓதும் மைந்தன் :-  உன்னுடைய தந்தை நான்தான் அம்மா என்று சொல்கின்றார் ….


குருநாதர் :-   எதை என்று கூற அனைத்தும் ஏற்றுக்கொள். அனைத்தும் உனக்காக என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாம் ஏத்துக்கோமா? 


குருநாதர் :-  நீயும் எப்பொழுதும் எனக்கு சிறு குழந்தைதான். ஏனென்றால் ஈசன் கொடுத்த பிள்ளை நீ. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்றாரு? நீ எப்பவுமே எனக்கு சின்ன குழந்தைதான். அதனால நீ வந்து நான் என்ன எல்லாத்தையும் உனக்கே எடுத்துக்கோ. எல்லாம் பண்ணு….


குருநாதர் :-   அப்பா!!!!! எதை என்று புரிய. இதனால் நிச்சயம் என்ன வேண்டும் என்பதற்கு இணங்க… நிச்சயம் பின் அதாவது ராமன் தான் வேண்டும் என்று மீண்டும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன வேணும்?  திருப்பி என்ன கேக்குறாங்க? 


அடியவர் :- ராமன் தான் வேண்டும்.


சுவடி ஓதும் மைந்தன் :- ராமன் தான் வேண்டும். 


===========================

# இராவணேசருக்கும் , ஸ்ரீ ராமருக்கும் சண்டைகள் ஏதுமில்லை.

# தவறாக சித்தரித்து விட்டார்கள்.

# இருவருமே இலங்கை தேசத்தை காக்க வந்தவர்கள்.

===========================



குருநாதர் :-   நிச்சயம் அவன் தர்மம் காப்பவன். இதனாலும் அப்பனே பின் இராவணனுக்கும் ராமனுக்கும் சண்டைகள் ஏதுமில்லை அப்பா. அப்பனே ஆனாலும் தவறாக சித்தரித்து விட்டார்கள். ஆனாலும் அனைவருமே இவ் தேசத்தை காக்க வந்தவர்கள் தான் சொல்லிவிட்டேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ராமனுக்கும்….இராவணனுக்கும் பெரிய சண்டைகள் எல்லாம் இல்லை. எல்லாருமே இந்த தேசத்தை?


அடியவர் :- காக்க வந்தவர்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :- காக்க வந்தவர்கள் தான்ப்பா. 


குருநாதர் :-   ஆனாலும் அப்பனே நிச்சயம் மாற்றிவிட்டார்கள் அனைத்தும். அப்பனே இவை தன், இவ்  லங்கா தேசமானது அப்பனே பின் அதாவது பின் நிச்சயம் எதை என்று கூற,  இராவணன் நிச்சயம் எது என்று புரிய பின் அனைத்தும் பின் எவை என்று கூற பின் இவ் தேசமே பின் அதாவது உனக்கே குழந்தாய் என்று… 


சுவடி ஓதும் மைந்தன் :-இந்த தேசமே உனக்காகத்தான் நீ குழந்தை 


குருநாதர் :- நிச்சயம் இத்தேசத்தையே ஆட்சி செய் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த தேசத்தில் நீ ஆட்சி செய் 


குருநாதர் :- சந்தோஷமாக வாழ். ஆனாலும் இராவணன் இன்னும் எதை என்று புரிய, எதை என்று அறிய ஆனால் மீண்டும் சீதையும் கூட அதையே நினைத்துக் கொண்டிருந்தாள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அதையே நினைச்சிருந்தாங்க….ராமர் என்ன ஆவார்…. . ராமர் என்ன ஆவார் என்று. 


குருநாதர் :-   ஆனாலும் நிச்சயம் யானும் அதாவது ராமனை பார்த்துக் கொள்கின்றேன். ஏனென்றால் பின் இது நிச்சயம், ஏனென்றால் இப்படி இருந்தால்தான், நிச்சயம் உலகம் நன்மை பெறும். அனைத்தும் விழிப்புடன் பார்ப்பார்கள். இதனால்தான் இறைவன் இவ் நடத்திய நாடகம் இது. நிச்சயம் 14 ஆண்டுகள் பின் நிறைவடைய வேண்டும் தாயே. இதனால் யான் சொல்வதைக் கேள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது இறைவன் வச்ச நாடகம். 14 ஆண்டுகள் என்ன பண்ணனுமா?


அடியவர் :- (வனவாசம்) முடியணும்.


சுவடி ஓதும் மைந்தன் :- வனவாசம் முடியனும் அம்மா. இது ஒண்ணுமே பண்ண முடியாது அம்மா.  நாம சொன்னாலும், இது மக்கள் அடுத்த கட்டத்தில் வந்து திருந்துவதற்கான வழிகள் இதெல்லாம். அதனால இது நடந்தே தீரும். யாராலும் தடுக்க முடியாது. அதனால இந்த தேசத்தையே நீ ஆட்சி செய் என்றார். 


===========================

# தன மகள் மீதுள்ள அதீத பாசத்தில் , வேதனையில் , இராவணேஸ்வரர் ஆதி ஈசனிடம் இட்ட கட்டளை.

===========================

# இலங்கை தேசத்தை எப்போதும் ஒரு பெண் தான் ஆளவேண்டும். அப்போதுதான் உயர்வு ஏற்படும். இல்லை என்றால் , ஒரு ஆண் அரசாண்டால் , இவ் தேசம் தாழ்வு பெறட்டும்.

===========================



குருநாதர் :-   எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அவ் சொல்லானது, நிச்சயம் பின் எப்பொழுதும் கூட.  அதாவது ஈசனாரே  இப்படி செய்துவிட்டாயே !!!!!! நிச்சயம் தன்னில் கூட.  


குருநாதர் :-  பின் அதாவது எப்பொழுதும் இத்தேசத்தை ஒரு பெண்ணவளே ஆள வேண்டும். அப்பொழுது ஆளினால் (அரசாண்டால்) மட்டுமே இத்தேசம் பின் உயர்வு பெறும். அப்படி இல்லையென்றால் தாழ்வு பிறக்கட்டும் என்று ஈசனிடம் முறையிட்டு விட்டான் இராவணேஸ்வரனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாருன்னா இராவணேஸ்வரன்…ஈசனே இப்படி செய்துவிட்டாயே என் செல்ல பிள்ளையை…. அப்ப நான் ஒரு சாபம் விடுறேன். என்ன சொல்றாங்க அய்யா ?இது வந்து.


அடியவர் :- இந்த தேசத்தை பெண் தான் ஆளனும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  பெண் தான் ஆளனும்.  அப்படி ஆண்டால்  மட்டும்தான் இந்த தேசத்தை காப்பாற்ற முடியும். ஒரு ஆண் வந்து அரசாண்டல் என்ன ஆகும்? ஒன்னும் பண்ண முடியாது. அவ்வளவுதான். அந்த தேசத்துக்கு… ஒரு கெடுதல் போயிட்டே இருக்கும் என்றார்….


குருநாதர் :-   இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட இராவணேசன் இட்ட கட்டளை,  பின் இன்னும் நிறைவேறத்தான் போகின்றது 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த இராவணேசன் என்ன பண்றாரு? ஈசன் கிட்ட இட்ட கட்டளை என்ன?.


அடியவர் :- பெண் ஆளனும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு பெண் ஆளினால் மட்டும்தான் இந்த தேசத்தை காப்பாற்ற முடியும் ஒரு ஆண் ஆளினால் இத்தேசத்தை?


அடியவர் :- காப்பாத்த முடியாது.


சுவடி ஓதும் மைந்தன் :- காப்பாத்த காப்பாத்த முடியாது 


குருநாதர் :-   ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பெண்ணின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்பது விதி. 


சுவடி ஓதும் மைந்தன் :- இன் நாடு பெண்ணின் கட்டுப்பாட்டில்..இதுகூட (செயலுக்கு கூடிய சீக்கிரம்)  வந்துடுங்க ஐயா. 


அடியவர் :- இன்று, இன்னைக்கும்  இந்த சாபம் இருக்கா ?


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா? 


அடியவர் :- இன்னைக்கும்  இந்த சாபம் இருக்கா?  இராவணேஸ்வர சாபம்? 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமாம். இன்னும் அந்த சாபம் இருக்குது. இந்த தேசத்தை ஒரு பெண்ணால்தான் ஆளனும். பெண் வந்து ஆளினால் மட்டும்தான் இந்த தேசம் வந்து விழிப்படைய செய்யும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் கூட என்ன ஆகுது வந்து அந்த சாபம் இருக்குது. அப்ப அந்த ஒரு பெண் ஆளனும். அந்த பெண் கீழ எல்லாரும் இருக்கணும். ஆண் வந்துட்டா என்ன ஆகும்? வந்து எல்லாமே என்ன ஆயிடுவாங்க?  வந்து க்ளோஸ் பண்ணி போயிடுவாங்கன்னு சொல்லிட்டு….


===========================

(உலகெங்கும் வாழும் ஈழ தமிழர்கள், இலங்கையில் நடந்த பல சோக நிகழ்வுகளை,  இவ் வாக்கினுடன் அடியவர்கள் தொடர்பு படுத்த,  பல உண்மைகள் நன்கு புரியும். ) 

===========================

சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் கூட அந்த இராவணேஸ்வரன் ஈசனிடம் கட்டளை ….இன்னும் வந்து  


குருநாதர் :-  இன்னும் ஏது என்று அறிய காத்துக் கொண்டே இருக்கின்றான் இராவணனனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் கூட அந்த வாக்கு மாறவில்லை.  இது வந்து, நான் இட்ட உனக்கு இது சத்தியம். இனிமேல் வந்து ஐயா புரியுதுங்களா? 


அடியவர் :- புரியுது புரியுது 


சுவடி ஓதும் மைந்தன் :- பெண் ஆளினால் நல்லா இருக்கும். ஒரு ஆண் ஆளினா  இந்த தேசம்? 


அடியவர் :-  கஷ்டம்தான் 


சுவடி ஓதும் மைந்தன் :- கஷ்டம்தான். அப்ப பெண்ணை முன் நிலைப்படுத்தி , ஆண் என்ன பண்ணனும் ?


அடியவர் :- கொடுக்கணும் …பெண்ணுக்கு சான்ஸ் கொடுக்கணும். 


சுவடி ஓதும் மைந்தன் :- சான்ஸ் கொடுக்கணும். ஆண் வந்து என்ன பண்ணனும்? ஆண்  அவங்க இருக்கணும் வந்து…. ஆனா பெண் என்பவள் முன்னே  நிக்கணுங்க ஐயா வந்து. ஐயா புரியுதுங்களா? 


அடியவர் :- புரியுது புரியுது 


குருநாதர் :-   அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பெண் அவள், அப்பனே பின் ஆளினால், அப்பனே இத்தேசம் இன்னும் சிறப்பாக அப்பனே பின் வரும் என்பேன் அப்பனே. இவையெல்லாம் இராவணேஸ்வரனே  ஏற்பாடு செய்வான் வருவரும் காலத்தில் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஒரு பெண்ணால எல்லாம் இந்த தேசம் சிறப்பாகணும். அன்றே வந்து சொல்லிட்டாரு. இராவணேஸ்வரன் சொல்லிட்டாரு இராவணேஸ்வரன். அப்ப அவரும் என்ன பண்ணுவாரு? ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து வழிநடத்துவார்…. 


குருநாதர் :-   அப்பனே வருவோரெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பெண் எவை என்று கூற புத்தன் ஆயினும் சரி.  பின் இயேசு ஆயினும் சரி. அப்பனே இப்படியே பயன்படுத்தி எவை என்று அப்படியே ஆகட்டும் என்று ஞானிகளும் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப வருவோர்கள் எல்லாம் என்ன ஆயிட்டாங்க வந்து இங்க? ஓகே இங்க பெண்ணுக்கு முன்னுரிமை இந்த  தேசத்தில். அப்ப இலங்கை வருவோர் எல்லாமே,  அப்படியே வந்து ஆகட்டும். ஆகட்டும். ஜீசஸ் ஆனாலும் சரி. புத்தர் ஆனாலும் சரி. எல்லாரும் ஆனாலும் சரி. ஏன்னா எல்லா ஞானிகளும் என்ன சொல்லிட்டாங்க? 


அடியவர்கள்:- பெண்ணுக்கு முதலிடம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  பெண்ணுக்கு முதலிடமா..ஓகே …அப்படியே  இருக்கட்டும்பா என்று சொல்லிட்டாங்க.


குருநாதர் :-   எதை என்று புரிய, இதனால் பின் தேவனுடைய குழந்தைகளே ஆட்சி செய்வார் வரும் காலத்தில். 


சுவடி ஓதும் மைந்தன் :-  தேவனுடைய குழந்தைகள் அப்படின்னா என்ன எடுத்துக்கிறது நம்ம வந்து? 


அடியவர் :- இறைவனுடைய பிள்ளைகளை தான் 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனுடைய பிள்ளைகளே ஆட்சிகள் செய்வாங்க என்றார். 


குருநாதர் :-   இதனால் என்ன ஏது என்று அறிய, நிச்சயம் பின் மீண்டும் பின் அதாவது பின் இராவணன் பல வழியில் கூட, பின் அதாவது பின் சீதைக்கும் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட 


ஆட்சி புரி !!! 


 ஆட்சி புரி !!!! என்று 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால ஆட்சி புரி.  நீ எல்லாம் ஏத்துக்கோ. எனக்கு எதுவும் வேணாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-   பாசம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


===========================

# பாசத்தால் மிக உயர்ந்த இடத்தை அடைந்தார்  இராவணேஸ்வரர். 

===========================



குருநாதர் :-   எதை என்று புரிய பாசத்தால் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட மிக உயர்ந்த இடத்தை அடைந்தான் இராவணேஸ்வரனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பாசத்தால்….. மிக உயர்ந்த இடத்தை அடைந்தார்  இராவணேஸ்வரர்.


===========================

# சீதாபுரி , இராவணபுரி 

# பொருள் :- “புரி” - தெரிந்து கொண்டு, அதன்படி நட.

===========================



குருநாதர் :-   எது என்று அறிய சீதாபுரி என பெயரும் இதற்கு, இவ்வூருக்கு பின் எவை என்று அறிய. அதாவது இவ் தேசத்துக்கு சீதாபுரி எனும் ஊரும் பின் எவை என்று அறிய நிச்சயம் அதாவது பின் நாமமும் உள்ளது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதான் ஊர் இந்த ஊருக்கும், இந்த தேசத்துக்கும் என்ன பெரிய பேரு அடுத்தது சீதாபுரி…. 


குருநாதர் :-   இராவணபுரி 


சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து….. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இராவணபுரி 


குருநாதர் :-  இன்னும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் இதை என்று அறிய அதாவது இன்னும் இன்னும் எவை என்று அறிய… 


சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது ரெண்டு பேர்தான் இதுக்கு வந்து முக்கியம். என்ன பேரு இராவணபுரி. லங்காபுரின்னு சொல்லலாம். சீதாபுரி. 


குருநாதர் :-   எதை என்று அறிய நிச்சயம் மீண்டும் அதாவது பின் இராவணனும் சீதையிடத்தில் நிச்சயம்,  வருவான் உன் கணவன். ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவ் தேசம் பின் அழியப் போகின்றது. இதனால் நிச்சயம் நல்லாட்சி புரி என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப தெரிஞ்சு போச்சு இராவணனுக்கு. அம்மா நீ நல்லா எடுத்துட்டு போமா இதை. நல்லா எடுத்துட்டு போ. நீ இதெல்லாம் எதுவும் பண்ணாத. நல்லா ஆட்சி பண்ணு. உன் புருஷன் கண்டிப்பா வருவான்னு சொல்லிட்டு….. 


குருநாதர் :-   சீதை கோபத்தில் நிச்சயம் அதாவது இலங்கை தேசம் அழியட்டும் என்று 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சீதை என்ன சொல்லிட்டாரு ? 


அடியவர் :- அழியட்டும் 


சுவடி ஓதும் மைந்தன் :- இது அழியட்டும். நீ ஆட்சி புரிந்தா.. வேண்டும் என்று எதும்  சொல்லல…. அழியட்டும் அந்த கோபத்துல சொல்லிட்டாங்க வந்து. 




குருநாதர் :-   எதை என்று புரிய மீண்டும் அதாவது பின் ஈசன் (அதாவது அனுமான்)  பின் ராமன் இடத்தில் பின் கொஞ்சி கூத்தாடினான் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூ.ட மீண்டும் சீதையுடன் பின் வந்து ஏது என்று அறிய. பின் முடியட்டும் என்று சொல்லிவிட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் ராமனிடத்தில் ஆஞ்சநேயர் போனாரு. கொஞ்சினார் கூத்தாடினார். ஸ்ரீ ராமா  வாப்பா…. வாப்பா… போய் பார்க்கலாம். முறையோட எப்படியாவது நான் எடுத்துட்டு போறேன்னு சொல்லிட்டு…. யாரு?  அனுமான் .ஆனால் 


அடியவர் :-  ராமன் வேண்டாம் ….


சுவடி ஓதும் மைந்தன் :-  ராமன் வேண்டாம் என்றார் 


குருநாதர் :-   மீண்டும் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அனுமானும் ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. சரி எவை என்று புரிய அறிய. பின் சீதையை தூக்கிக்கொண்டு வந்து விடுவோம் என்று எண்ணினான். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அனுமான் என்ன பண்ணாரு? 


அடியவர் :-   சீதையை தூக்கிட்டு வந்துருவோம்னு பார்த்தாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  சரி இதெல்லாம் முடியாதுடாப்பா. இராவணனும் விடமாட்டாரு. 


அடியவர் :-  ராமனும் பிடிவாதம். 


சுவடி ஓதும் மைந்தன் :-   ராமனும் பிடிவாதம். இராவணனும்?  


அடியவர் :-  பிடிவாதம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பிடிவாதம். அப்ப நம்ம சீதாவை? 


அடியவர் :-  தூக்கிட்டு வந்துருவோம் 


சுவடி ஓதும் மைந்தன் :- தூக்கிட்டு வந்துருவோம்.




(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  25.03.2026 அன்று  நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த  ஆதி இராமாயண காவிய வாக்குகள் தொடரும் …..) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.